kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முன்குறிக்கப்படுதல்... - ஒரு ஆய்வு.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
முன்குறிக்கப்படுதல்... - ஒரு ஆய்வு.


ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
ரோமர் 5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

இந்த வசனங்களை நாங்கள் மேற்கோள்காட்டி விளக்க முற்பட்டால் புரிந்துகொள்ள மாட்டோம் என்கிறீர்கள். அதையே உங்கள் வாதத்திற்கு உபயோகிக்கிறீர்கள். ஹாஸ்யம்.

ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அனேகர் பாவிகளாக்கப்படவில்லை எல்லோரும் பாவிகளானார்கள். அனேகர் என்பது தவறான மொழிபெயர்ப்பு, எல்லோரும் என்பதே சரி. அதெபோல ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே எல்லாரும் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

இங்கு அவனவனுடைய நற்கி
ரியைகளினால் அல்ல ஒருவருடைய கீழ்ப்படிதலாலேதான் எல்லாரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆக வேதத்தின்படி எல்லாரும் நீதிமான்களாவார்கள். துன்மார்கமாய் ஜீவிக்கிறவர்கள் ஏகமாய் அழிந்துதான் போவார்கள். ஏனென்றால் உயிர்த்தெழுதலின்போது அவர்கள்தான் நீதிமான்களாக ஆகப்போகிறார்களே. ஐயா உலகில் இப்போதே எல்லாரும் திருந்திவிட்டால் என்ன சொல்லுவோம் உலகில் துன்மார்க்கனே இல்லை என்றுதானே. பழையன ஒழிந்து போயின; எல்லாம் புதிதாயின என்பதற்கு அர்த்தம் என்ன. பழைய துன்மார்க்கம் ஒழிந்து போய் அனைவரும் துன்மார்க்கத்தை விட்டு நீதியைக் கற்றுக்கொண்டு நீதிமானாவார்கள் என்றுதானேயன்றி நீங்கள் நினைப்பது போல துன்மார்க்கரை எல்லாம் அழித்தால், உயிரோடு எழுப்ப ஒருவன்கூட மிஞ்மாட்டான்.

நன்மை செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை என்பதன் அர்த்தம் எப்போதும் எல்லாவற்றிலும் நன்மை மாத்திரம் செய்துகொண்டே இருப்பதுதான் என்று நான் கருதுகிறேன். அன்பு கூறுவதைப் பார்த்தால் துன்மார்க்கன் கூடத்தான் எப்போதாவது யாருக்காவது நன்மை செய்திருப்பான்.
சகோதரர் ராஜ் தன்னை நீதிமான் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி! நீங்கள் மட்டுமல்ல நீதிவாசம் செய்யும் புதிய பூமியில் எல்லாருமே நீதிமான்கள் ஆவார்கள் என்றுதான் நாங்களும் சொல்கிறோம். அதற்குக் காரணம் கிறிஸ்துவின் பலியேயன்றி வேறொன்றுமில்லை. பாவ நிவாரணபலியாக காளை, வெள்ளாடு போன்றவை பலியாகக் கொடுக்கப்பட்டது போல ஒரே பலியினால் முழு மனுக்குலத்தின் பாவத்தையும் இயேசு நிவிர்த்தி செய்துவிட்டார் என்பதற்கு என்ன அர்த்தம் கற்பிக்கப்போகிறீர்களோ?





-- Edited by soulsolution on Sunday 10th of January 2010 10:30:15 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:57:01 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆம் சகோ சில்சாம் அவர்களே,

என் நற்கிரியைகளினால் நான் நீதிமான் என்று தன்னை நினைத்துக்கொள்பவர்களுக்கு சகோ ஆத்துமா எழுதி நீங்கள் சுட்டி கான்பித்திருப்பது விசனமாக தான் இருக்க முடியும். சுய நீதியில் வாழும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் எழுதியபடி இது விசனமாக தானிருக்க முடியும். ஏனென்றால் என் கிரியைகளினால் நான் இரட்சிக்கப்படுகிறேன் என்கிற மமதையில் இருக்கும் இவர்கள் ஒருவரின் கீழ்ப்படிதலினால் எல்லோரும் நீதிமான் ஆக்கப்படுவார்கள் என்பதை தாங்கிக்கொள்ள தான் முடியாது.

"அதாவது ஒன்றையும் மாற்றவோ கூட்டவோ குறைக்கவோ கூடாது எனும் விதிக்கு இது மாறானது; இதையே அனர்த்தம் என பெரியவர்கள் சொல்லுவார்கள்."

அதாவது இந்த தளத்தில் நரகம் என்கிற ஒரு கற்பனையை நீங்கள் சொன்னது போல் அனர்த்தம் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா!! முழு வேதத்தை மாற்றி, சேர்த்து, குழ‌ப்பி ஒரே "ஆவி"யை பெற்ற‌ ம‌னித‌ர்க‌ள் ஒரே வ‌ச‌ன‌த்தை அவ‌ர் அவ‌ர் ச‌பையின் பிர‌யோஜ‌ன‌ப்ப‌டி அல்ல‌து அவ‌ர் அவருக்கு லாபம் வரும்படி திரித்து சொல்லுவ‌து எல்லாம் உங்க‌ளுக்கு "வெளிப்பாடு" என்றும், இப்ப‌டி நாங்க‌ள் எழுதினால் அது "அன‌ர்த்த‌மா"? என்ன‌ லாஜிக் இது ச‌கோத‌ர‌ரே?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:56:33 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே "அநேகர்" பாவிகளானார்களா அல்லது எல்லோரும் பாவிகளானார்களா?


இந்த "அநேகருக்கு" அர்த்தம் தெரிந்தால் அந்த நீதிமான்களாக்கப்படும் "அநேகர்" என்பதற்கும் அர்த்தம் நிச்சயம் தெரியும்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதன் பெயர் சாமர்த்தியம் இல்லை தொன்டர் சில்சாம் அவர்களே, இதை தான் வேதத்தை ஆறாய்ந்து பாருங்கள் என்று சொல்லுவது. ஒரே ஒரு வசனத்திற்கு ஆயிரம் வெளிப்படுகள் கிடைக்கும் என்று சொல்லுபவர்களுக்கு இது புரியாது. ஆகவே தான் தங்களின் வாதம்.

ரோம் 5:12, "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரண‌மும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று"

இங்கு ஒரே மனிதனின் பாவம் மரணத்தை கொடுத்து அதின் பலனாக எல்லோரும் (கவனிக்க) எல்லோரும் பாவம் செய்து மரிக்கிறார்கள்.

"ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று" ரோம் 5:18.

ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பை மாற்ற நினைக்கும் கிறிஸ்தவ சமுதாயமே (பிரசங்கிமார்களே, ஊழியர்களே, சுய நீதிமானகளே.....இன்னும் பலர்) இதை விட மேலான ஒரு தேவ தூஷனம் உண்டா என்று சிந்தித்து பாருங்கள்!!

ஒரு மீறுத‌லினாலே எப்ப‌டி இன்று வ‌ரையில் ம‌னித‌ர‌க‌ள் ம‌ரிக்க‌வேண்டும் என்கிற‌ தீர்ப்பு (யாரையும் கேட்காம‌லையே, அல்ல‌து யாரின் கிரியை ந‌ம்பாம‌லும்) உண்டாயிற்றோ, அப்ப‌டியே இயேசு கிறிஸ்து என்கிற‌ ஒருவ‌ரின் நீதியினால் (இப்ப‌வும் யாரையும் கேட்காம‌லும், யாரின் கிரியை ந‌ம்பாம‌லும்) எல்லோரும் ஜீவ‌னை பெறும் ப‌டி தீர்ப்பு உண்டாயிற்று.

ஆனால் இதை புரிந்துக்கொள்ப‌வ‌ர்க‌ள் தான் எல்லாரும‌ இல்லாம‌ல் வெகு சிலர். அநேக‌ர் இதை புரிந்துக்கொள்வ‌தில்லை, ஆக‌வே தான் மீட்க‌ப்ப‌டும் ப‌டி த‌ன் கிரியைக‌ளை ந‌ம்புகிறார்க‌ள் (சுய‌ நீதிமான்க‌ள்).

சில்சாம் எழுதுகிறார்:

"எல்லோரும் பாவிகளாகி தேவ மகிமையினை இழந்திருந்தாலும் சிலருடைய கீழ்ப்படிதல் காரணமாக சிலர் மீட்கப்பட்டனர்;அந்த சிலர் உலகத்தில் அநேகராக இருக்கிறார்கள்;போதுமா..?"

அதாவது இயேசு கிறிஸ்து என்கிற ஒருவரின் கீழ்ப்படிதலினால் தான் ஜீவனை பெறும் தீர்ப்பு உண்டாயிற்று என்று மறுத்து சிலரின் கீழ்படிதல் என்று தங்களையே உயர்த்தி பார்க்க ஆசை படுகிறீர்கள்! பேஷ், மிக நன்று!! ஆகவே தான் இவர்களை சுய நீதிமான்கள் என்று சொல்லுகிறோம். இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தம் இவர்களுக்கு எந்த மகத்துவமும் கொண்டு வருவதில்லை ஏனென்றால் இந்த சிலர் (ஆனால் இவர்கள் தான் பலராக இருக்கிறார்கள்) தங்களின் கிரியைகளை நம்புபவர்களாக இருக்கிறார்களே!! வேதமே இயேசு கிறிஸ்துவின் நீதியினால் என்று சொல்லியும், தாங்கள் "சிலரின் கீழ்ப்படிதல் காரணமாக சிலர் மீட்கப்பட்டனர்" என்று எழுதுவது எவ்வுளவு அனர்த்தம் என்று தாங்கள் உணரவைல்லை போல்.

இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு பிர‌ச‌ங்க‌த்தை எந்த‌ வ‌ச‌ன‌த்தின் ஆதார‌த்தில் சொல்லுகிறீர்க‌ள்!! இது உங்க‌ள் புரிந்துக்கொள்ளுத‌லே த‌விர‌ உண்மை இல்லை.சில‌ர் எப்ப‌டி அநேக‌ர் என்று குழ‌ப்பி இருக்கிறீர்க‌ள். தெளிவாக‌ எழுதுங்க‌ள். வேத‌ வ‌ச‌ன‌ம் தான் புரிய‌வில்லை என்றால் த‌மிழையும் கொலை செய்கிறீர்க‌ளே. சில‌ர் = அநேக‌ர் என்கிற‌ புதிய‌ ஃபார்முலா!!

இப்ப‌டி ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ள் எல்லாம் பிர‌ச‌ங்கிக்கிர‌வ‌ர்க‌ளுக்கு புரியாது, வேத‌த்தை ஆறாய்ந்து பார்க்க‌ சொல்லும் ந‌ம் க‌ர்த்த‌ரின் வார்த்தையை தேடி பார்த்தால் தான் புரியும். வ‌ச‌ன‌த்தை வைத்து கொண்டு ஆயிர‌ம் அர்த்த‌ம் கொடுக்கும் பிர‌ச‌ங்கிமார்க‌ள் தான் ஒரு வ‌ச‌ன‌த்தை அனர்த்த‌ம் செய்கிறார்க‌ள், ஆனால் அநேக‌ருக்கு அதில் தான் பிரிய‌ம். என்ன‌ சொல்ல‌!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

 

ரோம் 5:12, "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரண‌மும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று"

இங்கு ஒரே மனிதனின் பாவம் மரணத்தை கொடுத்து அதின் பலனாக எல்லோரும் (கவனிக்க) எல்லோரும் பாவம் செய்து மரிக்கிறார்கள்.

"ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று" ரோம் 5:18.

ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பை மாற்ற நினைக்கும் கிறிஸ்தவ சமுதாயமே (பிரசங்கிமார்களே, ஊழியர்களே, சுய நீதிமானகளே.....இன்னும் பலர்) இதை விட மேலான ஒரு தேவ தூஷனம் உண்டா என்று சிந்தித்து பாருங்கள்!!

 



ஒருபக்க  வசனத்தை  மட்டும்  எடுத்துகொண்டு நாம் பேச முடியாது சகோதரர் அவர்களே. யேசுவின் மரணம் மூலம் எல்லோருக்கும் ஜீவன் வந்தது நிஜம்  ஆனால் சில காரியங்களை நிறைவேறாவிட்டால் அந்த ஜீவன் இல்லாமல் போய்விடும் என்று வசனம் சொல்கிறது  
 
யோவான் 6:53 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  
யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.

அப்படி சொலப்படும் வசனத்தை தள்ளுபவன் நித்ய ஜீவனுக்கு அபாத்திரன் ஆகிறான் என்று வசனம் சொல்கிறது


அப்போஸ்தலர் 13:46  முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.

 
இயேசுவின் மரணம் மூலம் எல்லோருக்கும் ஜீவன் கிடைத்தாலும்
சிலர் ஜீவன் இல்லாதவர்களாகவும்/அபாத்திரராகவும் இருப்பார்கள் என்று வசனம் சொல்கிறது. 
  
 I யோவான் 5:12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

I யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.
 
 
எத்தனை வசனம் எடுத்து சொன்னாலும் நீங்கள் நம்பபோவது இல்லை. எல்லோரும் தவறா அல்லது நீங்கள் தவறா என்பதை சற்று ஆழமாக ஆராயவும்!    

 

 



-- Edited by RAAJ on Monday 11th of January 2010 06:53:39 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வேதம் உலகத்துக்கு எழுதப்பட்டதல்ல அது சபைக்கு மாத்திரம், சத்தியத்தை வாஞ்சித்துத் தேடுபவர்களுக்கு மாத்திரம் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

நீங்கள் பதித்த //யோவான் 6:53 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.// வசனம் அவருடைய சபைக்கு எழுதப்பட்டது. இதற்கு நேரடி அர்த்தம் கொள்ளலாகாது. மாமிசத்தைப் புசிப்பதென்பது அவருடைய பாடுகளில் பங்காகும், இரத்தத்தைப் பானம் பண்ணுவது பலியின் பரிசுத்த ஜீவியமாகும். இவைகளைச் செய்பவர்களுக்கு வைத்திருக்கும் மகிமையை இழந்து போவதைத்தான் ஜீவனில்லை என்கிறார். அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவுக்கு முன் மரித்த ஒருவரும் அவருடைய மாம்சத்தைப் புசிக்கவுமில்லை, அவருடைய ரத்தத்தை பானம் பண்ணவுமில்லையே, அவர்கள் கதி?

மேலும்//யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.// என்று பதித்துள்ளீர்கள்.

ஆக குமாரனில் விசுவாசமாயிருக்கும் நீங்கள் மரிக்கக்கூடாது. குமாரனை  விசுவாசியாத கோடானு கோடிபேருக்கு உயிர்த்தெழுதல் இல்லை. இல்லையா?


//I யோவான் 5:12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

I யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.//

குமாரன் என்று ஒருவர் இருந்தார் என்றே தெரியாமல் மரித்த கோடாகோடிபேர் ஜீவன் இல்லாதவர்களாதலால் அவர்கள் ஜீவனோடு எழவே மாட்டாட்கள் இல்லையா?

உலகத்தில் எல்லாரும்தாம் அவர்கள் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறார்கள். ஆக அவர்கள் எல்லோரும் மரணத்தை விட்டு நீஙகி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள் இல்லையா? சபாஷ்

ரோம் 5:12, "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரண‌மும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று"

இங்கு ஒரே மனிதனின் பாவம் மரணத்தை கொடுத்து அதின் பலனாக எல்லோரும் (கவனிக்க) எல்லோரும் பாவம் செய்து மரிக்கிறார்கள்.

"ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று" ரோம் 5:18
. போன்ற எத்தனை வசனங்கள் சொன்னாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
ஏனென்றால் நீங்கள் நரகத்தை ஜனங்களால் நிரப்ப ஆவல் கொண்டுள்ளீர்கள். தேவ அன்பு துளியும் இல்லாமல் கோடாகோடி ஜனங்களை நரகத்தில் வதைக்கும் ஒரு பிசாசுத்தனமான தேவனை சித்தரித்து, பாபிலோன் மகாவேசியின் தேவனைத் தூஷிக்கும் தூதுவர்களாக இருக்கிறீர்கள். கோணலான நாவுகள் உள்ளவர்கள். சுயநீதிப் போதகர்கள். ஜனங்களைப் பயமுறுத்தி பொய்யை நம்பவைத்து சுயமேன்மையைத் தேடுபவர்கள். மரணம் என்றால் என்னவென்று தெரியாமல், "ஆத்துமா சாகாது" என்று சாத்தானின் வார்த்தையை நம்பவைப்பவர்கள். சபையாகிய சிறு மந்தைக்கும் உலகத்துக்கும் தனித்தனி போதனைகள் வெவ்வேறு காலகட்டங்களில் உண்டு என்பதை ஜீரணிக்கத் திராணியற்றவர்கள். குழப்பத்திலேயே இருக்கத் தீவிரிக்கிறவர்கள்.














__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ராஜ் எழுதுகிறார்:
"யேசுவின் மரணம் மூலம் எல்லோருக்கும் ஜீவன் வந்தது நிஜம்"

இன்னும் வரவில்லை, இனிமேல் தான் உயிர்த்தெழுதலில் அது நடக்கும். ஆனால் சபைகளோ, பாவத்திலிருந்து போலித்தனமான ஒரு விடுதலையை தான் இந்த ஜீவன் என்று நினைக்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் மீண்டும் ஏன் மரிக்கிறார்கள் என்று விளக்க முடியுமா? இயேசுவின் மரணம் கிறிஸ்தவர்களுக்காக மாத்திரம் இல்லை, அவர் சகல லோகத்திற்கும் பலியானார் என்று தான் வேதம் கூறுகிறது.

யோவான் 6:53 போன்ற வசனங்கள் யாரிடம் இயேசு கிறிஸ்து பேசினார் என்று ஆராயப்படவேண்டும். யார் இதை படித்தாலும் அது தனக்கு சொந்தமான வசனம் என்று புரிந்துக்கொள்ள கூடாது. இன்னும் இயேசு கிறிஸ்துவின் மாம்சம், அவரின் இரத்தம் என்றால் என்ன என்கிற அர்த்தம் புரியாத பல பெரிய பாபிலோனிய சபைகள் உண்டு. இந்த வசனத்தின் படி மோசேயை, தாவீதை ப‌ர‌லோக‌த்தில் பார்த்தேன் என்ப‌து எல்லாம் எவ்வுள‌வு பெரிய‌ ரீல் ம‌ன்ன‌ர்க‌ளின் வார்த்தைக‌ள் என்ப‌தை தெரிந்துக்கொள்ள‌லாம், ஆனால் அவ‌ர்க‌ள் தான் இன்று பெரிய‌ ஊழிய‌ர்க்கார‌ர்க‌ளாக‌ நீங்க‌ள் ஏற்றுக்கொள்வீர்க‌ள், ஏனென்றால் தேவ‌ன் அவ‌ர்க‌ளுக்கு த‌ரிச‌ன‌ங்க‌ளை த‌ருகிறார், அல்ல‌வா!!

ஜீவ‌ன் என்ற‌வுட‌ன் நீங்க‌ள் என்ன‌வென்று புரிந்துக்கொள்கிறீர்க‌ள்? இயேசு கிறிஸ்துவின் சாய‌லில் ச‌பையாக‌ மாறுவ‌து ஜீவ‌ன் தான், அதே போல் ச‌ரீர‌த்துட‌ன் இந்த‌ பூமியில் உயிர்த்தெழுவ‌தும் ஜீவ‌ன் தான். இயேசு கிறிஸ்து த‌ன் அப்போஸ்த‌ல‌ர்க‌ளிட‌ம் சொன்ன‌ல் 6:53 வ‌ச‌ன‌ம், அவ‌ர்க‌ள் இயேசு கிறிஸ்துவின் பாடுக‌ளில் ப‌ங்கு பெற்று அவ‌ரின் சாய‌லில் மாறும்ப‌டியான‌ ஒரு உப‌தேச‌ம் தான். ம‌ற்ற‌ப‌டி கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கே புரியாத‌ இந்த மாம்ச‌, இர‌த்த‌ம் ச‌மாச்சார‌ம் எல்லாம் உல‌க‌த்தாருக்கு புரியாது. அவ‌ர்க‌ள் இதை வாசித்தால் இயேசு கிறிஸ்து என்ன‌ மாம்ச‌ம் தின்ப‌வ‌ரா, இர‌த்த‌ம் குடிக்கிற‌வ‌ரா என்று தான் கேட்ப்பார்க‌ள்!!

தேவ‌ அன்பு எல்லா பாவ‌ங்க‌ளையும் மூடும் என்கிற‌து வ‌ச‌ன‌ம். உயிர்த்தெழுத‌ல் அந்த‌ அன்பிற்கு தான் சாட்சி. அந்த‌ அன்பில் வ‌ள‌ர்ந்து ந‌ட‌ங்க‌ளேன்!!

மேலும் இன்று ஊழிய‌ர்க‌ள் (!!) ந‌ர‌க‌ம் என்கிற‌ ஒரு விஷ‌ய‌த்தை போதித்த‌து போல் அன்று அப்போஸ்த‌ல‌ர்க‌ள் போதிக்க‌வில்லை, அவ‌ர்க‌ள் ஜீவ‌னை குறித்து போதித்தார்க‌ள், அதாவ‌து இயேசு கிறிஸ்துவின் சபையாக‌ உருவாகும் ஜீவ‌ன்,. இதை ம‌கிமையான‌ ஜீவ‌னை இழப்ப‌து தான் ஜீவ‌னை இழ‌ப்ப‌து என்று போதித்திருக்கிறார்க‌ள். பாபிலோனிய‌ ச‌பைக‌ளின் ஆதிக்க‌ம் இந்த‌ அன்பை திரிச்சு, ஜீவ‌னை இழ‌ப்ப‌து என்ப‌து என்றென்றும் எரி ந‌ர‌க‌த்திற்குள் எரிப்ப‌டாத‌ சாத்தானின் கூட்ட‌னியுட‌ன் இருப்ப‌து என்று ஒரு பெரிய‌ கோட்பாட்டை (!!) உருவாக்கி வியாபார‌ம் ந‌ட‌த்த‌ தொட‌ங்கினார்க‌ள். அவ‌ர்க‌ளின் வாரிசுக‌ளான‌ இன்றைய‌ பாபிலோனிய‌ ச‌பையின‌ர், காளான் போல் ஆங்கொன்று இங்கொன்று என்று முலைத்து, அடிப்ப‌டை அன்பு கூட‌ இல்லாம‌ல், போலித்த‌னமான‌ அன்பை வைத்துக்கொண்டு ந‌ர‌க‌த்தை போதித்து வ‌ருகிறார்க‌ள், என்ன‌ ஒரு ஊழிய‌மோ.

நீங்க‌ள் அழிவை குறித்து எத்துனை வ‌ச‌ன‌ங்க‌ள் கான்பித்தாலும், அதை வாசித்து 1 தீமோ 2:4,5,6உட‌ன் ஒப்பீட்டு பாருங்க‌ள். தேவ‌ன் த‌ன் சாய‌லில் ப‌டைத்த‌ ம‌னித‌னை வாழ‌வைக்க‌வே சித்த‌ம்கொண்டிருக்கிறார் என்ப‌து புரியும். த‌ய‌வு செய்து வேத‌த்தை ஆராயும் போது சொந்த‌ த‌ரிச‌ன‌ங்க‌ளோ, பெரிய‌ ஊழிய‌ர்க‌ளின் வ‌ச‌ன‌ விள‌க்க‌ங்க‌ளையோ பாராம‌ல், தேவ‌னின் அன்பின் பார்வையில் வாசித்து ஆராயுங்க‌ள். "வேத‌த்தின் அதிசியங்களை கானும்ப‌டி என் க‌ண்க‌ளை திற‌ந்த‌ருளும்" என்று தாவீது சொல்லுகிற‌ப்ப‌டியே, சொல்வோமானால், வேத‌ம் எல்லோருக்கும் ஜீவ‌னை த‌ரும் ஒரு புத்த‌க‌மாக‌ பார்ப்பீர்க‌ள். வ‌ச‌ன‌த்தை வாசித்து க‌ண்க‌ளை மூடினால் தான் த‌ரிச‌ன‌ங்க‌ள் எல்லாம் வ‌ரும். உள்ள‌தை உள்ள‌ப்ப‌டியே வாசித்து புரிந்துக்கொள்வோமே. வேத‌ம் இனிமையான‌ ஒரு புத்த‌க‌ம், அது யாரையும் ப‌ய‌முறுத்தும் ஒரு புத்த‌க‌ம் அல்ல‌வே!! இன்றைய‌ ஊழிய‌ர்க‌ள் தான் அத‌ன் த‌ன்மையை மாற்றி வியாபார‌ம் செய்துக்கொண்டிருக்கிறார்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

/////I யோவான் 5:12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
I யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.//
குமாரன் என்று ஒருவர் இருந்தார் என்றே தெரியாமல் மரித்த கோடாகோடிபேர் ஜீவன் இல்லாதவர்களாதலால் அவர்கள் ஜீவனோடு எழவே மாட்டாட்கள் இல்லையா?
ஆக குமாரனில் விசுவாசமாயிருக்கும் நீங்கள் மரிக்கக்கூடாது. குமாரனை  விசுவாசியாத கோடானு கோடிபேருக்கு உயிர்த்தெழுதல் இல்லை. இல்லையா?/////

மேற்கண்ட தேவ  வசனத்து எதிராக நீங்கள் கேட்கும் கேள்வியெல்லாம் தேவனிடம் கேட்க வேண்டியது, எங்களிடம் அல்ல! எங்களிடம் அதற்க்கு விளக்கம் உண்டு ஆனால்  நாங்கள் விளக்கம் சொன்னால் நீங்கள் ஏற்க்கப்போவது இல்லை.  
 
////ரோம் 5:12, "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரண‌மும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று"
இங்கு ஒரே மனிதனின் பாவம் மரணத்தை கொடுத்து அதின் பலனாக எல்லோரும் (கவனிக்க) எல்லோரும் பாவம் செய்து மரிக்கிறார்கள்.
"ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று" ரோம் 5:18
.
போன்ற எத்தனை
வசனங்கள் சொன்னாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. /////


நீங்கள் சொல்லும் வசனம் உண்மை என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.  இயேசுவுக்குள் எல்லோறும் நிச்சயம் உயிர்பிக்கப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை ஆனால் மீட்கப்பட்ட   எல்லோரும் நித்யஜீவனில் பங்கடைவார்களா என்பதற்குத்தான் கீழ்க்கண்ட  வசனம் பதில் கூறுகிறது.     
 
யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.

நாங்கள் சொல்லும் வசனத்தைதான் நீங்கள் புறங்கணிக்கிறீர்கள் அல்லது அதுசபைக்கு  இது உலகத்துக்கு  இதில் மொழிபெயர்ப்பு பிழை இதன் அருத்தம் வேறு என்று ஏதாவது ஒரு பதிலை தருகிறீர்கள்.

கிறிஸ்த்துவுக்குள்  உயிர்ப்பிக்கபட்ட எல்லோரு தியஜீவனை அடைவார்கள் என்று எங்கும் வசனம் கூறவில்லை
 
அப்போஸ்தலர் 13:46  முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
 
இயேசுவின் மரணம் மூலம் எல்லோருக்கும் ஜீவன் கிடைத்தாலும்சிலர் ஜீவன் இல்லாதவர்களாகவும்/ அபாத்திரராகவும் இருப்பார்கள் என்றே வசனம் சொல்கிறது. 

நீங்கள் என்னவென்றால் அப்படி அபாத்திரர் யாரும் கிடையாது, வசனம் தெரியாமல் சொல்கிறது என்கிறீர்கள்!
 
/////ஏனென்றால் நீங்கள் நரகத்தை ஜனங்களால் நிரப்ப ஆவல் கொண்டுள்ளீர்கள். தேவ அன்பு துளியும் இல்லாமல் கோடாகோடி ஜனங்களை நரகத்தில் வதைக்கும் ஒரு பிசாசுத்தனமான தேவனை சித்தரித்து, பாபிலோன் மகாவேசியின் தேவனைத் தூஷிக்கும் தூதுவர்களாக இருக்கிறீர்கள். கோணலான நாவுகள் உள்ளவர்கள். சுயநீதிப் போதகர்கள். ஜனங்களைப் பயமுறுத்தி பொய்யை நம்பவைத்து சுயமேன்மையைத் தேடுபவர்கள். /////

யாரும் நரகத்துக்கு போகவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை அந்த பரிதபிபில்தான் காடு மேடு என்று அலைந்து தேவ ஊழியர்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்து 
மனிதர்களை இயேசுவண்டை கொண்டு வருகிறார்கள். நீங்கள்தான் தேவனின் வார்த்தைகள் நியமனங்கள் எதையும் 
கைகொள்ளவேண்டியதில்லை ஆனாலும் தேவன் எல்லோரையும் மீட்டுவிடுவார் என்று சொல்லி மறைமுகமாக மக்களை நரகத்தை நோக்கி அழைத்து செல்கிறீர்கள்.  
    
தேவன் யாரையும் நரகத்து அனுப்பி தண்டிப்பதில்லை தண்டிக்க விரும்பவும் இல்லை. சாத்தானோடு  கூட்டு சேர்ந்து நானும் நரகத்துக்குதான் போவேன் என்று பிடிவாதம் பிடிப்பவனை என்ன செய்ய முடியும்? மனிதனுக்கு  சுய சித்தம் செய்யும் அதிகாரம் மற்றும் தனது இடத்தை தானே தெரிவு செய்துகொள்ளும் அதிகாரம்  கொடுக்கப்பட்டுள்ளதே!  தேவனும் எத்தனையோ முறை தண்டிக்கிறார் பல்வேறு மனிதர்கள் மூலம் எச்சரிக்கிறார் ஆனால் சில 
பிடிவாதக்காரர்கள் உண்மையை ஒத்துகொள்வது இல்லையே.   
 
நாங்கள் சொல்லும் கருத்து தேவனை தூஷிப்பதுபோல இருக்குமாயின் அது எங்களை எவ்விதத்திலும் பாதிக்காது!

 ஏனெனில் "விசுவாசியாதவன் அக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான்" என்று போதிப்பதும்
மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். என்று போதிப்பதும் தேவன் சொன்ன வசனம்தான் நாங்கள் அல்ல!
 
ஆதியில் கொண்ட அன்பை விட்டுவிட்ட ஒரே காரணத்துக்காக ஜீவபுஸ்தகத்திலிருந்து உனது பெயரை கிருக்கிபோடுவேன் என்று இரக்கமற்றவர் போல்  தேவன் எச்சரிக்கிறார் கரணம் என்ன?  பாவம் மிக கொடியது! பாவத்தை வைத்துகொண்டு யாரும் தேவனுடன் இருக்க முடியாது.   
 
நீங்கள் எதோ தேவனை பெரிய பெரிய இரக்கம் உள்ளவரைபோல காட்டி,  ஒருவன்  என்ன தீமை பாவம் கேடு அழிப்பு கொலை கொள்ளை   செய்தலும் எல்லாரையும் தேவன்  மீட்டுவிடுவார் என்றொரு இல்லாத நற்செய்தியை கூறி,  மனிதர்களை தேவனுக்கு பயப்படாமல்  துணிகர பாவம் செய்யதூண்டுகிறீர்கள்.   உங்கள் வார்த்தைகள் நிச்சயம் தேவனால் நியாயம் விசாரிக்கப்படும்!
 
 
 
 


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இந்த வாதமே முன்குறிக்கப்பட்டவர்கள் என்பது பற்றித்தான். தேவனால் ஒரு விசேஷமான காரியத்துக்காக 'சிலர்' முன் குறிக்கப்பட்டவர்கள் என்று வேதம் போதிக்கிறது. முன்குறிக்கப்பட்டவர்கள் என்றாலே மற்றவர்கள் முன்குறிக்கப்படவில்லை என்று முட்டாள்கூட அறிந்து கொள்வான்.

வேதத்தை ஆராயாமல், மரணம் என்றால் என்ன என்று திட்டவட்டமாக அறியாமல் நித்திய ஜீவனைப்பற்றி வாதிடுவது வீண். மிருகம் சாவது போலவே மனிதனும் சாகிறான். எல்லாம் 'ஒரே' இடத்துக்கு (மண்ணுக்கு) போகிறதென்று வேதம் தெள்ளத் தெளிவாக போதிக்கும்போதும். அவனுக்கு ஆத்துமா என்ற ஒரு 'ஏதோ' இருக்கிறது. அது சாகவே சாகாது என்று பிசாசுத்தனமான போதனையைச் செய்து, கிறிஸ்துவை அறியாதவர்கள் கதி பற்றி தேவனிடம்தான் கேட்கவேண்டும் என்று விதண்டாவாதம் செய்து.... எதைத்தான் இந்தக் கிறிஸ்தவம் நம்புகிறதென்றே தெரியவில்லை.

நான் போய் 'சுவிசேஷம்' சொன்னால்தான் தேவதிட்டம் நிறைவேறும் என்று கட்டுக்கதையளந்து. அப்படியும் எத்தனை பேரை இதுவரை பவுல் சொன்னபடி வாழும் வண்ணம் 'மாற்றி'யிருக்கிறீர்கள் என்று கேட்டால் ஒரு பதிலும் இல்லை. அல்லது இவர்களாவது அவ்வண்ணமாக ஒரு மாதிரி வாழ்க்கை வாழுகிறார்களா என்றால் அதற்கும் பதிலில்லை. நியாயப்பிரமாணப் போதகர்களான இவர்கள் எல்லா பிரமாணங்களையும் கைக்கொள்ளுகிறார்களா என்று கேட்டால் மழுப்புகிறார்கள்.

எல்லாருக்குமே இரட்சிப்பு என்பது இவர்களால் ஜீரணிக்கமுடியாத சத்தியம். உயிர்த்தெழுதல்தான் இரட்சிப்பு என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.  இரட்சிப்பு என்பதே மரணம் என்ற சாபத்திலிருந்து ஜீவனுக்குப் போகும் ஆசீர்வாதம் என்பதை விளங்கிக்கொள்வதில்லை. இனி இரட்சிப்பு என்ற தனி பகுதி தொடங்க வேண்டியதுதான். உலகம் அந்த சத்திய ஆவியைப் பெற்றுக் கொள்ள மாட்டாது என்று வேதம் திட்டவட்டமாகக் கூறுவதால் சத்தியத்தை உணராத ஏற்றுக்கொள்ளாத எவரும் 'உலகத்தில்' பொய்யின் ஆவியில் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

சுவிசேஷம் சொல்கிறேன் பேர்வழி என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பும் இவர்கள் யாருக்குமே பூமிக்கு வரப்போகும் இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் என்றால் என்னவென்று தெரியாதது பரிதாபம்.







-- Edited by soulsolution on Tuesday 12th of January 2010 10:31:55 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

முன்குறிக்கப்பட்டவர்கள் என்றால் என்ன என்று எபேசியர் புத்தகத்தின் முதல் அதிகாரம் தெளிவாக சொல்லியிருக்கிறது. சந்தேகம் உள்ளவர்கள் தயவு செய்து தங்களின் வேதத்தில் இந்த பகுதியை சொந்த அனுபவங்களோடு அல்லாமல், வார்த்தைகளை மாத்திரமே தியானித்து பயன் அடைய வேண்டுகிறேன்.

நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் மனிதனின் சுய சித்தம் எப்படி இரட்சிப்பு தொடர்பு உடையது என்பதை வேத வசனத்தின் மூலம் விளக்கவும் சகோ ராஜ் அவர்களே! அதாவது உங்களின் கூற்றின்படி இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தினது வாஸ்தவம் தான், ஆனால் அவர் இரத்தம் சிந்திய நோக்கம் நிறைவேறவேண்டும் என்றால் அவரை விட பெரிதான மனிதன் தன் சுய சித்தத்தினால் அதை ஏற்று கொள்ள வேண்டும். அப்படி என்றால் கிறிஸ்தவம் இன்று பரவலாம பிரசங்கிக்கும் பழைய ஏற்பாடு நீதிமான்கள் எல்லாம் எங்கே இருக்க முடியும். அவர்கள் மாத்திரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதலை விசுவசித்து விட்டார்களா? தயவு செய்து இதற்கு பதில் எழுதுங்கள்!!


சகோ ராஜ் எழுதுகிறார்:

"நீங்கள் எதோ தேவனை பெரிய பெரிய இரக்கம் உள்ளவரைபோல காட்டி,  ஒருவன்  என்ன தீமை பாவம் கேடு அழிப்பு கொலை கொள்ளை   செய்தலும் எல்லாரையும் தேவன்  மீட்டுவிடுவார் என்றொரு இல்லாத நற்செய்தியை கூறி,  மனிதர்களை தேவனுக்கு பயப்படாமல்  துணிகர பாவம் செய்யதூண்டுகிறீர்கள்.   உங்கள் வார்த்தைகள் நிச்சயம் தேவனால் நியாயம் விசாரிக்கப்படும்! "

ஆமாம் இன்றைய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் சுவிசேஷ‌ம் சொல்லி தான் நாட்டில் பெருகி வ‌ரும் எல்லா குற்ற‌ங்க‌ளையும் நீக்கி விட்டார்க‌ள். தேவ‌ன் க‌டைசி கால‌ம் இப்ப‌டி தான் இருக்கும் என்று தெளிவாக‌ 2தீமோ 3ம் அதிகார‌த்தில் எழுதி த‌ந்தும் அந்த‌ சித்த‌ம் நிறைவேறாம‌ல் செய்வ‌து தான் தேவ‌ சித்த‌ம் நிறைவேற்றுவ‌தா, அல்ல‌து த‌ங்க‌ளின் சுவிசேஷ‌ம் சொல்லும் முய‌ற்சியால் தேவ‌ வார்த்தைக‌ள் நிறைவேறாம‌ல் தான் போகி விடுமா??

ச‌மீப‌த்தில் சுவிசேஷ‌ம் சொல்லும் சுய‌ நீதி உள்ள‌ ஊழிய‌ர்க‌ள் ஒவ்வொருநாளும் தின‌ச‌ரிக‌ளில் எப்ப‌டி எல்லாம் நாற‌ அடித்தி கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌து உல‌க‌ம் அறிந்த‌ சாட்சி. இவ‌ர்க‌ளே நீங்க‌ள் சொல்லும் காரிய‌ங்க‌ளை விட்டு வில‌காம‌ல் இருந்து தேவ‌னுக்கு உத‌வி செய்கிறார்க‌ளாக்கும்? ச‌மீப‌ எடுத்துக்காட்டு கோவை தென் இந்திய‌ திருச்ச‌பை பிஷ‌ப்பின் ப‌ண‌ சுருட்ட‌ல். இதைவிட‌ கிறிஸ்த‌வ‌ம் கேவ‌ல‌ ப‌ட‌ வேண்டுமா? இது அனைத்தும் தேவ‌ன் அனும‌தித்த‌தே என்ப‌து எங்க‌ள் விசுவாச‌ம், ஆனால் நீங்க‌ளோ அந்த‌ த‌னிப்ப‌ட்ட‌ ம‌னித‌னை நியாய‌ம் தீர்ப்பீர்க‌ள்.

ம‌ற்றோரு இட‌த்தில் அநேக‌ர் விசுவ‌சிப்ப‌தை நீங்க‌ள் விசுவ‌சிப்ப‌து இல்லையே என்று எழுதியிருந்தீர்க‌ள். அதை தான் ச‌கோ நாங்க‌ளும் சொல்லுகிறோம், அநேக‌ர் விசுவ‌சிப்ப‌து உண்மையான‌ சுவிசேஷ‌மே கிடையாது, அது அநேக‌ருக்கு பிஸ்ன‌ஸாக‌ தான் இருக்கிற‌து. ச‌த்திய‌ம் என்ப‌து இர‌க‌சிய‌ம், அது அநேக‌ருக்கு புரியாது. அத‌ற்கு இன்றைய‌ ஊழிய‌ர்க‌ளே சாட்சி. த‌ங்க‌ளின் த‌ரிச‌ன‌ங்க‌ள் க‌ன‌வுக‌ளால் சுவிசேஷ‌த்தின் த‌ன்மையை மாற்றி வ‌ருகிறார்க‌ள் (தேவ‌ன் அனும‌தித்த‌தே!!)

நாங்க‌ளும் சுவிசேஷ‌ம் சொல்லுகிறோம், ஆனால் அது அன்பின் சுவிசேஷ‌ம், அது கிறிஸ்துவின் பிர‌மான‌ம், அது சிலுவையினால் உண்டாகும் ப‌ய‌ன் (ப‌ய‌ம் இல்லை), அது வ‌ர‌ இருக்கும் இராஜிய‌த்தை குறித்து (கிறிஸ்த‌வ‌ ச‌முதாய‌மே இது எந்த‌ இராஜிய‌ம் என்று விள‌ங்காம‌ல் முழிக்கிற‌து இன்று) சுவிசேஷ‌ம், அது ப‌வுல், பேதுரு பிர‌ச‌ங்கித்த‌ அன்பின் சுவிசேஷ‌ம், ப‌ய‌முறுத்த‌லின் சுவிசேஷ‌ம் அல்ல‌, அது அனைவ‌ரும் இர‌ட்சிக்க‌ப்ப‌டுவார்க‌ள் என்கிற‌ சுவிசேஷ‌ம். சுவிசேஷம் என்றாலே ஒரு ந‌ல்ல‌ செய்தி, அதை நிச்ச‌ய‌மாக‌ நாங்க‌ள் செய்து வ‌ருகிறோம். ந‌ல்ல‌து சொல்லுகிற‌தினால் பாவ‌ம் பெருகும் என்று வினோத‌மாக‌ எழுதுகிறீர்க‌ள். ஒரு வேளை ப‌ய‌முறுத்த‌லினால் வெறுப்பும் பாவ‌மும் பிற‌க்குமே த‌விர‌, அன்பினால் ஒரு காலும் பாவ‌ம் பெறுகாது. சுவிசேஷ‌த்தை த‌வ‌றாக‌ புரிந்துக்கொண்டு ச‌ராச‌ரி கிறிஸ்த‌வ‌ன் மாதிரி தான் எழுதுகிறீர்க‌ள்.

ய‌தார்த்த‌த்திற்கு வாருங்க‌ள் என்று அழைக்கிறேன். இந்த‌ சுவிசேஷ‌ம் சொல்லும் ஊழிய‌ர்க‌ளை ச‌ற்றே பாருங்க‌ள், யாரிட‌ம் அன்பு இருக்கிற‌து என்று (ஏதோ விர‌ல் விட்டு என்னி விடும் அள‌வு நிச்ச‌ய‌ம் இருப்பார்க‌ள், அதை நாங்க‌ள் ம‌றுக்க‌வில்லை), அனைவ‌ரும் எரி ந‌ர‌க‌த்திற்கு போவார்க‌ள் என்கிற‌ கொடுர‌ என்ன‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி அன்பு உள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ முடியும்! நாங்க‌ள் யாரையும் குறை கூறி எழுத‌வில்லை, இருப்ப‌தை இருப்ப‌து போல் எழுதுகிறோம். இல்லாததை சொன்னால் தான் குறி கூறுதலாகிவிடும்.

இன்னும் ஆராய்வோம், நிற்செய்தி/ சுவிசேஷ‌ம் சொல்லி அனைவ‌ரும் இராஜிய‌த்தில் வ‌ருவார்க‌ள் என்கிற‌ விசுவாச‌த்தோடு, அன்பின் சுவிசேஷ‌ம் சொல்லுவோம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

முன்குறிக்கப்படுதல் எனும் தலைப்பில் ஆய்வைத் துவக்கிய சகோ.soulsolution அவர்களுக்கு சில கேள்விகள்.

1. முன்குறிக்கப்பட்டவர்கள் என்பவர்கள் யார்? அவர்களை அடையாளம் காணமுடியுமா?

2. முன்குறிக்கப்பட்டவர்கள் அடங்கிய பட்டியல் முடிந்துவிட்டதா? அல்லது இன்னும் தொடர்கிறதா?

3. இன்னும் தொடர்கிறது என்றால், அப்பட்டியலில் நாம் இடம்பெற இயலுமா?

4. அப்பட்டியலில் இடம்பெற நாம் என்னசெய்ய வேண்டும்?

5. நாம் முன்குறிக்கப்பட்டவர்களா இல்லையா என்பதை நம்மால் அறியமுடியுமா?

6. முன்குறிக்கப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட அல்லது விழுந்துபோக வாய்ப்பு உள்ளதா?

பின்குறிப்பு: கேள்விகளுக்கு நேரடியான பதில்களை, தகுந்த வேதவசன ஆதாரத்தோடு மட்டும் தரும்படி வேண்டுகிறேன்.


-- Edited by anbu57 on Wednesday 20th of January 2010 06:32:27 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

முன் குறிக்கப்பட்டவர்கள் என்பது தேவனால் தீர்மானத்த ஒரு காரியம். அதை தான் எபேசியர் 1ம் அதிகாரத்தில் பவுல் "இரகசியம்" என்கிறார் ஆனால் அப்போஸ்தலர் என்கிறபடியால் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட ஒரு இரகசியம்.

முன்குறிக்கப்பட்டவர்கள் பட்டியல் என்பது எல்லாம் இக்கால ஊழியர்கள் வேண்டும் என்றால் தருவார்கள். அது தான் இரகசியம் என்று ஆனபடியால் எப்படி பட்ட பட்டியலை எதிர்ப்பார்க்கிறீர்கள்.

ச‌கோத‌ர‌ரே, ப‌ட்டிய‌ல் ச‌மாச்சார‌ம் எல்லாம் ந‌ம‌க்கு தேவைய‌ற்ற‌து. தேவ‌னின் ஆதீன‌ தீர்மான‌த்தில் நாம் முன்குறிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளா இல்லையா என்ப‌து நாம் உயிர்த்தெழும் போது நிச்ச‌ய‌மாக‌ விள‌ங்கும். அந்த‌ ப‌ட்டிய‌ல் நிச்ச‌ய‌மாக‌ முடிந்திருக்காது, ஏனென்றால், அவ‌ருக்கு என்று ஒரு கூட்ட‌த்தார் (ச‌பை) சேரும் ம‌ட்டும், இந்த‌ உல‌க‌ம் முடிவிற்கு வ‌ராது. அதை தான் ரோம் 8:19ல், "தேவ‌புத்திர‌ வெளிப்ப‌டுவ‌த‌ற்கு சிருஷ்டியான‌து மிக‌வும் ஆவ‌லோடு காத்திருக்கிற‌து" என்கிறார் ப‌வுல்.

ப‌ட்டிய‌லில் சேர்வ‌த‌ற்கும் நீங்குவ‌த‌ற்கும் இது என்ன‌ ஊழியக்கார‌ர்க‌ள் தேர்வு செய்யும் காரிய‌மா!! இது தேவ‌னால் மாத்திர‌மே ஆகும் காரிய‌ம் ம‌ட்டுமே. முன்குறிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சோதிக்க‌ப்ப‌டுவார்க‌ள், ஜெய‌ம்பெறுவார்க‌ள். வ‌ஞ்ச்க்கிப்ப‌டுப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி முன்குறிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ முடியும்? தேவ‌னின் ப‌ட்டிய‌ல் தோற்று போவோர் ப‌ட்டிய‌ல் இல்லை, அது கிறிஸ்துவை போல் ஜெய‌ம் கொள்ளும் ப‌ட்டிய‌ல். என்ன‌, நாம் அந்த‌ ப‌ட்டிய‌லில் இருக்கிறோமோ, இல்லையோ என்ப‌து நாம் அறிந்துக்கொள்ள‌ முடியாத‌ ஒன்றாக‌ இருக்கிற‌து.

த‌ன் செய‌ல்க‌ளில் அல்ல‌து கிரியைக‌ளின் மேல் ந‌ம்பிக்கை வைத்திருக்கும் சுய‌‍நீதி உள்ள‌வ‌ர்க‌ளிட‌ம் த‌ங்க‌ளின் 4வ‌து கேள்வியை கேட்டால் ப‌தில் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக‌, யூதாஸ். ம‌னித‌ன‌ர்க‌ளின் பார்வையில் அவ‌ன் தெரிந்துக்கொள்ள‌ப்ப‌ட்ட‌வ‌னாக‌ முத‌லில் தோன்றினாலும், அவ‌ன் விழுந்து போவான் என்று தான் அவ‌னை குறித்து தீர்க்க‌த‌ரிச்ன‌ம் இருக்கிற‌து. ம‌னித‌ன் எப்ப‌டி வேண்டுமென்றாலும் தீர்மானித்திக்கொள்ள‌ட்டும், தேவ‌ன் யாரை முன்குறித்திருக்கிறாரோ, அவ‌ர்க‌ள் எத்துனை சோதனைகள், பாடுகள், நிந்தைகள் வந்தாலும் கிறிஸ்துவை போல், நிச்ச‌ய‌மாக‌ ஜெய‌ம் கொள்வார்க‌ள் என்ப‌தில் மாத்திர‌ம் துளிய‌ள‌விற்கும் ச‌ந்தேக‌ம் கிடையாது. மீண்டும் தாங்கள் எபேசிய 1ம் அதிகாரத்தை வாசித்து பாருங்கள் என்று வேண்டுகிறேன்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

முன்குறிக்கப்படுதல் எனும் தலைப்பில் ஆய்வைத் துவக்கிய சகோ.soulsolution அவர்களுக்கு சில கேள்விகள்.

1. முன்குறிக்கப்பட்டவர்கள் என்பவர்கள் யார்? அவர்களை அடையாளம் காணமுடியுமா?

2. முன்குறிக்கப்பட்டவர்கள் அடங்கிய பட்டியல் முடிந்துவிட்டதா? அல்லது இன்னும் தொடர்கிறதா?

3. இன்னும் தொடர்கிறது என்றால், அப்பட்டியலில் நாம் இடம்பெற இயலுமா?

4. அப்பட்டியலில் இடம்பெற நாம் என்னசெய்ய வேண்டும்?

5. நாம் முன்குறிக்கப்பட்டவர்களா இல்லையா என்பதை நம்மால் அறியமுடியுமா?

6. முன்குறிக்கப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட அல்லது விழுந்துபோக வாய்ப்பு உள்ளதா?

பின்குறிப்பு: கேள்விகளுக்கு நேரடியான பதில்களை, தகுந்த வேதவசன ஆதாரத்தோடு மட்டும் தரும்படி வேண்டுகிறேன்.


-- Edited by anbu57 on Wednesday 20th of January 2010 06:32:27 AM




தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள் என்று நீங்களே வசனங்கள் பதித்திருக்கிறீகள் சகோதரரே.

எபேசியர் 1:4-6 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.


1. முன்குறிக்கப்பட்டவர்கள் என்பவர்கள் யார்? அவர்களை அடையாளம் காணமுடியுமா?

எபேசியர் 1:4-6 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.


2. முன்குறிக்கப்பட்டவர்கள் அடங்கிய பட்டியல் முடிந்துவிட்டதா? அல்லது இன்னும் தொடர்கிறதா?
சகோ பெரேயன்ஸ் பதிலளித்துள்ளார்

3. இன்னும் தொடர்கிறது என்றால், அப்பட்டியலில் நாம் இடம்பெற இயலுமா?
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே அவர் சகலத்தையும் நடப்பிப்பதால் அவருக்குச் சித்தமானால்......

4. அப்பட்டியலில் இடம்பெற நாம் என்னசெய்ய வேண்டும்?
அவர் உருவாக்கிய பட்டியல். நமக்கு செய்ய ஒன்றுமில்லை. மண்பாண்டம் குயவனை கேள்விகேட்க முடியாது.

5. நாம் முன்குறிக்கப்பட்டவர்களா இல்லையா என்பதை நம்மால் அறியமுடியுமா?

நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருக்கிறோமா என்பதை வைத்து அறியலாம். சுருக்கமாகச் சொன்னால் அப்.பவுல் போல வாழந்து ஒட்டத்தை முடித்தேன் என்று சொல்லக்கூடிய தகுதி வேண்டும்.

6. முன்குறிக்கப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட அல்லது விழுந்துபோக வாய்ப்பு உள்ளதா?
தேவனுடைய சித்தம் மாத்திரம் நடக்கும்.


 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

எனது கேள்விகளுக்குப் பதிலளித்த சகோ.பெரியன்ஸ் மற்றும் சகோ.soulsolution-க்கு நன்றி.

மீண்டும் ஒரு கேள்வி.

புதியஏற்பாட்டில் இயேசு கிறிஸ்திவிலிருந்து பேதுரு, பவுல், யோவான், யாக்கோபு, யூதா வரை அனைவரும் பல உபதேசங்களைத் தந்துள்ளனர். அவை முன்குறிக்கப்பட்டவர்களுக்கான உபதேசமா அல்லது பொதுவான விசுவாசிகளுக்கான உபதேசமா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"பொதுவான விசுவாசிகள்" என்றொரு பதம் வேதத்தில் இல்லையென்று நினைக்கிறேன். பழைய ஏற்பாடு யூதர்களுக்கு மாத்திரம் பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட புத்தகம். புதிய ஏற்பாடு விசுவாசிகளடங்கிய அவரது சபைக்கென்று கொடுக்கப்பட்டது. உலகத்துக்கல்ல. சபைக்கு அடுத்தபடியான மணவாட்டியின் தோழிவகுப்பார் (திரள்கூட்டம்) இன்னொரு பரலோக வகுப்பாதலால் அவர்களுக்கும் இந்த உபதேசங்கள் பொருந்தும். ஆவியானவர் 'சபைக்கு' சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்.

இதில் என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இத்தகைய மகத்தான வேத சத்தியங்களை அகாலப்பிறவி போன்ற எனக்கும் அறிய வாய்ப்பளித்திருக்கிறார் என்றால் இந்தக் கடைசி காலத்தில் பாபிலோனின் வேசித்தனத்திலிருந்து வெளியேறும் ஒரு ஜனக்கூட்டதிற்கு தகுதிப் படுத்தியிருக்கிறார் என்பதே.

எனக்குத் தெரிந்தவரை சபை, திரள்கூட்டம் பரலோகத்துக்கு தகுதியுள்ளவைகள், பூமியில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மற்றும் உலகத்தார் நித்தியஜீவனுக்குத் தகுதியாவார்கள்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

நன்றி சகோ.soulsolution அவர்களே!

உங்கள் கூற்றுப்படியே முன்குறிக்கப்பட்டவர்கள் (அதாவது சபை), மணவாட்டி சபையின் தோழிவகுப்பார் மற்றும் உலகத்தார் எனும் 3 பிரிவினர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். முன்குறிக்கப்பட்டவர்களான சபைக்காகத்தான் புதிய ஏற்பாட்டு உபதேசம் கூறப்பட்டுள்ளதாகக் கூறுகிறீர்கள். தேவன் உருவாக்கின “முன்குறிக்கப்பட்டவர்கள்” பட்டியலில் இடம்பெறுவது நம் செயலில் இல்லை என்றும் கூறுகிறீர்கள். அதே வேளையில், நாம் பவுலைப்போல் வாழ்ந்து ஓட்டத்தை முடித்தேன் எனும் தகுதியைப் பெற்றால், நாம் முன்குறிக்கப்பட்டவர்கள் என்பதை அறியலாம் என்கிறீர்கள். அவ்வாறெனில் புதிய ஏற்பாட்டு உபதேசங்களின்படி நடப்பதற்கு நாம் முயன்றால்தானே, முன்குறிக்கப்பட்டவர்களுக்கான தகுதியை நம்மால் பெறமுடிகிறதா இல்லையா என்பதை அறிய முடியும்? எனவே புதியஏற்பாட்டு உபதேசங்களின்படி நடப்பதற்கு நம்மால் இயன்றவரையிலான முயற்சி எடுப்பது அவசியந்தானே?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அப்போஸ்தலர்கள் முதலான எல்லா அழைப்பு பெற்றவர்களுக்கும் தங்கள் அழைப்பின் நிச்சயம், உறுதி இருந்தது. அப்படி இருக்கும் பட்சம் முழுக்க, முழுக்க அவர்களை பாடுகள் மூலம் (அக்கினி முழுக்கு) பூரணப்படுத்துவது நடந்தே தீரும். புதிய ஏற்பாட்டு உபதேசத்தில் நடக்க 'முயல' மாட்டோம். இனி நானல்ல கிறிஸ்துவே என்னில் பிழைத்திருக்கிறார், கிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமும், குப்பையுமாக எண்ணுகிறேன் என்று பவுலைப்போல முழங்கிக்கொண்டிருப்போம்.

சகோதரரே, புதிய ஏற்பாட்டு உபதேசங்களைக் கைகொள்ளச் சொல்லித்தான் கிறிஸ்தவமே போதிக்கிறது. ஆனால் போதிக்கும் ஒருவர்கூட உதாரணமாக வாழ்வதில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது. புதிய ஏற்பாட்டு உபதேசங்களை கைகொண்டு நடக்க முயலுவதால் மட்டும் பரலோக பாக்கியம் கிட்டிவிடாது. தேவனுடைய சித்தம் மட்டுமே நடக்கும். விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றிலும் அன்பே பெரியது. அன்பாய் இருக்க முயலுவோம்.

உங்கள் பெயரிலேயே அன்பிருப்பது மிகவும் நன்றாக உள்ளது. உங்களது வாஞ்சையான கேள்விகளுக்கு வாழ்த்துதல்கள், பாராட்டுக்கள்!


இந்த பதில் நான் புரிந்துகொண்ட வேதத்துக்கு இசைவான ஒரு விளக்கமேயன்றி வேறில்லை. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பின் அதையும் வசனங்களோடு ஒப்பிட்டு நோக்கி சரிபார்த்துக் கொள்ளவும். நன்றி.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.soulsolution அவர்களே!

முன்குறிக்கப்பட்டவர்களான மணவாட்டி சபைக்கும், மணவாட்டி சபையின் தோழிவகுப்பாருக்காகவுந்தான் புதிய ஏற்பாட்டு உபதேசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்கிறீர்கள். இவ்விரு பிரிவினருந்தான் பரலோகத்திற்கு தகுதியாவார்கள் என்றும் சொல்கிறீர்கள். ஆனால், புதியஏற்பாட்டின் பல உபதேசங்கள் நித்திய ஜீவனுக்கடுத்தவைகளாக அல்லவா உள்ளன? மத்தேயு 18:8; 19:29; 25:46; யோவான் 3:15; 5:24; 6:27; 12:25; 17:3; 20:31; 13:48; ரோமர் 2:7; 6:22; 1 தீமோ. 6:12; 1 பேதுரு 3:7; 1 யோவான் 3:15; 5:13 போன்ற பல வசனங்கள், நித்திய ஜீவனுக்கடுத்த உபதேசத்தை அல்லவா கூறுகின்றன?

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் மற்றும் உலகத்தாருந்தான் பூமியில் நித்தியஜீவனுக்குத் தகுதியாவார்கள் என்கிறீர்கள். அதாவது, நித்திய ஜீவனுக்கடுத்த புதிய ஏற்பாட்டு உபதேசங்களின்படி நடவாத உலகத்தார், நித்திய ஜீவனுக்குத் தகுதியாவார்கள் என்கிறீர்கள். ஒருவேளை 1000 வருட அரசாட்சியில் அவர்கள் அந்த தகுதியைப் பெறுவார்கள் என நீங்கள் கூறலாம். ஆனால், அப்படியெனில் புதிய ஏற்பாட்டில் நித்திய ஜீவனுக்கடுத்த உபதேசங்கள் தேவையில்லையே?

உங்கள் கூற்றுக்களில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது. அவற்றைத் தெளிவுபடுத்தும்படி வேண்டுகிறேன்.

தேவதிட்டம் பகுதியில், மூன்று பாதைகள் எனும் தலைப்பில், இடுக்கமான வாசல் வழியாய் செல்கிற முன்குறிக்கப்பட்டவர்களை சாவாமையுடையவர்கள் என்றும், விரிவான வாசல் வழியாய் கேட்டுக்குச் செல்கிறவர்கள் இறுதியில் நித்திய ஜீவனை உடையவர்கள் ஆவார்கள் என்றும் சகோ.பெரியன்ஸ் கூறியுள்ளார்.

விரிவான வாசல் வழியாக கேட்டுக்குப் போகிறவர்கள் எப்படி நித்திய ஜீவனை உடையவர்கள் ஆவார்கள்?

சாவாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் என்ன வித்தியாசம்?


-- Edited by anbu57 on Monday 25th of January 2010 04:42:29 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard