நாம் தவறி விழுந்து போகாமல், தம்முடைய கிருபையினால் நம்மைக்காத்து மற்றொரு வருஷத்துக்குள் நம்மை பிரவேசிக்கச் செய்த தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக.
சகலரும் ஒரே சிந்தையோடும், இருதயத்தோடும் அவருடைய ஊழியத்தை, அவர் வார்த்தையின்படி இம்மட்டும் செய்து முடிக்கக் கிருபை செய்தார்.
அவருடையவர்களல்லாதவர்களைச் சலித்து பிரித்தெடுக்க அக்கிரமக்காரனான சாத்தானை தேவன் பலமாக உலக மக்கள் பேரிலே வரவிடும் இக்காலத்தை அறிந்தவர்களாகிய நாம் (2 தெச. 2: 10 - 12) எவ்விதத்திலும் தவறாது சத்தியத்தினாலே காக்கப்பட்டு, அதில் உறுதியாய் நின்று, மறுவருஷத்துக்குள் பிரவேசிக்கக் கிருபை செய்தார் என்பதை உணர்ந்து அவருக்கு நன்றியுள்ள ஸ்தோத்திரத்தை ஏறெடுப்போமாக.