கடந்த வருஷத்திலே தேவன் நமக்குச் செய்த எல்லாக் காரியங்களையும், தெய்வீக நடத்துதலையும் நாம் நினைவு கூறும்போது, நாம் தைரியங்கொண்டு, விசுவாசத்திலே உற்சாகப்படுத்தப்படுகிறோம்.
இது தொடர்ந்து வருகிற வருஷத்திலும் அருளப்பட ஜெபிப்போம்.
தேவனுடைய பிள்ளைகள் கடந்தகால நல் ஈவுகளுக்கு மாத்திரம் துதி செலுத்துகிறவர்களாயிராமல், தங்கள் தலைகளை உயர்த்தி தங்கள் மீட்பு சமீபமாயிருப்பதை உணர்ந்து வரும் வருஷத்திலும் தொடர்ந்து ஆசீர்வாதத்தைப் பெற விரும்ப வேண்டும்.
நம்மில் நல்ல காரியத்தைத் துவக்கியவர் அதை நலமாக முடிக்க நம்முடைய சித்தத்தை அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.