kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவின் இரண்டாம் வருகை!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை!


 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பல இடங்களின் தாம் மீண்டும் வருவதாக சொல்லியிருக்கிறார், அவரின் அப்போஸ்தலர்களும் அதை உறுதிபடுத்தியிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிறதில் மாறாத நம்பிக்கை எல்லா சபை மக்கள் மத்தியிலும் இருக்கிறது, அந்த வருகை எப்படி என்பதில் வேண்டும் என்றால் மாறுப்பட்டவர்களாக நிற்பாகள்.

இங்கே நாம் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்து தெளிவாக விவாதிப்போம்.

இயேசு கிறிஸ்துவின் வருகை எப்படி பட்டதாக இருக்கும்? அவர் வரும் போது அனைவரும் காண்பார்கள் என்கிறது ஒரு வேத பகுதி, அவர் வரும் போது அனைவரும் புலம்புவார்கள், அவர் வரும் போது இந்த பூமியில் விசுவாசம் இல்லாமல் இருக்கும், அவர் திருடனை போல் வருவார், போன்ற பல விதமான காரியங்கள் வேதத்தில் இருக்கிறது.

அவ‌ரின் வ‌ருகை மூன்று நிலைக‌ள் அல்ல‌து "Phase"இல் இருக்கும் என்ப‌து தான் வேத‌ உண்மை!

1. ப‌ரோஷியா (Parousia) (வருகை) என்கிற‌ கிரேக்க‌ வார்த்தை (ம‌த். 24:3;27,37,39; 1கொரி.15:23; 1தெச். 2:19)

2.  எபிஃபெனியா (epiphaneia ) (பிர‌ச‌ன்ன‌ம்) (1திமோ 6:13; 2திமோ4:1)

3.  அப்போகாலிப‌ஸ் (apokalupsis) (வெளிப்ப‌டுத‌ல்) (1 பேது 1:13; 2 தெச‌ 1:8; 1 பேது 1:7)

இதை குறித்து இன்னும் விரிவாக‌ விவாதிப்போம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

1. பரோஷியா (Parousia) என்பது அதிகாலையில் சிவந்திருக்கும் கிழக்கு திசை மாதிரி. அதாவது, சூரியன் வந்திருக்காது, ஆனால் சூரியன் வந்துக்கொண்டிருக்கிறது என்பதை அந்த சிவந்த கிழக்கு வானம் காண்பித்து தரும். இதை யார் பார்ப்பார்கள் என்றால், அதிகாலமே எழுந்து கொள்பவார்கள் மாத்திரமே பார்க்க முடியும். அப்படியே, இயேசு கிறிஸ்து முழுமையாக‌ வெளிப்படும் முன்பு, இதோ மண‌மகன் வருகிறார் என்பதை அவரின் மனவாட்டி சபை மாத்திரமே தெரிந்துக்கொள்ளும். அதற்காக இரவெல்லாம் விழித்திருக்க வேண்டியதில்லை (முழு இரவு ஜெபம் போல்), மாறாக விழித்திருந்து, நம் கர்த்தர் தம்முடைய பரோஷியாவிற்கான காரியங்கள்கை மத்.24ல் சொல்லி போயிருப்பது நடந்தேறுகிறதா என்பதை கவணிக்கும் நிலை தான் "விழித்திருப்பதாகும்". இது தான் அவரின் வருகையின் முதல் நிலை (Phase) இந்த நிலையை திரள் கூட்டத்தில் போவோர் கூட அறிந்துக்கொள்ள மாட்டார்கள், உலகத்தாருக்கும் இந்த நிலைக்கும் சம்பந்தமே இல்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

2.  எபிஃபெனியா (epiphaneia )   இந்த நிலை சூரிய உதயமாகிய நிலையை நினைவுப்படுத்துகிறது. அதாவது காலையில் எழும்பனும் என்று விரும்புகிறவர்கள் தான், ஆனால் சில சோர்வுகளால் தூங்கி எழுந்து பார்த்தால் சூரியன் உதித்திருக்கும். ஆனால் வெயிள் இன்னும் வரவில்லை. இது யாருக்கு விளங்கும் என்றால், திரள் கூட்டத்தில் இருப்பவர்கள். அதாவது, சபையை தவறவிட்டு, நிறப்பவர்கள். பத்து கண்ணிகைகளில் இரண்டாம் ஐந்து பேர் தான் இதை உணர்வாகள். அவர்கள் மனவாட்டி ஆகும் வாய்ப்பை இழந்தாலும், பரலோக வாய்ப்பை இழக்க மாட்டார்கள்.

3.  அப்போகாலிப‌ஸ் (apokalupsis)    இந்த நிலை சூரியன் முழுவதுமா தலைக்குமேல் வந்து உச்சி வெயில் கொழுத்தும் நிலை. அதாவது, சூரியன் வந்து விட்டது என்று எல்லோரும் அறிந்துக்கொள்ளும் ஒரு நிலை. இது உலகத்தாருக்கு இயேசு கிறிஸ்து வந்துவ்ட்டார் என்று தெரியவரும் ஒரு நிலை. அதாவது முழுவதுமாக வெளிப்படுதல். எல்லோரும் புரிந்துக்கொள்வார்கள், இயேசு கிறிஸ்து வந்து விட்டார் என்று.

"மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்க்கும் பிராகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்." மத். 24:27

இங்கு மின்னல் என்று மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தாலும், நாம் அனைவரும் அறிந்ததே, மின்னல் கிழக்கிலிருந்து மேற்குவரைக்கும் மாத்திரம் இல்லை, அது எல்லா திசைகளிலும் வரும் என்று, ஆனால் சூரியன் மாத்திரமே இங்கு சொல்லப்பட்ட அந்த பிரகாசமான வெளிச்சம் என்று புறிந்துக்கொல்ள முடிகிறது. இயேசு கிறிஸ்து தன் வருகையை, இப்படியாக ஒப்பீட்டு சொல்லியிருக்கிறார்.

இன்னும் வரும்......



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

அவர் மின்னல் போல் வருவார் வசன விளக்கம் இங்கே!

சூரியன் போல்வசன விளக்கம் எங்கே !!??????????????/



மனுஷக்குமாரனாகிய இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் மகிமையோடும் தம்முடைய தூதரோடும் எக்காள சத்தத்தோடும் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வருவதை பூமியிலுள்ள சகல ஜனங்களும் காண்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. மத் 16:27; 24:30; வெளி.1:7; இதோடு “தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராதென்றும், மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசை வரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷக்குமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்” என்றும் இயேசு கிறிஸ்து கூறினார். லூக்கா 17:20-24 மழைக்கு முன்னும், மழையோடு மின்னல்கள் பளிச்பளிச்சென்று தோன்றி மிகுந்த வேகமாய் மறைந்துவிடும். சொல்லர்தப்படி இயேசுகிறிஸ்து மின்னலைப்போல் காணப்படுவார். என்றால், ஒரு நொடியில் காணப்பட்டு மறைவதாகும்;

அவரோடு கூட வரும் ஆயிரமாயிரமான எக்காளதூதர்களும், அவர்களோடு வரும் இயேசுகிறிஸ்துவும், மின்னலைப்போல பளிச் பளிச்சென்று தோன்றி மறைந்தால், உலகத்தார் யாவராலும் அவரை இயேசுகிறிஸ்து என்று எப்படிக் கண்டுக்கொள்ளக்கூடும்?

மேலும் இயேசுகிறிஸ்து தன் வாயின் பட்டயத்தோடும், வேறு சில இடங்களில் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி, இரத்தத்தால் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்து வருவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. வெளி 2:16; 19:11-14; இப்படிப்பட்ட மகிமையின் வருகையாக சொல்லப்பட்டிருந்தாலும், வேறுசில இடங்களில், “அவர் திருடனைப்போல வருகிறேன்.” என்றும் கூறுகிறார். வெளி 3:3; 16:15; 1தெச 5:4; 2பேதுரு 3:10; மேலும் திருடர்கள் மிகுந்த வெளிச்சத்தோடும் எக்காள சத்தம் ஊதிக்கொண்டும் வரமாட்டார்கள்.

தேவன் தம்முடைய மின்னல்களை வரவிட்டு தமது சத்துருக்களைச் சிதறடிக்கிறார் என்று வாசிக்கிறோம். 2சாமு.22:15; சங்.144:6; மின்னல்கள் தேவனுடைய சிங்கானத்திலிருந்து வருவதாகவும் வெளி 4:5; 8:5; 11:19; 16:18; சொல்லப்பட்டிருக்கிறது. மின்னல்கள் பூச்சக்கரத்தை பிரகாசிப்பித்தது என்றும் வாசிக்கிறோம். சங் 77:18; 97:4




Original Word: ἀστραπή, ῆς, ἡ
Part of Speech: Noun, Feminine
Transliteration: astrapé
Phonetic Spelling: (as-trap-ay')
Short Definition: a flash of lightning, brightness, luster
Definition: a flash of lightning, brightness, luster.

Word Origin
from astraptó
Definition
lightning, brightness
NASB Word Usage
flashes of lightning (4), lightning (4), rays (1).


-- Edited by Guru on Wednesday 2nd of March 2011 03:44:52 PM

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:


இயேசுவின் இரண்டாம் வருகை

யோவா.14:1-3 கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ள அனைவரும் நான் மீண்டும் வருவேன் என்று இயேசு சொன்ன வார்த்தையை விசுவாசிக்கிறோம். ஆனால் அவர் வருகையை குறித்து அவரே பேசிய சில வார்த்தைகளுக்கு தனது சுயவிளக்கங்களை போதனைகளாகவும், சத்தியங்களாகவும் போதித்து அநேக தவறான கருத்துகளை கிறிஸ்துவ மண்டலத்திலே புகுத்தி வருகிறார்கள். தனது சுயவிளக்கங்களுக்கு வேத வசனங்களையே ஆதாரமாக காட்டுவதால் எது சரி என்று பல குழப்பங்கள் நிலவுகிறது. எந்த கருத்துக்கு இணையான பல வசனங்கள் சாட்சி அளிக்கிறதோ அதுவே தேவன் நமக்கு சொல்லும் சத்தியம்.ஏசாயா.34:16;

இவ்வாறு பல குழப்பமான உபதேசங்கள் இரண்டாம் வருகையை குறித்து இருக்கும் என்றும், இந்த தவறான கருத்துகளை கேட்டு உண்மையான தேவபிள்ளைகள் அவர் வருகையின் போது அவரை எதிர் நோக்கி புறப்பட்டு போகாமல் தூங்கிவிடுவார்கள் என்றும் இயேசுவே கூறியிருக்கிறார் . மத்:25:1-3. ஆகையால் தேவ ஜனமே! சற்று விழிப்புள்ளவர்களாக இருந்து இணையான தேவ வசனங்களை சிந்திக்கலாம். ஏசா.34:16;
பொதுவாக இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து நாம் சில விஷயங்களை கற்றுஇருந்தாலும் சில கேள்விகளுக்கு சரியான பதில் கிடைப்பதில்லை. நமக்கு சில கேள்விகள் எழலாம்.

1) யாரிடம் நான் வருவேன் என்று இயேசு கூறினார்?

2) முதல் வருகையின் நோக்கம் என்ன?

3) இரண்டாம் வருகையின் நோக்கம் என்ன?

4) எவ்வாறு வருவார்? மாமிச சரீரத்திலேயா?

5) பூமிக்கு வருவாரா? எந்த இடத்தில்?

6) பரலோகத்தில் இருந்து எப்பொழுது வருவார்?

7) முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடையில் அவர் பணி என்ன?

8) அவர் வருகையில் பூமியின் ராஜாக்களை வெட்டுவாரா?

9) அவர் வருகை எந்தெந்த விதமாக சொல்லப்பட்டிருக்கிறது?

10) அவர் வருகையை எவ்வாறு அறிந்து கொள்ளுவது?

11) எந்த வருடத்தில் வருவார் என்று வேதம் கூறியிருக்கிறதா?

இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தெரிந்து கொள்ளாமல் இயேசுவின் இரண்டாம் வருகைக்குரிய காரியங்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. தேவன் வெளிப்படுத்திய இயேசுவின் இரண்டாம் வருகைக்குரிய காரியங்களை நாம் அறிந்து கொள்ள முடியாது. எனவே ஒவ்வொன்றாக நாம் அறியலாம்.

1) யாரிடம் அவர் வருவேன் என்று கூறினார்?
அப்.1:3; 1:9-15 இயேசு மறுபடியும் வருவார் என்று அப்போஸ்தலர்களிடம் தேவதூதர்கள் கூறுகிறார்கள். யோவா.14:1-3; தன்னை பின்பற்றய சீஷர்களிடம் நான் மீண்டும் வருவேன் என்று கூறினார். ஆக நான் மீண்டும் வருவேன் என்றும், நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருக்கும்படி கூட்டிக்கொண்டு செல்வேன் என்று கூறியது உலக ஜனங்களிடம் அல்ல. தன்னை பின்பற்றி தன்னை விசுவாசிக்கிற அப்போஸ்தலர்களாகிய 12 பேர்களிடமே என்பது தெளிவு.

2) முதல் வருகையின் நோக்கம் என்ன?
அநேக பதில்கள் இந்த கேள்விக்கு இருந்தாலும், அவர் முதல் வருகையின் பிரதான நோக்கம். தன்னுடைய மணவாட்டியாகிய திருச்சபையை தெரிந்து கொள்ளும் பணிக்காக. ஏனெனில் தேவன் சாத்தானை அழிப்பதற்கு உருவாக வேண்டிய ஸ்திரியின் வித்தை உருவாக்குவதற்கும், உலக ஜனங்களை ஆசீர்வதிக்கிற ஆபிரகாமின் சந்ததியை உருவாக்குவதற்கும் அவர் முதல் வருகை வரவேண்டிய கட்டாயம் இருந்தது. எபி.2:10-18.

3) 2ம் வருகையின் நோக்கம் என்ன?
1கொரி. 15:23 அவருடையவர்களாகிய தன்னுடைய சரீரமாகிய சபையை உயிர்ப்பிக்கிறதற்காகவும், அவர் இருக்கிற இடத்திற்கு மணவாட்டியை கூட்டிக்கொண்டு செல்வதற்காக மட்டுமே. யோவான்.14:1-3.


4) எவ்வாறு வருவார்? மாமிச சரீரத்திலேயா?
1பேது.3:18; அவர் மாமிசத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அப்.1:3; பிறகு 40 நாளளவும் அப்போஸ்தலருக்கு தரிசனமாகி உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். பிறகு ஆவியின் சரீரத்திலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அப்.1:9; சிந்திக்க--அப்போஸ்தலர்கள் அனைவரும் பார்க்கும்படி மாமிச சரீரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டால் தேவதூதன் வந்து மறுபடியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால மாம்ச கண்களிலே பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆவியின் சரீரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. அப்.1:9; அப்.1:11 மீண்டும் ஆவியின் சரீரத்திலே வருவார்.

ஏன் ஆவியின் சரீரத்தில் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்?
1கொரி.15:50; மாமிசமும், இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. அவர் எவ்வாறு ஆவியின் சரீரத்திலே பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாரோ அவ்விதமாகவே மீண்டும் வரும்போது ஆவியின் சரீரத்திலே வருவார். அப்.1:11; 2கொரி.5:16 நாங்கள் கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும் இனி ஒரு போதும் அவரை மாம்சத்தின்படி, அறியோம் என்று அப்.பவுல் கூறுகிறார். இயேசு கிறிஸ்து தன்னுடைய இரண்டாம் வருகையில் உலகத்தார் யாவரும் காணத்தக்கதாய் மாமிச சரீரத்தில் வரப்போவதில்லை. இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். யோவா.14:9

இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையான சரீரத்தில் வரும் போது அவருடைய திருச்சபையார் மாத்திரமே தாங்கள் மறுரூபமாக்கப்படும் சரீரத்தில் அவரைக் காண்பார்கள். 1யோவா.3:2; அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிற வண்ணமாகவே, நாம் அவரை தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.
கொலோ.3:4; நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது நீங்களும் அவரோடு கூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். பிலி.3:20-21; வெளி.1:7;

கண்கள் யாவும் அவரை காணும், குத்தினவர்களும் அவரை காண்பார்கள். இந்த வசனத்தின் காலம் இரண்டாம் வருகையின் காலம் அல்ல. ஆயிர வருட அரசாட்சியின் காலம். ஏனெனில் குத்தினவர்கள் மரித்து ஏறக்குறைய 2000 ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் மீண்டும் உயிர்த்து வரும் காலத்தில் அனைவரும் அவரை அறிந்து கொள்வார்கள் (சத்திய வசனத்தின் மூலம் பார்ப்பர்) சங்.17:15;-- நானோ நீதியினால் உமது முகத்தைத் தரிசிப்பேன். நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன் என்றபடி நிறைவேறும்.

மத்.16:27;-- மனுஷகுமாரன் தன்னுடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். யோவா.5:26;-- பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராய் இருக்கும்படி அருள் செய்திருக்கிறேன்.இயேசு பிதாவின் குணலெட்சனங்களை முக்கியமாக சாகாமை அழியாமை மரித்தபிறகு பெற்றுக் கொண்டதால் அவரை இனி அவர் இருக்கிற வண்ணமாக மாறினால் மட்டுமே மனிதன் பார்க்க முடியும். மாமிச கண்களினால் பார்க்க முடியாது. மத்.24:30-- மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகுந்த மகிமை (பிதாவின் மகிமை)யோடும்.. பூமியில் உள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள் (அறிந்து கொள்வார்கள்) காணுதல் என்ற வார்த்தை அறிந்து கொள்ளுதலை குறிக்கிறது. 1தெச. 4:16;-- தேவ எக்காளத்தோடும் வருவார் என்னும் போது பிதாவின் மகிமை பொருந்தினவராய் வருவார் என்பதினாலே மாமிச கண்களால் காண இயலாது.


5) பூமிக்கு வருவாரா? எந்த இடத்தில் வருவார்?
பிதாவின் மகிமையாகிய சாகாமை அழியாமை பெற்றதினால் அவர் பூமிக்கு வர முடியாது. ஏனெனில் divine nature – தெய்வீக சுபாவத்தை மரித்த பிறகு பெற்று கொண்டார். இதினால் வேத வசனம் இவ்வாறு சாட்சியிருக்கிறது. 1தெச.4:17; மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் (பூமிக்கு வரமாட்டர்) எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்.

6) பரலோகத்தில் இருந்து எப்பொழுது வருவார்?
அப்.3:21; உலகத்தோற்ற முதல் தேவன் தம்முடைய தீர்க்கதரிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீரும் காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்.3:21; பொது மொழிப்பெயர்ப்பு :- விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை விண்ணுலகில் இருக்க வேண்டும். (யாவும் சீர்படுத்தப்படும் காலம்--------1000 வருட அரசாட்சியின் காலம்)

1000 வருட அரசாட்சி காலம் வரும் வரை இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். இந்த காலத்தை வேதத்தில் அப்.3:19---இளைப்பாறுதலின் காலம் என்றும்; அப்.3:21--- தீர்க்கதரிசிகள் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறி தீரும் காலம் என்றும்; மத்.19:28--- மறுஜென்ம காலம் என்றும்; அப்.3:21--- பொதுமொழி பெயர்ப்பில் சீர்படுத்தப்படும் காலம் என்றும் கூறப்பட்டுள்ளது.

7) முதல் வருகைக்கும் 2ம் வருகைக்கும் இடையில் அவர் பணி என்ன?
மத்.28:18; சகல அதிகாரமும் பெற்றிருக்கிறார். மத்.28:20 உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களோடிருக்கிறேன். அதாவது பரமேறியவுடன் பிதாவின் வலதுபாரிசத்தில் உயர்த்தப்பட்டு, சகல அதிகாரத்துடன் உலகம் முடியுமட்டுமாக நம்மை பாதுகாத்து வழி நடத்துகிறார்.

1. நமக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்யும் வேலை
2. தன் உடன் சகோதரரை தெரிந்தெடுக்கும் வேலை
3. தன் உடன் சகோதரரை பிரித்தெடுக்கும் வேலை
4. தன் உடன் சகோதரரை பரிசுத்தப்படுத்தும் வேலை
5. தன் உடன் சகோதரருக்கு பெலன் தருதல் பணி
6. உடன் சகோதரரின் விசுவாசத்தை பரீசித்து பார்க்கும் பணி
7. விசுவாசத்தை தொடக்கவும், முடிக்கவும் செய்யும் வேலை
8. சகோதரர்கள் பலி செலுத்த செய்து பூரணபடுத்தும் வேலை
இந்த பணியை ஒரு போதகராகவும், ஒரு குருவாகவும், ஒரு மேய்ப்பனாகவும், ஒரு சிநேகிதனாகவும், ஒரு மணவாளனாகவும் இருந்து செய்கிறார்.


எபி.5:9 தாம் பூரணமான பின்பு, தமக்கு கீழ்படிகிற யாவருக்கும் நித்திய இரட்சிப்பை அடைவதற்கு இவரே காணரம். இதினாலே இவரைப்பற்றி வேதம் இவ்வாறு கூறுகிறது.

தலையாயிருந்து சபையாகிய சரீரத்திற்கு கட்டளை கொடுக்கும் பணி கணவனாயிருந்து சபையாகிய மனைவியை அன்பு செய்தல் பணி. பரிந்து பேசும் மத்தியஸ்தராயிருந்து சபைக்கு உதவி செய்தல். மேய்ப்பர் & கண்காணியாயிருந்து கண்காணிப்பு பணி செய்தல். பிரதான ஆசாரியராய் இருந்து ஆசாரியருக்கு உதவி செய்தல். எபி.3:1 எபே.2:20-22----- ஆலயம் கட்டும்பணிசெய்தல்.
மொத்தத்தில் சபையை பலியின் ஜீவியத்தில் நடத்தி வருகிறார்.

8) அவர் வருகையில் ராஜாக்களை வெட்டுவாரா?
1000 வருடம் மட்டுமே அவர் நியாயம் தீர்க்கும் உரிமை கொடுக்கப்பட்டது. அதற்கு முன்போ அல்லது பின்போ கொடுக்கப்படவில்லை.

உலக முடியும் போது ராஜாக்களை சங்கரிப்பது நம்முடைய பிதாவாகிய தேவனே. இதை வேதம் யெகோவாவின் நாள்; யெகோவாவின் கோபத்தின் நாள்; யேகோவா நியாயம் தீர்க்கும் நாள்; யேகோவா தேவன் செய்யும் யாகம்; யேகோவா பாபிலோனை பழிவாங்கும் நாள்; யேகோவா நியாயாதிபதியாக இருந்து யேகோவாவே தேவன் என்று நிரூபிப்பதற்காக யேகோவா ஜாதிகளோடே நடத்தும் யுத்தத்தின் உக்கிரநாள் என்று கூறுகிறது.

ஆதி முதல் அந்தம் வரை யேகோவாவே நியாயாதிபதி 1000 வருடம் மட்டுமே நியாயத்தீர்ப்பு செய்வதற்கு இயேசுவுக்கு தேவன் கொடுத்த காலபகுதி என வேதம் கூறுகிறது.

9) அவர் வருகை எந்தெந்த விதமாக சொல்லப்பட்டு இருக்கிறது?

1) திருடனை போல :
நாழிகை –-- time (மணி) தெரியாது. மத்.24:42-44
நாள் - -------- day தெரியாது. மத்.25:!3
மத்.24:36------ பிதாவுக்கு தவிர வேறே யாருக்கும் எப்பொழுது வருவார் என்று தெரியாததால் நினையாத நாழிகையிலே அவர் வருவதால் விழித்திருங்கள் என்று கூறுகிறார்.

2) மின்னல் போல : இயேசுவின் இரண்டாம் வருகை நீண்டகாலபகுதியாக இருக்காது. முதல் வருகையின் காலபகுதி 33 ½ வருடம் போல ஒரு காலபகுதி இல்லை. ஏனெனில் மத்.24:26-27 அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களேயானால் நம்பாதேயுங்கள். வருகை மின்னலை போல இமை பொழுதிலே நடக்கும். வானமண்டலத்திலேயே நிகழும். 1 தெச.4:17; 1கொரி. 15:51.

10) அவர் வருகையை எவ்வாறு அறிந்து கொள்வது?
மத்.24ஆம் அதிகாரத்திலும், வேதாகமங்களிலும் வருகைக்கு அடையாளங்களை மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறதேயில்லாமல் நாள்களைப் பற்றி சொல்லப்படவில்லை. only sin prophecy ; not time prophecy

11) எந்த வருடத்தில் வருவார் என்று வேதம் கூறுகிறது?
பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நாட்களும் வருஷங்களும் ஆதாம் முதல் இயேசு பிறப்பு வரை உள்ள வருஷங்களை தெரிந்து கொள்ளவும், தலைமுறைகளை அறிந்து கொள்ளவே அல்லாமல் வேறே எதற்கும் அல்ல. மத்.1:17; யோவா 5:39

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட கால கணக்குகளையும் தம்முடைய ஜூலியன் வருஷங்களையும் கூட்டி இயேசுவின் வருகையின் வருஷத்தை கூறிய அனைவரும் பொய்யான வருஷங்களையே கூறினர் என்று நம்முடைய நாட்களில் தெளிவாகிறது.

ஏனெனில் நாம் கூட்டிய இந்த ஜூலியன் காலண்டர் வருஷம் கிரகோரி போப் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட வருஷம்.தேவ ஆவியினால் ஏவப்பட்டு ஏற்படுத்திய சரியான வருஷம் அல்ல. வேதம் மட்டுமே தேவ ஆவியினால் அருளப்பட்டது.

இந்த போப்புகளைப் பற்றி வேதம் தானி.7:25-ன் படி காலங்களை மாற்றுவான் என்று கூறுகிறது. எனவே கிரகோரி போப் என்பவர் ஏற்படுத்திய கி.மு. கி.பி வருடங்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு ஏற்படுத்திய சரியான காலண்டர் அல்ல. வேதம் மட்டுமே தேவ ஆவியினால் அருளப்பட்டது. எனவே வேதம் கூறும் காலங்களையும் போப் கூறிய வருஷங்களையும் கூட்டி கணக்கிட்டால் தவறான வருஷங்களே வரும்.

எனவே பிலி.3:20ன் படி நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது. அங்கிருந்து இரட்சகராகிய கிறிஸ்து வர எதிர்பார்த்து கொண்டிருப்போமாக. ஆமென்!++

கர்த்தர் நல்லவர்  ------



அப்போஸ்தலர்களாகிய 120 என்பதை 12 என்று திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது!!



-- Edited by bereans on Thursday 10th of March 2011 11:15:13 PM

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மத்தேயு 24:27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

மின்னல் என்பதற்கு கிரேக்க வார்த்தையும் அதன் விளக்கமும் கொடுத்து இருக்கிறீர்கள் குரு அவர்களே!!

Original Word: ἀστραπή, ῆς, ἡ
Part of Speech: Noun, Feminine
Transliteration: astrapé
Phonetic Spelling: (as-trap-ay')
Short Definition: a flash of lightning, brightness, luster
Definition: a flash of lightning, brightness, luster.

Word Origin
from astraptó
Definition
lightning, brightness
NASB Word Usage
flashes of lightning (4), lightning (4), rays (1).

ஆனாலும் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் என்று திசைகளை குறித்து எழுதியிருப்பதால் இது மின்னல் தானா என்று யோசிக்க வேண்டுமே!! மின்னல் என்றவுடன் அவரது வருகை அல்லது அவரது பிரசன்னம் மின்னல் போன்று மிகவும் சொற்பமான நேரத்திற்கு மாத்திரமே இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா!! ஆனால் கிழக்கு மேற்கு என்பது திசைகளை மாத்திரம் அல்ல, தூரத்தையும் குறிக்கும், காலத்தையும் குறிக்கும், நேரத்தையும் குறிக்கும்!! மேலும் மின்னலுக்கு திசைகள் அல்ல, அது எந்த திசையிலும் உருவாகி எந்த திசைக்கும் செல்லும்!! அப்படி என்றால் கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது என்ன என்று பார்த்தோமென்றால் சூரியன் என்பது அனைவரும் சொல்ல கூடும்!!

கிறிஸ்துவின் வருகையை சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு வரும் பிரகாசிப்பது போன்றது என்பதில் அர்த்தம் விளங்குகிறதே!! எப்படியும் இனி மாம்சத்தில் இருப்பவர்கள் ஆவியான கிறிஸ்துவை நேரடியான கண்கள் மூலமாக காண சாத்தியம் இல்லை (ஒரு சில கள்ள தரிசனக்காரர்கள் தவிர)!! ஆனால் அவரின் வருகையின் வெளிச்சத்தை உணர்ந்துக்கொள்ளுவதையே சூரியனின் கிழக்கு முதல் மேற்கு வரைக்கும் உள்ள பிரகாசமாக ஒப்பிட பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்!!

கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்கள் மூலமாக கிறிஸ்துவுடையவர்கள் (கிறிஸ்தவர்கள் அல்ல) அறிந்துக்கொள்வார்கள் (சூரியன் வரும் முன்னமே கிழக்கு சிவந்திருப்பதை வைத்து விடிந்துவிட்டது என்று தெர்நிதுக்கொள்வோர் போல்)

அடுத்து அடுத்து வரிசையாக கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்கள் வெளியரங்கமாக தெரியும்படி (புரிந்துக்கொள்ளுதல்) நடப்பதற்கு காலம் செல்லும், அதுவே கிழக்கிலிருந்து மேற்கு வரையுல்ள சூரியன்!! மின்னல் என்றால் அது உடனே தோன்றி உடனே மறைந்து விடுமே, கிறிஸ்துவின் வருகையும் அப்படியே என்று எதை வைத்து சொல்ல வருகிறீர்கள்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard