kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகலமும் தேவ சித்தம்!


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
சகலமும் தேவ சித்தம்!


மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூயின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மனிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.

அப்17:26 ல் நடக்கும் எல்லாமே தேவனது சித்தம் என்று தெளிவாக உள்ளது. மேலும், தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, .... அவர்களை ஆதரித்து... கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, ...பங்கிட்டுக்கொடுத்து,.... 450 வருஷகாலமாய் நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.... சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்கு கொடுத்தார். பின்பு அவர் அவனைத்தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார்.... அப்13:17 முதல்23 வரை. இவ்வாறு ஒரு இம்மி பிசகாமல் அனைத்தையும் தேவன் தம்முடைய சித்தப்படி நடத்திவருகிறார். ஆனால் ஒரு சிலர் சொல்வது போல அவர் ஒவ்வருவரது சித்தத்தின்படி தன்னுடைய திட்டங்களையும் தீர்மானங்களையும் மாற்றிக் கொண்டிருந்தால்.... வேதத்தில் கூறப்பட்ட எதுவுமே நடந்திருக்காது. இஸ்ரவேல் மீண்டும் ஒரு தேசமாக உயிர்பெற வேண்டுமென்பது தேவசித்தம் எனவேதான் கி.பி70ல் காணாமல் போன தேசம் 1949ல் 'துளிர்த்து' தற்போது முழுவிருட்சமாக உள்ளது. இதெல்லாம் 'தற்செயலாக' நடக்கிறது என்று சொல்பவர்கள் வேதத்திலும், தேவ வல்லமையிலும் நம்பிக்கையில்லாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதுமே கி.பி. முதல் நூற்றாண்டு முதல் வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்ஜியம் வரையுள்ள காரியங்களின் சங்கேதக் குறிப்புகள்தான் என்று வேதத்தை சத்திய வெளிச்சத்தில் ஆராயும் அனைவரும் புரிந்துகொள்வார்கள். இன்னும் வரும்...


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:
இவ்வாறு ஒரு இம்மி பிசகாமல் அனைத்தையும் தேவன் தம்முடைய சித்தப்படி நடத்திவருகிறார். 
கர்த்தர் சொன்னது: ஆதியாகமம் 15:13
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.


நடந்தது:
யாத்திராகமம் 12:40 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
யாத்திராகமம் 12:41 நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.

இம்மி பிசகாமல் நிறைவேறுகிறது என்றால் இந்த முப்பது வருஷம் தாமதமாக 
காரணம் என்ன? முப்பது வருடங்கள் என்பது இம்மியைவிட சிறிதாக தெரிகிறதா?  

  
 

-- Edited by RAAJ on Tuesday 24th of November 2009 07:45:03 AM

-- Edited by RAAJ on Tuesday 24th of November 2009 07:45:36 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இதற்குத்தான் வசனங்களை வேத வெளிச்சத்தில் தெளிவாக ஆராயவேண்டும் என்பது. கர்த்தர் சொன்னது: ஆதியாகமம் 15:13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.





நடந்தது: யாத்திராகமம் 12:40 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.



யாத்திராகமம் 12:41 நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.




கர்த்தர் சொன்னது 400வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்பதுதான். யோசேப்பின் காலத்தில் 30 வருடங்கள் அவர்கள் உபத்திரவப்படவில்லை, மாறாக அனேக சலுகைகளை அனுபவித்தார்கள். யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் தோன்றிய பின்னரே உபத்திரவம் ஆரம்பித்தது.


ஆக, குடியிருந்தது நானூற்றுமுப்பது வருஷம், உபத்திரவப்பட்டது நானூறு வருஷம். 'இம்மி' புரிகிறதா?......


-- Edited by soulsolution on Wednesday 25th of November 2009 04:02:04 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

கர்த்தர் சொன்னது 400வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்பதுதான். யோசேப்பின் காலத்தில் 30 வருடங்கள் அவர்கள் உபத்திரவப்படவில்லை, மாறாக அனேக சலுகைகளை அனுபவித்தார்கள். யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் தோன்றிய பின்னரே உபத்திரவம் ஆரம்பித்தது.
ஆக, குடியிருந்தது நானூற்றுமுப்பது வருஷம், உபத்திரவப்பட்டது நானூறு வருஷம். 'இம்மி' புரிகிறதா?......


வேதத்தை ரொம்ப ஆழமாக ஆரயும் சகோதரரே கொஞ்சம் கணக்கை சரியாக பாருங்கள். உங்கள் கருத்துபடியே பார்ப்போம்.  
 
ஆதியாகமம் 41:46 யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; 
 
அடுத்த  ஏழு வருட பஞ்ச காலத்திலேயே இஸ்ரவேல் கோத்திரத்தார் எகிப்த்து வந்து சேர்ந்துவிட்டனர் ஏழாவது  வருடம் என்று எடுத்துகொண்டாலும் யோசேப்புக்கு 37 வது  வயது இருக்கும்போது எல்லோரும் எகிப்த்து வந்துவிட்டனர்.   

ஆதியாகமம் 50:26 யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். 
6. யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.
7. இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.
8. யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
13. எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.

யோசேப்பு மரிக்கும்போது  வயது நூற்று பத்து இடையில் சுமார் 73 வருடங்கள் கடந்துவிட்டன அதன்பிறகு.
யோசேப்பின் கூடுள்ள சகோதரர் எல்லோரும் மரித்து எவ்வளவோ நாட்கள் கழித்தபிறகு வேறு ஒரு ராஜா தோன்றி அதன்பிறகுதான் கொடுமை ஆரம்பித்தது என்று வேதம் கூறுகிறது!  

ஆனால் நீங்கள் என்னவோ முப்பது வருடம் சந்தோசமாக இருந்தார்கள் பிறகு யோசேப்பு மரித்தபிறகு துன்பம் ஆரம்பித்தது என்று புதியதாக ஒரு கணக்கை சொல்கிறீர்கள். 
 
சும்மா பதில் சொல்லவேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லாதீர்கள்

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஆக கர்த்தர் சொன்னது ஒன்று நடப்பது ஒன்று. எனவே கர்த்தர் என்ன சொன்னாலும் அது நிச்சயமாய் நடக்கும் என்று அவருக்கே தெரியாது. எது வேண்டுமானாலும் மனித சித்தப்படி எப்படிவேண்டுமானாலும் மாறலாம். அப்படித்தானே? யோசேப்பு மரிக்கும் வரை பதவியில் இருந்தானா? இஸ்ரவேலர் அங்கிருந்த காலம் முழுவதும் உபத்திரவப்பட்டார்களா என்பது வேதத்தில் இல்லை. சிலகாலம் அவர்கள் உபத்திரவப்படவில்லை என்பது தெளிவு. விளக்கம் உபத்திரவப்பட்டது, குடியிருந்தது என்பது பற்றித்தான். கர்த்தர் செய்ய நினைப்பது தடைபடுவதில்லை. அப்படி தடைபட்டால் அவரைக் கடவுள் என்றழைப்பது சரியே அல்ல‌.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

ஆக கர்த்தர் சொன்னது ஒன்று நடப்பது ஒன்று. எனவே கர்த்தர் என்ன சொன்னாலும் அது நிச்சயமாய் நடக்கும் என்று அவருக்கே தெரியாது. எது வேண்டுமானாலும் மனித சித்தப்படி எப்படிவேண்டுமானாலும் மாறலாம். அப்படித்தானே? யோசேப்பு மரிக்கும் வரை பதவியில் இருந்தானா? இஸ்ரவேலர் அங்கிருந்த காலம் முழுவதும் உபத்திரவப்பட்டார்களா என்பது வேதத்தில் இல்லை. சிலகாலம் அவர்கள் உபத்திரவப்படவில்லை என்பது தெளிவு. விளக்கம் உபத்திரவப்பட்டது, குடியிருந்தது என்பது பற்றித்தான். கர்த்தர் செய்ய நினைப்பது தடைபடுவதில்லை. அப்படி தடைபட்டால் அவரைக் கடவுள் என்றழைப்பது சரியே அல்ல‌.





ஒரு கடவுளுக்கான தகுதி என்ன? அவர் என்னென்ன செய்யவேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது சகோதரரே!
 
கர்த்தர் தான் சொன்னதை எதன்  அடிப்படையில் மாற்றுகிறார் எதன் அடிப்படையில் "நான் சொல்லியும்  செய்யாதபடி மனம் மாறுவேன்"  என்றும் எதன் அடிப்படையில் "நான் அப்படி சொல்லியிருந்தாலும் அது எனக்கு தூரமாக இருப்பதாக" என்றும்   சொல்கிறார் என்பதை  சரிவர புரியாதவர்களுக்கு அவர் கடவுளுக்குரிய தகுதி உள்ளவர்தான என்ற குழப்பம் நிச்சயம் வரும்.  அவரே தனது வாயால் சொல்கிறார்: 
 
எரேமியா 18:10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.
I சாமுவேல் 2:30 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அவர் தனது வாயாலே நான் சொல்லுவேன் பின் மனம் மாறுவேன் என்று சொல்லும்போது, நீங்கள் யார் அதை கேட்க. உங்கள் கொள்கைக்கு தகுந்த கடவுளை நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள் அவ்வளவுதான். 



 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இந்த பதிவில் கொடுத்த இந்த இரண்டு வசனங்களுமே இஸ்ராயேல் வீட்டாருக்கு மாத்திரமே என்று புரிந்துக்கொள்ளுங்கள். "ஸ்திரிகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்கிற வசனத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கு இந்த வசனம் பொருந்தாது. இந்த இயேசுவின் தாய் மரியாளிடம் சொல்லப்பட்டது, அவளுக்கே பொருந்தும்.

உபாகமம் 28ம் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரும் வசனமும் இஸ்ராயேல் குடும்பாத்தாருக்கு மாத்திரமே பொருந்தும், புறஜாதிகளிலிருந்து கிறிஸ்தவர்களானவர்களுய்கு அல்ல‌.

தேவன் மனம் மாறுகிறேன் என்று சொல்லும் போதெல்லாம் அது ஒரு temporary மாற்றமே தவிர, அது தனது சித்தத்தை மாற்றுவதாக இல்லை. நான் சொன்னால் ஆகும், நான் கட்டளையிட்டால் நிற்கும். நான் தேவன், என்னை அன்றி ஒருவனும் இல்லை. என் வார்த்தை விருதாவாக வருவதில்லை, அது எந்த நோக்கத்திற்காக சொல்லப்பட்டதோ அதை நிறைவேற்றியே என்னிடம் திரும்பும்" போன்றவைகள் தான் தேவனின் தன்மைகளை குறிப்பிடுகிறது.

மொத்தத்தில் தேவனின் சித்தம் நிறைவேறுவது தான் மகிமை, ஆகவே தான் அவர் தேவனாக இருக்கிறார். ஆனால் இக்காலக்கிறிஸ்தவர்கள், தங்கள் செய்யும் சுய நீதியினால் பிரபலமாக பார்க்க்கிறார்கள். பெருமை பாராட்டுபவர்களுக்கு தேவன் எதிர்த்து இருக்கிறார். தேவன் மனம் மாறுகிறார் போன்ற வசனங்களை எடுத்து அதையும் முழுவதுமாக ஆறாயாமல். தேவனை கொச்சை படுத்துகிறார்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"மனம்மாற அவர் மனுப்புத்திரன் அல்ல‌"

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard