kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நம்ப முடிவதில்லை!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: நம்ப முடிவதில்லை!!


அன்பு57 எழுதுகிறார்:
"bereans wrote:
//இயேசு கிறிஸ்துவின் சாய‌லில் ஒரு கூட்டத்தை தேவ‌ன் முன்குறித்திருக்கிறார் (ரோம் 8:29). இப்ப‌டி ஒரு கூட்ட‌த்தை தேவ‌னே முன்குறித்து விட்டு, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌த்திற்கு போகும்ப‌டி நிய‌மித்திருக்கிறார் என்றால், அதில் நியாய‌ம் இல்லை, சில கள்ள போதகர்கள் தான் இப்படி சொல்லுகிறார்களே தவிர, தேவன் அப்படி சொல்லவில்லை.//


நானும் அப்படி சொல்லவில்லை சகோதரரே!"

அப்ப‌டி என்றால் எதை விசுவ‌சிக்கிறீர்க‌ள். உங்க‌ள் விசுவாச‌ம் என்ன‌?

அன்பு57 எழுதுகிறார்:
"ஆனால் தேவனின் சித்தம் நிறைவேறுவதற்கு, அதாவது மனிதன் அழிந்து போகாதிருப்பதற்கு தேவனும் இயேசுவும் கூறியுள்ள நிபந்தனைகளின்படி மனிதன் நடப்பது அவசியமாயுள்ளது என்பதையும் நான் விசுவாசிக்கிறேன். "

இப்ப‌டி எல்லா ம‌னுஷ‌ர்க‌ளும் இர‌ட்சிக்க‌ப்ப‌ட‌ தேவ‌ன் சித்த‌ம் கொண்டிருந்து, அத‌ற்காக‌ உங்க‌ளை ஒன்றும் செய்ய‌ சொல்ல‌வில்லை, மாறாக‌ அதை செய்த‌து, அவ‌ர‌து குமார‌னும், ந‌ம் க‌ர்த்த‌ருமான‌ இயேசு கிறிஸ்து. இந்த‌ இர‌ட்சிப்பு இயேசு கிறிஸ்து த‌ன்னை "எல்லாரையும் மீட்கும் பொருளாக‌" ஒப்புக்கொடுத்த‌தினால் வ‌ந்த‌து. இர‌ட்சிப்பு என்ற‌வுட‌ன், ப‌ர‌லோக‌ம் செல்வ‌து தான் இர‌ட்சிப்பு என்ப‌து மாத்திர‌ம் அர்த்த‌ம் கிடையாது. இர‌ட்சிப்பு என்றால், ம‌ர‌ண‌த்திலிருந்து விடுவிப்பு. பாவ‌ம் செய்த‌ ம‌னித‌ன் என்றென்றும், ம‌ரித்திருக்க‌ வேண்டியதாக‌ இருந்திருக்கும், ஆனால் இயேசு கிறிஸ்து எல்லாருக்காக‌வும் த‌ன்னை மீட்கும் பொருளாக‌ ஒப்பு கொடுத்த‌தினால், எல்லோரும் இர‌ட்சிக்க‌ப்ப‌ட‌ (உயிர்த்தெழ‌) சாத்திய‌மாகிற‌து, தேவ‌ சித்த‌த்தின் நிறைவேற‌.

"அதனால்தான் தேவசித்தப்படி நடக்கத்தவறிய ஆதாமுக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்; தேவசித்தப்படி நடக்கத்தவறிய தாவீதுக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்; தேவசித்தப்படி நடக்கத்தவறிய இஸ்ரவேலருக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்; தேவசித்தப்படி நடக்கத்தவறிய சவுல் ராஜாவுக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்; அவ்வாறே தேவசித்தப்படி நடக்கத்தவறிய பலருக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்; அவ்வாறே தேவசித்தப்படி நடக்கத்தவறியவர்களுக்கு, தேவநீதிப்படியான அழிவை தேவன் கொடுக்கத்தான் போகிறார். தேவநீதிக்குக் குறுக்கே உங்கள்/எனது விருப்பம் மட்டுமல்ல, தேவசித்தமுங்கூட குறுக்கே வரமுடியாது."

ஐயா இந்த‌ த‌ண்ட‌னையிலுருந்து மீண்டு வ‌ருவ‌த‌ற்காக‌ தான் இயேசு கிறிஸ்து இர‌த்த‌ம் சிந்தினார். இந்த‌ த‌ண்ட‌னை நிர‌ந்திர‌மாக‌ அல்லாம‌ல், த‌ற்காலீக‌மான‌ ஒரு த‌ண்ட‌னையாக‌ மாறிய‌து. ஏனென்றால், இயேசு கிறிஸ்து "எல்லாரையும் மீட்கும் பொருளாக‌" த‌ம்மை ஒப்பு கொடுத்த‌து எல்லோரும் இர‌ட்சிக்க‌ப்ப‌டும்ப‌டி (ம‌ர‌ண‌த்திலிருந்து உயிர்த்தெழும்ப‌டி; எல்லோரும் ப‌ர‌லோக‌ம் போகும்ப‌டி அல்ல‌) த‌ன்னை ப‌லியாக‌ செலுத்தி விட்டார்.

இதில், இயேசு கிறிஸ்துவின் உப‌தேச‌ங்க‌ளின்படி யாரெல்லாம் வாழ்கிறார்களோ (நிச்ச‌ய‌மாக‌ இயேசு கிறிஸ்துவின் உப‌தேச‌ங்க‌ளின்ப‌டி ஒருவ‌ன் வாழ‌ வேண்டும் என்றால், அவ‌ன் இயேசு கிறிஸ்துவிற்கு பிற‌கு தான் வ‌ந்திருக்க‌ வேண்டும்) அவ‌ர்க‌ளுக்கு இயேசு கிறிஸ்துவின் சாய‌லில் மாற‌ (சாக‌மையை த‌ரித்துக்கொள்ள; வானத்துக்குறிய சரீரம்) ஒரு வாய்ப்பு, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இந்த‌ பூமியில் (பூமிக்குறிய‌ ச‌ரீர‌ம்) உயிர்த்தெழுவார்க‌ள். இது தானே இர‌ட்சிப்பு அன்றி, ப‌ர‌லோக‌ம் செல்வ‌து மாத்திர‌ம் இல்லை.

மேலும் 1தெச‌ 5:3 இயேசு கிறிஸ்துவின் இர‌ண்டாம் வ‌ருகையை விவ‌ரிக்கும் அதிகார‌த்தின் ஒரு ப‌குதி. இயேசு கிறிஸ்து திருட‌னை போல் வ‌ருவார், ஆனால் அவ‌ரின் ம‌க்க‌ள் மாத்திர‌மே அதை அறிந்துக்கொள்ள‌ முடியும் என்கிற‌து வேத‌ம். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் (இன்றைய‌ கிறிஸ்த‌வ‌ ச‌பைக‌ள் உட்ப‌ட‌) அவ‌ரின் வ‌ருகையை அறியாம‌ல் க‌ள்ள உப‌தேச‌ங்க‌ளில் மூழ்கி, எல்லாம் ந‌ல‌மாக‌ இருக்கிற‌து, என்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது தான் அவ‌ரின் வ‌ருகையிருக்கும் என்கிற‌து வேத‌ம் இந்த‌ ப‌குதியில். இயேசு கிறிஸ்து வ‌ர‌வில்லை, 1000 வ‌ருஷ‌ அர‌சாட்சி ந‌ட‌க்க‌வில்லை.

"எல்லோருக்கும் வருகிற முதலாம் மரணம், அவர்களுக்கும் வரும் (சடிதியாகவோ, சாதாரணமாகவோ). ஆனால் இவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகி நிதானமாக நியாயத்தீர்ப்புக்குள்ளாகும் வாய்ப்பைப் பெறாமல், 1000 வருடத்திற்குப் பின் உயிர்பெற்று சடிதியாய் 2-ம் மரணத்திற்கு ஆளாவார்கள் என்பது எனது கருத்து. இதனால்தான் அவர்களின் அழிவை சடிதியான அழிவு எனப் பவுல் கூறுகிறார் எனக் கருதுகிறேன்."

நீங்க‌ள் எழுதிய‌ப்ப‌டி இது நிச்ச‌ய‌மாக‌ உங்க‌ள் க‌ருத்தே! 1000 வ‌ருட‌த்திற்கு பிற‌கு, மீண்டும் ஒரு உயிர்த்தெழுத‌ல் உண்டு என்ப‌ததை வேத‌த்தின் எந்த‌ ப‌குதியிலிருக்கிற‌து? அதாவ‌து சில‌ரை, அவ‌ர் 1000 வ‌ருட‌ அர‌சாட்சிக்கு பிற‌கு எழுப்பி, என்ன‌வென்று விசாரிக்காம‌ல் ச‌டிதியான‌ அழிவை த‌ருவார். ந‌ல்ல‌ க‌ற்ப‌னையே! ஒரு வேளை வெளி. 20:5ல் அடைப்புகுறி வ‌ச‌ன‌த்தை வைத்து இந்த‌ முடிவில் இருக்கீங்க‌ளோ?

இந்த‌ ச‌டிதி ம‌ர‌ண‌ம் எல்லாம், முத‌லாம் ம‌ர‌ண‌ம் மாத்திர‌மே, ஏனென்றால், இயேசு கிறிஸ்துவின் வ‌ருகையை ஒட்டிய‌ வ‌ச‌ன‌ம் தான் இந்த‌ வ‌ச‌ன‌ம்.

1 Thessalonians 5
1 Now, brothers, about times and dates we do not need to write to you,
2 for you know very well that the day of the Lord will come like a thief in the night.

3 While people are saying, Peace and safety, destruction will come on them suddenly, as labour pains on a pregnant woman, and they will not escape.

4 But you, brothers, are not in darkness so that this day should surprise you like a thief.

5 You are all sons of the light and sons of the day. We do not belong to the night or to the darkness.

6 So then, let us not be like others, who are asleep, but let us be alert and self-controlled.

இந்த‌ ப‌குதி இர‌ண்டாம‌ ம‌ர‌ண‌மோ,  1000 வ‌ருட‌மோ ப‌ற்றி சொல்லாம‌ல், இயேசு கிறிஸ்துவின் வ‌ருகையை குரித்து சொல்லியிருக்கிறார் ப‌வுல்.

மிச்சம் அடுத்த‌ பதிவில் தொட‌ர்வேன்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

eras wrote:
//என‌க்கு தெரிந்து இத்துனை மொழிப்பெய‌ர்ப்புக‌ளில் "wants" என்கிற‌ ஒரு மொழிப்பெய‌ர்ப்பை "desire" என்று புரிந்துகொண்டு என்னை வேத‌ புர‌ட்ட‌ன் என்று கூறுவ‌தில் நியாய‌ம் இல்லை என்றே க‌ருதுகிறேன்.//

சகோதரரே! மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்தலின் அடிப்படையில் தாங்கள் எழுதியதை வேதப் புரட்டல் என பேதுரு கூறுகிறாரோ என நான் கேட்கவில்லை. நான் எழுதினதை மீண்டும் ஒரு முறைப் படியுங்கள் சகோதரரே!

anbu57 wrote:
///eras கூறுவது:
//தேவ‌ன் எல்லாரையும் இர‌ட்சிப்பார் என்று அவரின் அழகான திட்டத்தை சொன்னால் ந‌ம்ப‌ ம‌றுக்கிறார்க‌ள்!//

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார் என வசனம் கூறுகிறது. ஆனால் தேவ‌ன் எல்லாரையும் இர‌ட்சிப்பார் என்பது அவரது அழகான திட்டம் என சகோ.eras கூறுகிறார். இதைத்தான் வசனத்தைப் புரட்டுதல் என பேதுரு கூறுகிறாரோ? இப்படி வசனத்தைப் புரட்டிச் சொல்வதை நம்ப மறுக்கிறார்கள் என சகோ.eras வருத்தப்படவும் செய்கிறார்.///

”எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார்” என வசனம் கூறுகையில், அவ்வசனத்தை, ”தேவன் எல்லாரையும் இரட்சிப்பார் என்பது அவரது திட்டம்” எனக் கூறியதால்தான் அதை வேதப்புரட்டல் எனக் கூறினேன்.

தேவன் எல்லாரையும் இரட்சிப்பார் என 1 தீமோ. 2:4 நிச்சயமாகக் கூறவில்லை. இந்த வசனம் மட்டுமல்ல, வேறு எந்த வசனமும், “தேவன் எல்லாரையும் இரட்சிப்பார்” எனக் கூறவில்லை.

1 தீமோ. 4:10-ஐக் கூறியிருந்தீர்கள். அவ்வசனம் பின்வருமாறு கூறுகிறது.

“ஏனெனில் எல்லா ம‌னுஷ‌ருக்கும், விசேஷ‌மாக‌ விசுவாசிக‌ளுக்கும் இர‌ட்ச‌க‌ராகிய‌ ஜீவ‌னுள்ள‌ தேவ‌ன் மேல் ந‌ம்பிக்கை வைத்திருக்கிறோம்.”

எல்லா மனுஷருக்கும் தேவன் இரட்சகர்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது, நானும் மறுக்கவில்லை. எப்படியெனில், ஆதாமீன் மீறுதலால் வந்த முதலாம் மரணத்திலிருந்து எல்லா மனிதரையும் இரட்சிக்கிற இரட்சகர்தான் தேவன். ஆனால் விசுவாசிகளைத்தான் (அதாவது கிரியையோடு கூடிய விசுவாசிகளைத்தான்) விசேஷமாக இரட்சிக்கிற இரட்சகர் அவர். எப்படியெனில், விசுவாசிகளைத்தான் 2-மரணத்திலிருந்து அவர் இரட்சிக்கிறார். (விசுவாசிகள் என்றால் அவர்களிடம் கிரியை கண்டிப்பாக இருக்கவேண்டும், ஒருவேளை இவ்வுலக வாழ்வில் கிறிஸ்துவை ஏற்காவிட்டாலும், 1000 வருட ராஜ்யத்தில் அவரை அவர்கள் ஏற்கவேண்டும்)

மனிதனின் இரட்சிப்பு நிறைவாவதில் தேவனின் பங்கும் உள்ளது, மனிதனின் பங்கும் உள்ளது.

1. முதலாம் மரணத்தின் பிடியிலுள்ள மனிதன், அதிலிருந்து மீண்டு ஜீவனைப் பெறுவதில் தேவனின் பங்கு உள்ளது. தேவன் தமது பங்கை தமது குமாரனான கிறிஸ்துவின் மூலம் செய்து முடித்துவிட்டார். இதுதான் எல்லா மனுஷருக்கும் தானாகக் கிடைக்கும் இரட்சிப்பு. இந்த இரட்சிப்பைப் பெற மனிதன் எதையும் செய்யவேண்டியதில்லை. தேவனை/கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களும் இந்த இரட்சிப்பைப் பெற்று உயிரடைந்துவிடுவார்கள்.

2. முதலாம் மரணத்திலிருந்து தப்பித்து ஜீவனைப் பெறுகிற மனிதன், 2-ம் மரணத்திலிருந்தும் தப்பிக்க வேண்டுமெனில், அதாவது இரட்சிக்கப்படவேண்டுமெனில், அதற்கு மனிதனின் பங்களிப்பும் அவசியம். அந்த பங்களிப்பில் 2 காரியங்கள் உள்ளன. 1. கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும், 2. தீமையை அகற்றி நன்மை செய்யவேண்டும். ஆதாமின் பாவத்தைச் சுமக்கிற மனிதன், தான் சுயமாகவும் பாவஞ்செய்துவிடுகிறான். தான் சுயமாகச் செய்த பாவங்கள் நீங்கி இரட்சிக்கப்படுவதற்கு (அதாவது 2-ம் மரணத்திலிருந்து தப்புவதற்கு) தன் பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு பலியானார் என்பதை விசுவாசிக்க வேண்டும். விசுவாசித்த அவன், இயேசு போதித்தபடி தீமையை அகற்றி நன்மை செய்யவேண்டும். அப்போது அவனது இரட்சிப்பு முழுமை பெறுகிறது. அதாவது “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் கொண்டுள்ள சித்தம்” அவனைப் பொறுத்தவரை அப்போதுதான் நிறைவேறுகிறது.

இப்படியாக தேவசித்தம் எல்லா மனிதரிடம் நிறைவேறுவதற்கு நீங்களும் நானும் முயல்வதோடு, மற்றவர்களுக்குப் போதிக்கவும் வேண்டும். அதைவிட்டுவிட்டு, எல்லா மனிதரையும் தேவன் இரட்சிப்பார் என்று சொல்லி, இரட்சிப்பைப் பெற முயலாமல் நாம் சும்மா இருந்தால், முதலாம் மரணத்திலிருந்து இரட்சிப்பு பெற்ற நாம் 2-ம் மரணத்தில் சிக்கிக்கொள்வோம் என்பதைத்தான் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

மத்தேயு 10:22 .... முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
யோவான் 10:9 ... என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான்.
அப். 16:31 ... இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
1 கொரி. 15:2 நான் பிரசங்கித்த பிரகாரமாய் நீங்கள் கைக்கொண்டிருந்தால் அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள்.
யாக்கோபு 2:14,26 ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும் கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது.

eras wrote:
//ஐயா, இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌தினால் தான் எல்லோரும் 1000 வ‌ருட‌ அர‌சாட்சிக்குள் வ‌ருகிறார்க‌ளே த‌விர‌, இர‌ட்சிக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு அல்ல‌. அந்த‌ ராஜிய‌த்தில் அன்பே பிர‌தான‌மாக‌ இருக்கும் என்று அப்போஸ்த‌ல‌ரும் தீர்க்க‌த‌ரிச்ன‌ம் எழுதியிருக்கிறார் (1 கொரி. 13:13).//

முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ள பரிசுத்தவான்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை என வெளி. 20:6 கூறுகிறது. அவ்வாறெனில் மற்றவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு என்றுதானே அர்த்தம்? குறிப்பாக, 1000 வருட அரசாட்சிக்குள் வருகிறவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் உண்டல்லவா? அந்த 2-ம் மரணத்திலிருந்து அவர்கள் இரட்சிக்கப்படுவது அவசியமல்லவா?

1000 வருட ராஜிய‌த்தில் அன்பே பிர‌தான‌மாக‌ இருக்கும் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? 1 கொரி. 13:13-ம் வசனம் அப்படியோர் அர்த்தத்தைத் தருவதாக எதைவைத்துச் சொல்கிறீர்கள்? பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயது சென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

இவ்வசனம் 1000 வருட ராஜ்யத்தைத்தான் குறிப்பிடுகிறதென நீங்கள் நம்புவீர்கள் என நான் நம்புகிறேன். அந்த ராஜ்யத்தில் பாவியும் இருப்பான் என வசனம் கூறுகிறது. பாவியிடம் அன்பு இருக்காதுதானே?

முதலாம் மரணத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, 1000 வருட ராஜ்யத்தினுள் வந்தவர்கள் 2-ம் மரணத்திலிருந்தும் இரட்சிக்கப்படுவது அவசியமென அறியுங்கள். 1000 வருட ராஜ்யத்தினுள் இருப்பவர்களிலும் சிலர் (அல்லது பலர்) கொடுக்கப்பட்ட தருணமாகிய நூறு வயது வரையும் பாவியாகவே இருந்து சபிக்கப்படவும் நேரிடும் என்பதை அறியுங்கள். அவ்வாறு சபிக்கப்படுவோரின் நிலை என்னாகும்? இரட்சிப்பை இழந்து 2-ம் மரணத்தில் பங்கடைவார்கள் என நான் கூறுகிறேன். அதைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கண்டிப்பாக இக்கேள்விக்குப் பதில் தரும்படி வேண்டுகிறேன்.

eras wrote:
//ஐயா, இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌தினால் தான் எல்லோரும் 1000 வ‌ருட‌ அர‌சாட்சிக்குள் வ‌ருகிறார்க‌ளே த‌விர‌, இர‌ட்சிக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு அல்ல‌. அந்த‌ ராஜிய‌த்தில் அன்பே பிர‌தான‌மாக‌ இருக்கும் என்று அப்போஸ்த‌ல‌ரும் தீர்க்க‌த‌ரிச்ன‌ம் எழுதியிருக்கிறார் (1 கொரி. 13:13). இன்று அந்த‌ அன்பை துளியும் கான‌முடிவ‌தில்லையே, அப்புற‌ம் எப்ப‌டி அந்த‌ அன்பின் கிரியைக‌ள் இப்பொழுது வெளிப்ப‌டும். இப்பொழுது முடிய‌வில்லை என்ப‌தால் தான், இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு அன்பை க‌ற்றுக்கொள்ளும் இட‌மாக‌ 1000 வ‌ருட‌ அரசாட்சி.//

1000 வருட ராஜ்யத்தில் அன்பே பிரதானமாக இருக்கும் எனக் கூறுகிற நீங்கள், அந்த ராஜ்யம் அன்பைக் கற்றுக்கொள்ளும் இடமாகவும் இருக்கும் என்கிறீர்கள். அன்பே பிரதானமாக இருக்கும் ராஜ்யத்தினுள் அன்பை ஏன் கற்றுக்கொடுக்க வேண்டும்? அன்பில்லாதவர்கள் அங்கு இருந்தால்தானே அன்பைக் கற்றுக்கொடுப்பது அவசியமாயிருக்கும்?

அன்பில்லாத அவர்கள், அன்பைக் கற்றுக்கொள்ள மறுத்தால் அவர்கள் நிலை என்னாகும்? எல்லாரும் அன்பைக் கற்றுக்கொள்வார்கள் என எந்த வசனம் கூறுகிறது? நூறு வயதுள்ளவனாகிய பாவி சபிக்கப்படுவான் என்றும், துன்மார்க்கன் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான் என்றும் அல்லவா வசனங்கள் கூறுகின்றன? (ஏசாயா 65:20; 26:10)

eras wrote:
//இன்று அந்த‌ அன்பை துளியும் காணமுடிவ‌தில்லையே, அப்புற‌ம் எப்ப‌டி அந்த‌ அன்பின் கிரியைக‌ள் இப்பொழுது வெளிப்ப‌டும்.//

இன்று அந்த அன்பு துளியும் இல்லையெனில், இன்றுள்ளோர்களில் யாருமே முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைய மாட்டார்களா? கிறிஸ்துவின் வருகையின்போது உயிரோடிருப்பவர்களில் மறுரூபமடைவது யார்?

இன்று அந்த‌ அன்பை துளியும் காணமுடிவ‌தில்லையே எனக் கூறுகிற உங்களிடம் நிச்சயமாக துளியளவுக்கும் மேலான அன்பிருக்கும் என நான் நம்புகிறேன் சகோதரரே!

eras wrote:
//இத்துனை பெரிய‌ அர்த்த‌ம் கொண்டிருக்கும் இந்த‌ வார்த்தைக்கு, உங்க‌ள் விள‌க்க‌த்திற்கு சாத‌க‌மாக‌ வேத‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ ஒரு வார்த்தையான‌ "desire"ஐ மாத்திர‌ம் சொல்லியிருக்கிறேர்க‌ளே.//

என் விளக்கத்திற்கு சாதகமாக வேதத்தில் பயன்படுத்தப்படாத ஒரே வார்த்தையான "desire"ஐ மாத்திர‌ம் நான் சொல்லவில்லை சகோதரரே! நீங்கள் குறிப்பிட்டுள்ள New King James Version மொழிபெயர்ப்பில்கூட "desire" என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். நீங்களும் நானும் சொல்கிற வார்த்தை மொழிபெயர்ப்பு வேதாகமங்களில் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டியதில்லை. நாம் சொல்லும் அர்த்தம், மூலபாஷை வார்த்தையின் அர்த்தத்தோடு ஒத்துப்போகிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும். மொழி பெயர்ப்பு பற்றி நான் குறிப்பிட்டதன் காரணம்: அவ்வசனத்தில் “சித்தம்” என மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தையை “விருப்பம்” என்றும் மொழிபெயர்க்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டவே. மூலபாஷை கிரேக்கில், மனிதனின் ”விருப்பம்” தேவனின் ”சித்தம்” ஆகிய இரண்டையும் ”தெல்-லோ” எனும் ஒரே வார்த்தைதான் குறிப்பிடுகிறது. தமிழில் மனிதன் சம்பந்தமான வசனங்களில் “விருப்பம்” என்றும் தேவன் சம்பந்தமான வசனங்களில் “சித்தம்” என்றும் மொழிபெயர்த்துள்ளனர், அவ்வளவே.

1 தீமோ. 2:4-ம் வசனம் தேவனின் விருப்பத்தைக் குறிப்பிடுவதாக உள்ளது என்பதைச் சொல்வதுதான் என் நோக்கம்.

தங்கள் கூற்று வேதவசனத்தைப் புரட்டுவதாயுள்ளது எனும் எனது விமர்சனம் தங்களைப் நோகச் செய்திருந்தால் அதற்காக மன்னிப்பு வேண்டுகிறேன். தங்கள் நோக்கம் நிச்சயமாக வேதவசனத்தைப் புரட்டுவதல்ல என்பதை நான் அறிவேன். ஆனாலும், சிறுவேறுபாட்டால் வேதவசனத்தின் மூலக்கருத்து பாதிக்கப்பட நீங்களும் நானும் இடங்கொடுத்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தால்தான் அப்படிக் கூறிவிட்டேன். மன்னிக்கவும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 18
Date:

அன்புள்ள சகோதரரே,

நான் ஒரே கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். தேவன் தன் சித்தம் நிறைவேற அல்லது அவரின் "desire" நிறைவேற யாரையும் சார்ந்திருக்கிறாரா? அவர் சித்தம் செய்ய அவருக்கு வல்லமை இருக்கா? இல்லையா?

ஆக எல்லோரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார், அதற்காக தான் இயேசு கிறிஸ்து "எல்லாருக்காகவும் மீட்கும் பொருளாக" தன்னை ஒப்பு கொடுத்தார் என்று வேதம் கூறுகிறதை நடக்க முடியாது என்பதில் இத்துனை உறுதியாக இருக்கீங்களே!!

1 தீமோ 4:10க்கு தாங்கள் தந்த பதிலை வைத்து, 1000 வருட அரசாட்சிக்கு பிறகு கூட பரலோகம் செல்லும் வாய்ப்பு இருக்கிறது போல் தெரிகிறதே!

எல்லா ம‌னுஷ‌ர்க‌ளும் இர‌ட்சிக்கும் ப‌டிதான் இயேசு கிறிஸ்து த‌ன்னை மீட்கும் பொருளாக‌ கொடுத்திருக்கிறாரே, இதை குறித்து என்ன‌ சொல்லுகிறீர்க‌ள். இந்த‌ விஷ‌ய‌ம் ஏற்ற‌ கால‌ங்க‌ளில் விள‌ங்க‌ செய்கிற‌து (testified in due times). அதாவ‌து, இந்த‌ விஷ‌ய‌ம் (தேவ‌ன் ஒருவ‌ரே, தேவ‌னுக்கும் ம‌னுஷ‌ருக்கும் ம‌த்திய‌ஸ்த‌ர் தான் இயேசு கிறிஸ்து என்கிற‌ இந்த‌ மாபெரும் ச‌த்திய‌மும், எல்லா ம‌னுஷ‌ர்க‌ளும், இர‌ட்சிப்பு அடையும்ப‌டி த‌ன்னையே மீட்கும் பொருளாக‌ செலுத்தின‌ ச‌த்திய‌மும்) ஏற‌ற‌ கால‌ங்க‌ளில் விள‌ங்கி வ‌ருகிற‌து. அந்த‌ ஏற்ற‌ கால‌ம் சில‌ருக்கு (ச‌பையாக‌ போகும் சிறு ம‌ந்தைக்கு) இப்ப‌வும் (கடந்த 2000 வருடங்களாக‌), ப‌ல‌ருக்கு (பூமியில் உயிர்த்தெழ‌ போகும் மீதியான‌வ‌ர்க‌ளுக்கு) 1000 வ‌ருட‌ அர‌சாட்சியின் போது விள‌ங்கும்.

ஒரு ம‌னித‌னை ம‌ர‌ண‌த்திலிருந்து எழுப்பு இவ‌ர் (இயேசு கிறிஸ்து) மூல‌மாக‌ தான் உங்க‌ளுக்கு இந்த‌ உயிர்த்தெழுத‌ல் சாத்திய‌மாக‌ இருந்த‌து என்றால், அதை ஏன் ந‌ம்பாம‌லும், விசுவ‌சியாம‌லும் போவார்க‌ள்?

தாங்க‌ள் விள‌க்கியுள்ள‌ இர‌ட்சிப்பின் காரிய‌த்திலிருந்து:

2.  1 தீமோ 2:4,5 வ‌ச‌ன‌ங்க‌ளை இர‌ட்சிக்க‌ப்ப‌ட‌ (ம‌ர‌ண‌த்திலிருந்து உயிர்த்தெழும்ப‌டி) உள்ள‌ காரிய‌த்தை மாத்திர‌மே சொல்லுகிற‌தே த‌விர‌, அது இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்திலிருந்து இர‌ட்சிக்க‌ப்ப‌டுவ‌தை குறித்து ஒன்றும் சொல்லுவ‌தில்லை, அது உங்க‌ள் க‌ருத்து மாத்திர‌மே! மேலும் இப்ப‌டி இயேசு கிறிஸ்து தான் த‌ங்க‌ளுக்காக‌ ம‌ரித்திரிக்கிறார் என்றும், அத‌ன் ப‌ல‌னாக‌ தாம் உயிர்தெழுவோம் என்கிற‌ உன்ன‌த‌மான‌ ச‌த்திய‌த்தை (ந‌ற்செய்தியை) இன்று அனைவ‌ரும் ந‌ம்பாம‌ல் போவ‌த‌ற்கு இருவ‌ர் கார‌ண‌மாக‌ இருக்கிறார்க‌ள்:
1. சாத்தான் (2 கொரி. 4:4)
2. அவ‌னின் ஊழிய‌க்கார‌ர்க‌ள் (2 கொரி 11:15).

அன்பு57 எழுதுகிறார்:
"முதலாம் மரணத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, 1000 வருட ராஜ்யத்தினுள் வந்தவர்கள் 2-ம் மரணத்திலிருந்தும் இரட்சிக்கப்படுவது அவசியமென அறியுங்கள். 1000 வருட ராஜ்யத்தினுள் இருப்பவர்களிலும் சிலர் (அல்லது பலர்) கொடுக்கப்பட்ட தருணமாகிய நூறு வயது வரையும் பாவியாகவே இருந்து சபிக்கப்படவும் நேரிடும் என்பதை அறியுங்கள். அவ்வாறு சபிக்கப்படுவோரின் நிலை என்னாகும்? இரட்சிப்பை இழந்து 2-ம் மரணத்தில் பங்கடைவார்கள் என நான் கூறுகிறேன். அதைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கண்டிப்பாக இக்கேள்விக்குப் பதில் தரும்படி வேண்டுகிறேன்."

முத‌லாம் ம‌ர‌ண‌த்திற்கு முன் சாத்தான் இந்த‌ உல‌க‌த்தை ஆளுகை செய்கிற‌ப‌டி, அநேக‌ர் ச‌த்திய‌த்தை ஏற்றுக்கொள்ளாம‌ல் இருக்கிறார்க‌ள். ஆனால் 1000 வ‌ருட‌ அர‌சாட்சியில், இயேசு கிறிஸ்துவும் அவ‌ரின் ச‌பையுமே இந்த‌ உல‌க‌த்தை ஆள‌ப்போகிறார்க‌ள், "நீதி வாச‌மாகும் பூமி" என்று மாற்ற‌ப்ப‌ட்ட‌ இந்த‌ பூமியில், பாவ‌த்தில் விழ‌வைக்க‌வும், அதை தூண்டும் சாத்தான் க‌ட்ட‌ப்ப‌ட்டிருப்பான். ஒரு ராஜிய‌த்தின் த‌ன்மை அதை ஆளும் ராஜாவை பொருத்து தான் இருக்க‌ முடியும். இன்று சாத்தான் ஆளுகை செய்வ‌தால், பாவ‌த்தில் விழுவ‌து சுல‌ப‌மாக‌ இருக்கிற‌து. ஆனால் அன்றோ, இயேசு கிறிஸ்துவும் ச‌பையும் ஆளுகை செய்ய‌ப்போகும் போது, பாவ‌த்தில் விழ‌ எது ஏதுவாக‌ இருக்க‌ முடியும். உயிர்த்தெழுந்த‌ ம‌னித‌ன், ஆதாம் பாவ‌த்திற்கு முன் உள்ள‌ நிலையில் இருப்பார்க‌ள். ஆதாமை சோதிக்க‌, பாவ‌த்தில் விழ‌ உத‌விய‌ சாத்தான் இல்லாத‌தால், 1000 வ‌ருட‌ அர‌சாட்சியில் ம‌னித‌ன் பாவ‌த்தில் விழ‌ முடியாது என்ப‌து என் க‌ருத்து. இதை தான் ஏசாயா எழுதுகிறார், "ச‌முத்திர‌ம் ஜ‌ல‌த்தினால் நிறைந்திருக்கிற‌துபோல்; பூமி க‌ர்த்த‌ரை அறிகிற‌ அறிவினால் நிறைந்திருக்கும்" ஏசா. 11:9. அந்த‌ அதிகார‌ம் முழுவ‌தும் வாசித்து பாருங்க‌ள்.

அன்பு57 எழுதுகிறார்:
"1000 வருட ராஜ்யத்தில் அன்பே பிரதானமாக இருக்கும் எனக் கூறுகிற நீங்கள், அந்த ராஜ்யம் அன்பைக் கற்றுக்கொள்ளும் இடமாகவும் இருக்கும் என்கிறீர்கள்"

இன்று தெரியாத‌ அன்பை அன்று க‌ற்ற‌ பின்பு தான் இந்த‌ பூமி அந்த‌ மெய்யான‌ அன்பினால் நிறைந்திருக்கும் என்ப‌து என் க‌ருத்து.

அன்பு57 எழுதுகிறார்:
"எல்லாரும் அன்பைக் கற்றுக்கொள்வார்கள் என எந்த வசனம் கூறுகிறது?"

ஏசா. 9:11ன் முத‌ல் ப‌குதி அதை தான் சொல்லுகிற‌து.

"நூறு வயதுள்ளவனாகிய பாவி சபிக்கப்படுவான்"
இந்த‌ வ‌ச‌ன‌ம் ஆறாய‌ கூடிய‌ ஒரு வ‌ச‌ன‌ம் தான் (ஏனென்றால் இது ஒரு ஜோடு இல்லாத‌ வ‌ச‌ன‌மாக‌ இருக்கிற‌து), இப்பொழுய்து தான் இதை குறித்து ஆராய்ந்து வ‌ருகிறோம். நிச்ச‌ய‌மாக‌ ப‌திவு செய்கிறேன்.

"துன்மார்க்கன் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான் என்றும் அல்லவா வசனங்கள் கூறுகின்றன"
இந்த‌ துன்மார்க்க‌ன் நிச்ச‌ய‌மாக‌ சாத்தான் ஒருவ‌னாக‌ தான் இருக்க‌ முடியும் என்ப‌து என் க‌ருத்து. இயேசு கிறிஸ்துவின் நீதியுள்ள‌ அர‌சாட்சியை பார்த்தும் அவ‌ன் த‌ன் போக்கை மாற்ற‌ மாட்ட‌ன்.

_____Strongs_____

H7563  rasha`  raw-shaw'

from H7561;

morally wrong; concretely, an (actively) bad person:--+ condemned, guilty, ungodly, wicked (man), that did wrong.

இது தான் raw-shaw' வின் அர்த்த‌ம். ஒருமையில் தான் இத‌ன் அர்த்த‌மும் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

"நீங்கள் குறிப்பிட்டுள்ள New King James Version மொழிபெயர்ப்பில்கூட "desire" என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்."

நான் மூன்று கிங் ஜேம்ஸ் மொழிப்பெய‌ர்ப்புக‌ளையும் ஒன்றாக‌ கொடுத்திருந்தேன். அதில் இர‌ண்டில் "want" என்றும், ஒன்றில் "desire" என்றும் த‌ந்து, அது ஒரு குழ‌ப்ப‌டியான‌ மொழிப்பெய‌ர்ப்பு என்று கான்பிப்ப‌த‌ற்காக‌ தான் அப்ப‌டி கொடுத்திருந்தேன். ஒரே version இப்ப‌டி ஒரே வார்த்தையை ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல் குழ‌ப்பியிருப்ப‌தை பார்த்தீர்க‌ளா?

"தங்கள் கூற்று வேதவசனத்தைப் புரட்டுவதாயுள்ளது எனும் எனது விமர்சனம் தங்களைப் நோகச் செய்திருந்தால் அதற்காக மன்னிப்பு வேண்டுகிறேன்"

நான் நோக‌ப்ப‌ட‌வும் இல்லை, நீங்க‌ள் ம‌ன்னிப்பும் கேட்க‌ வேண்டாம். இந்த‌ விவாத‌ ப‌குதி ந‌ம் க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்துக்கொள்ள‌வே தான்.

என்னை மாத்திர‌ம் இல்லை, எங்க‌ள் குழுவையே இப்ப‌டி சொல்லுவார்க‌ள், ஏனென்றால் எங்களுக்காகவே ப‌வுல் சொல்லுவ‌து போல், "ச‌த்திய‌த்தை சொல்லுவ‌தினால் ச‌த்துரு ஆகிறோம்" க‌லா. 4:16



__________________


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"...இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" யோவான்1:29

"உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்". யோவான்3:17

"எப்படியெனில் மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்பட்டும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, நான் இதற்குப் பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்படுத்தி, அதை செவ்வையாய் நிறுத்துவேன்"...

உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது" அப்15:16-18. போன்ற வசனங்களை கருத்தில் கொண்டால்.


"அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே", "உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற", போன்ற வசனங்கள் எதைக் குறிக்கின்றது.

மேலும் "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்", Ransom for ALL, என்று மற்ற இடங்களில் வாசிக்கிறோம்.


'பாவத்தின் சம்பளம் மரணம்' என்பதால் ஒரு மனிதன் பாவங்களுக்கான சம்பளமாகிய மரணத்துக்கு பாத்திரவானாகிறான். ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக அந்த மனிதனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதால் அவன் உயிர்த்தெழுகிறான்.
ஒருவனுடைய பாவங்களை முற்றிலும் மன்னித்து அவனை உயிரோடு எழுப்பி என்ன நியாயத்தீர்ப்பு செய்யமுடியும்?

உயிர்த்தெழுதலின் அவசியம்தான் என்ன? இதைத்தான் ஏசாயா26:9 ல் "உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும் போது பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக்கற்றுக் கொள்வார்கள்"

பின் பூமி கர்த்தரை அறிகிற அறிவால் நிறைந்திருக்கும்.


//மத்தேயு 5:22 ... தன் சகோதரனை மூடனே என்று சொல்கிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.

மத்தேயு 5:29 ... உன் சரீரம் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். மத்தேயு 13:42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.// போன்ற வசனங்கள் ராஜ்ஜியத்தில் எதிர்பார்க்கும் Standard.

இப்போது அவருடைய இராஜ்ஜியம் இல்லவே இல்லை என்று உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்.

Anbu Wrote:இன்னும் 2 கேள்விகள்:

1. பாவஞ்செய்தேயாக வேண்டிய உலகில் வாழ்வோரில் ஒரு பிரிவினர் மட்டும் எப்படி கிறிஸ்துவைப் போல் வாழ்ந்து ’சிறு மந்தை’ யாக முடியும்?

2. புதிய ஏற்பாட்டு சபையாருக்கு பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டுள்ளதால் சிறு மந்தையாக சாத்தியம் உள்ளது என நீங்கள் கூறக்கூடும். அவ்வாறெனில் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளில் பலர் தேவனால் நீதிமான்கள் என சாட்சி பெற்றது எவ்வாறு? இயேசுவை அறியாமலும் பரிசுத்தஆவியைப் பெறாமலுமிருந்த கொர்நேலியு (புதிய ஏற்பாட்டு விசுவாசி) நீதிமானாயிருந்தது எவ்வாறு?


1."...நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும்... யோவான்15:19,

நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல" யோவான்17:14,16. ன்படி "சிறு மந்தை" என்பது உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆகும்.


2.வெறும் 'நீதிமானாக' மட்டும் இருப்பது போதாது. ஆபிரகாமுக்கு அவனுடைய விசுவாசம் 'நீதியாக' எண்ணப்பட்டது. 'முடிவுப்பரியந்தம் நிலைநிற்கிற' அனுபவம் வேறு. 'அதற்கு "கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசம்" வேண்டும். இந்த பழையஏற்பாட்டு நீதிமான்கள் எல்லோரும் விசுவாசத்தினால் 'நற்சாட்சி பெற்றும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை(நித்திய ஜீவன் மற்றும் பூமிக்குரிய
ஆசீர்வாதங்கள்) அடையாமற்போனார்கள் எபி11:39

சாத்தான் கொண்டுவந்த பாவத்தால் முழு உலகமும் முதலாம் மரணத்தைப் பெற்றுகொள்ளும்போது, கிறிஸ்துவின் தியாகத்தால் முழு உலகமும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அதிகம் ஏதுவாகிறது.
ஏழெழுபது முறை மன்னிக்கச்சொன்ன தேவன் தான் உண்டாக்கின தன் பிள்ளைகளை மன்னிக்கவே மாட்டார் என்று கூறுவது அவரது தன்மைக்கு உகந்ததல்ல. மேலும் அப்படி அழிவார்கள் என்று தீர்க்கதரிசனமாக கூறப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறியபடி எடுத்துக்கொண்டால் அவர்கள் யார் என்பதையும் அவர் அறிந்திருப்பார் ஆக அவர்களை 2ம் மரணத்திலிருந்து 'காப்பாற்ற' நாம் யார்?
2ம் மரணத்திலிருந்து ஜனங்களைக் காப்பாற்ற அல்ல சுவிஷேசம், சபைக்குத்தகுதியாகி ஆளுகைக்கு தயாராவது, முடியாதபட்சம் திரள்கூட்டத்தில் பங்கு என்பது மட்டுமே இந்த 2000 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கும் தேவ சித்தம்.

'நீதிமான் ஒருவனாகிலும் இல்லை', எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானோம்', நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம், போன்ற வசனங்கள் நாம் 100% 'பாவிகள்' என்று சொல்லும்போது ஏதோ நாம் கொலை, களவு, பொய், விபச்சாரம், குடி, புகை இதெல்லாம் செய்யாவிட்டால் பரிசுத்தவான்கள் ஆகிவிட்டோம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதெல்லாம் செய்யாமல் நம்மைவிட பரிசுத்தமாக வாழும் அநேகர் உலகிலுண்டு, இவையெல்லாம் கூடாதென்று அநேகமாக எல்லா மார்க்கங்களுமே போதிக்கின்றன.

'சிறியோர்களின் தேவைகளை சந்திக்காதவர்களுடைய லிஸ்ட்டில் முதல் பெயரே நம் பெயராகத்தான் இருக்கும். "உனக்குண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடு" என்ற வசனத்தைக் கைகொண்ட ஒரு கிறிஸ்தவனையும் எனக்குத் தெரியாது.

எப்படி பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு 'தெரிந்து கொண்ட' கூட்டத்தை மாத்திரம் தேவன் special attention ல் வைத்துவிட்டு மீதியானவர்களை 'புறஜாதி' என்று கண்டுகொள்ளாமல் இருந்தாரோ அதே போல் புதிய ஏற்பாட்டு காலத்தில் 'சபை' என்ற சிறுமந்தையை மாத்திரம் நியாயந்தீர்ர்த்துக்கொண்டிருக்கிறார் (நீதியைக்கற்றுக்கொடுத்த்துக்கொண்டிருக்கிறார்). உலகத்தை நியாயந்தீர்க்கும் நாளொன்றிருக்கிறது (நீதியைக் கற்றுக்கொடுத்தல்) அதை அவர் தெரிந்துகொள்ளப்பட்ட சபை மூலம் செவ்வனே நிறைவேற்றுவார்.

எப்படி சாத்தான் முயற்சியால் எல்லாரும் பாவத்தில் விழுந்து மரணத்தைச் ச்ந்திக்கின்றனறோ அதே போல் தேவன் முயற்சியால் அனைவரும் நித்திய ஜீவனை அடைவார்கள். ஒரு ராஜ்ஜியத்தின் பிரஜைக்கு முழுபொறுப்பு ராஜாவுடையது. ஆகையால் ஒரு perfect ராஜாவின் பொறுப்பு தன்னுடைய பிரஜைகள் அனைவரையும் காப்பாற்றுவதே. அதுதான் தேவனின் சித்தம். இல்லாவிட்டால் எப்படி ஒரு ரயில் விபத்துக்காக இரயில் மந்திரி ராஜினாமா செய்கிறாரோ அதுபோல ஒரு பிரஜையைக் 'கொன்ற' குற்றத்துக்காக தேவன் பொறுப்பேற்று தேவத்துவத்தை இழக்கவேண்டிவரும். இப்போது இருக்கும் அரசாங்கங்களே மரணதண்டனையை ஒரு கடைசி கட்டமாக வைத்திருக்கும்போது அன்பின் ராஜாங்கத்தில் அது இருக்கவே இருக்காது.


வெளிப்படுத்தல் புத்தகத்தை வைத்து நாம்தான் நம் மனம்போனபடி கற்பனை செய்துகொள்கிறோம். வெளிப்படுத்தின விஷேசத்தில் உள்ள எல்லா வசனங்களுக்கும் நாம் சரியான அர்த்தம் தெரிந்துவைத்திருந்தால் மட்டுமே அதிலுள்ள குறிப்பிட்ட‌ வசனங்களை வைத்து ஒரு முடிவுக்கு வரமுடியும். அப்படி யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவருடைய வருகையின் பிரசன்னம் இன்னும் அதிகமாகும்போது அதிகம் புரிந்துகொள்வோமென்று எண்ணுகிறேன்.

அப்படியென்றால் யார் எப்படிவேண்டுமானாலும் மனம்போன போக்கில் வாழலாமா? என்றெல்லாம் கேள்விகேட்டால் மற்றவர்களை விடுங்கள் நீங்கள் எப்படி வாழ்வீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லவும். நரகத்துக்கோ, இரண்டாம் மரணத்துக்கோ 'பயந்து' யோக்யனாக வாழ்வதல்ல தேவன் எதிர்பார்ப்பது. அன்பின் நிமித்தம் அவர் வழி நடப்பதுதான் அவர் எதிர்பார்ப்பது.



-- Edited by soulsolution on Thursday 29th of October 2009 07:18:47 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

eras wrote:
//நான் ஒரே கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். தேவன் தன் சித்தம் நிறைவேற அல்லது அவரின் "desire" நிறைவேற யாரையும் சார்ந்திருக்கிறாரா? அவர் சித்தம் செய்ய அவருக்கு வல்லமை இருக்கா? இல்லையா?//

தங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லும்முன்பாக, எனது பின்வரும் கேள்விக்குப் பதில்தரும்படி வேண்டுகிறேன்.

மத்தேயு 25:31-46 வசனங்களில் காணப்படும் நியாயத்தீர்ப்பு, 1000 வருட ராஜ்யத்திற்குப் பிறகு நடக்கப்போகிற “இறுதி நியாயத்தீர்ப்பு” என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அந்த நியாயத்தீர்ப்பில், வெள்ளாடுகளாகப் பிரிக்கப்படும் ஒரு பிரிவினர் நித்திய ஆக்கினையை அடையப் போவார்கள் என இயேசு தெளிவாகக் கூறுகிறார்.
அதாவது அவர்கள் நித்திய ஜீவனைப் பெறமாட்டார்கள் என இயேசு தெளிவாகக் கூறுகிறார், அப்படித்தானே?
அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என இயேசு தெளிவாகக் கூறுகிறார், அப்படித்தானே?
அதாவது எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் எனும் தேவசித்தம் அவர்களிடம் நிறைவேறவில்லை என இயேசு தெளிவாகக் கூறுகிறார், அப்படித்தானே?
அதாவது எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் எனும் தேவசித்தத்தை அவர்களிடம் செய்துமுடிக்க தேவனுக்கு வல்லமை இல்லை என இயேசு தெளிவாகக் கூறுகிறார், அப்படித்தானே?

இக்கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னபின்பு, உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் தருகிறேன்.

eras wrote:
//ஆக எல்லோரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார், அதற்காக தான் இயேசு கிறிஸ்து "எல்லாருக்காகவும் மீட்கும் பொருளாக" தன்னை ஒப்பு கொடுத்தார் என்று வேதம் கூறுகிறதை நடக்க முடியாது என்பதில் இத்துனை உறுதியாக இருக்கீங்களே!!//

நடக்க முடியுமா முடியாதா என்ற கேள்விக்கு நான் வரவில்லை.

ஆதாமின் மீறுதலின் விளைவான முதலாம் மரணத்திலிருந்து எல்லாரையும் மீட்கும் பொருளாக இயேசு ஒப்புக்கொடுத்த காரியம் தானாக நடந்துவிடும்.

ஆனால் நம் சுயபாவங்களின் விளைவான 2-ம் மரணத்திலிருந்து எல்லாரையும் மீட்கும் பொருளாக இயேசு ஒப்புக்கொடுத்த காரியம் நிறைவேற வேண்டுமெனில் எல்லோரும் இயேசுவை விசுவாசிக்க வேண்டும், தங்கள் பாவங்களை உணர்ந்து அறிக்கையிட்டு மன்னிப்பு பெறவேண்டும், மன்னிப்பு பெற்றபின் பாவஞ்செய்யாதிருக்க வேண்டும். ஒருவேளை இவற்றை இவ்வுலகிலேயே ஒருவன் செய்யத்தவறினால் அல்லது செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காமற் போனால், தேவனின் நீதியுள்ள தீர்மானத்தின்படி, ஒரு பிரிவினருக்கு 1000 வருட ராஜ்யத்தில் வாய்ப்பு கொடுக்கப்படும். மற்றவர்கள் 2-ம் மரணத்தில் பங்கடைவார்கள். 1000 வருட ராஜ்யத்தில் பங்குபெற்றோரில் தேவநீதியைக் கற்றுக்கொள்ள மறுப்பவர்களும் 2-ம் மரணத்தில் பங்கடைவார்கள்.
எனவே 2-ம் மரணத்திலிருந்து எல்லாரையும் மீட்கும் பொருளாக இயேசு ஒப்புக்கொடுத்த காரியம் நிறைவேற வேண்டுமெனில், நீங்களும் நானும் இயேசுவை விசுவாசித்து அவரது உபதேசங்களின்படி வாழ முயலவேண்டும், மற்றவர்களுக்கும் போதிக்கவேண்டும்.

eras wrote:
//"நூறு வயதுள்ளவனாகிய பாவி சபிக்கப்படுவான்"
இந்த‌ வ‌ச‌ன‌ம் ஆறாய‌ கூடிய‌ ஒரு வ‌ச‌ன‌ம் தான் (ஏனென்றால் இது ஒரு ஜோடு இல்லாத‌ வ‌ச‌ன‌மாக‌ இருக்கிற‌து), இப்பொழுது தான் இதை குறித்து ஆராய்ந்து வ‌ருகிறோம். நிச்ச‌ய‌மாக‌ ப‌திவு செய்கிறேன்.//

பக்கத்திலேயே ஜோடு வசனத்தை தந்துவிட்டு, ஜோடு வசனம் இல்லை என்கிறீர்களே! ஆம், பின்வரும் வசனத்தைத்தான் சொல்கிறேன்.

eras wrote:
//"துன்மார்க்கன் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான் என்றும் அல்லவா வசனங்கள் கூறுகின்றன"
இந்த‌ துன்மார்க்க‌ன் நிச்ச‌ய‌மாக‌ சாத்தான் ஒருவ‌னாக‌ தான் இருக்க‌ முடியும் என்ப‌து என் க‌ருத்து. இயேசு கிறிஸ்துவின் நீதியுள்ள‌ அர‌சாட்சியை பார்த்தும் அவ‌ன் த‌ன் போக்கை மாற்ற‌ மாட்ட‌ன்.//

ஒருமை பன்மை விஷயத்திற்கு ஏற்கனவே பதில் கொடுத்தாகிவிட்டது.
சாத்தானாகிய துன்மார்க்கன் நீதியைக் கற்றுக் கொள்ளான் என்கிறீகளே, சாத்தானுக்கு தயை செய்யப்பட்டது, நீதி கற்றுக் கொடுக்கப்பட்டது என எந்த வசனம் கூறுகிறது? சாத்தானும் 1000 வருட ராஜ்யத்தின் பிரஜைகளில் ஒருவனா?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote in the TOPIC //"பரிசுத்த ஆவி" மற்றும் "ஆவியானவர்" ஒன்றா//:

//(மரித்துப்போயிருக்கும் ஒரு கூட்டத்தாரை கஷ்டப்பட்டு 'உயிரோடு' எழுப்பி சடுதியில், உடனடியாக மீண்டும் மரிக்கவைப்பது உண்மையில் காமெடிதான் சகோதரரே.)//

நான் சொன்னதை மீண்டும் ஒருமுறை நிதானமாகப் படியுங்கள் சகோதரரே!

“சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று கூறுகிற அவர்களுக்கு ‘சடிதியான அழிவு’ வரும் என பவுல் கூறக் காரணம் என்னவென்று பார்ப்போம்.
எல்லோருக்கும் வருகிற முதலாம் மரணம், அவர்களுக்கும் வரும் (சடிதியாகவோ, சாதாரணமாகவோ). ஆனால் இவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகி நிதானமாக நியாயத்தீர்ப்புக்குள்ளாகும் வாய்ப்பைப் பெறாமல், 1000 வருடத்திற்குப் பின் உயிர்பெற்று சடிதியாய் 2-ம் மரணத்திற்கு ஆளாவார்கள் என்பது எனது கருத்து. இதனால்தான் அவர்களின் அழிவை சடிதியான அழிவு எனப் பவுல் கூறுகிறார் எனக் கருதுகிறேன்.”

1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகி அங்கு நிதானமாக (அதாவது 100 வருட கால அவகாசம் கொடுக்கப்பட்டு) நியாயந்தீர்க்கப்படாமல், பூமியில் அவர்கள் செய்த அக்கிரமத்தின் அடிப்படையில் 2-ம் மரணத்திற்குத் தீர்க்கப்படுவார்கள் என்பதைத்தான் சடிதியான மரணம் எனக் கூறியிருந்தேன்,

1000 வருட அரசாட்சியின் பிரஜையாகி, 100 வருட கால அவகாசம் பெற்று, அந்த வாய்ப்பையும் பயன்படுத்தாததன் காரணமாக துன்மார்க்கன் எனத் தீர்க்கப்பட்டு 2-ம் மரணத்திற்கு ஆளாவதைவிட, 1000 வருட அரசாட்சியின் பிரஜையாகமல் நேரடியாக 2-ம் மரணத்திற்கு ஆளாவது சடிதியாக 2-ம் மரணத்திற்கு ஆளாவதுதானே? இன்னும் புரியவில்லையெனில் மேலும் படியுங்கள்.

வேதாகமத்தை எடுத்து, மத்தேயு 25:31-46 வசனபகுதியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக 41-ம் வசனத்தை எடுத்து மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளவர்களின் நிலையை சற்று கற்பனை செய்துபாருங்கள்.

எல்லோருக்கும் நேரிடும் முதலாம் மரணம் அவர்களுக்கும் நேரிட்டிருக்கும் (சடிதியாகவோ, சாதாரணமாகவோ). மரித்த அவர்கள் எதையும் அறியாத நிலையில், குறிப்பாக 1000 வருட அரசாட்சியில் நடப்பது எதையும் அறியாத நிலையில், நெடுங்காலமாக நித்திரையில் இருந்திருப்பார்கள். 1000 வருட அரசாட்சி காலம் முடிந்தபின், வெளி. 20:12,13 வசனங்களில் கூறப்பட்டுள்ளபடி மரித்த அனைவரும் உயிரோடெழுந்து தேவனுக்கு முன்பாக நிற்கையில், அக்கூட்டத்தில் மத்தேயு 25:41-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளோரும் நிற்பார்கள். அவர்களிடம் விசாரிப்பு என்பதே கிடையாது. அவர்களின் அக்கிரமத்தின் காரணமாக, 2-ம் மரணம் எனும் நித்திய ஆக்கினைத் தீர்ப்பு சடிதியாக அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். ஆனால், இத்தீர்ப்புக்கான காரணம் மட்டும் அவர்களுக்குக் கூறப்படும் (மத்தேயு 25:42,43). அக்காரணத்தை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அவர்கள் கேள்வி கேட்கும்போது, அக்காரணத்திற்கான விளக்கமும் அவர்களுக்குக் கூறப்படும்.

அவர்களைப் பொறுத்தவரை, முதலாம் மரணத்தில் எதுவுமறியாத நிலையில் இருந்து, பின் உயிர்பெற்றதும், உடனடியாக 2-ம் மரணத்திற்குத் தீர்க்கப்படுகையில், அந்த 2-ம் மரணம் அவர்களுக்கு சடிதியான மரணமாகத்தான் இருக்கும்.

இதுவரை நாம் பார்த்தது, மத்தேயு 25:41-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள அக்கிரமக்காரரைக் குறித்து. “இவர்களுக்கும் 1 தெச. 5:3-ன்படி சடிதியான அழிவைப் பெறப்போகிறவர்களுக்கும் என்ன சம்பந்தம், ஒன்றைக் கேட்டால் மற்றொன்றைக் கூறுகிறீர்களே, நல்ல காமெடியாக இருக்கிறதே” என நீங்கள் சொல்லலாம். சடிதியான அழிவு என்றால் என்னவெனப் புரிந்துகொள்ள மத்தேயு 25:41-ல் கூறப்பட்டுள்ளோரின் அழிவு சற்று எளிதாக இருக்குமென்பதால் அதைக் கூறியிருந்தேன். இனி, 1 தெச. 5:3-ல் சொல்லப்பட்டுள்ளோரின் சடிதியான அழிவையும் சற்று பார்ப்போம்.

“சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று சொல்லி ஜனங்களை ஏமாற்றுகிற பொய்யான தீர்க்கதரிசிகளும், ஊழியர்களும்” இக்காலத்தில் மட்டுமின்றி, பவுலின் காலத்திற்குப் பின்பிலிருந்தே இருந்துவருகின்றனர். அப். 20:29,30-ல் பவுல் கூறுவதை சற்று படித்துப் பாருங்கள். பவுலின் காலத்திற்குப் பின்பிலிருந்து இன்றுவரை “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிவருகிற அத்தனை பொய்த்தீர்க்கதரிசிகளும் ஊழியர்களும்” சடிதியான முதலாம் மரணத்தையா பெற்றுள்ளனர்?

நம் காலத்திற்கு முந்தி வாழ்ந்தோரின் மரணம், ஒருவேளை நமக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் இந்நாட்களில் “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் கூறிவரும் ஏராளமான பொய் தீர்க்கதரிசிகளை” நீங்கள் அறிவீர்கள்தானே? அவர்களெல்லோரும் சடிதியாகவா மரணமடைகின்றர்? அப்படி எல்லோரும் மரணமடைந்தால்தான் மற்றவர்கள் திருந்திவிடுவார்களே?

“சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிவந்த/ஏமாற்றிவருகிற பொய் ஊழியர்கள்” அனைவரும் சடிதியான முதலாம் மரணத்தைத்தான் பெற்றுள்ளனர் என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருந்தால் அதைச் சொல்லுங்கள்.

1 தெச. 5:3-ல் பவுல் கூறுகிற அந்த வஞ்சகர்கள், மத்தேயு 7:22,23-ல் கூறப்பட்டுள்ள அக்கிரமக்காரர்களில் அடங்குவார்கள் என்பது என் கருத்து. அவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகாமல் நேரடியாக 2-ம் மரணத்திற்குத் தீர்க்கப்படுவார்கள். “தீர்க்கதரிசனம் சொல்லி, பிசாசுகளைத் துரத்தி, அற்புதம் செய்து” இப்படியாக தேவனுக்கு ஊழியஞ்செய்து வந்த தங்களுக்கு 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகும் வாய்ப்பைக்கூடத் தராமல், இப்படி சடிதியாக தங்களை 2-ம் மரணத்திற்கு தீர்த்தது ஒருவேளை ஆச்சரியமாயிருந்ததால், “நாங்கள் தீர்க்கதரிசனம் சொல்லி, பிசாசுகளைத் துரத்தி, அற்புதம் செய்து, இப்படியாக உமது ஊழியத்தைத்தானே செய்தோம்? எங்களுக்கு ஏன் 2-ம் மரணத்தைத் தீர்த்துள்ளீர்?” என அவர்கள் கேள்விகேட்கக்கூடும். அல்லது, “தங்கள் ஊழிய காரியங்களைச்” சொல்லி, இயேசுவை ஏமாற்றி விடலாம், அல்லது வாதாடிப்பார்க்கலாம் என நினைத்தும் “தங்கள் ஊழிய காரியங்களைச்” சொல்லி இயேசுவிடம் கேள்வி கேட்கக்கூடும்.

ஆனால் மத்தேயு 25:41-ல் கூறப்பட்டுள்ளோருக்குக் கிடைத்த விளக்கம்கூட இந்தப் பொய் ஊழியர்களுக்குக் கிடைக்காது. ஏனெனில், ஊழியம் செய்பவன் வேதாகமம் கூறுவதை நன்கு நிதானித்து அறிந்து செய்யவேண்டும்; மாறாக, வேதாகமம் சொல்லாத சமாதானம், சவுக்கியம், இரட்சிப்பைச் சொல்லி, பிறர் இடறலடையக் காரணமானால், அவர்களின் 2-ம் மரணத்திற்கான காரணம் எதுவும் சொல்லப்படாமலேயே அதற்குத் தீர்க்கப்பட்டுவிடுவார்கள்.

இப்போது நான் தந்துள்ள விளக்கமும் ஒருவேளை தங்களுக்குக் ஹாஸ்யமாகவே இருக்கக்கூடும்தான். ஆனாலும், தங்களுக்குப் புரியாத வரிகளைக் குறிப்பிட்டுக்கேட்டால் மீண்டும் விளக்கம்தர தயாராக உள்ளேன்.


-- Edited by anbu57 on Saturday 31st of October 2009 01:41:21 AM

-- Edited by anbu57 on Saturday 31st of October 2009 01:45:28 AM

-- Edited by anbu57 on Saturday 31st of October 2009 01:47:31 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//மேலும் 1தெச‌ 5:3 இயேசு கிறிஸ்துவின் இர‌ண்டாம் வ‌ருகையை விவ‌ரிக்கும் அதிகார‌த்தின் ஒரு ப‌குதி. இயேசு கிறிஸ்து திருட‌னை போல் வ‌ருவார், ஆனால் அவ‌ரின் ம‌க்க‌ள் மாத்திர‌மே அதை அறிந்துக்கொள்ள‌ முடியும் என்கிற‌து வேத‌ம். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் (இன்றைய‌ கிறிஸ்த‌வ‌ ச‌பைக‌ள் உட்ப‌ட‌) அவ‌ரின் வ‌ருகையை அறியாம‌ல் க‌ள்ள உப‌தேச‌ங்க‌ளில் மூழ்கி, எல்லாம் ந‌ல‌மாக‌ இருக்கிற‌து, என்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது தான் அவ‌ரின் வ‌ருகையிருக்கும் என்கிற‌து வேத‌ம் இந்த‌ ப‌குதியில். இயேசு கிறிஸ்து வ‌ர‌வில்லை, 1000 வ‌ருஷ‌ அர‌சாட்சி ந‌ட‌க்க‌வில்லை.//

இயேசுவின் 2-ம் வருகை பற்றி இங்கு தாங்கள் கூறியுள்ள விஷயங்கள் சரியாகப் புரியவில்லை. ஆனாலும், “1தெச‌ 5:3 இயேசு கிறிஸ்துவின் இர‌ண்டாம் வ‌ருகையை விவ‌ரிக்கும் அதிகார‌த்தின் ஒரு ப‌குதி” எனும் தங்களின் கூற்றைப் புரிந்துகொள்வதில் பிரச்சனை எதுவுமில்லை.

சகோ.soulsolution-க்காக நான் பதித்த எனது முந்தின பதிவைப் படித்துவிட்டு, தொடர்ந்து படிக்கும்படி வேண்டுகிறேன்.

1 தெச. 5:2-ல் பவுல் கூறுவது இயேசுவின் 2-ம் வருகையைப் பற்றித்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், இதைக் கூறுவது ஏன் என்பதை அறிய 1 தெச, 4:15-லிருந்து நாம் படிக்க வேண்டும்.

1 Thess 4:15-18
15 According to the Lord's own word, we tell you that we who are still alive, who are left till the coming of the Lord, will certainly not precede those who have fallen asleep.
16 For the Lord himself will come down from heaven, with a loud command, with the voice of the archangel and with the trumpet call of God, and the dead in Christ will rise first.
17 After that, we who are still alive and are left will be caught up together with them in the clouds to meet the Lord in the air. And so we will be with the Lord forever.
18 Therefore encourage each other with these words.

இயேசுவின் 2-ம் வருகையில் நடப்பதை இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, பின்னர் 2-ம் வருகை எப்போது/எப்படி வரும் என்பதை 5-ம் அதிகாரம் 1,2 வசனங்களில் கூறுகிறார். (அதிகாரங்களைப் பிரித்தது மொழிபெயர்ப்பாளர்கள்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்)

1 Thess 5:1-2
Now, brothers, about times and dates we do not need to write to you, 2 for you know very well that the day of the Lord will come like a thief in the night.

இயேசுவின் 2-ம் வருகையைக் குறித்த பவுலின் கூற்றுகள் 1 தெச. 5:2-டோடு முடிந்தது. அதன்பின் பொதுவான விஷயங்களைத்தான் அவர் எழுதுகிறார்.

1 தெச. 5:3-ல் சொல்லப்பட்டுள்ள அழிவு, முதலாம் மரணமே என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், இயேசுவின் 2-ம் வருகையின்போது, யாரும் மரிப்பதைக் குறித்தி எந்த வேதவசனமும் கூறவில்லையே? அவர் வருகையில் பலர் உயிர்த்தெழுந்திருப்பார்கள் என்றும், பலர் மறுரூபமடைவார்கள் என்றும் தான் வசனங்கள் கூறுகின்றனவேயன்றி, யாரும் மரிப்பார்கள் என வசனம் கூறவில்லையே? எனவே, 1 தெச. 5:3-ல் கூறப்பட்டுள்ள அழிவு, 2-ம் வருகையில் நிகழ்கிற முதலாம் மரணமாக எப்படி இருக்க முடியும்?

1 தெச. 5:3 -ல் "destruction" எனக் கூறப்பட்டுள்ளதையும் “they will not escape” எனக் கூறப்பட்டுள்ளதையும் கவனியுங்கள். ஆம், அவர்கள் ஒருபோதும் தப்பமுடியாது. 2-ம் மரணத்தில் சிக்கி அழிவார்கள் என அறியுங்கள்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அன்பு ஐயா அவர்களே! சத்திய வேதத்தை ஆராய்ந்து தேவனுடைய அனாதி திட்டங்களையும் தீர்மானங்களையும் அறியாமல் இருக்கிற அனைவருமே 'அறியாமை' என்கிற இருட்டில் இருக்கிறார்கள். 'அதற்கென்றே' நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒருவருக்கு ஒழுங்காக, தெளிவாக பாடமே சொல்லிக்கொடுக்காமல் எந்த ஆசானும் நேரடியாக் பரீட்சை எழுதச்சொல்லி அதில் தவறும்போது அதற்கு 'தண்டனை' கொடுக்க முடியாது. அப்படிச் செய்தால் அந்த ஆசிரியர் 'மரை கழன்றவர்'. தேவன் பட்சபாதமற்றவர். இந்த சுவிசேஷ யுகத்தில் அவர் care செய்து கொண்டிருப்பது 'சபை'யை மாத்திரமே. சபைக்கு மட்டுமே இப்போது நியாயத்தீர்ப்பு. மற்றவர்களெல்லாம் ஒரே 'அறியாமை'க்குள்தான் இருக்கிறார்கள். மற்ற எல்லா so called கிறிஸ்தவர்களும் இதில் அடங்குவர். செத்தவனை எழுப்பி நீ மீண்டும் சாகு என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை!

மேலும் இப்போது செய்கிற, செய்யப்போகிற எல்லா பாவங்களும் முழுவதும் மன்னிக்கப்படாத பட்சத்தில் ஒருவரும் உயிர்த்தெழவே முடியாது என்ற உண்மையை ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்? அப்படி எல்லா பாவங்களையும் மன்னித்து எழுப்பி மீண்டும் 'நீ சென்ற முறை ஏன் பாவம் செய்தாய்? மறுபடி செத்துப்போ என்று சொல்லுமளவு வேதம் குழப்புவதில்லை என்று நம்புகிறேன். மற்றபடி உங்கள் இஷ்டம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

1 தெச 5:2 வரை அவர் இரண்டாம் வருகையை குறித்து எழுதுவிட்டு, 3ம் வசனம் முதல் பொதுவானதை எழுதுகிறார் என்பதற்கு என்ன அர்த்தம். அது எந்த காலத்தை குறிக்கிறது என்பதை தெளிவு படுத்துங்களே? இல்லை 3ம் வசனம் பொதுவாக பேசிவிட்டு, மீண்டும் 4ம் வசனம் இரண்டாம் வருகையை சொல்லிவிட்டு மீண்டும் பொதுவானதை தொடர்கிறாரா?

சகோ சோல்க்கு மாத்திரம் இல்லை, எனக்கு பதில் தந்தாலும் உங்களின் ஒரு கருத்து தெளிவாக இருக்கிறது, பலரும் இரண்டாம் மரணம் (வெளிப்படுத்தின விசேஷத்தில் மாத்திரமே சொல்லப்பட்ட ஒரு வார்த்தை) என்கிற ஒன்றில் நுழைவதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறீர்கள்.

அது என்ன, இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தின பயனால் எல்லோரும் உயிர்த்தெழுவார்கள் என்கிற நம்பிக்கையும் வைத்திருக்கிறீர்கள், அப்புறம், முதல் மரணத்திற்கு பிறகு நேர‌டியாக‌ இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்திற்கு எழும்புவார்க‌ள் என்றும் ப‌திந்திருக்கிறீர்க‌ளே!

இன்று ஊழிய‌ர்க‌ள் பிர‌ச‌ங்கிக்கும் ச‌மாதான‌ம், சுக‌ம், ஆசிர்வாத‌ம், செழிப்பு, நிம்மதி என்கிற‌ க‌ள்ள‌ உப‌தேச‌த்தை குறித்து தான் அங்கு ப‌வுல் எழுதுகிறார் என்று நான் ந‌ம்புகிறேன். இப்ப‌டி ம‌க்க‌ள் எல்லாம் திருப்தியாக‌ இருக்கும் போது தான் இந்த‌ ச‌டுதியான‌ ம‌ர‌ண‌ம். எல்லோரும் ச‌ந்தோஷ‌மும் ச‌மாதான‌முமாக‌ இருக்கும் போது அவ‌ர்க‌ளுக்கு ஏன் இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் என்கிற‌ ஒரு கொடூர‌த்தை கொண்டு வ‌ருகிறீர்க‌ள் என்ப‌து புரிய‌வில்லை! ஆனால் உயிர்த்தெழ‌வோ, ம‌றுரூப‌மாக‌வோ அனைவ‌ரும் ம‌ரிக்க‌ வேண்டிய‌தாகும். இது அந்த‌ ச‌ம்ப‌வ‌மே.

இத‌ற்கு நிழ‌லாக‌ ந‌ட‌ந்த‌து தான் நோவா கால‌த்து ச‌ம்ப‌வ‌ம். ச‌டுதியில் அனைவ‌ரும் ம‌ரித்து போனார்க‌ள், அந்த‌ 8 பேரை த‌விர‌. இப்ப‌டியே தான் ச‌ம்ப‌விக்கும் இயேசு கிறிஸ்துவின் இர‌ண்டாம் வ‌ருகையின் போதும். அந்த‌ 8 பேர் மாதிரி, இயேசு கிறிஸ்துவை பேழையாக‌ கொண்டிருக்கும் ஒரு சிறிய‌ கூட்ட‌ம் ம‌றுரூப‌மாகும், மீத‌மான‌வ‌ர்க‌ள் உயிர்த்தெழும்ப‌டியாக‌ ம‌ரித்து போவார்க‌ள்.

இந்த‌ ப‌குதியை புரிந்துக்கொள்ள‌ வேண்டும் என்றால், உங்க‌ளுக்கு இயேசு கிறிஸ்துவின் வ‌ருகையை குறித்து தெரிய‌ வேண்டும் உங்க‌ளுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். ஆனாலும் அதை இங்கே எழுதாம‌ல் த‌னி ப‌குதியான‌ இயேசு கிறிஸ்துவின் வ‌ருகை என்கிற‌ த‌லைப்பின் ஆர‌ம்பிக்கிறேன்.

அன்பு57 எழுதுகிறார்:
"1 தெச. 5:3-ல் சொல்லப்பட்டுள்ள அழிவு, முதலாம் மரணமே என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், இயேசுவின் 2-ம் வருகையின்போது, யாரும் மரிப்பதைக் குறித்தி எந்த வேதவசனமும் கூறவில்லையே?"

இத‌ற்காக‌ வாசியுங்க‌ள் ம‌த். 24:37-39.

"1 தெச. 5:3 -ல் "destruction" எனக் கூறப்பட்டுள்ளதையும் “they will not escape” எனக் கூறப்பட்டுள்ளதையும் கவனியுங்கள். ஆம், அவர்கள் ஒருபோதும் தப்பமுடியாது. 2-ம் மரணத்தில் சிக்கி அழிவார்கள் என அறியுங்கள்."

It is given that "They will NOT escape" and not that "They will NEVER escape".

இந்த‌ என்றுமே த‌ப்பிப‌தில்லை என்ப‌தை மாற்ற‌ தான் இயேசு கிறிஸ்து த‌ன் இர‌த்த‌த்தை சிந்தினார்.

ச‌கோத‌ர‌ரே க‌வ‌னிக்க‌ப‌ட‌வேண்டிய‌ ஒரு விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், இயேசு கிறிஸ்து "எல்லாருக்காக‌வும் த‌ன்னை மீட்கும் பொருளாக‌ ஒப்புக்கொடுத்தார்" என்கிற‌து வேத‌ம். எல்லாருக்காக‌வும், என்றால் எல்லாருக்காக‌வும் தான். ஆக‌ எழும்பும் அனைவ‌ரும் பாவ‌ம் இல்லாம‌ல் தான் எழும்ப‌ முடியுமே த‌விர‌ பாவ‌த்துட‌ன் எழும்ப‌ முடியாது. ஏனென்றால் பாவ‌த்தின் ச‌ம்ப‌ள‌ம் ம‌ர‌ண‌ம், ஆனால் "தேவ‌னுடைய‌ கிருபையோ க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினால் உண்டான‌ நித்திய‌ஜீவ‌ன்" (ரோம 6:23).

அன்பு57 எழுதுகிறார்:
"எல்லோருக்கும் நேரிடும் முதலாம் மரணம் அவர்களுக்கும் நேரிட்டிருக்கும் (சடிதியாகவோ, சாதாரணமாகவோ). மரித்த அவர்கள் எதையும் அறியாத நிலையில், குறிப்பாக 1000 வருட அரசாட்சியில் நடப்பது எதையும் அறியாத நிலையில், நெடுங்காலமாக நித்திரையில் இருந்திருப்பார்கள்."

அதான் இயேசு கிறிஸ்துவின் ப‌லியின் ப‌ய‌ன் அனைவ‌ரும் அடைவார்க‌ள், அத‌ன்ப‌டி அனைவ‌ரும் உயிர்த்தெழுவார்க‌ள் என்று ஒப்புக்கொண்டு, இது என்ன‌ புது வாத‌ம்?

"அக்காரணத்தை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அவர்கள் கேள்வி கேட்கும்போது, அக்காரணத்திற்கான விளக்கமும் அவர்களுக்குக் கூறப்படும்."

இது எல்லாம் எந்த‌ வ‌ச‌ன‌த்தின் ஆதார‌த்தின் எழுதுகிறீர்க‌ள்?

அன்பு57 எழுதுகிறார்:
"நம் காலத்திற்கு முந்தி வாழ்ந்தோரின் மரணம், ஒருவேளை நமக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் இந்நாட்களில் “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் கூறிவரும் ஏராளமான பொய் தீர்க்கதரிசிகளை” நீங்கள் அறிவீர்கள்தானே? அவர்களெல்லோரும் சடிதியாகவா மரணமடைகின்றர்? அப்படி எல்லோரும் மரணமடைந்தால்தான் மற்றவர்கள் திருந்திவிடுவார்களே?"

ஏன் இனி வ‌ரும் கால‌ம் இதைவிட‌ அதிக‌மாக‌ இருக்க‌லாம் இல்லையா? இது தான் முற்றிலும் க‌டைசி என்று எப்ப‌டி தீர்மானிக்கிறீர்க‌ள்?

அன்பு57 எழுதுகிறார்:
"அவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகாமல் நேரடியாக 2-ம் மரணத்திற்குத் தீர்க்கப்படுவார்கள். "

இது உங்க‌ள் க‌ருத்து தானே? அப்ப‌டி என்றால் இயேசு கிறிஸ்து, இவ‌ர்க‌ளுக்காக‌ ம‌ரிக்க‌வில்லையா? இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த‌வ‌ர்க‌ளே உயிர்த்தெழும்போது, க‌ள்ள‌ போத‌க‌ர்க‌ள் உயிர்த்தெழுவ‌த‌ற்கு என்ன‌ த‌டை? மேலும் நீங்க‌ள் சொல்லும் இந்த‌ க‌ருத்துக்கு வ‌ச‌ன‌ ஆதாரம் இல்லையே!!

ஹாஸ்ய‌மோ இல்லையா என்ப‌து பிற‌கு பார்ப்போம், ஆனால் இவ்வுள‌வு சீரிய‌ஸாக‌ இர‌ண்டாம‌ ம‌ர‌ண‌ம் என்கிற‌ ஒரு கொள்கையில் இருக்கிறீர்க‌ளே என்ப‌து தான் விஷ‌ய‌ம்!! 7 எழுப‌து முறை ம‌ன்னிக்க‌ சொன்ன‌ ந‌ம் க‌ர்த்த‌ர் பாவிக‌ளை ம‌ன்னிக்க‌ மாட்டார் என்று உறுதியாக‌வே இருக்கீங்க‌ போல்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:


bereans wrote:
//சகோ சோல்க்கு மாத்திரம் இல்லை, எனக்கு பதில் தந்தாலும் உங்களின் ஒரு கருத்து தெளிவாக இருக்கிறது, பலரும் இரண்டாம் மரணம் (வெளிப்படுத்தின விசேஷத்தில் மாத்திரமே சொல்லப்பட்ட ஒரு வார்த்தை) என்கிற ஒன்றில் நுழைவதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறீர்கள்.

அது என்ன, இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தின பயனால் எல்லோரும் உயிர்த்தெழுவார்கள் என்கிற நம்பிக்கையும் வைத்திருக்கிறீர்கள், அப்புறம், முதல் மரணத்திற்கு பிறகு நேர‌டியாக‌ இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்திற்கு எழும்புவார்க‌ள் என்றும் ப‌திந்திருக்கிறீர்க‌ளே!!//

இது சம்பந்தமாக வசன ஆதாரத்துடன் ஏற்கனவே தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்கிறீர்கள்.

நான் ஏற்கனவே காட்டியிருந்த பல வசனங்களுக்கும், நான் கேட்டிருந்த பல கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்லாததால்தான் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லவேண்டியதாகிறது.
பதில் தரப்படாத வசனங்கள் மற்றும் கேள்விகளைத் தொகுத்துத் தருகிறேன். தவறாமல் பதில் தாருங்கள்.

anbu57 wrote:
//2 தெசலோனிக்கேயர் 1:10 (நித்திய அழிவு); மாற்கு 3:29 (என்றென்றைக்கும் மன்னிப்பில்லாத நித்திய ஆக்கினை); யோவான் 3:36 (குமாரனை விசுவாசியாதவன் ஜீவனைக் காண்பதில்லை); யோவான் 12:25 (ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்); கலாத்தியர் 6:8 (மாம்சத்திற்கென்று விதைப்பவன் மாம்சத்தால் அழிவை அறுப்பான்); 1 யோவான் 3:15 (மனுஷ கொலைபாதகனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது); பிலிப்பியர் 3:19 (பூமிக்கடுத்தவைகளைச் சிந்திப்போரின் முடிவு அழிவு); 1 தெசலோனிக்கேயர் 5:3 (அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்); 2 பேதுரு 2:3 (அவர்களுடைய அழிவு உறங்காது); தானியேல் 12:2 (நித்திய நிந்தை மற்றும் நித்திய இகழ்ச்சிக்காக விழித்தெழுவார்கள்)

இன்னும் சங்கீதம் 37:9,20 பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், துன்மார்க்கர் அழிந்து போவார்கள் என்கின்றன; இவற்றை இப்பூமிக்குரிய மரணம் எனக் கூறமாட்டீர்கள் என நம்புகிறேன்.//

இவற்றில் 1 தெச. 5:3 பற்றி மட்டும் பதில் தந்து அதைக் குறித்த விவாதம் முடிவுபெறாத நிலையில் உள்ளது. எனவே அது பற்றி விவாதிப்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வோம். அது தவிர பல வசனங்கள் தந்துள்ளேன். அந்த வசனங்கள் கூறுகிற அழிவை அடைப்புக் குறிக்குள் தந்துள்ளேன். அந்த அழிவுகள் எல்லாம் முதலாம் மரணம்தான் என்கிறீர்களா? அப்படி நீங்கள் சொன்னால், முதலாம் மரணம்தான் ஆதாமின் மீறுதலின்போதே மனிதனுக்குத் தீர்மானமாகிவிட்டதே, பின்னர் ஏன் மீண்டும் மீண்டும் முதலாம் மரணத்தைச் சொல்லி பயமுறுத்த வேண்டும் என்பதுதான் என் கேள்வி.

ஆதாமின் மீறுதலால் எல்லா மனிதருக்கும் முதலாம் மரணம் தீர்மானமாகிவிட்டதை ஏற்கனவே நான் தெளிவுபடுத்தியதை தங்கள் பார்வைக்கு மீண்டும் வைக்கிறேன்.

anbu57 wrote:
//ஆதாமின் மரணம், ஆதாமின் பாவத்துக்கொப்பான பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டதாக ரோமர் 5:14-ல் பவுல் சொல்கிறார். அவ்வசனத்தில் “ஆதாம் முதல் மோசே வரைக்கும்” என ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அவர் கூறுகிறார். ஆதாமிடம், ‘கனியைச் சாப்பிட்டால் சாவாய்’ என தேவன் கூறியதைப் போல, மோசே வரைக்குமான பிரிவினரிடம் தேவன் கூறவில்லை. ஆனாலும் அவர்களையும் மரணம் ஆண்டுகொண்டது. இந்த மரணம்தான் ‘முதலாம் மரணம்’. இந்த ‘முதலாம் மரணத்திற்கு’ ஆதாமின் மீறுதல்தான் காரணமேயொழிய, மோசே வரைக்குமான யாரும் காரணமல்ல.

மோசே வரைக்குமான ஒரு பிரிவினரை பவுல் பிரிக்கக் காரணமென்ன? மோசே மூலமாகத்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன் நியாயப்பிரமாணம் இல்லை. அதாவது ‘இதைச் செய்தால் சாவாய்’ என நியாயப்பிரமாணத்தில் தேவன் கூறியதைப் போல் அதற்குமுன் யாரிடமும் தேவன் கூறவில்லை (ஆதாமைத் தவிர). பவுலின் வாதம் என்னவெனில், நியாயப்பிரமாணத்திற்குப் பின்னருள்ள ஜனங்களுக்கு மரணம் வந்தால், அவர்கள் ‘நியாயப்பிரமாணத்தை மீறினார்கள், எனவே மரணம் வந்தது’ எனக் கூறிக்கொள்ளலாம்; ஆனால் நியாயப்பிரமாணத்திற்கு முந்தின ஜனங்களுக்கும் மரணம் வந்துள்ளதே, அதற்குக் காரணமென்ன? ஆதாமின் மீறுதலால் வந்த சாபமே காரணம் என்பதுதான் பவுலின் வாதம்.

அதாவது ‘முதலாம் மரணத்திற்கு’ முழுக்க முழுக்க ஆதாமின் மீறுதல்தான் காரணம் என்பதை அந்த வாதத்தின் மூலம் பவுல் எடுத்துரைக்கிறார். ஆதாம் முதல் மோசே வரைக்குமான பிரிவினரை ‘முதலாம் மரணம்’ எவ்வாறு ஆண்டுகொண்டதோ, அதேவிதமாக மோசேக்குப் பின்னருள்ள பிரிவினரையும் ‘முதலாம் மரணம்’ ஆண்டு கொண்டது (நாமும் அந்தப் பிரிவில் அடக்கம்).//

இப்படியாக ஆதாமின் மீறுதலால் நம் எல்லோருக்கும் முதலாம் மரணம் தீர்மானமானதை எடுத்துரைத்த நான் இறுதியில் பின்வரும் கேள்வியையும் கேட்டிருந்தேன். அக்கேள்விக்கு நீங்கள் இன்னமும் பதில் தரவில்லை.

anbu57 wrote:
//ஏற்கனவே ‘முதலாம் மரணத்தின்’ பிடியிலுள்ள அப்பிரிவினரிடம், நியாயப்பிரமாணத்தின் மூலமாகவோ அல்லது இயேசுவின் மூலமாகவோ அல்லது அப்போஸ்தலர் மூலமாகவோ, ‘இதைச் செய்தால் சாவாய் அல்லது அழிவாய்’ எனக் கூறினால் அது முதலாம் மரணத்தைக் குறிப்பதாக எப்படி இருக்க முடியும்? அவர்கள்தான் ஏற்கனவே முதலாம் மரணத்தின் பிடியில் உள்ளனரே?//

இக்கேள்விக்கு இன்னமும் நீங்கள் பதில் தரவில்லை. அதனால்தான் நம் விவாதம் ஒரே இடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறது.

எசேக்கியேல் 3:18; 18:13,24; 33:8 போன்ற பல வசனங்கள் துன்மார்க்கன் சாவான் என்கின்றன. அதிலும் சில வசனங்கள் சாகவே சாவான் என்கின்றன. ஏற்கனவே ஆதாமிடம் சாகவே சாவாய் என்று சொல்லித்தானே ஆதாம் சாவைப் பெற்றார்? அவர் மூலமாக நாமும் சாவைப் பெற்றோமல்லவா? அப்படியிருக்க மீண்டும் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம், சாகவே சாவான் எனக் கூற வேண்டிய அவசியமென்ன?

ஏற்கனவே தூக்குத்தண்டனை பெற்று, தண்டனைக்காக காத்திருக்கும் ஒருவனிடம் சென்று, நீ துன்மார்க்கமாய் நடந்தால் உனக்கு தூக்குத்தண்டனை கிடைக்குமென யாராவது கூறினால் அது நகைப்பிற்குரியதாக இருக்குமல்லவா? இதேமாதிரிதான் ஏற்கனவே முதலாம் மரணத்திற்கு ஆளான ஒருவனிடம் சென்று, “நீ பாவம் செய்தால் உனக்கு முதலாம் மரணம் கிடைக்கும்” என எச்சரிப்பதும் நகைப்பிற்குரியதாகத்தான் இருக்கும்?

ஆனால் அதற்கு மாறாக, “நீ பாவம் செய்தால் உனக்கு 2-ம் மரணம் கிடைக்கும்” என வசனங்கள் கூறுவதாக நான் சொன்னால், நான் சொல்வதை ஹாஸ்யம் என சகோ.soulsolution கூறுகிறார்.

எசே. 3:21; 18:9,17; 33:15 வசனங்களையும் படித்துப் பாருங்கள். நீதிமான் பிழைக்கவே பிழைப்பான் என அவை கூறுகின்றன. இப்படி கூறுவதை, நீதிமான் பிழைப்பது முதலாம் மரணத்திலிருந்துதான் என நாம் கருதமுடியுமா? முதலாம் மரணம்தான் எல்லோருக்கும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதே? நீதிமான் முதலாம் மரணத்திலிருந்து பிழைப்பான் என எசேக்கியேல் கூறியிருந்தால், தேவனால் நீதிமான்கள் என சாட்சி பெற்ற யோபு, நோவா போன்ற பலர் செத்திருக்கக்கூடாதே?

எனவே, நீதிமான் பிழைக்கவே பிழைப்பான் என எசேக்கியேல் கூறுவது 2-ம் மரணத்திலிருந்து பிழைப்பதாகத்தான் இருக்கமுடியும்.

நீங்கள் கூறுகிறபடி பார்த்தால், ஆதியாகமம் 2,3-ம் அதிகாரங்களிலேயே மனிதனுக்கு முதலாம் மரணம் தீர்மானமானபின், மோசேயின் நியாயப்பிரமாணம் முதல் வெளிப்படுத்துதல் வரை பல வசனங்களில் சாவாய், அழிவாய் என்று மீண்டும் மீண்டும் முதலாம் மரணத்தையே வேதாகமம் கூறினால் அது நகைப்பிற்குரியதாக அல்லவா இருக்கும்?

தொடர்ச்சி அடுத்த பதிவில் ....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

முந்தின பதிவின் தொடர்ச்சி ....

பின்வரும் வசனங்களை படித்துப்பாருங்கள். அவற்றில் அடைப்புக் குறிக்குள் முதலாம் மரணம் என நான் சேர்த்துள்ளது உங்கள் கருத்தின்படிதானேயொழிய எனது கருத்தின்படியல்ல.

(இப்பதிவைப் படிக்கிற மற்ற அன்பர்களுக்கு ஒரு குறிப்பு: முதலாம் மரணம் என்பது நமது இவ்வுலக சரீர மரணத்தையே குறிப்பிடுகிறது)

கலா. 5:15 ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தால் (முதலாம் மரணத்தின் மூலம்) அழிவீர்கள்.

யோவான் 8:24 நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் (முதலாம் மரணத்திற்குள்ளாகி) சாவீர்கள்.

பிலிப்பியர் 3:19 அவர்களுடைய முடிவு (முதலாம் மரணமாகிய) அழிவு ..

2 தெச. 1:10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும் ... வல்லமையிலிருந்தும் நீங்கலாகி (முதலாம் மரணமெனும்) நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

1 தீமோ. 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் (முதலாம் மரணமாகிய) அழிவிலும் அமிழ்த்துகிற ... பலவித இச்சைகளில் விழுவார்கள்.

2 பேதுரு 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக் கொள்வார்கள். பூர்வகால முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய (முதலாம் மரணமாகிய) அழிவு உறங்காது.

ரோமர் 1:30-32 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், ... வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய் ... இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் (முதலாம்) மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும் .....

ரோமர் 7:10 இப்படியிருக்க ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு (முதலாம்) மரணத்திற்கேதுவாயிருக்கக் கண்டேன்.

ரோமர் 8:6 மாம்சசிந்தை (முதலாம்) மரணம் ...

யாக்கோபு 5:20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை (முதலாம்) மரணத்தினின்று இரட்சித்து, ....

1 யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால் (முதலாம்) மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் (முதலாம்) மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.

உங்கள் கூற்றின்படி, வேதவசனங்கள் இப்படியாக எழுதப்பட்டிருந்தால் அது நகைப்பிற்குரியதாகத்தானே இருந்திருக்கும்?

தொடர்ச்சி அடுத்த பதிவில் .....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

முந்தின பதிவின் தொடர்ச்சி .....

எல்லோரையும் மீட்கும் பொருளாக இயேசு மரித்திருக்கும்போது, அநேகர் 2-ம் மரணத்திற்குள்ளாகி அழிவதை உங்களால் ஏற்கமுடியவில்லை, அப்படித்தானே? இதற்கான பதிலையும் ஏற்கனவே கூறியுள்ளேன். அதைப் படித்துப் பார்க்கவும்.

anbu57 wrote:
//‘முதலாம் மரணம்’ என்பது முழுக்க முழுக்க ஆதாமின் மீறுதலால் வந்த விளைவு. இந்த ‘முதலாம் மரணத்திற்கு’ வேறு யாரும் பொறுப்பல்ல. ஆயினும் சாத்தானின் தூண்டுதலாலோ அல்லது நம் சுய இச்சையாலோ நாம் பாவஞ்செய்தால் அப்பாவத்தின் சம்பளமும் மரணமே. ஆனால் இந்த மரணம் 2-ம் மரணத்தைக் குறிப்பிடுகிறது. ஏனெனில் ‘முதலாம் மரணம்’ ஏற்கனவே நம்மை ஆண்டுகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட நம்மிடம் பாவத்தின் சம்பளம் ‘முதலாம் மரணம்’ எனக் கூறுவது அர்த்தமற்றதாக இருக்கும். ....

ஆதாமால் கிடைத்த ‘முதலாம் மரணத்திலிருந்து’ நாம் விடுவிக்கப்பட்டால்தான் ‘2-ம் மரணத்திலிருந்து’ நாம் விடுவிக்கப்பட வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை நமக்குத் தருவதுதான் இயேசு பலியானதின் முதல் நோக்கம். இதன் அடிப்படையில்தான் ‘ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என 1 கொரி. 15:22-ல் பவுல் கூறுகிறார்.//

முதலாம் மரணத்திற்குக் காரணம் நாமல்ல, ஆதாம்.

2-ம் மரணத்திற்குக் காரணம் நாம்தான், அதாவது நம் பாவங்கள்தான்.

எல்லோரையும் மீட்கும் பொருளாக மரித்த இயேசு, முதலாம் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறார், 2-ம் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறார்.

முதலாம் மரணத்திற்குக் காரணம் ஆதாம் என்பதால், 2-ம் மரணத்திற்கேதுவான பாவம் நம்மிடம் இருந்தாலும், முதலாம் மரணத்திலிருந்து நாம் அனைவரும் விடுதலையாகி உயிரடைவோம். இதுதான் எல்லா ஜனத்துக்குமான நற்செய்தி. முதலாம் மரணத்திலிருந்து நாம் விடுதலையாவதற்கும் நம் பாவங்களுக்கும் சம்பந்தமில்லை. முதாலம் மரணமாகிய ஆக்கினைக்கு நம் பாவங்கள் காரணமாயிராததைப் போலவே, முதலாம் மரணத்திலிருந்து விடுதலையாவதற்கு நம் பாவங்கள் தடையாக இருக்கப்போவதுமில்லை.

பாவமுள்ளவர்கள் எப்படி உயிரடையமுடியும் என்பது உங்களின் ஒரு முக்கிய கேள்வியாயுள்ளது. பாவமுள்ளவர்கள் உயிரடைய மாட்டார்கள் அல்லது உயிரடைய முடியாது என எந்த வசனம் கூறுகிறது? ஒரு மனிதனின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டால்தான் முதலாம் மரணத்திலிருந்து விடுதலையாகி அவன் உயிரடையமுடியும் என எந்த வசனம் கூறுகிறது?

மாற்கு 3:292-ல் ஒருவன் பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷணஞ்சொல்வானாகில் அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என இயேசு கூறுகிறார். அவ்வாறெனில், பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷணஞ்சொல்கிறவனின் நிலையென்ன? எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டால்தானே உயிரடையமுடியும் என்கிறீர்கள்? அவ்வாறெனில் பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷணஞ்சொன்னவன் உயிரடைய மாட்டானா? அவனும் உயிரடைவான் என நீங்கள் கூறினால், எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டால்தான் உயிரடையமுடியும் எனும் தங்கள் கூற்று சரியல்ல என்றாகிவிடுமே?

மற்றொரு வசனத்தின்படியும் சிந்திப்போம்.

1 தீமோ. 5:24-ல் சிலருடைய பாவங்கள் நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளுமென்றும், சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடருமென்றும் பவுல் கூறுகிறார். பின்தொடருமென்றால், அது நியாயத்தீர்ப்புக்குப் பிறகு பின்தொடருவதையே பவுல் கூறுகிறார் என்பதை ஒத்துக்கொள்வீர்களென நம்புகிறேன். நியாயத்தீர்ப்புக்கு முன்னர்தானே உயிர்த்தெழுதல்? அவ்வாறெனில் உயிர்த்தெழுந்த பின்னரும் சிலருக்குப் பாவம் இருக்குமென்றுதானே அர்த்தம்?

எனவே, நான் ஏற்கனவே கூறியபடி, ஆதாமின் பாவத்தால் வந்த முதலாம் மரணத்திலிருந்து நாம் விடுதலையாவதற்கு, நம் பாவங்கள் தடையாயிருக்க நிச்சயமாக அவசியமில்லை என்பது தெளிவாகிறது.

இனி, 2-ம் மரணத்திலிருந்து இயேசு நம்மை எவ்வாறு விடுவிக்கிறார் என்பது பற்றி நான் ஏற்கனவே எழுதினதைப் படியுங்கள்.

anbu57 wrote:
//நம் பாவத்தை உணர்ந்து மன்னிப்பு வேண்டினால், கிறிஸ்துவின் பலி நம் பாவத்தை மன்னித்து நம்மை 2-ம் மரணத்திலிருந்தும் விடுவிக்கிறது. இந்த வாய்ப்பை நமக்குத் தருவதுதான் கிறிஸ்துவின் பலியின் 2-வது நோக்கம்.

நாம் பாவத்தை உணர்ந்து பாவமன்னிப்பைப் பெற்றபின்னர் பாவஞ்செய்யாதிருக்க வேண்டும். அப்போதுதான் 2-வது மரணத்திலிருந்து நமக்குக் கிடைத்த விடுதலையை நாம் காப்பாற்ற முடியும். பாவமன்னிப்பைப் பெற்ற நாம், மீண்டும் பாவஞ்செய்தால் மீண்டும் 2-ம் மரணம் நம்மை ஆட்கொள்ளும். எனவேதான் தன் பாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவன் இரக்கம் பெறுவான் (அதாவது 2-ம் மரணத்திலிருந்து தப்பிப்பான்) என வசனம் கூறுகிறது.

பாவத்தை அறிக்கை செய்து, பாவமன்னிப்பு பெற்று, 2-ம் மரணத்திலிருந்து விடுதலையானவர்கள், முடிவுபரியந்தம் (அதாவது முதலாம் மரணபரியந்தம்) நிலைத்திருந்தால், அவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் கிடையாது. இவர்கள்தான் வெளி. 20:5 கூறுகிற முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து, கிறிஸ்துவோடு 1000 வருட அரசாட்சியில் அரசாளப்போகிற பரிசுத்தவானும் பாக்கியவான்களுமானவர்கள்.

முடிவுபரியந்தம் நிலைத்திராத மற்றவர்கள்மீது, 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இருக்கத்தான் செய்யும்.

முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையாத மற்றவர்களில், அதாவது 2-ம் மரணத்தின் அதிகாரத்தைச் சுமப்பவர்களில்: கிறிஸ்துவை அறியாதவர்கள், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள், சிறு வயதில் மரித்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அனைவரும் அடங்குவார்கள். ஆனால் இவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே 1000 வருட அரசாட்சியில் உயிர்ப்பிக்கப்பட்டு, அதின் பிரஜைகளாகி புடமிடப்படுவார்கள்.

இந்த ஒரு பிரிவினரில் யாரெல்லாம் அடங்குவார்கள், யாரெல்லாம் அடங்கமாட்டார்கள் என்பதற்கான தெளிவான பதிலை நான் இன்னும் அறியவில்லை. ஆனால் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக இல்லாமல் நேரடியாக 2-ம் மரணத்தை எதிர்கொள்வோர் நிச்சயமாக உண்டு என நான் நம்புகிறேன். இதற்கான வேதஆதாரமாக நான் கூறுவது, கிறிஸ்துவின் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு பற்றிய மத்தேயு 25:31-46 வரையுள்ள வசனங்கள். இவ்வசனங்களில் பசி, தாகம், வியாதி போன்ற பல துன்பங்களில் இருந்தோரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இத்தகைய துன்பங்கள் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் இருக்காது (ஏசாயா 65:17-25). ஏசாயா 65:20-ல் 100 வயதில் மரிப்பவனைப் பற்றி கூறப்பட்டுள்ளதால், ஏசாயா 65:17-25 வசனங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள், 1000 வருடத்திற்கு பிறகுள்ள நிகழ்வுகளாக இருக்கமுடியாது.

கிறிஸ்துவின் அந்த 1000 வருட ஆட்சியில் பசி, தாகம், வியாதி போன்ற துன்பங்கள் இருக்கமுடியாதென்பதால் துன்பத்தில் இருப்போருக்கு உதவவேண்டிய யாரும் அப்போது தேவையில்லை. எனவே மத்தேயு 25:31-46 வசனங்களில், துன்பங்களில் இருந்தோருக்கு உதவிசெய்யாத வெள்ளாட்டுக் கூட்டத்தாரின் அச்செயல்கள், 1000 வருட அரசாட்சியில் நடப்பவையல்ல. அதாவது அச்செயல்கள் யாவும் இப்பூமியின் நாட்களில் நடப்பவைகளே. எனவே இப்பூமியில் துன்பத்தில் வாடுகிற எளியோருக்கு உதவாமல் சுயநலமாக வாழ்கிற இரக்கமற்ற அனைவரும், 1000 வருட ஆட்சிக்குள் பிரவேசியாமல், நேரடியாக வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு வந்து, 2-ம் மரணத்திற்கு தீர்க்கப்படுவார்கள் என்பது எனது கருத்து. இரக்கமற்றவர்களுக்கு இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு கிடைக்கும் எனும் வசனம், எனது இக்கருத்துக்குப் பொருத்தமாயுள்ளது.

கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சிக்குப் பின்வரும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு, முழுக்க முழுக்க அவனவன் கிரியைகளின்படியானதே என வெளி. 20:12 கூறுவதைக் கவனியுங்கள். எனவே 2-ம் மரணத்திலிருந்து நாம் விடுதலை பெறவேண்டுமெனில், நம் கடந்தகால பாவங்களை உணர்ந்து மன்னிப்பு பெறவேண்டும் என்பதோடு, மன்னிப்பு பெற்ற நாம், நற்கிரியைகள் செய்வதும் அவசியமாயிருக்கிறது.

நற்கிரியைகளைச் செய்யாதவர்கள் நேரடியாக 2-ம் மரணத்திற்குச் செல்வதைப்போல, சமாதானமும் சவுக்கியமும் உண்டாகும் எனச் சொல்லி ஜனங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களும் சடிதியான அழிவான 2-ம் மரணத்திற்கு நேரடியாகச் செல்வார்கள் எனக் கருதுகிறேன். இவர்களைத் தவிர வேறு எவர்களெல்லாம் 2-ம் மரணத்திற்கு நேரடியாகச் செல்வார்கள் என்பதை நானறியேன்.//


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//மேலும் இப்போது செய்கிற, செய்யப்போகிற எல்லா பாவங்களும் முழுவதும் மன்னிக்கப்படாத பட்சத்தில் ஒருவரும் உயிர்த்தெழவே முடியாது என்ற உண்மையை ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்? அப்படி எல்லா பாவங்களையும் மன்னித்து எழுப்பி மீண்டும் 'நீ சென்ற முறை ஏன் பாவம் செய்தாய்? மறுபடி செத்துப்போ என்று சொல்லுமளவு வேதம் குழப்புவதில்லை என்று நம்புகிறேன். மற்றபடி உங்கள் இஷ்டம்.//

தங்கள் மேற்பார்வைக்கு 5 வசனங்களைத் தருகிறேன், படியுங்கள். தமிழில் type செய்ய நேரமாகுமென்பதால் ஆங்கிலத்தில் தருகிறேன்.


Revelation 20:11-15
11 Then I saw a great white throne and him who was seated on it. Earth and sky fled from his presence, and there was no place for them.
12 And I saw the dead, great and small, standing before the throne, and books were opened. Another book was opened, which is the book of life. The dead were judged according to what they had done as recorded in the books.
13 The sea gave up the dead that were in it, and death and Hades gave up the dead that were in them, and each person was judged according to what he had done.
14 Then death and Hades were thrown into the lake of fire. The lake of fire is the second death.
15 If anyone's name was not found written in the book of life, he was thrown into the lake of fire.

இவ்வசனங்களில் காணப்படும் நிகழ்வுகள், 1000 வருட ராஜ்யத்திற்குப் பிறகு நடப்பவைகளே என ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

மரித்து உயிர்த்தெழுந்தோரையே 12-ம் வசனம் குறிப்பிடுகிறதென ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அவ்வாறு உயிர்த்தெழுந்தோரில் சிலர், அதாவது ஜீவப்புஸ்தகத்தில் எழுதப்பட்டதாகக் காணப்படாதவர்கள் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டதாக 15-ம் வசனம் கூறுகிறது. (காணப்படாதவன் என ஒருமையில் கூறுவதால், அது சாத்தானைக் குறிப்பதாகக் கூறவேண்டாம். சாத்தான் ஏற்கனவே அக்கினிக்கடலில் தள்ளப்பட்டதாக 10-ம் வசனம் கூறுகிறது.)

எனவே, உயிர்த்தெழுந்தோரில் சிலர் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டு சாவார்கள் என்றாகிறதல்லவா?

1000 வருட ராஜ்யத்திற்குப் பிறகு குறைந்தது 2 வெள்ளாடுகள், அதாவது 2 அநீதிமான்கள் நித்திய ஆக்கினைக்குப் போவார்கள் என ஏற்கனவே மற்றொரு பகுதியில் நீங்கள் ஒத்துக் கொண்டுள்ளீர்கள். அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?

இனிமேல் உங்கள் இஷ்டம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//இவ்வுள‌வு சீரிய‌ஸாக‌ இர‌ண்டாம‌ ம‌ர‌ண‌ம் என்கிற‌ ஒரு கொள்கையில் இருக்கிறீர்க‌ளே என்ப‌து தான் விஷ‌ய‌ம்!! 7 எழுப‌து முறை ம‌ன்னிக்க‌ சொன்ன‌ ந‌ம் க‌ர்த்த‌ர் பாவிக‌ளை ம‌ன்னிக்க‌ மாட்டார் என்று உறுதியாக‌வே இருக்கீங்க‌ போல்!!//

லூக்கா 17:4-ஐப் படித்துப் பாருங்கள். மனஸ்தாபப்பட்டால் மன்னிக்கும்படிதான் இயேசு கூறினார். மனஸ்தாபப்படவில்லையானால் மன்னிக்கும்படி கூறவில்லை. அவ்வாறே, நாம் மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு வேண்டினால்தான் தேவன் நம்மை மன்னிப்பார். லூக்கா 17:4-ல் ஏழுதரம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதன் modification-ஆகத்தான் ஏழெழுபது தரம் என மத்தேயு 18:22 கூறுகிறது. அதாவது 7 தரமோ 70 தரமோ அதற்கும் மேலாகவோ, நமக்கு விரோதமாகக் குற்றஞ்செய்த சகோதரன் மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு வேண்டினால் மன்னிக்க வேண்டும் என்றே இயேசு கூறுகிறார்.

இதேபிரகாரமாக, நாமும் தேவனுக்கெதிராக செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு வேண்டினால்தான் தேவனும் நம் பாவங்களை மன்னிப்பார்.

மத்தேயு 18:35 இன்னுமோர் விஷயத்தையும் கூறுகிறது. நாம் நம் சகோதரரை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், பரமபிதாவும் நம் பாவங்களை மன்னிக்கமாட்டார் என அவ்வசனம் கூறுவதைக் கவனியுங்கள்.

இவ்விதமாக மன்னிக்கப்படாதவர்கள், உங்கள் கூற்றுப்படி, உயிர்த்தெழமுடியாதல்லவா? கண்டிப்பாக பதில் தரவும்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்களே விசுவாசித்தார்கள்" அப். 13:48//

அவ்வாறெனில் விசுவசியாத மற்றவர்கள் நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்படவில்லையா? அவர்களுக்கு நித்தியஜீவன் கிடைக்காதா?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//சிலரை விசுவாசிக்கவும் பலரை அவிசுவாசமாக நடக்க செய்வது தேவனின் நியமத்தின் படியே. அவரே இதை நியமிக்கிறார்.//

அவ்வாறெனில்:
சிலரை நீதிமான்களாகவும் பலரை அநீதிமான்களாகவும் நடக்கச்செய்வதும் தேவனின் நியமத்தின்படியே என்கிறீர்களா?

bereans wrote:
//அப்படி என்றால் இரட்சிப்பு என்பதை ஒரு முறைகூட மரிக்காமலே இருக்கும் ஒரு நிலை என்று புரிந்துக்கொண்டு தான் பல உதாரனங்களை எழுதியிருகீற்கள் போல இருக்கிறது.//

நீங்கள் என்ன சொல்லியுள்ளீர்கள் என புரியவில்லை.


-- Edited by anbu57 on Sunday 1st of November 2009 07:22:51 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அன்பு அய்யா அவர்களே,


'தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்' என்றால் அதற்கு அர்த்தமே மற்றவர்கள் எல்லாம் தெரிந்து கொள்ளப்படாதவர்கள் என்றுதான் அர்த்தம். தற்போது 'சபைக்கு' மட்டுமே நியாயத்தீர்ப்பு, மற்றவர்களுக்கு இரட்சிக்கப்பட்ட (உயிர்த்தெழுந்த பின்தான்) பின்புதான். "பாவத்தின் சம்பளம் மரணம்' என்ற அடிப்படை வசனத்தைக்கூட மறந்துவிட்டு பாவங்கள் மன்னிக்கப்பட்டால்தான் உயிர்த்தெழுதலா என்று நீங்கள் கேட்பது வியப்பாக உள்ளது. அப்படி அவர்களுக்கு 'தண்டனை' தந்தே ஆகவேண்டுமென்றால் உயிர்த்தெழுப்ப வேண்டிய அவசியம்தான் என்ன?


வெளிப்படுத்தல் வசனங்களை ஒருவசனம் கூட பாக்கியில்லாமல் நமக்கு விளக்கம் தரமுடியும் என்ற பட்சத்தில் மட்டுமே நாம் அதைப் பற்றி வியாக்கியானம் செய்ய இயலும். மேலும் வெளிப்படுத்தலில் 'பின்பு' 'பின்பு நான்...கண்டேன்' என்று எழுதப்பட்டுள்ளதை வைத்து இந்தக் காரியங்கள் அடுத்தடுத்து நிகழ்வதாக எண்ணிக்கொண்டுள்ளோம். ஒரே செய்தியைத்தான் இன்னொரு முறை narrate செய்யப்பட்டுள்ளது. வெளி21:10 பூமியில் நிறுவப்படப்போகும் 1000வருட ஆட்சியின் ஆரம்பமேயன்றி 1000வருட ஆட்சியின் முடிவில் அல்ல.



நீங்கள் கொடுத்துள்ள வசனத்தையே எடுத்துக்கொள்வோமே வெளி20:9 லேயே அக்கினி 'அவர்களை' பட்சித்துப்போட்டது. இவர்கள் யார்? 20:11 ல் "அவருடைய சமூகத்திலிருந்து பூமியும், வானமும் அகன்றுபோயின" என்றால் இவை நடப்பது எங்கே? 20:12 ல் 'மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்....நியாயத்தீர்ப்படைந்தார்கள்' இவர்கள் யார் எப்போது மரித்தார்கள்?, மரணத்தையே அக்கினிக்கடலில் தள்ளிவிட்ட பின்பு எப்படி ஜீவபுஸ்தகத்தில் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான் என்று மீண்டும் எழுதக் காரணமென்ன?

வெளி19:20 ல் வருகிற 'இருவரும் கந்தகம் எரிகிற் அக்கினிக் கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்' இந்த இருவர் யார்? இது எப்போது நடக்கும் நிகழ்வு?

மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி, மரணம், பாதாளம் இவைகள் யாவும் CONCEPTகளெயன்றி உண்மையான ஜீவன்கள் இல்லை.
வேதம் தரும் ஒரு உன்னதமான 'நற்செய்தி' மனிதனுக்கு இன்னொரு வாழ்வு உண்டு என்பதுதான். அது எல்லாருக்கும் பட்சபாதமின்றி வழங்கப்படும். இல்லாவிட்டால் கிறிஸ்து என்கிற தேவன் மனிதனாய் வந்து மரித்தது முற்றிலும் வீணாயிருக்கும்.

நாங்கள் வேத வசனங்களை வைத்து ஆறுதலடைந்து கிறிஸ்துவின் முழுமையான பிரசன்னத்திற்கு காத்திருக்கிறோம். ஆகையால் மனித இனம் முழு குழந்தையாக் ஜீவனுடன் வளரட்டும் என்று அன்பின் நிமித்தம் வாஞ்சிக்கிறோம் ஆனால் உங்களப் போன்ற சிலர் குழந்தையை வெட்டி பாதிப்பாதி எடுத்துக்கொள்வோம் என்கிறீர்கள். 2வெள்ளாடுகள் என்று நான் எழுதியது உங்களை திருப்திப்படுத்தவே. ஒருவரும் கெட்டுப்போகாமல் இருப்பதே தேவ சித்தம், அது நிறைவேறும்.
ஆதாம் செய்த பாவத்திலிருந்து மட்டும் விடுவிக்க இயேசு வரவில்லை. அவர் 'உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி', சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிறவர் ஆவார். 2ம் மரணத்திற்கு யாரும் இப்போதே reserve செய்ய முடியாது. வேதம் அதைப் போதிக்கவில்லை. உயிர்த்தெழுதல் என்கிற அந்த மாபெரும் இரட்சிப்பு நிறைவேறக் காத்திருபோம்.

அப்படி நீங்கள் வேதத்தில் இல்லாத 'இரண்டாம் மரணத்திலிருந்து' பாவிகளை காப்பாற்றும் 'ஊழியம்' செய்து கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தால் All the Best. நன்றாகச் செய்யுங்கள் இதைத்தான் எல்லா மார்க்கங்களும் செய்கின்றன, திருடாதே, பொய்சொல்லாதே, விபச்சாரம் செய்யாதே, நன்மை செய் என்று.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//வெளிப்படுத்தல் வசனங்களை ஒருவசனம் கூட பாக்கியில்லாமல் நமக்கு விளக்கம் தரமுடியும் என்ற பட்சத்தில் மட்டுமே நாம் அதைப் பற்றி வியாக்கியானம் செய்ய இயலும்.//

வெளிப்படுத்தல் என்ன, சுவிசேஷங்கள், நிருபங்கள், தீர்க்கதரிசனங்கள், நியாயப்பிரமாணங்கள், ஆகமங்கள் ஆகிய அனைத்திலும் ஒருவசனம் கூட பாக்கியில்லாமல் நம்மால் விளக்கம் தரமுடியுமா? முடியாதென ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் ஒத்துக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நான் ஒத்துக்கொள்கிறேன். இதனால் உங்களைப் பொறுத்தவரை நான் வேதாகமத்தின் எந்த புத்தகத்திற்கும் விளக்கம்தர தகுதியற்றவனாகிறேன்.

எனவே வேதவசனங்களின் அடிப்படையில் உங்களோடு நான் விவாதிக்கப்போவதில்லை. ஆனாலும் சில கேள்விகளை உங்கள்முன் வைக்க விரும்புகிறேன். எபிரெய மொழியில், கிரேக்க மொழியில் எழுதப்பட்ட வேதாகம புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்கு யாருக்கு தேவன் அதிகாரம் கொடுத்தார்? இதற்கான வேத ஆதாரம் தரமுடியுமா?

வேதாகம புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு ஜனங்களுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பது தேவசித்தம்தான் என்பதற்கான வேத ஆதாரம் தரமுடியுமா? இயேசுவின் சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்களில் யாராவது வேதாகம புத்தகங்களை மொழிபெயர்த்தார்களா?

நான் அறிந்தவரை, வேதாகம புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்கு தேவன் யாருக்கும் அதிகாரம் கொடுத்ததற்கோ, மொழிபெயர்ப்பது தேவசித்தம் என்பதற்கோ வேதாகமத்தில் ஆதாரம் இல்லை என உறுதியாக நம்புகிறேன். இயேசுவின் சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்களில் யாரும் அதைச் செய்ததாகவும் எனக்குத் தெரிந்து தகவல் எதுவுமில்லை.

கி.மு. 3-ம் நூற்றாண்டில், எகிப்தை ஆண்ட கிரேக்க மன்னன் ற்றாலமி பிலடெல்பஸ் என்பவன் (இவன் தன் சொந்த சகோதரியை மணந்தவன்) எகிப்திய நூலகத்தில் வைப்பதற்காக பழைய ஏற்பாட்டை கிரேக்க மொழிக்கு மொழிபெயர்த்ததாக ஒரு தகவல் கூறுகிறது. 72 இஸ்ரவேலரைக் கொண்டு அவன் மொழிபெயர்த்ததால், அது செப்ற்றுவாஜிண்ட் என அழைக்கப்பட்டது.

மற்றபடி இஸ்ரவேலர்கள், இயேசுவின் சீஷர்கள், அப்போஸ்தலர்கள் யாரும் வேதாகமத்தை மொழிபெயர்த்ததாகவோ, அதற்கு முயன்றதாகவோ தகவல் இல்லை. வேதாகம காலத்திற்குப் பின்னர் வந்தவர்கள்தான் வேதாகமத்தை மொழிபெயர்த்து அதை ஜனங்களின் கைக்கு எட்டும்படி செய்தனர். அதன்பின்னர் ஆளாளுக்கு அவரவர் இஷ்டம்போல் வசனங்களுக்கு வியாக்கியானம் கொடுத்து பல்வேறு சபைப்பிரிவுகள் வளர வழிவகுத்தனர்.

தேவனின் வார்த்தைகளின் ஒரு எழுத்துகூட எழுத்தின் உறுப்புகூட மாறக்கூடாது என்பதே தேவசித்தம். ஆனால் மொழிபெயர்ப்பின்போது மொழியே மாறிவிடுகிறது, அதன் காரணமாக கருத்துகளும் மாறிவிடுகிறது. நம் மத்தியில காணப்படும் ஏராளமான மொழிபெயர்ப்புகளே இதற்கு சாட்சி. இப்படியிருக்க, பரிசுத்தஆவியின் ஒத்தாசையோடுதான் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது என யார் சொன்னாலும் அதை நான் ஏற்கமாட்டேன்.

என்னைப் பொறுத்தவரை எனது கருத்து: இயேசுவின் சீஷர்கள் எவ்வாறு இயேசுவின் கட்டளையிட்டபடி, உலகமெங்கும் சென்று, சகல ஜாதிகளுக்கும் கிறிஸ்துவின் கற்பனைகளைப் போதித்து அவர்களை கிறிஸ்துவின் சீஷராக்கினார்களோ, அதேவிதமாக பின்னால் வந்த சீஷர்களும் சகல ஜாதிகளையும் கிறிஸ்துவின் சீஷராக்கவேண்டும் என்பதே.

இப்பணியை வேதாகம காலத்திற்குப் பின்வந்த சீஷர்கள் ஒழுங்காக செய்திருந்தால், கிறிஸ்தவம் சிறந்தமுறையில் வளர்ந்திருக்கும், நீங்களும் நானும் இவ்வாறு விவாதிக்க அவசியமும் ஏற்பட்டிருக்காது. எப்படியோ வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டு நம் கைகளில் வந்துவிட்டதாலும், அதன் கருத்துக்கள் பல்வேறுவிதமாக ஜனங்களிடம் சென்று கொண்டிருப்பதாலும், நம்மால் முடிந்தவரை மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து, வேதாகமத்தின் உண்மையான கருத்தை அறிய முயல வேண்டும் என்பதே என் நோக்கம்.

ஆனால் அதைவிட முக்கியமானது, கிறிஸ்துவின் கற்பனைகளை ஜனங்களுக்குப் போதித்து அவர்களை கிறிஸ்துவின் சீஷராக்குவதுதான். அப்பணியை ஒருபுறம் நான் செய்துகொண்டுதான் வருகிறேன். கூடவே, நம்மால் முடிந்தவரை நம் கையில் கிடைத்துள்ள வேதாகமத்தின் உண்மையான கருத்துகளைக் கண்டறியவேண்டும் என்ற நோக்கத்தில்தான் “Truth seekers" என்ற இத்தளத்தில் நான் அறிந்த கருத்துகளை பதித்து விவாதத்திலும் ஈடுபட்டுவருகிறேன்.

ஆனால் உங்கள் நிபந்தனைப்படி வெளிப்படுத்தல் மட்டுமின்றி வேறு எந்த புத்தகத்தின் வசனங்களின் கருத்தையும் உங்களோடு விவாதிக்க எனக்குத் தகுதியில்லை. உங்கள் நிபந்தனையை மற்ற தள அன்பர்களும் தெரிவித்தால் அவர்களோடு விவாதிப்பதையும் நான் நிறுத்திக்கொள்வேன்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அன்பு அவர்களே!


தகுதி உண்டா இல்லையா என்பதல்ல வாதம், வெளிப்படுத்தல் புத்தகம் முழுக்க முழுக்க வித்தியாசமான அனேக காரியங்களுக்கு நேரடி அர்த்தம் எடுத்துக்கொள்ள முடியாத புத்தகம். ஆகையால் அதிலுள்ளவற்றை இன்னும் சற்று கவனமாக ஆராயவேண்டியுள்ளது. அந்த விதத்தில் என்னையும் சேர்த்துதான் எழுதினேன். உங்களின் மேலான பதிவுகளுக்கு எங்கள் வந்தனங்கள். நம் எல்லாருடைய நோக்கமும் வசனங்களை ஆராய்வது மட்டுமே. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. விவாதம் என்றாலே சற்று 'கார சாரம்' இருக்கத்தான் செய்யும்.



ஆனால் உங்கள் பின்வரும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.



//என்னைப் பொறுத்தவரை எனது கருத்து: இயேசுவின் சீஷர்கள் எவ்வாறு இயேசுவின் கட்டளையிட்டபடி, உலகமெங்கும் சென்று, சகல ஜாதிகளுக்கும் கிறிஸ்துவின் கற்பனைகளைப் போதித்து அவர்களை கிறிஸ்துவின் சீஷராக்கினார்களோ, அதேவிதமாக பின்னால் வந்த சீஷர்களும் சகல ஜாதிகளையும் கிறிஸ்துவின் சீஷராக்கவேண்டும் என்பதே.//


வேதம் தெளிவாக சொல்லுவது 'காதுள்ளவன் கேட்கக்கடவன்' என்பதே. மேலும் "பிதா ஒருவனை என்னிடத்தில் இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்" என்றும், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், 'சிறு மந்தை' என்றும் மிகத்தெளிவாக 'கிறிஸ்துவை' ஏற்றுக்கொள்ளப்போகிறவர்கள் 'மிகச்சிலரே' என்றும், உலகம் அவரை அறியாது என்பதால் அவரை பெற்றுக்கொள்ளாது என்றும்தான் வேதம் கூறுகிறது.

அதற்கு மாறாக, தேவ சித்தத்துக்கு எதிராக எல்லாரையும் 'சீஷராக்க' நாம் எடுக்கும் மனித முயற்சிகள் வீணாகப்போகிறது. இயேசுகிறிஸ்துவுக்கு முழுமையான சீஷனாக நமக்கே வாழ்நாள் போதாதபோது, நமக்கே இவ்வளவு குழப்பங்கள் உள்ளபோது மற்றவர்களை சீஷனாக்குவது எப்போது?

என் அனுமானப்படி நமக்கு இந்தக் கடைசி காலத்தில் வேத்த்தின்பால் இவ்வளவு ஈர்ப்புவரக் காரணம் அவரது சித்தமான போலிசபை 'பாபிலோன்' விழவேண்டும், உண்மையான சத்திய விரும்பிகள் அதைவிட்டு வெளியேறவேண்டும் என்பதால்தான்.

"கிறிஸ்தவம்" சிறந்த முறையில் வளருவது தேவ சித்தமல்ல, வேதாகமும் அதை போதிப்பதில்லை. அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்றுள்ளதே தவிர அனேகர் ஏற்றுக்கொள்வார்கள் என்று வசனம் சொல்லவில்லை. யாரையும் இரட்சிப்புக்குள் நடத்து நம்கையில் இல்லை. தேவசித்தம் மட்டும் பூரணமாக நிறைவேறும். இதில் நாம் பெருமை பாராட்ட ஒன்றுமேயில்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல ஒழுக்கம் கற்றுக்கொடுக்க்வும் நன்மைசெய்யவும் அநேகமாக எல்லாமதங்களும் போதிக்கின்றன.

கிறிஸ்துவையே அறியாத அனேக கிறிஸ்தவர்கள் மற்ற மார்க்கங்களில் இருக்கிறார்கள். சபைக்கும், உலகத்துக்கும் நமக்கு வித்தியாசம் தெரியாததால்தான் நம் 'பிரயாசங்கள்' எல்லாம் வீணாகப்போகின்றது.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//வெளிப்படுத்தல் வசனங்களை ஒருவசனம் கூட பாக்கியில்லாமல் நமக்கு விளக்கம் தரமுடியும் என்ற பட்சத்தில் மட்டுமே நாம் அதைப் பற்றி வியாக்கியானம் செய்ய இயலும்.//

//வெளிப்படுத்தல் புத்தகம் முழுக்க முழுக்க வித்தியாசமான அனேக காரியங்களுக்கு நேரடி அர்த்தம் எடுத்துக்கொள்ள முடியாத புத்தகம். ஆகையால் அதிலுள்ளவற்றை இன்னும் சற்று கவனமாக ஆராயவேண்டியுள்ளது. அந்த விதத்தில் என்னையும் சேர்த்துதான் எழுதினேன்.//

“இன்னும் கவனமாக ஆராயவேண்டியதுள்ளது” எனச் சொல்வதற்கும், “எல்லா வசனங்களுக்கும் விளக்கம் தரமுடியும் என்ற பட்சத்தில் மட்டுமே அதை வியாக்கியானம் செய்ய இயலும்” எனச் சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா? வார்த்தை பிரயோகங்களில் கவனம் வேண்டும்.

உங்கள் நிபந்தனை உங்களுக்கும் சேர்த்துதான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உங்கள் நிபந்தனை உங்களையும் சேர்த்து அனைவரையும் கட்டிப் போடத்தான் செய்கிறது. ஆனால் உங்கள் நிபந்தனைக்கு எதிராக நீங்களே நடக்கின்றீர்கள் என்பதை அறியுங்கள்.

வெளிப்படுத்தல் மட்டுமல்ல, வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களிலும் ஆங்காங்கே பல புரியமுடியாத வசனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் பலவற்றிற்கு மொழிபெயர்ப்பாளர்களின் பங்கும் உண்டு. இந்நிலையில் நாம் நம்மால் இயன்றவரை அவற்றை ஆராய்ச்சி செய்வதில் தவறில்லை. மாறாக, முழுவேதாகமும் புரிந்தால்தான் வசனங்களை வியாக்கியானம் செய்யலாம் என நினைத்தால் ஒரு வசனத்தையும் வியாக்கியானம் செய்யமுடியாது.

soulsolution wrote:
//நம் எல்லாருடைய நோக்கமும் வசனங்களை ஆராய்வது மட்டுமே.//

அப்படித்தான் நானும் நினைத்தேன், நினைக்கிறேன். ஆனால், உங்கள் நிபந்தனைதான் என் கைகளைக் கட்டிப்போட்டது.

soulsolution wrote:
//நம் எல்லாருடைய நோக்கமும் வசனங்களை ஆராய்வது மட்டுமே. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல.//

நீங்கள் எழுதியது எதுவும் என்னைப் புண்படுத்தவுமில்லை, உங்கள் எழுத்தில் புண்படுத்தக்கூடிய வாசகங்கள் இருப்பதாக தெரியவுமில்லை.

soulsolution wrote:
//விவாதம் என்றாலே சற்று 'கார சாரம்' இருக்கத்தான் செய்யும்.//

ஆம், இருக்கத்தான் செய்யும். ஆனால் நீங்கள் எழுதியதில் கார சாரம் எங்கே இருக்கிறது என தேடிப்பார்த்தேன். இதுவரை கிடைக்கவில்லை.

soulsolution wrote:
//2 வெள்ளாடுகள் என்று நான் எழுதியது உங்களை திருப்திப்படுத்தவே.//

உண்மையைக் கண்டறிவதுதான் இத்தளத்தின் நோக்கமும், எனது நோக்கமுமேயொழிய, யாரையும் திருப்திபடுத்துவதல்ல.

ஒருவரைத் திருப்தி படுத்துவதற்காக ஒரு ஒப்புதலை அறிவித்தால், உண்மையை எவ்வாறு காண இயலும்? மேலும், அதுவரை நாம் செய்த வாதமெல்லாம் வீணாகிவிடுமே?

என்னைத் திருப்தி படுத்தவதற்காக அந்த ஒப்புதலை நீங்கள் தந்ததாக கூறியதைப் படித்ததும், ஏதோ நேரம்போகாமல் உட்கார்ந்து இவ்விவாதத்தில் நான் கலந்து கொள்வதாக நீங்கள் கருதுவதுபோல் உள்ளது.

-- Edited by anbu57 on Wednesday 4th of November 2009 11:51:38 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard