kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?


அப்போஸ்தலர்களை பற்றியும் அவர்கள் யார் யார் என்பது பற்றியும்  வேதம் கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்கம் அளிக்கிறது!

லூக்கா 6:13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
14. அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு,
15. மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
16. யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே
.

இதில் யூதாஸ் துரோகியாகி போனான் எனவே கீழ்க்கண்ட சம்பவங்கள் நடந்தது:

23. அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
24. எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,
25. இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
26. பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்
.

ஆக மொத்தம் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் இவர்கள்தான். அப்படியிருக்க  பவுல் அவர்கள் எந்த வசனத்தின் அடிப்படையில் அல்லது யாரால் அப்போஸ்தலராக நியமிக்கப்பட்டார் என்று சற்று விளக்க முடியுமா? 

வேதத்தின் அடிப்படையில் மட்டும் பேசவேண்டுமெனில் எல்லாவற்றையும் நிதானித்து அறியவேண்டுமல்லவா? 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?


மத்தியாஸ் 'சீட்டுப்போட்டு' மனிதர்களால் தெரிந்தெடுக்கப்பட்டவன். பரிசுத்தாவியின் பெலன் கிடைக்கும் முன்பு நடைபெற்ற செயல். ஆக அது செல்லாது.

இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்...(ரோமர்1:1)

கிறிஸ்து மகிமையடைந்த பிறகு சந்தித்த முதல் நபர் பவுல் ஆவார். மத்தியாஸ்தான் பின்னர் காணாமலேயே போய்விட்டாரே!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?


///soulsolution wrote:
மத்தியாஸ் 'சீட்டுப்போட்டு' மனிதர்களால் தெரிந்தெடுக்கப்பட்டவன். பரிசுத்தாவியின் பெலன் கிடைக்கும் முன்பு நடைபெற்ற செயல். ஆக அது செல்லாது.///

அப்படி யார் சொல்வது?  வேத புத்தகமா அல்லது நீங்களா?  "கர்த்தர் சமூகத்தில் ஜெபம் பண்ணி சீட்டு போட்டார்கள், பின்பு அவரை தங்களுடன் அப்போஸ்தலராக   சேர்த்துகொண்டார்கள்"  என்று வேதம் சொல்கிறது. ஆனால் அது செல்லாது என்று சொல்வது யார்? அல்லது எந்த வசனம்?

soulsolution wrote:


 
///soulsolution wrote:
கிறிஸ்து மகிமையடைந்த பிறகு சந்தித்த முதல் நபர் பவுல் ஆவார். மத்தியாஸ்தான் பின்னர் காணாமலேயே போய்விட்டாரே!///   


"கிறிஸ்த்து மகிமை அடைந்தபிறகு சந்தித்த முதல் நபர் அப்பொஸ்த்தலர்  எனப்படுவார்" என்று வேதம் எங்காவது சொல்கிறதா? மத்தியாஸ் பற்றிய  வரலாறு வேதத்தில் இல்லைதான் மற்ற எல்லா அப்போஸ்தலர்களையும் பற்றிய வரலாறை வேதம் சொல்கிறதா?

இன்று பவுல் அவர்களின் வார்த்தைகள் தேவனின் வார்த்தைகள் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே எனக்கு சிறு குழப்பம் அதுதான் இந்த கேள்விகள்.  


இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்...(ரோமர்1:1)///


ரோமர் நிருபம் யாரால் எழுதப்பட்டது சகோதரரே?  அதை எழுதியவரே பவுல்  "தன்னை தானே அப்போஸ்தலராக அழைக்கப்பட்டவன்" என்று குறிப்பிடுகிறார். அதைவைத்துதான் இன்றும் பல ஊழியர்கள் தங்களை தாங்களே அப்போஸ்தலர் என்று அழைத்து கொள்கிறார்கள். அவர்களை எப்படி சகோதரரே குற்றம் சொல்லமுடியும்?      



-- Edited by RAAJ on Friday 30th of October 2009 01:40:16 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?


நல்ல கேள்வியை கேட்டு அதற்கு நீங்களே உறுதியாக நம்பும் ஒரு பதிலையும் பதிவு செய்திருகிற சகோதரர் ராஜ் அவர்களே,

முதலாவாது அப்போஸ்தலர் என்றால் யார்?

_____Strongs_____

G652  apostolos  ap-os'-tol-os

from G649;

a delegate; specially, an ambassador of the Gospel; officially a commissioner of Christ ("apostle") (with miraculous powers):--apostle, messenger, he that is sent.

அதாவது அனுப்பட்ட தூதன், கிறிஸ்துவின் ஸ்தானாதிபதி. சரி யார் அனுப்புவது, ஒரு மனிதன் இன்னோரு மனிதனின் தலையில் கையை வைத்து அனுப்புவதா (இன்று அப்போஸ்தலர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் கள்ள அப்போஸ்தலர்களை போல்). இல்லை, இயேசு கிறிஸ்து த‌ன் தூத‌னாக‌ அனுப்பிய‌ ஒரு ம‌னித‌ன் தான் அபோஸ்த‌ல‌னாகிறான்.

அப். 1ஆம் அதிகார‌த்தின் க‌டைசி ச‌ம்ப‌வ‌ம் தான் ப‌ரிசுத்த‌ ஆவியால் நிற‌ம்பாத‌ ம‌ற்ற‌ 11 அப்போஸ்த‌ல‌ர்க‌ள் இன்னும் ஒருவ‌ரை தெரிந்தெடுத்த‌ ச‌ம்ப‌வ‌ம். சீட் போட்டு தேர்ந்தெடுத்தார்க‌ள் அந்த‌ 11 ம‌னித‌ர்க‌ள் (அப்போஸ்த‌ல‌ர்க‌ள்). இதில் தேவ‌ன் ம‌த்தியாஸுக்கு அங்கிகார‌ம் கொடுத்து அவ‌னை அப்போஸ்த‌லானாக்கினார் என்கிற‌ ஒரு வ‌ச‌ன‌மும் வேத‌த்தில் இல்லை. ஆனால் ப‌வுலை குறித்து, அவ‌ன் க‌ர்த்த‌ரால் தெரிந்துக்கொண்ட‌ பாத்திர‌ம் என்று ப‌வுலிட‌த்தில் சொல்லாம‌ல் அன‌னியா என்கிற ம‌னித‌னை சாட்சியாக‌ வைத்து சொல்லுகிறார் (அப். 9:15). (ஏனென்றால் அன்றே கள்ள அப்போஸ்தலர்கள் இன்று போல் கூடி இருந்தார்கள் என்று நினைக்கிறேன், ஆகவே தான் கர்த்தர் தேர்ந்தேடுப்பவர் மாத்திரமே அப்போஸ்தலர் என்று இருக்க வேண்டும் என்றாயிற்று). முன்னே அந்த 12 பேரை தேர்ந்தெடுத்ததும் கர்த்தர் தான், யூதாஸ்க்கு பிறகு பவுலை அனுப்பியவரும் கர்த்தர் தான். இந்த ஒரு வசனமே அவர் அப்போஸ்தலர் என்று தகுதி பெறுகிறார்.

ம‌த்தியாஸை அப்போஸ்த‌ல‌ர் என்று தேவ‌ன் அங்கிக‌ரிக்காத‌ போது ஏன் அவ‌ரை அப்போஸ்த‌ல‌ன் என்று சொல்ல‌ வேண்டும்? ம‌த்தியாஸ் நிருப‌ம் எழுத‌வேண்டும் என்கிற‌ க‌ட்டாய‌ம் இல்லை, ஆனால் பைபிளில் எங்காவது அவரை குறித்து தகவல் இருந்திருக்க வேண்டுமே. ஏன், வ‌ர‌லாற்றிலும் அத‌ன் பிற‌கு அவ‌ர் அப்போஸ்த‌ல‌ர் என்று பெய‌ர் வ‌ந்த‌தில்லையே?

ப‌வுல் ரோம‌ரை எழுதினார், அதினால் நிருபங்களை நம்பவில்லையா? அப்படியானால் சுவிசேஷ‌ங்க‌ளை எழுதின‌வ‌ர்க‌ள், ம‌த்தேயு, லூக்கா, மாற்கு, யோவான் தானே, இயேசு கிறிஸ்து எழுத‌வில்லையே. தேவ‌னோ, இயேசு கிறிஸ்துவோ, நேர‌டியாக‌ எழுதாத‌ வேத‌த்தை எப்ப‌டி நீங்க‌ள் ந‌ம்புகிறீர்க‌ள் என்ப‌த‌ற்கு முத‌லில் ப‌தில் தாருங்க‌ள்?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?


பவுல் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதால்தான் அவர் நேரடியாக அவனுடன் பேசவேண்டியதாயிற்று.

இன்று இருக்கும் self made ஊழியக்காரர்களை அப்படியே நம்பும் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி அறியும் அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையுமாக எண்ணி 'என்னைப் பின்பர்றுங்கள்' என்று கூறுமளவு தியாக வாழ்க்கை வாழ்ந்த அப்போஸ்தலனாகிய பவுலின்மேல் சந்தேகம் கொள்வது வியப்பளிக்கிறது. மற்ற அப்போஸ்தலர்களே ஏற்றுக்கொண்ட பவுலை 2000 ஆண்டுகளுக்குப் பின் அவன் அப்போஸ்தலனா? என்று கேட்குமளவு நாம் வேதத்தை ஆராய்ந்திருக்கிறோம்.


"மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும், உறுதியில்லாதவர்களும், மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறது போல தங்களூக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்" 2பேதுரு3:15,16.

இதைவிட ஒரு சான்றிதழ் பவுலுக்குத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மேலும் வேதத்தின்(மூலபாஷை) ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் தேவனுடையது. அதைப் மோசேயுடையது, தாவீதுடையது, லூக்காவுடையது, பேதுருவுடையது, யோவானுடையது என்று பிரித்துவிட்டால் ஒரு வசனம்கூட மிஞ்சாது.


எப்படி கிறிஸ்து 12 அப்போஸ்தலர்களைத் தானாக தேர்ந்தெடுத்தாரோ அதேபோல 13வதாக பவுலையும் அவர்தான் தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு அப்போஸ்தலனும் மரிக்க மரிக்க மற்றவர்கள் 'சீட்டு' போட்டு தேர்ந்தெடுத்துக்கொண்டே வந்திருந்தால் இந்த 2000 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அப்போஸ்தலர்கள் இருந்திருப்பார்கள்.

இன்றைக்கும் தங்களை துணிகரமாக 'அப்போஸ்தலர்' என்று கூறிக்கொண்டு திரியும் வெட்கங்கெட்டவர்களில் சிலர்தான் அப்போஸ்தலர் தால் பங்கையா, அப்போஸ்தலர் பிவிட் டேரகாசம், அப்போஸ்தலர் ஜெகஸ்டின் அபக்குமார்.... இவர்களுக்கு எச்சரிகையாக இருப்போம்.



"கல்லாதவர்களும், உறுதியில்லாதவர்களும், மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறது போல தங்களூக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்" என்ற வசனம் நமக்குத்தான் போலுள்ளது.



-- Edited by soulsolution on Friday 30th of October 2009 05:28:28 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
RE: பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?


SOULSOLUTION wrote:
/////மத்தியாஸ் 'சீட்டுப்போட்டு' மனிதர்களால் தெரிந்தெடுக்கப்பட்டவன். பரிசுத்தாவியின் பெலன் கிடைக்கும் முன்பு நடைபெற்ற செயல். ஆக அது செல்லாது///

செல்லாது என்று சொல்வது நீங்களா அல்லது வேதமா?   மற்ற அப்போஸ்தலர்கள் எல்லோரும் சேர்ந்து ஜெபம் செய்து கர்த்தர் சமூகத்தில் சீட்டு போட்டு தேர்ந்தெடுத்த மத்தியாசை செல்லாது போகப்பண்ணும் வேத வசனம் எது?  

SOULSOLUTION wrote:
///இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்...(ரோமர்1:1) ///

ரோமர் நிருபத்தை எழுதியது யார் என்பது உங்களுக்கு தெரியும். பவுல் தன்னை தானே "அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவன்" என்று எழுதி யாருடைய ஒப்புதலும் இல்லாமல் அப்போஸ்தலராகிவிட்டார். இன்றைய ஊளியக்காரரும் அதையே பின்பற்றுகின்றனர் தங்களை தாங்களே அப்பொஸ்தலராக நியமித்து கொள்கின்றனர் அதை என் குற்றம் என்று சொல்கிறீர்கள்?

SOULSOLUTION wrote:
///கிறிஸ்த்து மகிமையடைந்த பிறகு சந்தித்த முதல் நபர் பவுல் ஆவார்.///

"நான் மகிமை அடைந்தபிறகு முதலில் சந்திக்கும் நபர் அப்போஸ்தலர் எனப்படுவார்" என்று கிறிஸ்த்து எங்காவது சொன்னாரா? அல்லது "எனக்கு பிறகு பவுல் என்பவர் வந்து பல்வேறு நிரூபங்களை எழுதுவார் அவர் ஒரு
அப்போஸ்தலர் அவர் எழுதுவது எல்லாம் தேவனின் வார்த்தைகள்" என்றுதான் எங்காவது வேதம் சொல்கிறதா? 


/// மத்தியாஸ்தான் பின்னர் காணாமலேயே போய்விட்டாரே!///

மத்தியாஸ் மட்டுமல்ல அப்போஸ்தலர்கள் பன்னிரண்டுபெரில் பலரது வாழ்க்கை வரலாறுகள் வேதத்தில் இல்லை எனவே அவர்கள் எல்லோரும் ஆண்டவருக்காக பாடுபடவில்லை என்று கூறிவிட முடியாது அல்லவா?

இன்று பவுல் அவர்களின் நிரூபங்கள் தேவனின் வார்த்தைகள் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டு அதனால் தேவனின் உண்மையான கட்டளைகள் பல பின்னுக்கு தள்ளப்படுகின்றன. அதை தெளிவு படுத்தவே இந்த கேள்வி மற்றபடி சுவிஷேசத்துக்காக தன்னை முழுவதும் தியாகம் செய்த பவுல் அவர்களை குறை கூற என்று கருதவேண்டாம். 
  
வேதத்தின்படி சரியாக நோக்கவேண்டும் என்றால் இந்த அடிப்படை கேள்விகளுக்கு நிச்சயம் பதில் தெரிந்தாக வேண்டும்.



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Raaj wrote //இன்று பவுல் அவர்களின் நிரூபங்கள் தேவனின் வார்த்தைகள் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டு அதனால் தேவனின் உண்மையான கட்டளைகள் பல பின்னுக்கு தள்ளப்படுகின்றன. அதை தெளிவு படுத்தவே இந்த கேள்வி.//

என்ன அது தேவனின் உண்மையான கட்டளைகள்? பழைய ஏற்பாட்டுக் 'கட்டளை'க்ளை கருத்தில் கொண்டு பேசினீர்கள் என்றால் அவையெல்லாம் பரலோகத்துக்கு செல்ல முடியாத மோசே முதலானவர்கள் எழுதியதாகும்.


மொத்தம் பன்னிரண்டே அப்போஸ்தலர்கள் என்று வேதம் சொல்கிறது (வெளி21:14). யூதாஸ் தகுதியிழந்து மரித்துப்போனான். அதற்குப் பதில் கிறிஸ்துவே 'நேரடியாக'ப் பேசி தேர்ந்தெடுத்தது பவுலை மட்டுமே. அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆகவே மத்தியாஸ் ஒரு சீஷன் மாத்திரமே நிச்சயமாக அப்போஸ்தலன் கிடையாது.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ராஜ் அவர்களே, அப்போஸ்தலர்கள் 11 பேரும் கூடி கர்த்தரிடம் கேட்டார்கள் என்பது உண்மையே, ஆனால், அவரின் பதிலுக்காக காத்திராமல், சீட்டு போட்டு ஒரு நபரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் காத்துக்கொண்டிருந்த பரிசுத்த ஆவி அவர்களுக்கு கொடுக்கப்படும் முன் நடந்த சம்பவம் தான் மத்தியாஸை தெரிந்தெடுத்த சம்பவம். ஆனால் பவுலுக்கோ, அனனியாஸ் மூலமாக கர்த்தர் (இயேசு கிறிஸ்து) தெரிய படுத்தினார், அதற்கு முன்பு பவுலிடமே பேசினார், ஆகவே தான் பவுலால அவுளவு தைரியமாக தான் ஒரு அப்போஸ்தலன் என்று சொல்ல முடிந்தது. மத்தியாஸிடமோ, அவரை சீட்டு போட்டு தேர்வு செய்த போது கர்த்தர் யாரிடமும் இதை குறித்து பேச வில்லை.

இன்று வரையின் இந்த பாரம்பரியம் நடந்துக்கொண்டிருக்கிறது. இன்றும் அபிஷேகம் என்னிடம் உண்டு என்று சொல்லும் ஒரு மனிதன் இன்னோரு மனிதனை அப்போஸதலன் என்றோ, போதகர் என்றோ, பாஸ்டர் என்றோ அபிஷேகம் செய்கிறார்களாம்!!

என் பதிலை நீங்கள் வாசிக்கவில்லையா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நியாயப்பிரமானங்களை பின்பற்ற தேவையில்லை என்று பவுல் போதித்ததினால் உங்களுக்கு பவுல் ஒரு அப்போஸ்தலனா என்கிற சந்தேகம் வந்து விட்டதோ சகோ ராஜ் அவர்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard