மல்கியா 3:16 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்படிருக்கிறது.
நாம் நேரில் பேசிக்கொள்ளாவிட்டாலும், இத்தளத்தின் மூலம் பேசுவதால் நம் பெயர்களும் இந்த ஞாபகப் புஸ்தகத்தில் எழுதப்படும் என நம்புகிறேன். அந்த வாய்ப்பைத் தந்த தள நிர்வார்களுக்கு நன்றி.
தள நிர்வாகிகள் தங்களின் விசுவாசத்தை மற்றொரு பகுதியில் பதித்துள்ளனர். அது அவர்களின் தனிப்பட்ட விசுவாசம் என்பதால் அதில் யாரும் குறிக்கிட முடியாது. அவர்களின் விவாதங்கள், அவர்களின் விசுவாசத்தைச் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்பது ஆச்சரியமல்ல. இது சம்பந்தமாக ஒரேயொரு ஆலோசனையை முன்வைக்க விரும்புகிறேன். இப்பகுதியில் இதை எழுதலாமா என்பது திட்டமாகத் தெரியவில்லை. இப்பதிவு தளத்தாரின் சுதந்தரத்தில் குறிக்கிடுவதாக இருந்தால், இதை நீக்கிவிட முழுமையாகச் சம்மதிக்கிறேன்.
வேதாகமம் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை, நன்மை செய்பவர்களுக்கு பரிசையும் தீமை செய்பவர்களுக்கு ஆக்கினையும் கொடுப்பதைக் குறித்து திட்டமாகக் கூறுகின்றன. தீமை செய்பவர்களுக்கு ஆக்கினை கிடைத்தாலும், அவர்கள் புடமிடப்பட்டு, நித்தியஜீவன் எனும் பரிசைப் பெறுவதற்கு தகுதியாக்கப்படுவார்கள் என்பது தளத்தாரின் விசுவாசமாயுள்ளது. இந்த விசுவாசத்தின் அடிப்படையில அவர்கள் விவாதம் செய்ய அவர்களுக்கு முழு உரிமையும் சுதந்தரமும் உள்ளது.
ஆனாலும், தீமை செய்பவர்கள் புடமிடப்படுகையில் அது வேதனைக்குரியதாகத்தான் (சரீரத்தில் இல்லாவிடினும், மனதளவில்) இருக்கும் என்பதற்கு மல்கியா 3:2 ஆதாரமாயுள்ளது. (வண்ணாருடைய சவுக்காரம், வேதனையைத் தரும்தானே?).
எனவே, தள நிர்வாகிகளின் விசுவாசப்படி அனைவரும் நித்தியஜீவனைப் பெறுவதாக இருந்தாலும், அதற்கு முன்னதாக அவர்கள் சில வேதனைகளை சந்திக்கவேண்டியதும் இருக்குமென்பதால், அதைக் குறித்தும் சொல்லி எச்சரிப்பது நல்லது என நான் கருதுகிறேன்.
இல்லாவிடில், தளத்தைப் பார்வையுடுவோரில் பலர் மிகவும் நிர்வாசரமாயிருந்து, மல்கியா 3:2 கூறுகிற வேதனைகளை அவர்கள் பெறுவதற்கு, தள நிர்வாகிகள் காரணமாகிவிடுவார்கள் எனக் கருதுகிறேன்.
மற்றபடி, தளத்தினுள் விவாதிக்கப்படும் பல விவாதங்கள், வேதாகமத்தை அதிகமாகத் தியானிப்பதற்கு தூண்டுபவைகளாக உள்ளன என்பது நிச்சயம்.
இல்லாவிடில், தளத்தைப் பார்வையுடுவோரில் பலர் மிகவும் நிர்வாசரமாயிருந்து, மல்கியா 3:2 கூறுகிற வேதனைகளை அவர்கள் பெறுவதற்கு, தள நிர்வாகிகள் காரணமாகிவிடுவார்கள் எனக் கருதுகிறேன்.
சகோதரரே,
இந்தத் தளத்தைப் பார்தது ஒருவர் துணிகரமாக பாவம் செய்ய எத்தனப்படுவார்கள் என்றால் அவர்களிடத்தில் உண்மையான மனந்திரும்புதல் இல்லை என்றுதான் அர்த்தம். தண்டனைக்குப் பயந்து கீழ்ப்படிவது உண்மையான மனந்திரும்புதலே அல்ல. உளப்பூர்வமாக தேவ அன்பினிமித்தம் கீழ்ப்படிவதே தேவனுக்குப் பிரியம். தங்கள் பதிவுகளுக்கு நன்றி!
bereans wrote: //இதை எழுதுவதில் எனக்கு சற்று வருத்தம் தான், இருந்தாலும் நான் இதை எழுதியே ஆக வேண்டும் என்று எனக்குள் தோன்றியதால் எழுதுகிறேன்.
சில நாட்களாக நம் தளத்தில் பல தனிப்பட்ட தாக்குதல்கள் நடந்ததால், தளத்தின் தன்மை பாதிக்கப்பட்டது என்கிற என்னம் உருவாகியிருக்கிறது. இதை அடுத்து, தள அன்பரின் வேண்டுகோளுக்கு இனங்கி ஒரு அன்பரை தற்காலீக நீக்கம் செய்ய வேண்டியாதாகிற்று. யாரையும் நீக்கும் என்னம் இன்னும் எனக்கு இல்லை, ஆனால் தள அன்பரின் வேண்டுகோளுக்கு இனங்கி இந்த முடிவுக்கு வந்தேன். //
தளநிர்வாகி என்ற முறையில் தாங்கள் எடுத்த நடவடிக்கைக்காக தாங்கள் சற்றும் வருந்தவேண்டியதில்லை. இந்நடிவடிக்கை நிச்சயம் அவசியமானதே.
ஒரு கிறிஸ்தவ தளத்தின் தரத்தைக் காப்பதில் தளத்தில் பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் பங்குமுள்ளது. அவற்றை உணராமல் ஒருசிலர் பதிவுசெய்கையில், தளநிர்வாகி தலையிடுவது முற்றிலும் நியாயமானதே!
தளத்தில் பதிவு செய்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து, இம்மாதிரி நடவடிக்கைகள் மீண்டும் நேராதபடி தவிர்க்க பொதுவான வேண்டுகோள் விடுக்கிறேன்.
"அன்பு " அண்ணன் அவர்களுக்கு இதை கிறிஸ்தவ தளம் என்று சொல்லவேண்டாம்; ஏனெனில் கிறிஸ்தவர்களின் தரம் "சில்சாம்" போன்றவர்களின் எழுத்துக்களில் தெரிந்துவிட்டதே..!
நாமும் கூட மோசடியான ஊழியர்களை விமர்சிக்காமல் சரியான ஊழியர்களை அடையாளம் காட்டலாமே; எதையெல்லாம் செய்யக்கூடாது, என்பதைவிட எதையெல்லாம் செய்யலாம் என்பது எளிதல்லவா..?
மேலும் முதல் நூற்றாண்டு சபை அமைப்பை மீண்டும் உருவாக்குவது இயலாத காரியம் என்றே தோன்றுவதால் அத்துடன் தற்போதிருக்கும் எந்த (உபதேச) ஊழியத்தையுமே ஒப்பிடமுடியாது என்றே எண்ணுகிறேன்; நான் சொல்வது சரியா என்று தெரியவில்லை; ஆனாலும் எனது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இதனைக் கூறுகிறேன்..!
இன்னொரு தளத்தில் எழுதும் ருக்மணி அக்கா போன்றவர்கள் இங்கே வந்து எழுதினால் நன்றாயிருக்கும்.
glady wrote:நாமும் கூட மோசடியான ஊழியர்களை விமர்சிக்காமல் சரியான ஊழியர்களை அடையாளம் காட்டலாமே; எதையெல்லாம் செய்யக்கூடாது, என்பதைவிட எதையெல்லாம் செய்யலாம் என்பது எளிதல்லவா..?
நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும், கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு, கள்ளப்போதகர்களுக்கு, கள்ளசகோதரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஜாக்கிரதையாக இருங்கள், கடிந்துகொண்டு புத்திசொல்லுங்கள் என்றெல்லாம் வேதம் கூறுவதால் அதையும் சில சமயங்களில் செய்யவேண்டியதாகிவிடுகிறது. "மாயக்காரராகிய பரிசேயரே உங்களுக்கு ஐயோ" என்றுதானே தாளமாட்டாமல் கர்த்தரும் கடிந்து கொண்டார். இம்னேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள் என்று அப்.பவுலும் பேர் சொல்லித்தான் எச்சரிக்கிறார். மற்றவர்களுக்கு அடையாளம் காட்ட சிலவேளைகளில் இப்படிப்பட்ட காரியங்கள் செய்யவேண்டி வருகிறது. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதில்லை. நாங்கள் உபதேச மாறுபாடுகளூக்குத்தான் எதிர்த்து நிற்கிறோம். தனிப்பட்ட நபர்களை அல்ல. சத்தியத்தைச் சொன்னதனால் சத்துருவாகும் மேன்மை எங்களுக்குக் கிடைத்ததை நினைத்து தேவனைத் துதிக்கிறோம்.
"மாயக்காரராகிய பரிசேயரே உங்களுக்கு ஐயோ" என்றுதானே தாளமாட்டாமல் கர்த்தரும் கடிந்து கொண்டார்.
ஏன் அப்படி கண்டிந்து கொண்டார் என்பதையும் சற்று விளக்கமாக கூற வேண்டும் சகோகதரரே!
பாதி பாதி வசனங்களை மாத்திரம் எடுத்துகொண்டு அதற்க்கு விளக்கமளித்தால் உண்மையை ஒருநாளும் அறிய முடியாது!
மத்தேயு 23:14மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்குஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
மத்தேயு 23:15மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்குஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
இதில் ஆக்கினை என்று எதுவுமில்லை மற்றும் நரகம் என்று எதுவுமில்லை என்று போதிக்கிறீர்கள் பிறகு யார் எப்படி போனால் என்ன பயம்? எப்படியும் இருந்துவிட்டு போகட்டும் அதான் எல்லோருக்கும் மீட்பு உண்டே!
இயேசு மிக தெளிவாக அவைகளையும் செய்யவேண்டும் இவைகளையும் விடாதிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் ஆனால் நீங்கள் எதையுமே செய்யவேண்டாம் ஆனால் எல்லோருக்கும் மீட்பு உண்டு என்கிறீர்கள்.
இங்கு யாரையும் யாரும் கடிந்துகொள்ள வேண்டிய தேவையே இல்லையே! என்னதான் நாம் உருண்டு பிரண்டாலும் தேவன் என்ன நினைத்திருக்கிறாரோ அதுதான் நடக்க போகிறது. பிறகு நீதி, நேர்மை, மனம்திரும்புதல், சுவிசேஷம் சொல்லுதல், ஜெபம் செய்தல் எல்லாமே உங்களை பொறுத்தவரை வெறும் வெட்டி வேலை அல்லவா?
ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை எல்லாம் தேவனே செய்வார் ஆனால் நாங்கள்தான் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்.
வேதம் சொல்லும் ஒன்றையும் செய்யாத நீங்கள் தெரிந்துகோள்ளப்பட்டவர்கள் என்றால் உலகில் உள்ள எல்லோருமே தெரிந்துகோள்ளப்பட்டவர்களே!
மத்தேயு 23:14 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
இதில் ஆக்கினை என்று எதுவுமில்லை மற்றும் நரகம் என்று எதுவுமில்லை என்று போதிக்கிறீர்கள் பிறகு யார் எப்படி போனால் என்ன பயம்? எப்படியும் இருந்துவிட்டு போகட்டும் அதான் எல்லோருக்கும் மீட்பு உண்டே!
இயேசு மிக தெளிவாக அவைகளையும் செய்யவேண்டும் இவைகளையும் விடாதிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் ஆனால் நீங்கள் எதையுமே செய்யவேண்டாம் ஆனால் எல்லோருக்கும் மீட்பு உண்டு என்கிறீர்கள். //
உண்மை சகோதரரே,
நாங்கள் கடிந்து கொள்வது பரிசேயத்தனத்தைத்தான், நீங்களும் மாயக்காரராகிய வேதபாரகராக, பரிசேயராக இருந்தால் அவைகளையும் செய்யுங்கள் இவைகளையும் விட்டுவிடாதிருங்கள்! இயேசு பரிசேயனுக்குச் சொன்னதை எல்லாருக்கும் சொன்னார் என்று எடுத்துக்கொண்டால் என்ன செய்வது?
மீண்டும் 'நரகம்', 'ஆக்கினை' போன்ற உங்களுக்குப் பிடித்த பதங்களை பதிக்கிறீர்கள், அதென்ன இரட்டிப்பான நரகம், நரகத்தில் 1000 டிகிரி இருந்தால் இரட்டிப்பான நரகத்தில் 2000 டிகிரி வெப்பம் இருக்குமா? மூலபாக்ஷையில் 'நரகம்' இல்லை 'கல்லறை'தான் உண்டு என்று ஆயிரம் முறை சொன்னாலும் மீண்டும் மீண்டும் அங்கே போகிறீர்களே. 'பாவத்தின் சம்பளம் மரணம்' மட்டுமே. 'ஆக்கினை' என்பதற்கு நீங்களே தமிழர்த்தம் சொல்லுங்களேன். வழக்கத்திலேயே இல்லாத சொற்களை இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சாதுர்யமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பாதாளம் என்றால் என்ன, பாதாள இரயில் என்ன அக்கினியிலா ஓடுகிறது? பாதாளச் சாக்கடையில் என்ன அக்கினிக் குழம்பு ஓடுகிறதா?
ஐயா, எங்கள் விசுவாசம் பகுதியில் விளக்கமாக வேத வசனங்களின் படி நாங்கள் எதை விசுவாசிக்கிறோம் என்று தெளிவாக பதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விசுவாசிப்பது ஏதோ உங்களைப்போன்ற ஒருசில சூப்பர் பரிசுத்தவான்கள் மட்டும் பரலோகம் போவார்கள், மற்ற பில்லியன் கணக்கான 'பாவிகள்' நரகம் என்ற நித்திய வாதைக்குள் கோடானு கோடி வருடங்கள் முடிவே இல்லாமல் அக்கினியில் இருப்பார்கள். இதைப் போய் 'நற்செய்தி' என்று சொல்கிறீர்கள். குழப்பத்தின் உச்சத்தில் இருந்தாலும் நான் பிடித்த முயலுக்கு மூணுகால் என்கிறீர்களே?
தயவு செய்து நான் பதித்துள்ள கோணலான நாவுகள் என்ற பதிவில் உங்கள் வாதங்களை வையுங்கள். ஆம், இல்லை இரண்டையுமே ஆராயுங்கள். எல்லாரையும் நரகத்தில் தள்ளும் ஒரு கொடிய தேவனை சித்தரித்து தேவதூஷணம் செய்யாதீர்கள்.
எல்லாருக்கும் மீட்பு உண்டு என்று நாங்கள் சொல்லவில்லை. வேதம் சொல்கிறது. எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என்பதுதான் அந்த மீட்பு. கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்தார், அவர் உலகத்தை இரட்சிக்க வந்தவர் ஆகவே உலகத்தை இரட்சிப்பார். 'சபை' யையும் உலகத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
-- Edited by soulsolution on Wednesday 6th of January 2010 09:20:29 AM
இரட்சிக்கப்பட்டோம் என்று சொல்லுகிறார்களே, எதிலிருந்து என்று கேட்டால், பாவத்திலிருந்து என்கிறார்கள். அப்படி என்றால் ஏன் மரிக்க வேண்டும். அதான் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு விட்டார்களே, பாவத்தின் சம்பளம் தானே மரணம். அதிலிருந்து இரட்சிக்கப்பட்ட இவர்கள் ஏன் மரிக்க வேண்டும். இப்படி கேட்டால் மரணத்திற்கு புது விளக்கம் கொடுத்து, அது ஆவிக்குறிய மரணம், இது சரீரத்திற்குறிய மரணம் என்று குழப்புவார்கள்.
பரிகசிக்கப்பட வேண்டிய கடைசி சத்துரு மரணம் என்றும், மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று பவுல் எதை குறித்து தான் எழுதுகிறார் என்றாவது விளக்க முடியுமா?
பாதாளத்திலே (கல்லறையில்) மரணத்தால் குவிந்து கிடந்தவர்கள் எல்லாரும் இயேசு கிறிஸ்துவின் உன்னதமான பலியினால் உயிர்த்தெழுவார்கள் என்பது தான் அந்த மெய்யான இரட்சிப்பு என்று "கிறிஸ்தவர்கள்" எப்பொழுது புரிந்துக்கொள்வார்களோ?
எல்லாருக்கும் மீட்பு உண்டு என்பதால் "நான்" முக்கியத்துவம் இழந்துவிடுகிறேனே, ஏனென்றால் தேவன் என்னைக்கொண்டுதான் இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றிவருகிறார் என்றுதானெ நானும் நினைத்து மற்றவர்களுக்கும் அதைப் பறைசாற்றி சுயமேன்மையைத் தேடுகிறேன்.
"தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்படும் ஊழியர்" என்ற பட்டத்தைத்தானே அதிகம் வாஞ்சிக்கிறார்கள். எல்லாருக்கும் இரட்சிப்பு என்றால் அதனால் சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு அதெப்படி கடைசியில் வருபவனுக்கும் அதே கூலி என்று கேட்கும் நிலைதானே உள்ளது. நான் கஷ்டப்பட்டு 'ஊழியம்' செய்வேனாம் ஆனால் எல்லாருக்கும் இரட்சிப்பாம் என்ன அநியாயம், அப்ப நான் என்ன லூஸா? என்றுதான் ஆதங்கப்படவேண்டியுள்ளது.
கிருபை என்பதே தகுதியே இல்லாதவர்களுக்குக் கொடுக்கப்படுவதுதான். அந்தக் கிருபைதான் சத்தியமாக, கிறிஸ்துவாக பூமியில் தோன்றி நிறைவேறியது.
Grace : the freely given, unmerited favor and love of God.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட சங்கீதம் 103 பூமிக்கு வரப்போகும் ராஜ்ஜியத்தில்தான் பாடப்படும் என்பதை நினைவு கொள்க. இன்னும் அவர் நம் அக்கிரமங்களை மன்னித்து நம் நோய்களையெல்லாம் குணமாக்கவில்லை, நம் பிராணனை அழிவுக்கு விலக்கவில்லை...., கழுகுக்குச் சமானமாய் நம் வயது திரும்ப வாலவயதுபோலாகவேயில்லை இன்னும் கிழவி, கிழவர்களாகி கல்லறையை நோக்கி வேகமாக பயணிக்கிறோம்.
17.கர்த்தருக்கு பயப்படும் பயம் புதிய பூமியில் எல்லோருக்கும் வந்துவிடுமாகையால் அதன்பின் கிருபை அநாதியாய் என்னென்றைக்கும் இருக்கும்.
இதை வாசிங்க,
ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி... தீத்து2:11
glady wrote: //"அன்பு " அண்ணன் அவர்களுக்கு இதை கிறிஸ்தவ தளம் என்று சொல்லவேண்டாம்; ஏனெனில் கிறிஸ்தவர்களின் தரம் "சில்சாம்" போன்றவர்களின் எழுத்துக்களில் தெரிந்துவிட்டதே..!//
சகோதரியின் கருத்துக்கு நன்றி.
கிறிஸ்தவன் என தன்னைச் சொல்லிக்கொள்வதால் மட்டும் ஒருவன் கிறிஸ்தவனாகிவிட முடியாது. கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலிப்பவன்தான் கிறிஸ்தவன். கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலிக்காத ஒருசிலரின் எழுத்துக்களால் கிறிஸ்தவர்களின் தரம் தீர்மானமாவதில்லை. இயேசு தெரிந்தெடுத்த பன்னிரு சீஷரில் ஒருவனான யூதாஸுக்குள்கூட சாத்தான் புகுந்தான். எனவே இயேசுவின் சீஷர்கள் அத்தனை பேரும் யூதாஸைப் போன்றவர்களே எனக் கூறிவிட முடியுமா?
இத்தளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிக்கிற அனைவருமே, தங்கள் கருத்துக்களைப் பதிப்பதோடு கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், தரக்குறைவான பதிவுகளைத் தவிர்த்திருக்க முடியும். எப்படியோ, நடந்தது நடந்துவிட்டது. இனியாவது நாம் அனைவரும் நம் பதிவுகளில் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தால், இத்தளம் மெய்யாகவே கிறிஸ்தவ தளம் என விளங்கப்படும்.
சகோ.soulsolution-க்கு ஓர் ஆலோசனை கூற விரும்புகிறேன்.
தாங்கள் வேதத்தை நன்றாக தியானித்து பல கருத்துக்களைக் கூறுகிறீர்கள், அவற்றில் பல பயனுள்ளவைகளாகவும் இருக்கின்றன. ஆனால் தங்கள் கருத்துக்களின் மீதுள்ள வைராக்கியத்தால் நிதானத்தை சற்று இழந்துவிடுகிறீர்கள். மேலும் தங்கள் எழுத்துக்களில் பரியாசமும் அடிக்கடி தலைகாட்டுகிறது. விவாதத்திற்கு தேவையற்ற விமர்சனங்களையும் அடிக்கடி கூறுகிறீர்கள். உதாரணமாக, இதே பகுதியில் சகோ.ராஜ் அவர்களின் ஒரு பதிவை பின்வருமாறு விமர்சித்துள்ளீர்கள்.
//மீண்டும் 'நரகம்', 'ஆக்கினை' போன்ற உங்களுக்குப் பிடித்த பதங்களை பதிக்கிறீர்கள், அதென்ன இரட்டிப்பான நரகம், நரகத்தில் 1000 டிகிரி இருந்தால் இரட்டிப்பான நரகத்தில் 2000 டிகிரி வெப்பம் இருக்குமா?//
வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளைத்தான் சகோ.ராஜ் குறிப்பிட்டுள்ளார். அதற்காக, அவ்வார்த்தைகள் அவருக்குப் பிடித்தமானவை என நீங்கள் விமர்சிப்பது நியாயமா? உங்களைப் போலவே அவரும் உங்கள் பதிவை விமர்சித்து, அந்த விமர்சனங்கள் வளர இடங்கொடுத்தால், இறுதியில் ஒருவரையொருவர் தரக்குறைவாகத் தாக்குவதில் போய்தான் முடியும்.
நரகம், ஆக்கினை பற்றி சகோ.ராஜ் எழுதினால், அவ்வார்த்தைகள் எவ்வாறு தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை நிதானமாக பொறுமையுடன் எடுத்துக்கூறி உங்கள் விவாதத்தை வையுங்கள்.
இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் என இயேசு கூறியதாகத்தானே வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது? அதைத்தானே சகோ.ராஜ் குறிப்பிட்டுள்ளார்? அதற்காக, இரட்டிப்பான நரகம் என்றால், அங்கு 2000 டிகிரி வெப்பம் இருக்குமா எனும் பரியாசம் கலந்த கேள்வி அவசியந்தானா? இயேசு சொன்ன கூற்றிற்கான சரியான விளக்கத்தைக் கூறி உங்கள் விவாதத்தை வையுங்கள். அதைவிடுத்து பரியாசமும் கேலியும் செய்வதை தவிருங்கள்.
ஒருசில வாரங்களுக்குமுன் இத்தளத்தில் நான் அதிகமான பதிவுகளைக் கொடுத்துவந்தபோது, எனது பதிவுகளையும் நீங்கள் தேவையற்ற விதமாக பரியாசங்கலந்து விமர்சித்தீர்கள். எனவேதான் இத்தளத்தை விட்டு நான் ஒதுங்க வேண்டியதானது. நம் கருத்துக்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் வேதாகமக் கருத்து ஒன்றாகத்தான் இருக்கமுடியும். அந்த மெய்யான கருத்தை அடைவதுதான் நமது நோக்கமாக இருக்கவேண்டுமேயொழிய நாம் புரிந்துகொண்ட கருத்தை எப்படியாவது நிலைநாட்டுவதாக இருக்கக் கூடாது. நாம் புரிந்துகொண்டவற்றை நம் விவாதத்தில் வைப்போம். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விவாதிப்போம். ஒருவேளை நமக்குள் கருத்தொற்றுமை கிடைக்காமற்போனால்கூட பரவாயில்லை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் புரிந்துகொள்வோம்.
மற்றபடி நாம் ஒருவரையொருவர் மட்டந்தட்டுவதால் பயன் எதுவுமில்லை. இவ்வாலோசனையை நல்லமுறையில் (good sense) எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். வெளிப்படையான கடிந்து கொள்தல் நல்லது என்ற வேதவசனத்தின்படி எனது ஆலோசனையை வழங்கியுள்ளேன். அதைப் புரிந்துகொண்டு செயல்படும்படி வேண்டுகிறேன்.
உங்களது மேலான ஆலோசனைக்கும், அன்புக்கும் நன்றி! சில சமயங்களில் நான் அவ்வாறு எழுதியதை மறுக்கவில்லை. அதற்குக் காரணம் நான் நம்பும் வேத சத்தியத்தில் உள்ள வைராக்கியமே. மற்றபடி மற்றவர் மனதைப் புண்படுத்தும் எண்ணத்தால் அல்ல. உபதேச வேறுபாடுகள் பற்றி வாதிடும்போது சில சொற்களை உபயோகிக்க வேண்டியதாகிவிடுகிறது. யாரையும் அது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? நான் ஒரளவு வேத அடிப்படை சத்தியங்களைத் தெரிந்திருந்தாலும் அதைக் கையாளும் பக்குவம் இன்னும் வரவில்லை. முயற்சிக்கிறேன். "மீண்டும்" தளத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. தேவன் உங்களை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் நிரப்புவாராக!
(நரகத்துக்கு விளக்கம் கொடுத்த சகோ.ராஜ் இரட்டிப்பான நரகத்துக்கு என்ன விளக்கம் தருவார் என்று அவரது வாயைக் கிளரத்தான் அப்படி எழுதினேன். சத்தியமாக வசனங்களை பரிகாசம் செய்யும் எண்ணத்தில் அல்ல. வசனங்களை ஆராயாமல் நேரடி அர்த்தம் எடுத்தால் வரும் கொள்கை விபரீதங்களை விளக்கவே அப்படி எழுதினேன். இரட்டிப்பான நரகம் என்றால் முதலில் மரித்தவுடன் 'ஆத்துமா' போகும் பாதாளம், இரண்டாவது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பின் பிறகு செல்லப்போகும் அக்கினிக்கடல் என்ற நரகம், இப்படி இருக்குமோ?)
bereans wrote: //சகோ அன்பு அவர்களின் ஆலோசனை மிகவும் தெளிவாகவும், பிரயோஜனமாகவும் இருக்கிறது. நாம் இந்த தளத்தில் அதை பின் பற்றுவோமே!!//
தளநிர்வாகி அவர்கள், எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டு வழிமொழிந்தமைக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். சகோ.soulsolution-ம் எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டு செயல்படுத்த முன்வந்தமைக்காக நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து தேவன் தாமே இத்தளத்தை தமது ஆலோசனையின்படி வழிநடத்துவராக.
"வானத்தில் இந்த இயந்திரம் பறக்கும்" என்ற போது ரைட் சகோதரர்கள் எள்ளி நகையாடப்பட்டார்கள், உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவுக்கு நேர்ந்தது அனைவருக்கும் தெரியும், ஏன் இயேசுகிறிஸ்துவையே கொலைசெய்யக் காரணம் அவர் யூதர்கள் 'ஏற்றுக்கொண்ட' பிரபலமான சத்தியங்களைப் போதிக்காமல் அதற்கு நேர்மாறாகப் போதித்தார் என்பதால்தான்.
ஆகவே சத்தியம் மிகப் பிரபலமாக, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. இதை இன்னொரு விதத்தில் சொன்னால் 'பிரபலமான' சத்தியங்கள், வெகுஜனத்தால் அங்கீகரிக்கப்பட்ட போதனைகள் எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்றில்லை. வெகுசிலரே அதைப் புரிந்துகொள்வார்கள், புரிந்துகொள்ள வேண்டும் என்பது தேவ சித்தம். மூன்றரைவருட அற்புத அடையாளத்துடனான ஊழியத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஏறத்தாழ 120பேர் மட்டுமே.
"ஆகையால் அவர்கள் போய் பின்னிட்டு விழுந்து நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்கு கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும்... இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்".ஏசா 28:13.
" ... அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்" 2தெச2:10..13, தானி7:25
வேதத்தில் 'ரகசியம்' என்ற பதம் ஒரு சில முறைகள் வருகிறது, படிக்கும் எல்லோருக்கும், அதாவது முழு உலகுக்கும் அந்த 'ரகசியம்' சொல்லப்பட்டிருந்தால் அந்த 'ரகசியம்' கேலிக்கூத்தாகிவிடும்.
சத்தியத்தில் அன்புகூறாதவர்களுக்கு சத்தியம் என்றைக்குமே புரிந்துகொள்ள முடியாத் புதிராகிவிடுகிறது. தேடுங்கள் கிடைக்கும் என்பது சத்தியத்தை வாஞ்சித்து ஆராய்ந்து தேடுகிறவர்களுக்கும் பொருந்தும்.
வேத்த்தில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டது. அவற்றின் சமூக, அறிவியல், பண்பாடு, மொழிநடை போன்றவற்றை தெளிவாக அறியாமல் வேத வசனங்களுக்குப் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் வேதத்தின் ஒவ்வொரு புத்தகத்தையும் யார் எழுதியது? யாருக்கு எழுதப்பட்டது? எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டது? எந்தக் காலத்தில் எழுதப்பட்டது என்பதை அறிய வேண்டியது மிக அவசியம். மேலும் வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனேக பழமொழிகள், அடைமொழிகள் யாவும் அவைகளுக்கே உரிய பண்பாட்டு பாரம்பரிய பின்னணிகளைக் கொண்டவை. அதுமட்டுமல்ல வேதத்தில் எபிரேய, கிரேக்க மொழிகள்தவிர ஆங்காங்கே அராமிய, பாரசீக வார்த்தைகளும் கலந்து வருகின்றன. உதாரணத்துக்கு "பரதீசு" என்பது பாரசீக வார்த்தையாகும். அதன் அர்த்தம் 'தோட்டம்', அல்லது 'பூங்கா' (நந்தவனம், சோலை) என்பதாகும். ஆனால் பிற்காலத்தில் பிற மதங்களின் சாயங்கள் பூசப்பட்டு அர்த்தங்கள் மாறிவிட்டன.
இதுபோன்ற அனேக விஷயங்களைக் கருத்தில் கொண்டு வேதத்தை ஆராய்ந்தால் மட்டுமே குழப்பமற்ற நிலைக்கு வர இயலும்.
எனவே தள அன்பர்கள் முதலில் "மரணம்" மற்றும் "ஆத்துமா" இந்த இரண்டு விஷயங்களை வேத சத்தியத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து ஒரு தீர்க்கமான, அதன்பின் மாற்ற இயலாத ஒரு 'முடிவுக்கு' வந்தால்தான் மற்ற காரியங்களை நாம் விவாதிக்க முடியும். இல்லாத பட்சம் இங்கு வாதம் செய்வதே வீண். ஏனென்றால் எல்லா துருபதேசத்துக்கும் அடிப்படையே இந்த இரண்டைப் பற்றிய அறியாமைதான்.
சத்தியம் சொல்லுவதினால் சத்துருவாகினேனா என்று பவுல் சொல்லுகிறார். சத்தியத்தை சொன்னதினால் இயேசு கிறிஸ்து மரத்தில் ஏற்றப்பட்டார், பேதுரு பவுலுக்கு இரத்தாசாட்சி மரணம். ஆனால் இன்றோ அந்த சத்தியம் எல்லாம் போய் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் சத்தியங்கள் வந்து விட்டது. அது தான் மனிதர்களின் போதனைகள். சபை தலைவருக்கு நல்லது என்று பட்டது கோட்பாடுகளாக மாறியது. இன்று சத்தியம் (என்று நினைத்து) சொல்லும் போது நிறைய கூட்டம் கூடூகிறது. ஏனென்றால் அது செவிகளுக்கு இனிமையாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. ஆனால் சத்தியம் சொன்னதினால் சத்துரு ஆவர் வெகு சிலரே. கூட்டம் கூடம் இடங்களில் தான் சத்தியம் என்றால் இந்தியா போன்ற நாடுகளில் கோவில்களுக்கு பஞ்சமே இல்லை, எல்லா கோவில்களிலும் கூட்டம் கூடுவதை நாம் பார்க்கலாம். அது எல்லாம் சத்தியமா?
சகோ சில்சாம் எழுதியது போல் வெளிப்படுத்தப்பட்டது என்பது, சபை தலைவர்களுக்கு என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லாவிடில் ஒவ்வொரு சபையிலும் விதவிதமான சத்தியத்தை சொல்ல மாட்டார்கள்.சகோ ஆத்மா எழுதியது போல் இரகசியம் என்று ஒரு பதம் வேதத்தில் இருக்கிறதே, அதையும் ஆறாயலாமே!!
சகோ ஆத்துமா அவர்களே, மரணத்தையும் ஆத்துமாவையும் குறித்து ஒரு தனி பகுதி முழுமையாக இதற்கென்றே ஒதுக்குகிறேன். அதில் வேறு விவாதங்கள் இல்லாமல் முழுமையாக இவைகளை குறித்து மாத்திரமே விவாதிப்போம்.