kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நம்ப முடிவதில்லை!!


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
RE: நம்ப முடிவதில்லை!!


தேவனுக்கு நடப்பதும் தெரியும் நடக்கபோவதும் தெரியும் ஆனால் ஒரு தனி மனிதன் விஷயத்தில் அவர் தலையிட்டு அவனோடு போராடுவது இல்லை.

ஆதாம் பழத்தை பறித்து தின்ன முயன்றபோது இறைவன் ஓடிவந்து இடையில் நின்று தடுக்கவில்லை

பிறந்ததிலிருந்தே நசரேய அபிஷேகம் பணப்பட்ட சிமொசொன் வேசியினிடத்தில் உண்மையை உளறியபோது அவர் வது அவனை தடுக்கவில்லை

தாவீது பாவம் செய்தபோதும் கூட கர்த்தர்  தடுக்கவரவில்லை.

மனிதன் ஒரு காரியத்தை விரும்பி செய்யும் பொது அங்கு வந்த போராடி தடுக்க இறைவன் வருவதில்லை. ஆனால் நடந்து முடிந்த காரியத்தை நன்மையாகவோ தீமையாகவோ மாற்ற தேவனால் முடியும்.

ஆதியாகமம் 6:3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, 
ஏசாயா 57:16 நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே

என்ற பதத்தின் அருத்தம் இதுதான்! அதனால்தான் தன்னால் முடிந்தும்  தேவன் பல காரியங்களை தடுக்காமல் விட்டுவிடுகிறார்.  யார் என்ன செய்தாலும் முடிவு தேவன் நினைத்ததுதான் நிறைவேறும். அதை அவர் யாரை வைத்தாவது செய்து முடிக்க வல்லவராயிருக்கிறார்.   
 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இதைத்தானே நண்பரே நானும் சொல்லிக்கொண்டு வருகிறேன். எல்லாமே அவரது சித்தம்தான்!

புரிந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி!!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ராஜ் எழுதுகிறார்:
"தேவனுக்கு நடப்பதும் தெரியும் நடக்கபோவதும் தெரியும் ஆனால் ஒரு தனி மனிதன் விஷயத்தில் அவர் தலையிட்டு அவனோடு போராடுவது இல்லை."

இதை தான் தேவன் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்று நாங்கள் சொல்லி வருகிறோம். தேவனுக்கு எல்லாம் தெரியும், அவர் சித்தம் நிறைவேற அனைத்தையும் அனுமதிக்கிறார் என்று சொன்னேன். ஆனால் நீங்களோ, இல்லை, இல்லை, தேவன் ஒரு மனிதனின் காரியத்தை அறிய "முற்படுவதில்லை" என்று வாத்திட்டு வந்தீர்கள். எப்படியோ, விஷயம் தெளிவானால் சரி தான்.

"ஏசாயா 57:16 நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே"

இந்த வசனம் நாங்கள் சொல்லியிருக்க வேண்டியது, தேவன் உங்களுக்கு கான்பித்து தந்திருக்கிறார். மீண்டும் நன்றி.

ராஜ் எழுதுகிறார்:
"தேவன் பல காரியங்களை தடுக்காமல் விட்டுவிடுகிறார்."

த‌டுக்காம‌ல் விட்டுவிடுவ‌த‌ற்கும், அனும‌திப‌த்த‌ற்கும் என்ன‌ வித்தியாச‌ம் என்று இவ்வுள‌வு நீல‌மான‌ ஒரு விவாத‌த்தை வைத்தீர்க‌ள். புரிந்து கொண்டீர்க‌ளே. ம‌கிழ்ச்சி.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

நான் சொல்வதன் அருத்தம் உங்களுக்கு புரியவில்லை என்று கருதுகிறேன்.

அதாவது தேவனுடைய திட்டம் (PLAN)  என்றும் ஓன்று இருக்கிறது தேவனின் சித்தம் (DESIRE)  அல்லது விருப்பம் என்றும் ஓன்று இருக்கிறது.

ஆதாம் பாவம் செய்ததில் இருந்து சத்துருவாகிய மரணத்தை ஜெயித்து நித்யநியாயதீர்ப்புக்கடுத்த புதிய பூமி நிறுவப்படுதல்வரை வேதத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது அவருடைய மீட்பின் திட்டம். அது நிச்சயம் நிறைவேறிய தீரும்!  அதை யாரும் தடுக்க முடியாது. மும்கூட்டி தீர்மானித்த எல்லாவற்றையும் செய்துமுடிக்க அவர் வல்லவராய் இருக்கிறார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை!

ஆனால் இந்த திட்டம் நிறைவேறி முடியும் போது ஒருவரும் இரண்டாம் மரணத்தில் பங்கடயாமல் எல்லோரும் இரட்சிக்கப்படவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவன் மனிதனோடு போராட விரும்பாததால் இரட்சிப்புக்குள் வருவது என்பது தனி மனிதனின் கையில் இருப்பதால், அதற்காகத்தான் தேவன் நீடிய பொறுமையுடன் காத்திருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. எல்லாமே அவர் கையில் இருந்தால் அவர் நீடிய பொறுமையோடு காத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை.

மேலும் சில மனிதர்கள் தேவனின்  திட்டத்தை  விட்டு வெளியே செல்லும் போது, அவர் மனஸ்தாபபடுகிறார்.  எனவே ஒரு தனி மனிதனின் இரட்சிப்பு என்பது அம்மனிதனின் கையில்தான் இருக்கிறதேயன்றி தேவன் யாரையும் கட்டாயப்படுத்தி தன்னுடைய ராஜ்யத்துக்கு சேர்ப்பது இல்லை!

        



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Raaj Wrote//

யார் என்ன செய்தாலும் முடிவு தேவன் நினைத்ததுதான் நிறைவேறும்.



Raaj also Wrote எனவே ஒரு தனி மனிதனின் இரட்சிப்பு என்பது அம்மனிதனின் கையில்தான் இருக்கிறதேயன்றி தேவன் யாரையும் கட்டாயப்படுத்தி தன்னுடைய ராஜ்யத்துக்கு சேர்ப்பது இல்லை!


என்ன ஒரு 'குழப்பமே இல்லாத' statement!




-- Edited by soulsolution on Monday 16th of November 2009 08:22:40 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ராஜ் அவர்களே, தேவன் சவுலையும் கட்டாயப்படுத்தி, முன்குறித்தபடி தெரிந்துக்கொள்ளாமல், அவனை அவன் போக்கில் சவுலாவே விட்டு இருக்கலாமே.

தேவன் பொறுமையாக காத்திருப்பதே, சபை என்கிற அந்த சின்ன கூட்டம் முழுமை அடைய தான். மற்றப்படி அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பது தான் அவரது திட்டம் ஆயிற்றே. (அப் 15:14-16; 8; ரோம் 8:19).

அப்ப‌டி என்றால், "முழ‌ங்கால் யாவும் முட‌ங்கும், நாவு யாவும் இயேசு கிறிஸ்துவே க‌ர்த்த‌ர் என்று அறிக்கை செய்யும்" பிலி. 2:10,11, எல்லாம் எப்போ நிறைவேறும். அதான் ப‌ல‌ர் இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்திற்கு சென்று விட்ட‌ பிற‌கு, அவ‌ர்க‌ள் இந்த‌ அறிக்கையில் ப‌ங்கு கொள்ள‌ முடியாதே!!

ச‌கோ அன்பு எழுதுவ‌தில்லை போல். இருந்தாலும் இந்த‌ கேள்வி அவ‌ர் வ‌ந்தால் வாசித்து ப‌தில் த‌ர‌வே:

ஆதாமுக்குள் எல்லோரும் ம‌ரிப்ப‌து போல் கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிருத்தெழுவார்க‌ள் என்றால், எப்ப‌டி ப‌ல‌ர் உயிர்த்தெழாம‌ல், நேர‌டியாக‌ இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்திற்கு போவார்க‌ள்?



-- Edited by bereans on Monday 16th of November 2009 05:00:08 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

தங்கள் கருத்துப்படியே தேவன் தன சித்தம் திட்டம் விருப்பம் எல்லாவற்றையும் நிறைவேற்றிவிடுவார் என்றே வைத்துகொள்வோம்.

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் கொண்டு செல்வதுதான் தேவனது பூர்வதிட்டம் அனால் எல்லோரும் கானான் போய் சேரவில்லை

காரணம் என்ன?

மூட்டையை கட்டிக்கொண்டு புறப்பட்டு,  செங்கடலை கடந்து போ! என்று கர்த்தர் கட்டளையிடும்போது கையை கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டு தேவன் தன சித்தத்தை எப்படியும் நிறைவேற்றுவார் என்று இருப்பீர்களானால் எகிப்தில்தான் இருப்பீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

கர்த்தர் தனது திட்டத்தை நிறைவேற்றி இஸ்ரவேல் ஜனங்களை கானான் கொண்டுசென்று விட்டார் அவர் திட்டம் நிறைவேறியது! அனால் பழைய கூட்டத்தில் இரண்டுபேர் அதன் பலனை புசித்தவர்கள்

யூதா 1:5  கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.

அது மணவாட்டியாக இருந்தாலும் சரி மண்ணாங்கட்டியாக இருந்தாலும் சரி கீழ்ப்படியாதவர்கள் விசுவாசியாதவர்கள் அழிக்கப்பட்டது நமக்கு திருஷ்டான்திரமாக உள்ளது!

சரி உங்களுக்கு புரியப்போவது இல்லை.

சுருக்கமாக சொன்னால் உங்கள் கருத்துபடியே எல்லோரும் ஒருவேளை இரட்சிக்கப்பட்டுவிட்டாலும், நான் கட்டளையிட்ட காரியத்தை நீ சரியாக செய்தாயா என்ற கேள்வி ஒவ்வொருவரிடமும் நிச்சயம் கேட்கப்படும்.

எவ்வளோவோ வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடந்த மோசே ஒரே ஒரு சிறிய கீழ்படியாமையினால் கானானுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை இழந்துபோனான்

எழுதரம் சுற்றினால் எரிகோ கீழுவிழும்  என்று கர்த்தர் சொல்லும்போது,  ஒருவர்  எழுமுறை சாப்பிட்டுவிட்டு தூங்கி எழுந்தால் எரிகோ கீழேவிழாது.  அப்படியே தேவனின் திட்டப்படி  யாரோ பலர் சுற்றிவந்து எரிகோ விளுந்துவிட்டலும் அதனால் கிடைக்கபோகும் பலனில் உங்களுக்கு பங்கும் பாத்திரமும் இருக்காது!

நன்றி! 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.ராஜ் அவர்கள் மிகத் தெளிவாக, அனைவரும் புரியக்கூடிய வகையில் எழுதியுள்ளார். ஆனால் புரியவேண்டியவர்களுக்குப் புரியணுமே? ஏற்கனவே ராஜ் எழுதின ஒரு பதிவை தவறாகப் புரிந்துகொண்டு, ஒருவர் மாறி ஒருவர் என்னென்னமோ எழுத ..., எனக்கே ராஜ் எழுதின பதிவில் சந்தேகம் வந்துவிட்டது. என்றாலும், அதைக் குறித்து அவர் மறுப்பு தெரிவிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அதன்படி, அவர் மறுப்பும் தெரிவித்துவிட்டார்.

வேறொரு நீண்ட பதிவை எழுதிக் கொண்டிருப்பதால், மற்ற பதிவுகளில் பங்குகொள்ளவில்லை. விரைவில் பங்குகொள்வேன்.

-- Edited by anbu57 on Tuesday 17th of November 2009 07:11:32 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ராஜ் அவர்களே, ஏன் இப்படி அழிவின் மேல் பிரியப்படுகிறீர்கள்.

சரி தேவன் தான் அவர்களை வாக்கு கொடுத்து, கானானிற்கு கூட்டி செல்வேன் என்றார், ஆனால் போனதோ 2 பேர் மாத்திரம் தான். ஒத்துக்கொள்ளுகிறேன். கோபத்தினால் விவாதம் தர்கமாக தான் மாறும். சற்றே பொறுமையாக இந்த வசனத்தையும் வாசியுங்களே:

"இவர்களெலாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டத்தை அடையாமற் போனார்கள்; அவர்கள் (யார் என்று புரியுமென்று நினைக்கிறேன்) நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று (மணவாட்டி தான், 'மண்ணாங்கட்டி' இல்லை) முன்னதாக நியமித்திருக்கிறார்" எபி 11:39,40. தயவு செய்து தங்களின் கோபத்தை தூக்கி போட்டு, இந்த வசனத்தை தியானித்து பின்பு பதில் எழுதுங்கள்.

"எல்லாரும் இரட்சிக்கப்பட்டால் நல்லது தான்" என்று பல பதிவுகளில் ப‌திந்தாலும், "அழிவை" குறித்தான‌ வ‌ச‌ன‌ங்க‌ளை மாத்திர‌ம் இப்ப‌டி க‌ண்க‌ளை விரித்து தேடி தேடி எழுதுகிறீர்க‌ளே.

கோப‌த்தில் ச‌கோ ராஜ் எழுதுகிறார்:
"சுருக்கமாக சொன்னால் உங்கள் கருத்துபடியே எல்லோரும் ஒருவேளை இரட்சிக்கப்பட்டுவிட்டாலும், நான் கட்டளையிட்ட காரியத்தை நீ சரியாக செய்தாயா என்ற கேள்வி ஒவ்வொருவரிடமும் நிச்சயம் கேட்கப்படும்."

நீங்க‌ள் சுருக்க‌மாக‌ சொன்னாலும் ச‌ரி நீள‌மாக‌ சொன்னாலும் ச‌ரி, இந்த‌ க‌ருத்து என் சொந்த‌ க‌ருத்து இல்லை, வேத‌த்தின் க‌ருத்து என்றே நான் வாதாடி வ‌ருகிறேன்.

மீண்டும் ச‌கோ ராஜ்:
"எவ்வளோவோ வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடந்த மோசே ஒரே ஒரு சிறிய கீழ்படியாமையினால் கானானுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை இழந்துபோனான் "

கானானை இழ‌ந்து போன‌ மோசே, இன்று ப‌ர‌லோக‌த்தில் தான் இருக்கிறார், நாங்க‌ள் பார்த்துவிட்டு, பேசி விட்டு திரும்புகிறோம் என்று சொல்லும் கூட்ட‌ம் சொல்லும் கூற்றுக்க‌ளை எல்லாம், ஏற்றுக்கொள்ளும் இந்த‌ கிறிஸ்த‌வ‌ ம‌ண்ட‌ல‌ம், மோசே கானானிற்கு போகும் ஒரு கால‌ம் இருக்கிற‌து என்ப‌தை கேட்க‌ பிரிய‌ப்ப‌டுவ‌தில்லை என்ப‌தில்; ச‌ந்தேக‌மே இல்லை.

தேவ‌ன் த‌ன் சித்த‌த்தை செய்கிறார் என்றால் அவ‌ர் நேர‌த்தில் தான் செய்கிறார். பார்த்தீர்க‌ளா சொன்னாரே, அப்பொழுதே ந‌ட‌க்க‌வில்லையே என்றால் என்ன‌ நியாய‌ம். "கால‌ம் நிறைவேறின‌" போது தான் ஸ்திரியின் வையிற்றிலிருந்து இயேசு கிறிஸ்து பிற‌ந்தார், ஆனால் அவ‌ர் வ‌ரும் வாக்குத‌த்த‌ம் ஆதாமுக்கே முதலில் கொடுக்க‌ப்ப‌ட‌து. சொல்லுங்க‌ள் அவ‌ர் சித்த‌ம் (திட்ட‌ம்) நிறைவேறிய‌தா இல்லையா. எல்லாவ‌ற்றையும் பார்த்து தான் விசுவாசிப்பேன் என்ப‌வ‌ர்க‌ளுக்கு வேத‌ம் ச‌ரியான‌ புத்த‌க‌மே கிடையாது. இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வெளிப்ப‌டுத்தின‌ விசேஷ‌த்தில் வ‌ருகிற‌ காரிய‌ங்க‌ளை எப்ப‌டி தான் பார்க்கிறார்க‌ளோ. இதோ சீக்கிர‌மாக‌ வ‌ருகிறேன் என்று தான் யோவானிட‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌து, சொல்லி 2000 வ‌ருட‌ங்க‌ள் ஆகி விட்ட‌து, இன்னும் அந்த‌ "சீக்க‌ர‌ம்" நிறைவேற‌வில்லையே, அத‌ற்காக‌ அவ‌ரின் வ‌ருகை இல்லை என்று ஆகிவிட்டால், அது கிறிஸ்த‌வ‌ விசுவாச‌ம் இல்லை, ப‌ரியாச‌க்கார‌ர் கூட்ட‌த்தின் பேச்சாகும்.

எரிகோ ம‌திலுக்காக‌ ஒரு குறிப்பிட்ட‌ கூட்ட‌த்திட‌ம் செய்ய‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ காரிய‌ம். அதையே இன்றும் செய்ய‌ முடியுமா? 7 முறை இல்லை, 7000 முறை சுற்றினாலும், தேவ‌னின் சித்த‌ம் இல்லாம‌ல் எந்த‌ ம‌திலும் விழாது.

நான் அந்த‌ "யாரோ" என்கிற‌ போலி கூட்ட‌த்தாரை விசுவ‌சியாம‌ல், என்னை இர‌ட்சிக்க‌ வ‌ல்ல‌வ‌ரான‌ என் தேவ‌ன் மேலே தான் என் ந‌ம்பிக்கையை வைத்திருக்கிறேன், ஆகிலும் த‌ங்க‌ளின் "ஆசிர்வாத‌த்திற்கு" ந‌ன்றி தெரிவித்துக்கொள்வ‌து என் க‌ட‌மை. இது எப்படி ப‌ட்ட‌ ஆவியின் கனியினால் வந்த வாழ்த்தோ!!. ந‌ன்றி.

மேலும் அப்படி சுற்றி வந்த யாரோக்களின் கதி என்னவென்று மத். 7:22,23ல் தெளிவாக வாசித்த பிறகும் அப்படி பட்ட ஒரு பலனில் எனக்கு பங்கும் வேண்டாம், பாத்திரமும் வேண்டாம். என் தேவன் எனக்கு என்று நியமித்து வைத்திருக்கும் இடம் நிச்சயமாக அவராலே ஆசிர்வதிக்கப்பட்ட இடமாக தான் இருக்கும் என்பது தான் எனக்கு வேதம் தரும் விசுவாசம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

 

///சகோ ராஜ் அவர்களே, ஏன் இப்படி அழிவின் மேல் பிரியப்படுகிறீர்கள்.///


அப்போஸ்தலர் 13:41 அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்!  
அப்போஸ்தலர் 8:20 பேதுரு அவனை நோக்கி: உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.

இந்த வார்த்தைகள் எந்த பிரியத்தால் எழுதப்பட்டதோ  அதே பிரியத்தால்தான் நானும் எழுதுகிறேன்   
 


///"இவர்களெலாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டத்தை அடையாமற் போனார்கள்; அவர்கள் (யார் என்று புரியுமென்று நினைக்கிறேன்) நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று (மணவாட்டி தான், 'மண்ணாங்கட்டி' இல்லை) முன்னதாக நியமித்திருக்கிறார்" எபி 11:39,40. ///
 
நிச்சயம்  நியமித்திருக்கிறார் நான் இல்லையென்று சொல்லவில்லையே! ஆனால் அந்த "நமகென்ற" வார்த்தை யாரை  குறிக்கிறது என்பதுதான் இங்கு கேள்வி.  வெறும் விசுவாசத்தை மட்டும்வைத்துகொண்டு அவரது வார்த்தைக்கு கீழ்படியாதவர்களுக்கா?  நிச்சயம் இல்லை!கீழ்படியாதவர்களுக்கு  கொபாக்கினைதான்  காத்திருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை வேதம் சொல்கிறது!

8. சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்
            
இங்கு பவுல் கோபாக்கினை வரவேண்டும் என்று  பிரியப்படுகிறாரா?      

 ////எரிகோ ம‌திலுக்காக‌ ஒரு குறிப்பிட்ட‌ கூட்ட‌த்திட‌ம் செய்ய‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ காரிய‌ம். அதையே இன்றும் செய்ய‌ முடியுமா? 7 முறை இல்லை, 7000 முறை சுற்றினாலும், தேவ‌னின் சித்த‌ம் இல்லாம‌ல் எந்த‌ ம‌திலும் விழாது.////

சரி சகோதரரே இந்த ஒரே ஒரு காரியத்தை மட்டும் எடுத்து இப்பொழுது விவாதிப்போம்.இது முன்பு நடந்தது என்று சொல்லாதீர்கள். அனனியா சப்பீராள் போல் இன்று வரை  
தேவன் சொல்வது ஓன்று மனிதன் எதையோ  செய்துகொண்டு அநேகர் தண்டனை வாங்கி கட்டிக்கொண்டுதான் 
இருக்கிறார்கள் எனவே தங்கள் கருத்துபோல்
 
7 முறை சுற்றினாலும் 7000௦முறை சுற்றினாலும் தேவனின் சித்தம் இல்லாமல் எதுவும் விழாது என்பது நல்ல கருத்து!
  
எப்படி எரிகோ மதில் விழவேண்டும் என்பது தேவனுடய சித்தமோ  அதுபோல் இஸ்ரவேலர்கள்  ஏழுமுறை அதை சுற்றவேண்டும் என்பதும் தேவனுடைய சித்தம்! 

இங்கு ஒரு தேவசித்தமும், அது நிறைவேற மனிதனிடம் தேவன் எதிர்பார்க்கும் ஒரு சித்தமும் (கட்டளை அல்லது விருப்பம்)  இருக்கிறது.
     
இப்பொழுது அவருடைய முதல்  சித்தமாகிய எரிகோ விழவேண்டும் என்றால் இரண்டாம் சித்தமாகிய மதிலை சுற்றிவருதலும்  நிறைவேறவேண்டும்.
 
நீங்கள் இப்பொழுது மதிலை சுற்றி வரமாட்டேன் என்று சொல்லி உம்முடைய சித்தம்தான் எப்படியும் நிறைவேறுமே நான் ஏன் சுற்றவேண்டும்   என்று  அங்கு நின்று பிடிவாதம் பிடித்தால், அதாவது நான் சுற்றிவராமலே மதில் விழவேண்டும் என்று தேனின் திட்டத்து மாறாக ஒரு திட்டத்தை  எதிர்பார்த்தால், இங்கு தேவனின் சித்தத்துக்கு எதிரா நீங்கள் சிந்திக்கிறீர்கள்! மேலும் தேவனின் சித்தம் நிறைவேற நீங்கள் தடையாக நிற்கிறீர்களேயற்றி அதற்க்கு வேறு எதுவும் காரணம் சொல்ல முடியாது!   
 
இப்பொழுது நீங்கள் சொல்வதுபோல்  தேவனின் சித்தம் நிச்சயம் நிறைவேறும்!  நிறைவேற வேண்டும்! எனவே அவர் அங்குள்ள  தடைகள் மற்றும் தடையாக நிற்கும்  எல்லாவற்றையும் அகற்றுவார் பிறகு அவரின் சொல் கேட்டு நடக்கும் வேறு யார் மூலமாவது தனது சித்தத்தை நிறைவேற்றுவார்.
 
ஆகானை சற்று நினைத்து பாருங்கள்.

ஆயி ஜெயிக்கப்பட வேண்டும் என்பது தேவனின் திட்டம்  அது நடக்க  ஆயியில் உள்ள தீட்டான   பொருட்களை யாரும் எடுக்க கூடாது என்பதும் தேவனின் சித்தம் அல்லது விருப்பம்.  இரண்டும் நிச்சயம் நிறைவேற வேண்டும்.  இடையில் வந்த ஆகான் தீட்டு பொருட்களை எடுத்து வைத்துகொண்டாலும் கர்த்தர் தன சித்தத்தை நிச்சயம் நிறைவெற்றி விடுவார் என்று எண்ணி  சித்தம்  இரண்டையும் நிறைவேறவிடாமல்  கெடுத்தான் இறுதியில் அவன் முடிவு உங்களுக்கு தெரியும். அவனை அகற்றிய பிறகு தவனின் திட்டம் சித்தம் எல்லாம் சரியாக நிறைவேறியது.

இதில் நீங்கள் ஆகானாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்த மற்றஜனங்களாக இருக்க விரும்புகிறீர்களா
  
பாவத்தையும் பாவ பழக்கவழக்கங்களையும் ஒழித்து  தேவனின் கரத்துக்குள் முழுமையாக தங்களை அர்ப்பணித்து,  அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடக்க விரும்பாதோர்   தாங்கள் செய்வதை நியாயப்படுத்த தங்களால் முடிந்தவரை விவாதிப்பதுண்டு 
ஆகினும் எல்லோருக்கும் மனசாட்சி என்று ஓன்று இருக்கிறது அது நிச்சயம் உணர்த்தும்!
 
என்னை மன்னித்துவிடுங்கள் நான் கோபமாக எதுவும் எழுதவில்லை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எழுதிவிட்டேன்  ஆகினும் அதில் தவறு எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை. ஏனெனில்
 
அப்போஸ்தலர் 13:41 அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்!  
அப்போஸ்தலர் 8:20 பேதுரு அவனை நோக்கி: உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.

மேற்கண்ட  வார்த்தைகள் எந்த ஆவியின் கனிகளால் பேசப்பட்டு எழுதப்பட்டுள்ளதோ அதே கனியில்தான் நானும் பேசினேன்.     
 
 ////என் தேவன் எனக்கு என்று நியமித்து வைத்திருக்கும் இடம் நிச்சயமாக அவராலே ஆசிர்வதிக்கப்பட்ட இடமாக தான் இருக்கும் என்பது தான் எனக்கு வேதம் தரும் விசுவாசம்.///

நீங்கள் தேவனின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு விரோதமாக நான் எதுவும் கூறவரவில்லை. அது நிறைவேரட்டும்  என்பதுதான் எனது 
விருப்பமும் கூட!  
 
ஆனால் கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்று வேதம் சொல்கிறதே  என்பதைத்தான்  இங்கு சொல்ல வருகிறேன்! செத்த விசுவாசத்தால் என்ன பயன்?         

நேபுகாத்நேச்சர் இஸ்ரவேலில் முக்கியமானவர்கள்   எல்லோரையும் 
சிறைபடுத்திகொண்டு போனபின்பு மீதம் இருந்தவர்கள்  பாவங்களை 
தொடர்ந்து செய்துகொண்டு    
 
24, ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது" என்று சொல்லி விசுவாசத்தோடு  இருந்தார்கள்
 
ஆனால் கர்த்தர் அவர்களுக்கு சொன்ன பதில் .

25 நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?
26. நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
27. நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் கெபிகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் சாவார்கள்
.
என்றும் உரைத்தார்.

தவறான  விசுவாசத்தாலோ
    கீழ்படிதல் மற்றும் கிரியை இல்லாத விசுவாசத்தால் பயனேதும் இல்லை


-- Edited by RAAJ on Wednesday 18th of November 2009 02:52:12 PM


-- Edited by RAAJ on Wednesday 18th of November 2009 02:53:16 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ராஜ் அவர்களே,

முதலாவது அழிவிற்கும் ஆக்கினை, அல்லது கோபாக்கினையும் ஒன்று என்கிற அர்த்தத்திலிருந்து வெளியேறுங்கள். மேலும் பவுலின் காலம் அவனுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தையும் உங்களுடன் ஒப்பீடுவதை நிறுத்துங்கள். பவுல் போல் இருக்க முடிந்தால், நாம் பவுலை எடுத்துக்காட்டாக காண்னிக்க முடியும். "என்னை பின் பற்றுங்கள், நான் கிறிஸ்துவை பின் ப்ற்றுகிறேன்" என்று பவுல் சொன்ன அதே தைரியமான வார்த்தைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சொல்லுவதை நான் ஒப்பு கொள்ளுகிறேன்.

விதைக்க ஒரு காலம் நிச்சயமாக இருந்தது. அதினால் தான் இன்று இந்த அளவிற்கு பேயர் கிறிஸ்தவர்களாவது இருக்கிறார்கள். ஆனால் எல்லா காலமும் விதைப்பின் காலம் என்று தப்பாக என்னி விடாதீர்கள். விதைக்க ஒரு காலம் இருக்குமென்றால் அறுக்க ஒரு காலம் உண்டு. அதை தான் மத். 13ல் நம் கர்த்தர் சொல்லுகிறார். "அறுப்போ உலகத்தின் முடிவு" என்று. முடிவு காலத்தில் நின்று விதைக்க புறப்பட்டோமென்றால் அது எப்படி ச‌ரி என்று நினைக்கிறீர்க‌ள் என்று புரிய‌வில்லை.

"ஆகையால் விரும்புகிற‌வ‌னாலும‌ல்ல‌, ஓடுகிற‌வனாலும‌ல்ல‌, இற‌ங்குகிற‌ தேவ‌னாலேயாம்" ரோம‌. 9:16.

"அப்ப‌டியிருக்க‌, ந‌டுகிற‌வனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்க்கிற‌வனாலும் ஒன்றுமில்லை, விளைய‌ செய்கிற‌ தேவ‌னால் எல்லாமாகும்" 1 கொரி. 3:7.

இன்று விதைக்கிறோம் என்று பெறுமை பாராட்ட‌ வேண்டிய‌தில்லை, ஏனென்றால் விளைய‌ செய்கிறா தேவ‌ன் த‌ம் சித்த‌த்தின்ப‌டி அனைத்தையும் செய்து முடிப்பார்.

ராஜ் எழுதுகிறார்:
"தவறான  விசுவாசத்தாலோ    கீழ்படிதல் மற்றும் கிரியை இல்லாத விசுவாசத்தால் பயனேதும் இல்லை"

ஆனால் வசனம் வேறு மாதிரியல்லவா சொல்லுகிறது,
அதாவது,

"கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனூடைய ஈவு; ஒருவரும் பெருமைப்பாராட்டாதப்படிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" எபே 2:8,9.

இதுலும் இந்த கிரியைகள் என்பது நாம் தேவனின் சாயலில் இருப்பதினால் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்ட‌தினால் இந்த‌ கிரியைக‌ள் என்ப‌து ந‌ம் அங்க‌மாக‌ தான் இருக்கிற‌து. ஆக‌ தேவ‌ன் கொடுத்த‌த‌ ஈவை நினைத்து பாருங்க‌ள், "இது உங்க‌ளால் உண்டான‌த‌ல்ல‌; இது கிரியைக‌ளினால் உண்டான‌த‌ல்ல‌"

ஏனென்றால், இன்று கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்று த‌ங்க‌ளை சொல்லி ஊரை ஏமாற்றுப‌வ‌ர்க‌ளை காட்டிலும் அதிக‌ ந‌ண்மைக‌ளை த‌ங்க‌ளின் கிரியைக‌ளின் மூல‌ம் வெளிப்ப‌டுத்துக்கொள்ப‌வ‌ர்க‌ள் நீங்க‌ள் என்னிப்பார்ப்ப‌தை காட்டிலும் அதிக‌மாக‌ இருக்கிறார்க‌ள் என்ப‌தை ம‌ற‌ந்து விடாதீர்க‌ள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
////அன்பு எழுதுகிறார்//இப்படி நான் கூறவில்லை. மனிதன் தன் சுயாதீனத்தில் செய்கிற காரியங்களைப் பொறுத்தவரை தேவனின் நிலையென்ன என்பது பற்றி நான் எழுதியதை, எல்லா

விஷயங்களுக்கும் பொதுவாக்கி, மேற்கூறிய முடிவை நீங்களாக எடுத்துள்ளீர்கள்.//

இந்த உங்கள் பதில் புரியவில்லை சகோதரரே. ஆக ஒரு சில விஷயங்களில் மட்டும் தேவன் தன் சித்தத்தை பூரண‌மாக நிறைவேற்றுகிறாரா? அப்படியென்றால் யார் யார் அல்லது எந்தெந்த

விஷயங்களில் என்று விளக்க நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.////


நான் சொல்லாத பல விஷயங்களை நீங்களாகவே முடிவு கட்டினால் அதற்கெல்லாம் எப்படி பதில் சொல்வது?.

பின்னால் சம்பவிக்கப்போகிற எல்லாவிஷயங்களயும் தேவனால் அறியமுடியும், அதன்படிதான் வேதாகம தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டுள்ள என்பதை எப்போதுமே நான் மறுக்கவில்லை.

ஆனால் பின்னால் சம்பவிக்கப்போகிற எல்லாவிஷயங்களையும் தேவன் அறிவதில்லை என்பதுதான் நான் சொல்வது.

அறிய “முடியும்” என்பதற்கும், அறிய “வில்லை” என்பதற்குமுள்ள வித்தியாசத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

God has the power to know all future things which are going to happen, but He uses that power only in certain things which he considers or wishes to know. In case of all other things, he takes decisions only after the things are happened. In particular, God doesn't use His power to know the things what a man going to do according to his free-will, unless it is absolutely necessary to know them.

உதாரணமாக, சவுலை ராஜாவாகத் தெரிந்தெடுக்கையில், அவர் தவறு செய்வாரா என்பதை அறிய தேவன் முயலவில்லை (He did not attempt). எனவே சவுல் தவறு செய்வார் என்பதை தேவன் அறியவில்லை. அதனால்தான், சவுல் தவறு செய்தபோது சாமுவேல் இவ்வாறு சொன்னார்.

1 சாமுவேல் 13:13 சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.

சாமுவேலின் இக்கூற்றிலிருந்து என்ன அறிகிறோம்? சவுல் தேவனின் கட்டளையைக் கைக்கொண்டால், அவருடைய ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதுதான் தேவனின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும் என அறிகிறோம். இப்படியிருக்க, சவுல் தவறுசெய்யப்போவது தேவனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், சவுலின் ராஜ்யத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் எனும் எண்ணம் தேவனுக்கு இருந்திருக்காதே!

யூதாஸ் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். யூதாஸ் என்ன செய்யப்போகிறான் என்பதை அறிந்த இயேசு, அவன் செய்யப்போகிற செயலுக்கு எதிராக ஏதாவது சொன்னாரா? செய்வதைச் சீக்கிரமாய் செய் என்றுதானே சொன்னார்? நடக்கப்போகிற ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டு, தேவனோ இயேசுவோ நாடகமாடுவதில்லை.

soulsolution wrote:
//பத்சேபாளிடத்தில் பிறந்த சாலமோனின் சந்த்ததியில்தான் கிறிஸ்து வருகிறார். ஆக தேவன் தாவீதைப் பாவத்துக்குள் தள்ளினாரா அல்லது அவனது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டாரா?//


சலொமோனின் சந்ததியில் கிறிஸ்து வந்தார் என்பது மெய்தான். ஆனால் சாலொமோனின் சந்ததியில்தான் கிறிஸ்து வரவேண்டும் என சலொமோன் பிறக்கும்முன்னதாகவே தீர்க்கதரிசனம் எதுவும் உரைக்கப்படதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

soulsolution wrote:
// 'உன் வித்தின் மூலம் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்' என்று மொட்டையாகச் சொன்னாரா அல்லது *condditions appy என்று போட்டாரா?

பார்வோன் மனதை அவர் ஏன் கடினப்படுத்தவேண்டும்?//


இக்கேள்விகளுக்கான பதில்களை நீங்களே வேதாகமத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். எனது வாதத்திற்கும் இக்கேள்விகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

soulsolution wrote:
//அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்று தேவனுக்குத் தெரியும் ஆனால் அவர்கள் யார் யார் என்பது அவருக்குத் தெரியாது அல்லவா?//


இக்கேள்வியை தேவனிடம்தான் கேட்கவேண்டும்.

soulsolution wrote:
//வெளிப்படுத்தல் புத்தகம் முழுக்க முழுக்க இந்த 2000ம் ஆண்டுகளாக சபையிலும், உலகிலும் நடக்கும், நடக்கப்போகும் காரியங்கள்மட்டுமே மிகத்துல்லியமாக எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இருக்கும் சபைகளின் நிலைதான் ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டது.//


ஓஹோ, அப்படியா?

soulsolution wrote:
//ஆபிரகாமின் மூதாதையர்களோ, ஆபிரகாமோ, ஈசாக்கோ, யாக்கோபோ ஒருவேளை "தற்செயலாக" திருமணமாகாமலேயே மரித்திருந்தால் இன்றைய இஸ்ரேல் வந்தே இருக்காதே?//


இருக்கலாம், அதனால் என்ன கெட்டிருக்கும்?

soulsolution wrote:
//ஒருவேளை தாவீது யோக்கியனாக இருந்திருந்தால் இயேசுவின் வம்சாவழி சாலமோனல்லாத வேறொருவரிடமிருந்து வந்திருக்குமோ?//


இருக்கலாம்.

soulsolution wrote:
//இது போன்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு நீங்கள் பதில் தர வேண்டியிருக்கும், உங்கள் வாதத்தில் முரண்டு பிடித்தால்.... //


முதலாவது எனது வாதம் என்னவென்பதை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். புரிந்து கொண்டு எனக்குத் திருப்திகரமான விளக்கம் தாருங்கள். அதுவரை எனது வாதத்தில் நான் முரண்டு பிடிக்கத்தான் வேண்டியதிருக்கும். Sorry brother.


-- Edited by anbu57 on Wednesday 18th of November 2009 05:51:15 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

///"அப்ப‌டியிருக்க‌, ந‌டுகிற‌வனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்க்கிற‌வனாலும் ஒன்றுமில்லை, விளைய‌ செய்கிற‌ தேவ‌னால் எல்லாமாகும்" 1 கொரி. 3:7.////


இங்கு விளைவை பற்றி நான் கருத்து கூற வரவில்லை சகோதரரே!  அது நிச்சயம் தேவனாலேயே ஆகும்! ஆனால் நட்டுவதும்  நீர் பாச்சுவதும் யாரால் ஆகும்? அதை யார் செய்யவேண்டும் என்று வேதம் கூறுகிறது?

அது ஒன்றுமில்லாத  காரியமானாலும் நாம் செய்ய வேண்டிய காரியமாகிய  நட்டாமல் நீர்பாச்சாமல் கதிர் எதில் விளையும்? அப்படி விளையும்  என்று எதிர்பார்க்கும்  எதிர்பார்ப்பு எவ்விதத்தில்  சரியானது?   

வானத்திலிருந்து மன்னாவை தந்தாலும் அதை சேகரித்து 
இடித்து உணவாக்குவது நம்முடைய வேலையல்லவா? 
 
  

 ////"கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனூடைய ஈவு; ஒருவரும் பெருமைப்பாராட்டாதப்படிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" எபே 2:8,9.////

புதை குழியில் அமிழ்ந்து  கிடந்தது தானாக  வெளியில் வரமுடியாமல்  சாக இருந்த ஒருவனை அந்த வழியே வந்த ஒருவர் பாவம் பார்த்து கரம்பிடித்து இழுத்து கரையில்  விட்டாராம். பிறகு அந்த மனிதனிடம் இதோ சாக இருந்த  உன்னை காப்பாற்றிவிட்டேன்  இனி இதுபோல் குழியில் வந்து  விழாமல்  பார்த்து நடந்துகொள்
என்று கூறினாராம்.

ஆனால் உயிர்தப்பியவன் சொன்னானாம் 
நான் எந்த  முயர்ச்சியும் எடுக்காமலேயே  என்னை நீங்கள் 
காப்பாற்றிவிட்டீர்கள் இனியும் நான் எந்த 
முயர்ச்சியும் 
எடுக்கபோவது  இல்லை,   எனது  வாழ்நாளெல்லாம் என்னை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்வதுபோல் இருக்கிறது உங்கள் கருத்து.

 
ஆதாமின் பாவத்திலிருந்து வெளியில் வரமுடியாமல் மரித்துகொண்டிருந்த நம்மை, நாமே இரட்சிக்க முடியாது என்ற காரணத்தால் ஆண்டவர் நமக்கு கரம்கொடுத்தார்! 
அவரன்றி இரட்சிப்பு இல்லை. மேலும் அந்த இரட்சிப்பை எந்த கிரியை செய்தாலும் நம்மால் பெறவும் முடியவே முடியாது, அதை அவர் ஒருவரே செய்யமுடியும்!  எனவே நம்மிடம் எந்த செயலையும் எதிர்பார்க்காமல் செய்து முடித்தார்! அது நிச்சயம் தேவனுடய ஈவு தான்!   

அதையே 
சாக்காக வைத்துகொண்டு நீர் சிலுவையை சுமந்தது போதாது  கடைசிவரை என்னையும்  தூக்கி சுமந்து செல்லும் என்று சொல்லுவது எதற்கு ஒப்பாக இருக்கிறது தெரியுமா?
 
ஒரு மனிதன் தன்னை தானே பெற்றுக்கொள்ள முடியாது நிச்சயம் ஒரு அம்மா  அப்பாதான் அவனை பெற்றிருக்க முடியும். தன்னை பெற்ற   அந்த அம்மாஅப்பாவை பார்த்து என்னை பெற்றுவிட்டீர்கள் அல்லவா?  கடைசிவரை நீங்கள்தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று அடம்பிடிப்பதுபோல் உள்ளது 
 
பிள்ளையால் சுயமாய் ஒரு காரியத்தை செய்யமுடியாத பட்சத்தில் தகப்பனின் உதவியை  எதிர்பார்ப்பது தவறில்லை! 
ஆனால் சுயமாக  செய்ய முடிந்தும் தகப்பன்தான் என்னை பெற்றார்  எனவே அவரே செய்யட்டும் என்று 
சொல்லிக்கொண்டு மகன் சும்மா இருந்தால் காலமெல்லாம் மகனை தூக்கி சுமப்பீர்களா? மனநலம்
இல்லாத குழந்தைகள்தான் அப்படி இருக்கும்!
  
அதுபோல்  நம்மால் செய்ய முடியாத செயல்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தேவன் செய்து முடிப்பார் அது அவருடைய இறக்கம் கிருபை கருணை!   ஆனால்  நம்மிடம் செய்யசொன்ன  நம்மால் செய்யமுடிந்த  காரியங்களை நாம்தான் செய்யவேண்டும்.  

தகப்பன் வந்து தலையை  பிடித்து குளிப்பாட்டிவிடுவார் என்று தண்ணியை தொடாமல் இருக்கமுடியாது!    
 
இதற்குமேல் விளக்கமாக வேறென்ன  சொல்வது?   
 

 

 



-- Edited by RAAJ on Thursday 19th of November 2009 08:51:54 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//soulsolution wrote:
//வெளிப்படுத்தல் புத்தகம் முழுக்க முழுக்க இந்த 2000ம் ஆண்டுகளாக சபையிலும், உலகிலும் நடக்கும், நடக்கப்போகும் காரியங்கள்மட்டுமே மிகத்துல்லியமாக எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இருக்கும் சபைகளின் நிலைதான் ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டது.//


ஓஹோ, அப்படியா?//


வெளிப்படுத்தலில் வரும் முதலாவது தூதன் யோவான், இரண்டாவது தூதன் அப்.பவுல்.... என்றும் அறியலாம் அந்திக்கிறிஸ்து என்பது போலிசபை என்பதும், கள்ளத்தீர்க்கதரிசி என்பது துருபதேசம் என்பதும் கொம்புகள் குறிப்பிட்ட தேசங்கள் என்பதும் இது போன்ற காரியங்கள் துல்லியமாக 'இவைகள்தான் நடக்கும்' என்று எழுதப்பட்டுள்ளது. அவைகள் நடந்து கொண்டும் இருக்கிறது. இவைகளெல்லாம் உங்களைப் பொறுத்தவரை 'தற்செயலாக' நடக்கிறது என்னைப் பொறுத்தவரை தேவ சித்தம் , திட்டம் பூரணமாக நிறைவேறுகிறது.



'The wicked shall not understand'.


-- Edited by soulsolution on Sunday 22nd of November 2009 02:56:39 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்; என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்; நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்; என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்; முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது." ச‌ங். 139,

போன்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ள் எல்லா ம‌னித‌ர்க‌ளுக்கு தான் பொருந்தும். ப‌ல‌ர் நினைப்ப‌து போல் தேவ‌னுக்கு தெரியும், ஆனால் தெரியாது என்கிற‌ சூழ்நிலையில் அவ‌ர் இல்லை. முத‌லில் இவ‌ர்க‌ள் செய்ய‌ட்டும், அத‌ற்கு ஏற்ற‌ வித‌மாக‌ பிற‌பாடு மாற்றிக்கொள்ளுகிறேன் என்ற‌ல்ல‌ தேவ‌னின் ஞான‌ம். ச‌ங்கீத‌க்கார‌ன் இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு அறிவை என்னை ஆச்ச‌ரிய‌ ப‌ட்டு, இது அவ‌ன் அறிவுக்கெட்டாத‌ ஒரு விந்த்யை என்று புக‌ழ்கிறான்.

இப்ப‌டி ப‌ட்ட‌ தேவ‌ ஞான‌த்தை புக‌ழாம‌ல் இருந்தாலும் ப‌ர‌வில்லை, குறைந்த‌ ப‌ட்ச‌ம், அவ‌ருக்கு இது எல்லாம் தெரியாது என்று த‌ய‌வு செய்து அவ‌ரை கொச்சை ப‌டுத்தாம‌ல் இருக்க‌லாமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

தேவனின் கரத்தினுள் தன்னை ஒப்புகொடுத்த ஒரு மனிதனின் எல்லா செயல்களையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் பிள்ளைகளின் செயலை அவர் அறியாமல் இருக்கிறதெப்படி ஆனால் சாத்தானின் கரத்தினுள் இருக்கும் மனிதன் ஒரு மதில் மேல் பூனை! அவன் எங்கு பாய்வான் எப்படி பாய்வான் என்பது யாருக்கும் தெரியாது!

அதன் அடிப்படையில் தேவன் தன சொன்ன வார்த்தைகளில் கூட மாறுதல்களை செய்கிறார்!

சரி இதெல்லாம் விடுங்கள்!

"நியாயதீர்ப்பு நாளிலே நீதியை கற்றுகொள்வார்கள்" என்று சொல்லும் வசனமே "துன்மார்க்கன் நீதியை கற்றுகொள்வதில்லை" என்று சொல்கிறது!

அந்த நீதியை கற்று கொள்ளாத துன்மார்க்கன் சாத்தான் ஒருவனே அவன் அழிவுகேன்றே தேவனால் உருவானவன் என்று சொல்கிறீர்கள்

ஆனால் கர்த்தர் "நான் துன்மார்க்கனின் சாவை விரும்பவில்லை" என்று சொல்கிறாரே இதற்க்கான விளக்கம் தரவும்.




__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

முதலில் தேவனின் தன்மையை (அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்கிற மகத்துவத்தை) ஒப்புக்கொள்ளுங்கள், பிறகு அதற்கு உண்டான பதிலை வசனத்துடன் தருகிறேன். இதற்காக தான் இந்த தளமே இருக்கிறது. உண்மை என்றாலே பொதுவாக மனிதர்கள் ஏற்றுக்கொள்வது கஷ்ட்டம், அப்படியே தான் கிறிஸ்தவ உண்மைகளை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்வது மிகவும் சிரமம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 3 4 | Page of 4  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard