அணில் அம்பானி கார் தயாரிக்கவேண்டும் என்று முடிவு எடுத்தார். அதை நிறைவேற்ற ஒரு தொழில்சாலையை அமைத்தார். தெரிந்தோ தெரியாமலோ அல்லது தொழில்சாலை ஆரம்பிக்கும் முன்னமே சிலரை அறிந்திருந்ததால் நம்மை போன்ற பலரை அவரது நோக்கம் நிறைவேற்ற அங்கு வேலைக்கு வைத்தார்.
இப்பொழுது அந்த கம்பனியில் உற்ப்பத்தி நடந்து, அவர் நோக்கம் நிறைவேறும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் ஒரு கூட்ட தொழிலாளிகள் "கார் தயாரிக்க வேண்டும் என்பது அம்பானியின் திட்டம் அதை அவர் எப்படியும் நிறைவேற்றுவார் நாம் இதில் தலையிட்டாலும் தலையிடாவிட்டாலும் நிச்சயம் கார் தயார்க்கப்படும்" என்று தீர்மானித்து வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துகோண்டனர். .
சிலநாட்கள் அவர்களுக்குபதில் வேறு ஆட்களை வைத்து வேலைபார்த்த அம்பானி இறுதியில் இவர்களால் எந்த பயனும் இல்லை என்று எண்ணி அவர்கள் இடத்தில் வேறு ஆட்களை நிரந்தரமாக நியமித்துவிட்டர். அதனால் வேலை செய்ய ஆயத்தம் இல்லாதவர்களின் மாதசம்பளம் பரிபோனதேயன்றி அம்பானிக்கு எந்த நஸ்டமும் இல்லை. அவர் திட்டமாகிய கார் தயாரித்தல் வேறு ஊழியக்காரகல் மூலம் நடந்துகொண்டே இருந்தது.
வேலையே விட்டு விலகிய அந்த கூட்டத்த்தர் அத்தோடு நிற்காமல், அம்பானியின் திட்டமாகிய கார் தயாரிப்பின் முன்னிற்று வேலை பார்க்கும் ஊழியர்களை, அவர்கள் என்ன நோக்கத்தோடு அங்கு வேலை செய்கிறார்கள் அவர்கள் மனநிலை என்ன என்பதை சரியாக அறியாதபோதிலும் "நீ உன் வீட்டு தேவைக்காக இந்த வேலையே செய்கிறாய், உன் சுய மேன்மையை தேடுகிறாய், நீ கள்ளன்" என்றெல்லாம் தாழ்த்துவதொடு மற்றவர்களிடமும் "கார் தாரிப்பது என்பது அம்பானியின் திட்டம், அவரிடம் அதிகம் பணம் இருக்கிறது எனவே அவர் எப்படியும் அதை தயாரித்துவிடுவார் யாருடைய உதவியும் அவருக்கு தேவை இல்லை எனவே அம்பானி திட்டம் நிறைவேற நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்" என்று சொல்லி எல்லோரையும் குழப்ப ஆராம்பித்தனர். அந்த குழப்பகாரர்கக்ளுக்கு செவிகொடுத்தால் தங்களது வருமானம் இழந்து நடுதெருவில் நிர்க்கவேண்டியதுதான் என்று கருதிய மற்ற வேலையாட்கள். அவர்களுடன் பேசவே விரும்பவில்லை.
தனது திட்டம் நிறைவேறிக்கொண்டு இருக்கும்போது இதுபோல் இடையில் கிடந்து குழப்பும் மனிதர்களால் எரிச்சல் அடைந்த அம்பானி அந்த குழப்பவாதிகளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தார்.
ஆம் தேவனின் திட்டம் எப்படியும் நிறைவேறும்! ஒருவர் கீழ்படியவில்லை என்றால் இன்னொருவர் மூலம் தன திட்டத்தை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். ஆனால் எவனொருவன் அவர் சொல்லும் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து, அவர் திட்டம் நிறைவேற அவரோடு சேர்ந்து வேலை செய்யாவிட்டால் இழப்பு தேவனுக்கு அல்ல மனிதனுக்கே என்பது மறுக்கமுடியாத உண்மை!
-- Edited by RAAJ on Tuesday 10th of November 2009 02:18:45 PM
ஆனால் அம்பானியின் நோக்கம் கார் தயாரிப்பதாக இருந்தாலும் இத்தனை உண்மையான ஊழியர்கள் இருந்தும் இன்னும் ஒரு டயர் கூட ரெடியாகவில்லையாம். கேட்டால் இந்த ஊழியர்களின் பதில் அட அம்பானி நினைத்தால் போதுமா, அவருக்கே கார் செய்யத்தெரியாது, யாராவது எப்படியாவது எப்போதாவது செய்வார்கள் என்றுதான் அவர் இருந்தார். ஒரு மெக்கானிக் என்றால் அவன் கார் மெக்கானிசம் படித்து அதில் அனுபவமிருந்தால்தானே அவனுக்கு 'அந்த குறிப்பிட்ட' வேலையைத் தரமுடியும். பிளாட்பாரத்தில் கருவாடு விற்பவனை இந்த அம்பானி ஆட்டோ மொபைல் இஞ்சினீயர் என்று நினைத்துக் கொண்டு இருப்பதால் இதுவரை ஒரு கார் என்ன ஒரு டயர் கூட உருவாகவில்லை.
இந்த அறிவில்லாத ஊழியர்களைக் கேட்டால் "அதெப்படி அம்பானிக்கு கார் தயாரிக்க ஆசைதான், ஆனால் அவர் பெயிண்ட் அடிக்க பெயிண்டரைத்தான் நியமிப்பார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? யாருக்காவது பெயிண்ட் செய்ய ஆசையிருந்தால், அதுவும் அவர்கள் விருப்பப்படியான கலர் இருந்தால, நேரமிருந்தால்தான் பெயிண்ட் அடிப்பார்கள், அம்பானி என்ன சொலவது அவன் என்ன கேட்பது. இப்படித்தான் எல்லா டிப்பர்ர்ட்மெண்ட்களும்.
அம்பானிக்கு ஆசைதான் ஆனால் அதற்கு அவர் யாரையும் உனக்கு இந்த வேலை மட்டும்தான், அதை செய்தால் போதும் என்றெல்லாம் தீர்மானிக்கக் கூடாதாம். அவ்ர்களாக விருப்பப் பட்டால் திடீரென்று போய ஏதாவது ஒரு 'நட்'டை திருகிவிட்டு வருவார்கள். ஆனால் நாங்கள் அம்பானி அன் கோ வில் வேலை செய்கிறோம். ஆனால் அவர் விருப்பப்படியல்ல நாங்கள் தீர்மானிப்பதுதான் என்றெல்லாம் வேறு பேச்சு.
இப்படி ஒரு முட்டாள் அம்பானியும் மூட ஊழியர்களும் இருந்தால் 'கார்' சூப்பராக வரும்.
-- Edited by soulsolution on Wednesday 11th of November 2009 10:54:23 AM
-- Edited by soulsolution on Wednesday 11th of November 2009 11:24:12 AM
ஒரு ராஜா இருந்தாராம். அவர்தனது பிரஜைகளை ஆள தன்னுடைய இளவரசனை ஆயத்தப்படுத்தி அவருக்கு உதவ ஒரு மணவாட்டியையும் 'தெரிந்து' கொண்டாராம். முதலில் திருமணம் முடிந்த பின்பே இளவரசனுக்கும், மனைவிக்கும் முழு அதிகாரத்தைத் தந்து ஒட்டுமொத்த மக்களை (அவர்கள் அனைவரும் மரித்தபின்பு அனைவரையும் உயிரோடு எழுப்பி) நல்வழிப்படுத்துவதாகத்தான் ராஜாவின் திட்டம். இடைப்பட்ட காலத்தில் இந்த ஜனங்களை ஒரு மோசமான வேறொரு நபரிடம் ஒப்புக்கொடுத்து, (ஒரு கெட்ட ராஜா ஆண்டால் எப்படி இருக்கும் என்பதை அறியும்படி) அதன்படியே நடந்ததாம்.
இதை அறியாத முட்டாள் கூட்டம் ஒன்று ஐயோ எல்லோரும் கெட்ட ராஜாவினால் கஷ்டப்படுகிறார்களே, எல்லோரும் சாகிறார்களே என்று நினைத்து எல்லோருமே ஆளவேண்டுமே. பிரஜைகள் எல்லாமே 'மணவாட்டி' ஆக வேண்டுமே என்று கத்தி கூப்பாடு போட்டு, ராஜாவே உம்முடைய குமாரனுக்கு ஒரு மணவாட்டி போதாது, எல்லோரையும் திருமணம் செய்துகொள்ளச் சொல்லும் என்று ராஜாவுக்கே 'ஆர்டர்' போட்டனராம்.
மணவாட்டிக்கு மட்டுமே தெரிந்த ராஜாவின் டைரியை அரைகுறையாகப் படித்துவிட்டு, ஐயோ பாவம் ராஜா, நான் போய் அவருக்கு 'மருமகள்' தேடாவிட்டால் அவருடைய மகனுக்கு கல்யாணமே ஆகாதே என்று நினைத்துக்கொண்டு ரோட்டில் போவோர் வருவோருக்கெல்லாம் நீங்கள்தான் இளவரசி, நீங்கள்தான் மணவாட்டி என்று பைத்தியங்கள் போல கத்திக் கொண்டிருந்தனராம். இவ்வளவு சொல்லியும் ஒருவர்கூட 'இளவரசி'யாக தயாராயில்லையாம். ஏற்கனவே பெண்பார்த்து 'நிச்சயம்' நடந்தபின்பு இந்தக் கூட்டத்தார் அது தெரியாமல், தொடர்ந்து பெண்பார்த்துக்கொண்டே இருந்தார்களாம். அதைவிட ஒரு பெரிய அபத்தம் 'ராஜாவுக்கும், குமாரனுக்கும்' வரப்போகும் மருமகள் யாரென்றே தெரியாது என்று இவர்களாக எண்ணிக்கொண்டதுதான்! மிகப்பெரிய தமாஷ!!
கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படி ஒருவருடன் ஒருவர் கடிந்து விவாதிப்பது பொதுவான அநேகருக்கு இடரலை கொண்டு வரும் என்று கருதுகிறேன் எனவே நாம் இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது.
உங்களை திருத்த என்னால் முடியாது என்னை மாற்ற உங்களால் முடியாது!
வேண்டுமென்றே சாத்தானை உருவாக்கி சோதிக்கும் தேவன் உங்களுக்கும் இதுபோல் ஒரு விளக்கத்தை கொடுத்து சோதிக்கலாம் என்று கருதுகிறேன்.
என்னை பொறுத்தவரை எனக்கு தெரிந்தவரை தங்களுக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன். தேவனின் சித்தம் எதுவோ அது நிறைவேறட்டும்
எல்லோரும் இரட்சிக்கப்பட்டுவிட்டல் எனக்கு நல்லதுதான் ஏனெனில் அதுதான் எனது இதயபூர்வமான வேண்டுதல்.
சகோதரர் RAAJஅவர்களுடைய கோபத்துக்குக் காரணம் தெரியவில்லை; ஆனாலும் நண்பர் உபயோகமான எதையோ சொல்லவருகிறார் என்பது மட்டும் புரிகிறது;
கோபம் எதுவும் இல்லை சகோதரரே! இவர்களின் விசேஷ கருத்துக்களை பார்த்து ஒரு உவமையாக அந்த கதையை எழுதினேன்.
ஒரு கூட்ட மக்களை மணவாட்டியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தேவனின் நோக்கமாம். அதற்காக வேண்டுமென்றே சாத்தானை அவரே படைத்தாராம். அந்த நோக்கம் நிறைவேறியபின் சாத்தானை அவரே அக்கினிகடலில் தள்ளிவிடுவாராம். உலகில் நடப்பதெல்லாம் தேவன் திட்டமிட்டு நடத்தும் நாடகமாம் அவரே திட்டமிட்டு நாடகம் போட்டுவிட்டு அப்பப்போ நடந்துவிட்ட சில காரியங்களுக்கு மனஸ்தாபபடுவாராம். ( அவரே திட்டம்போட்டு மனிதனை உண்டாக்கிவிட்டு, பிறகு மனிதனை உண்டாக்கியதற்காக மனஸ்தபபடுவாராம்)
தேவன் எல்லோரையும் நிச்சயம் இரட்சித்துவிடுவாராம் அதனால் சுவிசேஷம் சொல்வது தேவனின் வார்த்தைகள் படி வாழ்வது அவர் சொன்ன கட்டளைகளுக்கு கீழ்படிவது எதுவுமே வேண்டாமாம். இப்படி ஒன்றும் செய்யாமல் வாழ்வதோடு தேவ உளியர்களை குறை கூறுவதும் ஆண்டவரின் வார்த்தைப்படி வாழ நினைக்கும் விசுவாசிகளை இடரவைப்பதும் போன்ற காரியங்களை செய்பவர்தான் தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டி சபையாம்.
அவர் நினைத்தால் எல்லோரையும் உடனே இரட்சித்து விடுவாராம் (ஆனால் எதற்க்காக தேவன் எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என்று நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார் என்று வசனம் சொல்கிறது என்பதுதான் எனக்கு இன்னும் தெரியவில்லை)
மனிதனுக்கு ஆத்துமா என்று ஒன்றும் கிடையாதாம். மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்றொரு நபர் கிடையாதாம், வேதத்தில் எண்பது முறைக்குமேல் சொல்லப்படும் பாதாளம் நரகம் என்று எதுவுமே இல்லையாம்.
இப்படி பல்வேறு விசேஷ கருத்துக்கள் இங்கு தெரிவிக்கப்படுவதால் இந்த கதையை எழுதினேன்.
உலகத்தோற்றத்துகு முன்பாக நான் உங்களைத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற வசனம் எல்லாம் பொய்.
சாத்தான் அடுத்து என்ன செய்வான் என்றும் தேவனுக்குத் தெரியாது. என்னசெய்வானோ என்று தேவன் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்.
தேவனுடைய கட்டளைப்படி வாழும், வாழும் இயேசுகிறிஸ்துக்களான ராஜ் போன்றவர்களை மட்டுமே தேவன் ரட்சிப்பார்.
மனிதனுக்கு ஆத்துமா என்று ஒன்று உண்டு; அது சாகவே சாகாது. பாவஞ்சசெய்கிற ஆத்துமாவே சாகும் என்ற வசனம் பொய்.
உருவமே இல்லாத பேரே இல்லாத மூன்றாவது கடவுள் 'பரிசுத்த ஆவியானவர்' உண்டு. (இவர் ராஜ் போன்ற நபர்களுக்குள் வசிக்கிறாராம்; அதாவது கடவுளே இவர்களூக்குள்தான் இருக்கிறார்; அதனால்தான் இவர்கள் மஹா பரிசுத்தவான்களாக இருக்கிறார்கள் போல).
பாதாளம்(பிரேதக்குழி), நரகம்(குப்பைமேடு) உண்டு.
தயவுசெய்து நீங்கள் ஒரு வினாடி கூட வீணாக்காமல் ஓடி ஓடி சுவிசேஷம் சொல்லி சொல்லி ஜனங்களை சாத்தானின் வல்லமையிலிருந்து காப்பாற்றி பரிதாபத்துக்குரிய தேவனுக்கு உதவுங்களேன்.
வாதத்துக்காகக் கூட தேவதிட்டங்களைப் பரியாசம் செய்பவன் விசுவாசிக்குரிய இலட்சணங்களை இன்னும் பெறவில்லை;அவன் பிசாசின் கண்ணியில் நிச்சயம் சிக்குவான்..!
தேவனுடைய திட்டமே என்னவென்று சற்றும் அறியாத முழுக்க முழுக்க பிசாசுக்கு ஊழியம் செய்யும் இந்த சுயநீதி போதகர்களின் இலட்சணங்களை உலகமறியும். உழைத்துச் சாப்பிடும் வர்க்கத்தை ஓசி வர்க்கம் பரிகசிக்கத் தகுதியில்லை.
இது சத்திய வாஞ்சையுள்ளவர்களூக்கென்றுள்ள ஒரு சுதந்திர தளமாகும். வேதத்துக்கு வேத வசனங்கள் மட்டுமே பதில் தர முடியும். தனிப்பட்ட அனுபவங்கள் இங்கு ஏற்கப்படுவதில்லை. முழுநேர சோம்பேறிகளுக்கு இந்தத் தளம் பலனளிக்காது.
வாக்குத்தத்த வியாபாரிகளுக்கு எங்கள் வேத விளக்கங்கள் கோபமளிக்கத்தான் செய்யும். என்ன செய்வது வியாபாரம் பாதிக்கப்படுமே!
"Praying for your success" என்று ஆங்கிளத்தில் ஒரு signature வைத்துக்கொண்டு ஆங்கிளம் தெரியவில்லை என்பது ஆச்சரியம்.
ஆனாலும், "நாம் இந்த தளத்தை ஆறாயவும், அறிந்துக்கொள்ளவும், பகிர்ந்துக்கொள்ளவும் மாத்திரமே பயன்ப்படுத்துவது நல்லது, பிறரை சபிக்க வேண்டாம், தளத்தின் மரியாதையை காத்துக்கொள்ளவும்"