kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறவி ஊனம் யாருடைய பாவத்தால் வருவது?


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
பிறவி ஊனம் யாருடைய பாவத்தால் வருவது?


இந்த கேள்வியை இந்துக்களிடம் கேட்டால், மிக சுலபமாக "அது முன் ஜன்ம பாவம்" என்று பதில் சொல்லிவிடுவார்கள். ஒருவர் முன் பிறவியில் செய்த பாவமே அவரை அடுத்தபிறவியில் குருடராகவோ செவிடராகவோ முடவ்ராகவோ பிறக்கவைக்கிறது என்று சொல்லப்படும் கூற்று ஓரளவுக்கு ஏற்புடையதே!  அநேகரால் நம்பபடுவதே!

அனால் விவிலியத்தில் முன் ஜன்மம் பற்றிய கருத்து எங்குமே இல்லை. (முன் ஜன்மம் பற்றி கருத்துக்கள் சில ஜாதிகள்  வைத்திருக்கும்  பழைய
விவிலியங்களில் இருந்ததாகவும் பின்னாட்களில்  அவைகள் நீக்கப்பட்டு
விட்டதாகவும் ஒரு கருத்தும்  உலவி வருகிறது)


பிறவி ஊனத்துக்கு முன்ஜன்ம பாவம் காரணம் இல்லை என்ற கருத்துடனே நோக்குவோம் எனில் பிறவி உணத்துக்கு காரணம் என்ன?


பழைய ஏற்பாட்டு காலங்களில் பிறவி ஊனம் பற்றிய பெரிய கருத்துக்கள் எதுவும் இல்லை எனலாம். ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசு பல பிறவி குருடர்களை குணமாக்கிய சம்பவங்கள் இருப்பதோடு ஒரே ஒரு இடத்தில் இயேசுவிடம் கீழ்க்கண்ட கேள்வியும் கேட்கப்படுகிறது


யோவான் 9:2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.


அதற்கும் இயேசு மிக தெளிவான பதில் எதுவும் சொல்லாமல் கீழ்க்கண்ட
பதிலளித்தார்:


3. இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.


இந்த ஒரே பதிலின் அடிப்படையில்தான் நாம் பிறவி ஊனத்தை ஏன் அல்லது அது யாருடைய பாவம் என்று ஆராய வேண்டிய  நிலையில் இருக்கிறோம்.


முதலில் இயேசு  சொன்ன பதில் படி ஒருவர் "பிறவி ஊனராக பிறப்பதற்கு யாருடைய பாவமும் காரணம் அல்ல"  என்பதை நாம் உணர வேண்டும். ஒருவர் செய்த பாவத்தில் அவர் மகன் ஊனமுற்றவராக பிறந்தார் என்ற கருத்து இயேசுவின் கூற்றுப்படி முற்றிலும் தவறானது! எனவே ஊனமுற்றவராக பிறப்பதற்கு யாருடைய பாவமும் காரணம் அல்ல என்பது விவிலியத்தின் கூற்று!


இரண்டாவதாக தேவனின் கிரியை வெளிப்படுபடி இப்படி பிறவிக்குருடனாக ஒருவன் பிறந்தான் என்று அடுத்த காரணத்தை இயேசு சொல்கிறார்.


இதை நாம் சற்று ஆராய வேண்டும். எல்லா குருடர்களிடத்திலும் எல்லா
ஊனமுற்றவர்களிடத்திலும் தேவனின் கிரியை வெளிப்படுகிறதா? இல்லையே! அப்படி எல்லோரிடமும் தேவனின் கிரியைகள்  வெளிப்பட்டால் இன்று உலகில் எந்த ஊனமுற்றவர்களும் இருக்கமாட்டார்களே!


பிறகு யேசு ஏன் அப்படி சொன்னார்?


நன்றாக படித்து அதிகம் சம்பாதித்து  அமெரிக்காவில் அருமையான இடத்தில் செட்டிலாகி இருக்கும் ஏன் நண்பனிடம்  ஆண்டவரை பற்றி சொன்னால் அவன் மிக சுலபமாக "எனக்கு எந்த குறையும் இல்லை எனக்கு எந்த ஆண்டவரும் தேவையில்லை, நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். தேவைப்பட்டால் பார்ப்போம்" என்பதுபோல் பதில் சொல்கிறான்.


இந்த உலகத்தை பொறுத்தவரை ஒருவர் எந்தவித குறையுமின்றி  ஒரு அழகான சினிமா ஸ்டார்போல் பிறந்து எல்லா சுகத்துடனும் தேவையான பணத்துடனும் வாழ்வாரானால் அவர் ஒருநாளும் இறைவனை தேட விரும்பவும் மாட்டார். இறைவனிடம் அவ்வளவு சீக்கிரம் வரவும் மாடார் அப்படியே வந்தாலும் அவரில் தேவனின் கிரியைகள் பலமாக வெளிப்பட எந்த ஒரு சந்தர்ப்பமும் இல்லை!


ஆனால் ஒரு பிள்ளை பிறவியில் குருடனாக பிறக்குமானால் முதலில் அந்த பிள்ளையின் தாய் தந்தைக்கு அது ஒரு  மிகப்பெரிய வேதனை.  வேதனை என்றால் தீராத மாற்ற முடியாத ஒரு முள்ளாகி போகும் வேதனையாக அது எப்பொழுது இதயத்தில் உறுத்திக்கொண்டு இருக்கும். இந்நிலையில் மனிதர்களால் எதுவும் செய்யமுடியாது என்று திட்டவட்டமாக தெரிந்துவிடுவதால் அவனை படைத்த இறைவனை தேடி வந்து அவரிடம் சரணடைந்து விடாப்பிடியாக மன்றாடுவதன்  மூலம் தேவனின் கிரியை வெளிப்பட்டு அந்த குருடன் குணமாகவும் அதன் மூலம் அந்த தாய்தந்தையும் இன்னும் அநேகரும் தேவனின் கிரியை அறிய வாய்ப்பு உண்டாகிறது.. தேவன் தன்னை தேடி வந்து சரணடைபவர்களுக்கு நிச்சயம் பதிலளிப்பார்  என்பது மறுக்க முடியாத உண்மை!


இரண்டாவதாக ஒருவேளை அவனின்  தாய் தந்தைதான் "விதி" என்றெண்ணி இறைவனை தேடாமல் விட்டுவிட்டாலும்,   இந்த ஊனமாய் பிறந்தவன் தனது வயதில், தன நிலையை அறிந்து  எல்லோரும் உலகில் பார்வையுடன் இருக்க என்னை மட்டும் இப்படி ஏன் படைத்தீர்  ஆண்டவரே என்று தொடர்ந்து மன்றாடி அழுது ஜெபிக்கும்போது தேவனின் கிரியை வெளிப்பட்டு அவருக்கு பார்வை வர அதன் மூலம் அநேகர் ஆண்டவரின் கிரியை அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது!


ஆம்!


உலகில் பிறக்கும் எல்லா ஊனமுற்றவர்களும் தேவனின் கிரியையை  ருசி
பார்க்கவும், அதானால் அநேகர் தேவனை நோக்கி ஓடி வரவேண்டும் என்ற நோக்குடனே இறைவனால் படைக்கப்படுகின்றனர்!  ஆனால் இவர்களுடைய தாய் தகப்பனோ அல்லது அந்த ஊனமுற்றவர்களோ இறைவனை விடாப்பிடியாக தேடாமல் தன்னை படைத்தவரை நோக்கி விசுவாசத்தோடு அழுது மன்றாடாமல் விதி என்றெண்ணி விட்டுவிடுவதால் அனேக குருடுகள்  இன்றும் குணமாக்கப்படாமல் இருக்கின்றன!


விடாப்பிடியாக் தேடுபவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் தேவன் நிச்சயம்
விடுதலை அளிப்பார்!


அனால் ஒருவரும்  அதீத  அக்கறையுடன் ஆண்டவரை  தேட்டாததாலேயே தேவனுடைய கிரியை வெளிப்படாமல் அனேக ஊனங்கள் இன்றும் குணமாகாமல் இருக்கிறதேயன்றி அதற்க்கு யார்  பாவமும் காரணம் அல்ல என்பதே விவிலியம் சொல்லும் விசேஷம் என்று கருதுகிறேன்!

http://groups.google.com/group/iraivan 



-- Edited by RAAJ on Monday 21st of December 2009 02:15:44 PM

-- Edited by RAAJ on Monday 21st of December 2009 02:18:47 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ராஜ் எழுதுகிறார் //"உலகில் பிறக்கும் எல்லா ஊனமுற்றவர்களும் தேவனின் கிரியையை  ருசி
பார்க்கவும், அதானால் அநேகர் தேவனை நோக்கி ஓடி வரவேண்டும் என்ற நோக்குடனே இறைவனால் படைக்கப்படுகின்றனர்!  ஆனால் இவர்களுடைய தாய் தகப்பனோ அல்லது அந்த ஊனமுற்றவர்களோ இறைவனை விடாப்பிடியாக தேடாமல் தன்னை படைத்தவரை நோக்கி விசுவாசத்தோடு அழுது மன்றாடாமல் விதி என்றெண்ணி விட்டுவிடுவதால் அனேக குருடுகள்  இன்றும் குணமாக்கப்படாமல் இருக்கின்றன!

விடாப்பிடியாக் தேடுபவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் தேவன் நிச்சயம்
விடுதலை அளிப்பார்! "//


முதலாவது இக்காலத்திலேயே அனேகர் தேவனை நோக்கி ஓடிவரவேண்டும் என்பது தேவனுடைய நோக்கமே அல்ல. இவ்வளவு அற்புதங்கள் நடப்பித்து மூன்று வருடங்களுக்கு மேல் ஊழியம் செய்த இயேசுவுக்கே கடைசியில் எஞ்சியது 120 பேர்கள் மட்டுமே.

அதேபோல் தான் சுகமாகவேண்டும் என்று யாரும் உபவாச ஜெபம் செய்யவில்லை. அவரிடம் அவரவர் வழிகளில் வேண்டிக்கொண்டார்கள். மேலும் எல்லா ஊனங்களூம் இந்த யுகத்திலேயே சரியாகவேண்டும் என்பது தேவ சித்தமே அல்ல. விடாப்பிடியாக  வாழ்நாள் முழுவதும் வேண்டினால்கூட  அவர்கள் ஊனம் மாறப்போவதில்லை. தேவசித்தத்துக்கு முரணாக ஜெபிப்பதால்தான் ஒரு ஜெபமும் கேட்கப்படுவதில்லை. அவரவரது சொந்த விசுவாசத்தினால் சில காரியங்கள் நடக்கிறதேயன்றி தேவன் தரும் சுகமல்ல. இது எல்லா மதபிரிவுகளிலும் நடக்கிறது.

மேலும் தேவ வல்லமையால் ஒருவர் சுகமடைந்தால் அவருக்கு எந்த நோயோ, ஏன் மரணமே கூட வரவேகூடாதே!

இயேசு கிறிஸ்துவும் சீடர்களூம் கொடுத்ததுகூட ஒரு தற்காலிக 'சுகங்கள்'தான்.

நிரந்தர சுகத்துக்கென்று அவர் ஒரு நேரத்தை வைத்திருக்கிறார், "அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்" ஏசா35:5,6. அதுவரை பொறுக்கலாமே.





__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:44:04 PM

__________________
"Praying for your Success"


Member

Status: Offline
Posts: 9
Date:

மனிதர்களின் வாழ்வில் வேறுபாடு ஏன்?

(பொதுவாக) தன் வாழ்னாளில் மகிழ்ச்சியாய் இருக்கும் மனிதன், எந்த குறையும் இல்லாமல் பிறந்த மனிதன் கடவுளை பார்த்து என்னை ஏன் இப்படி படைத்தீர் என்று கேள்வி கேட்பதும் இல்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதும் இல்லை. குறையில்லாமல் மகிழ்ச்சியாய் இருத்தல் தன் பிறப்புரிமை என் எண்ணும் மனிதன் இதற்காகவே கடவுள் உண்டானார் என்றும், இதற்காகவே கடவுளை தான் வணங்கி அவருக்கு உதவி செய்வதாகவும், கடவுள் தான் வேண்டுவனவற்றை அருளினால் தன்னிடமிருந்து அவர் அதிக உதவி பெற்றுக்
கொள்ளலாம் என்றும் எண்ணுகிறான். மேலும் ஒரு சில மக்கள் தங்கள் கடவுளை தாங்களே படைக்கின்றனர்.

மனிதன் தன் கண்டுபிடிப்புக்களை ஒரே விதமாக உண்டாக்குவது எப்படி என்று சிந்தித்து செயல்படுகிறான். (ஒரே மாடல் கார், டி.வி முதலியவை) ஒரே விதமாக உண்டாக்குவது மனிதனுக்கு பெருமை. ஆனால் தேவன் அனைத்தையும் வித்தியாசமாக படைக்கிறார். ஒரு மனிதன் இருபது போல் இன்னொரு மனிதன் இருப்பதில்லை. ஒரு மனிதனுக்கு ந்டப்பது போல் மற்றொருவருக்கு நடப்பதில்லை. தேவனுடைய கற்பனைக்கு அளவில்லாததால் மற்றும் அவரால் முடியும் ஆதலால் பல விதங்களில் தனித்தன்மையுடன் படைத்தல் தேவனுக்கு பெருமை.

பிதாவாகிய தேவன் இந்த உலகை தன்னுடைய விதியால் ஆளுபவர். தன்னுடைய விருப்பத்தின்படியே உயிர்களை அவர் படைக்கிறார். தேவன் வானத்தை பூமியை ஆளும்படி வைத்தார். ஒவ்வொரு ஆத்துமாவும் தன் தன்மைகளை தான் பிறக்கும் நேரத்தில் உள்ள நட்சத்திரங்களின்படி பெறுகிறது. ஒவ்வொரு நிமிடமும் சில நட்சத்திரங்கள் தோன்றுகின்றன மற்றும் மறைகின்றன. அவைகளை வைத்து ஆத்துமா தன் தன்மைகளை பெறுகிறது. தன் துன்ப நேரத்திலும் பத்து கட்டளைகளை பின்பற்ற வேண்டி கடவுளையோ அல்லது தாய் தந்தையையோ சபிக்காமல் யோபுவும் தன் பிறந்த நேரத்தில் தோன்றிய நட்சத்திரங்களை சபிக்கிறான். இந்த விதியின்படியே கையையும் அவர் முத்திரை போடுகிறார். தோன்றுகின்றவன் எவனும் முன்பே பேரிடப்பட்டு இருக்கிறான்.

எல்லா ஆத்துமாவும் தன் விதியை அறிந்து கொண்டும் அதற்கு ஒப்புக் கொண்டும் தேவனை பற்றி போதிக்கபட்டும் இந்த பூமியில் பிறப்பதாக சொல்லப்படுகிறது. சில ஆத்துமாக்கள் பாவத்துக்கு தப்பவும், கடவுளோடு நெருங்கி உறவாடவும் குறைகளோடு பிறக்க ஒப்புக் கொண்டு பிறக்கிறது. பூமியின் ஆசிர்வாதங்களின் மேல் ஆசை வைத்து தேவனை மறுதலிக்க பிறந்த ஆத்துமாக்களும் உண்டு.

இந்த தேவனுடைய விதியை மனிதன் அறிந்து கொள்ள வழி உண்டென்றாலும், தன்னை நம்பும் மக்களுக்கு தேவன் அதை தடை செய்திருக்கிறார். அதன் மூலம் தன் விதியை நம்பாமல் தன்னை நம்பும்படி அவர் செய்கிறார். தேவனுடைய விதி என்ற வார்த்தையையும் அவர் வேத புத்தகத்தில் தடை செய்திருக்கிறார்.

உலகில் உள்ள எல்லா மனிதர்களும் தேவனுடைய விதிக்கு கட்டுப்பட்டவர்களே. தேவனுடைய விதியை மீற முடியாது. மக்கள் தங்களால் பிரச்சனையை சமாளிக்க முடியாத போது விதியே என விட்டுவிடுகின்றனர். ஆனால் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது தேவனின் பொதுவான விதியிலிருந்து மற்றொரு விதிக்கு மாற்றப்படுகின்றனர். (கொலோ 2.14) இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத எல்லா மக்களும் ஏதோ ஒரு விதத்தில் சாத்தானால் தாக்கபட்டிருப்பதால் அவரை ஏற்றுக் கொள்ளும் போது அதிசயங்களையும், அற்புதங்களையும் பெறுகின்றனர். இந்த மற்றொறு விதியை கிரித்துவ விதி என்றழைக்கலாம். கிரித்துவ விதிக்கு மேலான விதி ஒன்றுமில்லை. இந்த கிரித்துவ விதிக்கு வந்த பிறகும் பிரச்சனை வந்தால் ஏற்றுக் கொள்ளுவதை தவிர வேறு வழியில்லை.

பிதாவாகிய தேவன் இயேசுவை பூமிக்கு அனுப்பி துன்பத்தின் மத்தியிலும் மனிதன் கடவுளோடு இருக்க முடியும் என் நிரூபித்தார். அவர் தேவ அம்சம் ஆதலால் அவரால் முடியும் ஆனால் மனிதனால் முடியாது என வாதம் செய்பவர்களுக்காக யோபுவின் மூலமாகவும் அதை நிரூபித்தார். துன்பப்படுபவர்களுக்கு
1. முன் மாதிரி வைத்த தேவன்
2. யேசுவின் மூலம் பரலோக வாசல் மறுமைக்கென திறந்த தேவன்
3. பரிசுத்த ஆவியானவராக கூடவே இருந்து துன்பத்தை பகிர்ந்து கொண்டு, ஆறுதல் சொல்லி, மகிழ்ச்சி தந்து, இறுதி வரையில் வழி நடத்தும் அன்பான தேவன் பிதாவின் அம்சமாக, மனிதனின் இன்ப, துன்பங்களை பொருட்படுத்தாமல், நன்மை மற்றும் தீமை வழியாக, அன்பு மற்றும் தண்டனை வழியாக, விதியின் மூலமாக மனிதனை (உலகை) உயர் (அடுத்த) நிலைக்கு கொண்டு செல்ல இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இயேசு நல்லவர் என்றும், அவரே கடவுள் என்றும் நிரூபிக்கும் பொருட்டும், மனிதர்களை உண்மையை சந்திக்க திராணியில்லாத, முதுகெலும்பில்லாத கோழைகள் என்றெண்ணி அவர்களை தக்க வைத்துக் கொள்ளவும்
அவருடைய பிதாவின் அம்சம் மற(றை)(று)க்கப்பட்டும் உள்ளது. ஆனால் மனிதர்கள் மத்தியில் தன்னுடைய நிலை பற்றி ஒரு பொருட்டாக எண்ணாத பிதாவாகிய உண்மையான தேவன் சொல்வது யாதெனில் தீமையும், நன்மையும் என்னிடத்திலிருந்தே வருகிறது. (எரேமியா புலம்பல் 3.37,38 யாத் 4.11)

(TO BE CONTINUED)


-- Edited by SANDOSH on Monday 22nd of February 2010 08:11:33 PM

__________________


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ராஜ் என்ற சைக்கிள் பேர்வ்ழி பதித்த ஞானமுள்ள கருத்து

//அனால் ஒருவரும்  அதீத  அக்கறையுடன் ஆண்டவரை  தேட்டாததாலேயே தேவனுடைய கிரியை வெளிப்படாமல் அனேக ஊனங்கள் இன்றும் குணமாகாமல் இருக்கிறதேயன்றி அதற்க்கு யார்  பாவமும் காரணம் அல்ல என்பதே விவிலியம் சொல்லும் விசேஷம் என்று கருதுகிறேன்!//


சந்தோஷ் அவர்களே, திடீரென்று வந்து மேற்படி ஞானவான் எழுதியதற்கு பதில் தந்துள்ளீர்கள், இத்தகைய முட்டாள்களுக்கு இவ்வளவுகாலம் பதில் தந்து எங்கள் நேரத்தை வீணாக்கியதற்கு நாங்களே வருத்தப்பட்டுக் கொண்டிருகிறோம். தயவு செய்து தளத்தில் கேட்கப்படும் ஆக்கபூர்வமான கேள்விகளூக்கு விடைகாண முயல்வோமே. புதிய ஏற்பாட்டில் தேவத்தன்மை, ஆவியின் கனிகள் முதலான ஆயிரம் தேவையான விஷயங்கள் இருக்கும்போது தேவையற்ற நட்சத்திர ஆராய்ச்சி எதற்கு?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard