kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தாவீது ராஜாவின் 'கிரியைகள்'???


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
தாவீது ராஜாவின் 'கிரியைகள்'???


...தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான். மத்1:6
இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாறு என்று ஆரம்பிக்கும் மத்தேயு சுவிஷேசத்தில் இப்படி கூறப்பட்டுள்ளது. ஒருவேளை தாவீது ராஜா யோக்கியனாக இருந்திருந்தால் நமக்கு 'நீதிமொழிகள்' எழுத சாலமோனோ அவ‌ரது வம்சாவழியில் வந்த இயேசுகிறிஸ்துவோ கிடைத்திருக்க மாட்டார்களோ?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

மத்தேயு 3:9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தாவீதோ சாலொமோனோ யார் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி; தீர்க்கதரிசன அறிவிப்புபடி, ஆபிரகாமின் சந்ததியாக கிறிஸ்து நிச்சயமாக வந்திருப்பார்.

நீதிமொழிகள் புத்தகம் கிடைத்தாலென்ன, கிடையாமற்போனாலென்ன? உங்களுக்குத்தான் இந்த ஒரு வசனம் போதுமே!!

1 தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

இவ்வசனத்தை நீங்கள் புரிந்துகொண்ட உங்கள் கருத்துப்படி, நீதிமொழிகள், மலைப்பிரசங்கம், நிருபங்கள், நியாயப்பிரமாணம் போன்ற எதிலும் கூறப்பட்ட போதனைகளின்படி ஒருவன் நடந்தாலும் நடவாவிட்டாலும், அவனுக்கு நித்தியஜீவன கொடுப்பதற்கு தேவன் ஏற்பாடு செய்துவிடுவார் என்றிருக்கும்போது, நீதிமொழிகளும் தேவையில்லை, பிரசங்கியும் தேவையில்லை.


-- Edited by anbu57 on Thursday 19th of November 2009 08:55:10 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அன்பு அவர்களே! மீண்டும் மீண்டும் கிருபையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமலேயே விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். கிருபை என்பது கன்டிஷன் இல்லாமல் தரப்படுவது. அதற்காக யார் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இல்லை. சுயநீதி, நம்முடைய நீதியெல்லாம் அழுக்கும், கந்தையுமாயிருக்கிறது. நாம் ஆயிரம்தான் பிரயாசப்பட்டாலும் தேவன் எதிர்பார்க்கும் 100% மார்க் வாங்க முடியாது. அதனால்தான் 'என்னில் இருக்கும் பாவமே அப்படிச் செய்ய வைக்கிறது' என்று அப்.பவுல் தாழ்மையாகக் கூறுகிறார். நீங்கள் சொல்லும் 'நல்ல கிரியைகள்' மூலம் முக்தி அடைய உலகத்தின் எல்லா மதங்களும் போதிக்கின்றன என்பதை நினைவில் கொள்க!



இயேசு கிறிஸ்து 'உலக இரட்சகர்' ஆகவே அவர் உலகை இரட்சி‍ப்பார். Christ is the Saviour of the World so He Will Save The World.


நீங்கள் உங்கள் பணியைச் செவ்வையாகச் செய்யுங்கள். ஆனாலும் தேவசித்தம் முழுமையாக நிறைவேறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கத்தானே போகிறோம். யாரும் இப்போது 'இரண்டாம் மரணமாகிய' அக்கினிக் கடலுக்கு தகுதியாகவில்லை.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard