kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள்!!


இயேசு கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள் (பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் உட்பட) பரலோகம் போக முடியுமா? (நான் தாவீதை பார்த்தேன், மோசேயை பார்த்தேன், எலியாவை பார்த்து பேசிவிட்டு வந்தேன், இப்பொழுது லேடஸ்டாக சமீபத்தில் மறைந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல ஊழியரையும் பார்த்தேன், போன்ற சத்தம் கேட்க தான் செய்கிறது. சரி இப்படி பட்ட தமாஷ் எல்லாம் விட்டு விட்டு என் கேள்விக்கு பதில் தாருங்கள்)!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

  அறியாமல் மரித்தவர்கள் வரிசை இன்னும் நீண்டு கொண்டு போகுது, குழந்தையாக மரித்தவர்கள், கற்பபையில் மரித்த குழந்தைகள், பிறந்தவுடன் மரித்தவர்கள், மரித்து பிறந்தவர்கள், Mentally Retarded, வேத வசனங்களையே கேள்விப்படாமல் மரித்தவர்கள், செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள், காலங்காலமாக காட்டில் வசிப்பவர்கள், ஆதிவாசிகள் இன்னும் பலர்..........

இன்றைய கிறிஸ்தவ வியாபிரிகளிடம் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கிறிஸ்தவ வியாபாரிகள் மட்டுமல்ல. ஒரு சில நூதன சுயநீதிப்போதகர்ளும் உண்டு. இன்றைக்கு கிறிஸ்துவை பிதாவாகிய தேவனென்று தேவதூஷணம் சொல்வோரும் இதில் அடங்குவர். இவர்கள் 'ஊழியம்' மக்களை 'நற்கிரியைகள்' செய்யவைத்து அவர்களை இரண்டாம் மரணத்திலிருந்து விடுவிக்கிறார்களாம். கிறிஸ்து வெறும் ஆதாமின் பாவத்தை மாத்திரம் மன்னித்திருக்கிறாராம். ஆகையால் ஆதாம் தவிர மற்றவர்கள் 'கிரியைகள்' மூலமாக மட்டுமே இரட்சிக்கப்படுவார்களாம்.



நீங்கள் பதித்துள்ள மற்றவர்கள், வேதம் தெரியாதவர்கள், ஒரு போதும் கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாதவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், குழந்தையாகவே இறந்து போனவர்கள், இவர்களுக்கெல்லாம் கீழ்கண்ட விதத்தில் நியாயத்தீர்ப்பு இருக்கலாம்.

எது சரி என்று தேவனது குணாதிசயத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.

1. இவர்களுக்கு நித்திய அழிவு. உயிர்த்தெழுதல் இல்லை.

2. உயிர்த்தெழுதல் உண்டு ஆனால் 'சடுதியில்', அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் மரணம்.

3.இவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு உயிரடைவார்கள், பின்பு இவர்கள் பூரண மனிதர்களாக (ஆதி ஆதாம்) மாற்றப்பட்டு, போதிக்கப்பட்டு, நீதியைக் கற்றுக்கொண்டு, நித்திய ஜீவனை மற்ற மனுக்குலத்தோடு பெற்று தேவன் மனிதனை உண்டாக்கிய நோக்கத்தின் திட்டத்தில் அங்கங்களாக இருப்பார்கள்!


மேலும் ஏதாவது வகைகள் இருந்தால் பதிக்கலாமே?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//இயேசு கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள் (பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் உட்பட) பரலோகம் போக முடியுமா?

அறியாமல் மரித்தவர்கள் வரிசை இன்னும் நீண்டு கொண்டு போகுது, குழந்தையாக மரித்தவர்கள், கற்பபையில் மரித்த குழந்தைகள், பிறந்தவுடன் மரித்தவர்கள், மரித்து பிறந்தவர்கள், Mentally Retarded, வேத வசனங்களையே கேள்விப்படாமல் மரித்தவர்கள், செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள், காலங்காலமாக காட்டில் வசிப்பவர்கள், ஆதிவாசிகள் இன்னும் பலர்..........

இன்றைய கிறிஸ்தவ வியாபிரிகளிடம் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.//


கிறிஸ்தவ வியாபாரிகள் இங்கு வந்து பதில் சொல்லமாட்டார்கள்.

உங்கள் கேள்விக்கு நான் பதில்செல்லும்முன், எனது ஒரு சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் ....

கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள் (பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் உட்பட) பரலோகம் போக முடியுமா என்பதுதான் உங்கள் கேள்வியா, அல்லது கிறிஸ்துவை அறியாமல் மரித்தவர்கள் (பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் உட்பட) நித்தியஜீவனைப் பெறமுடியுமா என்பது உங்கள் கேள்வியா?


-- Edited by anbu57 on Thursday 19th of November 2009 02:29:19 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

என் கேள்வி இவ்வுளவு தெளிவாக இருக்கும் போது நான் கேட்காத ஒன்றை ஏன் கேட்கிறீர்கள்? கிறிஸ்தவ வியாபாரிகள் இன்று பரலோகத்தில் ஆபிரகாமை பார்த்தேன், தாவீதை பார்த்தேன் என்று சொல்லுபவர்களுக்கு தான் இந்த கேள்வி. ஒரு வேளை நீங்களும் அப்படி ஒரு விசுவாசத்தில் இருந்தால் நான் கேட்ட கேட்ள்விக்கு மாத்திரம் பதில் தாருங்கள், நான் கேட்காத கேள்வி பிறகு பார்க்கலாம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//என் கேள்வி இவ்வுளவு தெளிவாக இருக்கும் போது நான் கேட்காத ஒன்றை ஏன் கேட்கிறீர்கள்? கிறிஸ்தவ வியாபாரிகள் இன்று பரலோகத்தில் ஆபிரகாமை பார்த்தேன், தாவீதை பார்த்தேன் என்று சொல்லுபவர்களுக்கு தான் இந்த கேள்வி. ஒரு வேளை நீங்களும் அப்படி ஒரு விசுவாசத்தில் இருந்தால் நான் கேட்ட கேட்ள்விக்கு மாத்திரம் பதில் தாருங்கள், நான் கேட்காத கேள்வி பிறகு பார்க்கலாம்.//


Sorry brother, உங்கள் கேள்வி “மிகமிகத்தெளிவாகத்தான்” இருக்கிறது; ஏதோ ஒரு காரணத்தால் என் மனதில் சந்தேகம் வந்ததால், அந்த சந்தேகத்தைக் கேட்டேன். என் சந்தேகத்திற்கான காரணத்தைச் சொல்லி விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம் எனக் கருதுகிறேன். எனவே “மிகமிகத்தெளிவான” உங்கள் கேள்விக்குப் பதிலைப் பார்ப்போம்.

அப்போஸ்தலர் 2:34-ல்  தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே எனப் பேதுரு கூறுகிறார். தவீது பரலோகத்திற்குப் போகவில்லை என்பதற்கு ஆதாரமாக, தாவீதின் கல்லறை (திறக்கப்படாமல்) அப்படியே இருப்பதை பேதுரு குறிப்பிடுகிறார் (அப். 2:29). எனவே உயிர்த்தெழுதலின் காலம் வரை யாரும் பரலோகத்திற்கு போகமுடியாது என்பது திட்டமாகத் தெரிகிறது.

அதாவது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் பழைய/புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் யாரும் இதுவரை பரலோகத்திற்குப் போகவில்லை என்பது நிச்சயம். இயேசுவின் 2-ம் வருகையை ஒட்டின உயிர்த்தெழுதலுக்குப்பின்தான், தகுதியுள்ளவர்கள் பரலோகம் போவார்கள். எனவே இந்நாட்களில் யாராவது நான் பரலோகம் சென்று அவரைப் பார்த்தேன் இவரைப் பார்த்தேன் எனச் சொன்னால் அது நிச்சயமாக பொய்தான்.

இனி, பரலோகத்திற்கு யார் செல்வார்கள் எனும் கேள்விக்குத் தொடர்பான வசங்களைப் பார்ப்போம். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பவன்/பிரவேசியாதவன் யார், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பவன்/பிரவேசியாதவன் யார், நித்தியஜீவனைப் பெறுபவன்/பெறாதவன் யார் எனும் கேள்விகளுக்கு வேதாகமம் நேரடியான பதில்களைச் சொல்கிறது (மத்தேயு 7:21; மாற்கு 9:47; 10:14,15; லூக்கா 6:20; 9:62; 13:28; 18:16,17,29,30; யோவான் 3:,3,5; அப். 14:22; 1 கொரி. 6:10; கலா. 5:19-21; எபே. 5:5; 2 தெச. 1:5; மத்தேயு 19:17,29; 25:46; லூக்கா 10:25-28; யோவான் 3:16,36; 5:24; 6:27,47,54; 12:25,50; 17:3; அப். 13:46; ரோமர் 2:7; 6:22; கலா. 6:8; 2 தெச. 1:10; 2 பேதுரு 5:1-11; 1 யோவான் 3:15)
(இத்தனை வசனங்கள் கூறப்பட்டுள்ளபோதிலும், எல்லோரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமுள்ளவராய் இருக்கிறார் என 1 தீமோ. 2:4 கூறுவதை மட்டும் சொல்லி, நம்மிடம் கிரியை இருந்தாலும் இல்லாவிட்டாலும், எல்லோரும் இரட்சிக்கப்பட்டு நித்தியஜீவனைப் பெற்றுவிடுவோம் என கனவு காண்கிற சிலர் உண்டு.)

பரலோகராஜ்யம்/தேவனுடைய ராஜ்யம்/நித்தியஜீவனில் யார் பிரவேசிப்பார்கள்/பிரவேசிக்கமாட்டார்கள் என்பதை வேதாகமம் தெளிவாகக் கூறியுள்ளபோதிலும், பரலோகத்தில் யார் பிரவேசிப்பார்கள் என்பதை நேரடியாகச் சொல்லியுள்ளதாக எனக்குத் தெரியவில்லை (தெரிந்தவர்கள் சொல்லவும்). ஆனால், பரலோகக் குடியிருப்பு சம்பந்தமான ஓரிரு விஷயங்களை பின்வரும் வசனங்களில் பவுல் கூறுகிறார்.

2 கொரி. 5:1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
பிலிப்பியர் 3:20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இவவசனங்கள் அடங்கிய நிருபங்களை பவுல் யாருக்கு எழுதினாரோ, அவர்களுக்கு மட்டுந்தான் பரலோகக் குடியிருப்பு எனக் கூறிவிடமுடியாது. பரலோகக் குடியிருப்பு யாருக்கு என்பதற்கான தகுதி பற்றி வேறு எந்த வசனமும் கூறியுள்ளதாக எனக்குத் தெரியவில்லை (தெரிந்தவர்கள் சொல்லவும்).

தம்முடைய சீஷரிடம் இயேசு பின்வருமாறு கூறினார்.

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

இயேசு இவ்வசனத்தை தமது 12 சீஷர்களுக்காக மட்டுந்தான் சொன்னார, அல்லது பொதுவான சீஷர்களுக்கு சொன்னாரா என்பது தெரியவில்லை (தெரிந்தவர்கள் சொல்லவும்).

ஒருவேளை இயேசுவின் சீஷர்கள் அனைவருக்கும் இயேசு இவ்வசனத்தைச் சொல்லியிருந்தால், அந்த சீஷன் எவ்வாறு இருக்கவேண்டும் எவ்வாறு இருக்கக்கூடாது என்பதைப் பின்வரும் வசனங்களில் இயேசு கூறுகிறார்.

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
யோவான் 8:31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
யோவான் 13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.
லூக்கா 14:26,27,33 யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

இயேசு தமது சீஷர்களுக்கு பரலோகத்தில் வாசஸ்தலம் உருவாக்கப் போவதாகச் சொல்வதால், அவருடைய சீஷராகும் வாய்ப்பைப் பெறாத பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்கு பரலோகத்தில் வாசஸ்தலம் கிடையாது எனக் கூறிவிடமுடியாது.

எது எப்படி இருந்தாலும், மனிதரில் யாரும் தற்போது பரலோகத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

anbu57 wrote:
எது எப்படி இருந்தாலும், மனிதரில் யாரும் தற்போது பரலோகத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.


எனக்கு ஒரு சந்தேகம்:

மத்தேயு 17:3 அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

மோசே உயிர்த்து எழாவிட்டால்  எப்படி அங்கு தோன்றி இயேசுவோடு சம்பாஷிக்க முடியும்.
 
சற்று விளக்குவீர்களா?  



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவ்ன்களும், காட்டு மிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகக் கண்டான். ....பின்பு அந்தக் கூடு வானத்துக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்12 ‍முதல் 16.



ஆக இந்த வசனப்படி எல்லா மிருகஜீவன்கள் கூட பரலோகம் போய்விட்டதா?

வாசிக்க யோவான்3:13. பரலோகத்துக்கேறினவன் ஒருவனுமில்லை!!!

தரிசனங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வாசிக்க மத்17:9 "இந்த தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார்"


மேலும் தேவன் பழைய ஏற்பாட்டில் யாருக்கும் உன்னைப் பரலோகம் கூட்டிச் செல்கிறேன் என்று வாக்குப் பண்ணவில்லை என்பதை நினைவில் கொள்க!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

பரலோகம் என்று ஒரே ஒரு இடம்தான் இருக்கிறது என்று கருதினால் அது தவறான கருத்து என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் சர்வவல்ல தேவன் ஒரே ஒரு பரலோகம் மட்டும்தான் வைத்திருக்கிறார் என்று கருத முடியுமா?
  
"என் பிதாவிடத்தில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு அதில் ஒன்றை உங்களுக்கு 
ஆயத்தப்படுத்த போகிறேன்" என்ற இயேசுவின் வார்த்தைப்படி 
 
பிதாவின் ஒவ்வொரு வாசஸ்தலமும் ஒரு பரலோகம்தான்!  அதில் ஒன்றே ஒன்றை அவர் இயேசுவுக்கு கொடுத்துள்ளார்.  அது தவிர இன்னும் அனேக வாசஸ்தலங்கள் (பரலோகங்கள்) உள்ளது என்றே நான் கருதுகிறேன். 
 
II இராஜாக்கள் 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
 
எலியா சுழல் காற்றில் பரலோகத்துக்கு ஏறிப்போனான் என்று வசனம் தெளிவாக  
சொல்லும்போது இயேசு  "பரலோகத்து ஏறியவன் ஒருவரும் இல்லை" என்று குறிப்பிடுகிறார். இங்கு இயேசு சொல்வது  வேறு இடம் எலியா போனது வேறு இடம் என்றே நான் கருதுகிறேன்.     
       


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote:
//எனக்கு ஒரு சந்தேகம்:
மத்தேயு 17:3 அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

மோசே உயிர்த்து எழாவிட்டால்  எப்படி அங்கு தோன்றி இயேசுவோடு சம்பாஷிக்க முடியும்.

சற்று விளக்குவீர்களா?//

வேதாகமத்தில் ஏனோக்கு, மோசே மற்றும் எலியா ஆகிய மூவரின் மரணங்கள் அல்லது எடுத்துக் கொள்ளப்படுதல் புதிரானவை. மோசேயின் சரீரத்தை தேவன் நேரடியாக அடக்கம் செய்தார் என்றும் அவரது கல்லறையை ஒருவரும் அறியார்கள் என்றும் உபாகமம் 34:6 கூறுகிறது. மோசேயின் சரீரம் சிலகாலம் தேவதூதனின் பொறுப்பில் இருந்தது என்பதற்கு யூதா 1:9 ஆதாரமாயுள்ளது. எனவே எப்படி 4 நாட்கள் கல்லறையில் இருந்த லாசருவின் சரீரத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டதோ, அதேவிதமாக தேவனின் பொறுப்பில் இருந்த மோசேயின் சரீரத்திற்கும் உயிர் கொடுக்கப்பட்டு தரிசனத்தில் காணப்பட வாய்ப்புள்ளது. எது எப்படி இருந்தாலும் இயேசுவின் காலம்வரை பரலோகத்திற்கு ஏறினவன் யாருமில்லை என்பது நிச்சயம் (யோவான் 3:13).

எனவே தரிசனத்தில் காணப்பட்ட எலியாவும் மோசேயும் நிச்சயம் பரலோகம் போயிருக்க மாட்டார்கள்.

வேதாகமத்தில் பரலோகம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள், பரலோகம், ஆகாயம், வானம் என்றெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன்.

2 ராஜா. 2:11-ல் எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் எனும் வாக்கியத்திலுள்ள பரலோகம் எனும் வார்த்தைக்கும், 2 சாமுவேல் 21:10-ல் ஆகாயத்துப் பறவைகள் எனும் சொற்றொடரில் ஆகாயம் எனும் வார்த்தைக்கும் ஒரே எபிரெய வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறே,     மத்தேயு 6:26-ல் ஆகாயத்துப் பறவைகள் எனும் சொற்றொடரிலுள்ள ஆகாயம் எனும் வார்த்தைக்கும், யோவான் 3:13-ல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை எனும் வாக்கியத்திலுள்ள பரலோகம் எனும் வார்த்தைக்கும் ஒரே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் ஆகாயமும் பரலோகமும் ஒன்றே எனக் கூறிவிடமுடியாது. பரலோகம் என்பது ஒரு unique palce. எப்படி தேவன், தேவர் எனும் வார்த்தைகள் பலரைக் குறிப்பிடுவதாக இருந்தாலும் ஒரே தேவனாக (unique) பரலோகப் பிதா மட்டும் இருப்பதைப்போல், பரலோகம் என்பதும் ஒரு unique palce தான். எப்படி ஒரு ஊரில் பலவீடுகள் உள்ளதோ அதைப் போல்தான் பரலோகத்திலுள் அநேக வாசஸ்தலங்கள் இருக்கும். அந்த வாசஸ்தலங்களைத்தான் இயேசு குறிப்பிடுகிறார்.

எலியா எந்த இடத்திற்குச் சென்றார் என்பது புதிர்தான். ஆனால் அவர் சென்ற இடம், எல்லாராலும் பொதுவாகப் பேசப்படுகிற, குறிப்பாக பரலோகத்தில் அவரைப் பார்த்தேன் இவரைப் பார்த்தேன் எனப் பேசப்படுகிற அந்த unique பரலோகமாக இருக்கமுடியாது என்பதே என் கருத்து.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

பூமி அல்லது தரையிலிருந்து மேலே உள்ள அனைத்துமே வானம்தான். அது 1சென்டிமீட்டராகவும் இருக்கலாம் பல்லாயிரம் ஒளிவருடங்கள் தூரமாகவும் இருக்கலாம். இயேசு கூறிய 'வாசஸ்தலங்கள்' இடத்தைக் குறிப்பதல்ல. அது பல்வேறு நிலைகளைக் குறிக்கிறது.


சபைக்க்கு சிங்காசனம் எனும் மேன்மையான ஆளும் நிலை, திரள்கூட்டத்துக்கு 'நின்று கொண்டிருக்கும்' நிலை, இவைகளையே கர்த்தர் குறிப்பிட்டார் என்று எண்ணுகிறேன்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard