கடைசி நாட்கள்! கடைசி நாட்களில் சம்பவிக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன அத்தனை காரியங்களும் அப்படியே நடந்துகொண்டிருக்கிறது என்பதை விழித்திருந்து வேதத்தை ஆராயும் எவரும் புரிந்துகொள்வார்கள். இந்தத் தளம் வேத வாஞ்சையுள்ள, வெளியில் விடைகிடைக்காத கேள்விகளூக்கு விடைதேடும் 'கழுகுகளுக்கானது'. இதை மற்ற பாபிலோனிய குழப்ப சபை உபதேசத்தில் இருக்கும் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தூங்குபவர்களை எழுப்புவது சுலபம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது. தள அன்பர்களுக்கு மீண்டும் வேண்டுகோள். சத்தியத்தில் ஆர்வமுள்ளவர்கள் தயவு செய்து இங்கு தங்கள் ஆரோக்கியமான பதிவுகளைத்தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சகோ. அன்பு போன்றவர்கள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவைநாகரீகத்துக்குப் பங்கம் வரும்படி எதுவும் எழுதவில்லை. 'இருதயத்தின் நிறைவால் வாய் பேசும்'. எழுத வாஞ்சையுள்ளவர்கள் எழுதாவிட்டால் சில்சாம் போன்ற குப்பைகள் சேரும். இனியும் இந்தக் குப்பைகளை அனுமதிக்க வேண்டாம் என்று மாடரேட்டரைக் கேட்டுக்கொள்கிறேன். தேவன் உங்களையும் இந்தத் தளத்தின் பணியையும் ஆசீர்வதிப்பாராக!
இப்படி கடைசிக்காலத்தை குறித்து ஒரு தீர்க்கதரிசனம் இருந்தாலும் இன்றைய ஊழியர்கள் யாரின் பாதத்தில் அமர்ந்திருப்பதால் அவர்களுக்கு இந்த வசனங்கள் எல்லாம் தெரிவதில்லை! நாங்கள் தேவனின் பாதத்தில் அமர்ந்தால் எங்களுக்கு எல்லாம் வெளிப்படுத்துவார் என்று பலர் தங்களை மேன்மை படுத்துக்கொண்டு இருக்கிறார்களே, இவர்களுக்கு தேவன் இப்படி பட்டவைகளையெல்லாம் கான்பிப்பதில்லை போல். அப்படி என்றால் எந்த தேவனின் பாதத்தில் அமர்ந்து இவர்கள் காரியங்களை தெரிந்துக்கொள்கிறார்கள் என்பதில் தான் சந்தேகம். தேவர்கள் எனப்படும் அநேக தேவன்கள் உண்டு (சாத்தான் உட்பட). ஒளியின் வேஷம் தரித்து சாத்தானின் ஊழியர்களும் அவன் தரும் பணம் பகட்டை விட பிரியம் இல்லாமல், அவனுக்கு ஊழியம் செய்துக்கொண்டு நாங்கள் தேவனுக்கு தான் ஊழியம் செய்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.
இப்படி எல்லாம் நடப்பது (2 தீமோ 3:1-5) தேவனின் சித்தம் என்று வேதம் சொல்லியிருந்தாலும், வேறு ஒரு தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு இது நிச்சயமாக கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை தான். ஆகவே தான் வேட்டியை வரிந்துக்கட்டி கொண்டு தேவன் (எந்த தேவன் என்று தான் தெரியவில்லை) எங்களை ஊழியம்செய்ய தெரிந்த் கொண்டிருக்கிறார் என்று உலா வருவது பெருகிக்கொண்டு போகிறது.
சற்று காலம் முன் வேறு ஒரு சபையில் "சாதாரன விசுவாசியாக(!!)" இருந்தவர், திடீர் என்று வேறு ஒரு சபையை துவக்கி தன்னை பாஸ்டர் என்றும் தன்னை தேவன் "ஊழியம்" செய்ய அழைத்தார் என்றும் சொல்லி அவரை பின் பற்றுபவர்களை "சாதாரன விசுவாசியாக" சொல்ல ஆரம்பிப்பார். இது ஒரு சக்கிரம் போல். பிறகு அதே சபையில் இன்னோரு சாவி வேறு ஒரு சபை ஆரம்பித்து ஆட்டை திருடி (!!) பாஸ்டர் ஆகி விடுவார் (தேவன் தந்த ஊழியம் என்று) என்ன கொடுமை சார் இது.
தீர்க்கமான வசனங்களை விட்டு விட்டு தீர்க்கமில்லாத சொப்பனங்கள், தரிசனங்கள் குறி சொல்லுதல், தள்ளி விடுதல் போன்ற காரியங்களை வைத்துக்கொண்டு என்ன தான் தாங்கள் ஊழியம் (!!) செய்கிறோம் என்று சொன்னாலும் யாருக்கு ஊழியம் செய்கிறார் என்று சொல்லாமல் போனாலும், தேவன் 2 தீமோ 3:1-5.ல் கொடுத்த வசனங்கள் நிறைவேறாமல் தடுக்க போவது எந்த ஒரு ஊழியக்காரனாலும் முடியவே முடியாது. ஆகவே தான் நான் தேவனின் சித்தத்திற்கு விரோதமான காரியம் செய்துக்கொண்டு அதை தேவன் தான் அனுமதித்தார் என்று சொல்லி வராதீர்கள். கிறிஸ்தவ வார்த்தைகளில் இதை தான் ஊழியம் என்றும், இவர்கள் தான் ஊழியக்காரர்கள் என்று சொல்லாதீர்கள். இவர்கள் எல்லோரும் கள்ள தீர்க்கதரிசிகள், தேவபக்த்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பவர்கள். இவர்களுக்கு யாருக்கு ஊழியம் செய்கிறார்கள் என்பது இவர்கள் இருப்பதையும், இவர்கள் சொல்லுவதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.
கடைசி நாட்களில் மனுஷர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு அருமையான தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுள்ளது. இப்போதுதான் அந்தக் கடைசி நாட்கள் என்று அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனாலும் யாரும் இப்படி இருக்கலாகாது என்று உலகத்துக்காக ஜெபிக்கிறார்கள். கடைசி நாளில் மனுஷர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது தேவ சித்தம். ஆகவே அப்படித்தான் இருப்பார்கள். இதை மாற்ற எவராலும் முடியாது. ஆயினும் இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று வேண்டுவது பிதாவின் சித்தத்துக்கு விரோதமானது. "உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக" என்று ஜெபிப்பதே உத்தமம்.
தேவனின் சித்தம் நிறைவேறாமல் தடுப்பது யார் என்று வேதத்திலிருந்து நாம் அரிந்துக்கொள்ளலாமே. "நீ சாகவே சாவாய்" என்றார் தேவன். "நீ சாகவே சாவதில்லை" என்கிறான் சாத்தான். அப்படி தான் ஒளியின் வேஷம் தரித்தவரின் ஊழியர்களும் செய்யும் இந்த விநோதமான முயற்சிகள் வெளிப்பட தான் செய்கிறது.
ஆவியானவர் சொல்லுவதை காதுள்ளவன் கேட்ககடவன், என்று சபைகளுக்கு தானே சொல்லியிருக்கிறார், கிறிஸ்தவர்களுக்கா (!?). தேவனின் திட்டம் நடைப்பெறுவது எப்படியாகிலும் நம் ஜெபத்தினால் தடுத்து விடமுடியும் என்று கங்கனம்கட்டிக்கொண்டு ஒரு கூட்டத்தார் சம்பாதிப்பதை நாம் பார்க்க முடிகிறதே. இது கடைசி காலத்தின் கடைசி நாட்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை.
"உம் இராஜியம் வருவதாக, உம் சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவது போல் இந்த பூமியிலும் செய்யப்படுவதாக" ஆமென்!