1. நன்மை தீமை அறியத்தக்க விருட்சம், 2. ஜீவவிருட்சம்
இந்த விருட்சங்களின் கனியைப் புசிப்பதால் மனிதனுக்கு என்ன நேரிடும் என்பதைப் பின்வரும் வசனங்களில் நாம் காணலாம்.
ஆதி. 2:16,17 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதி. 3:22,23 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி, மனிதனுக்கு சாவைக் கொடுப்பதாக இருந்தது. ஜீவவிருட்சத்தின் கனியோ, மனிதனை என்றென்றும் உயிரோடிருக்கச் செய்கிற நித்தியஜீவனைக் கொடுப்பதாக இருந்தது.
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் எனும் கட்டளைக்கு ஆதாம் கீழ்ப்படிந்து நடந்தால், அவருக்கு ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுக்கவேண்டுமென்பதே தேவனின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இக்கருத்துக்குப் பின்வரும் வசனங்கள் ஆதாரமாயுள்ளன.
ஆதாமைப் பொறுத்தவரை, நன்மை தீமை அறியத்தக்க கனியைப் புசிக்கவேண்டாம் எனும் ஒரேயொரு கற்பனைதான் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்கற்பனையின்படி அவர் நடவாததால், ஜீவவிருட்சத்தின் கனி அவருக்கு மறுக்கப்பட்டது. அதோடு, நன்மை தீமை அறியத்தக்க கனியைச் சாப்பிட்டால் சாகவே சாவாய் என தேவன் கூறியபடி, சில வருடங்களில் அவர் சாகவும் நேரிட்டது. ஆதாமின் பாவம், அவரது சந்ததியினரையும் விட்டுவைக்கவில்லை. ஆதாமின் பாவத்தால் அவர்கள் 2 விதத்தில் பாதிக்கப்பட்டனர்.
1. ஆதாமைப் போல் அவரது சந்ததியினரும் சாகவேண்டியதாயிருந்தது. அவர்கள் கற்பனைகளின்படி நடந்தாலும் நடவாவிட்டாலும் சாவு அவர்களுக்கு நிச்சயமானது. எனவே கற்பனைகளின்படி நடப்பவர்கள், அதற்கான பலனைப் பெறுவதற்கு (அதாவது ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கு) வாய்ப்பே இல்லாமற்போனது.
2. ஆதாமின் பாவம் ஜென்மசுபாவமாக அவரது சந்ததியினருக்கும் வந்தது. இதன் காரணமாக, அவர்களின் மாம்சத்தில் பாவப்பிரமாணம் எனும் பிரமாணம் உண்டானது. இந்தப் பாவப்பிரமாணத்தைக் குறித்து பின்வரும் வசனத்தில் பவுல் கூறுகிறார்.
ரோமர் 7:23 என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
அதாவது பாவஞ்செய்யக்கூடாது என மனிதனின் மனம் நினைத்தாலும், அவனைப் பாவஞ்செய்யவைக்கும்படி அவனோடு போராடுகிறதான பாவப்பிரமாணம் அவன் மாம்சத்தில் உண்டானது.
இதனால் ஆதாமின் சந்ததியினர் அனைவரும் பாவஞ்செய்தேயாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே, ஆதாமின் பாவத்தால் சாகிற அவர்கள் ஒருவேளை உயிர்பெற்றாலும், மாம்சத்தின் பாவப்பிரமாணத்தினால் அவர்கள் செய்த பாவங்கள், ஜீவவிருட்சத்தின் கனியை அவர்கள் பெறுவதைத் தடுத்துவிடும்.
இப்படியாக 2 விதத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஆதாமின் சந்ததியினர், ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறவேண்டுமெனில், 2 காரியங்கள் நடக்கவேண்டும்.
1. ஆதாமின் பாவத்தால் சாகிற அவர்கள் மீண்டும் உயிர்பெறவேண்டும். 2. அவர்கள் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்தினிமித்தம் அவர்கள் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும்.
இந்த 2 காரியங்களும் நடப்பதற்கு தேவன் சித்தங்கொண்டார். ஏனெனில், தேவன் இரக்கமும் அன்புமுள்ளவர். ஆதாம் ஒருவரின் மீறுதலினிமித்தம் மனுக்குலம் முழுவதும் ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல், நிரந்தரமாக சாவதை அவர் விரும்பவில்லை. எனவே ஆதாமின் பாவத்தால் வந்த பாதிப்புகளைப் போக்கி, எல்லா மனிதரும் ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்க தேவன் சித்தங்கொண்டார். (அந்த சித்தத்தை தேவன் எவ்வாறு நிறைவேற்றினார் என்பதைப் பின்னர் பார்ப்போம்)
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். ஆதாமின் சந்ததியினர் அனைவரும் ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுகிற வாய்ப்பைக் கொடுப்பதுதான் தேவனின் சித்தமாயிருந்ததேயொழிய, ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கு கற்பனைகளின்படி நடக்கவேண்டும் எனும் நிபந்தனையை நீக்க அவர் எண்ணவுமில்லை, நீக்கவுமில்லை.
இக்கூற்று நமக்கு சற்று குழப்பமாக இருக்கலாம். எல்லோரது மாம்சத்திலும் பாவப்பிரமாணம் இருக்கும்போது, அவர்கள் எப்படி கற்பனைகளின்படி நடக்கமுடியும் எனும் கேள்வி எழுந்து நம்மை சற்றுக் குழப்பக்கூடும். இக்குழப்பம் நீங்குவதற்கு இன்னும் சில விஷயங்களை நாம் அறியவேண்டும்.
அடுத்த பதிவில் தொடர்கிறது ....
-- Edited by anbu57 on Tuesday 17th of November 2009 10:44:12 AM
-- Edited by anbu57 on Tuesday 17th of November 2009 10:45:24 AM
-- Edited by anbu57 on Wednesday 18th of November 2009 07:53:16 AM
நம் பாவங்களை 2 பிரிவாகப் பிரிக்கலாம். 1. நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்தோடு போராடித் தோற்பதால் செய்கிற பாவங்கள். 2. அவ்வாறு போரடாமல் நிர்விசாரமாய் செய்கிற பாவங்கள்.
இவற்றில் முதல் வகையான பாவங்கள் மன்னிக்கப்படத்தான் தேவன் சித்தங்கொண்டார்; மற்றபடி, 2-வது வகையான பாவங்களைச் செய்பவர்கள், அவற்றிற்கான விளைவைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் தேவனின் ஆதித் தீர்மானமும் இறுதித் தீர்மானமுமாகும் (ஆதி. 2:16,17; வெளி. 21:7,8; 22:14,15).
இதைத்தான் ஆதாமின் விஷயத்திலிருந்தே நாம் பார்த்துவருகிறோம். ஆதாம் பாவஞ்செய்வதும் செய்யாதிருப்பதும் அவருடைய முழு சுயாதீனத்தில் இருந்தது. அவருடைய மாம்சத்தில் பாவப்பிரமாணம் இருக்கவில்லை. ஆனாலும் பாவத்தில், குறிப்பாக இச்சையில் விழுந்தார். பாவப்பிரமாணம் இல்லாதபோதுகூட இச்சையில் விழக்கூடும் என்பதற்கு ஆதாம் சிறந்த உதாரணமாயுள்ளார். இன்று நாமுங்கூட நம்முடைய பல பாவங்களுக்கு நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணமே காரணம், அல்லது சாத்தானே காரணம் என நமக்குநாமே சமாதானம் சொல்லிக்கொண்டு நிர்விசாரமாகப் பாவஞ்செய்கிறோம்.
ஆனால் உண்மையில் நாம் செய்கிற பல பாவங்கள், நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்திற்கு அப்பாற்பட்டவைகளே. நாம் நிர்விசாரமாய் செய்கிற பாவங்களுக்கு 2 உதாரணங்கள்: 1. நம் வசதிவாழ்வைப் பெருக்கிக்கொள்ள பிறரிடமிருந்து திருடுவதை எடுத்துக்கொள்வோம். இச்செயல் முழுக்க முழுக்க நம் மனதைச் சார்ந்ததேயன்றி, நம் மாம்சத்தைச் சார்ந்ததல்ல. அதாவது, நம் வசதிவாழ்வுக்காக திருடுவதைத் தவிர்ப்பது நிச்சயம் நமக்கு சாத்தியமே. இவ்விஷயத்தில் நாம் திருடத்தான் வேண்டுமென நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணம் நம்மோடு போராடுவதில்லை. 2. பசியில் வாடுகிற ஒருவனின் பசியைப் போக்கும் வசதி நம்மிடமிருந்து, அதைச் செய்யாதிருப்பதை எடுத்துக்கொள்வோம். இப்படிச் செய்யாதிருப்பதும், நம் மனதைச் சார்ந்ததேயன்றி நம் மாம்சத்தைச் சார்ந்ததல்ல. அதாவது பசியில் வாடுபவனின் பசியைப் போக்க நமக்கு வசதியிருக்கையில் அதைச் செய்வது நமக்கு சாத்தியமே. அப்படிச் செய்கையில், அதைச் செய்யவிடாதபடி நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணம் நம்மோடு போராடி தடுப்பதில்லை.
தன் மாம்சத்தில் பாவப்பிரமாணம் இல்லாதபோது ஆதாம் செய்த பாவத்திற்கான விளைவுகளை அவர் சந்தித்துதான் ஆகவேண்டியதிருந்தது. அந்த விளைவுகளில் ஒன்று மரணம், மற்றொன்று ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்க மறுக்கப்படுதல். ஆதாமைப் போலவே, நாமும் (நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்திற்கு அப்பாற்பட்டு) நிர்விசாரமாகச் செய்கிற பாவங்களுக்கான விளைவுகளைச் சந்திக்கத்தான் வேண்டும். அந்த விளைவுகளில் ஒன்று மரணம் (நம்மைப் பொறுத்தவரை 2-ம் மரணம்), மற்றொன்று ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்க மறுக்கப்படுதல்.
எனவே, நமக்குக் கொடுக்கப்பட்ட கற்பனைகளின்படி நடப்பதற்கு நாம் உண்மையாய் பிரயாசப்படவேண்டும்; அப்போது, நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணம் நமக்கெதிராக நின்றால், அதனோடு போராடத்தான் வேண்டும். ஒருவேளை அப்போராட்டத்தில் தோற்றால், அதைக் குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை. ஏனெனில், அப்படிப்பட்ட பாவங்களை மன்னிக்கத் தேவன் சித்தங்கொண்டு அதை நிறைவேற்ற வழியும் செய்துள்ளார். எனவே அப்பாவங்களினிமித்தம் ஜீவவிருட்சத்தின் கனி நமக்கு மறுக்கப்பட்டுவிடுமோ என நாம் கவலைப்படவேண்டியதில்லை. ஆனால், அப்பாவங்களைக் குறித்து துயரப்பட வேண்டும். இப்படிச் செய்துவிட்டோமே எனத் துயரப்பட்டு, மீண்டும் அதைச் செய்யாதிருக்க தீர்மானித்து, பரிசுத்தஆவியின் உதவியையும் நாடவேண்டும்.
அப்போது துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் செய்யும் தேவன் (ஏசாயா 61:2; மத்தேயு 5:4), நியாயத்தீர்ப்பு நாளில் நமக்கு ஆறுதலைத் தருவார். மாறாக, தேவன் எல்லாரையும் இரட்சிக்க திட்டம் வைத்துள்ளார், அவர் பார்த்துக்கொள்வார், நம்மில் ஒருவனும் நீதிமானில்லை, பாவியில்லாத மனிதன் ஒருவனுமில்லை எனச் சொல்லிக்கொண்டு, கற்பனைகளின்படி நடப்பதில் நிர்விசாரமாயிருந்தால், ஆதாமுக்கு ஜீவவிருட்சத்தின் கனி மறுக்கப்பட்டதைப் போல் நமக்கும் மறுக்கப்படும்.
வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை, நீதிமான்களுக்கு இப்பலன், துன்மார்க்கருக்கு இப்பலன், நன்மை செய்தால் இப்பலன், தீமை செய்தால் இப்பலன் என பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஆதி. 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். நீதிமொழிகள் 11:19 நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். ஆமோஸ் 5:14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள். எசேக்கியேல் 18:10-14 (படித்துப் பார்க்கவும்) எசேக்கியேல் 18:20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். சங்கீதம் 37:9,20 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள், துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள். சங்கீதம் 92:7 துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். சங்கீதம் 73:19 துன்மார்க்கர் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். யாக்கோபு 5:19,20 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். 1 யோவான் 3:14,15 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். பிலிப்பியர் 3:19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். 2 தெச. 1:10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். மத்தேயு 13:40,41 ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். மத்தேயு 25:41-43 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
ஆதாமின் பாவத்தால் ஏற்கனவே நாம் சாவைச் சுமந்துகொண்டிருக்கையில், மேற்கூறிய வசனங்களில் கூறப்பட்டுள்ள வாசகங்களான மரணத்துக்கு ஏதுவாதல், அறுப்புண்டு போதல், என்றென்றும் அழிந்து போதல், அக்கினியால் சுட்டெரிக்கப்படுதல், மரணத்தில் நிலைகொண்டிருத்தல், நித்திய அழிவாகிய தண்டனையை அடைதல், பிசாசுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குப் போதல் ஆகியவை ஆதாமால் வந்த சாவைக் குறிப்பதாக இருக்கமுடியாது. ஏனெனில் ஆதாமால் வந்த சாவு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமல்லாது எல்லாருக்கும் உண்டு. எனவே மேற்கூறிய வாசகங்கள் யாவும் ஆதாமால் வந்த சாவுக்கு அப்பாற்பட்டவைகளாகும். ஆதாமால் வந்த சாவிலிருந்து உயிர்பெற்ற பின்னர் வரப்போகிற அழிவுகளையே அவ்வாசகங்கள் குறிப்பிடுகின்றன. இதைத்தான் 2-ம் மரணம் என வெளி. 2:11; 20:6; 21:8 வசனங்கள் கூறுகின்றன.
அடுத்த பதிவில் தொடர்கிறது .....
-- Edited by anbu57 on Tuesday 17th of November 2009 11:15:59 AM
-- Edited by anbu57 on Wednesday 18th of November 2009 07:54:01 AM
இப்போது நமக்குள் சில கேள்விகள் எழக்கூடும். கற்பனைகளைத் தெரிந்தவர்கள் மட்டுந்தானே அவற்றின்படி நடக்க பிரயாசப்படமுடியும்? கற்பனைகளை அறியாத புறஜாதியினர் அவற்றின்படி எப்படி நடக்கமுடியும்? அவர்களுக்கு ஜீவவிருட்சத்தின் கனி கிடையாதா? எனும் கேள்விகள் எழக்கூடும். இக்கேள்விகளுக்கு பவுலின் பின்வரும் வசனங்கள் பதில் தருகின்றன.
ரோமர் 2:14-16 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
நன்மை தீமை அறியத்தக்க அறிவையுடைய மனிதன், சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும். இவ்வாறு நிதானித்து அறிந்த விஷயங்களைத்தான் மனதின் பிரமாணம் என ரோமர் 7:23-ல் பவுல் கூறுகிறார். இந்த மனதின் பிரமாணத்தின்படி நடந்தாலே அது கற்பனைகளின்படி நடப்பதற்குச் சமம்தான்.
புறஜாதிகள் மட்டுமல்ல, ஆதாம் முதல் மோசே வரையிலான ஜனங்களும் கற்பனைகளை அறியாதவர்கள்தான். ஆனாலும் அவர்களில் ஆபேல், நோவா போன்றோரை தேவன் நீதிமான்கள் எனக் கூறத்தான் செய்தார். இவர்களெல்லாம் தங்களது மனதின் பிரமாணத்தின்படி நடந்ததால்தான் அவர்களை நீதிமான்கள் என தேவன் கூறினார். அதேவேளையில் மனதின் பிரமாணத்திற்கு எதிராக நடந்த காயீனிடம் தேவன் பின்வருமாறு கூறினார்.
ஆதி. 4:6,7 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும் ... என்றார்.
காயீனிடம் நன்மை தீமை அறியத்தக்க அறிவு இருந்ததால், எது நன்மையென அவன் மனதின் பிரமாணம் நிச்சயமாகச் சொல்லியிருக்கும். ஆனால் அந்த நன்மையை அவன் செய்யவில்லை.
இதற்குக் காரணம், அவனுடைய சுயாதீன சிந்தையேயன்றி, அவன் மாம்சத்திலிருந்த பாவப்பிரமாணம் எனக் கூறமுடியாது. ஏனெனில், அவன் கூடவே இருந்த ஆபேல் நன்மைசெய்து, தேவனால் நீதிமான் என பேர்பெற்றான் (மத்தேயு 23:35). எனவே காயீன் நன்மை செய்யாததற்குக் காரணம் அவன் தன் மனதின் பிரமாணத்தின்படி நடக்கப் பிரயாசப்படாததே. அவன் நன்மை செய்யாதிருந்ததை தேவன் எடுத்துரைத்துச் சொன்னபிறகுகூட மனந்திரும்பாமல், ஆபேலைக் கொல்லுதல் எனும் தீமையைச் செய்தான். விளைவு? தேவனால் சபிக்கப்பட்டான் (ஆதி. 4:11).
அந்நாட்களில் தேவன் கற்பனைகள் எதையும் கூறவில்லை. நன்மை செய், எரிச்சல் படாதே, கொலை செய்யாதே என்றெல்லாம் யாரிடமும் கூறவில்லை. ஆயினும் ஆபேல், தீமையை விலக்கி நன்மை செய்தான், காயீனோ, நன்மை செய்யாமல் தீமை செய்தான். விளைவு? ஆபேல் நீதிமான் எனப் பேர்பெற்றான், காயீனோ தேவனால் சபிக்கப்பட்டான்.
இப்போது மற்றுமொரு கேள்வி நமக்குள் எழுகிறது. ஆதாமின் பாவத்தால் மனிதர்மீது வந்த 2 பாதிப்புகளை (1. மரணம், 2. ஜென்மபாவசுபாவத்தால் செய்கிற பாவங்கள்) நீக்கி, ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்க சித்தங்கொண்ட தேவன், நிர்விசாரமாய் (சுயமாக) பாவஞ்செய்து, பின்னர் துயரப்பட்டு மனந்திரும்புவோருக்கு, ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்க சித்தங்கொண்டாரா என்பதே அக்கேள்வி. இக்கேள்விக்கும் பதில், ஆமாம் என்பதுதான். உருக்கமும் இரக்கமும் அன்புமுள்ள தேவன், தங்கள் பாவங்களை உணர்ந்து மனந்திரும்புவோருக்கும் தயவளித்து, அவர்களுக்கும் ஜீவவிருட்சத்தைப் பெறுவதற்கான வாய்ப்பளிக்க சித்தமுள்ளவராகவே இருந்தார்.
ஆதாமின் பாவம், நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்தால் நம்மையும் மீறி செய்கிற பாவங்கள், நாம் நிர்விசாரமாய் பாவஞ்செய்து பின்னர் உணர்ந்த பாவங்கள் இவையனைத்துக்கும் நிவாரணம் செய்ய தேவன் செய்த காரியம், தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்ததே. இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை இரட்சிக்கும் என்பது மெய்தான்; ஆனால் அவ்வாறு இரட்சிக்கப்பட நாம் என்னசெய்யவேண்டும் என பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
அப். 3:20 உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். 1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
பாவங்களினிமித்தம் வருந்தி, மீண்டும் அவற்றைச் செய்யாதிருக்கத் தீர்மானித்து, அத்தீர்மானத்தை நிறைவேற்ற உண்மையாய் பிரயாசப்படுவதுதான் மனந்திரும்பிக் குணப்படுதலாகும். இவ்வித குணப்படுதல் இருந்தால்தான் நம் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் என அப். 3:20-ல் பேதுரு தெளிவாகக் கூறுகிறார். எனவே, மனந்திரும்பியதாகக் கூறிக்கொள்கிற நாம் யாவரும், இனிமேல் பாவஞ்செய்யாதிருக்க உண்மையாய் பிரயாசப்படுவது கண்டிப்பாக அவசியம். நம் பாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிட்டால் மட்டுமே இரக்கம் பெறமுடியும் என நீதி. 28:13 கூறுகிறது.
அடுத்த பதிவில் தொடர்கிறது .....
-- Edited by anbu57 on Wednesday 18th of November 2009 07:54:45 AM
மற்றுமொரு காரியத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆதாமின் பாவம் மற்றும் நம் சுயபாவங்களை நீக்கி, நாம் ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கு தேவன் வாய்ப்பு தந்ததன் ஒரே காரணம் தேவ இரக்கம், அல்லது கிருபை மட்டுமே. ஒரேயொரு மனுஷனான ஆதாமின் பாவத்தால் மனுக்குலம் முழுவதும் அழிந்துபோகக்கூடாது, தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்புபவர்கள் கெட்டழியக்கூடாது என தேவன் நினைத்ததற்குக் காரணம்: அவரது கிருபை மட்டுமே. யாருடைய கிரியையுமல்ல. நாம் யாரும் கிரியை செய்வதற்கு முன்னால், ஆதியிலேயே (அதாவது ஆதாம் பாவஞ்செய்த அக்கணத்திலேயே) இயேசுவை பலியாகக் கொடுத்து, மரணத்திற்கு அதிகாரியான சாத்தானை அவர் மூலம் நசுக்க தேவன் திட்டம் தீட்டி அதை அறிவிக்கவும் செய்தார் (ஆதி. 3:15). எனவேதான் நம் கிரியைகளினால் நாம் நீதிமான்களாவதில்லை, நம் கிரியைகள் நம்மை இரட்சிக்காது என பவுல் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
கிரியைகள் நம்மை இரட்சிக்காது எனக் கூறிய பவுல், கிரியைகள் வேண்டும் என்பதாகவும் பல வசனங்களில் கூறியுள்ளார். அவற்றில் சில:
ரோமர் 2:6,7 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 1 கொரி.15:58 எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. கலாத்தியர் 5:6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
பவுலும் யாக்கோபும் என்ன சண்டைக்காரர்களா? நிச்சயமாக இல்லை. கிரியைகளால்தான் நாம் நீதிமான்களாகிறோம் என மேன்மை பாராட்டக்கூடாது என்பதும், குறிப்பாக நியாயப்பிரமாண கிரியைகளான விருத்தசேதனம், பலி போன்றவற்றை நம்பக்கூடாது என்பதும்தான் பவுலின் உபதேசத்தின் சாராம்சம்.
ஒருவனும் நீதிமான் இல்லை எனக் கூறுகிற வேதாகமம், ஆபேல், நோவா, யோபு, சகரியா, யோசேப்பு இன்னும் பலரை நீதிமான்கள் எனச் சொல்கிறது. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது என சங்கீதம் 34:15 கூறுகிறது. நீதிமான் ஒருவனுமில்லையென்றால், இவ்வுலகில் யார் மீதும் கர்த்தரருடைய கண்கள் நோக்கமாயில்லை என அர்த்தமாகிவிடும். எனவே வேதாகமத்தின் ஒரு வசனத்தை மாத்திரம் வைத்து ஒரு தீர்மானத்தை எடுத்துவிடக்கூடாது. சாத்தான் தான் அவ்விதமாக ஒரு வசனத்தைச் சொல்பவன்.
சாத்தான் ஒரு வசனத்தைச் சொல்கையில், இயேசுவோ மற்றொரு வசனத்தைச் சொல்லி பதில் சொன்னதை நாம் அறிவோம்.
எனவே, நீதிமான் ஒருவனுமில்லை, எல்லோரும் பாவஞ்செய்து கெட்டுப்போனார்கள் என்பது போன்ற வசனங்களை மட்டும் சொல்லி, நீதியைச் செய்வதில் அலட்சியமாக இருப்பதும், நிர்விசாரமாகப் பாவஞ்செய்வதும் சரியல்ல.
ஒருவனும் நீதிமான் இல்லை எனக் கூறும் வேதாகமம் நீதியைச் செய் என்றுதான் கூறுகிறதேயொழிய, நீதியைச் செய்வதால் பயனில்லை எனக் கூறவில்லை.
பிரதான பாவி நான் என்று சொன்ன பவுல், யாரையும் பாவஞ்செய்யச் சொல்லவில்லை.
ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறவேண்டுமெனில் கற்பனைகளின்படி நடக்கவேண்டும் என்பதுதான் வேதாகமத்தின் தெளிவான உபதேசம். ஜீவவிருட்சத்தின் கனியால் நமக்குக் கிடைப்பது நித்தியஜீவன். அந்த நித்தியஜீவனைப் பெற நாம் என்னசெய்ய வேண்டும் எனும் கேள்விக்கு இயேசு பின்வருமாறு பதில் சொன்னார்.
மத்தேயு 19:17 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
இத்தனை தெளிவாக இயேசு கூறியிருக்க, எல்லோரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1 தீமோ. 2:4) எனும் வசனத்தைச் சுட்டிக்காட்டி, யார் எந்த அக்கிரமம் செய்தாலும் துணிகரமாக பாவஞ்செய்தாலும், அவர்களை தேவன் இரட்சித்துவிடுவார் என நம்மில் சிலர் கருதுகிறோம்.
எல்லோரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்பது மெய்தான். ஆனால், ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான நிபந்தனையை அவர் தளர்த்தவில்லை.
எனவே, கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கு மட்டுமே ஜீவவிருட்சத்தின் கனி என்பதை அறிவோமாக.
-- Edited by anbu57 on Tuesday 17th of November 2009 11:06:43 AM
-- Edited by anbu57 on Wednesday 18th of November 2009 07:55:14 AM
என்னை பொறுத்தவரை ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர் எல்லோரும் ஓடுவார்கள் ஆனால் ஒருவர்தான் வெற்றிபெறுவார் அவருக்குத்தான் கிரீடம் சூட்டப்படும்
அதுபோல்
"ஜெயம்கொள்கிறவன் எவனோ" என்ற வார்த்தை யாராவது ஒருவரைத்தான் குறிக்குமேயன்றி அநேகரை குறிக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
எப்படி ஒரே ஆதாமின் பாவத்தால் எல்லோரும் பாவிகளானோமோ ஒரே இயேசுவின் இரத்தத்தால் எல்லோரும் மீட்கப்பட்டோமோ அதேபோல் அந்த ஜெயம்கொள்ளும் ஒருவனால் எல்லோரும் மீட்கப்பட்டு பின் கடைசி நியயதீர்ப்புக்கு வருவோம் என்று கருதுகிறேன்.
அதைத்தான் பவுல்
ரோமர் 8:19 மேலும் தேவனுடையபுத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
என்று கூறுகிறார். அந்த தேவபுத்திரரால் மட்டும்தான் அது நடக்கும். இங்கு குறிப்பிடபட்டிருக்கும் தேவபுத்திரர் தேவதூதனோ அல்லது இயேசுவோ அல்ல! மேலும் அவர் " சரீரமீட்பர்" என்றும் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும். சரீரம் என்பது இந்த மாமிசத்தை குறிக்கிறது சாவுக்கேதுவான இந்த சரீரமும் மீட்கப்படும் அல்லது உயிர்க்கப்படும் என்பதை கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது
11. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
ஆம் ஆதாமின் பாவத்தால் சாவுக்கேதுவாயிருகிற நமது சரீரமும் உயிர்ப்பிக்கப்படும் இதைத்தான் நான் மரணமில்லாத வாழ்க்கை உண்டு என்று கூறுகிறேன்.
//நன்மை தீமை அறியத்தக்க அறிவையுடைய மனிதன், சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும். இவ்வாறு நிதானித்து அறிந்த விஷயங்களைத்தான் மனதின் பிரமாணம் என ரோமர் 7:23-ல் பவுல் கூறுகிறார். இந்த மனதின் பிரமாணத்தின்படி நடந்தாலே அது கற்பனைகளின்படி நடப்பதற்குச் சமம்தான்.//
உங்களது இந்த வார்த்தைகள் தேவனை முட்டாளாக்குவது போலுள்ளது. அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு என்பது இதுதான் போலும்.
உங்களது இந்த கூற்று சரியெனில் எதற்காக கற்பனைகள், கட்டளைகள்? அவனவனுக்குத்தான் நீங்கள் சொன்ன "சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும்" என்று இருக்கிறதே. உலகில் பிறந்த எல்லோரையும் இந்த 'மனசாட்சி பிரமாணத்தின்'படி நியாயம் தீர்க்க வேண்டியதுதானே.
வாதம் செய்வதாக எண்ணிக்கொண்டு விதண்டாவாதம்தான் செய்கிறீர்கள். உங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.
இதற்கு என்ன குழப்பமான பதில் தரப்போகிறீர்களோ?
இந்தக் குழப்பக் கட்டுரைக்கு, நல்ல கட்டுரை, தெளிவான விளக்கங்கள்! என்ற பாராட்டு வேறு!
soulsolution wrote: ///Anbu wrote //நன்மை தீமை அறியத்தக்க அறிவையுடைய மனிதன், சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும். இவ்வாறு நிதானித்து அறிந்த விஷயங்களைத்தான் மனதின் பிரமாணம் என ரோமர் 7:23-ல் பவுல் கூறுகிறார். இந்த மனதின் பிரமாணத்தின்படி நடந்தாலே அது கற்பனைகளின்படி நடப்பதற்குச் சமம்தான்.//
உங்களது இந்த வார்த்தைகள் தேவனை முட்டாளாக்குவது போலுள்ளது. அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு என்பது இதுதான் போலும். உங்களது இந்த கூற்று சரியெனில் எதற்காக கற்பனைகள், கட்டளைகள்? அவனவனுக்குத்தான் நீங்கள் சொன்ன "சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும்" என்று இருக்கிறதே. உலகில் பிறந்த எல்லோரையும் இந்த 'மனசாட்சி பிரமாணத்தின்'படி நியாயம் தீர்க்க வேண்டியதுதானே.
வாதம் செய்வதாக எண்ணிக்கொண்டு விதண்டாவாதம்தான் செய்கிறீர்கள். உங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.
இதற்கு என்ன குழப்பமான பதில் தரப்போகிறீர்களோ?///
அன்பான சகோதரரே! தங்கள் நோக்கம் “உண்மையைத் தேடுவதாக” இல்லை. நீங்கள் ஏற்கனவே “உண்மையைத் தேடி” அறிந்துகொண்ட “உண்மைக்கு” எதிராக விவாதிப்பவர்களை தேவையற்ற வார்த்தைகளால் விமரிசிப்பதாகத்தான் இருக்கிறது. உங்கள் விமரிசனங்களுக்கு உங்கள் “level" -லேயே பதில்தர எனக்கு உங்கள் அளவுக்குத் தெரியாவிட்டாலும் ஓரளவுக்குத் தெரியும். ஆனால் அவ்விதமாக பதில்தர நான் விரும்பவில்லை. ஏனெனில் அப்படிச் செய்தால் நீதிமொழிகள் 26:4-ல் கூறப்பட்டுள்ளவனாக நான் ஆகிவிடுவேன். எனவே நீதிமொழிகள் 26:5-ல் கூறப்பட்டுள்ளவனாக நீங்கள் இருந்துகொள்ள இடங்கொடுத்து, உங்கள் விமரிசனங்களுக்கு உங்கள் “level"-ல் பதில் தராமல் விட்டுவிடுகிறேன்.
மெய்யாகவே உங்கள் நோக்கம் “உண்மையைத் தேடுவதாக” இருந்தால், கீழ்க்கண்டவாறு மட்டும் குறிப்பிட்டு உங்கள் விவாதத்தை வையுங்கள். முடிந்த அளவு குழப்பமற்ற பதில்தர நான் முயலுகிறேன்.
///Anbu wrote //நன்மை தீமை அறியத்தக்க அறிவையுடைய மனிதன், சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும். இவ்வாறு நிதானித்து அறிந்த விஷயங்களைத்தான் மனதின் பிரமாணம் என ரோமர் 7:23-ல் பவுல் கூறுகிறார். இந்த மனதின் பிரமாணத்தின்படி நடந்தாலே அது கற்பனைகளின்படி நடப்பதற்குச் சமம்தான்.//
உங்களது இந்த கூற்று சரியெனில் எதற்காக கற்பனைகள், கட்டளைகள்? அவனவனுக்குத்தான் நீங்கள் சொன்ன "சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும்" என்று இருக்கிறதே. உலகில் பிறந்த எல்லோரையும் இந்த 'மனசாட்சி பிரமாணத்தின்'படி நியாயம் தீர்க்க வேண்டியதுதானே.///
///Anbu wrote //நன்மை தீமை அறியத்தக்க அறிவையுடைய மனிதன், சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும். இவ்வாறு நிதானித்து அறிந்த விஷயங்களைத்தான் மனதின் பிரமாணம் என ரோமர் 7:23-ல் பவுல் கூறுகிறார். இந்த மனதின் பிரமாணத்தின்படி நடந்தாலே அது கற்பனைகளின்படி நடப்பதற்குச் சமம்தான்.//
உங்களது இந்த கூற்று சரியெனில் எதற்காக கற்பனைகள், கட்டளைகள்? அவனவனுக்குத்தான் நீங்கள் சொன்ன "சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும்" என்று இருக்கிறதே. உலகில் பிறந்த எல்லோரையும் இந்த 'மனசாட்சி பிரமாணத்தின்'படி நியாயம் தீர்க்க வேண்டியதுதானே.///
உங்கள் பதில் சுருக்கமாக தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். குழப்பவேண்டாம், மீண்டும்...
soulsolution wrote: ///Anbu wrote //நன்மை தீமை அறியத்தக்க அறிவையுடைய மனிதன், சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும். இவ்வாறு நிதானித்து அறிந்த விஷயங்களைத்தான் மனதின் பிரமாணம் என ரோமர் 7:23-ல் பவுல் கூறுகிறார். இந்த மனதின் பிரமாணத்தின்படி நடந்தாலே அது கற்பனைகளின்படி நடப்பதற்குச் சமம்தான்.//
உங்களது இந்த கூற்று சரியெனில் எதற்காக கற்பனைகள், கட்டளைகள்? அவனவனுக்குத்தான் நீங்கள் சொன்ன "சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும்" என்று இருக்கிறதே. உலகில் பிறந்த எல்லோரையும் இந்த 'மனசாட்சி பிரமாணத்தின்'படி நியாயம் தீர்க்க வேண்டியதுதானே.
உங்கள் பதில் சுருக்கமாக தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். குழப்பவேண்டாம், மீண்டும்...///
நான் சுருக்கமாக/விரிவாக/தெளிவாக/குழப்பமில்லாமல் எப்படி எழுதினாலும், உங்கள் தலையில் நீங்கள் ஏற்கனவே பொதிந்து வைத்துள்ள ideas -ஐ கீழே இறக்கி வைக்காமல் படித்தால், நீங்கள் குழம்பத்தான் செய்வீர்கள்.
உங்கள் கேள்விக்கான பதில், எனது பதிவில் நான் தந்துள்ள பின்வரும் வசனங்களிலேயே உள்ளது. ஆனால் உங்களால் அதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
ரோமர் 2:14-16 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
இவ்வசனங்களில், நியாயப்பிரமாணமும் கற்பனைகளும் இல்லாத புறஜாதியினர், சுபாவமாகவே குற்றமுண்டு குற்றமில்லையெனத் தீர்ககக்கூடியவர்களாக இருக்கிறார்கள் எனப் பவுல் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? புரியவில்லையெனில் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. பவுல் சொன்னது புரிந்தால் மேற்கொண்டு படியுங்கள்.
பவுலின் கூற்றோடு, “நன்மை தீமை அறியத்தக்க அறிவு” எனும் ஓரிரு வார்த்தைகளை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். எனவே எனது கூற்றைக் குறித்து நீங்கள் கேட்ட கேள்வியை பின்வருமாறு மாற்றி எழுத வேண்டும்.
ரோமர் 2:14-16-ல் காணப்படும் பவுலின் கூற்று சரியெனில் எதற்காக கற்பனைகள், கட்டளைகள்?
பவுலின் கூற்று சரியா தவறா என முதலாவது முடிவெடுங்கள்.
பவுலின் கூற்று தவறென்று முடிவெடுத்தால், மேற்கொண்டு நாம் விவாதிப்பதில் அர்த்தமில்லை. பவுலின் கூற்று சரியென முடிவெடுத்தால், எதற்காக கற்பனைகள், கட்டளைகள் எனும் கேள்வியை தேவனிடம்தான் கேட்க வேண்டும். ஆனாலும், அக்கேள்விக்கு என்னிடமும் பதில் உண்டு. அப்பதிலைப் பார்க்குமுன், பவுலின் கூற்று சரியா தவறா என்பதை முதலாவது முடிவெடுத்துச் சொல்லுங்கள்.
தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும். எனும்பட்சம் நீங்கள் ஏன் போய் கண்ணில்படும் எல்லாருக்கும் கற்பனைகளை கைக்கொள்ளச் சொல்கிறீர்கள்? உங்களுக்குக் கட்டளைகள் கொடுக்கப்பட்டால் அதில் நீங்களே அரைகுறையாகத்தான் 'கைக்கொள்ளு'கிறீர்கள். ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதும் கைக்கொண்டு அதில் எதாவது ஒன்றில் தவறினாலும் எல்லாவற்றிலும் குற்றமுள்ளவனாக இருக்கிறான் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. ஆக ஒருவனும் அதில் தேற முடியாது. தேவன் மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயம்தீர்த்துக் கொள்வார்.
நீங்கள் உங்கள் idea க்களை வைத்து மற்றவர்களை நியாயம் தீர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். எல்லோருக்கும் மனசாட்சி உண்டு அதன்படி தேவன் அவர்களை நியாயம் தீர்க்கட்டுமே. நீங்கள் ஏன் மெனக்கெடுகிறீர்கள்?
'நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்'.கலா5:4 நியாயப்பிரமாணம் யூதனுக்கு, கிறிஸ்துவின் உபதேசங்கள் புதிய ஏற்பாட்டு சபைக்கு ஆனால் கிருபை முழு உலகத்துக்கும் என்பதை உணர்க!
-- Edited by soulsolution on Monday 23rd of November 2009 12:43:18 PM
Hello brother, உங்கள் கருத்து/கேள்வி எதுவோ அதில் மட்டும் நில்லாமல், விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை வழ வழவென்று எழுதுவதால்தான், உங்கள் கருத்து பற்றி மீண்டும் மீண்டும் கேட்க நேரிடுகிறது. கீழ்க்காண்பவை போன்ற வழ வழாக்களை தவிருங்கள்.
soulsolution wrote: //நீங்கள் உங்கள் idea க்களை வைத்து மற்றவர்களை நியாயம் தீர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். எல்லோருக்கும் மனசாட்சி உண்டு அதன்படி தேவன் அவர்களை நியாயம் தீர்க்கட்டுமே. நீங்கள் ஏன் மெனக்கெடுகிறீர்கள்?
'நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்'.கலா5:4 நியாயப்பிரமாணம் யூதனுக்கு, கிறிஸ்துவின் உபதேசங்கள் புதிய ஏற்பாட்டு சபைக்கு ஆனால் கிருபை முழு உலகத்துக்கும் என்பதை உணர்க!//
சரி, விவாதத்திற்கு வருவோம். பவுலின் கூற்றும் எனது கூற்றும் சரியென்றால் கற்பனைகள், கட்டளைகள் எதற்காக என்பதுதான் உங்கள் கேள்வி. உங்கள் கேள்விக்கு சுருக்கமான பதில்: உங்களுக்கும் எனக்கும் கிடுக்கிப் பிடி போட்டு நியாயத்தீர்ப்பு நாளில் நியாயந்தீர்ப்பதற்குதான் கற்பனைகளும், கட்டளைகளும்.
நன்மை தீமை அறியத்தக்க அறிவால் மனிதன் தனக்குத்தானே பிரமாணங்களை உண்டாக்கிக்கொள்ள முடியும்தான். ஆயினும் அந்தப் பிரமாணங்கள் ஆளாளுக்கு வேறுபட வாய்ப்புள்ளது. இதனால் ஒருசிலர் அல்லது பலர் பாவத்தைக்குறித்து அறியாமற்போகவும் வாய்ப்புள்ளது. அதாவது தேவனின் பார்வையில் பாவமான பல செயல்கள், பலரது பார்வையில் பாவமில்லாததாகத் தோன்ற வாய்ப்புள்ளது. உதாரணமாக எளியவர்களுக்கு கொடாதிருப்பதை எடுத்துக் கொள்வோம்.
மனிதரில் பலரது நீதி இப்படித்தான் சொல்லும்: “நான் கொலை செய்யவில்லை, திருடவில்லை, நான் உழைத்து சம்பாதிப்பதை என் இஷ்டம்போல் செலவளிக்க எனக்கு உரிமை உள்ளது. எனவே என் மனம்போல் ஆடம்பர வசதிகளை அனுபவிப்பேன், சொத்து சேர்ப்பேன், பொக்கிஷம் சேர்ப்பேன். அவ்வப்போது என் இஷ்டப்படி எளியவர்களுக்குக் கொடுத்துக் கொள்வேன்.”
மனிதனின் சுயநலம் இப்படியான ஒரு நீதிக்கு வழிவகுக்கிறது. கற்பனைகள் இல்லாத காலத்தில் மட்டுமின்றி, கற்பனைகள் கொடுக்கப்பட்டுள்ள இக்காலத்தில்கூட அவற்றை அறிந்த பலர், சுயநலத்தில் உழன்று, கற்பனைகளை உதாசீனம் செய்து, எளியவர்களுக்கு கொடுக்க மனமில்லாமல்தான் இருக்கின்றனர். ஆனால் கற்பனைகளை அறியாத புறஜாதியினரில் பலர், மிகுந்த தியாகத்தோடு எளியவர்கள்மீது கரிசனையுள்ளவர்களாக இருக்கின்றனர்.
இவ்விதமாக ஆளாளுக்கு தங்கள் மனம்போல் பிரமாணங்களை உண்டாக்கி, மனிதர்கள் பாவத்தைக் குறித்த அறிவில்லாதிருந்தனர். பவுலின் பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
ரோமர் 7:7 பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
நியாயப்பிரமாணத்திற்கு முந்தின காலத்தில், இப்படித்தான் பலரும் பாவத்தைக் குறித்த அறிவில்லாமல் இருந்திருப்பார்கள். இது பாவம் என தெரியாமல் பாவம் செய்வோரை நியாயந்தீர்க்க தேவநீதி இடங்கொடுக்கவில்லை. எனவேதான் நியாயப்பிரமாணங்களையும் கற்பனைகளையும் அவர் கொடுத்தார். அவைகள் கொடுக்கப்பட்டபின், அவற்றின்படி நியாயந்தீர்ப்பது தேவநீதிக்கு உட்பட்டதாகிவிடுமல்லவா? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
இப்போ புரியுதா? நாம் சாக்குப்போக்கு சொல்லி தப்பமுடியாதபடி, நம்மைக் கிடுக்குப்பிடி போட்டு நியாயந்தீர்க்கத்தான் கற்பனைகளும் கட்டளைகளும். மோசே மூலம் கற்பனைகள் கொடுக்கப்பட்டபோதிலும், அவற்றின் உள்ளான நோக்கத்தை இஸ்ரவேலர் அறியாதிருந்ததால்தான், அவற்றை மேலும் விரிவுபடுத்தி இயேசு போதித்தார் (மத்தேயு 5:17-48).
கற்பனைகள் விரிவாக விரிவாக 2 விளைவுகள் உண்டாகின்றன. 1. அவற்றின்படி நடப்போருக்கு அதிக பாக்கியங்கள், 2. அவற்றின்படி நடவாதோருக்கு அதிக சாபங்கள். பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
இஸ்ரவேலரிடம் கொடுக்கப்பட்ட கற்பனைகள், அவர்கள் மூலம் புறஜாதியினரிடமும் செல்லவேண்டும் என்பதே தேவனின் திட்டம்.
கற்பனைகளின்படி முழுமையாக எல்லாராலும் நடக்க முடியுமா, நீங்கள் நடக்கிறீர்களா எனக் கேட்கிறீர்கள். இதற்கான பதிலை எனது முதல் 4 நீண்ட பதிவுகளில் 2-ம் பதிவில் கொடுத்துள்ளேன், படித்துக் கொள்ளவும்.
"இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமானம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபதியாய் இருந்தது; விசுவாசம் வந்த பின்பு நாம் உபாதிக்கு கீழானவர்கள்ல்லவே" கலா. 3:24,25
சகோ அன்பு எழுதுகிறார்: "ரோமர் 7:7 பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே."
"நியாயப்பிரமாணத்திற்கு முந்தின காலத்தில், இப்படித்தான் பலரும் பாவத்தைக் குறித்த அறிவில்லாமல் இருந்திருப்பார்கள். இது பாவம் என தெரியாமல் பாவம் செய்வோரை நியாயந்தீர்க்க தேவநீதி இடங்கொடுக்கவில்லை. எனவேதான் நியாயப்பிரமாணங்களையும் கற்பனைகளையும் அவர் கொடுத்தார். அவைகள் கொடுக்கப்பட்டபின், அவற்றின்படி நியாயந்தீர்ப்பது தேவநீதிக்கு உட்பட்டதாகிவிடுமல்லவா? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்."
யாருக்கு நியாயப்பிரமானம் கொடுக்கப்பட்டது சகோ அன்பு அவர்களே! புறஜாதிகளுக்கா அல்லது யூதர்களுக்கா? பவுல் சில இடங்களில் நியாயப்பிரமானத்தை குறித்து காரியங்களை தெளிவு படுத்துகிறார், எடுத்துக்காட்டாக கலாத்தியர் 3ம் அதிகாரத்தில், ஏனென்றால் அதை அவர் யூதர்களுக்கு எழுதுகிறார். யூதன் அல்லாதவனுக்கும் நியாயப்பிரமானத்திற்கு சம்பந்தமே இல்லை என்பதால் தான் மனசாட்சி என்கிற ஒன்றை குறித்து பவுல் எழுதுகிறார். இப்படி யூதனுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமானத்தை கொண்டு வந்து கிறிஸ்தவர்கள் மேல் தினித்து அதை பின் பற்றினால் தான் இரட்சிபு என்கிற பிரகாரமான நம்பிக்கை தருவது சரி இல்லை. புறஜாதியார் நியாயப்பிரமானத்தை பின் பற்ற சொல்லப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
முழு கற்பனைகளையும், நியாயப்பிரமானங்களையும் ஒருவனும் பின் பற்ற முடியாது, அப்படியே பின் பற்றினாலும் அதினால் ஒருவன் பூர்ணராக முடியாது என்றும் வேதம் சொல்லுகிறது ஆகவே தான் கிருபை இயேசு கிறிஸ்துவின் மூலமாக வந்தது.
வாக்குத்தத்தம் பன்னப்பட்ட இந்த கிறிஸ்து வரும் முன் தேவன் தன் சொந்த ஜனங்களாக நடத்திய யூதர்களுக்கு பாவ ஜீவியத்திலிருந்து விடுப்பட்டு வாழ கொடுத்தது தான் கற்பனைகளும், நியாய்ப்பிரமானங்களும். அதையே இன்றும் கிறிஸ்தவர்கள் பின் பற்ற வேண்டும் என்று வேதத்தின் எந்த பகுதியும் சொல்ல வில்லை. கற்பனைகள் என்கிற வார்த்தையை பார்த்தவுடன் அது நியாய்ப்பிரமான கற்பனைகள் என்று தவறாக போதிக்காதீர்கள். இயேசு கிறிஸ்துவின் வசனங்களும் கற்பனைகளே.
நியாயப்பிரமானங்களும் கற்பனைகளையும் இயேசு கிறிஸ்துவே இரண்டு வரிகளில் அடக்கி விட்டார், "உன் தேவனான கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு பலத்தோடும் அன்பு செலுத்து, உன்னை நேசிப்பதை போல் பிறனை நேசி" என்கிற அழகான இரு வரிகளில் எல்லாவற்றையும் அடக்கி விட்டார், ஆனால் நீங்கள் இன்னும் முழு அல்லது பகுதியான நியாயப்பிரமானங்களை பின் பற்ற சொல்லுகிறீர்களே.
முதலில் அன்பு வேண்டும், அந்த அன்பு சகல பாவங்களையும் மூடும் என்கிறது வேதம். "உன்னிடத்தில் நீ அன்புகுருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது" என்று பவுல் எழுதுகிறார் ரோம் 13:9.
இருதயத்தின் நிறைவு வாய் பேசுகிறது என்கிற படி அழிவையே சொல்லி வந்துக்கொண்டு, அன்பை வெளிப்படுத்த தவறுகிறீர்கள், நியாயப்பிரமானத்தை பற்றி பேசி. நியாயப்பிரமானம் கல்லுக்கு கல், பல்லுக்கு பல் என்கிற போதனையை தருகிறது, ஆனால் கிறிஸ்துவின் பிரமானமோ "அன்பை" மாத்திரமே போதிக்கிறது. உடனே மத். 25ஐயும் "கெஹென்னா" பற்றிய புரிந்துக்கொள்ள முடியாத வசனங்களை கான்பித்து விடாதீர்கள். இனியும் இஸ்ராயேல் மக்களை இரட்சிக்க வரும் கிறிஸ்து இந்த அன்பின் பிரமானத்தை தான் போதிப்பாரே அன்றி கொல்லுகிற பிரமானத்தை அல்ல.
எல்லா கிறிஸ்தவர்களுக்கு உண்டான அதே போதனையில் இருந்துக்கொண்டு அதையே தான் நீங்களும் எழுதி வருகிறீர்கள். உங்கள் பழைய போதனைளையும் தர்க்கங்களை கழற்றி வைத்து பிறகு இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசித்து பாருங்கள். "என் ஜனமே, பாபிலோனை விட்டு வெளியேறுங்கள்" என்கிற தேவ கட்டளைக்கு கீழ் படிய முயற்சி செய்யுங்கள். உடன்பாடு இல்லாமல் ஒரு குழப்பம் நிறைந்த சபையில் இருந்துக்கொண்டு அதே போதனைகளை தான் நீங்களும் பதிய செய்கிறீர்கள்.
நீங்கள் தரும் இந்த போதனைகள் நாங்களும் ஒரு காலத்தில் மிகவும் ஜோராக தான் தந்துக்கொண்டிருந்தோம். ஆனால் இன்று கிறிஸ்துவின் அன்பை ருசி பார்த்த பின்பு, அவர் ஏன் வந்தார் என்கிற காரணத்தை அறிந்த பின்பு "நற்செய்தியினால்" எங்கள் இருதயங்கள் சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் "நியாயப்பிரமானங்களும், கற்பனைகளுக்கும்" தாராளமாக கீழ் படியுங்கள். எல்லாம் அறிந்துக்கொள்ளும் காலம் ஒன்று வருகிறது என்று தான் வேதம் சொல்லுகிறது, ஆனால் எதையுமே அறிந்துக்கொள்ள முடியாமல் "இரண்டாம் மரணத்திற்கு" பலர் சென்று விடுவார்கள் என்கிறது உங்கள் போதனை. சற்று அல்ல, மிகவும் முறனான ஒரு கருத்தாக தான் இருக்கிறது.
அன்பு எழுதுகிறார்//இஸ்ரவேலரிடம் கொடுக்கப்பட்ட கற்பனைகள், அவர்கள் மூலம் புறஜாதியினரிடமும் செல்லவேண்டும் என்பதே தேவனின் திட்டம்.// இந்தக் கற்பனைகளை அவர்களே முழுமையாகக் கைக்கொள்ளவில்லை, இதில் இவர்கள் மூலமாக புறஜாதியாரிடம் செல்லவேண்டுமாம். செல்லும் சகோதரரே ஆனால் அது இப்போதல்ல ராஜ்ஜியத்தில். இப்போதுதான் அவர்களே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லையே? மேலும் இஸ்ரவேலர் புறஜாதியாரோடு சம்பந்தமே கலப்பதில்லை இதில் கற்பனைகளை எங்கு போதிப்பார்கள்?
இச்சையோடு பார்த்தாலே பாவம் என்று நியாயப்பிரமாணத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்தியே கிறிஸ்து போதித்தார். எளியவர்களுக்கு கொடு என்பதல்ல விஷயம் 'உனக்குண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடு' என்பதுதான் கிறிஸ்துவின் கட்டளை. ஆக உங்கள் கூற்றுப்படி இதைச் செய்யாத அனைவருமே தண்டிக்கப்படுவார்கள் இல்லையா? அதில் முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள். ஏனென்றால் அடுத்தவனுக்குப் போதிக்கிற நீங்கள் இதைச் செய்வதில்லை. பேசாமல் இங்கு விவாதிக்கும் நேரத்தில் ஏதாவது வேலை செய்து அந்தப் பணத்தை எளியவர்களுக்குக் கொடுக்கலாமே? உண்மையாகச் சொல்லுங்கள் உங்களுக்குண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டீர்களா? போய் அதை முதலில் செய்யுங்கள்.
கிருபையின் நிமித்தமாக அன்பு பெருகுமேயன்றி பாவம் பெருகாது. அதை முதலில் அறியுங்கள். என்னுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டதன் விளைவாக நான் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியாகிவிட்டேன் என்ற மாபெரும் இரட்சிப்பின் நற்செய்தி என்னை தேவ அன்பை நினைத்துத் திக்குமுக்காட வைக்கிறது. இந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுதினமும் அனுபவித்து வருகிறேன். மேலும் இதே இரட்சிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் என்பது தேவ அன்பின் உச்சகட்டம். இதைத்தான் கிறிஸ்துவின் அன்பின் அகல, ஆழ, உயரமென்று பவுல் சொல்கிறார். உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல, அவை வானத்தைப் பார்க்கிலும் உயர்ந்தவைகள் என்று வசனம் கூறுகிறது.
"உங்களுக்கும் எனக்கும் கிடுக்கிப் பிடி போட்டு நியாயத்தீர்ப்பு நாளில் நியாயந்தீர்ப்பதற்குதான் கற்பனைகளும், கட்டளைகளும்". என்று எழுதியுள்ளீர்கள்.
என்ன நியாயத்தீர்ப்பு? கட்டளைகளை மீறுவது பாவம். பாவத்தின் சம்பளம் மரணம். அதேபோல ஒருவனும் முழு கட்டளைகளையும் செவ்வனே கைக்கொள்ளவே முடியாது. ஆக எல்லோருக்கும் மரண தண்டனை நிச்சயம். உங்க்ள் வாதப்படி இதுதான் நடக்கும். இதில் கிறிஸ்து எதற்கு, உயிர்த்தெழுதல் எதற்கு? கிருபை எதற்கு?
மோசே மூலம் கற்பனைகள் கொடுக்கப்பட்டபோதிலும், அவற்றின் உள்ளான நோக்கத்தை இஸ்ரவேலர் அறியாதிருந்ததால்தான், அவற்றை மேலும் விரிவுபடுத்தி இயேசு போதித்தார் (மத்தேயு 5:17-48).
ஆக உள்ளான நோக்கத்தை இஸ்ரவேலரே அறியவில்லை இல்லையா? ஏனென்றால் இயேசுகிறிஸ்து விளக்கமாகப் போதித்ததுபோல மோசேயால் செய்யமுடியவில்லை. ஆக நீங்கள் சொல்லவருவது,,
3. அதை மிகவும் விளக்கமாகப் புரிந்துகொண்டவர்கள் மிக அதிக தண்டனை அடைவார்கள். இதில் நீங்கள் 'மிகவும் விளக்கமாக' புரிந்துகொண்டு அதை அப்படியே கைகொள்ள உங்களாலேயே முடியவில்லை, ஆனாலும் மிகவும் விளக்கமாக இதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை 'இரட்டிப்பான நரகத்தின் மகனாக்குகிறீர்கள்'. உங்களுக்கும் அக்கால பரிசேயர், வேதபாரகருக்கும் என்ன வேற்றுமை.
'நீதிமான் ஒருவனாகிலும் இல்லை'
சாபம் சாபமே, இதில் அதிக சாபம் குறைவான சாபம் என்றில்லை. ஒரே சாபம், ஒரே தண்டனை மரணம் மட்டுமே. இதில் குறைவான மரணம் அதிக மரணம் ஒன்றுமில்லை. -- Edited by soulsolution on Tuesday 24th of November 2009 05:42:49 AM
-- Edited by soulsolution on Tuesday 24th of November 2009 05:46:19 AM
-- Edited by soulsolution on Tuesday 24th of November 2009 05:55:02 AM
bereans wrote: //"உன்னிடத்தில் நீ அன்புகுருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது" என்று பவுல் எழுதுகிறார் ரோம் 13:9.//
நல்ல சமயத்தில் இந்த வசனத்தை ஞாபகப்படுத்தினீர்கள். நன்றி சகோதரரே!
அது சரி, பிறனிடம் அன்புகூராதவனுக்கு என்ன நேரிடும்? வேதவசனம் சொல்வதை தயவுசெய்து சொல்லுங்கள், இனி அதன்படியே நான் போதிக்கிறேன்.
ரோமர் 13:9 -ஐ ஒட்டி பவுல் கூறியுள்ள மற்ற காரியங்களின்படி நடப்பவனுக்கு (விபசாரம், கொலை போன்றவை செய்தல்) என்ன நேரிடும்?
அழிவு நேரிடும்னு நிச்சயம் நீங்க சொல்லமாட்டீங்க. ஏன்னா நீங்களெல்லாம் அன்பே உருவானவங்க. நான்தான் அன்பே இல்லாம, அழிவு மரணம்னு சொல்லிட்டிருக்கேன். ஆனா நீங்க அப்படி சொல்லமாட்டீங்க. என்றாலும், எனக்காக கொஞ்சம் வேதாகமத்தைப் புரட்டிப்பார்த்து, ரோமர் 13:9-14 வசனங்களில் பவுல் சொல்லுகிற பொல்லாத செயல்களைச் செய்பவர்களுக்கு என்ன நேரிடுங்கிறதை சொல்லுங்க.
மன்னிப்பு கேட்டா பாவங்கள் மன்னிக்கப்படுங்கிற பதிலைச் சொல்லவேண்டாம். கொஞ்சமும் உணர்வில்லாம மீண்டும் மீண்டும் பொல்லாங்கனவைகளைச் செய்கிறவனுக்கு என்ன நேரிடும் என்பதுதான் என் கேள்வி.
ஜீவவிருட்சத்தின் கனி கொடுக்கப்படுமா, ஜீவகிரீடம் கொடுக்கப்படுமா? .... நீங்கள் பெரும் வேத ஆராய்ச்சியாளர்கள். உங்களுக்குத் தெரியாத வசனம் இருக்காது. அன்பும் கிருபையும் இரக்கமும் தயவுமுள்ள தேவன், பொல்லாத செயல்களைச் செய்கிற அவங்களுக்கு ஜீவவிருட்சத்தின் கனியைக் கொடுக்கப்போவதாக ஏதாவது வசனத்தில் சொல்லியிருக்கலாம். அப்படி ஏதாவது வசனம் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள். நான் அதன்படியே போதிக்கிறேன். தேவனே அப்படிப்பட்டவர்களுக்கு ஜீவவிருட்சத்தின் கனியைக் கொடுக்குமளவு அன்புடையவராய் இருக்கும்போது, நான் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்?
ரோமர் 13:9-14 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
நித்தியஜீவனைச் சுதந்தரிக்க நான் என்ன செய்யவேண்டும் என வேறொரு தொடுப்பில் உங்களிடம் கேட்டிருந்தேன், நீங்கள் பதிலே சொல்லவில்லை.
நித்தியஜீவனைச் சுதந்தரிக்கணும்னா கற்பனைகளைக் கைக்கொள்னு இயேசு சொல்லியிருக்கார். ஆனா, அதைவிட எளிமையான வழி உங்களிடம் இருக்கிற மாதிரி தெரியுது. அதனால, தயவுசெய்து பதில் சொல்லுங்க சகோதரரே!
bereans wrote: //கற்பனைகள் என்கிற வார்த்தையை பார்த்தவுடன் அது நியாயப்பிரமாண கற்பனைகள் என்று தவறாக போதிக்காதீர்கள். இயேசு கிறிஸ்துவின் வசனங்களும் கற்பனைகளே.//
சரி சகோதரரே! ஆனா, நியாயப்பிரமாணத்தின் என்னென்ன கற்பனைகள் இயேசுவின் கற்பனைகளில் இல்லை என்பதை உங்களால் சொல்லமுடியுமா? (அதாவது விருத்தசேதனம், பலி போன்ற சடங்காச்சாரங்கள் தவிர மற்றவைகளில்)
ஏன்னா, நியாயப்பிரமாணக் கற்பனைகளான விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே போன்றவை இயேசுவின் கற்பனைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, இயேசுவின் கற்பனைகளில் இல்லாத நியாயப்பிரமாணக் கற்பனைகள் ஏதாவது இருந்து அவற்றைச் சொன்னீங்கனா, இனிமேல் அவற்றைப் போதிக்காம விட்டுரலாம்லா?
நியாயபிரமாண கற்பனைப்படி எல்லா பாவத்துக்கும் மரணதண்டனை விதிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது எல்லா பாவத்துக்கும் ஒரே தண்டனை ஒரே மரணம் என்று விளக்குவது வேதத்துக்கு புறம்பானது.
எதோ ஒரு தகராறில் ஒருவன் அவனது தந்தையை அடித்துவிடுகிறார் இரக்கமுள்ள அந்த தந்தை மகனை திருப்பி அடிக்காமல் உன்னை நான் மன்னிக்கிறேன் இனி இப்படிஅடிக்காதே என்றுதான் சொல்வாறேதவிர உன்னை மன்னித்துவிட்டேன் நீ நினைத்தபோதெல்லாம் என்னை அடித்துகொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கமாட்டார்.
அல்லது உங்கள் பொருளை திருடிய ஒரு திருடனை மன்னித்த நீங்கள் இனி அப்படி திருடாதே என்று சொல்வீர்களா அல்லது நீ எப்பொழுது வேண்டுமானாலும் திருடிகொள்ளலாம் என்று அனுமதிகொடுப்பீர்களா? எந்த நீதிபதியும் அப்படி அனுமதி கொடுப்பதில்லை. தெரியாமல் செய்தால் ஒரு சில அடியோடு மன்னிப்பை பெறலாம் தெரிந்து செய்தால் பல அடிகள் கிடைப்பது நிச்சயம்.
அடுத்ததாக இப்பொழுது மகன் "நாம் தந்தையை அடிக்க கூடாது என்று நினைத்தோம் அதை நிறைவேற்றாமல் இருக்க முடியவில்லை அடித்துவிட்டோம் தந்தையும் மன்னித்துவிட்டார் இனி எது செய்தால் என்ன? பேசாமல் கொலை செய்துவிடுவோம் எல்லாவற்றிக்கும் ஒரே
தண்டனைதானே" என்று கருதுவானா?
அடிப்பதற்கும் கொலை செய்வதற்கும் உலகத்திலேயே ஒரே தண்டனை இல்லை! அப்படியிருக்க மகா நீதிபரர் "அவனவன் கிரியைக்கு ஏற்றபலனை சரியாக வழங்காமல் இருப்பாரா?"
தன்னால் குணமாக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயேசு என்ன அறிவுரை வழங்கினார்?
யோவான் 5:14 அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதேஎன்றார். யோவான் 8:11 அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
நான் இருக்கிறேன் பார்த்துகொள்கிறேன் பயப்படாமல் எதுவேண்டுமானாலும் செய் என்ற கூறினார்?
ஆக்கினை தீர்ப்பில் இருந்து இயேசு நம்மை விடுவித்தது நிச்சயம் ஆனால் அதைவிட அதிக கேடு வராமலிருக்க இனி பாவம் செய்யக்கூடாது என்று வசனம் நமக்கு போதிக்கவில்லையா?
ரோமர் 6:12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. யாக்கோபு 1:15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
ஏற்கெனவே எல்லோரும் ஆதாமின் பாவத்தினால் மறித்துக்கொண்டு
இருக்கும்போது யாகோபு இங்கு எந்த மரணத்தை குறித்து பேசுகிறார்?
ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் எல்லோரும் மீட்கப்பட்டாலும் அவரவர் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவிக்காமல் ஒருபோதும் தப்ப முடியாது!
லூக்கா 12:45
அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், லூக்கா 12:46 அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்
ஆம்! உண்மையுள்ளவர்களுக்கு ஒரு இடம், உண்மை இல்லாதவர்களுக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு!
-- Edited by RAAJ on Tuesday 24th of November 2009 08:22:29 AM
-- Edited by RAAJ on Tuesday 24th of November 2009 08:23:48 AM
soulsolution wrote: //எளியவர்களுக்கு கொடு என்பதல்ல விஷயம் 'உனக்குண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடு' என்பதுதான் கிறிஸ்துவின் கட்டளை. ஆக உங்கள் கூற்றுப்படி இதைச் செய்யாத அனைவருமே தண்டிக்கப்படுவார்கள் இல்லையா?//
இக்கட்டளை ஒரு தனிப்பட்ட வாலிபனுக்குக் கொடுக்கப்பட்டது. அவனுடைய ஆஸ்திகளை (அனுதினம் பயன்படுத்தும் பொருட்களை அல்ல) விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படி அவனிடம் இயேசு கட்டளையிட்டார். ஆனால் இப்படிச் சொல்லி நாம் தப்பமுடியாது. ஏனெனில் உங்களுக்குண்டானவைகளை விற்று பிச்சையிடுங்கள் என பொதுவாகவும் இயேசு கட்டளையிட்டுள்ளார். இயேசுவிடம் அன்புகூருவதாகச் சொல்லிக்கொண்டு, இக்கட்டளைப்படி நடக்காதவர்களை நிச்சயமாக இயேசு நியாயந்தீர்த்து ஆக்கினைக்குள்ளாக்குவார்.
soulsolution wrote: //அதில் முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.//
இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
soulsolution wrote: //ஏனென்றால் அடுத்தவனுக்குப் போதிக்கிற நீங்கள் இதைச் செய்வதில்லை.//
இது உங்கள் சுயாதீனக் கருத்து, அல்லது கற்பனை.
soulsolution wrote: //உண்மையாகச் சொல்லுங்கள் உங்களுக்குண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டீர்களா? போய் அதை முதலில் செய்யுங்கள்.//
நான் அனுதினமும் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமே என்னிடமுள்ளன. அவற்றை விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படி இயேசு கூறவில்லை. பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷம் சேர்க்காதிருங்கள் எனும் இயேசுவின் கட்டளையை மீறி பொக்கிஷம் சேர்ப்பவர்கள்தான், தாங்கள் அனுதினமும் பயன்படுத்தாத ஆஸ்தியையும் பொன்னையும் வைத்திருப்பார்கள்.
soulsolution wrote: //பேசாமல் இங்கு விவாதிக்கும் நேரத்தில் ஏதாவது வேலை செய்து அந்தப் பணத்தை எளியவர்களுக்குக் கொடுக்கலாமே?//
தேவன் எனக்குத் தந்த நேரத்தை எந்தெந்த காரியங்களுக்கு செலவு செய்யவேண்டும் என்பதை நிதானித்து செயல்படுவது எனக்கும் தேவனுக்கும் இடையேயான விவகாரம். இதில் நீங்கள் தலையிடவேண்டியதில்லை. ஆயினும், கவலைப்படாதீர்கள், இனியும் உங்களோடு விவாதிப்பதில் பயனிருக்குமா என யோசித்துப் பார்க்கிறேன். பயனில்லை எனத் தோன்றினால், நிறுத்திக் கொள்கிறேன். ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? நன்றாக யோசித்துப்பார்த்தேன். உங்களோ விவாதிப்பதில் பயனில்லை என்றுதான் தோன்றுகிறது. எனவே உங்களோடுடனான என் விவாதத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
RAAJ wrote: //எதோ ஒரு தகராறில் ஒருவன் அவனது தந்தையை அடித்துவிடுகிறார் இரக்கமுள்ள அந்த தந்தை மகனை திருப்பி அடிக்காமல் உன்னை நான் மன்னிக்கிறேன் இனி இப்படிஅடிக்காதே என்றுதான் சொல்வாறேதவிர உன்னை மன்னித்துவிட்டேன் நீ நினைத்தபோதெல்லாம் என்னை அடித்துகொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கமாட்டார்.//
எத்தனையோ உதாரணங்கள் மூலம் நீங்களும் சொல்லத்தான் செய்கிறீர்கள், சகோ.ராஜ் அவர்களே! ஆனால் பலன்...?
நம்பிக்கை இருக்குமட்டும் உன் மகனை சிட்சை செய் என நீதி. 19:18 சொல்கிறது. Bro.soulsolution எனது சகோதரராக இருப்பதால், நம்பிக்கை இருந்தமட்டும் அவரோடு விவாதித்துப் பார்த்தேன். தற்போது நம்பிக்கை இழந்துவிட்டேன், இனி என்ன செய்ய? விட்டுவிட்டேன்.
உங்கள் முயற்சிக்காவது பலன் கிடைக்கட்டும் சகோ.ராஜ் அவர்களே!
RAAJ wrote: //என்னை பொறுத்தவரை ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர் எல்லோரும் ஓடுவார்கள் ஆனால் ஒருவர்தான் வெற்றிபெறுவார் அவருக்குத்தான் கிரீடம் சூட்டப்படும்
அதுபோல்
"ஜெயம்கொள்கிறவன் எவனோ" என்ற வார்த்தை யாராவது ஒருவரைத்தான் குறிக்குமேயன்றி அநேகரை குறிக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.//
நீங்கள் சொல்கிற கருத்தை பின்வரும் வசனத்திலும் எடுத்தால் என்னாகும்?
வெளி. 2:11 ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
உங்கள் கருத்தின்படி, “ஜெயங்கொள்ளுகிறவன்” எனும் வார்த்தை ஒருவனை மட்டுமே குறிக்குமென்றால் அந்த ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் 2-ம் மரணத்தினால் சேதப்படுவார்கள் என்றாகும். ஆனால் வெளி. 20:4-6-ல், முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ள பலர் மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விதமாக வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே!