kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Feel free to Post!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Feel free to Post!


சில  மாதங்கள் முன்பு நான் இது போன்ற ஒரு விவாத மேடையில் உறுப்பினாராக பதிவு செய்து எழுதுவேன். கஷ்டப்பட்டு விவாதத்திற்கு வார்த்தைக‌ளை எழுதுவேன், அடுத்த‌ நாள் பார்த்தோமென்றால் அது நீக்க‌ப்ப‌ட்டு இருக்கும். அந்த‌ விவாத‌ மேடையை சில‌ ஒற்றை க‌ருத்துள்ள‌வ‌ர்க‌ள் ந‌ட‌த்தி வ‌ந்தார்க‌ள். ஆக‌வே அவ‌ர்க‌ளின் க‌ருத்துக்கு விரோத‌மாக‌ யார் என்ன‌ எழுதினாலும் அதை நீக்கி விடுவார்க‌ள்.

ஆனால் இங்கு அப்ப‌டி இல்லை. எல்லா வித‌மான‌ க‌ருத்துக்க‌ளும் கொண்டு வ‌ர‌ நாங்க‌ள் அனும‌திக்கிறோம். எங்க‌ள் ஒரே நோக்க‌ம், ச‌த்திய‌ம் ஜெய‌ம் பெற‌ வேண்டும் என்ப‌து மாத்திர‌மே.

எந்த‌ க‌ருத்துக்க‌ளானாலும் அதை ச‌ர்வாதிகாரியாக‌ இருந்து நீக்க‌ மாட்டோம் என்ப‌து மாத்திர‌ம் நிச்ச‌ய‌ம். அந்த‌ க‌ச‌ப்பான‌ உண‌ர்வை நான் ஏற்க‌ன‌வே பெற்று விட்ட‌தால், ஒரு ம‌னித‌ன் ஒரு க‌ருத்தை ப‌திய‌ எத்துனை க‌ஷ்ட்ட‌ப்ப‌டுகிறான் என்ப‌து என‌க்கு தெரியும். ஆக‌வே தைரிய‌மாக‌ தேவ‌ வார்த்தைக‌ளை விவாதியுங்க‌ள். அது ந‌ம‌க்கும் இங்கு வ‌ந்து போகிற‌வ‌ர்க‌ளுக்கும் பிர‌யோஜ‌ன‌மாக‌ இருக்க‌ட்டும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

தமிழ் கிறிஸ்தவ‌ தளத்திலிருந்து இங்கு வருகைதரும் அன்பு சகோதர சகோதரிகளூக்கு அன்பின் வாழ்த்துகள்.

இது ஒரு சுதந்திரமான தளம். வேதம் குறித்தும், கிறிஸ்தவ நம்பிக்கை குறித்தும் யார் வேண்டுமானாலும் இதில் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம்.
வேத வெளிச்சத்தில் பதில் காணலாம்.

முதலில் இது பெரும்பாலான சகோதர சகோதரிகளூக்கு ஒரு மாறுபாடான உபதேசமாக தோன்ற‌க்கூடும், எங்களுக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் வேதத்தின் மகத்துவங்களை அறிய அறிய இன்றைய சராசரி கிறிஸ்தவம் எப்படி, எதனால் மோசம்போய்க்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகியது. மேலோட்டமான கிறிஸ்தவர்களுக்கு இந்தத்தளம் பயன்படாது. ஆனால் சத்தியத்தின்மேல் வாஞ்சையுள்ள கற்றுக்கொள்ளும் திறந்த மனமுள்ளவர்களுக்கு இத்தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாங்கள் எகோவா சாட்சிகளோ, Bible Students     என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. வேதத்தின் வெளிச்சத்தில் தேவனுடைய திட்டங்களையும் தீர்மானங்களையும் சபைக்கோட்பாடுகளூக்கு அப்பாற்பட்டு அறிய முற்படும் உங்களைப் போன்ற சத்திய விரும்பிகள் என்று உறுதியளிக்கிறோம்.

இத்தளத்தை வலம்வரும் சகோதர சகோதரிக
ளூக்கு பிதாவாகிய தேவனுடைய அன்பும், நம்முடைய இரட்சகரும், கர்த்தரும், மீட்பருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், பரிசுத்தாவியின் ஐக்கியமும் இருப்பதாக! ஆமேன்!!


-- Edited by soulsolution on Friday 11th of December 2009 08:48:08 AM

-- Edited by soulsolution on Friday 11th of December 2009 08:55:06 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

This is an open Forum. Do no hesitate to participate in the discussion. We can learn mutually.


இது ஒரு திறந்த தளம். தங்களின் மேலான பதிவுகளை தயங்காமல் பதிக்கவும். இணைந்து கற்றுக்கொள்ள இத்தளம் உதவும்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard