kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்?

Executive

Status: Offline
Posts: 425
Date:
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்?

தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனும் ஒரு பிரிவினரைக் குறித்து வேதாகமத்தின் பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் சில:

மத்தேயு 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
மத்தேயு 24:22 தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
ரோமர் 8:33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
எபேசியர் 1:4-6 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.

இவர்களைத் தேவன் எப்போது, எதற்காக தெரிந்துகொண்டார்?

எதன் அடிப்படையில் இவர்களைத் தேவன் தெரிந்துகொண்டார்?

இவர்களிலும் சிலர் வஞ்சிக்கப்படுவார்களா? (மத்தேயு 24:24-ன்படி)

இவர்களின் எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?

இவர்களைத்தான் சிறு மந்தை என இயேசு கூறுகிறாரா?

இவர்களுக்காகத்தான் புதியஏற்பாட்டின் உபதேசங்கள் கூறப்பட்டுள்ளதா?

இவர்களில் சிலர் நம் மத்தியில் உண்டா?

தேவன் நம்மைத் தெரிந்துகொண்டுள்ளார் என்பதை எப்படி அறியமுடியும்?

பதில் தெரிந்தவர்கள் வசன ஆதாரத்துடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

உங்களுடைய கேள்விகளுக்கு பதில் நீங்கள் பதித்த வசனங்களிலேயே இருக்கிறது Brother.

இவர்களைத் தேவன் எப்போது, எதற்காக தெரிந்துகொண்டார்?
அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே, தமக்குமுன்பாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு,

எதன் அடிப்படையில் இவர்களைத் தேவன் தெரிந்துகொண்டார்?
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே.

இவர்களிலும் சிலர் வஞ்சிக்கப்படுவார்களா? (மத்தேயு 24:24-ன்படி)

வஞ்சிக்கப்படுவார்கள் என்றில்லை வஞ்சிக்கும்படியாக என்றுள்ளது. ஆகவே இல்லையென்று எண்ணுகிறேன்.

இவர்களின் எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?

உண்டு

இவர்களைத்தான் சிறு மந்தை என இயேசு கூறுகிறாரா?

Yes

இவர்களுக்காகத்தான் புதியஏற்பாட்டின் உபதேசங்கள் கூறப்பட்டுள்ளதா?

Yes

இவர்களில் சிலர் நம் மத்தியில் உண்டா?
No Idea. I have not seen anyone so far.

தேவன் நம்மைத் தெரிந்துகொண்டுள்ளார் என்பதை எப்படி அறியமுடியும்?

பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாக

இருப்பதைக் கொண்டு அறியலாம்....

இவர்களில் சிலர் நம் மத்தியில் உண்டா?

நீங்கள் சொல்லுங்கள் இப்போது.

-- Edited by soulsolution on Monday 23rd of November 2009 12:58:20 PM

-- Edited by soulsolution on Monday 23rd of November 2009 01:04:55 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

Executive

Status: Offline
Posts: 425
Date:

anbu57 wrote:
//இவர்களின் (தெரிந்துகொள்ளப்பட்டவர்களின்) எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?//

soulsolution wrote:
//உண்டு//

என்ன தொடர்பு என்பதை சற்று விரிவாகக் கூறமுடியுமா?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//இவர்களின் எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?

உண்டு

இவர்களைத்தான் சிறு மந்தை என இயேசு கூறுகிறாரா?

Yes

இவர்களுக்காகத்தான் புதியஏற்பாட்டின் உபதேசங்கள் கூறப்பட்டுள்ளதா?

Yes//

வசன ஆதாரம் (இருந்தால்) தரவும்.

"தேவனுடைய ராஜ்ஜியத்தின் ரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது, அவர்கள் குணப்படாதபடிக்கும், அவர்கள் பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாக இருக்கும்படி, இப்படி சொல்லப்படுகிறது என்றார்" மாற்கு4:11,12.

இவர்களின் எண்ணிக்கை நிறைவாவதற்கும் இயேசுவின் 2-ம் வருகைக்கும் தொடர்பு உண்டா?

"...இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்களையும் தேவன் அவரோடுகூடக் கொண்டுவருவார்" 1தெச4:14

இவர்களைத்தான் சிறு மந்தை என இயேசு கூறுகிறாரா?

மறுஜென்ம காலத்திலே....என்னைப் பின்பற்றின நீங்களும்... சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்.. மத்19:28

"ராஜ்ஜியத்தை உங்களுக்குக் கொடுக்க பிதா சித்தமுள்ளவராயிருக்கிறார்"

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard