kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரணத்துக்கேதுவான பாவம் எது?


Executive

Status: Offline
Posts: 425
Date:
மரணத்துக்கேதுவான பாவம் எது?


1 யோவான் 5:16  மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.

இவ்வசனத்தில் மரணத்துக்கு ஏதுவான பாவம் என யோவான் குறிப்பிடுவது எந்த பாவம்?

தெரிந்தவர்கள் தங்கள் பதிலை பதியும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

என்னை பொறுத்தவரை எந்த ஒரு பாவம் செய்தவன் கொலைசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறதோ அதுவெல்லாம் மரணத்துக்கு ஏதுவான பாவங்கள் என்று நான் கருதுகிறேன்.  
 
யாத்திராகமம் 21:15 தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

யாத்திராகமம் 21:29
தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்.

யாத்திராகமம் 35:2
நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.

லேவியராகமம் 20:16
ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இரு ஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக

லேவியராகமம் 20:27
அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

லேவியராகமம் 24:17
ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

லேவியராகமம் 24:16
கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

1 யோவான் 5:16  மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.

இவ்வசனத்தில் மரணத்துக்கு ஏதுவான பாவம் என யோவான் குறிப்பிடுவது எந்த பாவம்?

தெரிந்தவர்கள் தங்கள் பதிலை பதியும்படி வேண்டுகிறேன்.




நல்ல கேள்விதான் என்றாலும் குறிப்பிட்ட வசனத்தை ஆராய்ந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.


'மரணத்துக்கேதுவல்லாத' பாவத்துக்கு எதற்காக வேண்டுதல் செய்யவேண்டும்? அதுதான் மரணத்துக்கேதுவாகவில்லையே!


சகோதரனுக்காக நான் வேண்டுதல் செய்வதால் என்ன பயன்? (அவனல்லவா மனம் திரும்பவேண்டும்).



மரணத்துக்கேதுவான பாவம் என்று தனியாக‌ எதுவுமில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் 'பாவத்தின் சம்பளம் மரணம்' (No conditions apply) எனவே பாவம் பாவமே, பெரிய பாவம், குட்டி பாவம் என்றில்லை. எப்படி பரிசுத்தம் என்றால் ஒரே அளவோ அதுபோலத்தான் பாவமும். அதனால்தான் எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகிவிட்டோம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard