kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்தவர்களுக்கு பாடுகள் ஏன்?


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
கிறிஸ்த்தவர்களுக்கு பாடுகள் ஏன்?


கிறிஸ்த்தவர்களுக்கு துன்பங்கள் பாடுகள் உண்டு என்றும, நாம் பரிசுத்தம்
அடைய தேவனே சில பாடுகளை நம் வாழ்வில் அனுமதிக்கிறார் என்பதன்
அடிப்படையில் எழுதப்படும் கருத்துக்கள் ஓரளவுக்கு சரியானதாக இருந்தாலும்
அதற்க்கு எந்த விதமான பாடுகள் என்று ஒரு எல்கை உண்டு!

ORRISSA வில் ஒரு கிறிஸ்த்தவ பெண்ணை நடு ரோட்டில் பலவந்தப்படுத்தும்
கயவர்களை தேவன் அனுமதித்து, சிறு குழந்தைகளை தீயிலிட்டு பொசுக்க
அனுமதித்து இது போன்ற பாடுகள் மூலம் நம்மை தேவனிடம் கிட்டி சேர வைப்பார் என்றும் அவர் ராஜ்யம் விரிவடையும் என்ற கருத்தும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை;
கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.(ஏசா 59:1)

மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு
என்னிடத்தில் பெலனில்லாற்போயிற்றோ? (ஏசா 50:2)

என்று ஆதங்கத்தோடு கேட்கும் தேவன் பட்சத்தில் இருந்து நான் சொல்ல
விரும்பும் சில வார்த்தைகளை இங்கு பதிக்கிறேன்!

கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனேக மக்கள் துன்பங்கள்
துயரங்களால் வாடுகின்றனர் அவற்றுக்கு முக்கிய காரணம் என்ன?

காரணம் ஒன்றே ஒன்றுதான் அது பாவங்கள்.

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை
உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு
அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது என்றும்

எனக்குக் கடன்கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ,
உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்;
உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.


என்று அக்கலாய்க்கும் அன்பு தேவனின் குரலே அதற்க்கு சாட்சி!

ஆம்! நமது பாவங்கள் அவர் முகத்தை நமக்கு மறைக்கிறது நாம் எவ்வளவு சத்தம் போட்டு கூப்பிட்டாலும் அந்த சந்தம் அவர் சமூகத்தில் போய் எட்டாமல்
தடுக்கிறது!

பாடுகளில் இரண்டு வகை உண்டு ஓன்று நம்மில் விசுவாசத்தை வளர்க்கும்
பாடுகள் இன்னொன்று நம் பாவத்தின்மித்தம் நமக்கு வரும் தண்டனைகள் இதில்
எந்த வகை பாடுகளுக்கும் தேவன் பொறுப்பாளி அல்ல அவர் யாரையும் பாடுகளுக்கு உட்படுத்தி பார்க்க விரும்புபவர் அல்ல என்பதை கீழ் கண்ட வசனம் தெளிவாக சொல்கிறது:


சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று
சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல,
ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். (யாக:


அன்பானவர்களே!
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய
அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை
உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது;

என்ற வார்த்தைகளின் படி, பிறரின் பாவங்களுக்காக தன்னை கிழிக்க கொடுத்து
நமக்காக தண்டனையை அனுபவித்தவர் ஆண்டவராகிய இயேசு ஒருவரே!

அவரை அன்றி வேறு யாராக இருந்தாலும் சரி அவர்கள் படும் பாடுகளுக்கும்
துன்பங்களுக்கும் அவர்களே பொறுப்பாளி! தேவன் அல்ல!
RAAJ
http://groups.google.com/group/iraivan


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் ‍ -2தீமோ3:12

அவரோடே கூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம் ‍  ‍ -2தீமோ2:12

எப்படி ஒரு தேர்ந்த இராணுவவீரனாவதற்கு கடுமையான பயிற்சி கொடுக்கப்படுகிறதோ (திட்டமிட்ட பயிற்சி) அதேபோல ஆளுகை செய்யப்போகும் மணவாட்டி சபைக்கு தேவனால் திட்டமிடப்பட்ட பயிற்சிதான் பாடுகள், துன்பங்கள்.

எல்லாருக்கும் வரும் பாடுகள் வேண்டுமானால் நீங்கள் சொல்வதுபோல் இருக்கலாம், ஆனால் சபைக்கு வரும் பாடுகள் அவர்களை புடம் போடும் செயலே ஆகும். இதற்கு விருப்பமில்லாதவர்கள் வெளியேறிவிடுவார்கள், ஆளூகை செய்யும் வாய்ப்பை இழந்து போவார்கள்


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

 
எல்லாருக்கும் வரும் பாடுகள் வேண்டுமானால் நீங்கள் சொல்வதுபோல் இருக்கலாம், ஆனால் சபைக்கு வரும் பாடுகள் அவர்களை புடம் போடும் செயலே ஆகும். இதற்கு விருப்பமில்லாதவர்கள் வெளியேறிவிடுவார்கள், ஆளூகை செய்யும் வாய்ப்பை இழந்து போவார்கள்




சபை என்றால் அது எந்த சபை சகோதரரே!
 
எந்த சபை உண்மையான் சபை? 
 
சபை என்பது என்ன?  தனி  மனிதர்களின் தொகுப்புதானே?
 
சபைக்கு என்று தனியாக   ஒரு துன்பமா?  அது எப்படியிருக்கும்?
 
சபையில் யார் யாரு இருக்கிறார்கள் என்பதை எவ்வாறு அறிவது?
 
சற்று விளக்குவீர்களா?   

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வாசிக்க யோவான்17ம் அதிகாரம். அதில் கிறிஸ்து பிதா, தான்(கிறிஸ்து), 'இவர்கள்'(பிதாவால் கிறிஸ்துவுக்குத் தரப்பட்டவர்கள்) மற்றும் உலகம் பற்றியே பேசுகிறார். இதில் 'இவர்கள்' என்று குறிப்பிடப்படும் ஒரு 'சிறு மந்தை' தான் சபை.
"தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்திருக்கிறாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்திருக்கிறாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கியிருக்கிறாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். ரோமர்8:29, 30.

இந்த பிதாவாகிய தேவனால் முன்குறிக்கப்பட்ட 'சிலர்' சேர்ந்ததுதான் கிறிஸ்துவின் உண்மையான 'சபை'. இது 'உலகத்திலிருந்து' பிரித்தெடுக்கப்பட்டபடியினால் உலகம் இதை அறியாது. அறிய வேண்டிய அவசியமுமில்லை.
இன்றைக்கு கிறிஸ்தவம் என்று அழைக்கப்படுகிற எந்த அமைப்புக்கும் உண்மை சபைக்கும் சம்பந்தமுமில்லை. போலி சபையான 'பாபிலோன்' மகாவேசி சபைகளுக்கு இச்சத்தியம் புரியாது, புரியவேண்டிய அவசியம்ய்மில்லை.


அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் ‍ -2தீமோ3:12

அவரோடே கூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம் ‍  ‍ -2தீமோ2:12



தீமையை நன்மையினால் வெல்பவர்கள், நன்மை செய்து தீங்கனுபவிக்க (கிறிஸ்துவப்போல்) தயாரானவர்கள், மறுகன்னத்தையும் காண்பிப்பவர்கள், மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டவர்கள், ஆவியின் கனிகளில் பெருகுபவர்கள் (கலா6), இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாதவர்கள், பூமியிலுள்ளவைகளை அல்ல மேலானவைகளை நாடுபவர்கள், யோபுவைப்போல தேவசித்தத்தினால் பாடனுபவிப்பவர்கள்.

இக்கடைசிக் காலத்தில் மதத்தைப் பரப்புகிறேன் என்று கூறிக்கொண்டு முட்டாள்தனமாக 'உலகத்திடம்' உதைவாங்குபவர்கள் இதில் சேரமாட்டார்கள்.

சுய இச்சையினால் வரும் பாடுள்தான் எல்லோருக்குமே வருகிறதே? இதில் மேன்மைபாராட்ட என்ன உள்ளது?


சபையில் யார் யாரு இருக்கிறார்கள் என்பதை எவ்வாறு அறிவது?

மேற்கண்ட வகைகளில் பாடனுபவித்து, ஆவியின் கனிகளில் பெருகி பவுலைப்போல வாழ்பவர்கள்தான் உண்மை சபை. அப்படியாராவது உ
ங்களுக்குத் தெரிந்தால் அவரது விலாசம் பதியுங்கள். வாழ்நாளில் ஒருவரையாவது காண ஆசை.

-- Edited by soulsolution on Saturday 12th of December 2009 03:14:02 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard