அனேகமாக எல்லா கிறிஸ்தவ பிரசங்கிமார்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முதல் வேத சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள் அதுவும் அதற்கான வசனங்களையும் தரும்போது, ஆனால் இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள வேதசத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பார்கள். சில உதாரணங்கள்:
1கொரி3:15 ல் வரும் அக்கினியில் எரிவது மனிதனின் 'கிரியைகளே', மனிதன் அல்ல என்பதை நம்புகிறார்களா? ஆம்.
வெளி20:15 லும் எரிவது மனிதனின் 'கிரியைகள்'தான் மனிதன் அல்ல என்பதை நம்புவார்களா? இல்லை.
தேவனே சகலத்தையும் படைத்தார் என்பதை நம்புகிறார்களா? ஆம்.
தீமையையும் உண்டாக்கியவர் தேவன் தான் என்று போதிக்கிறார்களா? (ஏசா45:7). இல்லை.
தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிறவர் தேவன் என்று நம்புகிறார்களா? ஆம்.
மனிதனுடைய 'சுயாதீனத்தில்' அதே சித்தத்தை பயன்படுத்துகிறார் என்று போதிக்கிறார்களா? இல்லை.
இயேசு கிறிஸ்துவே முழு உலகத்தின் இரட்சகர் என்று நம்புகிறார்களா? (1யோ4:14). ஆம்.
இயேசுகிறிஸ்து முழூ உலகையும் இரட்சிப்பார் என்று போதிக்கிறார்களா? இல்லை.
மூலபாஷையில் எழுதப்பட்ட வேதாகமம் பிழையற்றது என்று நம்புகிறார்களா? ஆம்.
தற்போது பயனில் இருக்கும் ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு கி.பி.1611 லிருந்து ஆயிரக்கணக்கான தவறுகள் திருத்தப்பட்டது, அதைத் தழுவி மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் 'பரிசுத்த வேதாகமம்' பிழைகளுள்ளது என்று போதிக்கிறார்களா? இல்லவே இல்லை.
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் (எசேக்18:4) என்று நம்புகிறார்களா? ஆமாம்.
மரித்த பாவியின் ஆத்துமாவும் உண்மையிலேயே மரித்தது என்று போதிக்கிறார்களா? இல்லவே இல்லை.
இன்றைய அனேக துருபதேசங்களை வெளிக்கொணர வேண்டும் என்று நம்புகிறார்களா? ஆம்.
'கிறிஸ்தவமும்' ஒரு துர் உபதேசம் என்று போதிப்பார்களா? இல்லை.
எதிர்காலத்தில் உயிர்த்தெழுதலின்போது மரித்த அனைவரும் உயிரடைவார்கள் என்று நம்புகிறார்களா?ஆம்.
மரித்தவர்கள் மீண்டும் வாழ உயிர்த்தெழுதல் ஒரு நிகழ்வு என்று போதிக்கிறார்களா? இல்லை.
யோவான்3:13 மற்றும் அப்2:34 ஆகிய வசனங்கள் உண்மையானவை என்று நம்புகிறார்களா? ஆம்.
தாவீது உட்பட ஒருவனும் பரலோகத்துக்குப் போகவில்லை என்று போதிக்கிறார்களா? இல்லவே இல்லை.
எனக்குச் சித்தமானவைகளை எல்லாம் செய்வேன் என்று தேவன் சொன்னதைச் செய்வார் (ஏசா46:10) என்று நம்புகிறார்களா?ஆம்.
எல்லாரும் ரட்சிக்கப்பட அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார் 1தீமோ2:4ன்படி அதையும் அவர் செய்வார் என்று போதிக்கிறார்களா? இல்லை.
"நீங்கள் சாகவே சாவதில்லை" என்று ஏவாளிடம் சாத்தான் சொன்னது பொய் என்று நம்புகிறார்களா? ஆம்.
தேவன் சொன்னதுபோல பாவிகள் மரணத்தின்போது சாகிறார்கள் என்று போதிக்கிறார்களா? இல்லவே இல்லை.
சாத்தான் தான் எல்லோரைக்காட்டிலும் மிகப்பெரிய பாவி என்று நம்புகிறார்கள? ஆம்.
ஆனால் யோவான் 8:44ன்படி சாத்தான் ஆரம்பமுதலே ஒரு பாவி என்று போதிக்கிறார்களா? இல்லை.
இயேசுகிறிஸ்து உலகத்தின் பாவங்களுக்காக உண்மையிலேயே மரித்தார் என்று நம்புகிறார்களா? ஆம்.
கல்லறையில் வைக்கப்பட்டபோது இயேசுகிறிஸ்து மரித்திருந்தார் என்று போதிக்கிறார்களா? இல்லை.
இந்த "இல்லை, இல்லவே இல்லை" என்கிற விஷயங்களை இன்றைய ஊழியர்கள் போதித்தால் அல்லது இன்றைய விசுவாசிகள் தெரிய ஆர்வம் காட்டினாலே போதுமே. இது இரண்டும் இல்லாததினால் தான் உங்களை போல் சிலர் இந்த "இல்லை" என்பதை சுத்தமான உண்மை என்று சொல்லி வந்தாலும் ஏற்றுக்கொள்ள படுவதில்லை. வேதத்தை ஆறாய்ந்தே இதை தெரிந்துக்கொள்ள முடியுமே தவிர, ஒரு ஊழியக்காரரின் வாயின் வார்த்தையிலிருந்து இல்லை என்பதை வழிமொழிகிறேன். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பது ஊழியனை அல்ல, வசனங்களை என்பதை இன்றைய "கிறிஸ்தவம்" பின் பற்றுவதில்லை போல்.