kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முன்குறிக்கப்படுதல்... - ஒரு ஆய்வு.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
முன்குறிக்கப்படுதல்... - ஒரு ஆய்வு.


முன்குறிக்கப்படுதல்  ஒரு ஆய்வு.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை, மணவாட்டி சபை, சிறு மந்தை, உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே தெரிந்துகொள்ளப்பட்ட சபை என்றெல்லாம் அழைக்கப்படும் சபை என்பது பல தனிநபர்களால் உருவானதாகும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. எனவே இந்த தெரிந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் சபையின் அங்கங்களாக இருக்கவேண்டும் என்பது தேவ சித்தம்.

இதைச் சற்றே ஆய்வு செய்வோம். உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக்கொள்வோம் நீங்கள் சபையின் அங்கமாவது தேவ சித்தமாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த 2010ல் நீங்கள் இவ்வுலகத்தில் ஜீவிக்கவேண்டுமென்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. ஏனென்றால் நீங்கள் உலகத்தோற்றத்துக்கு முன்பே தெரிந்துகொள்ளப்பட்டீர்கள். எனவே நீங்கள் உங்கள் தாய் தகப்பனுக்குத்தான் பிறக்க வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆக உங்கள் தாய் மற்றும் தகப்பனும் தற்செயலாக திருமணத்தில் இணைய வாய்ப்பில்லை. அது போலத்தான் உங்கள் பாட்டன், முப்பாட்டன், பூட்டன் எல்லாருமே. உங்கள் தாத்தாவுடைய தாத்தாவுடைய தாத்தாவுடைய தாத்தாவுக்கு சிறுவயதிலேயே ஏதாவது விபத்து நேர்ந்திருந்தாலோ, அல்லது அவருக்கு குழந்தை பிறக்காவிட்டாலோ 'நீங்கள்' பிறப்பது நடந்தே இருக்க முடியாத ஒன்றாகிவிடும்... 

இப்போழுது புரிகிறதா உலகில் நடக்கும் சகலமும் தேவசித்தம் மட்டுமே என்று? அதைவிடுத்து மனிதன் சுயாதீனத்தில் நடத்தும் காரியங்கள் தேவனுக்குத் தெரியாது என்பதோ அல்லது அது அவருக்கு கொஞ்சம் கூட  சம்பந்தமில்லாதது என்பதோ எவ்வளவு அபத்தம். உலகில் நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் உண்டு. தேவனே அந்தக் காரணம். இதைவிடுத்து மனிதன் சித்தப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று வைத்துக்கொண்டால் ஒவ்வொரு மனிதன் எடுக்கும் 'முடிவுகளுக்கு' ஏற்ப தேவன் தன்னுடைய திட்டங்களை தொடர்ந்து ஓய்வின்றி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று எந்தத் தீர்க்கதரிசனத்தையும் எழுத தேவன் தகுதியிழந்து போகிறார். வேதமே பொய்யாகிவிடும். தேவனுக்குத் தெரியும் ஆனால் காரியங்களை அவர் நியமிப்பதில்லை என்ற சிறுபிள்ளைத்தனமான வாதமும் உண்டு.

இதைத்தான் தேவன் "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல" என்கிறார்.

"ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!"- ரோமர்11:33

என்று வாசிக்கிறோம். ஆனாலும் இதுதான் நியாயத்தீர்ப்பு. கிறிஸ்துவை அறியாமல் மரித்த கோடானு கோடி ஜனங்கள் அக்கினியில் கோடா கோடி வருடங்கள் முடிவில்லா வாதையில் இருப்பார்கள் என்றெல்லாம் 'கதை கட்டி' நியாயத்தீர்ப்பை இவர்கள் செய்கிறார்கள்.

கிறிஸ்து உலக ரட்சகர்தான் ஆனாலும் அவரால் உலகம் ரட்சிக்கப்படாது என்றுதானே போதிக்கப்படுகிறது?

யோசிக்கலாமே!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதை தான் அப்போஸ்தன் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற்வர்களாயும் இருப்பார்கள்" 2 தீமோ 3:5.

ஆனால் இன்றையவர்களோ, அந்த தேவனை அறியாதப்படியினால், அவரால் செய்ய முடிகிற காரியங்கள் மற்றும் அவரின் குமாரனான இயேசு கிறிஸ்துவின் பலியினால் உண்டான இரட்சிப்பின் மேண்மையை மறுதலித்து, அது அப்படி அல்ல, அவர் உலக இரட்ச்சகர் தான் ஆனால் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது, அப்படியே எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றால் அவர்களே அதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் வாதம். என்ன செய்வது! பவுல் எழுதியதும் நிறைவேறி தான் ஆக வேண்டும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 5
Date:

"சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது."(1.கொரிந்தியர்1:18) சகோதரரே,நம்முடைய சுயசித்தத்துடன் கூடிய அர்ப்பணமில்லாமல் நம்மை இரட்சிக்க சர்வ வல்லவரான தேவனாகிய கர்த்தரால் கூடுமா என்றறிய விரும்புகிறேன். மேலும் இரட்சிப்பின் நிச்சயமில்லாமல் மரித்தவரும்கூட இரட்சிக்கப்படக்கூடுமா..?

__________________
Iyer


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நல்ல, நியாயமான கேள்வி?

முதலில் இரட்சிப்பு என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்வது நலம். இரட்சிப்பு என்றாலே 'காப்பாற்றப்படுதல்' (ஏதோ ஒரு பேராபத்திலிருந்து). அது என்ன ஆபத்து? 'மரணம்' என்பதே அந்த ஆபத்து. இது எல்லாருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை. எல்லாரும் பாவம் செய்ததால் எல்லாருமே மரணத்துக்குத் தகுதியாகிறோம். மரணம் என்றாலே நித்திய அழிவாகும். மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பே இல்லாத நிலை.

ஆக ஆதாம்முதல் இந்த உலகில் கடைசியாகப் பிறக்கப்போகும் மனிதன்வரை எல்லாரும் மரித்தே ஆகவேண்டிய கட்டாயம். ஆனால் வேதம் என்ன சொல்கிறது, "ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிரடைய வேண்டும்". பாவத்துக்குத் தண்டனனையான 'மரணத்துக்குள்' இருக்கும் ஒருவரை ஏன் உயிர்த்தெழவைக்க வேண்டும்? அவன் மீண்டும் வாழ்வதற்கே!

நீங்கள் பதித்துள்ள
"சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது."(1.கொரிந்தியர்1:18). என்ற வசனங்கள் 'சபை'க்கு மாத்திரம் எழுதப்பட்ட ஒரு செய்தியாகும். சபையின் ரட்சிப்பையும் 'உலக'த்தின் ரட்சிப்பையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

கிறிஸ்துவின் சரீரமான சபை கிறிஸ்துவுடனே கூட 1000 வருடங்கள் 'உலகத்தை' ஆளுகை செய்ய வேண்டும். அந்த ஆயிரம் வருட 'நியாயத்தீர்ப்பு நாளில்' ஏசா 26:9ன் படி 'உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும்போது 'பூச்சக்கரத்துக்குடிகள்' நீதியைக் கற்றுக்கொள்வார்கள். நாவுகள் யாவும் அறிக்கையிடும், முழங்கால்கள் யாவும் முடங்கும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.


எனவே இந்த சுவிசேஷ யுகத்தில் சபையின் தேர்வு மாத்திரமே நடக்கிறது. பொல்லாங்கனுக்குள் விழுந்துகிடக்கும் இந்த 'உலகத்திலிருந்து' ஆளுகைக்குத் தெரிந்து கொள்ள ஒரு சிறுமந்தைக் கூட்டத்தைக்தான் தேவன் புடம்போட்டு, பாடுபட வைத்து வரப்போகும் ராஜ்ஜியத்தை ஆள அவர்களை தகுதிப்படுத்துகிறார். உலகத்துக்கு இரட்சிப்பு இப்போது இல்லவே இல்லை. உயிர்த்தெழுதல்தான் அவர்களுக்குக் ஈவாகக் கிடைக்கும் மாபெரும் இரட்சிப்ப்பாகும். இயேசுகிறிஸ்துவின் கிருபையால், பலியால் அதற்கு ஆட்டோமேட்டிக்காக அனைவருமே தகுதியாகிறார்கள், இப்போது அவரைப்பற்றி அறியாதவர்களாக இருந்தாலும்.


மரணமே உன் கூர் எங்கே? கல்லரையே உன் ஜெயம் எங்கே? என்ற வசனம் எல்லாருக்குமே சொந்தமானது என்று இந்தக் கிறிஸ்தவம் உணரத்தவறிவிட்டது.

நீங்கள் 'எங்கள் விசுவாசம்' என்ற பதிவைப் படித்து புரிந்துகொள்ளுங்கள். இன்னும் வரும். தங்கள் கேள்விக்கு நன்றி!







__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கிறிஸ்தவர்கள் மாத்திரமே ஆதாமை தெரிந்தைருக்கிறார்கள். அந்த ஆதாமின் ஒரு கீழ்படியாமையினால் இந்த உலகத்தில் பாவம் வந்து, அந்த பாவத்தின் தண்டனையாக சாபங்கள் வந்து அதன் முடிவாக மரணம் வந்தது. இப்படி ஆதாம் மூலமாக தான் மரணம் வந்தது என்று கிறிஸ்தவர்களான நாம் மாத்திரமே தெரிந்து அறிந்திருக்கிறோம், அதற்காக இந்த ஆதாமை தெரியாத மற்றவர்கள் மரிப்பதில்லையா? அனைவரும் அந்த ஆதாமிற்குள் (ஆதாமின் பாவத்தின் விளைவு) மரிக்கிறார்கள்.

அப்படியே, எல்லாரும் (எல்லாரும் என்றால் எல்லாரும் என்று தான் அர்த்தம்) கிறிஸ்துவின் பலியினால் உயிர்த்தெழுதல் என்கிற ஒரு பிரமாண்டமான இரட்சிப்பை பெறுவார்கள் என்பதில் வேதம் தெளிவாக சொல்லியிருக்கிறது, ஆனால் சபைகள் தான் குழம்பி போய், இதில் மனிதனின் சித்தத்தையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

தேவன் நினைப்பதை மனிதனின் சித்தம் தடுத்துவிட்டால், பிறகு எப்படி அவர் தேவனாக இருக்க முடியும். தேவன் என்றலே சர்வவல்லவர், அவரால் ஆகாத அல்லது செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லையே. அவர் இல்லமையில் இருந்து அனைத்தையும் உருவாக்கினவர்.

ஆனால் இன்று சபைகளிலோ, பிரசங்கிக்கப்படுவது, தேவன் நினைக்கிறார், ஆனால் மனிதனும் உடன்ப்பாட்டல் தான் இரட்சிப்பு என்றால், தேவன் தன் சித்தம் நிறைவேறுவதில் தோற்று விட்டார் என்றாகிவிடுகிறது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மரணம் என்றால் என்னவென்றே தெரியாத கிறிஸ்தவனுக்கு, இரட்சிப்பு, உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு எல்லாம் எங்கே புரியப்போகிறது.

மரணத்தை வேதம் தெளிவாக 'நித்திரை' என்று சொன்னாலும் இவர்கள் அதை 'பாதாளத்தில் வேதனை' என்கிறார்கள்.
அப்படியென்றால் சாகவே சாகாதவனுக்கு மீண்டும் உயிர்த்தெழுதல் எதற்கு? என்று கேள்வி கேட்டால் பதில் இல்லை.
அப்படி உயிர்தெழுப்பி என்ன செய்வார் என்று கேட்டால் மீண்டும் அக்கினியில் போடுவார் என்கிறார்கள்.
ஆக ஏற்கனவே சரீரமே இல்லாமல் பாதாளத்தில் வேதனை அனுபவிக்கும் மனிதன் (உபயம் ஐசுவரியவான் லாசரு உவமை) மீண்டும்  சரீரத்தோடு உயிர்த்தெழுந்து நரகம் என்ற அக்கினிக்கடலில் தள்ளப்படுவான்.

இதில் என்ன ஜோக் என்றால் ஏறத்தாழ எல்லாருமே இந்த தண்டனைக்குத் தகுதியாகிறார்கள் என்பதே.

எங்கே போய் முட்டிக்கொள்வதோ?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இன்னும் சொல்லப்போனால், தேவன் செய்வது அறியாது, சாத்தான் அவனுடன் நரகத்திற்கு கூட்டி செல்லும் பெரும்பான்மையான ஆதாமின் சந்ததியை பார்த்து கொண்டிருப்பார் போல். அங்கு இயேசு கிறிஸ்துவோ, "ச்சே, நான் இரத்தம் சிந்தியும் இந்த மனிதர்களை இரட்சிக்க முடியவில்லையே" என்று ஆதங்க படுவார் போல். ஏனென்றால் ஆதாம் தொடங்கி இரட்சிக்கப்படும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்றால் ஒரு சின்ன தொகை என்று தான் இருக்கும்.

மரணத்தை புரிந்துக்கொள்ள முடியாத இவர்கள் மரணத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட பிறகாவது இந்த மாபெரும் சத்தியத்தை தெரிந்துக்கொள்ளட்டும். அங்கு வந்தும் இந்த மாய்க்காரர்கள் "நாங்கள் தான் அற்புதம் செய்தோமே, பேய்களை துரத்தினோமே" என்று தம்பட்டம் அடிப்பார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் பதில் என்ன என்பதை நாம் அறிவோம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

துன்மார்க்கன் அழிவான் என்பதை நாங்கள் எங்கள் பெருமைக்காக சொந்தத்தில் எடுத்து   சொல்லவில்லை சகோதரரே. கீழ்க்கண்ட வசனங்கள் எல்லாம் வேதத்தில் இருந்து எடுத்ததுதான்  அதன் அடிப்படையில்தான் நாங்கள் பேசுகிறோம்.
 
சங்கீதம் 145:20 கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்
சங்கீதம் 1:5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
சங்கீதம் 104:35 பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள்.
சங்கீதம் 68:2 புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
சங்கீதம் 92:7 துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
 நீதிமொழிகள் 12:7 துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்;
 
இப்படி ஏராளமான வசனங்கள் துன்மார்க்கன் அழிவான் என்று சொல்லும்போது நீங்கள் எல்லோரும் மீட்கப்படுவார்கள் என்று சொல்வது முற்றிலும் முரண்பாடான கருத்தாக உள்ளது.  
 
கிறிஸ்த்துவுக்குள் எல்லோரும் உயிர்க்கப்படுவார்கள் என்பது உண்மை!  ஆனால் எதற்கு? நியாயதீர்ப்புக்காகவே! அதுதான் இறுதி  வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்பு!
 
தவறு செய்த ஒருவனை சட்டப்படி நீதிமன்றத்தில்  விசாரித்து தண்டனை கொடுக்கும் முன்னரே சிறையில் அடைப்பது உண்டு. பிறகு சரியாக  நியாயம் விசாரித்து அவனுக்கு மீண்டும் சிறை தண்டனையை உருதிசெய்வதில்லையா?   அதுபோன்றதொரு நிலைதான் இங்கு.
 
எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்ட்டு (மரித்து) நித்யமாக இருக்க வேண்டியவர்கள், இயேசுவின் மரணத்தால் ஒருமுறை உயிர்க்கப்பட்டு பிறகு நியாயம் விசாரிக்கப்பட்டு அவரவர் கிரியைக்கு தக்க பலனை அடைவார்கள் என்பதைத்தான் வேதம் சொல்கிறது.   
 
முதலில் தண்டனை பிறகு என்ன உயிர்தெழுதல் நியாயம் விசாரிப்பு என்றெல்லாம் கேள்வி கேட்டவுடன் வேதம் சொல்வது  எதுவும் நடக்காமல் போகாது.
 
இயேசு இரத்தம் சிந்தியது தவறு செய்வதற்கு லைசென்ஸ் கொடுக்க அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.  தவறு செய்தவன் அதற்க்கான தண்டனையை அனுபவிக்காமல் ஒருநாளும் தப்பமுடியாது!  அநேகருக்கு இடரலுண்டாக்கும்  பாவத்தை சுமக்காதீர்கள்.     


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Member

Status: Offline
Posts: 5
Date:

நண்பர் ராஜ் அவர்களே நீங்களும் சில்சாமைப் போல மிரட்டுகிறீர்களே... பார்த்து செய்யுங்க...பிரச்சினையாகிடப்போகுது..!

நீங்க சொல்லுவது என்னத்தான் நல்ல விஷயமா இருந்தாலும் அதை மிரட்டலா சொல்லி சாதிக்கமுடியாது;அதுக்கு "சில்சாம்" அவர்களே உதாரணம்..!

நீங்கள் துன்மார்க்கரைப் பற்றிச் சொன்னதைப் போலவே ஆண்டவர் துன்மார்க்கர் மீது கொண்டுள்ள கரிசனையைப் பற்றியும் வேதம் கூறுகிறது;

மேலும் துன்மார்க்கன் துன்மார்க்கமான காரியங்களைச் செய்வது அவனுடைய சுயவிருப்பத்தாலல்லவே,அதுவும் தேவ சித்தமே..!

தேவ சித்தத்தினை மீறி துன்மார்க்கனால் என்ன செய்துவிடமுடியும்?

உதாரணத்துக்கு யூதாஸ்காரியோத்து காட்டிக்கொடுக்காவிட்டால் இயேசுவானவர் எப்படி மீட்பின் திட்டத்தை நிறைவேற்றியிருக்கமுடியும்?

எனவே துன்மார்க்கன் என்று உங்களால் தீர்க்கப்படும் அவனும் தேவதிட்டத்தில் ஒரு பகுதிதானே..?


-- Edited by glady on Wednesday 6th of January 2010 02:58:18 PM

-- Edited by glady on Wednesday 6th of January 2010 02:59:29 PM

__________________
Iyer


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

glady wrote:

நண்பர் ராஜ் அவர்களே நீங்களும் சில்சாமைப் போல மிரட்டுகிறீர்களே... பார்த்து செய்யுங்க...பிரச்சினையாகிடப்போகுது..!


நீங்க சொல்லுவது என்னத்தான் நல்ல விஷயமா இருந்தாலும் அதை மிரட்டலா சொல்லி சாதிக்கமுடியாது;அதுக்கு "சில்சாம்" அவர்களே உதாரணம்..!

நீங்கள் துன்மார்க்கரைப் பற்றிச் சொன்னதைப் போலவே ஆண்டவர் துன்மார்க்கர் மீது கொண்டுள்ள கரிசனையைப் பற்றியும் வேதம் கூறுகிறது;

மேலும் துன்மார்க்கன் துன்மார்க்கமான காரியங்களைச் செய்வது அவனுடைய சுயவிருப்பத்தாலல்லவே,அதுவும் தேவ சித்தமே..!

தேவ சித்தத்தினை மீறி துன்மார்க்கனால் என்ன செய்துவிடமுடியும்?

உதாரணத்துக்கு யூதாஸ்காரியோத்து காட்டிக்கொடுக்காவிட்டால் இயேசுவானவர் எப்படி மீட்பின் திட்டத்தை நிறைவேற்றியிருக்கமுடியும்?

எனவே துன்மார்க்கன் என்று உங்களால் தீர்க்கப்படும் அவனும் தேவதிட்டத்தில் ஒரு பகுதிதானே..?



சாதித்து சம்பாத்தியம் எதுவும் நான் பண்ணிவிடப்போவது இல்லை கிளாடி அவர்களே. ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் தள்ளிவிடுங்கள். இயேசுவின் வார்த்தைகளையே தள்ளுபவர்களுக்கு எனது வார்த்தை என்ன பெரியதா?  
 
ஆண்டவர் எச்சரித்ததைதான் திருப்பி சொல்கிறேன். மற்றபடி வேறு யாருடனும் என்னை ஒப்பிட்டு எழுதவேண்டாம்!  
 
16. நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். 

இது ஆண்டவரின் எச்சரிப்பு!

சிகரெட் குடித்தால் புற்றுநோய்  வருமென்பதை  சிகரெட்டை குடிக்க கொடுத்து சொல்ல முடியாது!
சில காரியங்களை எச்சரிப்புடன் சொல்வதுதான் நல்லது இல்லையென்றால் பலருக்கு உரைக்காது.
 
ஆண்டவர் பரிசேயரை எச்சரித்தது தெரியுமல்லவா?
 
மத்தேயு 18:7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

ஏசாயா 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

லூக்கா 22:22
தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார்.

யூதாஸ் இல்லை என்றால் இயேசுவை யாரும் பிடித்திருக்க முடியாது என்று கருதுகிறீர்களா?

நடப்பது எப்படியாவது நடக்கும் ஆனால் யார் பிசாசுக்கு இடம் கொடுத்து பாவம் செய்கிறார்களோ அவர்களுக்கு ஐயோ!   பிசாசு எல்லோரையும்தான் பாவம் செய்ய தூண்டுகிறான் எல்லோரும்
அவனுக்கு இடம்கொடுப்பதில்லையே.  இடம் கொடுத்து பாவம் செய்பவன் நிச்சயம் குற்றவாளி  என்பதை  நான் சொல்லவில்லை வேதம் சொல்கிறது.  எனவேதான் வேதம் நமக்கு கீழ்க்கண்ட எச்சரிப்பை தருகிறது.
 
எபேசியர் 4:27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.

யாக்கோபு 4:7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

சாத்தானும் தேவனின் திட்டத்தில் உள்ளவன்தான் எனவே அவன் சொல்வதற்கு கீழ்படியுங்கள் என்றா வேதம் சொல்கிறது?
 
தேவனின் சித்தத்துக்கு மீறி மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது!    தேவனின் சித்தம் நிறைவேருவத்தையும் யாரும் தடுக்க முடியாது.   ஆகினும் சாத்தனுடன் சேர்ந்துகொண்டு   தேவனின் சித்தம் நிறைவரவிடாமல்  தடுத்தல் செய்துகொண்டு இருப்பவருக்கு நிச்சயம் தண்டனை உண்டு!
 
தேவனின் சித்தம் நிறைவேற அபிஷேகம் பண்ணப்பட்ட சிம்சோன் வேசியிடம் உளறி கொண்டியதால் கண்கள் பிடுங்கப்பட்டு மாண்டுபோனான். ஒரு தாவீது பாவம் செய்தால் தேவனின் திட்டம் நிறைவேறாமல் போகாது. தேவன் தனது திட்டத்தை எப்படியும் நிறைவேற்றுவார் ஆனால் அவனவன் செய்த பாவத்தின் தண்டனையை அனுபவிக்காமல் தப்பவே முடியாது!   
 
நீங்கள் நினைப்பதுபோல் எல்லோருக்கும்  ஒரே  நியாயதீர்ப்பு அல்ல!
 
மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
வெளி:  
11. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
 
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

அவர் கொண்டுவரும் நியாயதீர்ப்பு எப்படி இருக்குமென்று யாருக்கும் தெரியாது!  ஆனால் அவனவன் கிரியைக்கு தகுந்தால்போல் இருக்கும் என்பது மட்டும் உறுதி.
 
 



 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்." என்று பதித்துவிட்டு நீங்கள் அநியாயஞ்செய்கிறவன் பரிசுத்தமாகட்டும் என்று வேதத்துக்குப் புறம்பாக ஏன் செய்கிறீர்கள்? அல்லது இதுவரை எத்தனை அநியாயஞ்செய்கிறவனை நீங்கள் நீதிமானாக மாற்றியிருக்கிறீர்கள்? அப்படி மாற்றிய ஒருவரையாவது காண்பியுங்களேன். அப்படி முழுமையான நீதிமான், பரிசுத்தவான் என்று சொல்லக்கூடிய ஒருவரையாவது உங்களால் காண்பிக்க முடியுமா? "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்ற வசனம் பொய்யா?

கிருபை நிச்சயம் தவறு செய்ய லைசென்ஸ் கிடையாதுதான். அதே நேரம் வெறும் 'நன்மை' செய்வதால் மாத்திரம் பரலோகம் போகும் வாய்ப்பு வந்துவிடாது. அதற்கு தேவனால் தெரிந்துகொள்ளப்பட வேண்டும். கிறிஸ்துவைப்போன்ற அர்பண ஜீவியம் வேண்டும், பவுலைப்போல பாடுபடவேண்டும், இப்படி யாராவது இந்த யுகத்தில் இருக்கிறார்களா என்பது சந்தேகமே.

துன்மார்க்கன் மட்டுமல்ல துன்மார்க்கமே அழிக்கப்பட்டு 'நீதி வாசம் செய்யும்' புதிய பூமியைத்தான் வேதம் வாக்களிக்கிறது. அதில் யாவரும் நீதியைக் கற்றுக்கொண்டு நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள். சமுத்திரம் தன்னுடையவர்களை ஒப்புவித்தது என்பதெல்லாம் உயிர்த்தெழுதலைத்தான் குறிக்கிறது. நியாயத்தீர்ப்பு வரும்போது விளங்கும். எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானதுபோல் எல்லாருடைய பாவத்தையும் போக்கிய கிறிஸ்துவின் இரத்த்தத்தால் எல்லாரும் நீதிமான்கள் ஆவார்கள். நீங்கள் சொல்வதைப்பார்த்தால் கிறிஸ்துவின் ரத்தம் ஏதோ சொற்பமானவர்களுக்கு மட்டும் 'பலித்துவி
ட்டு' மற்றவர்களுக்கு அது வீணாய்ப்போகிறதே?

நியாயத்தீர்ப்பு என்பது ஏதோ சப் ஜெயிலிலிருந்து விசாரித்துவிட்டு வேலுர் ஜெயிலில் அடைப்பது அல்ல. நம்முடைய 'நீதி'யெல்லாம் அழுக்கும் கந்தையுமாக இருக்கிறது நண்பரே! ஒரு தோற்கும் தேவதிட்டம் உங்களது. கிறிஸ்துவின் மூலம் சிலுவையில் மரணத்தை வென்று வெற்றிச்சிறந்த தேவதிட்டம் வேதம் போதிக்கிறது.

மீண்டும் சொல்கிறேன் சபையையும் உலகத்தையும் போட்டுக்குழப்பிக்கொள்ளவேண்டாம்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோதரர் ராஜ் அவர்களே,

அவனவனின் பலன் என்று பல முறை சொல்லியிருக்கிறீர்களே, அதற்கு அர்த்தம் தெரியுமா? பெரும்பாலும் பிரசங்கிப்பது மாதிரி, அது ஒன்றும், பரலோகத்தில் மாட மாளிகையோ, பஞ்சு மெத்தையோ, அல்லது தங்கம், வைரம் வைடூரியம் நிறைந்த இடமும் இல்லை. இரண்டு விதமான பலன்களே உண்டு. ஒன்று,  சபை தொடங்கி அவரின் வருகை மட்டும் அவரை (இயேசு கிறிஸ்துவை) போல் ஜீவிக்கும் ஒரு சிறிய கூட்டம் அவரோடு சேர்ந்து 1000 வருடம் ஆட்சி புரிந்து, இரண்டாவது பலன் கிடைத்து இந்த பூமியில் இருக்கும் அனைவருக்கும் நீதியை போதித்து நேர் படுத்துவார்கள். என்றென்றும் இயேசு கிறிஸ்து இப்பொழுது இருக்கும் நிலையில் இருந்து தேவனை தரிசிப்பவர்களாக இருப்பார்கள். இரண்டாவது விதமான பலன் தான் அந்த பரலோகம் கிடைக்காமல் மிச்சம் உள்ள பெரும்பாளுமானோர், இந்த பூமியில் உயிர்த்தெழுந்து நீதியை கற்றுக்கொண்டு என்றென்றும் இந்த பூமியில் வாழ்வார்கள். இது மாத்திரமே அவனவனுக்கு உண்டான பலன். மற்றபடி இன்று ப‌ல‌ர் த‌ரிச‌ன‌ங்க‌ள் க‌ன‌வுக‌ள் ம‌ற்றும் இயேசு கிறிஸ்துவுட‌ன் உறையாட‌ல் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் சொல்லுவ‌து போல் ஒன்றும் கிடையாது.

சாத்தான் ஆதாம் ஏவாளின் பாதையில் குறுக்கிடும் வ‌ரை அவ‌ர்க‌ள் எந்த‌ பாவ‌த்திலும் விழுந்தார்க‌ளா? இல்லையே!! அன்று முத‌ல் இந்த‌ உல‌க‌த்தின் முடிவு வ‌ரை (சாத்தான் க‌ட்ட‌ப்ப‌டும் வ‌ரை) இந்த‌ பூமி அவ‌னின் ஆளுகையில் தேவ‌னின் சித்த‌த்தோடு இருக்கிற‌து. ஏனென்றால் இந்த‌ பொல்லாத‌ பிர‌ப‌ஞ்ச‌த்திலிருந்து தான் தேவ‌ன் அவ‌ரின் குமார‌னோடு சேர்ந்து ஆளுகை செய்யும்ப‌டி ச‌பையை தேர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறார். சாத்தான் க‌ட்ட‌ப‌ட்ட‌ பிற‌கு (க‌ட்ட‌ப்ப‌ட்ட‌வுட‌ம் என்ற‌தும் ஏதோ அவ‌னை ஒரு ச‌ங்கிளியால் க‌ட்டி வைப்பார்க‌ள் என்று இல்லை, மாறாக‌ அவ‌னின் கிரியைக‌ள் ஒய்ந்து போகும்) இயேசு கிறிஸ்துவும் ச‌பையும் இந்த‌ புமியை ஆளுகை செய்து இந்த‌ பூமியில் உயிர்த்தெழுந்த‌வ‌ர்க‌ளுக்கு நீதியை க‌ற்று கொடுப்பார்க‌ள். இயேசு கிறிஸ்துவே இந்த‌ பூமியை ஆளுகை செய்யும் போது எப்ப‌டி துன்மார்க்க‌ன்(ர்க‌ள்) உருவாகுவார்க‌ள் என்று தான் புரிய‌வில்லை.

ஏற்க‌ன‌வே பாவ‌த்தின் ச‌ம்ப‌ள‌ம் பெற்று ம‌ரித்து போய் இருக்கும் கோடா கோடி ஜனங்களை எழுப்பி மீண்டும் இல்லாத‌ ஒரு எரி ந‌ர‌க‌த்திற்குள் போடுவ‌து என்ப‌து ச‌ற்று பெரிதான‌ க‌ற்ப‌னையாக‌ தான் இருக்க‌ முடியுமே த‌விர‌, தேவ‌ன் வைத்திருக்கும் அன்பை புரிந்துக்கொள்ளுவதாக‌‌ இருக்க‌ முடியாது.

தேவ‌னின் திட்ட‌த்தில் ஒவ்வொருத்த‌ரும் அட‌ங்குகிறார்க‌ள். அவ‌ன‌வ‌னுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌தை ச‌ரிவ‌ர‌ செய்து வ‌ருகிறார்க‌ள், அது சாத்தானான‌லும் ச‌ரி, யூதாஸ் ஆனாலும் ச‌ரி. இதை புரிந்துக்கொள்ளாத‌வ‌ர்க‌ள் இன்று பெரும் ச‌பைக‌ளை ந‌ட‌த்தி ஆட‌ம்ப‌ர‌மான‌ கார்க‌ளில் ப‌வ‌னி வ‌ருகிறார்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு என்று ஒரு விசுவாசி (!!) கூட்ட‌ம் சேர்த்துக்கொள்கிறா‌ர்க‌ள். ஆனால் இதையும் தேவ‌ன் அனும‌தித்த‌தே!!

அவ‌ரின் அன்பின் ஆழ‌ம் அக‌ல‌ம் நீல‌ம் உய‌ர‌ம் எல்லாம் புரிந்துக்கொள்வ‌த‌ற்கு ம‌னித‌ ஞான‌ம் மாத்திர‌மே போதுமான‌தாக‌ இருக்காது, அவ‌ரின் ஆவி (சிந்த‌னை) அவ‌சிய‌ம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

glady wrote:
//நண்பர் ராஜ் அவர்களே நீங்களும் சில்சாமைப் போல மிரட்டுகிறீர்களே... பார்த்து செய்யுங்க...பிரச்சினையாகிடப்போகுது..! //


சகோ.கிளாடி அவர்களே! சகோ.ராஜ் அவர்களின் பதிவில் மிரட்டல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. துன்மார்க்கரை எச்சரிக்கிற சில வேதவசனங்களைத்தான் அவர் பதித்துள்ளார். சகோ.ராஜ் மிரட்டும் தொனியில் ஏதாவது பதித்திருந்தால், அவரது பதிவை குறிப்பிட்டுக் காட்டும்படி வேண்டுகிறேன்.

glady wrote:
//நீங்கள் துன்மார்க்கரைப் பற்றிச் சொன்னதைப் போலவே ஆண்டவர் துன்மார்க்கர் மீது கொண்டுள்ள கரிசனையைப் பற்றியும் வேதம் கூறுகிறது;//


சகோதரியே! தங்களது இக்கூற்றுக்கு ஆதாரமான வேதவசனங்களை குறிப்பிடும்படி வேண்டுகிறேன்.

சகோ.soulsolution அவர்களே! துன்மார்க்கருக்குக் கிடைக்கப்போகிற பலன்களைக் குறித்ததான எத்தனையோ வேதவசனங்களை நானும் ராஜ் அவர்களும் எடுத்துரைத்துள்ளோம். அவ்வசனங்களுக்கான உங்கள் விளக்கத்தை இதுவரை நீங்கள் தந்ததாக எனக்கு நினைவில்லை. இந்த விவாதப் பகுதியில்கூட சகோ.ராஜ் பின்வரும் வசனங்களைத் தந்துள்ளார். அவற்றிற்கான விளக்கத்தைத் தரும்படி வேண்டுகிறேன்.

சங்கீதம் 145:20 கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்
சங்கீதம் 1:5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
சங்கீதம் 104:35 பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள்.
சங்கீதம் 68:2 புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
சங்கீதம் 92:7 துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
நீதிமொழிகள் 12:7 துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்;

இவற்றோடு நானும் சில வசனங்களைத் தருகிறேன்.

சங்கீதம் 37:9,10,38 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.
நீதிமொழிகள் 10:30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.
ஏசாயா 11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
மல்கியா 4:1  இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

இவ்வசனங்கள் யாவற்றிற்கும் விளக்கம் தரும்படி வேண்டுகிறேன்.


-- Edited by anbu57 on Friday 8th of January 2010 01:14:24 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இவ்வெல்லா வசனங்களுக்கும் விளக்கமளிப்பதற்கு முன்பாக ஒரே ஒரு வசனத்தை நினைவில் கொள்ளவும். "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை", எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களானதால், நீதிமானல்லாத அனைவருமே துன்மார்க்கர்தான் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

உங்கள் கருத்துப்படி முழு மனுக்குலமும் அழிந்து போகும். இதற்கு விளக்கம் தரவும். அல்லது முழுக்க முழுக்க நீதிமானாகவும், பரிசுத்தவானாகவும் இருக்கிற ஒருவரையாவது காண்பியுங்கள். இயேசு சொன்னதுபோல 'உங்களில பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்' என்று இன்றைக்குச் சொன்னால் நீங்கள் எறிவீர்களா?
கிருபையை உதறித்தள்ள வேண்டாம். அது இலவசமாய் கிடைத்த ஈவு. இந்தக் கிருபைக்கு தகுதி தேவையேயில்லை அது எல்லார் மேலும் பலிக்கும். நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் இதுவரை துன்மார்க்கராக இருந்தவர்களுக்கு உயிர்தெழுதல் இல்லை என்றா?

இரண்டே இரண்டு பிரிவினர்தான் உண்டு சகோதரரே, ஒன்று நீதிமான் இன்னொன்று துன்மார்க்கன். நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என்றுதான் வேதம் சொல்கிறது. ஆக எல்லாரும் துன்மார்க்கர்கள்தான். இல்லை நான் நீதிமான் என்று எவனாகிலும் சொன்னால் அவன் உலகத்திலேயே மகாபெரிய பொய்யனாக இருப்பான் என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் காட்டிய வசனங்கள் துன்மார்க்கர்களை ஒரேடியாய் அழிப்பதால் ஒருவனும் உயிரோடு இருக்கப்போவதில்லை. எல்லாருமே அழிந்துதான் போவார்கள். பூமி காலியாக இருக்கும். தேவ திட்டம் இதுதான்..... இல்லையா?

அன்பு அவர்களே எல்லாருக்கும் இரட்சிப்பு, பாவமன்னிப்பு, உயிர்த்தெழுதல் உண்டு என்று ஏராளம் வசனங்களை நானும் சகோ.பெரேயன்ஸ் அவர்களும் பதித்துள்ளோம். ஆனால் நீங்களோ , சகோ.ராஜ் அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள மனதின்றி இருக்கிறீர்கள்.

அப்படி முழுமையான நீதிமான், பரிசுத்தவான் என்று சொல்லக்கூடிய ஒருவரையாவது உங்களால் காண்பிக்க முடியுமா? என்று கேட்டால் மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது ஆனால் நான் ஒரு பூரண பரிசுத்தவான் என்றும் எழுத மனமில்லை. நீங்கள்தான் பதில் தரவேண்டும்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Member

Status: Offline
Posts: 5
Date:

அப்படியானால் ரோமர்.8:29,30-ன் விவரம் என்ன சகோதரரே..?

__________________
Iyer


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மீண்டும் நல்ல கேள்வி சகோதரி!

முன்குறிக்கப்பட்ட சிலரை அவர்தான் நீதிமானாக்கியிருக்கிறார், இவர்கள் உலகத்தை ஆளப்போகும் சிறுமந்தையாகிய நீதிமான்கள். மற்றவர்கள் புதிய பூமியில் இவர்களால் நீதியைக் கற்றுக்கொண்டு நீதிமானாகப்போகிறவர்கள். தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். வச33.

ஆகவே அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட சிலர் இந்த சுவிசேஷ யுகத்தில் நீதிமான்களாக்குகிறார். ஒரு சிலரை மாத்திரம் நீதிமான்களாக்கிவிட்டு மற்றவர்களை துன்மார்க்கத்திலேயே வைத்திருக்கிறாரா என்றால் ஆம். அது தேவ சித்தம்.

ஆனால் சத்தியமாக அந்த தேவனால் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவின்  சபை என்னும் (கிறிஸ்துவின் அச்சடையாளங்களைத் தரித்துக்கொண்ட‌) அந்த பரிசுத்தவான்கள் கூட்டத்தில் நான் இல்லவே இல்லை என்று முழுநிச்சயமாக நம்புகிறேன். அதுபோல ஒரு நீதிமானையும் நான் இதுவரை பார்த்ததில்லை. உங்களுக்கு யாராவது ஒருவரை தெரிந்திருந்தால் சொல்லுங்கள் அவரைப் பார்க்க ஆவல். மரணம் பற்றி விவாதிக்கலாமே? அடிப்படையான உபதேசங்களில் தெளிவு ஏற்பட்டால்தான் மற்ற காரியங்களை ஆராயமுடியும்.

நன்றி!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:57:19 PM

__________________
"Praying for your Success"


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//இவ்வெல்லா வசனங்களுக்கும் விளக்கமளிப்பதற்கு முன்பாக ஒரே ஒரு வசனத்தை நினைவில் கொள்ளவும். "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை", எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களானதால், நீதிமானல்லாத அனைவருமே துன்மார்க்கர்தான் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.//


சகோதரரே! இவ்வுலகத்தின் முடிவின்போது துன்மார்க்கரின் நிலை என்னாகும் என்பதைத்தான் நான் அறியவிரும்புகிறேன். பல வசனங்கள் கூறுகிறபடி பார்த்தால் துன்மார்க்கர் முற்றிலுமாக அழிவார்கள், சங்கரிக்கப்படுவார்கள், நிர்மூலமாவார்கள் என்பதே உண்மையாகக் காணப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன என்பதுதான் கேள்வி. இதற்கு நீங்கள் நேரடியாக பதில் தராவிடினும், குறிப்பிட்ட அவ்வசனங்கள், துன்மார்க்கரை ஒரேயடியாக அழிப்பதாக ஒத்துக்கொண்டீர்கள்.

soulsolution wrote:
//நீங்கள் காட்டிய வசனங்கள் துன்மார்க்கர்களை ஒரேடியாய் அழிப்பதால் ஒருவனும் உயிரோடு இருக்கப்போவதில்லை. எல்லாருமே அழிந்துதான் போவார்கள்.//


குறிப்பிட்ட வசனங்களின்படி, துன்மார்க்கர் அனைவரும் அழிந்துதான் போவார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” எனும் ஒரு வாக்கியத்தை வைத்து, இவ்வுலகில் அனைவரும் துன்மார்க்கரே என நீங்கள் முடிவுகட்டிவிட்டதால், துன்மார்க்கராகிய இவ்வுலக மனிதர் அனைவரும் அழிந்துபோவார்களே, அதன்பின் இப்பூமி காலியாக அல்லவா இருக்கும் எனக் கேள்விகேட்டு, அதற்குப் பதில்தரும்படி கேட்கிறீர்கள்.

ஆனால் உங்கள் கேள்விக்கு அவசியமே இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், இவ்வுலகில் நீதிமான்கள் உண்டு என்பதுதான் உண்மை. அது எவ்வாறென்பதைப் பார்ப்போம்.

நீதிமான் ஒருவனாகிலும் இல்லை எனக் கூறுகிற அதே வேதபகுதி, நன்மை செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை என்றும் கூறுகிறது (ரோமர் 3:12). அவ்வாறெனில் இவ்வுலகில் எந்த மனிதனும் நன்மையே செய்யவில்லை எனும் முடிவுக்கு வரமுடியுமா? இவ்வுலகில் நீதிமானைத்தான் நீங்கள் பார்க்கவில்லை, நன்மை செய்கிறவனையுமா பார்க்கவில்லை? நீங்களேகூட எத்தனையோ நன்மைகளை செய்திருக்கக் கூடுமே? கிறிஸ்துவின் ஒப்பற்ற அன்பை ருசித்த நீங்கள், அந்த அன்பில் மிகச்சிறு பகுதியையாவது பிறரிடம் கட்டாயம் காட்டியிருப்பீர்கள் அல்லவா? அதாவது மிகச் சிறிய நன்மையாவது யாருக்காவது செய்திருப்பீர்கள் அல்லவா? நிச்சயம் செய்திருப்பீர்கள்.

ஆனால் வேதவசனமோ, நன்மைசெய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை என்கிறது. அவ்வாறெனில் வேதாகமம் தவறாகக் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை. வேதாகமம் கூறுவதை நாம் தவறாகப் புரிந்துகொண்டதுதான் குழப்பத்திற்குக் காரணம். இவ்வுலகில் நன்மை செய்கிறவனும் உண்டு, நீதிமானும் உண்டு என்பதே உண்மை. ரோமர் 3-ம் அதிகாரத்தில் பவுல் யாரைக் குறிப்பிடுகிறார், அவர் மேற்கோள் காட்டும் பழைய ஏற்பாட்டு வசனங்களான சங்கீதம் 5:9; 10:7; 14:3; 53:3; 140:3; நீதிமொழிகள் 1:16; ஏசாயா 59:4-8; சங்கீதம் 36:1 ஆகியவை எவர்களைக் குறிப்பிடுகின்றன என்பதையெல்லாம் நிதானமாகத் தியானித்துப் பார்த்தால், இவ்வுலகில் ஒரு நீதிமானும் இல்லை என்ற அர்த்தத்தில் பவுல் அவ்வாக்கியத்தைக் கூறவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

பவுல் கூறுவதை உங்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமற்போனாலும், இயேசு கூறிய வசனங்களான மத்தேயு 10:41; 13:17,43,49; 23:35,37; லூக்கா 14:14 ஆகியவற்றைப் படித்துப்பார்த்து, இவ்வுலகில் நீதிமான்கள் உண்டா என்பதைத் தீர்மானியுங்கள். குறிப்பாக லூக்கா 14:14-ல் இயேசு சொல்வதைப் படித்துப்பாருங்கள்.

லூக்கா 14:13,14  நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.

இவ்வசனத்தில் நீதிமான்களின் உயிர்த்தெழுதல் எனும் ஓர் உயிர்த்தெழுதலைக் குறித்து இயேசு கூறுகிறார். நீங்கள் புரிந்துகொண்டபடி, இவ்வுலகில் நீதிமான்களே இல்லாவிடில், நீதிமான்களின் உயிர்த்தெழுதல் என இயேசு கூறுவது அர்த்தமற்றதாகிவிடுமே?

இவ்வுலகில் ஒவ்வொருவரின் கிரியைகளின்படி யாரை நீதிமான் என தீர்ப்பது, யாரை துன்மார்க்கன் என தீர்ப்பது என்பது நீதிபரராகிய தேவனுக்கும் இயேசுவுக்கும் நன்றாகத் தெரியும். பல வேதவாக்கியங்கள் கூறுகிறபடி இவ்வுலகின் முடிவில், மனிதர்களின் கிரியைகளின் அடிப்படையில் ஒரு பிரிவினர் நீதிமான்கள் என்றும் மற்றொரு பிரிவினர் துன்மார்க்கர் என்றும் நிச்சயமாகத் தீர்க்கப்படுவார்கள். இது சம்பந்தமாக இன்னும் பல வசனங்களை ஆதாரமாகத் தரமுடியும். அதற்கு முன்னதாக, துன்மார்க்கர் அழிவார்கள் எனும் விஷயத்தில் தெளிவுக்கு வாருங்கள், அல்லது துன்மார்க்கருக்கான பலன்கள் பற்றின வேதவசனங்களுக்கு உங்கள் விளக்கத்தைத் தாருங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இயேசு கிறிஸ்து யார்? பிதா யார்? என்றெல்லாம் போவதற்கு முன் மரணம் என்றால் என்ன என்று தெளிவாக விளங்கிக் கொள்வது நன்று. வேதம் மரணம் என்று ஒரே ஒரு விஷயத்தைத்தான் குறிக்கிறது. ஆவிக்குரிய மரணம், சரீரமரணம் என்று எங்குமே இல்லை.

"...இவைகள் (மிருகங்கள்) சாகிறது போலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலிருந்து உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத்(பிரேதக்குழிக்கு) திரும்புகிறது. பிரசங்கி 3:19,20.

அனைவரும் பிரேதக்குழியில்தான் உள்ளனர் என்று யோவான்5:28ம் தெளிவாகக் கூறுகிறது.

மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்..பிரசங்கி9:5

...நீ போகிற கல்லறையிலெ செய்கையும், வித்தையும், அறிவும், ஞானமும் இல்லையே 9:10

மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்குத் திரும்புவாய். ஆதி4:19

இதற்கு எதிராக 'இல்ல பிரதர், மரிக்கும்போது உங்கள் சரீரம் மட்டும்தான் மண்ணுக்குப் போகும், நீங்கள் (ஆத்துமா) சாவதில்லை, பரலோகத்திற்கோ(யோவான்3:13க்கு எதிராக), பரதீசுக்கோ(என்கிருக்கிறதென்று யாரும் சொல்ல மாட்டார்கள்), ஆபிரகாம் மடிக்கோ(?) போவீர்கள், அவிசுவாசிகள் மரித்தால் அவர்கள் பாதாளத்துக்கு(அக்கினி எரியும்) போவார்கள் என்று போதிப்பவர்கள், சாத்தான் சொன்ன சாகவே சாவதில்லை என்ற உபதேசத்தைத்தான் போதிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க. இதைத்தான் பேய்த்தனத்துக்கடுத்த உபதேசம் என்கிறார் போல அப்.பவுல்.


-- Edited by soulsolution on Friday 8th of January 2010 10:41:23 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரர் அன்பு அவர்களின் விளக்கத்துக்கு பதில் தராமல் வேறு கருத்துக்களை ஆராய முற்ப்படுகிரீர்கள் சகோதரரே!  மரணம் பற்றியும் நரகம் பாதாளம் பற்றியும் வேறு தலைப்புகளை ஆராயலாம். இங்கு துன்மார்க்கனுக்கு அழிவு உண்டா?  
இல்லையா?  என்பதை மட்டும் ஆராய்வோம்!  
 
நீதிமான்  ஒருவனும் இல்லை என்று வேதம் ஓரிடத்தில்  சொல்லும் பட்சத்தில் 
இயேசு கூறும் கீழ்க்கண்ட வார்த்தைகளை பாருங்கள்!  
 
மத்தேயு 23:35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்
 
மேலும் நோவாவை குறித்து கூறும்போதும்  தேவன்: 
 
1. கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.  என்று குறிப்பிடுகிறார் 

மேற்கண்ட வசனங்கள் மூலம்  நீதிமான்கள் பூமியில் இருந்திருக்கிறார்கள் என்பதை அறியமுடியும்! வேதம் சொல்லும் இரண்டு வசனங்களையும் நாம் நோக்கவேண்டும்!  ஒருவேளை நீங்கள் சொல்லும்   அந்த வசனம் சொல்லப்பட்ட நேரத்தில் பூமியில் நீதிமான் யாரும் இல்லாமல் வேண்டுமானால் இருந்திருக்கலாம்.   
 
இரண்டாவதாக பாவிகளாக இருந்த நாம் இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்கள் ஆக்கபடுகிறோம் என்று வேதம் கூறுகிறது  
     
ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
ரோமர் 5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
 
11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

இங்கு  "சிறு மந்தை" மட்டுமல்ல "அநேகர்"  என்ற பதம் இருமுறை வருகிறது  என்பதை கவனிக்கவும். அநேகரை தேவன் மீட்டாலும், அவர்களை தள்ளிவிட்டு   எப்படியாவது ஆட்சியைபிடித்துவிடவேண்டும் என்று பலர்  முயல்வதுபோல் 
தெரிகிறது!
  
ஒருவரை அழைத்து வந்து இவர் நீதிமான் என்று நான் காண்பித்தால் நீங்கள் நம்பபோவது இல்லை. ஒருவன் நீதிமானா இல்லையா என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும். அவருக்கு முன் நீதிமானாக நடந்தால் போதும். மனிதனுக்கு முன் நடக்கவேண்டிய தேவையில்லை.
 
எனவே தேவனால் இயேசுவுக்கும் மீட்கப்பட்ட  நீதிமான் நித்யமாக  வாழ்வதும், துன்மார்க்கன்  அழிவதும் தேவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி!  அதையே வசனங்கள் திரும்ப திரும்ப சொல்கின்றன!  
 
உங்கள் பார்வைக்கு ஒருவரும் நீதிமானாக தெரியாமல் இருக்கலாம்! ஏனெனில் நீங்கள் ஆளபோகும் சிருமந்தை  அல்லவா? உங்கள் தரத்திற்கு எங்களால் வரமுடியாவிட்டலும் இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் நீதிமான்கள் ஆக்கப்பட்டிருக்கிறோம்  என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்! எனவே கிறிஸ்த்துவுக்கும் நான் நீதிமானே!     

மேலும் எனது பார்வைக்கு இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு பரிசுத்தமாக வாழும்  பல நீதிமான்கள் தெரிகின்றனர்.      
  
 
 


-- Edited by RAAJ on Saturday 9th of January 2010 09:23:19 AM

-- Edited by RAAJ on Saturday 9th of January 2010 09:24:37 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard