இங்கு தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க தகுதியற்றவர்களாக செய்யும் பாவபட்டியலில் சொல்லப்படும் பல பாவசெயல்கள் நியாபிரமாணத்தில் இருந்து வந்ததுதான். இதை கொரிந்தியருக்கு மட்டும்தான் எழுதினார் என்று கூறப்போகிறீர்களா அல்லது உங்களுக்கும் உண்டா? ஒவ்வொரு நிரூபமும் இன்னாருக்கு இன்னாருக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது
இதெல்லாம் அந்தந்த பட்டணத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் எழுதப்பட்டதா?
பவுல் கூறும் நியாயபிரமாணம் ஒழிந்தது என்ற கருத்து பலியிடுதல் ஆசாரிப்பு கூடாரம் அமைத்தலை பற்றியதை மட்டுமே மற்றபடி எந்த கட்டளைகளையோ நீதிநியாயங்களையோ அவர் ஒதுக்கவில்லை. பவுல் சரியாகத்தான் எழுதியுள்ளார்! ஆனால் பாவத்தை விட்டொழிக்க மனதில்லாத மனிதர்கள் அவர் வசனங்கள தங்களுக்கு ஏற்றார்போல புரட்டி சொல்லும் சாக்குபோக்குதான் தேவனுடைய கற்பனைகள் வேண்டாம் என்று தள்ளுவது.
ஓசியா 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். மல்கியா 2:9 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
என்று கர்த்தர் புலம்புவது, வேதத்தை கைகொள்ளாமல் அதைவிட்டு விலகும் மனிதர்களை பார்த்துதான்.
கர்த்தரின் வாத்தையையும் தள்ளுகிறீர்கள் இயேசுவின் வார்த்தைகளையும் தள்ளுகிறீர்கள் அது எங்களுக்கு சொல்லவில்ல என்கிறீர்கள் நல்லது! நிரூபமும் உங்களுக்கு அல்ல, அது அந்தந்த சபைக்கு எழுதப்பட்டது அதைமட்டும் ஏன் உங்களுக்கு என்று எடுத்துகோள்கிறீர்கள்?
சகோதரரே, வாதம் நியாயப்பிரமாணத்தைப் பற்றியது மட்டுமே. நான் ஒன்றும் இந்தப்பாவங்களைச் செய்யச்சொல்லவில்லை. நியாயப்பிரமாணத்திற்கும் மேலான ஆவியின் பிரமாணம், அன்பின் பிரமாணம் உள்ளது. பவுலும் அதைத்தான் கடைபிடிக்கச் சொல்கிறார். இப்பதிவின் கடைசிக் கேள்விக்கு நேர்மையான பதில் எதிர்பார்க்கிறேன்.
கலாத்தியர் 3:1புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்துக்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்?...
25.விசுவாசம் வந்தபிறகு நாம் உபாத்திக்கு(நியாயப்பிரமாணத்துக்கு) கீழானவர்களல்லவே.
5:14உன்னிடத்தில் நீ அன்புகூறுவது போலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக, என்ற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;....ஆகையால் போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது....ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. கொலோ2:14,16. எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்,
6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது. 7:4நீங்கள்.... நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். எபி7:18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. 19. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை...
யாக்2:10 எப்படியெனில் ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைகொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
ஒன்றை மாத்திரம் திறந்த மனதுடன் சொல்லுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ளுகிறீர்களா? ஆம், அல்லது இல்லை என்றுமட்டும் கூறவும். வேறெந்த பதிலும் அநாவசியம்.
-- Edited by soulsolution on Wednesday 4th of November 2009 06:07:50 PM
ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
சகோதரரே, நான் நியாயபிரமாணத்துக்கு கீழிராமல் கிருபைக்கு கீழ் இருப்பதால் ஒரு கட்டளையில் தவறினாலும் அந்த பாவம் என்னை மேற்கொள்ள முடியாது!
ஆனால் ரோமர் 6:15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.
என்றும் பவுல் கூறுகிறார் அத்தோடு
எபிரெயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,
அதாவது நாம் இயேசுவை விசுவாசித்து சத்தியத்தை அறிந்தபிறகு மனபூர்வமாக பாவம் செய்தால் அங்கு செலுத்த வேறொரு பலி இல்லை எனவே அறிந்து பாவம் செய்வது கூடாது
பாவம் என்றால் என்ன?
பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை;
I யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
எனவே மனதார தெரிந்து பாவம் எதுவென்று சொல்லும் நியாயபிரமாணத்தை மீறினால் அது நிச்சயம் குற்றம்.
என்னை பொறுத்தவரை என் மனதுக்கு தெரிந்து துணிந்து எந்த கட்டளையையும் மீறுவதில்லை.
-- Edited by RAAJ on Friday 6th of November 2009 01:23:03 PM
நியாயப்பிரமாணம் என்றால் 10 கட்டளைகள் மட்டும் அல்ல.
பழைய ஏற்பாட்டில் கடைபிடிக்கச் சொல்லியிருக்கும் எல்லாமே அதில் அடங்கும்.
உபாகமம் 14:26 'அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தரின் சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும்(பாஸ்டர்) புசித்து சந்தோஷப்படுவீர்களாக" உட்பட,
மீண்டும் கேட்கிறேன். ஆம், இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ளுகிறீர்களா? ஆம், அல்லது இல்லை என்றுமட்டும் கூறவும். வேறெந்த பதிலும் அநாவசியம்.
-- Edited by soulsolution on Friday 6th of November 2009 05:53:38 PM
soulsolution wrote:மீண்டும் கேட்கிறேன். ஆம், இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ளுகிறீர்களா? ஆம், அல்லது இல்லை என்றுமட்டும் கூறவும். வேறெந்த பதிலும் அநாவசியம்.
-- Edited by soulsolution on Friday 6th of November 2009 05:53:38 PM
மேலே வசன ஆதாரத்துடன் தெளிவான விளக்கம் கொடுத்த பிறகும் "ஆம்" "இல்லை" என்று மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டால் அதற்க்கு என்ன பதில் சொல்ல முடியும்? இங்கு வாதிடுவது எல்லாமே எனக்கு அனாவாஸ்யம் போலத்தான் தெரிகிறது.
நான் கொடுத்திருக்கும் விளக்கத்தில் என்ன தவறு என்பதை மட்டும் வசன ஆதாரத்துடன் விளக்குங்கள்.
ஒருவரும் வெறும் நியாயபிரமாணத்தை மட்டும் வைத்து கிறிஸ்த்துவின் இரத்தம் இல்லாமல் நீதிமானாக முடியாது! என்றுதான் வசனம் சொல்கிறதே தவிர, நீங்கள் புரிந்திருப்பதுபோல் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டால் எந்த கர்ப்பனையையும் கைகொள்ளவேண்டிய தேவையில்லை என்ற கருத்தில் வசனம் சொல்லப்படவில்லை. அப்படியென்றால் பவுல் "விபச்சரகாரன் தேவனுடய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை" என்று கூறமாட்டார். ஏனெனில் விபச்சாரம் பாவம் என்று நியயபிரமானம்தான் சொல்கிறது.
நான் கிறிஸ்த்துவின் இரத்தத்தால் நீதிமானாக்கப்பட்டேன், பெற்ற நீதியை பேணி காக்கவும்,
எபிரெயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இல்லாத காரணத்தாலும்
II பேதுரு 2:20 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
என்றும் வேதம் எச்சரிப்பதாலும் இனி பழைய பாவங்களை செய்யகூடாது என்று அறிந்துகொண்டேன்.
பாவம் எதுவென்று நியாயபிரமாணம் சொல்வதால் அதை நான் கைக்கொண்டு, பெற்ற நீதியில் நிலைத்திருக்கு விரும்புகிறேன். ஒருவேளை நான் நியாயபிரமாணத்தை மீறி ஒரு சிறிய தவறு செய்துவிட்டாலும் நான் கிருபைக்கு கீழ்பட்டுஇருப்பதால் அந்த தவறு என்னை ஒன்றும் செய்ய முடியாது.
புதிய உடன்படிக்கை என்றால் என்னவென்று அதைத்தான் வேதம் சொல்கிறது
31. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
மற்றபடி புதிய உடன்படிக்கை என்பது இயேசுவை ஏற்றுக்கொண்டால் நியாயம் என்னவென்று சொல்லும் தேவனின் கட்டளைகள், நீதிநியாயங்களை மீறுவதற்கு கிடைத்த லைசென்ஸ் என்று நீங்கள் கருதினால் அதற்க்கு தேவன் பொறுப்பல்ல!
-- Edited by RAAJ on Tuesday 10th of November 2009 08:52:30 AM
ராஜ் எழுதுகிறார்//புதிய உடன்படிக்கை என்றால் என்னவென்று அதைத்தான் வேதம் சொல்கிறது 31. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். மற்றபடி புதிய உடன்படிக்கை என்பது இயேசுவை ஏற்றுக்கொண்டால் நியாயம் என்னவென்று சொல்லும் தேவனின் கட்டளைகள், நீதிநியாயங்களை மீறுவதற்கு கிடைத்த லைசென்ஸ் என்று நீங்கள் கருதினால் அதற்க்கு தேவன் பொறுப்பல்ல!//
மேற்கண்ட வசனங்கள் இந்த யுகத்துக்கல்ல என்பதை நினைவில் கொள்க. உங்கள் உள்ளத்தில் என் ஆவிவை வைத்து... என்பது, மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்பனவெல்லாம் 'நிறைவேற'ப்போவது 1000வருட கிறிஸ்துவின் ஆட்சியில் மட்டுமேயன்றி இப்போது இல்லவே இல்லை.
புது உடன்படிக்கை கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தில் வருவதாகும். நீதி நியாயங்களை மீற அது ஒரு லைசென்ஸ் என்று ஒருபோதும் நான் சொல்லவில்லை. நம்முடைய 'நீதியெல்லாம்' தேவனுக்கு முன் அழுக்கும் கந்தையுமாயிருக்கிறது. அவர் எதிர்பார்ப்பது அவரைப் போல பரிசுத்தம், வெறும் நீதி நியாயங்கள் இல்லை. நீங்கள் சொல்லும் நீதி நியாயங்களை உங்களை விட நேர்த்தியாகக் கடைபிடிக்கும் ஏராளமானோர் எல்லா மதத்திலும் உண்டு என்று அறிக. விசுவாசத்தினால் உண்டாகும் நீதியைக்தான் புதிய ஏற்பாடு போதிக்கிறது. அது மற்றவர்களுக்காக தன் ஜீவனையும் கொடுக்க எப்போதும் தயாராக இருப்பதாகும்.
மீண்டும் மழுப்புகிறீர்கள். ஆம் அல்லது இல்லை என்று ஒரேவரியில் பதில் சொல்லலாமே. தைரியம் இருந்தால்...
மீண்டும் மழுப்புகிறீர்கள். ஆம் அல்லது இல்லை என்று ஒரேவரியில் பதில் சொல்லலாமே. தைரியம் இருந்தால்...
சகோதரரே, சீனியர் சிட்டிசனுக்கு வருமான வரி உண்டா இல்லையா என்று கேள்வி கேட்டு, "ஆம் இல்லை" என்று மட்டும் பதில் சொல்லுங்கள் என்றால் சரியான பதில் சொல்ல முடியாது.
உண்டு ஆனால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும்.
சட்டங்கள் எல்லாமே அபபடிபட்டதுதான்! ஒரு ஷரத்தை சொல்லி அதன்பின்னர் அதற்கான விதிவிலக்கு சொல்லப்பட்டிருக்கும்.
கொலையாளிக்கு மரணதண்டனை உண்டா இல்லையா என்று கேட்டால், உண்டு ஆனால் அவன் திட்டமிட்டு அந்த கொலையை செய்யவில்லை என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்
பஸ்காவை குறித்த நாளில் கட்டாயம் ஆசாரிக்க வேண்டும் ஆனால் அவன் வெளியூர் போயிருந்தால் வேறொரு நாளில் ஆசாரிக்கலாம்.
நான் அதற்க்கு ஏற்றாற்போல் விளக்கமாக சொல்லிவிட்டேன்!அடம்பித்துகொண்டு "உண்டா இல்லையா" என்று மட்டும் சொல் என்றால் அதற்க்கு பதில் இல்லை!
bereans wrote: //அதான் இரட்சிப்பு இருக்குது, ஆனால் இருக்காது போன்ற பதில்களா?//
ஆம், சகோதரரே! ஆனால் பதில்கள் சகோ.ராஜ் - இடமிருந்துமல்ல, என்னிடமிருந்துமல்ல, வேதாகமத்திலிருந்து.
யாக்கோபு 2:14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
விசுவாசத்தோடு கிரியையும் இருந்தால் இரட்சிப்பு இருக்குது, கிரியைகள் இல்லாவிட்டால் இரட்சிப்பு இருக்காது.
2 தெச. 2:9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
சத்தியத்தின்மேலுள்ள அன்பை அங்கிகரிப்பவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, சத்தியத்தின்மேலுள்ள அன்பை அங்கிகரியாதவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது.
பிலிப்பியர் 1:27,28 நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
சுவிசேஷத்தை எதிர்ப்பவர்களால் மருளாதிருப்பவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, சுவிசேஷத்தை எதிர்த்து கெட்டுப்போகிறவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது.
ஜீவனுக்கேதுவாக இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, மரணத்துக்கேதுவாக கெட்டுப்போகிறவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது.
1 கொரி. 15:2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
பவுல் பிரசங்கித்தபிரகாரமாய் கைக்கொண்டவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, பவுல் பிரசங்கித்தபிரகாரமாய் கைக்கொள்ளாதவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது. (விசுமாசமெல்லாம் வீண்)
சிலுவையைப் பற்றிய உபதேசம் தேவபெலனாயிருப்பவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, சிலுவையைப் பற்றிய உபதேசம் பைத்தியமாயிருப்பவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது.
அப். 2:47 இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
இரட்சிக்கப்பட்டு கர்த்தரால் சபையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, கர்த்தரால் சபையில் சேர்க்கப்படாதவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது.
மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
இயேசுவினிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவனுக்கு இரட்சிப்பு இருக்குது, இயேசுவினிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழக்க விரும்பாதவனுக்கு இரட்சிப்பு இருக்காது.
எபிரெயர் 5:9,10 தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
இயேசுவுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு நித்திய இரட்சிப்பு இருக்குது, இயேசுவுக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு நித்திய இரட்சிப்பு இருக்காது.
பிலிப்பியர் 2:12 எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
தங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுகிறவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, தங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படாதவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது.
1 தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
ஆம், தேவன் சித்தமுள்ளவராகத்தான் இருக்கிறார். ஆனால், இரட்சிப்படும்படிக்கு தங்களுக்கு நியமிக்கப்பட்ட பங்கை (மேற்கூறிய வசனங்கள் கூறுகிறபடி) நிறைவேற்றுபவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, நிறைவேற்றாதவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது.
-- Edited by anbu57 on Wednesday 18th of November 2009 07:49:02 AM
அதாவது "இருக்குது" என்பது வேதத்தில் உள்ளது ஆனால் "இருக்காது" என்பது எதிலுள்ளது?
இரவிலே சூரியன் "இருக்காது" என்றால் என்ன சூரியன் இல்லாமல் போய் விட்டது என்று தான் அர்த்தம் கொள்ளுவீர்களோ!!
"கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனூடைய ஈவு; ஒருவரும் பெருமைப்பாராட்டாதப்படிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" எபே 2:8,9.
இதுலும் இந்த கிரியைகள் என்பது நாம் தேவனின் சாயலில் இருப்பதினால் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டதினால் இந்த கிரியைகள் என்பது நம் அங்கமாக தான் இருக்கிறது. ஆக தேவன் கொடுத்தத ஈவை நினைத்து பாருங்கள், "இது உங்களால் உண்டானதல்ல; இது கிரியைகளினால் உண்டானதல்ல"
ஏனென்றால், இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களை சொல்லி ஊரை ஏமாற்றுபவர்களை காட்டிலும் அதிக நண்மைகளை தங்களின் கிரியைகளின் மூலம் வெளிப்படுத்துக்கொள்பவர்கள் நீங்கள் என்னிப்பார்ப்பதை காட்டிலும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
"இரட்சிக்கப்பட்டு கர்த்தரால் சபையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, கர்த்தரால் சபையில் சேர்க்கப்படாதவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது."
அதாவது ஆதாமிலிருந்து, யோவான் ஸ்னானகன் மட்டும் வந்தவர்கள் இனி இருக்கவே போவதில்லை என்று சொல்லுகிறீர்கள். அவர்கள் தான் கர்த்தரால் சபையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லையே. பரவயில்லை, வித்தியாசமாக தான் யோசிக்கிறீர்கள்.
bereans wrote: //அதாவது "இருக்குது" என்பது வேதத்தில் உள்ளது ஆனால் "இருக்காது" என்பது எதிலுள்ளது?//
என்ன சகோதரரே! வேதவசனங்களைச் சொல்லித்தானே அத்தனை “இருக்காது”-களையும் கூறியுள்ளேன்; அவற்றையெல்லாம் படித்துவிட்டு இப்படி கேட்டால் என்ன சொல்ல?
மற்ற வசனங்களை விடுங்கள்; யாக்கோபு 2:14-ஐ மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். கிரியைகள் இல்லாத விசுவாசம் இரட்சிக்குமா எனக் கேட்கிறாரே, அக்கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இரட்சிக்காது, ஆனால் இரட்சிக்கும் எனச் சொல்லப்போகிறீகளா? அல்லது இரட்சிக்கும், ஆனால் இரட்சிக்காது எனச் சொல்லப்போகிறீர்களா?
பதில் சொல்லும்முன், கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது என்பதை நினைவில் வைத்துச் சொல்லுங்கள்.
bereans wrote: //இரவிலே சூரியன் "இருக்காது" என்றால் என்ன சூரியன் இல்லாமல் போய் விட்டது என்று தான் அர்த்தம் கொள்ளுவீர்களோ!!//
என்ன சகோதரரே! இரவிலே சூரியன் "இருக்காது" என்றால், சூரியன் இல்லாமல் போய் விட்டது என்று அர்த்தம் கொள்ளுவேன் என நீங்கள் நினைக்கக்கூடிய எந்த வாக்கியமும் என் பதிவில் இல்லையே! இரவிலே சூரியன் இருக்காது, ஆனால் பகலில் சூரியன் இருக்கும் என்ற இதே கூற்றின்பிரகாரமாகத்தானே அத்தனை கூற்றுகளையும் சொல்லியுள்ளேன்?
சூரியன் இல்லாமல் போய் விட்டது என்றும் நான் அர்த்தம் கொள்ளமாட்டேன், இரட்சிப்பு இல்லாமல் போய்விட்டது என்றும் அர்த்தம் கொள்ளமாட்டேன்.
சூரியன் எப்போது இருக்கும், எப்போது இருக்காது எனும் கேள்வியைப்போல, இரட்சிப்பு யாருக்கு இருக்கும், யாருக்கு இருக்காது என்பதுதான் நம் கேள்வி.
bereans wrote: "கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனூடைய ஈவு; ஒருவரும் பெருமைப்பாராட்டாதப்படிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" எபே 2:8,9.
இந்த ஒரு வசனத்தை மட்டும் கொட்டையளவு எழுத்தில் போட்டு படித்துக்கொண்டு, மற்ற அநேக வசனங்களை கடுகளவு எழுத்தில் போட்டு படித்தால், கடுகளவான அநேக வசனங்களை கொட்டையளவான ஒரு வசனம் மறைக்கத்தான் செய்யும். அப்புறம் பின்வரும் வசனத்தில் கூறப்பட்டுள்ள நிலைதான் நேரிடும்.
மத்தேயு 13:14,15 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
ஆம், ஒரு வசனத்தையே பார்த்துக்கொண்டு பல வசனங்களுக்குக் கண்களை மூடிக்கொண்டால், (நம்மை ஆரோக்கியமாக்க தேவனுக்குச் சித்தம் இருந்தாலும்) அவரால் நம்மை ஆரோக்கியமாக்க (அதாவது, நம் பாவங்களை நீக்கி இரட்சிக்க) முடியாது.
கிரியைகளால் அல்ல, கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் எனக் கூறிய அதே பவுல் சொன்ன இந்த வசனங்களையும் (மனக்)கண்களை திறந்து படியுங்கள்.
ரோமர் 2:6,7 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 1 கொரி.15:58 எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. கலாத்தியர் 5:6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும். கொலோசெயர் 1:9-11 நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம். (அவருடைய சித்தம் எது? கிரியைகள் வேண்டாம், விசுவாசம் மட்டும் போதும் என்பதா? சகலவித நற்கிரியைகளாகிய கனிகளைத் தந்துதானே தேவனை அறியும் அறிவில் விருத்தியடைய வேண்டும்?) 1 தீமோத்தேயு 6:18 நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு. (நன்மைசெய்தலும் நற்கிரியைகளும்தான் நித்தியஜீவனுக்கு ஆதாரமானவை என்பது இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?)
தீத்து 3:8 தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். (நமக்கு நன்மையும் பிரயோஜனமுமானவைகளான நற்கிரியைகளச் செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டுமென இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?)
கிரியைகள் வேண்டும் என்பது சம்பந்தமான இத்தனை வசனங்களுக்கு மேலாகச் சொன்ன பவுல், கிரியைகளால் நாம் இரட்சிக்கப்படவில்லை என ஏன் சொன்னார் என்பதை அறிய ஒரு மாணாக்கராக இருந்து கேளுங்கள், நான் விளக்கம் சொல்கிறேன். அதைவிடுத்து, நீங்களாகவே ஒரு முடிவையும் எடுத்து அதை மாற்றக்கூடாது என்ற வைராக்கியத்தோடும் இருந்தால், நான் எத்தனை சொன்னாலும் அதில் பயனில்லை.
என்றாலும், ஜீவவிருட்சத்தின் கனி யாருக்கு எனும் தலைப்பில் நான் தொடங்கியுள்ள தொடுப்பை படித்துப் பாருங்கள், அதில் கிரியைகளால் நாம் இரட்சிக்கப்படவில்லை என பவுல் ஏன் கூறுகிறார் என்பதை என்னால் இயன்ற அளவு விளக்கியுள்ளேன். படித்து விட்டு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
bereans wrote: //அதாவது ஆதாமிலிருந்து, யோவான் ஸ்னானகன் மட்டும் வந்தவர்கள் இனி இருக்கவே போவதில்லை என்று சொல்லுகிறீர்கள். அவர்கள் தான் கர்த்தரால் சபையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லையே. பரவயில்லை, வித்தியாசமாக தான் யோசிக்கிறீர்கள்.//
இரட்சிக்கப்பட்டு கர்த்தரால் சபையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு இரட்சிப்பு இருக்குது, கர்த்தரால் சபையில் சேர்க்கப்படாதவர்களுக்கு இரட்சிப்பு இருக்காது என நான் சொன்னால், நீங்கள் குதர்க்கமாக வேறொரு அர்த்தத்தைக் கற்பனை செய்கிறீர்கள்.
கர்த்தரால் சபையில் பலர் சேர்க்கப்பட்ட அதே காலத்தில் இருந்தவர்களில் கர்த்தரால் சேர்க்கப்பட்டாத மற்றவர்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன் என்பதைக்கூட புரியமுடியாமலா இருக்கிறீர்கள்? இரட்சிக்கப்படாத ஜனங்கள் இருந்தனர் என்பதைச் சொல்வதுதான் என் வாதம். அக்காலத்தில் இராத ஆதாம் யோவன்ஸ்நானகனுக்கான காரியங்களை தனியாக வேறு பதிவில் விவாதிப்போம். அதையும் இங்கு விவாதித்தால், இந்தத் தொடுப்பின் தலைப்பைவிட்டு வெகுதூரம் சென்றுவிடுவோம்.
எனது தொடுப்பான ஜீவவிருட்சத்தின் கனி யாருக்கு என்பதைப் படியுங்கள். அதில் இம்மாதிரி கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என நம்புகிறேன்.
anbu57 wrote: //கிரியைகள் வேண்டும் என்பது சம்பந்தமான இத்தனை வசனங்களுக்கு மேலாகச் சொன்ன பவுல், கிரியைகளால் நாம் இரட்சிக்கப்படவில்லை என ஏன் சொன்னார் என்பதை அறிய ஒரு மாணாக்கராக இருந்து கேளுங்கள், நான் விளக்கம் சொல்கிறேன். அதைவிடுத்து, நீங்களாகவே ஒரு முடிவையும் எடுத்து அதை மாற்றக்கூடாது என்ற வைராக்கியத்தோடும் இருந்தால், நான் எத்தனை சொன்னாலும் அதில் பயனில்லை.//
உங்களுக்கு மாணாக்கராக விருப்பமில்லையெனில் சொல்லுங்கள், நான் மாணாக்கனாக இருக்கிறேன். கிரியைகளால் நாம் இரட்சிக்கப்படவில்லை எனக் கூறிய பவுல், கிரியைகள் வேண்டும் என்பது சம்பந்தமான பல வசனங்களைச் சொன்னது ஏனோ என்பதை நீங்கள் எனக்கு விளக்குங்கள். நித்தியஜீவனைச் சுதந்தரிக்கவேண்டுமெனில் கற்பனைகளைக் கைக்கொள் என இயேசு ஏன் சொன்னார் என்பதை விளக்குங்கள்.
அல்லது குறைந்தபட்சம், நாம் கற்பனைகளின்படி நடக்க வேண்டுமா வேண்டாமா என்பதையாவது சொல்லுங்கள்.
மனிதர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவைகளை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். இதுவே நியாயப்பிரமாணங்களூம், தீர்க்கதரிசனங்களுமாம். அதைச் செய்யுங்கள் போதும்.
soulsolution wrote: //மனிதர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவைகளை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். இதுவே நியாயப்பிரமாணங்களூம், தீர்க்கதரிசனங்களுமாம். அதைச் செய்யுங்கள் போதும்.//
மனிதர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவைகளை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். இதுவே நியாயப்பிரமாணங்களூம், தீர்க்கதரிசனங்களுமாம். அதைச் செய்யுங்கள் போதும்.
மனிதர்கள் என்னை கொலை செய்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன், மனிதர்கள் எனக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்ல கூடாது என்று நினைக்கிறேன், மனிதர்கள் எனது மனைவியை இச்சிக்க கூடாது என்று நினைக்கிறேன் எனவே இவற்றையெல்லாம் நான் கைகொண்டு நடக்கிறேன். இவற்றை கைகொண்டு நட என்று நியாயபிரமாணம் சொல்வதால் நியாயபிரமாணத்தை கைகொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.
உங்களுக்கும் அது நேரக்கூடாது என்று கருதினால் அவற்றை கைகொண்டு நடவுங்கள். இல்லை எது நடந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தால் விட்டுவிடுங்கள் அவ்வளவுதான்
-- Edited by RAAJ on Wednesday 25th of November 2009 02:41:19 PM
உலகத்தில் பெரும்பாலானவர்கள் நீங்கள் சொன்ன கொலை, பொய், இச்சிப்பது போன்றவைகளை செய்வதில்லை.
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது பாவம். ஆம் அல்லது இல்லை என்பது உங்கள் பதிலாக இருக்கட்டும். பழையஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள அனைத்து கட்டளைகளையும், அதாவது நியாயப்பிரமாணம் முழுவதையும் ஒன்றுவிடாமல் கைக்கொள்ளுகிறீர்களா?
மீண்டும் மழுப்புகிறீர்கள். ஆம் அல்லது இல்லை என்று ஒரேவரியில் பதில் சொல்லலாமே. தைரியம் இருந்தால்...