தங்களை தேவன் வல்லமையாக பயன்படுத்துவதாகக் கூறித்திரியும் பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள்(?) அடுத்தமுறை சந்திக்கும்போது, ஐயா எங்கள் வீட்டில் பிசாசுத்தொல்லை உள்ளது என்று கூப்பிடுங்கள் தாராளமாக வந்து ஜெபிப்பார்; ஒருவேளை பிசாசும் கூட போகலாம். ஆனால் எங்கள் வீட்டில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது வந்து ஜெபியுங்கள் என்று சொல்லித்தான் பாருங்களேன். அவர்களால் ஒரு கொசுவைக்கூட துரத்த முடியாது...
மரணம் பிசாசினால் அல்ல வியாதியினாலேயே வருகிறது, வியாதி கொசுவினாலேயும் வருகிறது என்பதை அறிவாளி உணருவானாக! வியாதியை விரட்டவும் கடையில் விற்கும் மருந்துகள் போதுமே, நீ ஏன் வியாதியைத் துரத்தி ஜெபிக்கிறாய் ஊழியா?
நானும் வேலை பார்த்துதான் சாப்பிடுகிறேன் ஆகினும் ஆண்டவரின் பணிகளை முழு நேரமாக செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு!
"நான் வேலை பார்த்து சாப்பிடுகிறேன்" என்று சொல்லி ஊழியர்களை குற்றப்படுத்தும் சகோதரரே. உலகில் 99% மக்கள் வேலை செய்துதான் அவரவர் வயிறு வளர்க்கின்றனர். இதில் பெரியதாக சொல்வதற்கு எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
இயேசு மார்த்தாள் மரியாள் இருவரில் யாரை அதிகம் புகழ்ந்தார் வேலை செய்த மார்த்தாளையா அல்லது அல்லது சும்மா ஆண்டவர் பாதத்தில் அமர்ந்திருந்த மரியாளையா? சற்று யோசித்து பாருங்கள். நீங்கள் மேன்மை என்று எண்ணுவதெல்லாம் ஆண்டவர் பார்வையில் மேன்மை இல்லை.
மீன்பிடி தொழில்களை விட்டுவந்தவர்களையே இயேசு சீஷராக்கினார். அப்பப்போ போய் மீன்பிடித்து சாப்பிட்டு பிறகு என்னை பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை. தன்னை பின்பின்ற அழைக்கும் இயேசு உலக சம்பந்தமான எல்லாவற்றையும் மனத்திலிருந்து விட்டுவிட்டு என்னை பின்பற்று என்றுதான் சொல்கிறார்.
எனவே முழு நேர ஊழியம் செய்பவர்கள் நம்மைவிட எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்றே நான் கருதுகிறேன். நாம் வயிற்றுக்காக உலக அலுவல்களில் சிக்கிக்கொண்டு இருக்கிறோம் ஆனால் அவர்களோ தேவாதி தேவனை நம்பி உலக வேலைகளை உதறிவிட்டு வருகின்றனர்.
நாம் வேலைபாருக்கும் முதலாளி ஒரு மனிதன் ஆனால் அவர்களின் முதலாளியோ தேவன். ஒரு மனிதன் கொடுக்கும் கூலியில் நாம் வாழ்கிறோம் அவர்களுக்கு கூலியை கொடுப்பவரோ தேவன். தேவனின் கட்டளையின்றி ஒருவரும் ஒரு பணம்கூட பெற்றுவிட முடியாது.
அவர்கள் வாங்கும் பணத்துக்கும் செய்யும் செலவுக்கு ஆண்டவரிடம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் அது தேவனுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை. அதை குறைகூற நமக்கு உரிமை இல்லை என்றே நான் கருதுகிறேன்.
வேலை என்பது வெறும் உலக வேலையே மட்டும் குறிக்காது. ஆண்டவரின் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்வது கூட ஒரு வேலையாகவே கர்த்தரால் கருதப்பட்டது என்பதை கருத்தில் கொள்க
இப்படி பொறுமையில்லாமல் பதிவிட்டால் தளத்தில் குப்பைகள்தான் மிஞ்சும்!
மன்னிக்கவும் தேவாதி தேவனை நம்பி அல்ல. ஜனங்களின் தசம பாகங்களையும், காணிக்கைகளை மட்டும் நம்பித்தான் முழு நேர ஊழியம் செய்கின்றனர். தேவன் இவர்களை காகத்தைக் கொண்டோ, காடைகளைக்கொண்டோ ஒருபோதும் போஷிப்பதில்லை. ஆசாரியத்துவம் இப்போது இல்லவே இல்லை.
பிடுங்கித்தின்று வயிறு வளர்க்கும் இந்த ஜென்மங்களுக்கு கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறதே? அதை கவனித்தீர்களா?
ஒரு போதும் அப்போஸ்தலர்களின் அழைப்பை இன்று பண வேட்டையில் இறங்கியிருக்கும் "கள்ள அப்போஸ்தலர்களுக்கு" ஒப்பீடாதீர்கள். இயேசு கிறிஸ்து அவர்களை அழைத்து தான் சபையின் அஸ்திபார கற்களாக நியமித்தார். அதன் பலனாக தான் நமக்கு அவர்கள் எழுதிய வார்த்தைகள் கிடைத்தது. அது நன்மையாக இருந்தது.
ஆனால் இன்று ஊழியம் செய்கிறோம் என்று பிணத்தின் மேல் கூட காசு பார்க்கும் "பிரபலமான" ஊழியனை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஏன் பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறீர்கள். அந்த ஊழியனுக்கு பெரும் கூட்டம் சேர்ய்கிறதினால் அந்த ஊழியன் செய்வது எல்லாம் சரி என்று கண்மூடியாக இருக்கீங்களா? இவர்களை எல்லாம் ஊழியர்கள் என்று எப்படி தான் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ.
இன்று இந்தியா முழுவதிலும் உள்ள சபைகளை நடத்தும் "ஊழியர்கள்", "பாஸ்டர்கள்" "தீர்க்கதரிசிகள்", "கள்ள அப்போஸ்தலர்கள்" போன்றவற்றில் சுமார் 99% பிறர் பணத்தை நம்பியிருக்கிறார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
இப்படி தான் கிறிஸ்தவத்தை வளர்க்க சொல்லி இயேசு கிறிஸ்து சொல்லி கொடுத்தாரா? யார் இவர்களை ஊழியத்திற்கு வர சொன்னார்கள் என்றால், ஆளாலுக்கு ஒரு "பிதற்ற தரிசனம்", தூதன் கதை என்று வைத்திருப்பார்கள். இது தான் சத்தியமா? கூட்டம் என்றால் விபத்து நடக்கும் போதும் கூடூம் (அது கழுதை செத்திருந்தால் கூட தான்)? எந்த மதத்தில் இன்று கூட்டம் இல்லை என்கிறீர்கள். இவர்களின் கூட்டத்தை வைத்து இவர்கள் எல்லாம் சத்தியத்தை போதிக்கிறார்கள் என்று ஆகி விடுகிறதா?
சத்தியத்தை நம்பும் கூட்டம் வேதத்தின் படி நிச்சயமாக ஒரு சிறு கூட்டமாக தான் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. தேவன் அனைவரின் கண்களும் திறக்கப்பட ஒரு நேரத்தை வைத்திருக்கிறார். அதற்குள் குறை பிரசவ குழந்தை போல் வெளிக்கொண்டுவர ஏன் தான் தங்களை ஊழியர்கள் என்று அறிவித்துக்கொண்டு பிதற்றி திரியும் கூட்டத்திற்கு செவி கொடுக்கிறீர்கள்?
இந்த தளத்தை குப்பையாக்க கங்கனம் கட்டி கொண்டு ஒரு self made ஊழியன் "அனைவரின் வெற்றிக்காக ஜெபிப்பவன்" என்று உலா வந்திருக்கிறார். தங்கள் வாதங்களை உறுதி படுத்த உங்களையும் சேர்த்துக்கொள்ள பிரயாசிக்கிறார். சேர்வதோ, சேராமல் இருப்பதோ உங்கள் சுதந்திரம். பிற தளங்கள் போல் இங்கு யாரையும் நீக்க போவதில்லை. அவர்களின் பதிவுகளால் அவர்கள் அறியப்படுவார்களாக.
இது சத்தியத்தை மாத்திரமே வாஞ்சிக்கும் கழுகு கூட்டத்திற்கு மாத்திரமே. அது காக்காவை போல் திரள் கூட்டமாக இல்லாமல், கழுகின் தன்மையில் சிறுகுட்டமாக மாத்திரமே இருக்கும். இது ஆள் சேர்க்கும் தளமும் கிடையாது. இங்கு சுமார் 26 பேர் பதிவு செய்திருந்தாலும், தொடர்ந்து எழுதுவோர் 6 பேர் அளவு தான். சாப்பிட்டது செரிக்காமல் எச்சம் போடும் தளம் இது அல்ல என்று இதன் மூலம் சொல்லிக்கொள்ள பிரியப்படுகிறேன்.
-- Edited by bereans on Wednesday 23rd of December 2009 07:29:58 AM