kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நம்ப முடிவதில்லை!!


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
RE: நம்ப முடிவதில்லை!!


soulsolution wrote:
வேதம் தெளிவாக சொல்லுவது 'காதுள்ளவன் கேட்கக்கடவன்' என்பதே. மேலும் "பிதா ஒருவனை என்னிடத்தில் இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்" 

 

பிதா யாரை இழுத்துகொல்வார் யாரை இழுத்துக்கொள்ளமாட்டார் என்பது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் பிதா இழுத்துக்கொள்ள விரும்பும் ஒருவருக்கு இயேசு சொல்வதுபோல் நாம் சென்று சுவிசேஷத்தை அறிவிக்காவிட்டால். நமது தவறாகி போய்விடும். அதற்காகத்தான் நம்மை
அவர் அழைத்திருக்கிறார். 
 
எசேக்கியேல் 3:18 சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.சாகவே சாவை என்று துன்மார்க்கனுக்கு சொல்லும் போது

இவ்வாறு வசனம் எச்சரிக்கையில் எல்லாம்  பிதாவுக்கு தெரியும் என்று நிர்விசாரமாய் இருப்பது சரியானதல்ல.



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Executive

Status: Offline
Posts: 425
Date:

நீங்கள் சொல்கிறபடி மனுஷகுமாரன் வரும்போது, எல்லோரும் சடிதியாக அழிவார்கள் என்பது சரீர மரணத்தையே (அதாவது முதலாம் மரணத்தையே) குறிக்கிறதென வைத்துக் கொள்வோம். அப்படி நடப்பதில் என்ன விசேஷம் இருக்கிறது? உலகில் எல்லோருக்கும் மரணம் சொல்லிக்கொண்டா வருகிறது?

வயதானவர்கள், மற்றும் மரணத்துக்கேதுவான வியாதியிலுள்ளவர்கள் போன்ற சிலருக்கு மட்டுந்தானே நிதானமான சாவு வருகிறது? மற்ற அனைவருக்கும் எதிர்பாராத சடிதியான சாவுதானே வருகிறது? அதேபோல மனுஷகுமாரான் வரும்போதும் சடிதியான சாவு வருவதில் என்ன விசேஷம் அல்லது விந்தை இருக்கிறது?

எனது பல கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்வதேயில்லை. முக்கியமான கேள்விகளுக்கு பதில் சொல்லாவிடில், நான் விவாதிப்பதில் பயனில்லை.

1 தெச. 5:3-ஐப் பொறுத்தவரை நம் விவாதம் முடிவில்லாததாக போய்க்கொண்டே இருக்கிறது என்பதால்தான், அழிவைக் குறித்த மற்ற பல வசனங்களுக்கு பதில் சொல்லும்படி கேட்டேன். ஆனால் அவற்றிற்கு நீங்கள் பதில் சொல்லவேயில்லை. மீண்டும் அவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

anbu57 wrote:
//பின்வரும் வசனங்களை படித்துப்பாருங்கள். அவற்றில் அடைப்புக் குறிக்குள் முதலாம் மரணம் என நான் சேர்த்துள்ளது உங்கள் கருத்தின்படிதானேயொழிய எனது கருத்தின்படியல்ல.

கலா. 5:15 ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தால் (முதலாம் மரணத்தின் மூலம்) அழிவீர்கள்.

யோவான் 8:24 நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் (முதலாம் மரணத்திற்குள்ளாகி) சாவீர்கள்.

பிலிப்பியர் 3:19 அவர்களுடைய முடிவு (முதலாம் மரணமாகிய) அழிவு ..

2 தெச. 1:10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும் ... வல்லமையிலிருந்தும் நீங்கலாகி (முதலாம் மரணமெனும்) நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

1 தீமோ. 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் (முதலாம் மரணமாகிய) அழிவிலும் அமிழ்த்துகிற ... பலவித இச்சைகளில் விழுவார்கள்.

2 பேதுரு 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக் கொள்வார்கள். பூர்வகால முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய (முதலாம் மரணமாகிய) அழிவு உறங்காது.

ரோமர் 1:30-32 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், ... வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய் ... இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் (முதலாம்) மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும் .....

ரோமர் 7:10 இப்படியிருக்க ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு (முதலாம்) மரணத்திற்கேதுவாயிருக்கக் கண்டேன்.

ரோமர் 8:6 மாம்சசிந்தை (முதலாம்) மரணம் ...

யாக்கோபு 5:20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை (முதலாம்) மரணத்தினின்று இரட்சித்து, ....

1 யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால் (முதலாம்) மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் (முதலாம்) மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.

உங்கள் கூற்றின்படி, வேதவசனங்கள் இப்படியாக எழுதப்பட்டிருந்தால் அது நகைப்பிற்குரியதாகத்தானே இருந்திருக்கும்?//

ஏற்கனவே முதலாம் மரணத்தைச் சுமந்துகொண்டிருக்கும் மனிதனிடம் மேற்கூறியவாறு சொல்லக் காரணம் என்ன? பதில் சொல்லுங்கள் சகோதரரே!

உங்களால் பதில் சொல்ல ஏதுவான வசனங்களை மட்டும் பிடித்துக்கொண்டு மற்ற வசனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறீர்கள். உங்களின் இத்தகைய செயலைப் பார்க்கும்போது,
உண்மையாகவே நீங்கள் உண்மையைத்தான் தேடுகிறீர்களா (seeking truth), அல்லது உங்கள் கருத்தை நிலநாட்ட முற்படுகிறீர்களா என நினைக்கத் தோன்றுகிறது.

-- Edited by anbu57 on Saturday 7th of November 2009 01:04:15 AM

-- Edited by anbu57 on Saturday 7th of November 2009 02:05:59 AM

-- Edited by anbu57 on Saturday 7th of November 2009 05:50:35 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே!
உங்கள் கருத்துப்படி பின்வரும் வசனங்களைப் பொருள் கொள்கையில், அவை தருகிற இணையான கருத்தைப் படித்துப் பாருங்கள்.

கலா. 5:15 ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தால் (முதலாம் மரணத்தின் மூலம்) அழிவீர்கள்.
(நீங்கள் முதலாம் மரணத்திற்கு தப்பவேண்டுமெனில் ஒருவரையொருவர் கடித்துப் பட்சியாதிருப்பது அவசியம்)

யோவான் 8:24 நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் (முதலாம் மரணத்திற்குள்ளாகி) சாவீர்கள்.
(நீங்கள் முதலாம் மரணத்திற்கு தப்பவேண்டுமெனில் நானே அவர் என்பதை விசுவாசிப்பது அவசியம்)

பிலிப்பியர் 3:19 அவர்களுடைய முடிவு (முதலாம் மரணமாகிய) அழிவு ..
(மற்றவர்களின் முதலாம் மரணத்தில் அழியமாட்டார்கள்)

2 தெச. 1:10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும் ... வல்லமையிலிருந்தும் நீங்கலாகி (முதலாம் மரணமெனும்) நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.
(மற்றவர்கள் முதலாம் மரணமெனும் நித்திய அழிவாகிய தண்டனைக்குத் தப்ப வாய்ப்புள்ளது.)

1 தீமோ. 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் (முதலாம் மரணமாகிய) அழிவிலும் அமிழ்த்துகிற ... பலவித இச்சைகளில் விழுவார்கள்.
(மற்ரவர்கள், சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் (முதலாம் மரணமாகிய) அழிவிலும் அமிழ்த்துகிற ... பலவித இச்சைகளில் விழமாட்டார்கள்.)

2 பேதுரு 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக் கொள்வார்கள். பூர்வகால முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய (முதலாம் மரணமாகிய) அழிவு உறங்காது.
(மற்றவர்களுக்கு முதலாம் மரணமாகிய அழிவு உறங்கிவிடும், அதாவது முதலாம் மரணம் நேராது)

ரோமர் 1:30-32 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், ... வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய் ... இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் (முதலாம்) மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும் .....
(மற்றவர்கள் முதலாம் மரணத்திற்குப் பாத்திரமானவர்கள் அல்ல)

ரோமர் 7:10 இப்படியிருக்க ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு (முதலாம்) மரணத்திற்கேதுவாயிருக்கக் கண்டேன்.
(ஆதாமின் பாவம் எனக்கு முதலாம் மரணத்திற்கேதுவானதல்ல, கற்பனைதான் எனக்கு முதலாம் மரணத்திற்கேதுவானது.

ரோமர் 8:6 மாம்சசிந்தை (முதலாம்) மரணம் ...
(ஆதாமின் பாவமல்ல, என் மாம்சசிந்தைதான் எனக்கு முதலாம் மரணம்)

யாக்கோபு 5:20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை (முதலாம்) மரணத்தினின்று இரட்சித்து, ....
(தப்பிப்போன மார்க்கத்தினின்று ஒரு பாவியைத் திருப்பினால், அந்தப் பாவிக்கு முதலாம் மரணம் நேராது)

1 யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால் (முதலாம்) மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் (முதலாம்) மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.
(இதைச் சொன்ன யோவானுக்கு முதலாம் மரணம் நேர்ந்தது, எனவே அவர் தன் சகோதரனிடத்தில் அன்புகூரவில்லை.)

மேற்கூறிய வசனங்களைச் சொன்ன பவுல், பேதுரு, யோவான் அனைவரும் முதலாம் மரணத்தில் மரித்தனர்: அவர்கள் யாரைக் கடித்துப் பட்சித்தார்கள், அல்லது இயேசுவை விசுவாசியாமற் போனார்களா, அல்லது பிலி. 3:19 சொல்கிறபடி அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞராயிருந்தனரா, அவர்களின் தேவன் வயிறாக இருந்ததா, அவர்கள் பூமிக்கடுத்தவற்றைச் சிந்தித்தார்களா, அல்லது 2 தெச். 1:7-10 கூறுகிறபடி அவர்கள் தேவனை அறியாதிருந்தனரா, இயேசுவின் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாதிருந்தனரா, அல்லது ஐசுவரியவான்களாக விரும்பினார்களா, அல்லது பொருளாசையுடையவர்களாய் தந்திரமான வார்த்தைகளால் ஜனங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்தினார்களா, அல்லது ரோமர் 1:30-32 வசனங்களில் காணப்படும் அநியாயங்களில் எந்த அநியாயத்தைச் செய்தனர்? இக்கேள்விக்குப் பதில் தெரிந்தவர்கள், தய்வுசெய்து சொல்லவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,
 உங்கள் பதிவுகள் நீங்கள் புரிந்துக்கொண்டது, அதை மாத்திரமே தான் தாங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறீர்கள். 1 தெச 5:3ல் உள்ள சடிதியை நீங்கள் தான் தவறாக் புறிந்து வாதிடுகிறீர்கள். சடிதி என்றால் unaware. சடிதி என்றால் உடணடியாக, அல்லது நொடிப்பொழுதில் என்று நீங்கள் அர்த்தம் கொண்டு வாதிடுவதால் தான் இத்துனை கேள்விகள்!. Unaware என்பதற்கும் Sudden என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு சடிதி என்பது உடனடி அல்ல மாறாக எதிர்பாராதது என்று அர்த்தம் வரும். அதற்கு தான் அந்த வசனம் அப்படி இருக்கிறது. அதாவது எல்லாம் சவுக்கியம், சமாதானம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது (நோவா காலத்தில் பெண் எடுத்து பெண் கொடுத்து, புசித்து குடித்து கொண்டிருந்தது போல்) சடிதியில், அதாவது அவர்கள் எதிர்ப்பாராத மரணம் சம்பவிக்கும். அந்த மரணம் நொடிபொழுதான மரணம் என்று இல்லை, மாறாக நிதானமானது, ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்து சம்பவிக்கும் காரியம் தான் (மழை வந்த நாளிலே அனைவரும் மரிக்கவில்லை, மரணங்கள் நிக்ழ நாட்கள் எடுத்தது) அதே போல் தான் எல்லாம் நலமாக இருக்கிற்து என்று நினைத்துக்கொண்டிருக்கும் காலம் இருக்கும் போது மரணங்கள் சம்பவிக்கும், நீங்கள் நினைப்பது போல் நொடிபொழுது மரணங்கள் அல்ல. இது சம்பதமாக நான் உங்களிடம் கேட்ட கேள்விக்கு நீங்களும் தான் பதில் தரவில்லை.

"1 தெச 5:2 வரை அவர் இரண்டாம் வருகையை குறித்து எழுதுவிட்டு, 3ம் வசனம் முதல் பொதுவானதை எழுதுகிறார் என்பதற்கு என்ன அர்த்தம். அது எந்த காலத்தை குறிக்கிறது என்பதை தெளிவு படுத்துங்களே? இல்லை 3ம் வசனம் பொதுவாக பேசிவிட்டு, மீண்டும் 4ம் வசனம் இரண்டாம் வருகையை சொல்லிவிட்டு மீண்டும் பொதுவானதை தொடர்கிறாரா?" போன்ற சில கேள்விகளுக்கு உங்களிடமிருந்து பதில் இல்லையே.

மேலும் ம‌ர‌ண‌ம் என்ப‌து ச‌டிதியான‌து இல்லை, பிற‌ப்பு தொட‌ங்கி ஒவ்வொரு ம‌னித‌னும் ம‌ர‌ண‌த்தை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறான். ஆக‌வே வ‌ய‌தாகி போய் ம‌ரித்தால் அது சாதார‌ன‌ ம‌ர‌ன‌ம் என்றும், இளைஞ்னாக‌ ம‌ரித்தால் அது ச‌டிதி ம‌ர‌ண‌ம் என்ப‌து நீங்க‌ள் கொண்டிருக்கும் அர்த்த‌ம்.

ம‌த். 24:37-39ஐ குறித்து ஒன்றும் எழுதாம‌ல் யோனாவை குறித்து ச‌ம்ப‌ந்த‌மே இல்லாம‌ல் ஏன் சொல்லியிருக்கீற்க‌ள் என்ப‌து தெரிய‌வில்லை?

1 தெச‌ 5:3யைப் ப‌ற்றி நான் சொல்லிவிட்டேன், நீங்க‌ள் தான் நான் மேலே கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் த‌ர‌ வேண்டும்.

அன்பு57 எழுதுகிறார்:
"ஏற்கனவே முதலாம் மரணத்தைச் சுமந்துகொண்டிருக்கும் மனிதனிடம் மேற்கூறியவாறு சொல்லக் காரணம் என்ன? பதில் சொல்லுங்கள் சகோதரரே!"

உங்க‌ள் கூற்றுப்ப‌டி இவை எல்லாம் இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்தை குறிக்கிற‌து என்றால் இந்த‌ பூமியில் உயிர்த்தெழ‌ ஒரு ம‌னித‌னும் இருக்க‌ முடியாது. மாறாக‌ இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள் எல்லாம், அந்த‌ சாவ‌மை என்கிற‌ நிலையை இழ‌ந்த‌தை குறித்தே சொல்லியிருக்கிற‌து. அதாவ‌து கிறிஸ்துவின் சாய‌லாக‌ (ஆவியாக‌) மாறாம‌ல் மீண்டும் மாம்ச‌த்தில் உயிர்தெழும் ச‌ம்ப‌வ‌ம்.

என் கூற்றுப‌டி முத‌லாம் ம‌ர‌ண‌ம் என்று போட‌வில்லை, ச‌ரி, உங்க‌ள் கூற்றுப‌டி இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் என்று கூட‌ தான் போட‌வில்லை. இத‌ற்கு என்ன‌ சொல்லுவீர்க‌ள்?

நாங்க‌ள் யாரையும் எங்க‌ள் க‌ருத்துக்க‌ளை ஏற்றுக்கொள்ள‌ சொல்ல‌வில்லை. ஏனென்றால், எல்லாம் வெளிச்ச‌த்திற்கு வ‌ரும் என்று ந‌ம்புகிற‌வ‌ர்க‌ள் நாங்க‌ள். ஆனால் உங்க‌ள் க‌ருத்து தான் எல்லா ம‌னித‌ர்க‌ளும் இப்ப‌டி எல்லாவ‌ற்றையும் அறிய‌ முடியாம‌ல் போய் விடும் என்கிற‌து போல் இருக்கிற‌து. ச‌த்திய‌த்தை இன்று எல்லோரும் ஏற்றுக்கொள்ள‌ முடிவதில்லை. ஆனால் இத‌ற்கென்று தேவ‌ன் ஒரு கால‌ம் வைத்திருக்கிறார், அப்பொழுது "ச‌முத்திர‌ம் ஜ‌ல‌த்தினால் நிறைந்திருக்கிற‌து போல், பூமி தேவ‌னை அறிகிற‌ அறிவினால் நிறைந்திருக்கும்" (ஏசா 11:9; ஆப‌ 2:14) என்று நாங்க‌ள் ந‌ம்புவ‌தால், நாங்க‌ள் யாரையும் எங்க‌ள் வாத‌த்தை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் உங்க‌ள் இர‌ண்டாம் ம‌ர‌ண‌ செய்திக‌ள், இந்த‌ வ‌ச‌ன‌த்திற்கு எதிராக‌ இருக்கிற‌தே. இந்த‌ பூமியே தேவ‌னை அறிகிற‌ அறிவினால் நிற‌ம்பிவிட்ட‌ பிற‌கு யாருக்கு இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் இருக்க‌ முடியும் என்று தெரிய‌வில்லை? (எங்க‌ள் க‌ருத்து, சாத்தான் ம‌ற்றும் அவ‌ன் கிறிய‌க்ளுக்கு என்றென்றைக்கும் ஒரு அழிவு).

தேவ‌ன் எல்லாவ‌ற்றிர்க்கும் ஒரு கால‌ம் வைத்திருக்கிறார், அப்பொழுது அவ‌ர் அதில் எல்லாவ‌ற்றையும் நேர்த்தியாக‌ தான் செய்து முடிப்பார், அழித்து முடிக்க‌ம்மாட்டார் என்ப‌து நாங்க‌ள் தேவ‌ அன்பின் மேல் வைத்திருக்கும் விசுவாச‌ம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ச‌கோ அன்பு57:
"கலா. 5:15 ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தால் (முதலாம் மரணத்தின் மூலம்) அழிவீர்கள்.
(நீங்கள் முதலாம் மரணத்திற்கு தப்பவேண்டுமெனில் ஒருவரையொருவர் கடித்துப் பட்சியாதிருப்பது அவசியம்)"

 "நீங்க‌ள் கிறிஸ்துவின் சாய‌லில் அதாவ‌து சாவாமையை த‌ரிக்க‌ வேண்டும் என்றால்,  ஒருவ‌ரையொருவ‌ர் க‌டித்துப் பட்சியாதிருப்ப‌து அவ‌சிய‌ம், நீங்க‌ள் மாம்ச‌த்தில் உயிர்த்தெழ‌ வேண்டுமென்றால் இப்ப‌டி இருக்க‌லாம்" என்று அர்த்த‌ம் கொள்ளுகிறேன். இதையே நீங்கள் கொடுத்த எல்லா வசனங்களிலும் போட்டு வாசித்து பாருங்கள். இப்ப்ழொது நீங்க‌ள் க‌டித்துப் ப‌ட்சித்தாலும் நீங்க‌ள் முத‌ல் ம‌ர‌ண‌த்திலிருந்து உயிர்த்தெழும் போது இவை எல்லாம் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டிருக்கும், இல்லாவிட்டால் உயிர்த்தெழ‌ முடியாது. முத‌ல் ம‌ர‌ண‌த்திற்கு முன் இப்படிப்பட்ட காரியங்கள் செய்தால் இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் ச‌ம்ப‌விக்கும் என்று சொல்லுவ‌து தான் ந‌கைச்சுவையாக‌ இருக்கிற‌து.

உங்க‌ள் க‌ருத்தின்ப‌டி இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள் எல்லாம் இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்தை குறிப்பிட்டு எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்றால், இந்த‌ பூமி வெறுமையாக‌ தான் இருக்க‌ வேண்டும்,
நாங்க‌ள் புரிந்துக்கொண்ட‌ ஒரு விஷ‌ய‌ம், "எல்லா ம‌னித‌ர்க‌ளும் பாவ‌த்தின் விளைவாக‌ ம‌ரிக்கிறார்க‌ள், இந்த‌ பாவ‌ங்க‌ள் எல்லாம் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டால் தான் எல்லாரும் உயிர்த்தெழ‌ முடியும். இத‌ற்காக‌ தான் இயேசு கிறிஸ்து எல்லாரையும் மீட்கும் பொருளாக‌ த‌ன்னை கொடுத்தார். சாத்தானும் அவன் கொண்டு வரும் கிரியகளுக்கு தான் இரண்டாம் மரணம். பிசாசின் கிரியைகளை அழிக்கவே மனுஷக்குமாரன் வந்தார், மனிதர்களை அழிக்க அல்ல‌"

நீங்க‌ள் சொல்லுவ‌து, "இப்பொழுது செய்ய‌ப்ப‌டும் பாவ‌த்தை க‌ண்டித்து தான் இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள் இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்தை குறித்து சொல்லுகிற‌து" என்று.

நான் கேட்ப‌து என்ன‌வென்றால், இங்கே சொல்ல‌ப்ப‌ட்ட‌ பாவ‌ங்க‌ளில் தான் இன்று எல்லா ம‌னித‌ர்க‌ளும் ம‌ரிக்கிறார்க‌ள், அப்ப‌டி என்றால் அவ‌ர்க‌ளுக்கு உயிர்த்தெழுத‌ல் இல்லையா? அப்ப‌டி என்றால், "ஆதாமுக்குள் எல்லோரும் ம‌ரிக்கிற‌து போல், கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்த்தெழுவார்க‌ள்" என்ப‌து எல்லாம் பிழையான‌ வ‌ச‌ன‌ங்க‌ளா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//ம‌த். 24:37-39ஐ குறித்து ஒன்றும் எழுதாம‌ல் யோனாவை குறித்து ச‌ம்ப‌ந்த‌மே இல்லாம‌ல் ஏன் சொல்லியிருக்கீற்க‌ள் என்ப‌து தெரிய‌வில்லை?//

சம்பந்தமே இல்லாமல் யோனாவைக் குறித்து சொன்னபகுதியை எடுத்துவிட்டேன் சகோதரரே!
மத். 24:39-39 மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை முதலில் எழுதுங்கள், அதன்பின் நான் பதில் தருகிறேன்.

bereans wrote:
//1 தெச‌ 5:3யைப் ப‌ற்றி நான் சொல்லிவிட்டேன், நீங்க‌ள் தான் நான் மேலே கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் த‌ர‌ வேண்டும்.//

இவ்வசனம் பற்றிய நம் விவாதம் பற்றி ஏற்கனவே பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன்.

anbu57 wrote:
//2 தெசலோனிக்கேயர் 1:10 (நித்திய அழிவு); மாற்கு 3:29 (என்றென்றைக்கும் மன்னிப்பில்லாத நித்திய ஆக்கினை); யோவான் 3:36 (குமாரனை விசுவாசியாதவன் ஜீவனைக் காண்பதில்லை); யோவான் 12:25 (ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்); கலாத்தியர் 6:8 (மாம்சத்திற்கென்று விதைப்பவன் மாம்சத்தால் அழிவை அறுப்பான்); 1 யோவான் 3:15 (மனுஷ கொலைபாதகனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது); பிலிப்பியர் 3:19 (பூமிக்கடுத்தவைகளைச் சிந்திப்போரின் முடிவு அழிவு); 1 தெசலோனிக்கேயர் 5:3 (அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்); 2 பேதுரு 2:3 (அவர்களுடைய அழிவு உறங்காது); தானியேல் 12:2 (நித்திய நிந்தை மற்றும் நித்திய இகழ்ச்சிக்காக விழித்தெழுவார்கள்)

இன்னும் சங்கீதம் 37:9,20 பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், துன்மார்க்கர் அழிந்து போவார்கள் என்கின்றன; இவற்றை இப்பூமிக்குரிய மரணம் எனக் கூறமாட்டீர்கள் என நம்புகிறேன்.//

இவற்றில் 1 தெச. 5:3 பற்றி மட்டும் பதில் தந்து அதைக் குறித்த விவாதம் முடிவுபெறாத நிலையில் உள்ளது. எனவே அது பற்றி விவாதிப்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வோம். அது தவிர பல வசனங்கள் தந்துள்ளேன். அந்த வசனங்கள் கூறுகிற அழிவை அடைப்புக் குறிக்குள் தந்துள்ளேன். அந்த அழிவுகள் எல்லாம் முதலாம் மரணம்தான் என்கிறீர்களா? அப்படி நீங்கள் சொன்னால், முதலாம் மரணம்தான் ஆதாமின் மீறுதலின்போதே மனிதனுக்குத் தீர்மானமாகிவிட்டதே, பின்னர் ஏன் மீண்டும் மீண்டும் முதலாம் மரணத்தைச் சொல்லி பயமுறுத்த வேண்டும் என்பதுதான் என் கேள்வி.//

இவ்வளவாய் சொல்லியும், 1 தெச. 5:3 பற்றியே மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள். அவ்வசனம் மட்டுமே என் விவாதத்திற்கு ஆதாரமான ஒரே வசனம் அல்ல.

bereans wrote:
//உங்க‌ள் கூற்றுப்ப‌டி இவை எல்லாம் இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்தை குறிக்கிற‌து என்றால் இந்த‌ பூமியில் உயிர்த்தெழ‌ ஒரு ம‌னித‌னும் இருக்க‌ முடியாது. மாறாக‌ இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள் எல்லாம், அந்த‌ சாவ‌மை என்கிற‌ நிலையை இழ‌ந்த‌தை குறித்தே சொல்லியிருக்கிற‌து. அதாவ‌து கிறிஸ்துவின் சாய‌லாக‌ (ஆவியாக‌) மாறாம‌ல் மீண்டும் மாம்ச‌த்தில் உயிர்தெழும் ச‌ம்ப‌வ‌ம்.//

இது பற்றியெல்லாம் ஏற்கனவே சொல்லியுள்ளேன். உங்கள் வசதிக்காக அவற்றை எடுத்துத் தருகிறேன்.

anbu57 wrote:
//ஆதாமின் மரணம், ஆதாமின் பாவத்துக்கொப்பான பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டதாக ரோமர் 5:14-ல் பவுல் சொல்கிறார். அவ்வசனத்தில் “ஆதாம் முதல் மோசே வரைக்கும்” என ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அவர் கூறுகிறார். ஆதாமிடம், ‘கனியைச் சாப்பிட்டால் சாவாய்’ என தேவன் கூறியதைப் போல, மோசே வரைக்குமான பிரிவினரிடம் தேவன் கூறவில்லை. ஆனாலும் அவர்களையும் மரணம் ஆண்டுகொண்டது. இந்த மரணம்தான் ‘முதலாம் மரணம்’. இந்த ‘முதலாம் மரணத்திற்கு’ ஆதாமின் மீறுதல்தான் காரணமேயொழிய, மோசே வரைக்குமான யாரும் காரணமல்ல.

மோசே வரைக்குமான ஒரு பிரிவினரை பவுல் பிரிக்கக் காரணமென்ன? மோசே மூலமாகத்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன் நியாயப்பிரமாணம் இல்லை. அதாவது ‘இதைச் செய்தால் சாவாய்’ என நியாயப்பிரமாணத்தில் தேவன் கூறியதைப் போல் அதற்குமுன் யாரிடமும் தேவன் கூறவில்லை (ஆதாமைத் தவிர). பவுலின் வாதம் என்னவெனில், நியாயப்பிரமாணத்திற்குப் பின்னருள்ள ஜனங்களுக்கு மரணம் வந்தால், அவர்கள் ‘நியாயப்பிரமாணத்தை மீறினார்கள், எனவே மரணம் வந்தது’ எனக் கூறிக்கொள்ளலாம்; ஆனால் நியாயப்பிரமாணத்திற்கு முந்தின ஜனங்களுக்கும் மரணம் வந்துள்ளதே, அதற்குக் காரணமென்ன? ஆதாமின் மீறுதலால் வந்த சாபமே காரணம் என்பதுதான் பவுலின் வாதம்.

அதாவது ‘முதலாம் மரணத்திற்கு’ முழுக்க முழுக்க ஆதாமின் மீறுதல்தான் காரணம் என்பதை அந்த வாதத்தின் மூலம் பவுல் எடுத்துரைக்கிறார். ஆதாம் முதல் மோசே வரைக்குமான பிரிவினரை ‘முதலாம் மரணம்’ எவ்வாறு ஆண்டுகொண்டதோ, அதேவிதமாக மோசேக்குப் பின்னருள்ள பிரிவினரையும் ‘முதலாம் மரணம்’ ஆண்டு கொண்டது (நாமும் அந்தப் பிரிவில் அடக்கம்). ஏற்கனவே ‘முதலாம் மரணத்தின்’ பிடியிலுள்ள அப்பிரிவினரிடம், நியாயப்பிரமாணத்தின் மூலமாகவோ அல்லது இயேசுவின் மூலமாகவோ அல்லது அப்போஸ்தலர் மூலமாகவோ, ‘இதைச் செய்தால் சாவாய் அல்லது அழிவாய்’ எனக் கூறினால் அது முதலாம் மரணத்தைக் குறிப்பதாக எப்படி இருக்க முடியும்? அவர்கள்தான் ஏற்கனவே முதலாம் மரணத்தின் பிடியில் உள்ளனரே? எனவே அப்பிரிவினருக்குக் கூறப்பட்ட சாவு அல்லது அழிவு 2-ம் மரணத்தைத்தான் குறிக்கும். ...

ஆக, ‘முதலாம் மரணம்’ என்பது முழுக்க முழுக்க ஆதாமின் மீறுதலால் வந்த விளைவு. இந்த ‘முதலாம் மரணத்திற்கு’ வேறு யாரும் பொறுப்பல்ல. ஆயினும் சாத்தானின் தூண்டுதலாலோ அல்லது நம் சுய இச்சையாலோ நாம் பாவஞ்செய்தால் அப்பாவத்தின் சம்பளமும் மரணமே. ஆனால் இந்த மரணம் 2-ம் மரணத்தைக் குறிப்பிடுகிறது. ஏனெனில் ‘முதலாம் மரணம்’ ஏற்கனவே நம்மை ஆண்டுகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட நம்மிடம் பாவத்தின் சம்பளம் ‘முதலாம் மரணம்’ எனக் கூறுவது அர்த்தமற்றதாக இருக்கும்.

இனி, ‘முதலாம் மரணம்’ மற்றும் ‘2-ம் மரணத்திலிருந்து’ நாம் எவ்வாறு விடுவிக்கப்படுகிறோம் என்பதைப் பார்ப்போம்.

இங்கு நாம் முதலாவது கவனிக்க வேண்டியது, ஆதாமால் கிடைத்த ‘முதலாம் மரணத்திலிருந்து’ நாம் விடுவிக்கப்பட்டால்தான் ‘2-ம் மரணத்திலிருந்து’ நாம் விடுவிக்கப்பட வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை நமக்குத் தருவதுதான் இயேசு பலியானதின் முதல் நோக்கம். இதன் அடிப்படையில்தான் ‘ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என 1 கொரி. 15:22-ல் பவுல் கூறுகிறார்.

இவ்வசனத்தை நன்றாகக் கவனித்துப்பாருங்கள். நம் மீறுதலுக்காக இல்லாமல் ஆதாமின் மீறுதலுக்காக ஆதாமுக்குள் நாமெல்லோரும் மரிக்கிறோமோ அதேவிதமாக, நம் நீதியினால் அல்ல, கிறிஸ்துவின் நீதியினால், அந்த ‘முதலாம் மரணத்திலிருந்து’ நாம் விடுவிக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்படுகிறோம். இவ்வாறு உயிர்ப்பிக்கப்படுதலை அழிவில்லாத உயிர்த்தெழுதல் எனக் கூறமுடியாது. நாம் காரணமாக இல்லாத ‘முதலாம் மரணத்திலிருந்து’ நம் கிரியையின் அடிப்படையில்லாமலேயே (நற்கிரியை, துர்க்கிரியை) நாம் உயிர்பபிக்கப்படுகிறோம். இப்படி ஓர் உயிர்ப்பித்தலை நமக்குத்தரமுடியும் என்பதற்கு லாசரு, சாறிபாத் விதவையின் மகன், சூனேமியாளின் மகன் மற்றும் பலர் உதாரணமாயுள்ளனர்.

எனவே ஆதாமின் மீறுதலால் நாம் இழந்த ஜீவனை (நாம் பாவஞ்செய்தாலும்) பெறுவோம் என்பதே உண்மை. ஒருவேளை நாம் நம் பாவத்தை உணர்ந்து மன்னிப்பு வேண்டினால், கிறிஸ்துவின் பலி நம் பாவத்தை மன்னித்து நம்மை 2-ம் மரணத்திலிருந்தும் விடுவிக்கிறது. இந்த வாய்ப்பை நமக்குத் தருவதுதான் கிறிஸ்துவின் பலியின் 2-வது நோக்கம்.

நாம் பாவத்தை உணர்ந்து பாவமன்னிப்பைப் பெற்றபின்னர் பாவஞ்செய்யாதிருக்க வேண்டும். அப்போதுதான் 2-வது மரணத்திலிருந்து நமக்குக் கிடைத்த விடுதலையை நாம் காப்பாற்ற முடியும். பாவமன்னிப்பைப் பெற்ற நாம், மீண்டும் பாவஞ்செய்தால் மீண்டும் 2-ம் மரணம் நம்மை ஆட்கொள்ளும். எனவேதான் தன் பாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவன் இரக்கம் பெறுவான் (அதாவது 2-ம் மரணத்திலிருந்து தப்பிப்பான்) என வசனம் கூறுகிறது.

பாவத்தை அறிக்கை செய்து, பாவமன்னிப்பு பெற்று, 2-ம் மரணத்திலிருந்து விடுதலையானவர்கள், முடிவுபரியந்தம் (அதாவது முதலாம் மரணபரியந்தம்) நிலைத்திருந்தால், அவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் கிடையாது. இவர்கள்தான் வெளி. 20:5 கூறுகிற முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து, கிறிஸ்துவோடு 1000 வருட அரசாட்சியில் அரசாளப்போகிற பரிசுத்தவானும் பாக்கியவான்களுமானவர்கள்.

முடிவுபரியந்தம் நிலைத்திராத மற்றவர்கள்மீது, 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இருக்கத்தான் செய்யும்.

முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையாத மற்றவர்களில், அதாவது 2-ம் மரணத்தின் அதிகாரத்தைச் சுமப்பவர்களில்: கிறிஸ்துவை அறியாதவர்கள், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள், சிறு வயதில் மரித்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அனைவரும் அடங்குவார்கள். ஆனால் இவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே 1000 வருட அரசாட்சியில் உயிர்ப்பிக்கப்பட்டு, அதின் பிரஜைகளாகி புடமிடப்படுவார்கள்.

இந்த ஒரு பிரிவினரில் யாரெல்லாம் அடங்குவார்கள், யாரெல்லாம் அடங்கமாட்டார்கள் என்பதற்கான தெளிவான பதிலை நான் இன்னும் அறியவில்லை. ஆனால் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக இல்லாமல் நேரடியாக 2-ம் மரணத்தை எதிர்கொள்வோர் நிச்சயமாக உண்டு என நான் நம்புகிறேன். இதற்கான வேதஆதாரமாக நான் கூறுவது, கிறிஸ்துவின் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு பற்றிய மத்தேயு 25:31-46 வரையுள்ள வசனங்கள். இவ்வசனங்களில் பசி, தாகம், வியாதி போன்ற பல துன்பங்களில் இருந்தோரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இத்தகைய துன்பங்கள் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் இருக்காது (ஏசாயா 65:17-25). ஏசாயா 65:20-ல் 100 வயதில் மரிப்பவனைப் பற்றி கூறப்பட்டுள்ளதால், ஏசாயா 65:17-25 வசனங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள், 1000 வருடத்திற்கு பிறகுள்ள நிகழ்வுகளாக இருக்கமுடியாது.

கிறிஸ்துவின் அந்த 1000 வருட ஆட்சியில் பசி, தாகம், வியாதி போன்ற துன்பங்கள் இருக்கமுடியாதென்பதால் துன்பத்தில் இருப்போருக்கு உதவவேண்டிய யாரும் அப்போது தேவையில்லை. எனவே மத்தேயு 25:31-46 வசனங்களில், துன்பங்களில் இருந்தோருக்கு உதவிசெய்யாத வெள்ளாட்டுக் கூட்டத்தாரின் அச்செயல்கள், 1000 வருட அரசாட்சியில் நடப்பவையல்ல. அதாவது அச்செயல்கள் யாவும் இப்பூமியின் நாட்களில் நடப்பவைகளே. எனவே இப்பூமியில் துன்பத்தில் வாடுகிற எளியோருக்கு உதவாமல் சுயநலமாக வாழ்கிற இரக்கமற்ற அனைவரும், 1000 வருட ஆட்சிக்குள் பிரவேசியாமல், நேரடியாக வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு வந்து, 2-ம் மரணத்திற்கு தீர்க்கப்படுவார்கள் என்பது எனது கருத்து. இரக்கமற்றவர்களுக்கு இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு கிடைக்கும் எனும் வசனம், எனது இக்கருத்துக்குப் பொருத்தமாயுள்ளது.

கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சிக்குப் பின்வரும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு, முழுக்க முழுக்க அவனவன் கிரியைகளின்படியானதே என வெளி. 20:12 கூறுவதைக் கவனியுங்கள். எனவே 2-ம் மரணத்திலிருந்து நாம் விடுதலை பெறவேண்டுமெனில், நம் கடந்தகால பாவங்களை உணர்ந்து மன்னிப்பு பெறவேண்டும் என்பதோடு, மன்னிப்பு பெற்ற நாம் நற்கிரியைகள் செய்வதும் அவசியமாயிருக்கிறது.

ஆதாமின் கிரியையால் (மீறுதலால்) வந்த முதலாம் மரணத்திலிருந்து விடுதலையாகி கிறிஸ்துவின் பலியால் நாம் ஜீவன் பெறுவதை நம் துர்க்கிரியைகள் உட்பட எதுவும் தடுப்பதில்லை. இதுதான் எல்லோருக்குமான நற்செய்தி. ஆனால் முதலாம் மரணத்திலிருந்து விடுதலையான நாம், 2-ம் மரணத்தைப் பெறாதிருக்கவேண்டுமெனில், 2-ம் மரணத்திற்குக் காரணமாக இருக்கக்கூடிய நம் சுயபாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிடுவதோடு, நற்கிரியைகளைச் செய்யவும் வேண்டும். அப்போதுதான் 2-ம் மரணத்திலிருந்து நாம் முழுமையாக விடுதலை பெறமுடியும்.

நற்கிரியைகளைச் செய்யாதவர்கள் நேரடியாக 2-ம் மரணத்திற்குச் செல்வதைப்போல, சமாதானமும் சவுக்கியமும் உண்டாகும் எனச் சொல்லி ஜனங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களும் சடிதியான அழிவான 2-ம் மரணத்திற்கு நேரடியாகச் செல்வார்கள் எனக் கருதுகிறேன். இவர்களைத் தவிர வேறு எவர்களெல்லாம் 2-ம் மரணத்திற்கு நேரடியாகச் செல்வார்கள் என்பதை நானறியேன்.//

bereans wrote:
//தேவ‌ன் எல்லாவ‌ற்றிர்க்கும் ஒரு கால‌ம் வைத்திருக்கிறார், அப்பொழுது அவ‌ர் அதில் எல்லாவ‌ற்றையும் நேர்த்தியாக‌ தான் செய்து முடிப்பார், அழித்து முடிக்க‌ம்மாட்டார் என்ப‌து நாங்க‌ள் தேவ‌ அன்பின் மேல் வைத்திருக்கும் விசுவாச‌ம்.//

தங்களின் கூற்றுக்கு இயேசு சொன்ன வசனங்களைப் பதிலாகத் தருகிறேன்.

யோவான் 8:24 நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்.
(இந்த சாவு, எந்த சாவு சகோதரரே?)

மத்தேயு 7:19 நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்.
(நல்ல கனி - நற்கிரியை, மரம் - மனிதர்கள், வெட்டுண்டு - கொல்லப்பட்டு, அக்கினியில் போடப்படும் - மரத்தை அக்கினி எரித்து சாம்பலாக்குவதைப்போல நற்கிரியை செய்யாத மனிதரை கொன்று, அவர்கள் மீண்டும் உயிரடையாதபடி அழிக்கப்படுவார்கள்).

bereans wrote:
//இந்த‌ பூமியே தேவ‌னை அறிகிற‌ அறிவினால் நிற‌ம்பிவிட்ட‌ பிற‌கு யாருக்கு இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் இருக்க‌ முடியும் என்று தெரிய‌வில்லை?//

ஏசாயா 11:9-16 வரை நன்கு படியுங்கள். 9-ம் வசனம் பூமியானது கர்த்தரை அறிகிற அறிவினால் நிரம்பியிருக்கும் என்கிறது. ஆனால் தமது ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ள --- என 11-ம் வசனம் கூறுகிறது. யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள் என 13-ம் வசனம் கூறுகிறது. அசீரியரில் மீதியானவர்களுக்கு ---- என 16-ம் வசனம் கூறுகிறது.

மீதியானவர்கள் என ஒரு பிரிவினர் இருந்தால், மீதியானவர்களில் சேராத மற்றவர்களின் கதி என்ன? சங்கரிக்கப்படுகிற யூதாவின் சத்துருக்கள் கர்த்தரை அறிகிற அறிவைப் பெறவில்லையா?

bereans wrote:
//என் கூற்றுப‌டி முத‌லாம் ம‌ர‌ண‌ம் என்று போட‌வில்லை, ச‌ரி, உங்க‌ள் கூற்றுப‌டி இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் என்று கூட‌ தான் போட‌வில்லை. இத‌ற்கு என்ன‌ சொல்லுவீர்க‌ள்?//

முதலாம் மரணம் (அதாவது சரீர மரணம்) ஆதாமின் மீறுதலால் எல்லோருக்கும் ஏற்கனவே தீர்மானமாகி அது ஏற்கனவே எல்லாருக்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, மறுபடி மரணத்தை அல்லது அழிவைச் சொன்னால் அது 2-ம் மரணமாகத்தான் இருக்கவேண்டும் என்பதை வாதத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.

bereans wrote:
//முத‌ல் ம‌ர‌ண‌த்திற்கு முன் இப்படிப்பட்ட காரியங்கள் செய்தால் இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் ச‌ம்ப‌விக்கும் என்று சொல்லுவ‌து தான் ந‌கைச்சுவையாக‌ இருக்கிற‌து.//

வேதாகமம் சொல்வதைத்தான் நான் சொல்கிறேன். தேவனும் இயேசுவும் போதித்த போதனைகளே ஒன்றுமில்லை என ஆகிவிட்டபின் நான் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கும்.

ஆனால் நகைச்சுவையாகப் பேசுபவனுக்கு ஐயோ என இயேசு கூறவில்லை. இடறலாயிருப்பவனுக்குத்தான் ஐயோ என்கிறார்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அன்பு எழுதுகிறார்//"2-ம் மரணத்திற்குக் காரணமாக இருக்கக்கூடிய நம் சுயபாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிடுவதோடு, நற்கிரியைகளைச் செய்யவும் வேண்டும். அப்போதுதான் 2-ம் மரணத்திலிருந்து நாம் முழுமையாக விடுதலை பெறமுடியும்."// ஐயா அன்பு அவர்களே,


கிரியைகளினால் ஒருவனும் இரட்சிக்கப்பட முடியாது என்று வேதம் மிகத்தெளிவாகக் கூறுகிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசமே மனிதனை இரட்சிக்கமுடியும். நியாயப்பிரமாணத்தை நீங்கள் கைக்கொள்ளச் சொல்கிறீர்கள், மறைமுகமாக. நீங்கள்தான் 'இடறலாக' சுயநீதியில் இருக்கிறீர்கள். நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என்பதால் எல்லாருக்கும் 2ம் மரணம்தான் என்று கொள்ளலாமா? கிருபையிலிருந்து விழ நீங்கள் ஏதுவாக இருக்கிறீர்கள்.




மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்பதற்கு அர்த்தம் 'மரணம்' மனிதனை ஒருக்காலும் மேற்கொள்ளாது என்பதேயன்றி வேரொன்றில்லை.

இயேசுகிறிஸ்து 'உலகத்தின் பாவத்தை' சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டி. ஆதாமின் பாவத்தை மாத்திரமல்ல். நற்கிரியை செய்தால் 'முக்தி' அடையலாம் என்று எல்லா மதங்களும்தான் போதிக்கின்றன.


10.நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்துக்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன்.

11.நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகுகிறதில்லை...

25.விசுவாசம் வந்தபிறகு நாம் உபாத்திக்கு(நியாயப்பிரமாணத்துக்கு) கீழானவர்களல்லவே.

5:14உன்னிடத்தில் நீ அன்புகூறுவது போலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக, என்ற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;....ஆகையால் போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது....ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. கொலோ2:14,16.



எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்,

28.ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளிலல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான்.



6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது.


7:4நீங்கள்.... நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். எபி7:18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

19. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை...

யாக்2:10 எப்படியெனில் ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைகொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.


என்றுதான் வேதம் சொல்கிறது. நீங்கள் 'கிரியைகளை' முன்னிருத்துவது இயேசுகிறிஸ்துவின் தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதாக உள்ளது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பழைய ஏற்பாட்டின் ஒருசில பரிசுத்தவான்கள்தவிர உலகத்தில் யாருமே உயிர்த்தெழமாட்டார்கள்.



இரண்டாம் மரணத்திற்கு தகுதியாவார்கள் ஆனால் உயிர்த்தெழவும் செய்வார்கள் என்று நீங்கள் கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. அவர்கள் நேரடியாக நித்திய ஆக்கினைக்குப் போகலாமே, அவர்களுக்கு இரண்டாவது 'நியாயத்தீர்ப்பு' எதற்கு?


//அதாவது ‘இதைச் செய்தால் சாவாய்’ என நியாயப்பிரமாணத்தில் தேவன் கூறியதைப் போல் அதற்குமுன் யாரிடமும் தேவன் கூறவில்லை (ஆதாமைத் தவிர)//. என்று எழுதியுள்ளீர்கள். இப்பவும் தேவன் 'சபை' தவிர யாரிடமும் கூறவேயில்லை. நீங்கள்தான் 'கூறி' அவர்களை 2ம்மரணத்துக்கு தகுதியாக்குகிறீர்கள். வேதத்தை 'சரியாகப்' புரிந்து கொள்ளாத எவரையும் அதற்குக் கீழ்ப்படியச் சொல்ல முடியாது. சட்டம் முழுமையாகப் புரியாதபோது அதற்கு எப்படி கீழ்ப்படிவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?




இப்போது 'போதிக்கப்படாதவன்' மட்டும் 1000வருடத்தில் சாத்தான் இல்லாத உலகத்தில் கற்றுக்கொள்வானாம், இப்போது போதிக்கப்பட்டவன்(உங்கள் போன்றோரால்) இந்தத் தீமைநிறைந்த பொல்லாத பிரபஞ்சத்திலும் 'நீதியாக' வாழ்ந்து காட்டினால்தான் தண்டனையிலிருந்து தப்புவார்களாம். என்னய்யா இது? ஒரு சிறு பிள்ளைகூட இதை 'அபத்தம்' என்று ஒதுக்கிவிடுமே?


-- Edited by soulsolution on Sunday 8th of November 2009 06:23:46 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு57 எழுதுகிறார்:
"மத். 24:37-39 மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை முதலில் எழுதுங்கள், அதன்பின் நான் பதில் தருகிறேன்"

அப்ப‌டி என்றால் என் ப‌திவுக‌ளை ப‌டிக்காம‌லே தாங்க‌ள் த‌ங்க‌ளின் கேள்விக‌ளை தொட‌ர்ந்து வ‌ருகிறீர்க‌ளா. அதை தான் 1 தெச் 5:3க்கு ஒப்பிட்டு எழுதியிருக்கின்றேனே. உங்க‌ள் ப‌திலை நீங்க‌ள் ப‌திந்தால் வாசிக்க‌லாம்.

ஐயா, இதில் எல்லாம் அழிவு என்று சொல்ல‌ப்ப‌டுப‌வை அந்த‌ சாவாமை நிலையை இழ‌ந்து போவ‌தை குறித்து தான் சொல்லுகிற‌து என்றும் நான் ப‌திந்திருப்பதை நீங்க‌ள் பார்க்க‌வில்லை போல். முத‌லாம் ம‌ர‌ண‌ம் நிக‌ழ‌ந்து அதில் இருந்து எல்லாரும் உயிர்த்தெழ‌வேண்டும் என்றால், எல்லா பாவ‌ங்க‌ளும் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டால் தான் அது சாத்திய‌ம். நான் கேட்ட‌து என்ன‌ வென்றால்:

1. " தெச 5:2 வரை அவர் இரண்டாம் வருகையை குறித்து எழுதுவிட்டு, 3ம் வசனம் முதல் பொதுவானதை எழுதுகிறார் என்பதற்கு என்ன அர்த்தம். அது எந்த காலத்தை குறிக்கிறது என்பதை தெளிவு படுத்துங்களே? இல்லை 3ம் வசனம் பொதுவாக பேசிவிட்டு, மீண்டும் 4ம் வசனம் இரண்டாம் வருகையை சொல்லிவிட்டு மீண்டும் பொதுவானதை தொடர்கிறாரா?"

2.  "எல்லாருக்காக‌வும் த‌ன்னை மீட்கும் பொருளாக (1 திமோ. 2:5,6) இயேசு கிறிஸ்து த‌ன்னை கொடுத்தார் என்றால் அதின் ப‌ய‌னை சில‌ர் மாத்திர‌ம் தான் அடைவார்க‌ளா? அப்ப‌டி என்றால் தேவ‌னின் கிருபையால் எல்லாருக்காக‌வும் ம‌ர‌ண‌த்தை ருசி பார்த்தது (எபி 2:9) எல்லாம் வீணா?

3.  "கிறிஸ்துவிற்குள் எல்ல்லோரும் உயிர்த்தெழுவார்க‌ள்" என்று நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ பிற‌கு, உங்கள் கூற்று படி, இல்லை, அநேக‌ர் இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்திற்கு போவார்க‌ள் என்றால், இயேசு கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌ம் வீன் தானே?

அன்பு57 எழுதுகிறார்:
"பின்னர் ஏன் மீண்டும் மீண்டும் முதலாம் மரணத்தைச் சொல்லி பயமுறுத்த வேண்டும் என்பதுதான் என் கேள்வி"

அவ‌ர் ப‌ய‌முறுத்துகிறார் என்று நீங்க‌ள் தான் சொல்லுகிறீர்க‌ள். அவ‌ர் அந்த சாவாமையை இழ‌ந்து போக‌ வேண்டாம் என்று போதிக்கிறார் என்று தான் நான் சொல்லுகிறேன். என் பார்வையில் வேத‌ம் ஒரு ப‌ய‌ப்ப‌டுத்தும் புத்த‌க‌மோ, ப‌யமுறுத்தும் போத‌னை அட‌ங்கிய‌து கிடையாது, உங்க‌ளுக்கு எப்ப‌டி என்று தெரிய‌வில்லை, மாறாக‌ வேத‌ம் என்ப‌து தேவ‌னின் அன்பையும், அவ‌ர் ம‌னித‌ர்க‌ளுகு செய்ய‌விருக்கும் மாபெரும் காரிய‌ங்க‌ளின் ஒரு ச‌ந்தோஷ‌மான‌ செய்தி அட‌ங்கிய‌ புத்த‌க‌ம் தான். ஆக‌வே தான் நாங்க‌ள் வேதத்தை ஒரு ந‌ற்செய்தி புத்த‌க‌ம் என்று ந‌ம்புகிறோம், நீங்க‌ள் வேண்டும் என்றால் அதை ப‌ய‌முறுத்த‌ல் என்று எடுத்துக்கொள்ள‌லாம். ஒரு ந‌ற்செய்தி அதுவும் தேவ‌ன் நிய‌மித்த‌ ந‌ற்செய்தியை ப‌ய‌முறுத்த‌ல் என்று மாற்றுவ‌து தான் வேத‌ புற‌ட்ட‌ல் என்று நாங்க‌ள் சொல்லுகிறோம். தேவ‌ அன்பை, தேவ‌னின் கோப‌ம் என்று சொல்லுவ‌து தான் வேத‌ புற‌ட்ட‌ல் என்று சொல்லுகிறோம்.

இந்த‌ அழிவிற்கு 2ம் ம‌ர‌ண‌ம் தான் அர்த்த‌ம் என்று சொல்லிவ‌ருகிறீர்க‌ள், இன்னோரு ப‌க்க‌ம், ஆதாமின் பாவ‌த்தின் விலைவான‌ ம‌ர‌ண‌த்திலிருந்து எல்லோரும் உயிர்த்தெழுவார்க‌ள் என்றும் ந‌ம்புகிறீர்க‌ள், எழுதியும் இருக்கிறீர்க‌ள், அப்புற‌ம் மீண்டும், இப்ப‌டி ப‌ட்ட‌ அழிவு உள்ள‌வ‌ர்க‌ள் உயிர்த்தெழாம‌ல் 2ம் ம‌ர‌ண‌த்திற்கு சென்று விடுவார்க‌ள் என்றும் சொல்லி அதிக‌ப‌டியான‌ குழ‌ப்ப‌த்தை த‌ருகிறீர்க‌ள். என் கேள்விக்கு நேர‌டியான‌ ப‌தில் தாருங்க‌ள்:

"கிறிஸ்து சிந்திய‌ இரத்த‌த்தினால் முத‌லாம் ம‌ர‌ண‌த்திலிருந்து எல்லோரும் உயிர்த்தெழுவார்க‌ளா?, இல்லையா?"

அன்பு57 எழுதுகிறார்:
"இனி, ‘முதலாம் மரணம்’ மற்றும் ‘2-ம் மரணத்திலிருந்து’ நாம் எவ்வாறு விடுவிக்கப்படுகிறோம் என்பதைப் பார்ப்போம்."

"முத‌லாம் ம‌ர‌ண‌ம்" என்று ம‌ர‌ன‌த்திற்கு முன் முத்லாம் நாம் போட்டு விவாதிப்ப‌தே த‌வ‌று, ஏனென்றால் வேத‌ம் அதை ம‌ர‌ண‌ம் என்று தான் சொல்லுகிற‌து. வெளிப்ப‌டுத்தின‌ விசேஷ‌த்தில் 2ம் ம‌ர‌ண‌ம் என்று வ‌ருவ‌தால், இது முத‌லாம் ம‌ர‌ண‌ம் என்று போட்டு கொள்ள‌ தேவையில்லை. ம‌ர‌ண‌ம் என்றால் ஒரே ம‌ர‌ண‌ம் தான். இயேசு கிறிஸ்து வ‌ந்த‌து, அந்த‌ ம‌ர‌ண‌த்திலிருந்து எல்லோரையும் உயிர்த்தெழ‌செய்ய‌ தான். எல்லோரும் உயிர்த்தெழுவார்க‌ள், ஆனால் அதில் ஒரு சிறு கூட்ட‌ம், ச‌பையாக‌ இயேசுவுட‌ன் ஆளுகை செய்யும் ப‌டி நிய‌ம‌ன‌மாகி இருக்கிற‌து. அந்த‌ ச‌பையில் சேராம‌ல் இருப்ப‌து தான் நீங்க‌ள் மீண்டும் மீண்டும் 2ம் ம‌ர‌ண‌ம் என்று இல்லா‌த‌ ஒன்றை சொல்லி ப‌ய‌முறுத்தி வ‌ருகிறீர்க‌ள். அந்த‌ உன்ன‌த‌மான‌ ஆவிக்குறிய‌ நிலையை, அந்த‌ சாவாமையை இழ‌ப்ப‌தை தான் அப்போஸ்த‌ல‌ர்க‌ளும் இயேசு கிறிஸ்துவும் போதித்தார்க‌ள்.

இந்த‌ வ‌ச‌ன‌த்தையும் வாசித்து பாருங்க‌ள்:
"இப்ப‌டியிருக்க‌, ஒரே ம‌னுஷ‌னால் பாவ‌மும், பாவ‌த்தினால் ம‌ர‌ண‌மும் உல‌க‌த்திலே பிர‌வேசித்த‌துபோல‌வும், எல்லா ம‌னுஷ‌ரும் பாவ‌ம் செய்த‌ப‌டியால், ம‌ர‌ண‌ம் எல்லாருக்கும் வ‌ந்த‌துபோல‌வும் இதுவுமாயிற்று" ரோம் 5:12.

நீங்க‌ள் சொல்லுவ‌து போல் ஆதாம் பாவ‌த்தினால் மாத்திர‌ம் எல்லோரும் ம‌ரிப்ப‌தில்லை, ஆதாம் பாவ‌ம் செய்த‌தினால், அந்த‌ பாவ‌ம் உல‌க‌த்தில் நுழைந்து, எல்லாரும் பாவிக‌ளாகும் ப‌டி செய்த‌து, ஆனால் எல்லோரும் பாவ‌ம் செய்கிறார்க‌ள் என்கிற‌து இந்த‌ வ‌சன‌ம். எல்லா ம‌னுஷ‌ரும் பாவ‌ம் செய்த‌ப‌டியால், ம‌ர‌ண‌மும் எல்லாருக்கும் வ‌ருகிற‌து, இதில் எப்ப‌டி முத‌லாம் ம‌ர‌ண‌ம், இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் என்று பிரித்து பார்க்கிறீர்க‌ள் என்ப‌தை விள‌க்குங்க‌ள்!!

மேலும் ஆதாம் முத‌ல் மோசே வ‌ரை என்று ஒரு பிரிவை குறித்து சொல்ல‌வில்லை. இந்த‌ உல‌க‌த்தாரை குறித்து அப்ப‌டி சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஏனென்றால் எந்த‌ ஒரு ச‌ட்ட‌மும் த‌ராம‌ல் ம‌னித‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் ம‌ன‌சாட்சியின் ப‌டி வாழ‌ அனும‌தித்தார் தேவ‌ன். அத‌ன் ம‌த்தியிலிருந்து ஒரு ஆபிராமை கூப்பிட்டு அவ‌னுக்கு ஒரு வாக்குத‌த்தை கான்பித்து அவ‌னை பிரித்தார். அத‌ன் பின் மோசே முத‌ல் நியாய‌ப்பிர‌மான‌ம் கொடுத்தார் ஆனால் அது யூத‌ர்க‌ளுக்கு மாத்திர‌ம் தான். உல‌க‌த்தில் யூத‌ர்க‌ள் இல்லாத‌ அநேக‌ர் வாழ்ந்து வ‌ந்தார்கள், அவ‌ர்க‌ளுக்கு அந்த‌ நியாய‌ப்பிர‌மான‌ம் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை. ஏன் யூத‌ர்க‌ளுக்கு மாத்திர‌ம் நியாய‌ப்பிர‌மான‌ம் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. அவ‌ர்க‌ள் இன்றைய‌ கிறிஸ்த‌வ‌த்திற்கு நிழ‌லாக‌ இருந்தார்க‌ள். அதில் இருந்த‌ ஆசாரிய‌ர்க‌ள், லேவிய‌ர்க‌ள் இயேசு கிறிஸ்துவின் ச‌பைக்கு நிழ‌லாக‌ இருக்கிறார்க‌ள் (கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு அல்ல‌). இந்த‌ நியாய‌ப்பிர‌மான‌ம் அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌தே, அவ‌ர்க‌ளில் நீதிமான்க‌ளை தெரிந்துக்கொள்ள‌ப்ப‌ட‌ தான்.ஆனால் இந்த‌ நியாய‌ப்பிர‌மான‌ம் ஒரு ம‌னிதனையும் பூர்ண‌ ப‌டுத்தாது என்று தேவ‌னுக்கு தெரியும். தேவ‌ன் ஆதாமுக்கு வாக்கு கொடுத்த‌ அந்த‌ ஸ்திரியின் வித்து, ஆதாமுக்கு வாக்கு கொடுத்த‌ அந்த‌ வித்து (இயேசு கிறிஸ்து) வ‌ரும் வ‌ரை, அவ‌ர் தெரிந்துக்கொண்ட‌ இந்த‌ யூத‌ ஜ‌ன‌ங்க‌ள் உல‌கத்தார் மாதிரி ந‌ட‌க்காம‌ல் வாக்குத்தத்தம் செய்யப்பட்டவர் வரும் வரை ஓர் அள‌விற்கு தேவ‌ ப‌ய‌த்தோட‌ ந‌ட‌க்க‌ தான் அவ‌ர்க‌ளுக்கு நியாய‌ப்பிர‌மான‌ம் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

வாக்குத்த‌த்த‌ம் ப‌ன்ன‌ப்ப‌ட்ட‌வ‌ர் வ‌ந்த‌ பிற‌கு அந்த‌ நியாய‌ப்பிர‌மான‌ம் செல்லுப‌டி ஆகாது என்று தான் வேத‌ம் ப‌ல‌ இட‌த்தில் சொல்லியிருக்கிற‌து. ஆனாலும் அதை பின் ப‌ற்றி த‌ங்க‌ளை நீதிமான்க‌ள் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இன்றும் உண்டு. இனி கிருபை வ‌ந்து விட்ட‌ப்ப‌டியால் அந்த‌ கிருபை எல்லோரையும் சூழ்ந்து கொள்கிற‌து. இத‌ற்கு நியாய‌ப்பிர‌மான‌த்தின் கிரியைக‌ள் தேவை இல்லை. இந்த‌ கிருபை வ‌ந்த‌ பிற‌கு தான் தேவ‌னை அப்பா பிதா என்று கூப்பிடும் அதிகார‌ம் கிடைத்த‌து, இந்த‌ கிருபை வ‌ந்த‌ பிற‌கு தான் கிறிஸ்துவின் சாய‌லில் மாறும் பிர‌மான‌மும் கிடைத்த‌து. இந்த‌ பிர‌மான‌த்தின் ப‌டி அநேக‌ர் அழைக்க‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள், ஆனால் அதில் இருந்து ஒரு சின்ன‌ கூட்ட‌ம் மாத்திர‌மே ச‌பைக்கு த‌குதி பெறுகிற‌து.அந்த‌ சின்ன‌ கூட்ட‌ம் தேவ‌னின் நிய‌ம‌ன‌த்தின் ப‌டியே ரோம் 12:1,2ல் சொல்ல‌ப்ப‌டுவ‌து போல் த‌ங்க‌ளை ஜீவ‌ப‌லியாக‌ ஒப்பு கொடுத்து ந‌ட‌ப்ப‌வ‌ர்க‌ள். அத‌ற்காக‌ இவ‌ர்க‌ள் பாவிக‌ள் என்று ஆகாது, இவ‌ர்க‌ளும் பாவ‌த்தில் இருப்ப‌தால் தான் இவ‌ர்க‌ளும் ம‌ரிக்கிறார்க‌ள், ஆனால் கிருபை இவ‌ர்க‌ளை பூர‌ண‌ ப‌டுத்தி கிரிஸ்துவின் சாய‌லில் மாற‌ செய்கிற‌து.

மீத‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லாரும் 2ம் ம‌ர‌ண‌த்திற்கு செல்லாமல், ம‌ரித்து, கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌த்தின் ப‌ய‌னாக இந்த பூமியில் உயிர்த்தெழுவார்க‌ள்.

இந்த‌ ச‌பையின் என்னிக்கை நிறைவேறுவ‌த‌ற்காக‌ தான் எல்லாமே காத்திருக்கிற‌து என்கிற‌து வேத‌ம்.
"மேலும் தேவ‌னுடைய‌ புத்திர‌ர் வெளிப்ப‌டுவ‌த‌ற்கு சிருஷ்டியான‌து மிகுந்த‌ ஆவ‌லோடு காத்துக்கொண்டிருக்கிற‌து" ரோம் 8:16.

சிருஷ்டி ஏன் காத்துக்கொண்டிருக்க‌ வேண்டும், ஏனென்றால் ம‌னித‌ன் பாவ‌த்தில் விழுந்து அந்த‌ பாவ‌த்தின் ப‌ல‌னாக‌ ச‌க‌ல‌ சிருஷ்ட்டிக‌ளின் மேலும் விழுந்து அந்த‌ சிருஷ்டியும் (nature) தான் இருந்த நிலையை விட்டு மாறியிருக்கிற‌து. அது மீண்டும் அத‌ன் நிலைக்கு திரும்ப‌ ஆவ‌லாய் இருக்கிற‌தாம், ஆனால் அத‌ற்காக‌ தேவ‌ புத்திர‌ர்க‌ள் (ச‌பை) என்னிக்கை நிறைவேற‌ வேண்டும். அப்பொழுது, தீர்க்க‌த‌ரிசிக‌ளின் வாயிலாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ இளைப்பாறுத‌லின் கால‌ங்க‌ள் (அப். 3:21) நட‌ந்தேறும். பாருங்க‌ள் தீர்க்க‌த‌ரிசிக‌ள்கூட‌ ப‌ய‌முறுத்த‌ கிடையாது, ந‌ற்செய்தியை தான் சொல்லியிருக்கிறார்க‌ள்.

அன்பு57 எழுதுகிறார்:
"எனவே ஆதாமின் மீறுதலால் நாம் இழந்த ஜீவனை (நாம் பாவஞ்செய்தாலும்) பெறுவோம் என்பதே உண்மை. ஒருவேளை நாம் நம் பாவத்தை உணர்ந்து மன்னிப்பு வேண்டினால், கிறிஸ்துவின் பலி நம் பாவத்தை மன்னித்து நம்மை 2-ம் மரணத்திலிருந்தும் விடுவிக்கிறது. இந்த வாய்ப்பை நமக்குத் தருவதுதான் கிறிஸ்துவின் பலியின் 2-வது நோக்கம்."

2வ‌து நோக்க‌ம் எல்லாம் உங்க‌ளின் 2ம் ம‌ர‌ன‌த்தின் செய்தியை போல் உங்க‌ளின் சுத்த‌ க‌ற்ப‌னையே. இயேசு கிறிஸ்துவின் இர‌த்த‌ம் சிந்துத‌லுக்கு ஒரே நோக்க‌ம், ம‌னித‌ன் சாவிலிருந்து உயிர்த்தெழும்ப‌டியாக‌ தான். ஆதாமின் மீறுத‌லால் நாம் இழ‌ந்த‌ ஜீவ‌னை (நாம் பாவ்ஞ்செய்தாலும்) பெறுவோம் என்ப‌த் உண்மை என்று எழுதுவிட்டு, அவ‌ரிட‌ம் ம‌ன்னிப்பு கேட்டால், 2ம் ம‌ர‌ண‌த்திற்கு த‌ப்பிப்போம் என்ப‌து விச்சித்திர‌மாக‌ இருக்கிற‌து. அவ‌ரிட‌ம் ம‌ன்னிப்பு கேட்டு அவ‌ருட‌ன் ஒப்புவுற‌வு செய்ப‌வ‌ர்க‌ள் தான் உண்மையான‌ ம‌ன‌ந்திரும்புத‌ல் அடைந்து, இயேசு கிறிஸ்து இருக்கும் நிலைக்கு மாற்ற‌ப்ப‌டுவார்க‌ள், மீத‌மான‌வ‌ர்க‌ள் பூமியில் உயிர்த்தெழுவார்க‌ள்.இதை தான் நீங்க‌ள் 2ம் ம‌ர‌ண‌ம் என்று சொல்லி வ‌ருகிறீர்க‌ள்.

அப்ப‌டி என்றால் உங்க‌ள் க‌ருத்துப‌டி ப‌ர‌லோக‌ம் செல்ல‌ த‌குதி என்ன‌? ஏனென்றால் எல்லாரும் பாவ‌ம் செய்து தேவ‌ ம‌கிமையை இழந்து போனார்க‌ள் என்றும், ஒரு ம‌னித‌னும் நீதிமான் இல்லை என்றும் வேத‌ம் கூறுவ‌து, அனைவ‌ரும் 2ம் ம‌ர‌ண‌த்திற்கு மாத்திர‌மே த‌குதியுள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள், உங்க‌ள் கூற்றுப‌டி.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு57 எழுதுகிறார்:
"முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையாத மற்றவர்களில்",

அதாவ‌து கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌ம் இவ‌ர்க‌ளுக்கு இல்லை என்று சொல்லுகிறீர்க‌ள். முத‌லாம் உயிர்த்தெழுத‌ல் என்ப‌து ம‌கிமையான‌ உயிர்த்தெழுத‌லை குறிக்கும் வார்த்தை. முத‌ல் என்றால் என்னிக்கை ஒன்று அல்ல‌, முத‌ல் த‌ர‌ம் என்கிற‌ அர்த்த‌ம் கொள்கிற‌து. அதாவ‌து கிறிஸ்துவின் சாய‌லில் உயிர்த்தெழுவ‌ர்க‌ளை குறித்து தான் முத‌லாம் உயிர்த்தெழுத‌ல் என்று வெத‌ம் கூறுகிற‌து. கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்த்தெழுவார்க‌ள் என்றும் ந‌ம்புகிறீர்க‌ள், முத்லாம் உயிர்த்தெழுத‌லில் (உங்க‌ள் அர்த்த‌த்த‌தில்) ப‌ங்க‌டையாம‌ல் போவார்க‌ள் என்றும் ந‌ம்புகிறீர்க‌ள், இது குழ‌ப்ப‌த்தின் உச்ச‌க்க‌ட்ட‌ம் இல்லையா?

அன்பு57 எழுதுகிறார்:
"அதாவது 2-ம் மரணத்தின் அதிகாரத்தைச் சுமப்பவர்களில்: கிறிஸ்துவை அறியாதவர்கள்"

அதாவ‌து கிறிஸ்து பிற‌ப்ப‌த‌ற்கு முன்பு வாழ்ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் 2ம் ம‌ர‌ண‌த்தின் அதிகார‌த்தை சுமப்ப‌வ‌ர்க‌ள் என்று எடுத்துக்கொள்ள‌லாமா?

அன்பு57 எழுதுகிறார்:"
"கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள், சிறு வயதில் மரித்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அனைவரும் அடங்குவார்கள். ஆனால் இவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே 1000 வருட அரசாட்சியில் உயிர்ப்பிக்கப்பட்டு, அதின் பிரஜைகளாகி புடமிடப்படுவார்கள்."

இதுவும் குழப்பத்தின் உச்சக்கட்டம். இப்ப‌ இருக்கும் இந்த‌ வாழ்வில் ம‌ன‌நிலை பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ இருந்து, குழ‌ந்தையாக‌வே ஒன்றையும் அறியாமல் ம‌ரித்து நேர‌டியாக‌ இவ‌ர்க‌ள் 2ம் ம‌ர‌ண‌த்திற்கு செல்வார்க‌ள் என்றால் இதை விட‌ ஒரு ம‌னித‌னை திசை திருப்பும், இட‌ற‌செய்யும் வார்த்தைக‌ள் இருக்க‌ முடியாது என்றே நினைக்கிறேன். உங்க‌ள் கூற்றுப்ப‌டி, ஒரு வேளை ம‌ன‌நிலை பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரோ, குழ‌ந்தையாக‌ இருந்த‌வ‌ரோ, 1000 வ‌ருட‌ அர‌சாட்சியின் பிர‌ஜையாகி புட‌மிட‌ப்ப‌டுவார்க‌ள் என்றால், ஏன்? அவ‌ர்க‌ள் இப்பொழுது இந்த‌ ஜீவிய‌த்தில் செய்த‌ எந்த‌ பாவ‌த்திற்கு இந்த‌ த‌ண்ட‌னை?

"இந்த ஒரு பிரிவினரில் யாரெல்லாம் அடங்குவார்கள், யாரெல்லாம் அடங்கமாட்டார்கள் என்பதற்கான தெளிவான பதிலை நான் இன்னும் அறியவில்லை. ஆனால் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக இல்லாமல் நேரடியாக 2-ம் மரணத்தை எதிர்கொள்வோர் நிச்சயமாக உண்டு என நான் நம்புகிறேன்."

உங்க‌ள் ந‌ம்பிக்கை உங்கள் இருதயத்தில் இருக்கும் விசுவாசத்தையே வெளிப்படுத்துகிறது. மனதுறுகி இயேசு கிறிஸ்து அவர் வாழும் காலத்தில் சுகப்படுத்தினார் என்று தான் வேதம் கூறுகிறது. ஆனால் நீங்களோ, இப்பொழுது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தையாக இருந்து மரித்தவர்களை நேரடியாக 2ம் மரணத்திற்கு அனுப்புகிறீர்களே? என்ன ஒரு நற்செய்தியை தருகிறீர்கள்? இது தான் கிறிஸ்துவின் நற்செய்தியா? இந்த செய்தியை தான் அன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பின்  போது "இயேசு கிறிஸ்துவின் பிற‌ப்பு எல்லா ஜ‌ன‌ங்க‌ளுக்கும் ஒரு ந‌ற்செய்தி" என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌தா? 

உங்க‌ள் க‌ருத்தின் ப‌டி 2ம் ம‌ர‌ண‌த்திற்கு த‌குதியான‌வ‌ர்க‌ள், ஏன் மீண்டும் எழுப்பி அவ‌ர்க‌ளுக்கு ஒரு நியாய‌த்தீர்ப்பு? அதான் ஒரு முறை ம‌ரித்து விட்டால் அழிந்து போவார்க‌ளே? அந்த‌ அழிவுலிருந்து எழுப்பி அவ‌ர்க‌ளை மீண்டும் அழிப்ப‌தை எப்ப‌டி அர்த்த‌ம் கொள்கிறீர்க‌ள். ஒரு வ‌ச‌ன‌த்தை மேலோட்ட‌மாக‌ வாசித்து அர்த்த்ம் கொண்ட‌தாக‌ தான் எடுத்துக்கொள்ள‌ முடிகிற‌து.

உங்க‌ள் கூற்றுப‌டி,

தேவ‌னின் இருத‌ய‌த்திற்கு பிரிய‌மான‌ தாவீது விப‌ச்சார‌ம் செய்தாலும் 2ம் ம‌ர‌ன‌த்திற்கு பாத்திர‌ன் இல்லை, ஆனால் ஒருவ‌னுக்கு சோறு போடாத‌வ‌ன், த‌ண்ணி கொடுக்காத‌வ‌ன், வ‌ஸ்திர‌ம் கொடுக்காத‌வ‌ன், ம‌ன‌நிலை பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன், குழ‌ந்தையாக‌ ம‌ரித்த‌வ‌ன் 2ம் ம‌ர‌ண‌த்திற்கு த‌குதியுடைய‌வ‌ர்க‌ள். மேலும், ஏசாயா 65:20-ல் 100 வயதில் மரிப்பவனைப் பற்றி என்னால் இன்னும் புரிந்துக்கொள்ள‌ முடிய‌வில்லை, என்று ஒப்புக்கொள்ளுகிறேன், ஆனால் நிச்ச‌ய‌மாக‌ அது ஒரு அழிவை குறிக்கும் காரிய‌மாக‌ இருக்காது என்று என் க‌ருத்து.


அன்பு57 எழுதுகிறார்:
"மன்னிப்பு பெற்ற நாம் நற்கிரியைகள் செய்வதும் அவசியமாயிருக்கிறது."

ந‌ற்கிரியைக‌ள் செய்வ‌தில் இன்று கிறிஸ்துவ‌ர்க‌ளை மிஞ்சிய‌ அநேக‌ர் இருக்கிறார்க‌ள், ஆனால் இயேசு கிறிஸ்துவிட‌ம் பாவ‌ அறிக்கை செய்யாத‌தினால் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் 2ம் ம‌ர‌ண‌த்திற்கு செல்வார்க‌ள் என்ப‌தை நினைத்தால் தான் க‌ஷ்ட்ட‌மாக‌ இருக்கிற‌து.


முத‌லாம் ம‌ர‌ண‌த்திலிருந்து உயிர்த்தெழ‌ பாவ‌ ம‌ண்ணிப்பு அவ‌சிய‌ம் என்ப‌தை மீண்டும் மீண்டும் நான் எழுதுகிறேன். அந்த‌ பாவ‌த்தை சும‌ந்து தீர்த்த‌ தேவ‌ ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து. இப்ப‌டி எல்லாம் நீங்க‌ளும் தான் வேத‌த்தில் வாசிக்கிறீர்க‌ள். ஆனாலும் ஒரு கூட்ட‌ம் அந்த‌ இர‌த்த‌ம் சிந்துத‌லின் ப‌ய‌ன் அடையாது என்றும் ந‌ம்புகிறீர்க‌ள்? இன்னோரு பக்கம் எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்றும் நம்புகிறீர்கள்? ஒரே குழப்பமான விசுவாசமாக இருக்கிறதே? உங்க‌ள் 2ம் ம‌ர‌ண‌ கொள்கைக்கு சோதோம் கொபாரா கார‌ர்க‌ள் உட‌ன்ப‌ட‌ மாட்டார்க‌ள் போல், ஏனென்றால் நியாய‌த்தீர்ப்பின் நாட்க‌ளில் அவ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌ ம‌த். 10:15ல் வாசிக்கிறோம். இதை இத‌ற்கு முன்ம்பும் ப‌திந்திருக்கிறேன். ஆனால் இது எல்லாம் உங்க‌ள் 2ம் ம‌ர‌ண‌ கொள்கைக்கு முற‌னான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் என்ப‌தால் விட்டு விட்டீர்க‌ள் போல்.

அன்பு57 எழுதுகிறார்:
"நற்கிரியைகளைச் செய்யாதவர்கள் நேரடியாக 2-ம் மரணத்திற்குச் செல்வதைப்போல, சமாதானமும் சவுக்கியமும் உண்டாகும் எனச் சொல்லி ஜனங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களும் சடிதியான அழிவான 2-ம் மரணத்திற்கு நேரடியாகச் செல்வார்கள் எனக் கருதுகிறேன். இவர்களைத் தவிர வேறு எவர்களெல்லாம் 2-ம் மரணத்திற்கு நேரடியாகச் செல்வார்கள் என்பதை நானறியேன்."

வேத‌த்தில் இல்லாத‌ ஒரு 2ம் ம‌ர‌ண‌த்தில் மேல் இத்துனை ம‌க்க‌ளை தைரிய‌மாக‌ அனுப்ப‌ துனிந்திருக்கிறீர்க‌ளே? ச‌மாதான‌மும் ச‌வுக்கிய‌மும் உண்டாகும் என்று இல்லை அந்த‌ வ‌ச‌னம் "ச‌மாதான‌மும் ச‌வுக்கிய‌மும் உண்டு" என்று தான் வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து. அதை ச‌பையை சாறாத‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் சொல்லுவார்க‌ள் (கிறிஸ்த‌வ‌ர்க‌ள் உட்ப‌ட‌). ஐயோ பாவ‌ம் இவ‌ர்க‌ள் எல்லோரும், 2ம் ம‌ர‌ண‌த்திற்கு போவார்க‌ள் என்றால் வேத‌னையாக‌ தான் இருக்கிற‌து. அதாவ‌து நான் இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு பாவ‌மும் செய்யாத‌வ‌ன் என்கிற‌ சுய‌ நீதியை காட்டிலும் இவ‌ர்க‌ளின் பாவ‌ம் ஒன்று பெரிதாக‌ இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

அன்பு57 எழுதுகிறார்:
"ஏசாயா 11:9-16 வரை நன்கு படியுங்கள். 9-ம் வசனம் பூமியானது கர்த்தரை அறிகிற அறிவினால் நிரம்பியிருக்கும் என்கிறது. ஆனால் தமது ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ள --- என 11-ம் வசனம் கூறுகிறது. யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள் என 13-ம் வசனம் கூறுகிறது. அசீரியரில் மீதியானவர்களுக்கு ---- என 16-ம் வசனம் கூறுகிறது.

மீதியானவர்கள் என ஒரு பிரிவினர் இருந்தால், மீதியானவர்களில் சேராத மற்றவர்களின் கதி என்ன? சங்கரிக்கப்படுகிற யூதாவின் சத்துருக்கள் கர்த்தரை அறிகிற அறிவைப் பெறவில்லையா?"

ஐயா, ஏசாயா எழுதிய‌ இந்த‌ அழிவும் ம‌னித‌ர்க‌ளை யாரிட‌ம் காப்பாற்றும் ப‌டியாக‌ எழுதியிருக்கிறார்க‌ள், தேவ‌னின் ச‌த்துருவிட‌ம் இருந்து இல்லை, ம‌னித‌ர்க‌ளின் ச‌த்துருவிட‌ம் இருந்து, அந்த‌ ச‌த்துரு பிசாசும் அவ‌ன் கிரியைக‌ளும் என்றே என் வாத‌ம். உங்க‌ள் வாத‌த்தில் பெரும் ப‌குதி ம‌க்க‌ள் அழிந்து போவார்க‌ள் என்றே இருப்ப‌து வேத‌னையாக‌ இருக்கிற‌து.

bereans wrote:
//என் கூற்றுப‌டி முத‌லாம் ம‌ர‌ண‌ம் என்று போட‌வில்லை, ச‌ரி, உங்க‌ள் கூற்றுப‌டி இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் என்று கூட‌ தான் போட‌வில்லை. இத‌ற்கு என்ன‌ சொல்லுவீர்க‌ள்?//

முதலாம் மரணம் (அதாவது சரீர மரணம்) ஆதாமின் மீறுதலால் எல்லோருக்கும் ஏற்கனவே தீர்மானமாகி அது ஏற்கனவே எல்லாருக்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, மறுபடி மரணத்தை அல்லது அழிவைச் சொன்னால் அது 2-ம் மரணமாகத்தான் இருக்கவேண்டும் என்பதை வாதத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.

அன்பு57 எழுதுகிறார்:
"வேதாகமம் சொல்வதைத்தான் நான் சொல்கிறேன். தேவனும் இயேசுவும் போதித்த போதனைகளே ஒன்றுமில்லை என ஆகிவிட்டபின் நான் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கும்."

நீங்க‌ள் சொல்லும் இந்த‌ 2ம் ம‌ர‌ண‌த்தின் போத‌னை நிச்ச‌ய‌மாக‌வே புதுமையாக‌வே இருக்கிற‌து. ஒரு சில‌ இட‌ங்க‌ளில் அழிவு என்று போட்ட‌ வார்த்தைக‌ளை 2ம் ம‌ர‌ண‌ம் என்று அர்த்த‌ம் கொண்டு வ‌ச‌ன‌ங்க‌ளை வாசித்து வ‌ருகிறீர்க‌ள். ச‌ரி உங்க‌ள் விசுவாச‌த்தை பின் ப‌ற்றுங்க‌ள். நீதியின் சூரிய‌ன் உதிக்கும் போது (இயேசு கிறிஸ்துவின் வ‌ருகையின் போது) இருள் நீங்கி எல்ல‌ம் வெளிச்ச‌மாகும். அப்பொழுது நிச்ச‌ய‌ம் தேவ‌ன் எப்ப‌டி ப‌ட்ட‌ அன்புள்ள‌வ‌ர் என்றும் அனைவ‌ரும் புரிந்துக்கொள்வார்க‌ள்.

நிச்ச‌ய‌மாக‌வே இது தான் தேவ‌னின் நோக்க‌மாக‌ இருக்க‌ முடியுமே த‌விர‌, அவ‌ர் ப‌டைத்த‌தை அவ‌ர் அழித்து ம‌கிழும் தேவ‌னாக‌ இருக்க‌ முடியாது என்ப‌து தான் வேத‌ம் என‌க்கு த‌ரும் ந‌ம்பிக்கை.

"எல்லொருக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறதற்கும், அவர்களில் அவ‌ப‌க்தியுள்ள‌வ‌ர்க‌ள் யாவ‌ரும் அவ‌ப‌க்தியாய் செய்துவ‌ந்த‌ ச‌க‌ல‌ அவ‌ப‌க்தியான‌ கிரியைக‌ளினிமித்த‌மும்;  த‌ம‌க்கு விரோத‌மாக‌ அவ‌ப‌க‌தியுள்ள‌ பாவிக‌ள் பேசின‌ க‌டின‌ வார்த்தைக‌ள் எல்லாவ‌ற்றினிமித்த‌மும், அவ‌ர்க‌ளை க‌ண்டிக்கிற‌தக‌ற்கும் (2ம் மரணம் அல்ல‌) , ஆயிர‌மாயிர‌மான‌ த‌ம‌து ப‌ரிசுத்த‌வான்க‌ளோடுங்கூட (சபை) க‌ர்த்த‌ர் வ‌ருகிறார் என்று முன்ன‌றிவித்தான்" யூதா. 14, 15

எல்லா பாவிக‌ளும் உயிர்த்தெழுவ‌தினால் தான் நியாய‌த்தீர்ப்பு நாட்க‌ளில் அவ‌ர்க‌ளை க‌ண்டித்து திருத்தவே அவ‌ர் வ‌ருகிறார் அன்றி, நீங்க‌ள் சொல்லுவ‌து போல் என்றும் அழித்து விடும் 2ம் ம‌ர‌ண‌த்தில் த‌ள்ளி விடும் நோக்க‌த்துட‌ன் வ‌ருவ‌தில்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//அப்ப‌டி என்றால் என் ப‌திவுக‌ளை ப‌டிக்காம‌லே தாங்க‌ள் த‌ங்க‌ளின் கேள்விக‌ளை தொட‌ர்ந்து வ‌ருகிறீர்க‌ளா.//

இல்லை சகோதரரே! படித்துத்தான் எழுதுகிறேன். ஆனால் நீங்கள் எழுதியதைப் புரிந்துகொள்ளுமளவு எனக்கு அறிவு இல்லை என நினைக்கிறேன், அதனால்தான் சம்பந்தமேயில்லாமல் ஏதோதோ எழுதிவிட்டேன். என அறிவுக்குறைவைச் சகிக்கும்படி வேண்டுகிறேன்.

bereans wrote:
//அதை தான் 1 தெச் 5:3க்கு ஒப்பிட்டு எழுதியிருக்கின்றேனே. உங்க‌ள் ப‌திலை நீங்க‌ள் ப‌திந்தால் வாசிக்க‌லாம்.//

அந்த ஒப்பிடுதல் என்னவெனப் புரியாமல்தானே சம்பந்தமில்லாமல் ஏதோதோ எழுதிவிட்டேன். தயவுசெய்து அறிவுக்குறைச்சலுள்ள எனக்கு புரியும்படி, அந்த ஒப்பிடுதலை நேரடியாகச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

bereans wrote:
//தெச 5:2 வரை அவர் இரண்டாம் வருகையை குறித்து எழுதுவிட்டு, 3ம் வசனம் முதல் பொதுவானதை எழுதுகிறார் என்பதற்கு என்ன அர்த்தம். அது எந்த காலத்தை குறிக்கிறது என்பதை தெளிவு படுத்துங்களே? இல்லை 3ம் வசனம் பொதுவாக பேசிவிட்டு, மீண்டும் 4ம் வசனம் இரண்டாம் வருகையை சொல்லிவிட்டு மீண்டும் பொதுவானதை தொடர்கிறாரா?//

இவ்வசனத்தைக் குறித்த தனிப்பட்ட விவாதம் நீண்டுகொண்டே செல்கிறது என்பதால்தானே, இதைக் குறித்த விவாதத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வோம் என வேண்டியிருந்தேன். என் வேண்டுகோளுக்கு இணங்க மனமில்லையெனில், இவ்வசனம் குறித்த விவாதத்தை வேறு பகுதியில் வைத்துக் கொள்வோம். இதற்கும் சம்மதமில்லையெனில், எனது அடுத்த பதிவில் அதற்கான விளக்கம் தருகிறேன்.

bereans wrote:
//ஐயா, இதில் எல்லாம் அழிவு என்று சொல்ல‌ப்ப‌டுப‌வை அந்த‌ சாவாமை நிலையை இழ‌ந்து போவ‌தை குறித்து தான் சொல்லுகிற‌து என்றும் நான் ப‌திந்திருப்பதை நீங்க‌ள் பார்க்க‌வில்லை போல்.//

ஐயா, நீங்கள் எழுதியதை எல்லாம் படிக்கத்தான் செய்கிறேன். ஆனால் நேரமின்மை போன்ற சில காரணங்களால் எல்லாவற்றிற்கும் பதில்தர இயலவில்லை, மன்னிக்கவும்.

அழிவு என்றாலும் சரி, சாவாமை நிலையை இழந்து போதல் என்றாலும் சரி, அப்படி ஒன்று நிகழும் என்பதால்தானே அதைக் குறித்து மீண்டும் மீண்டும் சொல்லி, அதிலிருந்து தப்பவேண்டுமெனில் இதையிதைச் செய்யுங்கள், இதையிதைச் செய்யாதிருங்கள் என வேதாகமம் கூறுகிறது?

எனவே அழியாமல் (அல்லது சாவாமை நிலையை இழக்காமல்) இருக்கவேண்டுமெனில் வேதாகமம் கூறுகிறபடி நாம் நடக்கவேண்டுமல்லவா? அப்படி நடக்காவிடில், (உங்கள் கூற்றுப்படி) சாவாமை நிலையை நாம் இழந்து போவோமல்லவா? சாவாமை நிலையை இழந்தால் சாக நேரிடும் அல்லவா? இதைத்தான் மீண்டும் மீண்டும் என் வாதத்தில் வைக்கிறேன்.

இந்த சாவை 2-ம் மரணம் என நான் சொன்னால், அவ்வாறு வேதாகமம் சொல்லவில்லையே என்கிறீர்கள். அவ்வாறெனில் இது எந்த சாவு என நீங்களே சொல்லுங்கள் (வசன ஆதாரத்துடன்).

ஆனால் இதுதான் நம் எல்லோருக்கும் சரீரத்தில் நிகழுகிற சாவு எனக் கூறினால் அதை நான் ஏற்கமுடியாது. ஏனெனில், சரீரத்தில் நிகழ்கிற சாவு, ஆதாம் பாவம் செய்தபோதே நமக்கு நியமிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே சாவுக்கு நியமிக்கப்பட்ட நம்மிடம், மீண்டும் ஒரு சாவைப் பற்றி கூறினால், அது எந்த சாவு?

bereans wrote:
//இந்த‌ பூமியே தேவ‌னை அறிகிற‌ அறிவினால் நிற‌ம்பிவிட்ட‌ பிற‌கு யாருக்கு இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் இருக்க‌ முடியும் என்று தெரிய‌வில்லை? (எங்க‌ள் க‌ருத்து, சாத்தான் ம‌ற்றும் அவ‌ன் கிறிய‌க்ளுக்கு என்றென்றைக்கும் ஒரு அழிவு). //

வெளி. 2:11ஐப் படித்துப் பாருங்கள். இவ்வசனம், ஜெயங்கொள்கிறவன் 2-ம் மரணத்தினால் சேதப்படுவதில்லை எனக் கூறுகிறது. அவ்வாறெனில் ஜெயங்கொள்ளாதவன் 2-ம் மரணத்தினால் சேதப்படுவான் என்றுதானே அர்த்தம்?

முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்கள் மீது, 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை என வெளி. 20:6 கூறுகிறது. அவ்வாறெனில், முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்கில்லாதவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு என்றுதானே அர்த்தம்?

பூமி தேவனை அறிகிற அறிவினால் நிரம்புவது எப்போது? 1000 வருட அரசாட்சியிலா, அதற்கு முன்னா, அல்லது அதற்குப் பின்னா?

bereans wrote:
//தேவ‌ன் எல்லாவ‌ற்றிர்க்கும் ஒரு கால‌ம் வைத்திருக்கிறார், அப்பொழுது அவ‌ர் அதில் எல்லாவ‌ற்றையும் நேர்த்தியாக‌ தான் செய்து முடிப்பார், அழித்து முடிக்க‌ம்மாட்டார் என்ப‌து நாங்க‌ள் தேவ‌ அன்பின் மேல் வைத்திருக்கும் விசுவாச‌ம்.//

இக்கூற்றிற்கு நான் தந்த பதிலை மீண்டும் தருகிறேன், படித்து பதில் தரவும்.

anbu57 wrote:
//தங்களின் கூற்றுக்கு இயேசு சொன்ன வசனங்களைப் பதிலாகத் தருகிறேன்.

யோவான் 8:24 நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்.
(இந்த சாவு, எந்த சாவு சகோதரரே?)

மத்தேயு 7:19 நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்.
(நல்ல கனி - நற்கிரியை, மரம் - மனிதர்கள், வெட்டுண்டு - கொல்லப்பட்டு, அக்கினியில் போடப்படும் - மரத்தை அக்கினி எரித்து சாம்பலாக்குவதைப்போல நற்கிரியை செய்யாத மனிதரை கொன்று, அவர்கள் மீண்டும் உயிரடையாதபடி அழிக்கப்படுவார்கள்).//

ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன் சகோதரரே! ஆனால் அக்கேள்வியை இயேசுவிடம் கேட்டுவிட்டு உங்களிடம் வருகிறேன்.

இயேசுவே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்?
இயேசு: நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளை கைக்கொள். (மத்தேயு 19:17)

சகோ.பெரியன்ஸ் அவர்களே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்?

bereans wrote:
//அப்ப‌டி என்றால் உங்க‌ள் க‌ருத்துப‌டி ப‌ர‌லோக‌ம் செல்ல‌ த‌குதி என்ன‌? ஏனென்றால் எல்லாரும் பாவ‌ம் செய்து தேவ‌ ம‌கிமையை இழந்து போனார்க‌ள் என்றும், ஒரு ம‌னித‌னும் நீதிமான் இல்லை என்றும் வேத‌ம் கூறுவ‌து, அனைவ‌ரும் 2ம் ம‌ர‌ண‌த்திற்கு மாத்திர‌மே த‌குதியுள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள், உங்க‌ள் கூற்றுப‌டி.//

தயவுசெய்து சிரமம் பாராமல், இவ்வுலகில் நீதிமான்கள் உண்டு என்பதற்கு ஆதாரமான பின்வரும் வசனங்களை எடுத்து படிக்கவும்.

மத்தேயு 10:41; 13:43,49; 23:35; 25:37; லூக்கா 14:14; யாக்கோபு 5:16; 1 பேதுரு 3:12. (இன்னும் பல வசனங்கள் உண்டு)

இத்தனை வசனங்களுக்கு மேலாக, நீதிமான்கள் உண்டு எனக் கூறியிருக்க, ஒருவனும் நீதிமான் இல்லை என்றும் வேதாகமம் கூறுவதால் வேதாகமத்தில் முரண்பாடு உள்ளதா?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

eras wrote:
//நான் ஒரே கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். தேவன் தன் சித்தம் நிறைவேற அல்லது அவரின் "desire" நிறைவேற யாரையும் சார்ந்திருக்கிறாரா?//

ஆமாம் சகோதரரே!

இதற்கு ஒரேயொரு உதாரணம் தருகிறேன்.

தெசலோனிக்கேய சபையார் பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்பது தேவனின் சித்தமாயிருந்தது (1 தெச. 4:3). ஆனால் அந்த சித்தம் நிறைவேறுவதற்கு, தெசலொனிக்கேய சபையார் எப்படியெல்லாம் நடக்கவேண்டுமென 4-6 வசனங்களில் பவுல் சொல்வதைப் படித்துப் பாருங்கள். பவுல் சொன்னபடி அவர்கள் நடந்தால்தான் தேவசித்தம் நிறைவேறும். நடவாவிடில், தேவசித்தம் நிறைவேறாது. எனவே, 1 தெச. 4:3-ல் கூறப்பட்டுள்ள தேவசித்தம் நிறைவேறுவது, தெசலோனிக்கேய சபையாரின் நடவடிக்கையைச் சார்ந்ததாகத்தான் இருந்தது.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//ஒரு கூட்ட‌த்தார் சொல்லுவ‌து ச‌ற்று ச‌கிக்க‌முடியாம‌ல் இருக்கிற‌து, அதாவ‌து, தேவ‌ன் சித்த‌ம் கொண்டு இருக்கிறார், ஆனால் அது நிறைவேற‌ ம‌னித‌னின் சுய‌சித்த‌த்தை சார்ந்து இருக்கிறார் என்று.//

1 தெச. 4:3-7
4. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், 5 உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: 6 இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார். 7 தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 8 ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.

சகோ.பெரியன்ஸ் அவர்களே! நீங்கள் சொல்கிற அந்த “ஒரு கூட்டத்தாரில்” முதலாவதாக நிற்பவர் பவுல். ஏனெனில், தெசலோனிக்கேய சபையார் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டும் என்பதே தேவனின் சித்தம் என அவர் சொல்லிவிட்டு, அந்த தேவசித்தம் நிறைவேறும்படி, அவர்களை பரிசுத்தமாயிருக்கும்படி வேண்டுகிறார். அதாவது, தெச. சபையார் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டும் என தேவன் சித்தம் கொண்டுள்ளார், ஆனால் அது நிறைவேற, அவர் தெச. சபையாரின் நடவடிக்கையைச் சார்ந்து இருக்கிறார் எனப் பவுல் கூறுகிறார்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பரிசுத்தமாக இருப்பது தேவனுக்கு சித்தமாக இருக்கிறது. அந்த சித்தத்தை நிறைவேற்ற தான் சொல்லுகிறார் பவுல். ஆனால் அதில் வெற்றி பெறுவது யார் என்று தேவனே தீர்மானிக்கிறார். ஆகவே தான் யூதாஸ் போல் இருந்தவர்கள் பரிசுத்ததிற்கு சமீபமாக இருந்தும் இல்லாமல் போய் விட்டார்கள், பவுல் போல் கிறிஸ்துவிற்கு எதிரியாக இருந்தும் அப்போஸ்தலனாக மாறினார்கள். நீங்கள் பரிசுத்தமாவதற்கு துனை போவது தேவனின் ஆவி தானே. அப்படி என்றால், அவர் யார் பரிசுத்தமாக வாழ சித்தமாக இருக்கிறாரோ, அந்த மனிதன் எந்த சாக்கடையில் இருந்தாலும், நிச்சயமாக மாறுவான், இல்லாவிட்டால், எந்த பெரிய ஆலயத்தில் இருந்தாலும், சாக்கடைக்கு போவான்.

தேவனின் சித்தம் நிறைவேற மனிதனை தேவன் தமது பாத்திரமாக பயன் படுத்துகிறாரே அன்றி, மனிதர்களை சார்ந்து இருப்பதில்லை என்பது தான் என் வாதம். அதற்காகவே அவர் தெரிந்துக்கொள்பவர்க்கு அதர்கு தேவையான ஆவியை கொடுக்கிறார். பவுல் சொல்லுவதும் அதுவே என்பதை நன்றாக ஆறாய்ந்து பாருங்கள்.

ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான் தீர்ப்பு உண்டாயிற்று (ரோம் 5:18) என்று தேவன் ஏற்கனவே ஒரு தீர்ப்பை எழுது விட்டு, மனிதர்களை சார்ந்திருக்கிறார் என்றால், எப்படி?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//பரிசுத்தமாக இருப்பது தேவனுக்கு சித்தமாக இருக்கிறது. அந்த சித்தத்தை நிறைவேற்ற தான் சொல்லுகிறார் பவுல். ஆனால் அதில் வெற்றி பெறுவது யார் என்று தேவனே தீர்மானிக்கிறார். ஆகவே தான் யூதாஸ் போல் இருந்தவர்கள் பரிசுத்ததிற்கு சமீபமாக இருந்தும் இல்லாமல் போய் விட்டார்கள், பவுல் போல் கிறிஸ்துவிற்கு எதிரியாக இருந்தும் அப்போஸ்தலனாக மாறினார்கள். நீங்கள் பரிசுத்தமாவதற்கு துணை போவது தேவனின் ஆவி தானே. அப்படி என்றால், அவர் யார் பரிசுத்தமாக வாழ சித்தமாக இருக்கிறாரோ, அந்த மனிதன் எந்த சாக்கடையில் இருந்தாலும், நிச்சயமாக மாறுவான், இல்லாவிட்டால், எந்த பெரிய ஆலயத்தில் இருந்தாலும், சாக்கடைக்கு போவான்.//

தெசலோனிக்கேய சபையார் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பது தேவனின் சித்தமாம்; அந்த சித்தத்தை நிறைவேற்றும்படி தெசலோனிக்கேய சபையாரிடம் பவுல் சொல்கிறாராம்; ஆனால், தெசலோனிக்கேய சபையாரில் ஒரு பிரிவினர் மட்டும்தான் வெற்றி பெறவேண்டுமென தேவன் தீர்மானிக்கிறாராம். எனவே தெசலோனிக்கேய சபையாரில் ஒரு பிரிவினர் சாக்கடையில் கிடந்தாலும் அவர்களை தேவன் பரிசுத்தமாக வாழ வைத்துவிடுவாராம்; மற்றொரு பிரிவினர் எவ்வளவுதான் பரிசுத்தமாக வாழ முயன்றாலும் (அதாவது தேவசித்தத்தை நிறைவேற்ற முயன்றாலும்) அவர்களை தேவன் சாக்கடைக்குள் தள்ளி விடுவாராம். இவ்வாறு சகோ.பெரையன்ஸ் கூறுகிறார்.

பெரையன்ஸ் சொல்வதைப் படிப்பவர்களே, அவர் சொல்வது அபத்தமா, தேவதூஷணமா, குழப்பத்தின் உச்சக்கட்டமா, அல்லது நகைச்சுவையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் தீர்மானம் எடுக்கும்போது தேவசித்தப்படி தீர்மானம் எடுக்க முயலுங்கள். ஆனாலும், நீங்கள் என்ன தீர்மானம் எடுக்கவேண்டுமென தேவன் தீர்மானித்துள்ளாரோ அதன்படிதான் நீங்கள் தீர்மானம் எடுப்பீர்கள் என்பதையும் மறந்துபோகவேண்டாம்.

பெரையன்ஸ் சொல்வதைப் படிப்பவர்களே! நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதுதான் தேவனின் சித்தம். அவரது சித்தம் நிறைவேற நீங்கள் முயலுங்கள். ஆனால் நீங்கள் என்னதான் முயன்றாலும், வெற்றி பெறுவது தேவன்தான் என பெரையன்ஸ் சொல்கிறார். (என்ன குழப்பமாக இருக்கிறதா?) அதாவது நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமா வேண்டாமா என ஏற்கனவே தேவன் தீர்மானித்து வைத்துள்ளார். அந்தத் தீர்மானத்தின்படி, ஒன்று நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாவீர்கள், அல்லது சாக்கடைக்குள் போவீர்கள். இப்படிச் சொல்வது நானல்ல, சகோ.பெரையன்ஸ் தான் கூறுகிறார்.

bereans wrote:
//தேவனின் சித்தம் நிறைவேற மனிதனை தேவன் தமது பாத்திரமாக பயன் படுத்துகிறாரே அன்றி, மனிதர்களை சார்ந்து இருப்பதில்லை என்பது தான் என் வாதம்.//

சகோ.பெரையன்ஸ் அவர்களே! நீங்கள் செய்வது வாதமாகத் தோன்றவில்லை, பிடிவாதமாகத் தோன்றுகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது உங்கள் கருத்துக்களுக்கு பொருத்தமாக உள்ளது. ஆம், ஆதாம் பாவம் செய்யவேண்டும் என்பது தேவசித்தம் எனும் முதல் கோணல்தான், நாம் தேவசித்தப்படி பரிசுத்தமாக வாழ முயன்றாலும், அதில் நமக்கு வெற்றியா தோல்வியா என்பது தேவனின் தீர்மானத்தின்படியே ஆகும் எனும் முழுமையான கோணலுக்கு வழிவகுத்துள்ளது.

தயவுசெய்து, உங்கள் மனதில் ஏற்கனவே பதிந்துள்ள ideas எல்லாவற்றையும் சற்று மூட்டை கட்டிவைத்து விட்டு, எனது அடுத்த பதிவை படியுங்கள். இது கட்டாய வேண்டுகோள் அல்ல. தேவனுக்கு சித்தம் இருந்தால் அப்படிச் செய்யுங்கள். எனது அடுத்த பதிவைப் படித்துவிட்டு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை வைத்துதான், இவ்விஷயத்தில் தொடர்ந்து நான் விவாதிக்கவா வேண்டாமா என்பதை தீர்மானிக்கவேண்டும்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

எனது பதிவை புதிதாக வேறொரு தலைப்பு ஆரம்பித்து அதில் பதிகிறேன். நன்றி.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சகோ.அன்பு சொல்வதையெல்லாம் பார்த்தால் கீழ்கண்ட குழப்பமேயில்லாத 'தெளிவான' முடிவுகளுக்கு வரலாம்.

1.தேவன் 'தவறு' செய்துவிட்டு அதற்காக மனஸ்தாபப்படுபவர்.

2.அவருக்கு நடக்கப் போகும் காரியங்கள் ஒன்றுமே தெரியாது.

3.நடக்கும் செயல்களின் விளைவுகளுக்கேற்ப அவர் தன் திட்டங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்.

4.சாத்தான் தேவனையே ஏமாற்றி அவரைவிட பெரியவனாகிறான்.

5.இவைகளெல்லாம் சம்பவிக்கும் என்று வேதத்தில், குறிப்பாக வெளிப்படுத்தல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவைகள் எல்லாம் 'ஊகத்தின்' அடிப்படையில்தான், அவை அப்படியே சம்பவிக்கும் என்பது தேவனுக்கே தெரியாது.

6.உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் நித்திய ஆக்கினை அடைவதோ அல்லது நித்திய ஜீவன் அடைவதோ முழுக்க முழுக்க உங்கள் கையில்தான்.

7.எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு ஆனால் ஒரு பிரிவினர் உயிர்த்தெழுந்து உட்னடியாக மரித்துவிடுவார்கள்.

இன்னும் வரும்


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//சகோ.அன்பு சொல்வதையெல்லாம் பார்த்தால் கீழ்கண்ட குழப்பமேயில்லாத 'தெளிவான' முடிவுகளுக்கு வரலாம்.//

தேவனுக்கு ஸ்தோத்திரம்! இப்பொழுதாவது குழப்பமேயில்லாத 'தெளிவான' முடிவுகளுக்கு உங்களால் வரமுடிந்ததே!

soulsolution wrote:
//1.தேவன் 'தவறு' செய்துவிட்டு அதற்காக மனஸ்தாபப்படுபவர்.//

ஒரு சிறிய திருத்தம். தமது எதிர்பார்ப்புக்கு மாறாக மனிதன் “தவறு” செய்யும்போது அதற்காக தேவன் மனஸ்தாபப்படுவார். தாவீதின் நற்பண்புகளினிமித்தம் அவரை தமது தாசன் என மனதார கூறிய தேவன், தாவீது பாவஞ்செய்தபோது, அதற்காக அவர் வருந்தினாரல்லவா?

இஸ்ரவேலின் ராஜாவாக சவுலைத் தெரிவுசெய்த தேவன், இவன் என் ஜனத்தை ஆளுவான் என எத்தனை நம்பிக்கையோடு கூறினார்? (1 சாமு. 9:17) தேவன் தெரிவு செய்த சவுலுக்கு சமமாக இஸ்ரவேலில் யாரும் இல்லை என சாமுவேல் கூறத்தான் செய்தார். சவுலுக்கு வேறே இருதயத்தை தேவன் கொடுக்கவும் செய்தார். (1 சாமு. 10:9,24) இப்படிப்பட்ட சவுல், தமக்கு கீழ்ப்படியாமல் போவார் என்றா தேவன் எதிர்பார்த்திருப்பார்? எனவேதான் சவுல் தமக்கு கீழ்ப்படியாமற்போனதும், அவனை ராஜாவாக்கினதற்காக தேவன் மனஸ்தாபப்பட்டார்.(1 சாமு. 15:11)

சவுலாகிலும் சரி, தாவீனாலும் சரி, அவர்கள் தவறு செய்யவேண்டும் என்பது தேவனின் எதிர்பார்ப்பல்ல. அதேசமயம் அவர்கள் தவறு செய்யவோ செய்யாதிருக்கவோ அவர்களுக்கு சுயாதீனம் கொடுத்திருந்தார். அந்த சுயாதீனத்தின் காரணமாகத்தான் சிலவேளை மனிதன் தவறு செய்கிறான், சிலவேளை தவறு செய்யாதிருக்கிறான்.

soulsolution wrote:
//2.அவருக்கு நடக்கப் போகும் காரியங்கள் ஒன்றுமே தெரியாது.//

ஒரு மனிதன் தனது சயாதீனத்தின்படி என்ன செய்வான் என்பதை தேவன் அறிய முற்படும்வரை, அது அவருக்குத் தெரியாதுதான். மற்றபடி நடக்கப்போகும் காரியங்கள் ஒன்றுமே அவருக்குத் தெரியாது என நான் ஒருபோதும் கூறவில்லை; நீங்களாகவே கற்பனை செய்துகொண்டீர்கள்.

soulsolution wrote:
//3.நடக்கும் செயல்களின் விளைவுகளுக்கேற்ப அவர் தன் திட்டங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்.//

ஒரு சிறிய திருத்தம். “திட்டங்களை” அல்ல, திட்டத்திற்கான கருவிகளை. சவுலைத் தெரிவு செய்து, பின்னர் அவனை நீக்கிவிட்டு தாவீதைத் தெரிவுசெய்ததைப்போல.

சில வேளைகளில் தமது தீர்மானங்களைக்கூட மாற்றுகிறார். நினிவே மக்களை அழிக்கத் தீர்மானித்து, பின்னர் அழிக்காதிருக்க தீர்மானித்ததைப்போல.

soulsolution wrote:
//4.சாத்தான் தேவனையே ஏமாற்றி அவரைவிட பெரியவனாகிறான்.//

சாத்தான் தேவனை ஏமாற்றியதாக நான் சொல்லவில்லை. மனிதரை சாத்தான் ஏமாற்றுகிறான் என்று மட்டுமே வேதாகமும் சொல்கிறது, நானும் சொல்கிறேன்.

தேவனை சாத்தான் ஏமாற்றாததால், அவரைவிட அவன் பெரியவனாகிறான் எனும் தங்கள் முடிவு தவறாகிவிடுகிறது.

soulsolution wrote:
//இவைகளெல்லாம் சம்பவிக்கும் என்று வேதத்தில், குறிப்பாக வெளிப்படுத்தல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவைகள் எல்லாம் 'ஊகத்தின்' அடிப்படையில்தான், அவை அப்படியே சம்பவிக்கும் என்பது தேவனுக்கே தெரியாது.//

இப்படி நான் கூறவில்லை. மனிதன் தன் சுயாதீனத்தில் செய்கிற காரியங்களைப் பொறுத்தவரை தேவனின் நிலையென்ன என்பது பற்றி நான் எழுதியதை, எல்லா விஷயங்களுக்கும் பொதுவாக்கி, மேற்கூறிய முடிவை நீங்களாக எடுத்துள்ளீர்கள்.

soulsolution wrote:
//6.உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் நித்திய ஆக்கினை அடைவதோ அல்லது நித்திய ஜீவன் அடைவதோ முழுக்க முழுக்க உங்கள் கையில்தான்.//

இப்படி நான் ஒருபோதும் சொல்லவில்லை.
நித்தியஜீவனுக்கடுத்த போதனைகளாக இயேசு போதித்தவற்றை, என்னால் இயன்றவரை யாவருக்கும் போதிப்பது மட்டுமே என் கையிலுள்ளது. போதித்தபடி நடந்து நித்தியஜீவனை சுதந்தரிப்பதும், அல்லது நடவாமல் நித்தியஆக்கினை அடைவதும் அவரவர் கையிலுள்ளது.

soulsolution wrote:
//7.எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு ஆனால் ஒரு பிரிவினர் உயிர்த்தெழுந்து உட்னடியாக மரித்துவிடுவார்கள்.//

எல்லோரும் உயிர்ப்பிக்கப் படுவார்கள். அவர்களில் ஒரு பிரிவினர், கிறிஸ்துவோடு 1000 வருட ஆட்சியில் அரசாளுவார்கள். 2-வது பிரிவினர், 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகி நீதியைக் குறித்து போதிக்கப்படுவார்கள். 3-வது பிரிவினர், தேவனின் நீதியுள்ள தீர்ப்பின்படி துன்மார்க்கரெனத் தீர்க்கப்பட்டு, 2-ம் மரணத்திற்கு நியமிக்கப்பட்டு அழிவார்கள். 2-வது பிரிவினரில் ஒரு பிரிவினர் நீதியைக் கற்றுக்கொள்வதன் மூலம் 2-ம் மரணத்திலிருந்து தப்பித்து, நித்தியஜீவனை அடைவார்கள்; மற்றொரு பிரிவினர் நீதியைக் கற்றுக்கொள்ள மறுத்து, துன்மார்க்கரெனத் தீர்க்கப்பட்டு, 2-ம் மரணத்தில் பங்கடைந்து அழிவார்கள்.

soulsolution wrote:
//இன்னும் வரும்//

வரட்டும்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்படவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்" எல்லாம் லூக்கின் (அப். எழுதியவர்) கற்பனையோ!!??

"அன்றியும் அவ‌ருடைய‌ தீர்மான‌த்தின்ப‌டி அழைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ப் தேவ‌னிட‌த்தில் அன்புக்கூறிகிற‌வ‌ர்க‌ளுக்கு.." ரோம். 8:28

"தேவ‌ன் எவ‌ர்க‌ளை முன்ன‌றிந்தாரோ, அவ‌ர்க‌ளைத் த‌ம‌து குமார‌னுடைய‌ சாய‌லுக்கு ...." ரோம் 8:29,30

போன்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ள் லூக்கை போல் பாவ‌ம் ப‌வுலும் சொந்த‌மாக‌ ஏதோ எழுதியிருக்கிறார் என்று தான் சொல்ல‌ வேண்டும் போல்.

பாவ‌ம் தேவ‌ன், ம‌னித‌னின் செய‌ல்க‌ளை எதிர்ப்பார்த்து, அவ‌ன் ஒரு குறிப்பிட்ட‌ செய‌லை செய்த பின்பு தேவ‌ன் த‌ன் அடுத்த‌ முடிவை எடுப்பார் அல்ல‌து மாற்றுவார், ஏனென்றால் அந்த‌ ம‌னித‌ன் என்ன‌ செய்ய‌ போகிறான் என்று "ஷெர்லாக் ஹோம்ஸ்" மாதிரி "அறிய‌ முற்ப‌டும்" போது தான் பாவ‌ம் அவ‌ருக்கே விஷ‌ய‌ம் தெரிய‌ வ‌ந்து, அத‌ன் பிற‌கு அவ‌ர் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்குவார் என்று சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ளா ச‌கோ அன்பு அவ‌ர்க‌ளே!!

தாயின் க‌ருவில் தோன்றும் முன்ன‌மே நம்மை அறிந்து இருக்கும் தேவ‌ன், உங்க‌ள் ப‌திவை பார்த்தால்,
அத‌ன் பிற‌கு அந்த‌ த‌குதியை இழ‌ந்து போகிறார் போல்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

/// பாவ‌ம் தேவ‌ன், ம‌னித‌னின் செய‌ல்க‌ளை எதிர்ப்பார்த்து, அவ‌ன் ஒரு குறிப்பிட்ட‌ செய‌லை செய்த பின்பு தேவ‌ன் த‌ன் அடுத்த‌ முடிவை எடுப்பார் அல்ல‌து மாற்றுவார், ஏனென்றால் அந்த‌ ம‌னித‌ன் என்ன‌ செய்ய‌ போகிறான் என்று "ஷெர்லாக் ஹோம்ஸ்" மாதிரி "அறிய‌ முற்ப‌டும்" போது தான் பாவ‌ம் அவ‌ருக்கே விஷ‌ய‌ம் தெரிய‌ வ‌ந்து, அத‌ன் பிற‌கு அவ‌ர் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்குவார் என்று சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ளா ச‌கோ அன்பு அவ‌ர்க‌ளே!!

 


ஆம்! "என் ஆவி மனிதனுடைய ஆவியோடு போராடுவது இல்லை" என்பதற்கு பொருள் மனிதனோடு  போராடி அவனை தனது திட்டத்தின் கீழ் கொண்டுவராமல் மனிதனின் நடத்தைக்கு ஏற்ப தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்வதுதான்.  இதில் பாவம் தேவன் என்று சொல்ல என்ன இருக்கிறது?

வேதம் முழுவதும் அப்படித்தான் நடந்துள்ளது கீழ்படிந்தவன் பிழைத்தான் கீழ்படியாதவன் அழிந்தான்!  

 


 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

soulsolution wrote: //இவைகளெல்லாம் சம்பவிக்கும் என்று வேதத்தில், குறிப்பாக வெளிப்படுத்தல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவைகள் எல்லாம் 'ஊகத்தின்' அடிப்படையில்தான், அவை அப்படியே சம்பவிக்கும் என்பது தேவனுக்கே தெரியாது.//


அன்பு எழுதுகிறார்//இப்படி நான் கூறவில்லை. மனிதன் தன் சுயாதீனத்தில் செய்கிற காரியங்களைப் பொறுத்தவரை தேவனின் நிலையென்ன என்பது பற்றி நான் எழுதியதை, எல்லா விஷயங்களுக்கும் பொதுவாக்கி, மேற்கூறிய முடிவை நீங்களாக எடுத்துள்ளீர்கள்.//





இந்த உங்கள் பதில் புரியவில்லை சகோதரரே. ஆக ஒரு சில விஷயங்களில் மட்டும் தேவன் தன் சித்தத்தை பூரண‌மாக நிறைவேற்றுகிறாரா? அப்படியென்றால் யார் யார் அல்லது எந்தெந்த விஷயங்களில் என்று விளக்க நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.




உதாரணமாக பத்சேபாளிடத்தில் பிறந்த சாலமோனின் சந்த்ததியில்தான் கிறிஸ்து வருகிறார். ஆக தேவன் தாவீதைப் பாவத்துக்குள் தள்ளினாரா அல்லது அவனது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டாரா?



'உன் வித்தின் மூலம் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்' என்று மொட்டையாகச் சொன்னாரா அல்லது *condditions appy என்று போட்டாரா?



பார்வோன் மனதை அவர் ஏன் கடினப்படுத்தவேண்டும்?



யூதாஸ்காரியோத் காட்டிக்கொடுப்பான் என்பதை மட்டும் எப்படி அவ்வளவு திட்டவட்டமாகக் கூறினார்? ஏன் அவன் மற்ற அப்போஸ்தலர்கள் போல இருந்திருக்க 100% வாய்ப்புள்ளதே?



அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்று தேவனுக்குத் தெரியும் ஆனால் அவர்கள் யார் யார் என்பது அவருக்குத் தெரியாது அல்லவா?





வெளிப்படுத்தல் புத்தகம் முழுக்க முழுக்க இந்த 2000ம் ஆண்டுகளாக சபையிலும், உலகிலும் நடக்கும், நடக்கப்போகும் காரியங்கள்மட்டுமே மிகத்துல்லியமாக எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இருக்கும் சபைகளின் நிலைதான் ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டது. ஆபிரகாமின் மூதாதையர்களோ, ஆபிரகாமோ, ஈசாக்கோ, யாக்கோபோ ஒருவேளை "தற்செயலாக" திருமணமாகாமலேயே மரித்திருந்தால் இன்றைய இஸ்ரேல் வந்தே இருக்காதே?




ஒருவேளை தாவீது யோக்கியனாக இருந்திருந்தால் இயேசுவின் வம்சாவழி சாலமோனல்லாத வேறொருவரிடமிருந்து வந்திருக்குமோ?





"அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைக்ளிலிருந்து கூட்டிச்சேர்ப்பார்". மாற்கு13:27.


யார் இந்தத் தெரிந்துகொண்டவர்கள்? தெரிந்துகொள்ளப்படுவது மனிதர் கையில் இருக்கும் பட்சம் ஒருவர்கூட தெரிந்துகொள்ளப்படாமல் போகவும்கூட வாய்ப்புள்ளபோது அதெப்படி திட்டவட்டமாக கூறுகிறார்?





இது போன்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு நீங்கள் பதில் தர வேண்டியிருக்கும், உங்கள் வாதத்தில் முரண்டு பிடித்தால்....


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard