kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோணலான நாவுகள்!


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கோணலான நாவுகள்!


அனேகமாக எல்லா கிறிஸ்தவ பிரசங்கிமார்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள‌ முதல் வேத சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள் அதுவும் அதற்கான வசனங்களையும் தரும்போது, ஆனால் இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள‌  வேதசத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பார்கள். சில உதாரணங்கள்:

  • 1கொரி3:15 ல் வரும் அக்கினியில் எரிவது மனிதனின் 'கிரியைகளே', மனிதன் அல்ல என்பதை நம்புகிறார்களா? ஆம்.
  • வெளி20:15 லும் எரிவது மனிதனின் 'கிரியைகள்'தான் மனிதன் அல்ல என்பதை நம்புவார்களா? இல்லை.

  • தேவனே சகலத்தையும் படைத்தார் என்பதை நம்புகிறார்களா? ஆம்.
  • தீமையையும் உண்டாக்கியவர் தேவன் தான் என்று போதிக்கிறார்களா? (ஏசா45:7). இல்லை.

  • தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறவர் தேவன் என்று நம்புகிறார்களா? ஆம்.
  • மனிதனுடைய 'சுயாதீனத்தில்' அதே சித்தத்தை பயன்படுத்துகிறார் என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • இயேசு கிறிஸ்துவே முழு உலகத்தின் இரட்சகர் என்று நம்புகிறார்களா? (1யோ4:14). ஆம்.
  • இயேசுகிறிஸ்து முழூ உலகையும் இரட்சிப்பார் என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • மூலபாஷையில் எழுதப்பட்ட வேதாகமம் பிழையற்றது என்று நம்புகிறார்களா? ஆம்.
  • தற்போது பயனில் இருக்கும் ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு கி.பி.1611 லிருந்து ஆயிரக்கணக்கான தவறுகள் திருத்தப்பட்டது, அதைத் தழுவி மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் 'பரிசுத்த வேதாகமம்' பிழைகளுள்ளது என்று போதிக்கிறார்களா? இல்லவே இல்லை.

  • பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் (எசேக்18:4) என்று நம்புகிறார்களா? ஆமாம்.
  • மரித்த பாவியின் ஆத்துமாவும் உண்மையிலேயே மரித்தது என்று போதிக்கிறார்களா? இல்லவே இல்லை.

  • இன்றைய அனேக துருபதேசங்களை வெளிக்கொணர வேண்டும் என்று நம்புகிறார்களா? ஆம்.
  • 'கிறிஸ்தவமும்' ஒரு துர் உபதேசம் என்று போதிப்பார்களா? இல்லை.

  • எதிர்காலத்தில் உயிர்த்தெழுதலின்போது மரித்த அனைவரும் உயிரடைவார்கள் என்று நம்புகிறார்களா?ஆம்.
  • மரித்தவர்கள் மீண்டும் வாழ உயிர்த்தெழுதல் ஒரு நிகழ்வு என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • யோவான்3:13 மற்றும் அப்2:34 ஆகிய வசனங்கள் உண்மையானவை என்று நம்புகிறார்களா? ஆம்.
  • தாவீது உட்பட ஒருவனும் பரலோகத்துக்குப் போகவில்லை என்று போதிக்கிறார்களா? இல்லவே இல்லை.

  • எனக்குச் சித்தமானவைகளை எல்லாம் செய்வேன் என்று தேவன் சொன்னதைச் செய்வார் (ஏசா46:10) என்று நம்புகிறார்களா?ஆம்.
  • எல்லாரும் ரட்சிக்கப்பட அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார் 1தீமோ2:4ன்படி அதையும் அவர் செய்வார் என்று போதிக்கிறார்களா? இல்லை.


  • "நீங்கள் சாகவே சாவதில்லை" என்று ஏவாளிடம் சாத்தான் சொன்னது பொய் என்று நம்புகிறார்களா? ஆம்.
  • தேவன் சொன்னதுபோல பாவிகள் மரணத்தின்போது சாகிறார்கள் என்று போதிக்கிறார்களா? இல்லவே இல்லை.

  • சாத்தான் தான் எல்லோரைக்காட்டிலும் மிகப்பெரிய பாவி என்று நம்புகிறார்கள? ஆம்.
  • ஆனால் யோவான் 8:44ன்படி சாத்தான் ஆரம்பமுதலே ஒரு பாவி என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • இயேசுகிறிஸ்து உலகத்தின் பாவங்களுக்காக உண்மையிலேயே மரித்தார் என்று நம்புகிறார்களா? ஆம்.
  • கல்லறையில் வைக்கப்பட்டபோது இயேசுகிறிஸ்து மரித்திருந்தார் என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • மரணத்தை அனேக வசனங்கள் 'நித்திரை'க்கு ஒப்பிடப்படுவதை நம்புகிறார்களா? ஆம்.
  • மரித்தவர்கள் எல்லாம் உயிர்த்தெழும்வரை உணர்வற்ற நிலையில் இருப்பார்கள் என்று போதிக்கிறார்களா? இல்லவே இல்லை.


  • பரிகரிக்கப்படும் (அழிக்கப்படும்) கடைசி சத்துரு மரணம் என்று நம்புகிறார்களா? ஆம்.
  • எல்லா மரணமும், இரண்டாம் மரணம் உட்பட முடிவடையும் என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • தேவனால் எல்லாம் கூடும் (மாற்கு 10:27) என்று நம்புகிறார்களா? ஆம்.
  • அவிசுவாசிகளை மரணத்துக்குப் பின்பு கூட ரட்சிக்கமுடியும் என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா நாவுகளும் இயேசுவே ஆண்டவர் அறிக்கையிடும் என்று நம்புகிறார்களா? ஆம்.
  • அவர்களை அப்படிச் செய்விப்பது பரிசுத்த ஆவி (1கொரி12:3)தான் என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • நன்மை மற்றும் தீமை இரண்டுமே ஒரே மரத்தில்தான் இருந்தது என்று நம்புகிறார்களா? ஆம்.
  • நன்மையும், தீமையும் ஒரே இடத்திலிருந்து தான் வருகிறது என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • 1யோவான் 3:8ன்படி தேவன் சகலத்ததையும் அறிந்தவர் என்று நம்புகிறார்களா? ஆம்.
  • கிறிஸ்துவை யார் யார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முன்பே தேவன் அறிவார் என்று போதிக்கிறார்களா? இல்லை.

  • ஜனங்கள் கிறிஸ்துவின் உவமைகளை புரிந்துகொள்ளவில்லை (மத் 13:130) என்று நம்புகிறார்களா? ஆம்.
  • வேண்டுமென்றே அவைகள் அவர்களுக்கு புரியக்கூடாதென்றுதான் கிறிஸ்து அப்படிச்செய்தார்(வச 14 முதல்  17வரை) என்று போதிக்கிறார்க்ளா? இல்லை.

என்ன தலை சுற்றுகிறதா?


-- Edited by soulsolution on Saturday 2nd of January 2010 11:34:14 PM

-- Edited by soulsolution on Saturday 2nd of January 2010 11:36:06 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அருமையான பதிவு சகோதரரே!

இந்த "இல்லை, இல்லவே இல்லை" என்கிற விஷயங்களை இன்றைய ஊழியர்கள் போதித்தால் அல்லது இன்றைய விசுவாசிகள் தெரிய ஆர்வம் காட்டினாலே போதுமே. இது இரண்டும் இல்லாததினால் தான் உங்களை போல் சிலர் இந்த "இல்லை" என்பதை சுத்தமான உண்மை என்று சொல்லி வந்தாலும் ஏற்றுக்கொள்ள படுவதில்லை. வேதத்தை ஆறாய்ந்தே இதை தெரிந்துக்கொள்ள முடியுமே தவிர, ஒரு ஊழியக்காரரின் வாயின் வார்த்தையிலிருந்து இல்லை என்பதை வழிமொழிகிறேன். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பது ஊழியனை அல்ல, வசனங்களை என்பதை இன்றைய "கிறிஸ்தவம்" பின் பற்றுவதில்லை போல்.

தொடர்ந்து பதியுங்கள், வாழ்த்துக்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard