kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நற்செய்தி!!

Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நற்செய்தி!!

நற்செய்தி என்றால் என்ன? மனிதர்கள் என்றென்றும் வாழவே முடியாது என்கிற போதனையா? மற்ற மார்கங்களை காட்டிலும் பைபிள் நமக்கு எப்படி பட்ட நற்செய்தியை தறுகிறது என்று விவாதிப்போம். இந்த நற்செய்தி மனிதன் உண்டு பன்னினதா அல்லது தேவனிடத்திலிருந்து வந்ததா என்பதிலும் தெளிவாக இருப்போம்.

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

Moderator

Status: Offline
Posts: 1735
Date:

என்ன நற்செய்தி என்றவுடன் எல்லாரும் ஒதுங்கி விட்டீர்களே. அவ்வுளவு "அலர்ஜியான" தலைப்பா? இன்று மேடைக்கு மேடை "அழிவு; அக்கினி" என்று "நற்செய்தி" சொல்லி வரும் கூட்டம் பெருகி கொண்டே போகிறது.

வேதத்தை புறட்டி எங்கெல்லாம் அழிவு என்றும் அக்கினி என்றும் வசனங்கள் உண்டோ, அவை எல்லாம் "தேவ சாயலில்" படைக்கபட்ட மனிதனுக்கு உண்டான இடம் என்று "நற்செய்தி" சொல்லி வருகிறார்கள்!!

பிசாசின் கிரியைகளை அழிக்கவே மனுஷக்குமாரன் வந்தார் என்று வேதம் சொன்னாலும், இல்லை இல்லை மனிதர் கூட்ட்த்தை அழிக்கவே இயேசு கிறிஸ்து வருகிறார் எனும் "நற்செய்தி" முழக்கம் எப்பக்கத்திலும் கேட்க தான் செய்கிறது.

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

Senior Member

Status: Offline
Posts: 165
Date:

"இந்த ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் ஓர் நற்செய்தி. நமது ஊரில் நோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு  இலவசமாக வயித்தியம் பார்க்க புதியதாக ஒரு மருத்துவர் வந்துள்ளார். யார் (பாவம் என்னும்) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களோ அவர்கள் வந்து மருத்துவம் பார்த்து உடனடி குணம் பெறலாம் எந்த கட்டணமும் கிடையாது எல்லாம் இலவசம்"

இதுதான் எல்லோருக்கும் சொல்லப்பட்ட நற்ச்செய்தி!

ஒருவர் வீட்டில் அமர்ந்துகொண்டு மருத்துவரிடம் வர மறுக்கிறார் ஆகினும் மிகுந்த இரக்கமுள்ள மருத்துவர், அவர் வீட்டுக்கு சென்று கதவை தட்டுகிறார் (இதோ வாசல்படியில் நின்று கதவை தட்டுகிறேன்) ஆகினும் அவன் எழுதுவந்து கதவை திறந்து சுகமடைய விருப்பமில்லாமல் இருந்தான்.  என் ஆவி மனிதனின் ஆவியோடு போராடுவதில்லை என்ற வார்த்தைக்க்கு ஏற்ப, அவர் அவனுடன் போராட விருப்பமின்றி திரும்பி சென்றுவிட்டார்.

நற்செய்தி சொல்லப்பட்டது எல்லோருக்கும்தான் ஆனால் அதை ஏற்க்க விரும்பாதவர்கள் யாரையும் தேவன் கட்டாயபடுத்துவதில்லை.       

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com

Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இந்த நற்செய்தி எல்லார் மேலும் பெய்யும் மழையை போன்றது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நனைந்தே தீர வேண்டும். சிலர் விரும்பி நனைவார்கள், பலர் வேறு வழியின்றி நனைவார்கள்.

இந்த நற்செய்தி எல்லார் மேலும் விழும் வெயிலை போன்றது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வெயில் உரைக்கும்.

மாம்ச‌மான‌ யாவ‌ர் மேலும் ஆவியை ஊற்றும் கால‌ம் வ‌ருகிற‌து.

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

நீங்களே ஒரு அருமையான உதாரணத்தை எடுத்து தருகிறீர்கள்!
 
மழையும் வெயிலும் எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருக்கிறது! ஆனால் மழையில் நனைய விரும்பாதவர்கள் குடைபிடித்து சென்றும் வெயிலில் போக விரும்பாதவர்கள் ஏசி காரிலும் சென்றும் இறைவனின் அந்த கொடையை ஏற்க்க மறுத்து விடுகின்றனர். 

மழையில் வர விரும்பாதவருக்கு வீட்டுக்குள் சென்று மழை பெய்வதில்லை வெயிலில் அலையை விரும்பாதவர்களுக்கு காருக்குள் சென்று வெயில் அடிப்பதில்லை அதுபோன்றதுதான் நற்செய்தியும்!

நற்செய்தி எல்லோருக்கும்தான் ஆனால் அதை வேண்டாம் என்று ஒதுக்குபவர்களிடம் தேவன் கட்டாயப்படுத்தி திணிப்பதில்லை!

கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற;

என்று கெஞ்சுவார்

என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.

என்று சொல்லி தாமதம் பண்ணி பிறகு

என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்

இதுதான் நடக்கும். அழைப்பின் குரலை அலட்சியம் செய்தால் அழிவுதான் என்று வேதம் பல இடங்களில் போதிக்கிறது!

அப்போஸ்தலர் 13:41 அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.
 
II பேதுரு 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும்

அசட்டை பண்ணுகிறவர்கள் அப்படியே அழிந்துபோவதில்லை நியாயம் தீர்க்கப்பட்டு அழிந்துபோவார்கள் என்று வேதம் தான் சொல்கிறது நான் அல்ல! என்னை பொறுத்தவரை எல்லோரும் தப்பிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com

Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

RAAJ wrote:

"இந்த ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் ஓர் நற்செய்தி. நமது ஊரில் நோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு  இலவசமாக வயித்தியம் பார்க்க புதியதாக ஒரு மருத்துவர் வந்துள்ளார். யார் (பாவம் என்னும்) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களோ அவர்கள் வந்து மருத்துவம் பார்த்து உடனடி குணம் பெறலாம் எந்த கட்டணமும் கிடையாது எல்லாம் இலவசம்"

இதுதான் எல்லோருக்கும் சொல்லப்பட்ட நற்ச்செய்தி!

ஒருவர் வீட்டில் அமர்ந்துகொண்டு மருத்துவரிடம் வர மறுக்கிறார் ஆகினும் மிகுந்த இரக்கமுள்ள மருத்துவர், அவர் வீட்டுக்கு சென்று கதவை தட்டுகிறார் (இதோ வாசல்படியில் நின்று கதவை தட்டுகிறேன்) ஆகினும் அவன் எழுதுவந்து கதவை திறந்து சுகமடைய விருப்பமில்லாமல் இருந்தான்.  என் ஆவி மனிதனின் ஆவியோடு போராடுவதில்லை என்ற வார்த்தைக்க்கு ஏற்ப, அவர் அவனுடன் போராட விருப்பமின்றி திரும்பி சென்றுவிட்டார்.

நற்செய்தி சொல்லப்பட்டது எல்லோருக்கும்தான் ஆனால் அதை ஏற்க்க விரும்பாதவர்கள் யாரையும் தேவன் கட்டாயபடுத்துவதில்லை.       

எல்லோருக்கும் சொல்லப்படவே இல்லையே? எல்லோருக்கும் சொல்லப்பட்டதாக ஏன் பொய் சொல்கிறீர்கள்? கிறிஸ்துவுக்கு முன் 'ஒரு டாக்டர் வருவார்' என்றுதான் சொல்லப்பட்டது. டாக்டர் இருக்கிறார் இப்படி ஒரு வைத்தியம் இருக்கிறது என்று தெரியாமலேயே கோடா கோடி நோயாளிகள் செத்தே விட்டார்களே? அவர்களுக்கு என்ன நற்செய்தியோ?

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சத்தத்தையே காணோமே?

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்

Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:
டாக்டர் இருக்கிறார் இப்படி ஒரு வைத்தியம் இருக்கிறது என்று தெரியாமலேயே கோடா கோடி நோயாளிகள் செத்தே விட்டார்களே? அவர்களுக்கு என்ன நற்செய்தியோ?

ஆம் அவர்களுக்கும் தான்! செத்துபோன யாருமே நீங்கள் நினைப்பதுபோல்  அப்படியே மண்ணோடு மண்ணாக போய்விடவில்லை!
 
என்னை பொறுத்தவரை இறந்தவர்களும் கூட,  எப்பொழுது  இயேசு பிறப்பார் என்று ஏக்கத்தில்தான் பாதாளத்தில்  காத்திருந்தனர். அவர்களுக்கும் இயேசுவின் பிறப்பு நற்செய்திதான்.  எந்த ஒரு நம்பிக்கையும் அற்ற நிலையில் பாதாளத்தில்  இருந்த அவர்களுக்கு இயேசுவின் பிறப்பு அவர்களை நியாயதீர்ப்புக்கு நேராக நடத்தி செல்வதாக இருக்கிறது!
 
I பேதுரு 3:19 அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
20. அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்

ஆம்! இயேசு நோவா காலத்தில் மரித்த ஆவிகளுக்கே  போய் பிரசங்கித்துவிட்டார் எனவே  அவர் யாராருக்கு என்னென்ன வழியில் சொல்லவேண்டுமோ அதை சரியாக சொல்லிவிடுவார்.  நாம் அதைப்பற்றி கவலைப்படாமல் நம்மைப்பற்றி கவலைப்படுவது நல்லது!       

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com

Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ராஜ் எழுதுகிறார்:
"என்னை பொறுத்தவரை இறந்தவர்களும் கூட,  எப்பொழுது  இயேசு பிறப்பார் என்று ஏக்கத்தில்தான் பாதாளத்தில்  காத்திருந்தனர்."

புரியவில்லை!! பிற‌ப்பார் என்றால் பால‌க‌னாக‌வா?

மீண்டும் ராஜ்:
"இயேசு நோவா காலத்தில் மரித்த ஆவிகளுக்கே  போய் பிரசங்கித்துவிட்டார் எனவே  அவர் யாராருக்கு என்னென்ன வழியில் சொல்லவேண்டுமோ அதை சரியாக சொல்லிவிடுவார்."

நோவா கால‌த்தில் ம‌ரித்த‌ ஆவிக‌ள்(!)க்கு மாத்திர‌ம் தான் பிர‌ச‌ங்கித்த‌தாக் போட்டிருக்கிற‌து. ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு?? மேலும் ம‌ரித்த‌ ஆவிக‌ளுக்கு தான் பிர‌ச‌ங்கித்தார் என்கிற‌து வேத‌ம்.

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ராஜ் எழுதுகிறார்
//1பேதுரு 3:19 அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

20. அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்

ஆம்! இயேசு நோவா காலத்தில் மரித்த ஆவிகளுக்கே  போய் பிரசங்கித்துவிட்டார் எனவே  அவர் யாராருக்கு என்னென்ன வழியில் சொல்லவேண்டுமோ அதை சரியாக சொல்லிவிடுவார்.  நாம் அதைப்பற்றி கவலைப்படாமல் நம்மைப்பற்றி கவலைப்படுவது நல்லது!  //   
 
அவ‌ர்தான் யாராருக்கு என்னென்ன‌ வ‌ழியில் சொல்ல‌வேண்டுமோ சொல்லிவிடுவாரே (ம‌ரித்தால்கூட‌) பின்ன‌ர் நீங்க‌ள் ஏன் வ‌ரிந்துக‌ட்டிக்கொண்டு சொல்ல‌ச் சொல்கிறீர்க‌ள்?

ராஜ்,  வேதத்தில் ஒன்றையும் கூட்டக்கூடாது என்று வேதமே போதிக்கிறது, நீங்கள் மீறுகிறீர்கள். நோவாகாலத்தில் 'மரித்த' ஆவிகளுக்கு என்று உங்கள் கற்பனை குதிரையை ஓடவிட்டிருக்கிறீர்கள். இதற்குத்தான் வேதத்தை தெளிவாக ஆராயவேண்டும் என்பது. "காவலிலுள்ள ஆவிகள்", "கீழ்ப்படியாமல் போன ஆவிகள்" என்றுதான் உள்ளதே அன்றி 'மரித்த' ஆவிகள் என்று இலலவே இல்லை. இந்த‌ 'ஆவிக‌ள்' பாவ‌ஞ்செய்த‌ தூத‌ர்க‌ள் ஆவார்க‌ள் 2பேது2:4.

அவ‌ர்க‌ள் கீழ்ப்ப‌டியாம‌ல் போன மரியாத ஆவி ரூபிக‌ள் ஆகும். ம‌ரித்த‌ என்றால் இல்லாம‌ல் போன‌ என்றுதான் அர்த்த‌ம். உங்க‌ள் இஷ்ட‌த்திற்கு வேத‌த்தை புர‌ட்ட‌ வேண்டாம். எதோ ஒரே ஒரு மொழிபெய‌ர்ப்பை மாத்திர‌ம் சார்ந்து இருந்தால் இதுதான் பிர‌ச்ச‌னை. ம‌ற்ற‌ த‌மிழ் மொழிபெய‌ர்ப்புக‌ளையும் வாசித்த‌றிக‌!

-- Edited by soulsolution on Saturday 28th of November 2009 12:03:08 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard