kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்தவர்களை நோய்கள் தாக்க காரணம் என்ன?


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
கிறிஸ்த்தவர்களை நோய்கள் தாக்க காரணம் என்ன?


கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

என்ற மேற்கண்ட வசனத்தை சாட்சியாக காண்பித்து கிறிஸ்த்து நியாயபிரமான சாபத்துக்கு நம்மை நீக்கலாக்கி விட்டார் என்று கிரிஸ்தவர்களால்  நம்பப்படுவிறது.
 
ஆனால் ஒரு மனிதனுக்கு வரும் ஈளை காய்ச்சலில் இருந்து வரும் எல்லா துன்பங்களும் நியாய பிரமாணத்தின் சாபத்தால் வருவதுதான்.
 
14. நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,
15. என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:
லேவியராகமம் 26:16 நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்
 
உபாகமம் 28:22 கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
27. நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.

மேற்கூறிய நோய்நொடிகள் துன்பங்கள் எதுவுமே  வராத கிறிஸ்த்தவர்கள் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். 
 
நியாயபிரமாண சாபத்திலிருந்து விடுபட்டபின் ஒருவருக்கு நோய் வர காரணம் என்ன?  எந்த பிரமாணத்தின் அடிப்படையில் சாபமாகிய  நோய் கிறிஸ்த்தவர்களை தாக்குகிறது?   
 
நியயைபிரமாணம்  முடிந்துவிட்டது என்று கருதுபவர்கள் கொஞ்சம் விளக்குங்கள். .
  


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: கிறிஸ்த்தவர்களை நோய்கள் தாக்க காரணம் என்ன?


கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.


இந்த சாபம் 'மரணமாகும்'. எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு. நீங்கள் சொல்லும் நோய்கள்தான் எல்லாருக்கும் வருகிறதே. பெரிய பெரிய ஊழியர்கள் முதற்கொண்டு...

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கிறிஸ்த்தவர்களை நோய்கள் தாக்க காரணம் என்ன?


மனிதர்களை நோய்தாக்கக் காரணம் என்ன என்பதை முதலில் அறிவோம்.
மனிதர்களை நோய்தாக்க முதல் காரணம் அவனுக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவதால்தான். நோய் எதிர்ப்பு சக்தி எதனால் குறைகிறது? காற்று, நீர், ஆகாரம் தூய்மையற்று இருப்பதால்தான். போதாக்குறைக்கு டென்ஷன், சரியான ஓய்வின்மை மற்றும் உடற்பயிற்ச்சியின்மை. இவைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் நோயற்ற வாழ்வு வாழமுடியும். மனிதன் சுற்றுப்புற சூழலைக் கெடுத்து தன் ஆயுளைக் குறைத்துவிட்டான். செய்வதெல்லாம் செய்துவிட்டு வியாதி வந்தபின் குய்யோ முறையோ என்று அலறுவது வாடிக்கையாகிவிட்டது. தினசரி அரைமணி நேரம் வாக்கிங் போகாவிட்டால் செத்துவிடுவாய் என்று டாக்டர் சொன்னால்தான் வாக்கிங் போகிறோம்.  இதையெல்லாம் விட்டுவி
ட்டு நோய்வந்தபின் ஜெபகோபுரங்களுக்கும், எஸ்.எம்.எஸ் மூலமாக ஊழியர்களுக்கும் ஜெபிக்கச் சொல்லி செய்தி அனுப்புகிறோம். தேவன் சுகப்படுத்துவார் என்று விசுவாசித்து ஆஸ்பத்தரிகளூக்கு அழுகிறோம். தேவன் அனுமதிக்கும் ஒவவொரு வினாடிக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை நினைப்பாரில்லை.

"நியாயப்பிரமாணத்தின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்" என்று கூறிய அப்.பவுலுக்கே வியாதி.

வியாதிக்கு இவன் கிறிஸ்தவன், இவன் முஸ்லிம், இவன் இந்து என்று தெரியாது சகோதரா.


-- Edited by soulsolution on Tuesday 29th of December 2009 11:29:44 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard