kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரட்சிப்பு / Salvation!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
இரட்சிப்பு / Salvation!!


இரட்சிப்பு - Salvation

இரட்சிப்பு என்றால் என்ன? "இறுதி வரை நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்" என்கிறது வேதம். இதன் அர்த்தம் தான் என்ன. சகோ அன்பு கேட்டப்படி, அப்படி என்றால் நிலைத்திறாதவர்களின் நிலை என்ன? இந்த பகுதியில் நாம் ஆராயலாம்!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"இரட்சிப்பு" என்றாலே ஒரு அபாயத்திலிருந்து "காப்பாற்றப்படுதல்" ஆகும். 'மரணம்'(இல்லாமல் நிரந்தரமாக ஒழிந்து போதல்) என்ற மாபெரும் அபாயத்திலிருந்து 'காப்பாற்றப்படுவது'தான் வேதம் போதிக்கும் "இரட்சிப்பாகும்".



"இறுதிவரை நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்" என்பது இந்த சுவிசேஷ யுகத்தில் இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக, பவுலைப்போல ஓட்டத்தை முடிப்பவர்களுக்கு கிடைக்கப்போகும் பரலோக வாழ்வாகும். இவர்கள் ஆளுகைக்கு என்று தெரிந்துகொள்ளப்பட்ட 'சிறுமந்தை' ஆவார்கள். இவர்கள் மேல் 'இரண்டாம் மரணத்திற்கு' அதிகாரமில்லை, ஏனென்றால் 'சபைக்கு' நியாயத்தீர்ப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நம் so called ஊழியர்களுக்கு தாவீது பேசியதற்கும், பவுல் பேசியதற்கும் வித்தியாசம் தெரியவில்லை போல். ஆகவே தான் இருவரும் மரித்த பிறகு ஒரே இடத்திற்கு போவார்கள் என்கிறார்கள். பவுலின் ஒவ்வொரு முயற்சியும், அவர் இயேசு கிறிஸ்துவின் சாயலில் மறுரூபமாகவே இருந்தது (சபையின் இரட்சிப்பு). ஆனால் தாவீது, மீண்டும் இந்த பூமியிலேயே வருவதாக தான் பேசி யிருக்கிறான் (பூமியின் இரட்சிப்பு). நம்மவர்கள் தான் வலுக்கட்டாயமாக தாவீதை பரலோகத்தில் அனுப்புகிறார்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//"இறுதிவரை நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்" என்பது இந்த சுவிசேஷ யுகத்தில் இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக, பவுலைப்போல ஓட்டத்தை முடிப்பவர்களுக்கு கிடைக்கப்போகும் பரலோக வாழ்வாகும். இவர்கள் ஆளுகைக்கு என்று தெரிந்துகொள்ளப்பட்ட 'சிறுமந்தை' ஆவார்கள்.//

சகோ.ஆத்துமா அவர்களே!
தங்கள் கருத்துக்கு வசன ஆதாரம் தராதபோதிலும், தற்போதைக்கு தாங்கள் சொல்வதை சரியென வைத்துக் கொள்வோம்.
இறுதி வரை நிலைத்திருப்பவன் இரட்சிக்கப்பட்டு, ஆளுகைக்கு எனத் தெரிந்துகொள்ளப்படுவான் என்கிறீர்கள். அவ்வாறெனில், இறுதிவரை நிலைத்திராதவனின் கதி என்ன? இக்கேள்விக்குப் பதில்தான் தற்போது அவசியம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இறுதிவரை நிலைத்திராதவன், திரள் கூட்டத்தில் வருவான் அல்லது இந்த பூமியில் உயிர்த்தெழுந்து நீதி வாசம் செய்யப்போகும் பூமியில், நீதியின் சூரியனிடத்தில் நீதியை கற்று கொண்டு நித்திய ஜீவன் அடைவான்.

தேவன் அனைவருக்கும் நித்திய ஜீவன் தர தையாராக இருந்தாலும், நாம் தான் அது எப்படி என்று கேள்விகள் எழுப்புகிறோம்.

ஒரு கொலை குற்றவாளியை கூட எப்படியாவது தூக்கு ஏறாமல் முடிந்த மட்டும் காப்பாற்ற நினைக்கும் மனிதன் தேவ சாயலில் இருப்பதால் தான். ஆக நமக்கே இப்படி ஒரு குணம் இருக்கிறதே, தன் சொந்த குமாரனை இந்த ஆதாமின் சந்ததிகளுக்காக கொடுத்த தேவனிடத்தில் நம் பேரில் எத்துனை அன்பு இருக்கும் என்று என்னி பாருங்கள்.

எல்லா மனிதர்களுமே பிழைக்கும் படியாக தான் அவர் தன் சொந்த குமாரனிடத்தில் பலியை ஏற்றுகொண்டார். தேவன் பிரியமாக இருக்கிறார், ஆனால் நாம் தான் இல்லை அது எப்படி சாத்தியம் என்கிற சர்ச்சையை எழுப்புகிறோம்.  ஏனென்றால், எல்லோரும் பிழைக்க வேண்டும் என்கிற அன்பு நம்மிடத்தில் இல்லை போல்.

காலையில் வேலைக்கு வந்தவனும் மாலையில் வேலைக்கு வந்தவனும் ஒரே கூலியை பெருகிறார்களே, அப்பொழுது பொறாமையினால் கேட்க்கப்பட்ட கேள்விக்கு தோட்டக்காரர் சொன்ன அதே பதில் தான் இங்கும் பொருந்தும். அவர் அனைவருக்கும் நித்திய ஜீவன் கொடுக்கிறார், போறாமை நிறைந்தவர்கள், அன்பு இல்லாதவர்கள் அது எப்படி சாத்தியம் என்று பிரசங்கம் செய்கிறார்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//ஒரு கொலை குற்றவாளியை கூட எப்படியாவது தூக்கு ஏறாமல் முடிந்த மட்டும் காப்பாற்ற நினைக்கும் மனிதன் தேவ சாயலில் இருப்பதால் தான். ஆக நமக்கே இப்படி ஒரு குணம் இருக்கிறதே, தன் சொந்த குமாரனை இந்த ஆதாமின் சந்ததிகளுக்காக கொடுத்த தேவனிடத்தில் நம் பேரில் எத்துனை அன்பு இருக்கும் என்று என்னி பாருங்கள்//

கொலைக் குற்றவாளியைக் காப்பாற்ற நினைப்பது அநீதியாகும். குற்றஞ்செய்தவனுக்கு இரங்காதே என்றுதான் தேவன் கட்டளையிட்டார் (உபாகமம் 19:12-21 படித்துப் பார்க்கவும்).

தேவன் இரக்கமுமுள்ளவர், நீதியுமுள்ளவர். குற்றவாளியைக் குற்றமற்றவனாக அவர் விடுவதிலை (யாத். 34:7). தன் பாவங்களை உணர்ந்து அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவன் மட்டுமே இரக்கம் பெறுவான் (நீதி. 28:13).

இயேசு தம்மை சிலுவையிலறைந்தவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் ஜெபித்ததன் காரணம்: அவர்கள் தாங்கள் செய்தது இன்னதென அறியாதிருந்ததே.

bereans wrote:
//தேவன் அனைவருக்கும் நித்திய ஜீவன் தர தயாராக இருந்தாலும், ... //

இக்கருத்து வேத வசனத்துக்கு எதிரான கருத்தாகத் தோன்றுகிறது.

அனைவரும் நித்தியஜீவனைப் பெறவேண்டுமென்பதுதான் தேவனின் விருப்பம்/சித்தம். ஆனால் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமே அவர் நித்திய ஜீவனைத் தருவார்.

மத்தேயு 25:41 அப்பொழுது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து மனுஷகுமாரன்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்பார்.

நித்திய அக்கினி எப்படிப்பட்டது என்ற விவாதம் அவசியமில்லை. ஆனால் அது பிசாசுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டதாக இருப்பதால், அது நித்தியஜீவனுக்கு நேராகக் கொண்டு செல்லாது என்பது நிச்சயம். எனவே தேவன் அனைவருக்கும் நித்திய ஜீவனைத் தர தயாரில்லை என்பதே உண்மை.

தவறான கருத்தைச் சொல்லி, பிறருக்கு இடறலாக இருந்துவிடாதீர்கள், ஜாக்கிரதை சகோதரரே.

மத்தேயு 25:31-46 வசனங்களில் மனுஷகுமாரனுக்கு இடதுபுறத்தில் நின்றவர்கள் விபசாரம், கொலை, களவு, பொய் போன்ற பெரும் பாவங்களைச் செய்தவர்கள் என மனுஷகுமாரன் கூறவில்லை. சிறுமைப்பட்டவர்களுக்கு தேவையான உதவியைச் செய்யாதவர்கள் என்று மட்டுமே கூறுகிறார்.

மாத்திரமல்ல, அவர்கள் கிறிஸ்துவை நன்றாக அறிந்தவர்களாகவும் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவைப் பார்த்து ஆண்டவரே என அழைத்து கேள்வி கேட்பதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே கிறிஸ்துவையும் அவரது போதனையையும் நன்கறிந்துங்கூட, எளியோர் மீது இரக்கமின்றி, அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைச் சந்தியாமல் ஆடம்பரமாக பொன்னாபரணங்களைப் போட்டுக்கொண்டு, விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு சம்பிரமமாக வாழ்கிற (போலிக்) கிறிஸ்தவர்கள் அனைவரும் நித்தியஜீவனைப் பெறமாட்டார்கள் என்பது நிச்சயம்.

நான் சுயமாக எதையும் சொல்லவில்லை. வசனம் சொல்வதைத்தான் சொல்கிறேன். நீங்கள் ஒவ்வொரு வசனத்திற்கும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்து, நாம் எப்படிப்பட்ட ஜீவியம் வாழ்ந்தாலும் தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்து விடுவார், அதற்காகத்தான் இயேசுவை பலி கொடுத்தார் எனக் கூறினால், மற்றவர்களுக்கு இடறலாகிவிடுவீர்கள். இடறல் செய்கிறவனுக்கான ஆக்கினை நீங்கள் அறிந்ததுதானே?

bereans wrote:
//காலையில் வேலைக்கு வந்தவனும் மாலையில் வேலைக்கு வந்தவனும் ஒரே கூலியை பெருகிறார்களே//

ஆம், உண்மைதான். வேலை செய்தவர்களில் காலையில் வந்தவனும் மாலையில் வந்தவனும் ஒரே கூலியைப் பெறுவார்கள்தான். ஆனால், வேலை செய்யாதவர்கள் கூலியைப் பெறமாட்டார்கள்.

அவ்வாறே நன்மை செய்தவர்களில், 30 வயதுக்குப் பின் செய்தவர்களும் 60 வயதுக்குப் பின் செய்தவர்களும் ஒரே கூலியான நித்தியஜீவனையே பெறுவார்கள். நன்மை செய்யாதவர்கள் நித்திய ஆக்கினையை அடையத்தான் போவார்களேயொழிய நித்தியஜீவனுக்குப் போகமாட்டார்கள் (மத்தேயு 25:41).

படிக்கவும்: ஆதியாகமம் 4:7

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

bereans wrote:
//தேவன் அனைவருக்கும் நித்திய ஜீவன் தர தயாராக இருந்தாலும், ... //

இக்கருத்து வேத வசனத்துக்கு எதிரான கருத்தாகத் தோன்றுகிறது." என்று எழுதிய‌ ச‌கோ அன்பு அவ‌ர்க‌ளே,

"This is good, and pleases God our Saviour, who WANTS (NOT HOPES) ALL (means unconditional) men to be SAVED and to come to a knowledge of the truth. For there is one God and one mediator between God and men, the man Christ Jesus, who gave himself as a ransom for ALL men - the testimony given in its proper time." 1 Tim 2:3-6. (பெரிய எழுத்தில் உள்ளது நான் எடுத்துக்கொண்ட உரிமை, வேதத்தில் அது சின்ன எழுத்தில் தான் இருக்கிறது. ப்ராக்கெட்க்குள் இருக்கும் வார்த்தைகள் என்னுடையது, அது வசனத்தில் இல்லை)

என் கருத்து வேதத்திலிருந்து நான் மேலே எடுத்து கான்பித்த வேத பகுதியிலிருந்து எழுதியதே. நீங்களும் இதை வாசித்திர்ப்பீர்கள் என்றே என்னுகிறேன். அதாவ‌து பிதாவாகிய‌ தேவ‌ன், எல்லா ம‌னித‌ர்க‌ளும் (எல்லாம் என்றால் எந்த‌ ஒரு க‌ன்டிஷ‌னும் இல்லாம‌ல் சொல்லியிருக்கிறார்) இர‌ட்சிக்க‌ ப‌டுவ‌து அவ‌ரின் சித்த‌மாக‌ இருக்கிற‌து என்கிறார். ஆங்கிள‌த்தில் HE WANTS என்று உள்ள‌து. ஒரு வேளை HE HOPES என்று இருந்திருந்தால், நான் எழுதிய‌து த‌வ‌றாக‌ இருந்திருக்க‌லாம். ஹீ வாண்ட்ஸ் என்றால் ஏன் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ வ‌ச‌ன‌ம் வினோத‌மாக‌ தெரிகிற‌து. எவ்வுள‌வு அழ‌கான‌ ஒரு வ‌ச‌ன‌த்தை, எவ்வுள‌வு ஆறுத‌லான‌ ஒரு வ‌ச‌ன‌த்தை கால‌ம் கால‌மாக‌ இப்ப‌டி சொல்லியே வ‌ந்திருக்கிறார்க‌ள் ந‌ம் ஊழிய‌ர்க‌ள்.

"அவ‌ர் விரும்புகிறார், ஆனால்; அத‌ற்கு எல்லோரும் விசுவாசிக்க‌ வேண்டுமாம்" அப்ப‌டி என்றால் எல்லா ம‌னித‌ர்க‌ளுக்காக‌வும் இயேசு கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌ம் வீனா? ஒன்றை இவ‌ர்க‌ள் ம‌ற‌ந்து போகிறார்க‌ள், "நம்முடைய (அதாவ‌து ச‌பைக்காக அவரை ஏற்றுக்கொண்டவர்கள்) பாவங்களை மாத்திர‌ம் அல்ல, சர்வலோகத்தின்  (அவ‌ரை ஏற்றுக்கொள்ளாத‌வ‌ர்க‌ள்) பாவ‌ங்க‌ளையும் நிவிர்த்தி செய்கிற‌ ப‌லியாயிருக்கிறார்." 1 யோவான்2:2. இந்த‌ வ‌ச‌ன‌ம் இரு கூட்டத்தையுமே சொல்லியிருக்கிற‌தே! இந்த‌ வ‌ச‌ன‌ம் வேறு என்ன‌ அர்த்த‌ம் கொண்டிருக்கிற‌து என்று விள‌க்கினால் ந‌ல‌மாக‌ இருக்கும்.

பாவ‌ம் இருப்ப‌தினால் தான் ம‌ர‌ண‌ம். பாவ‌ம் இல்லாம‌ல் (அதாவ‌து பாவ‌ங்க‌ளை த‌ன் மேல் சும‌ந்து தீர்த்த‌படியினால்) போனால், உயிர்த்தெழுத‌ல் உண்டு. இதில் அவ‌ரை விசுவ‌சிக்கிற‌வ‌ர்க‌ள் மேன்மையான‌ உயிர்த்தெழுத‌ல் (ப‌ர‌லோக‌ இர‌ட்சிப்பு) அவ‌ரை விசுவ‌சியாத‌வ‌ர்க‌ள் உயிர்த்தெழுவார்க‌ள் (பூமியில் இரட்சிப்பு) ஏனென்றால், அவ‌ர்க‌ளுக்காக‌வும் தான் இயேசு கிறிஸ்து இர‌த்த‌ம் சிந்தினாரே. இன்று இந்தியாவில் சுமார் 5% பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்க‌ள் என்று வைத்துக்கொண்டாலும், மீத‌ம் 95% பேர் (இதில் காந்தி, காம‌ராஜ் இன்னும் இவ‌ர்க‌ளை போல் ப‌ல‌ர்) இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ள‌வில்லை என்கிற‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌ பிசாசிற்கு ஆய‌த்த‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌ அந்த‌ எரி ந‌ர‌க‌த்திற்கு த‌ள்ளுண்டு போவார்க‌ளா? ஏன்? அப்ப‌டி என்றால் இவ‌ர்க‌ள் பாவ‌ங்க‌ள் ம்ண்ணிக்க‌ப்ப‌ட‌வில்லையா? அப்ப‌டி என்றால் இயேசு கிறிஸ்து ச‌ர்வ‌லோக‌த்தின் பாவ‌ங்க‌ளுக்காக‌ ம‌ரிக்க‌வில்லையா? ப‌தில் இருக்கா?ஒரு காரியம், தேவனின் சித்தம் நிறைவேறுமா, நிறைவேறாதா?


ச‌ரி முத‌ல்ல கீழ் உள்ளவற்றில் ந‌ர‌க‌த்திற்கு யார் போவார்க‌ள் என்று விளக்குங்க‌ள்:

1.  இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளாத‌வ‌ர்க‌ள்.
2.  இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டு ந‌ன்மை செய்யாத‌வ‌ர்க‌ள்.
3.  இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ள‌வில்லை, ஆனால் தாங்க‌ள் கான்பித்த‌ வ‌ச‌ன‌மாகிய‌ மத்தேயு 25:31-46ல் சொல்ல‌ ப‌ட்ட‌ எல்லா‌ ஒழுக்க‌ங்க‌ளும், ந‌ன்மைக‌ளும் செய்த‌வ‌ர்க‌ள்.

அன்பு57 எழுதிய‌து:
"தவறான கருத்தைச் சொல்லி, பிறருக்கு இடறலாக இருந்துவிடாதீர்கள், ஜாக்கிரதை சகோதரரே."

ந‌ன்றி ச‌கோத‌ர‌ரே. ஆனால் 1 யோவான் 2:2ன் ப‌டி என் க‌ருத்து எந்த‌ வித‌த்திலும் த‌வ‌றான‌து இல்லை என்ப‌து என் வாத‌ம். கிறிஸ்து இந்த‌ பூமிக்கு ஏன் வ‌ந்தார் என்று தெரியாத‌வ‌ர்க‌ள், நான் சொன்ன‌ க‌ருத்த‌ த‌வ‌று என்று எடுத்து கொள்கிறார்க‌ள். ஆனால் கிறிஸ்து இயேசு "தேவ‌னின் கிறுபையால் ஒவ்வொவொர்ய் ம‌னுஷ‌னுக்காக‌வும் ம‌ர‌ண‌த்தை ருசி பார்த்தார்" என்கிற‌து எபி. 2;9. இதில் இன்றைய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் சொல்லும் எந்த‌ ஒரு conditional statement கிடையாது. அவ‌ர் எல்லாருக்காக‌வும் ம‌ர‌ண‌த்தை ருசி பார்த்தார் என்றால், அனைவ‌ரும் அதின் ப‌ல‌னை அடைவார்க‌ள். "நீதிமானும், அநீதிமானும் உயிர்த்தெழுவார்க‌ள்" என்கிற‌து வேத‌ம் அப். 24:15ல். அப்ப‌டி என்றால் இதுவும் சும்மா தானா.

எல்லாருக்கும் அவ‌ர் ஜீவ‌னை த‌ரும்ப‌டியாக‌ அவ‌ருக்கு சித்த‌மில்லை என்று என்னை எச்ச‌ரிக்கை செய்தீரே, ச‌கோத‌ர‌ரே,

"ஆகையால் ஒரே மீறுத‌லினாலே எல்லா ம‌னுஷ‌ருக்கும் ஆக்கினைக்கு ஏதுவாக‌ தீர்ப்பு உண்டான‌துபோல், ஒரே நீதியினாலே எல்லா ம‌னுஷ‌ருக்கும் ஜீவ‌னை அளிக்கும் நீதிக்கு ஏதுவான‌ தீர்ப்பு உண்டாயிற்று" இந்த‌ வ‌ச‌ன‌ம் தாங்க‌ள் வாசித்த‌தே கிடையாதா?

நீங்க‌ள் ஆதாமின் பாவ‌த்தை ஏற்றாலும், ஏற‌காம‌ல் போனாலும், ம‌ர‌ண‌ம் நிச்ச‌ய‌ம். ஏதோ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் ஆதாமை தெரிந்து வைத்திருக்கிறார்க‌ள், அவ‌ர்க‌ள் ம‌ரிப்ப‌தில் தானே நியாய‌ம், ஏன் இதை ஏற்காத‌வ‌ர்க‌ளும் ம‌ரிக்கிறார்க‌ள்? அப்ப‌டியே இயேசு கிறிஸ்து என்கிற‌ ஒருவ‌ரால் எல்லா ம‌னுஷ‌ருக்கும் ஜீவ‌ன் கிடைக்கும் ப‌டியாக‌ தீர்ப்பு "உண்டாயிற்று". "உண்டாயிற்று" என்றால் என்ன‌ வென்று உங்க‌ளுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். ஏற்க‌ன‌வே தீர்ப்பான‌ ஒன்றை ந‌ம் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் மாற்ற‌ பிர‌யாசிப்ப‌தை இப்பொழுது நான் எச்ச‌ரிக்கிறேன் ச‌கோத‌ர‌ரே. தேவ‌ன் தீர்மானித்த‌ ஒன்றை ம‌னித‌ன் மாற்ற‌ இய‌லாது.

மேலும் நீங்க‌ள் ம‌த் 25ல் சுட்டி காட்டிய‌  அந்த‌ உவ‌மை (வெள்ளாடுக‌ளும், செம்ம‌றியாடுக‌ளும்), 1000 வ‌ருட‌ங்க‌ள் ஆட்சிக்கு பிற‌கு ந‌ட‌க்கும் ஒரு நியாய‌த்தீர்ப்பு ச‌ம்ப‌வ‌ம். அதாவ‌து உயிர்த்தெழுத‌ல் ந‌ட‌ந்து 1000 வ‌ருட‌ங்க‌ள் இயேசு கிறிஸ்துவின் ஆட்சி ந‌டைப்பெற்ற‌ பிற‌கு ந‌ட‌க்கும் காரிய‌ம். முத‌ல் ம‌ர‌ண‌த்திற்கு பிற‌கு அனைவ‌ருக்கும் உயிர்த்தெழுத‌ல் உண்டு என்கிற‌ க‌ருத்து வேத‌த்தில் இருந்து தான் எழுதியிருக்கிறேனெ அன்றி யாரையும் இட‌ற‌டைய‌ செய்யும் க‌ருத்து அல்ல‌.

 இயேசு கிறிஸ்து பிற‌ந்த‌ போது, "எல்லா ம‌னுஷ‌ர்க‌ளும் ச‌ந்தோஷ‌ம‌டையும்ப‌டியான‌ ஒரு ந‌ற்செய்தி" என்று தூத‌ர்க‌ள் அரிவித்தார்க‌ள், அது என்ன‌ எல்லா ம‌னுஷ‌ர்க‌ளுக்கும் ச‌ந்தோஷ‌மான‌ செய்தி. அது இது தான் ச‌கோத‌ர‌ரே, "எல்லா ம‌னுஷ‌ர்க‌ளும் இயேசு கிறிஸ்து என்கிற‌ க‌ர்த்த‌ர் சிந்திய‌ இர‌த்த‌த்தின் ப‌ல‌னால் உயிர்த்தெழுவார்க‌ள்" "ஆதாமுக்குள் எல்லோரும் (ஆதாமை தெரிந்தவ‌ர்க‌ளும், தெரியாத‌வ‌ர்க‌ளும்) ம‌ரிப்ப‌து போல் கிறிஸ்துவிற்குள் எல்லோரும் (அவ‌ரை விசுவ‌சிப்ப‌வ‌ர்க‌ளும், விசுவ‌சியாத‌வ‌ர்க‌ளும்) உயிர்த்தெழுவார்க‌ள். 1கொரி.15:22. என்ன‌ அவ‌ரை விசுவ‌சிப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ இடுக்க‌மான‌ வாச‌லை தெரிந்திருக்கிர‌வ‌ர்க‌ள், அதின் வ‌ழியே ந‌ட‌ந்தால், ப‌ர‌லோக‌ம் என்கிற‌ நித்திய‌ ஜீவ‌ன் உண்டு, இல்லாவிட்டால், விசால‌மான‌ பாதையில் போகிறோர் கூட‌ சேர்ந்து இந்த‌ பூமியில் உயிர்த்தெழுந்து, நீதியை க‌ற்று கொண்டு, ச‌முத்திர‌ ஜ‌ல‌ம் போல், தேவ‌னை அறிகிற‌ அறிவு, ச‌த்திய‌த்தை அறிகிற‌ அறிவை பெறுவார்க‌ள். (ஏசா. 9:11; 1 தீமோ. 2:4-6).


அன்பு57 எச்ச‌ரிக்கிரார்:

"நான் சுயமாக எதையும் சொல்லவில்லை. வசனம் சொல்வதைத்தான் சொல்கிறேன். நீங்கள் ஒவ்வொரு வசனத்திற்கும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்து, நாம் எப்படிப்பட்ட ஜீவியம் வாழ்ந்தாலும் தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்து விடுவார், அதற்காகத்தான் இயேசுவை பலி கொடுத்தார் எனக் கூறினால், மற்றவர்களுக்கு இடறலாகிவிடுவீர்கள். இடறல் செய்கிறவனுக்கான ஆக்கினை நீங்கள் அறிந்ததுதானே?"

ச‌கோத‌ர‌ரே, வேத‌ வார்த்தைக‌ள் இருபுற‌மும் க‌ருக்குள்ள‌ ப‌ட்ட‌ய‌ம். நாம் இன்னும் வேத‌த்தை ஆராய்ந்துக்கொண்டு தான் இருக்கிறோம். அவ‌ர் வ‌ரும் போது, எல்லாம் வெளிச்ச‌மாகும். அது வ‌ரையில் ந‌ம‌க்கு இருக்கிற‌ சிறிய‌ அறிவினால், தேவ‌னின் ஆவியை கொண்டு வேத‌த்தையும் அதில் உள்ள‌ தேவ‌னின் அன்பையும் ஆராய்வோம்.

ச‌ரி ந‌ம‌க்க்கு தேவ‌ கிருபையினால், ப‌டிக்க‌, பார்க்க‌, பேச‌ கேட்க‌ முடிகிற‌து. இவை எல்லாம் இல்ல‌த‌வ‌ர்க‌ள் எத்துனையோ இல‌ட்ச‌ம் பேர் இந்த‌ பூமியில் இருக்கிறார்க‌ள், இருந்து ம‌ரித்தும் போயிருக்கிறார்க‌ள். உங்க‌ள் க‌ருத்தின் ப‌டி அவ‌ர்க‌ள் எல்லாம் நித்திய‌ ஜீவ‌னை இழ‌ந்த‌வ‌ர்க‌ள் தானே. இந்த‌ வாழ்கையிலும் அவ‌ர்க‌ள் ஒன்றும் தெரிந்துக்கொள்ள‌ முடிய‌வில்லை, இனிமேலும் அவ‌ர்க‌ளுக்கு தெரிய‌ வாய்ப்பு இல்லை என்றால், இத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம்? இன்னும், அபார்ஷ‌னில் இற‌ந்து போன‌ குழ‌ந்தைக‌ள், நினைவு வ‌ருவ‌த‌ற்குள் முன்னால் இற‌ப்போர், இவ‌ர்க‌ள் க‌தி எல்லாம், பார‌ம்ப‌ரிய‌மாக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் சொல்லி வ‌ரும் ந‌ர‌க‌ம் தானா? ஏனென்றால், இவ‌ர்க‌ள் தான் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளாத‌வ‌ர்க‌ள் தானே. நாத்தீக‌ர்க‌ளுக்கு இருக்கும் அன்பு கூட‌ ந‌ம் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு இல்லாம‌ல் போன‌து தான் ஆச்ச‌ரிய‌ம்.

அன்பு57 எழுதுகிறார்:
"இயேசு தம்மை சிலுவையிலறைந்தவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் ஜெபித்ததன் காரணம்: அவர்கள் தாங்கள் செய்தது இன்னதென அறியாதிருந்ததே."

உங்க‌ளுக்கு தெரியுமா, இயேசு கிறிஸ்து இப்ப‌டியாக‌ ஜெபித்தும், அந்த‌ ஜெப‌ம் அந்த‌ கால‌க்க‌ட்ட‌த்தில் கேட்க‌ப‌ட‌வில்லை, ஏனென்றால், சுமார் 70 ADயில் அந்த‌ இஸ்ராயேல் நாடு முழுவ‌தும் இர‌த்த‌ம் ஆறாக‌ ஓடிய‌து. யூத‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும் சித‌ரிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். ஆனால் தேவ‌னின் ஆதீன‌த்தில் அவ‌ர்க‌ள் இயேசு கிறிஸ்துவின் ஜெப‌த்திற்கு ப‌தில் பெறுகிறார்க‌ள், அது தான் அந்த‌ உயிர்த்தெழுத‌ல்.

ஆக‌ எல்லோரும் இயேசு கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌த்தின் முழு ப‌ய‌ன் அடைவார்க‌ள், எல்லோரும் உயிர்த்தெழுவார்க‌ள். ந‌ம் கிறிஸ்த‌வ‌ பிர‌ச‌ங்கிமார்க‌ள் சொல்லுவ‌து போல், இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌ர‌லோக‌த்திற்கும், அவ‌ரை ஏற்காத‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌த்திற்கும் சென்று விட்ட‌ல், இயேசு கிறிஸ்துவும் ச‌பையும் வ‌ந்து 1000 வ‌ருட‌ம் யாரை தான் ஆண்டு, யாருக்கு தான் நீதியை க‌ற்று த‌ருவார்க‌ள்? ப‌தில் தாருங்க‌ள்?

ஒருவ‌ரை ஒருவ‌ர் எச்ச‌ரிப்ப‌தும் குற்ற‌ப்ப‌டுத்துவ‌தும் இந்த‌ விவாத‌ங்க‌ளின் நோக்க‌ம் இல்லை, மாறாக‌ விஷ‌ய‌ங்க‌ளை ப‌கிர்ந்துக்கொண்டு, தேவ‌ அன்பில் வ‌ள‌ர‌வே இந்த‌ விவாத‌ங்க‌ள்.

வேதத்தை ஆறாய வேண்டும் என்றால், நம் பாரம்பரியமான கோட்பாடுகளை விட்டு வந்தால் தான் சாத்தியம். மார்ட்டீன் லூத்தர் அன்று போப்பிடம் கேள்விகளை கேட்காமல் இருந்திருந்தால் இன்று அனைவரும் ரோமன் கத்தோலிக்க சபைகளாகவே இருந்திருப்போம். அன்று மார்ட்டீன் லூத்தர் சொன்னது ஒரு வேளை பெரும்பாளுமானோருக்கு கோபத்தை கொண்டு வந்திருக்கலாம், ஆனால் சத்திய வசனம் இப்படியும் சொல்லியிருக்கிறதா என்கிற யோசனையை கொண்டு வந்தது அல்லவா. இது எல்லா காலங்களிலும் நடக்கும் ஒரு காரியம் தான், மார்ட்டீன் லூத்தருக்கு முன்னே, டிண்டேல், விக்லிஃப் போன்றவர்கள் இன்னும் அநேகர் சத்தியம் சொன்னதால் சத்துரு ஆனார்கள், அவர்கள் சொன்னது அன்றைய கிறிஸ்தவம் சொல்லி வந்ததற்கு மாற்றாக இருந்தது. அப்படியே தான் இன்று வரை தொடருகிறது. பாரம்பரியமாக ஒரு பொய்யை சொன்னால் கூட கேட்கபடுவீர்கள், ஆனால் வேதத்தின் உண்மையை சொன்னல், சத்துரு ஆவீர்கள். இதுவும் உண்மை.

தொட‌ர்ந்து ப‌தியுங்க‌ள், ஆனால் நான் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு ப‌திலுட‌ன்.



-- Edited by bereans on Friday 9th of October 2009 02:35:43 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ஆயிரம் முறை வாசித்தாலும் நமக்கு புரியவில்லை.





இந்த 'முதல் மரணத்தை எல்லா மனிதரும் அடைந்தே தீரவேண்டும் ஏனென்றால் எல்லாரும் பாவம் செய்கிறோம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து "உலகத்தின் பாவத்தை" சுமந்து 'தீர்த்ததனால்' பாவங்கள் முற்றிலுமாக மன்னிக்கப்பட்டதால் எல்லாரும் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியாகிறார்கள். அப்படி அவர் செய்திருக்காவிட்டால் எல்லாரும் 'மரணம்' என்ற நித்திய ஆக்கினையை, நிரந்தர அழிவை பெற்று மரணத்திலேயே நிலைத்திருந்திருப்பார்கள். உயிர்த்தெழுதல் என்ற ஒரு மஹத்தான விஷயம் ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே மரித்து தண்டனைக்குள் இருக்கும் ஒருவனை மீண்டும் 'உயிரோடு' எழுப்பி என்ன தண்டனை தருவது என்று அன்பு சகோதரர் விளக்கினால் நன்றாக இருக்குமே?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆதாமுக்கு நியமிக்கப்பட்டது ஆவிக்குறிய (ஆத்துமா!?) மரணம் தானே என்கிற‌ கேள்வி உங்கள் காதில் விழவில்லையா சகோ ஆத்துமா அவர்களே?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//ஒருவ‌ரை ஒருவ‌ர் எச்ச‌ரிப்ப‌தும் குற்ற‌ப்ப‌டுத்துவ‌தும் இந்த‌ விவாத‌ங்க‌ளின் நோக்க‌ம் இல்லை, மாறாக‌ விஷ‌ய‌ங்க‌ளை ப‌கிர்ந்துக்கொண்டு, தேவ‌ அன்பில் வ‌ள‌ர‌வே இந்த‌ விவாத‌ங்க‌ள்.//

சகோ.பெரியன்ஸ் அவர்களே!
மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது எனும் வசனத்தின்படிதான் (நீதி. 27:5) உங்களை எச்சரித்தேன். நாம் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள இங்கு விவாதிக்கும் விஷயங்களை பலரும் படிக்கின்றனர். அவர்களில் யாருக்காவது இடறலானால் அது அவர்களைப் பாதிப்பதோடு, இடறலுக்குக் காரணமானவர்களையும் பாதிக்கும் என்பதால் அன்போடு எச்சரித்தேன். அது என் கடமை என்றெண்ணிதான் செய்தேன்.

தொடர்ந்து விஷயங்களை விவாதிக்கும்முன் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம்.

காந்தி, காமராஜ் போன்ற இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள், அபார்ஷனில் இறந்த குழந்தைகள், நினைவு வருமுன் இறப்பவர்கள் எல்லாரும் பிசாசுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குள் செல்வார்கள், அல்லது நரகம் செல்வார்கள் என்ற கருத்தில் நான் ஏதாவது எழுதியுள்ளேனா? நான் எழுதியதை கவனமாக மற்றொருமுறை படியுங்கள்.

நான் எழுதியது இதுதான்:
//அனைவரும் நித்தியஜீவனைப் பெறவேண்டுமென்பதுதான் தேவனின் விருப்பம்/சித்தம். ஆனால் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமே அவர் நித்திய ஜீவனைத் தருவார்.//

கவனிக்க: கற்பனைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு. இயேசுவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு என நான் எழுதவில்லை. ஆனால் நீங்களோ நான் எழுதியதற்கு சம்பந்தம் இல்லாமல் பின்வருமாறு எழுதியுள்ளீர்கள்.

bereans wrote:
//இன்று இந்தியாவில் சுமார் 5% பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்க‌ள் என்று வைத்துக்கொண்டாலும், மீத‌ம் 95% பேர் (இதில் காந்தி, காம‌ராஜ் இன்னும் இவ‌ர்க‌ளை போல் ப‌ல‌ர்) இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ள‌வில்லை என்கிற‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌ பிசாசிற்கு ஆய‌த்த‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌ அந்த‌ எரி ந‌ர‌க‌த்திற்கு த‌ள்ளுண்டு போவார்க‌ளா? ஏன்? அப்ப‌டி என்றால் இவ‌ர்க‌ள் பாவ‌ங்க‌ள் மன்னிக்க‌ப்ப‌ட‌வில்லையா? அப்ப‌டி என்றால் இயேசு கிறிஸ்து ச‌ர்வ‌லோக‌த்தின் பாவ‌ங்க‌ளுக்காக‌ ம‌ரிக்க‌வில்லையா? ப‌தில் இருக்கா?ஒரு காரியம், தேவனின் சித்தம் நிறைவேறுமா, நிறைவேறாதா?//

நான் எழுதியதற்கு சம்பந்தமில்லாத ஒன்றை எழுதிவிட்டு, பதில் கேட்டால் நான் எப்படி தர முடியும்?

மத்தேயு 25:41-ல் இயேசு கூறியதைத்தானே நான் எடுத்துரைத்திருந்தேன்? அதற்கு மேலாக, இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பிசாசுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட எரிநரகத்துக்கு செல்வார்கள் என்ற கருத்தில் நான் எழுதியிருந்தால், அந்த வாசகங்களை தயவுசெய்து எடுத்துக்காட்டவும்.

நான் எழுதியது:
//அனைவரும் நித்தியஜீவனைப் பெறவேண்டுமென்பதுதான் தேவனின் விருப்பம்/சித்தம். ஆனால் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமே அவர் நித்திய ஜீவனைத் தருவார்.//

கவனிக்க: நித்தியஜீவனைத் தருவார் என்றுதான் எழுதியுள்ளேனேயொழிய உயிர்த்தெழுதலைத் தருவார் என நான் எழுதவில்லையே.

நான் எழுதியது முழுவதும் நித்திய ஜீவனைப் பெறுவது பற்றி. ஆனால், நீங்களோ அவற்றை உயிர்த்தெழுதல் பற்றியதாகப் புரிந்துகொண்டு எழுதியுள்ளீர்கள்.

நீங்கள் எழுதின மற்றுமொரு பகுதி:
//ந‌ம‌க்கு தேவ‌ கிருபையினால், ப‌டிக்க‌, பார்க்க‌, பேச‌ கேட்க‌ முடிகிற‌து. இவை எல்லாம் இல்லாத‌வ‌ர்க‌ள் எத்துனையோ இல‌ட்ச‌ம் பேர் இந்த‌ பூமியில் இருக்கிறார்க‌ள், இருந்து ம‌ரித்தும் போயிருக்கிறார்க‌ள். உங்க‌ள் க‌ருத்தின் ப‌டி அவ‌ர்க‌ள் எல்லாம் நித்திய‌ ஜீவ‌னை இழ‌ந்த‌வ‌ர்க‌ள் தானே.//

இக்கருத்தில் நான் எழுதின வாசகங்களை எடுத்துக்காட்டுங்கள் சகோதரரே!

மீண்டும் சொல்கிறேன், மத்தேயு 25:41-ல் இயேசு சொன்னதை அப்படியேதான் நான் கூறியுள்ளேனேயொழிய அவ்வசனத்தோடு எதையும் கூட்டவுமில்லை, குறைக்கவுமில்லை.

நீங்கள் எழுதின மற்றுமொரு பகுதி:
//ந‌ம‌க்கு தேவ‌ கிருபையினால், ப‌டிக்க‌, பார்க்க‌, பேச‌ கேட்க‌ முடிகிற‌து. இவை எல்லாம் இல்லாத‌வ‌ர்க‌ள் எத்துனையோ இல‌ட்ச‌ம் பேர் இந்த‌ பூமியில் இருக்கிறார்க‌ள், இருந்து ம‌ரித்தும் போயிருக்கிறார்க‌ள். உங்க‌ள் க‌ருத்தின் ப‌டி அவ‌ர்க‌ள் எல்லாம் நித்திய‌ ஜீவ‌னை இழ‌ந்த‌வ‌ர்க‌ள் தானே. இந்த‌ வாழ்கையிலும் அவ‌ர்க‌ள் ஒன்றும் தெரிந்துக்கொள்ள‌ முடிய‌வில்லை, இனிமேலும் அவ‌ர்க‌ளுக்கு தெரிய‌ வாய்ப்பு இல்லை என்றால், இத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம்? இன்னும், அபார்ஷ‌னில் இற‌ந்து போன‌ குழ‌ந்தைக‌ள், நினைவு வ‌ருவ‌த‌ற்குள் முன்னால் இற‌ப்போர், இவ‌ர்க‌ள் க‌தி எல்லாம், பார‌ம்ப‌ரிய‌மாக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் சொல்லி வ‌ரும் ந‌ர‌க‌ம் தானா?//

இயேசுவை அறியாமல் மரிக்கிற/மரித்த எவர்களைப் பற்றியும் நான் எழுதவில்லை. சுற்று வட்டாரத்தில் பல போதகர்களும் கிறிஸ்தவர்களும் பேசுபவற்றையெல்லாம் நான் சொல்வதாகக் கற்பனை செய்துகொண்டு தேவையற்றவிதமாய் எழுதியுள்ளீர்கள்.

இரட்சிப்பு என்ற தலைப்பில் நீங்கள் தொடங்கியுள்ள இந்த விவாதத்தில், இரட்சிப்பு பற்றிய எனது புரிந்து கொள்தலை எனது அடுத்த பதிவில் பதிக்கிறேன்; அதைப் படித்துவிட்டு நான் எழுதின கருத்துக்களுக்கு மட்டும் (சுற்று வட்டாரக் கருத்துக்களுக்கு அல்ல) பதிலளியுங்கள்.

சுற்று வட்டாரக் கருத்துக்களைத் தாராளமாகப் பதியுங்கள்; ஆனால் அவற்றை எனது கருத்துக்களாகக் கூறாதீர்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு57 எழுதியது:

"நான் எழுதியது இதுதான்:
//அனைவரும் நித்தியஜீவனைப் பெறவேண்டுமென்பதுதான் தேவனின் விருப்பம்/சித்தம். ஆனால் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமே அவர் நித்திய ஜீவனைத் தருவார்.//"

அதாவ‌து தேவ‌னுக்கு சித்த‌ம் இருக்கிறது, ஆனால் அந்த‌ சித்த‌ம் நிறைவே போவ‌தில்லை என்ப‌து நீங்க‌ள் எழுதிய‌திலிருந்து புரிந்துக்கொள்ள‌லாம், ஏனென்றால், பெரும்பாளுமானோர், இர‌ட்சிப்பை இழ‌ந்து போவார்க‌ள், ஏனென்றால், தேவ‌னோ, இயேசு கிறிஸ்துவோ யார் என்று தெரியாமல் இருப்ப‌வ‌ர்க‌ள் தான் பெரும்பாளுமானோர். ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டால் கூட‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் உல‌க‌ அள‌வில் 1/3 தான் இருக்கிரார்க‌ள். இதில் இந்த‌ ஒன்று க‌ற்ப‌னைக‌ளுக்கு கீழ் ப‌டிகிறார்க‌ள் என்று வைத்துக்கொள்வோம், மீத‌ம் இருக்கும் அந்த‌ இருவ‌ரும் என்ன‌ ஆவார்க‌ள் என்ப‌தை தான் கேட்க்கிறேன். நீங்க‌ள் நேர‌டியாக‌ சொல்ல‌வில்லை, ஆனால் உங்க‌ள் க‌ருத்திலிருந்து தான் கேள்வி கேட்கிறேன். வேத‌த்தை ஆறாய்ந்த‌ போது, அந்த‌ இருவ‌ருக்கும் இர‌ட்சிப்பு உண்டு என்கிற‌ ம‌கிழ்சிய‌ன‌ செய்தியை பெற்று கொண்டோம். இல்லை அந்தஅ ஒருவ‌ர் மாத்திர‌மே இர‌ட்சிக்க‌ப்ப‌டுவார் என்ப‌து த‌ங்க‌ளின் க‌ருத்து.

ச‌ரி அப்ப‌டி என்றால், தேவ‌னின் சித்த‌ம் நிறைவேறாம‌ல், தேவனிடத்தில் சேருவோர் என்னிக்கையை காட்டிலும், எதிராளியான‌ பிசாசிற்கு ஆய‌த்த‌ம் செய்ய‌ ப‌ட்ட‌ இட‌த்திற்கு தேவ‌ சாய‌லில் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ள் அதிக‌ என்னிக்கையில் போவார்க‌ளா? அதாவ‌து தேவ‌னால் முடிய‌வில்லை, பிசாசு ஜெயிக்கிறான் என்ப‌து வெளிப்ப‌டுகிற‌தே. இதில் என்ன‌ ந‌ற்செய்தி இருக்கிற‌து.

ரோம் 5:18 வாசித்தீர்க‌ளா. நான் என் வாத‌த்திற்கு வைத்த‌ எந்த‌ வ‌ச‌ன‌த்தையும் தாங்க‌ள் விள‌க்க‌வில்லையே.

அன்பு57 எழுதுகிறார்:
"நீங்கள் எழுதின மற்றுமொரு பகுதி:
//ந‌ம‌க்கு தேவ‌ கிருபையினால், ப‌டிக்க‌, பார்க்க‌, பேச‌ கேட்க‌ முடிகிற‌து. இவை எல்லாம் இல்லாத‌வ‌ர்க‌ள் எத்துனையோ இல‌ட்ச‌ம் பேர் இந்த‌ பூமியில் இருக்கிறார்க‌ள், இருந்து ம‌ரித்தும் போயிருக்கிறார்க‌ள். உங்க‌ள் க‌ருத்தின் ப‌டி அவ‌ர்க‌ள் எல்லாம் நித்திய‌ ஜீவ‌னை இழ‌ந்த‌வ‌ர்க‌ள் தானே.//

இக்கருத்தில் நான் எழுதின வாசகங்களை எடுத்துக்காட்டுங்கள் சகோதரரே"

இதை நீங்க‌ள் எழுதிய‌தாக‌ நான் சொல்ல‌வில்லை, மாறாக‌ இத‌ற்கு என்ன‌ ப‌தில் வைத்திருக்றீர்க‌ள் எனறு தான் கேட்டுள்ளேன்.

அன்பு57 எழுதுகிறார்:
"மீண்டும் சொல்கிறேன், மத்தேயு 25:41-ல் இயேசு சொன்னதை அப்படியேதான் நான் கூறியுள்ளேனேயொழிய அவ்வசனத்தோடு எதையும் கூட்டவுமில்லை, குறைக்கவுமில்லை."

நீங்க‌ள் வ‌ச‌ன‌த்தை கூட்டிய‌தாக‌வோ, குறைத்த‌தாக‌வோ, நான் எங்கும் எழுத‌வில்லை ச‌கோத‌ர‌ரே. அந்த‌ ப‌குதி ஒரு உவ‌மையாக‌ சொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌தை க‌வ‌னியுங்க‌ள் என்று தான் சொல்லுகிறேன். இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் 1000 வ‌ருட‌ அர‌சாட்சிக்கு பிற‌கு ந‌ட‌க்கும் நியாய‌த்தீர்ப்பை குறித்தான‌ உவ‌மை என்ப‌தை தான் சொல்லுகிறேன். அது உவ‌மையாக‌ எடுக்காவிட்டால், அங்கு வெள்ளை சிங்காச‌ன‌த்திற்கு இட‌து வ‌ல‌மும், ம‌னித‌ர்க‌ள் அல்லாம‌ல் வெள்ளாடுக‌ளும், செம்ம‌றியாடுக‌ளும் தான் நிற்கிறார்க‌ள், அப்ப‌டி என்றால் அவ‌ர்க‌ளுக்கா நியாய‌த்தீர்ப்பு ந‌ட‌க்கிற‌து?

அன்பு57 எழுதுகிறார்:
"நீங்கள் எழுதின மற்றுமொரு பகுதி:
//ந‌ம‌க்கு தேவ‌ கிருபையினால், ப‌டிக்க‌, பார்க்க‌, பேச‌ கேட்க‌ முடிகிற‌து. இவை எல்லாம் இல்லாத‌வ‌ர்க‌ள் எத்துனையோ இல‌ட்ச‌ம் பேர் இந்த‌ பூமியில் இருக்கிறார்க‌ள், இருந்து ம‌ரித்தும் போயிருக்கிறார்க‌ள். உங்க‌ள் க‌ருத்தின் ப‌டி அவ‌ர்க‌ள் எல்லாம் நித்திய‌ ஜீவ‌னை இழ‌ந்த‌வ‌ர்க‌ள் தானே. இந்த‌ வாழ்கையிலும் அவ‌ர்க‌ள் ஒன்றும் தெரிந்துக்கொள்ள‌ முடிய‌வில்லை, இனிமேலும் அவ‌ர்க‌ளுக்கு தெரிய‌ வாய்ப்பு இல்லை என்றால், இத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம்? இன்னும், அபார்ஷ‌னில் இற‌ந்து போன‌ குழ‌ந்தைக‌ள், நினைவு வ‌ருவ‌த‌ற்குள் முன்னால் இற‌ப்போர், இவ‌ர்க‌ள் க‌தி எல்லாம், பார‌ம்ப‌ரிய‌மாக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் சொல்லி வ‌ரும் ந‌ர‌க‌ம் தானா?//

இயேசுவை அறியாமல் மரிக்கிற/மரித்த எவர்களைப் பற்றியும் நான் எழுதவில்லை. சுற்று வட்டாரத்தில் பல போதகர்களும் கிறிஸ்தவர்களும் பேசுபவற்றையெல்லாம் நான் சொல்வதாகக் கற்பனை செய்துகொண்டு தேவையற்றவிதமாய் எழுதியுள்ளீர்கள்."

அன்புள்ள‌ ச‌கோதர‌ரே, நான் எழுதிய‌தில் "சுற்று வட்டாரத்தில் பல போதகர்களும் கிறிஸ்தவர்களும் பேசுபவற்றையெல்லாம் நான் சொல்வதாகக் கற்பனை செய்துகொண்டு தேவையற்றவிதமாய் எழுதியுள்ளீர்கள்." என்கிற‌ எந்த‌ வார்த்தையும் உங்க‌ளை குறித்து "தேவையற்றவிதமாய்" எழுத‌வில்லை என்று க‌ருதுகிறேன். அப்ப‌டி நான் எழுதிய‌து உங்க‌ளை தான் என்று நீங்க‌ள் நினைத்தீர்க‌ளானால், நான் ம‌ன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இர‌ட்சிப்பு:

1. தேவ‌ன் இந்த‌ பூமியில் ம‌னித‌ன் என்றென்றும் வாழும்ப‌டியாக‌ த‌ன் சாய‌லில் ப‌டைத்தார். (ஆதி. 1:27)
2. பாவ‌ம் செய்து அந்த‌ ஜீவ‌னை இழ‌ந்து ம‌ர‌ண‌த்தை (க‌வ‌ணிக்க‌வும், ம‌ர‌ண‌த்தை மாத்திர‌ம்) த‌ண்ட‌னையாக‌ பெற்று, சுமார் 4000 ஆண்டுக‌ளாக‌ ந‌ம்பிக்கை இல்லாம‌ல் ம‌ரித்துக்கொணடிருந்தான்.
3. சுமார் 2000 வ‌ருட‌ங்க‌ள் முன் தேவ‌னின் ஒரே பேறான குமார‌னான‌ இயேசு கிறிஸ்து என்கிற‌ க‌ர்த்த‌ர் வ‌ந்து, மீட்பை (இர‌ட்சிப்பை) உண்டு ப‌ன்னினார்.
4. இந்த‌ இர‌ட்சிப்பிற்கு இர‌ண்டு category உண்டு.
    (அ)  இயேசு கிறிஸ்து என்கிற‌ அந்த‌ இர‌ட்சிப்பின் நாம‌த்தை விசுவ‌சித்து, த‌ன் வாழ்நாள் முழுவ‌தும் த‌ன்னை ஜீவ‌ப‌லியாக‌ (consecrate) ஒப்புகொடுத்த‌வ‌ர்க‌ள். இயேசு கிறிஸ்துவின் வாக்கின் ப‌டியும், அப்போஸ்த‌ல‌ர்க‌ள் எழுதியிருக்கிற‌ப‌டியும், இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ஒரு மேண்மையான‌ உயிர்த்தெழுத‌ல், அதாவ‌து 1யோவான் 3:2ன் ப‌டி அவ‌ரின் (இயேசு கிறிஸ்துவின்) சாய‌லுக்கு மாறும் த‌குதி பெறுகிறோம்.
  (ஆ)  இயேசு கிறிஸ்து என்கிற‌ அந்த‌ இர‌ட்சிப்பின் நாம‌த்தை விசுவ‌சியாம‌ல் போவோருக்கும், த‌ங்க‌ளை ஜீவ‌ப‌லியாக‌ ஒப்புகொடுக்க‌ முடியாத‌வ‌ர்க‌ளுக்கும் இந்த‌ பூமியில் உயிர்த்தெழுத‌ல் உண்டு என்கிற‌து வேத‌ம் (அப். 24:15).

5.  ப‌ழைய‌ ஏற்பாட்டு நீதிமான்க‌ள் அல்ல‌து ப‌ழைய‌ ஏற்ப‌ட்டு கால‌த்தில் வாழ்ந்து மரித்த‌ (இயேசு கிறிஸ்து த‌ன்னை ப‌லியாக‌ கொடுப்ப‌த‌ற்கு முன்பு) ஒருவ‌ரும் ப‌ர‌லோக‌ வாக்குத்த‌த்த‌ம் இல்லாம‌ல் தான் இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் மீண்டும் இந்த‌ பூமியில் உயிர்த்தெழுந்து வ‌ருவார்க‌ள் என்றே ந‌ம்பிய‌வ‌ர்க‌ள். லாச‌ருவை உயிர்ப்பிக்க‌ போன‌ போது ம‌ரியாளும் இயேசு கிறிஸ்துவிட‌ம் இதை தான் சொல்லுகிறாள்.

6. இயேசு கிறிஸ்து வ‌ந்த‌ பின்பு தான் ஒரு சிறு கூட்ட‌த்தாருக்கு இயேசு சொன்ன‌ மாதிரி ஒரு சிறு ம‌ந்தைக்கு (லூக். 12:32) அப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு மேன்மையான‌ ராஜிய‌ம் வாக்க‌ளிக்க‌ப்ப‌டுகிற‌து. அந்த‌ நிலைக்கு போவோர் வெகு சில‌ரே. அவ‌ர்க‌ள் நிச்ச‌ய‌மாக‌ தேவ‌னால் முன்குறிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளே என்று தான் வேத‌ம் சொல்லிகிற‌து.

  ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் இந்த‌ பூமியில் உயிர்த்தெழுவார்க‌ள், ஏனென்றால் இயேசு கிறிஸ்து ச‌ர்வ‌லோக‌த்தின் பாவ‌ங்க‌ளுக்கு ப‌லியானார். அவ‌ர்க‌ளின் பாவ‌ங்க‌ளும் அவ‌ர் எடுத்துக்கொண்ட‌ப‌டியால் உயிர்த்தெழுத‌ல் ந‌ட‌க்கிற‌து, இந்த‌ பூமியில் வாழும் ப‌டியாக‌, நீதியை (தேவ‌னையும், ச‌த்திய‌த்தையும்) க‌ற்று கொள்ளும் ப‌டியாக‌.

ஏசா 35ம் அதிகார‌ம் இப்ப‌டி க‌ர்த்த‌ரால் மீட்க்க‌ப்ப‌ட்ட‌ அனைவ‌ரும் சீயோனில் (தேவ‌னின் ராஜ்ய‌த்தில்) அக்க‌ளிப்போடு வ‌ருவார்க‌ள் என்ப‌தை தான் வேத‌ம் சொல்லுகிற‌து. இது தான் ராஜ்ய‌த்தின் சுவிசேஷ‌ம் (ந‌ல்ல‌ செய்தி) என்று இயேசு கிறிஸ்து தொட‌ங்கி, அப்போஸ்த‌ல‌ர்க‌ள் வ‌ரை அனைவ‌ருமே பிர‌ச‌ங்கித்தார்க‌ள்.

எசேக் 37 இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு உயிர்த்தெழுத‌லை தான் தீர்க்க‌த‌ரிச‌னமாக‌ சொல்லியிருக்கிற‌து.

வாசியுங்க‌ள் 1 தீமோ 4:10.

இது தான் இர‌ட்சிப்பை குறித்தான‌ சார‌ம்ஷ‌ம். இதை குறித்து இன்னும் எழுத முய‌ற்சிப்பேன். ந‌ன்றி



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

உயிர்த்தெழுதல், ஜீவன், இரட்சிப்பு, நித்திய ஜீவன் இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவைகளாக உள்ளபோதிலும் அவற்றிற்கிடையே சில வித்தியாசங்களும் உண்டு.

அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள ஆதாமிலிருந்து வருவோம். இங்கு நான் குறிப்பிடும் வசனங்களின் மொழிபெயர்ப்பிற்கும் தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள மொழிபெயர்ப்பிற்கும் பெரிய வித்தியாசம் இருந்தால் மட்டும் அவற்றைக் குறிப்பிடும்படியும் சிறுசிறு வித்தியாசங்களை இருந்தால் அவற்றை விட்டுவிடும்படியும் (அல்லது தனியாக விவாதிக்கும்படியும்) வேண்டுகிறேன்.

தேவன் ஆதாமை மண்ணினால் உருவாக்கி, ஜீவசுவாசத்தை ஊதியதும் அவன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 1:7). ஆதாம் பெற்ற இந்த ஜீவன் நித்திய ஜீவனுமல்ல, சாகிற ஜீவனுமல்ல. ஏனெனில், நித்திய ஜீவனாயிருந்திருந்தால் அவன் மரித்திருக்கமாட்டான்; சாகிற ஜீவனாயிருந்திருந்தால், நன்மை/தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிடும் நாளில் நீ சாகவே சாவாய் என தேவன் சொல்ல வேண்டிய அவசியமில்லை. (சாகிற ஜீவனையுடையவன் எப்படியும் ஒரு நாளில் சாகத்தானே வேண்டும்?)

இப்படி நித்திய ஜீவனுமல்லாத, சாகிற ஜீவனுமல்லாத ஒரு ஜீவனைப் பெற்றிருந்த ஆதாம், தோட்டத்தின் நடுவிலுள்ள மரங்களில் நன்மை/தீமை அறியத்தக்க கனியைச் சாப்பிட்டால், அவன் சாகிற ஜீவனைப் பெற்றுவிடுவான்; மாறாக, ஜீவவிருட்சத்தின் கனியைச் சாப்பிட்டால் அவன் நித்தியஜீவனைப் பெற்றுவிடுவான் (ஆதி. 3:22).

இவ்விரு உண்மைகளில், முதல் உண்மையை மட்டும் தேவன் ஆதாமிடம் கூறியிருந்தார். அதாவது, நன்மை/தீமை அறியத்தக்க கனியைச் சாப்பிடுவதால் வரும் விளைவை மட்டும் தேவன் ஆதாமிடம் கூறியிருந்தார்.

அதைக் கூறிவிட்டு, ஆதாம் என்ன செய்யப்போகிறான் என்பதை தேவன் கவனித்துக் கொண்டிருந்தார். சாத்தான் ஆதாமைச் சோதிக்க முயலுவான் என்பது தேவனுக்குத் தெரியும். அச்சோதனையில் வெல்வதும் தோற்பதும் ஆதாமைப் பொறுத்ததாக இருந்தது.

ஒருவேளை சோதனையில் ஆதாம் வென்றிருந்தால், அவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனியைப் பரிசாகக் கொடுத்து, அதன்மூலம் நித்திய ஜீவனைக் கொடுக்கவேண்டும் என்பது தேவனின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.

ஒருவேளை சோதனையில் ஆதாம் தோற்றுவிட்டால், அவன் இழந்துபோன ஜீவனை இயேசு கிறிஸ்துவின் மீட்பின் மூலம் மறுபடியும் கொடுக்கவேண்டும் என்பதே தேவனின் திட்டம்.

ஆனால் ஆதாம் சோதனையில் தோற்றான், அதன் விளைவாக ஜீவனை இழந்தான். அவன் மட்டுமின்றி அவன் சந்ததியாராகிய நாமும் ஜீவனை இழந்தோம்.

ஆதாமும் அவன் சந்ததியும் ஜீவனை இழந்ததால், இயேசுவின் மீட்பின் மூலம் எல்லோருக்கும் ஜீவனைக் கொடுக்கும் தேவதிட்டம் செயல்படத் துவங்கியது.

இயேசுவின் இந்த மீட்பு (ஒருவர் விடாமல்) எல்லோருக்கும் ஜீவனைக் கொடுப்பதாக இருந்ததால்தான், இயேசுவின் பிறப்பு எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிற நற்செய்தியாக இருந்தது/இருக்கிறது (லூக்கா 2:10).

நாம் (சோதனையில் வென்று) ஜீவவிருட்சத்தின் கனியைப் பெற்று, அதைச் சாப்பிட்டு நித்திய ஜீவனைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டவர்கள். ஆனால் முதல் மனிதனான ஆதாம் சோதனையில் தோற்றதால், அவனோடுகூட நாம் அனைவரும் இருக்கிற ஜீவனையும் இழந்துபோனோம். இழந்துபோன இந்த ஜீவனைப் பெற்றதால்தான், ஜீவவிருட்சத்தைப் பெறுவதற்கான சோதனையைச் சந்தித்து, அதில் வெற்றிபெற்று, ஜீவவிருட்சத்தின் கனியைப் பெற்று, அதைச் சாப்பிட்டு, நித்தியஜீவனைப் பெறமுடியும்.

எனவே தற்போதைய நிலையில் ஆதாமிலிருந்து இவ்வுலக மனிதர்கள் அனைவரும் நித்தியஜீவனைப் பெறவேண்டுமெனில், ஆதாமின் மீறுதலால் இழந்துபோன ஜீவனை முதலில் பெறவேண்டும். அதன் பின்னர்தான் நாம் நித்தியஜீவனைப் பெறுவோமா இல்லையா என்பது தீர்மானமாகும்.

நித்தியஜீவனை நாம் எவ்வாறு பெறமுடியும்?
நித்தியஜீவனைப் பெறவேண்டுமெனில் இயேசுவை விசுவாசிப்பதோடு கற்பனைகளின்படி நடக்கவும்வேண்டும் என பல வேதவசங்கள் கூறுகின்றன (மத்தேயு 25:46; லூக்கா 10:25-28; யோவான் 5:24,39; 12:50; 17:3; ரோமர் 2:7; 6:22; கலா. 6:8; 2 பேதுரு 1:10,11).
வேறுவிதத்தில் சொல்வதென்றால், ஜீவவிருட்சத்தின் கனியைச் சாப்பிடுவதாலும் நித்திய ஜீவனைப் பெறமுடியும் எனக் கூறலாம். ஆனால் ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்?

வெளி. 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

அடுத்த பதிவில் தொடர்கிறது ...

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

முந்தின பதிவின் தொடர்ச்சி ...

ஆம், கற்பனைகளின்படி நடந்தால்தான் ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரத்தைப் பெறமுடியும், கனியைப் பறித்து சாப்பிட முடியும். 

எனவே நித்திய ஜீவனைப் பெறுவதில் 2 படிகள் உள்ளன. 1. ஆதாமால் இழந்த ஜீவனை இயேசுவின் மூலம் பெறவேண்டும், 2. கற்பனைகளின்படி நடக்கவேண்டும்.

முதல் படியில் ஏறாமல் 2-வது படிக்கு ஏறமுடியாதென்பதால், நாம் என்னதான் நற்கிரியைகளைச் செய்தாலும், இயேசுவின் மூலம் கிடைக்கிற ஜீவன் எனும் முதல்படி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

அதேவேளையில், இயேசுவின் மூலம் ஜீவனைப் பெற்றாலும், நற்கிரியைகளைச் செய்தல் எனும் 2-ம் படியில் ஏறினால்தான் நித்தியஜீவனைப் பெறமுடியும். முதல் படியில் ஏறுவது நம் கையில் இல்லை; இயேசுவின் கையில்தான் உள்ளது. ஆனால் அதற்கான செயலை இயேசு செய்து முடித்துவிட்டார். எனவே உலகில் அனைவரும் இயேசுவின் மூலம் ஜீவனைப் பெற்றுவிடுகின்றனர். அதைத்தான் உயிர்த்தெழுதல் என பல வேத வசனங்கள் கூறுகின்றன, நீங்களும் அவ்வசனங்களை எடுத்துக் காட்டித்தான் எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் என மீண்டும் மீண்டும் கூறியுள்ளீர்கள்.

இதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. (வசனம் சொல்வதை எப்படி மறுக்க முடியும்?)

ஆனால் 2-ம் படியில் ஏறுவதற்கு நற்கிரியைகளை நாம் செய்யவேண்டும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் கூறினேன்/கூறுகிறேன்.

இயேசுவின் புண்ணியத்தில், முதல் படியில் நாம் அனைவரும் ஏற்றப்பட்டுவிடுவோம், அதாவது அனைவரும் ஜீவனைப் பெற்றுவிடுவோம், அல்லது உயிர்த்தெழுந்துவிடுவோம். இதில் காந்தி, காமராஜர், இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் என அனைவரும் அடங்குவர்.

இவ்வாறு ஜீவனைப் பெற்ற (அதாவது உயிர்த்தெழுந்த) நம் நிலை, ஆதாம் கனியைச் சாப்பிடுவதற்கு முந்தின நிலைக்குச் சமமாக இருக்கும். அதாவது நித்திய ஜீவனுமல்லாத சாகிற ஜீவனுமல்லாத ஒரு ஜீவனை உடையவர்களாக இருப்போம். ஆகிலும் வெளி. 20:6-ல் கூறப்பட்டுள்ள முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களின் ஜீவன் அப்படிப்பட்டதல்ல.

அவர்கள்மேல் 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லையென்பதால், அவர்கள் அப்போதே நித்தியஜீவனை உடையவர்களாகத்தான் இருப்பார்கள்.

இனி, முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ள ’சிறு மந்தையைத்’ தவிர மற்ற பெருங்கூட்டத்தாரின் நிலை என்னவாகும் என்பதைப் பார்ப்போம்.

இப்பெருங்கூட்டத்தாரில் ஒரு பிரிவினர் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக இருப்பார்கள். அப்பிரஜைகள் யாராக இருக்கக்கூடும் என்பதற்கான எனது யூகத்தைத் தருகிறேன். ஏனெனில், நான் அறிந்தவரை இதற்கான நேரடி வசன குறிப்புகள் வேதாகமத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

இயேசுவை அறியாவிடினும் துன்மார்க்கமாக ஜீவியாதவர்கள் (துன்மார்க்கம் என்பதற்கான சரியான வரையறையை நான் அறியேன்; ரோமர் 2:15-ன்படி மனச்சாட்சி மூலம் ஒரு செயலை குற்றமென அறிந்திருந்தும், அச்செயலைச் செய்வதை துன்மார்க்கம் எனக் கூறலாம்) 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக இருப்பார்கள் எனக் கருதுகிறேன்.

நீங்கள் குறிப்பிட்டிருந்த காந்தி, காமராஜர் போன்றவர்கள் துன்மார்க்கமாக ஜீவியாவிடில் 1000 வருட அரசாட்சியில் பங்கடைவார்கள் எனக் கருதுகிறேன். அடுத்து, இயேசுவை அறிந்த போதிலும் அவரது கற்பனைகளின்படி நடக்க முயற்சி செய்து தோல்வியுற்றவர்களும் 1000 வருட அரசாட்சியில் பங்கடைவார்கள் எனக் கருதுகிறேன்.

மற்றபடி, இயேசுவை அறியாதவர்களில் துன்மார்க்கர்களும், இயேசுவை அறிந்துள்ள போதிலும் அவரது கற்பனைகளின்படி நடக்கமுயலாமல் அலட்சியமாய் இருந்தவர்களும் 1000 வருட அரசாட்சியில் பங்கடையாமல் நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்பை சந்தித்து 2-மரணத்தில் பங்கடைவார்கள் எனக் கருதுகிறேன்.

1000 வருட அரசாட்சியில், இயேசுவின் நீதி கற்றுக் கொடுக்கப்படுகையில், அதை ஏற்றுக்கொள்வோருக்கு, 1000 வருட முடிவில் சாத்தான் கட்டவிழ்க்கப்பட்டபின், ஆதாமுக்கு கொடுக்கப்பட்ட சோதனையைப் போன்ற ஒரு சோதனை கொடுக்கப்படும். அதில் ஜெயிப்போருக்கு ஜீவவிருட்சத்தின் கனி கொடுக்கப்படும், அதைப் புசிப்பதன்மூலம் அவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தோற்பவர்கள் 2-ம் மரணத்தில் பங்கடைவார்கள் எனக் கருதுகிறேன்.

1000 வருட அரசாட்சியில் இயேசுவின் நீதியை ஏற்றுக் கொள்ளாதவர்களும் துன்மார்க்கரெனத் தீர்க்கப்பட்டு 2-ம் மரணத்தில் பங்கடைவார்கள் எனக் கருதுகிறேன்.

இயேசுவின் மீட்பால் இரட்சிப்பைப் பெற்றாலும், நித்தியஜீவனைப் பெறமுடியாமல் போகக் கூடியவர்கள் நிறையபேர் இருக்கத்தான் செய்வார்கள். மத்தேயு 25:31-46 வசனங்களில் இயேசு இதைத் தெளிவாகக் கூறுகிறார். அவ்வசனங்களில் இயேசு கூறுகிற வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வெறும் உவமையல்ல, மெய்யாகவே நடைபெறப்போகிற காரியம்.

அதில் வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் பிரிப்பது போல எனும் வாசகங்கள் மட்டுமே உவமானமாகும். 31-ம் வசனத்தில் மனுஷகுமாரன் தூதர்களோடு வருவார் என இயேசு கூறுகிறார், 32-ம் வசனத்தில் சகல ஜனங்களும் சேர்க்கப்படுவார்கள் எனக் கூறுகிறார். அவர்களை எவ்வாறு பிரிப்பார் என்பதற்கு மட்டுமே மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் எவ்வாறு பிரிப்பான் என்பதை ஒப்பிடுகிறார்.

ஓர் ஆட்டின் தன்மைகளைப் பார்த்துதான், அது வெள்ளாடா செம்மறியாடா என மேய்ப்பன் தீர்மானிப்பான். அவ்வாறே, ஒருவனின் தன்மைகளை (அதாவது கிரியைகளைப்) பார்த்துத்தான் அவன் நீதிமானா அநீதிமானா என இயேசு தீர்மானிப்பார். அநீதிமானுக்கு (அதாவது நற்கிரியைகளைச் செய்யாதவனுக்கு) 2-ம் மரணம் (அல்லது நித்திய ஆக்கினை) நிச்சயம்.

எனவே உயிர்த்தெழுதல் மாத்திரம் இரட்சிப்பல்ல. அது எல்லோருக்கும் உண்டுதான். உயிர்த்தெழுபவர்கள் நித்தியஜீவனைப் பெற்றால்தான் அவர்களின் இரட்சிப்பு நிறைவுபெறும்.

நித்தியஜீவனைப் பெறுவதற்கு கற்பனைகளின்படி நடப்பது அவசியம், அல்லது கற்பனைகளின்படி நடப்பதற்கான நல்முயற்சியாவது அவசியம். ஆனால் இன்றைய (போலிக்) கிறிஸ்தவர்கள் எல்லா போதனைகளையும் நன்கறிந்து கொண்டு அவற்றின்படி நடப்பதில் அலட்சியமாய் இருக்கின்றனர். இவர்களின் கதி அதோ கதிதான்.

2 பேதுரு 2:20-22; மத்தேயு 23:15 வசனங்களைப் படித்துப் பார்க்கவும்.

bereans wrote:
//அப்ப‌டி என்றால், தேவ‌னின் சித்த‌ம் நிறைவேறாம‌ல், தேவனிடத்தில் சேருவோர் எண்ணிக்கையை காட்டிலும், எதிராளியான‌ பிசாசிற்கு ஆய‌த்த‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ இட‌த்திற்கு தேவ‌ சாய‌லில் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ள் அதிக‌ எண்ணிக்கையில் போவார்க‌ளா? அதாவ‌து தேவ‌னால் முடிய‌வில்லை, பிசாசு ஜெயிக்கிறான் என்ப‌து வெளிப்ப‌டுகிற‌தே. இதில் என்ன‌ ந‌ற்செய்தி இருக்கிற‌து.//

இதில் பிசாசுக்கு வெற்றி, தேவனுக்கு தோல்வி என்பதே கிடையாது.
பொய் சொல்லி வெற்றி பெறுகிற பிசாசின் வெற்றியை எப்படி வெற்றி எனச் சொல்லமுடியும்? பொய் சொல்லி பிசாசு பெறுகிற கோடிக்கணக்கான எண்ணிக்கையின் வெற்றி, உண்மை சொல்லி தேவன் பெறுகிற ஒரு வெற்றிக்கு இணையாகுமா?

அப்படி ஒரு வெற்றியைத்தானே யோபுவின் மூலம், நோவாவின் மூலம் இன்னும் எத்தனையோ தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் பெற்றார்?

நோவா காலத்தில் பிசாசின் பொய்யால் அழிந்தோர் எத்தனை பேர்? ஆனால் தேவனின் உண்மையால் பிழைத்தது 8 பேர் மட்டுமே. இதனால் தேவமகிமைக்கு ஏதாவது பங்கம் நேர்ந்ததா? நிச்சயமாக இல்லை.

தேவனுக்குத் தேவை எண்ணிக்கை அல்ல. நீதி, நியாயம் மட்டுமே.
எண்ணிக்கைதான் முக்கியமெனில் ஒரேயொரு மனிதனின் அழிவுகூட தேவனுக்கு தோல்விதான்.

ஒருவேளை யாருமே அழிவுக்குப் போகமாட்டார்கள், எல்லோரும் நித்திய ஜீவனைத்தான் பெறுவார்கள் என நீங்கள் கூறினால், அப்.13:46; 1 யோவான் 3:15 வசனங்களைப் படித்துப் பாருங்கள்.


-- Edited by anbu57 on Saturday 10th of October 2009 07:53:34 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

என் மனதில் இருக்கும் பல கருத்துக்களை அப்படியே பதித்திருக்கிறீர்கள் அன்பு அவர்களே மிக்க நன்றி.  கொடியவனான சாத்தானை தேவன் ஏன் ஏதேனுக்குள் சோதனைக்கு அனுமதித்தார் என்ற அடிப்படை கேள்வியைதவிர எல்லா கேள்விக்கும் பதில் இருக்கிறது.  

எந்த ஒரு மனிதனும் முதலில் ஆதாமின் நிலயை அடைந்து அதன்பிறகுதான் ஜீவ விருட்சத்தில் பங்கடைய முடியும் என்பதுதான் எனது கருத்தும். எனவே இரட்சிப்பில் இரண்டுபடி இருக்கிறது.

1. தேவன் மற்றும் இயேசு பேரிலான விசுவாசம் (முழு இருதயத்தோடு அன்பு செலுத்துதல்)   
2. கிரியைகள் (உன்னை நேசிப்பது போல பிறரை நேசி - எல்லா கட்டளைகளும் இதனுள் அடக்கம்) 

கிரியை இல்லாத விசுவாசம் எப்படி செத்ததோ அதுபோல் விசுவாசம் இல்லாத கிரியையால் (கட்டளைகளால்) யாரும் நீதிமானாக முடியாது.   இங்குதான் இடருதலின் கல் இருக்கிறது என்று தெரியாமல் இதில் இரண்டில் ஒற்றை பிடித்துக்கொண்டு அநேகர் வழிதவறி போகின்றனர். 
    
ஆனால் இங்கு இவர்களின் கோட்பாடு சுவிசேஷம் வேண்டாம் எனென்றால் இது அறுவடை காலமாம், எந்த கட்டளைபடியும் நடக்கவேண்டாம் எனென்றால் அது இஸ்ரவேலருக்கு கொடுக்கபட்டதாம், ஜெபம் வேண்டாம் ஏனெனில் நாம் என்ன ஜெபிபோம் என்று எல்லாமே தேவனுக்கு தெரியும்  ஆனால் எல்லோரும் மீட்கப்படுவார்கலாம்.  வேதம் தெளிவாக சொல்லும்  நித்தியவாதை அக்கினிசூளை அவியாத அக்கினி எரிநகரம் தாழ்ந்த பாதாளம் அங்கு வேதனை என்று ஒன்றும் கிடையாது. எனென்றால் மனிதன் மரித்தால் அத்தோடு எல்லாம் முடிந்துவிடும் போன்ற பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர்.


அதோடு எந்த ஒரு சரியான முகாந்திரமும் இல்லாமல் பல மொழிகளை ஆராய்ந்து உண்மையை அறிந்துகொண்டதாகவும் அந்த ஒரே காரணத்துக்காக  தேவன் அவர்கள்  சிருமந்தையாக ஆளுகை செய்ய தெரிந்துகோண்டதாகும் கருத்து கொண்டுள்ளனர்.  பல மொழிகளை ஆராயமுடியாத போதிய அறிவற்ற  என்போன்றவர்கள் எல்லாம் அந்த மந்தையில் சேரவே முடியாது அவுட்.   

தேவன் இதுபோன்றோறு திட்டம் வைத்திருந்தால் நான் எங்கே இருக்கவேண்டும் என்றும் அவர் திட்டம் வைத்திருப்பார் அதை ஒருநாளும் என்னால் மாற்றவே முடியாது அப்படியே நடந்துவிட்டு போகட்டும்.  
 
 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ராஜ் எழுதியது:
"எனவே இரட்சிப்பில் இரண்டுபடி இருக்கிறது"

இதை தானே சகோதரரே நானும் சொல்லுகிறேன். ஒன்று, இயேசு கிறிஸ்துவை வழியாக கொண்டு அதில் உண்மையாக நடப்பவர்கள் அவரின் சாயலில் சாவாமையை பெற்று கொள்ளும் வாய்ப்பு (1 யோவான் 3:2). மற்றோன்று மீதமான அனைவரும், இந்த பூமியில் இப்போது கற்று கொள்ள முடியாத நீதீயை (தேவனையும், சத்தியத்தையும்) கற்று கொண்டு நித்தியஜீவனை (இது சாவாமை அல்ல)  பெற்று கொள்ளும் ஒரு நிலை. இது இரண்டும் தான் இரட்சிப்பு என்று தான் நானும் சொல்லி வருகிறேன்.

ராஜ் எழுதியது:
"ஆனால் இங்கு இவர்களின் கோட்பாடு சுவிசேஷம் வேண்டாம் எனென்றால் இது அறுவடை காலமாம்"

சுவிசேஷம் என்றாள் ராஜ்யத்தின் சுவிசேஷம் இன்று யார் சொல்லுகிறார்கள். மேலும் இது இங்கு ப‌திவு செய்வோர்க‌ளின் கோட்பாடுக‌ள் அல்ல‌. நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ளின் எந்த‌ ஒரு கோட்பாடுக‌ளையும் பின் ப‌ற்றுவ‌தில்லை என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன். இது இயேசு கிறிஸ்து ம‌த். 13:39ல் சொன்ன‌தை தான் பின்ப‌ற்றுகிறோம். விழித்திருங்க‌ள் என்றால், 21 நாள் உப‌வாச‌ம் என்று மேடை போட்டு மைக்கு போட்டு உல‌க‌த்திற்கு தெரியும்ப‌டி இருப்ப‌தில்லை. மாறாக‌ இயேசு கிறிஸ்து சொன்ன‌தும், வேத‌த்தில் உள்ள‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ளும் நிறைவேறி வ‌ருகிற‌தா என்ப‌தை விழித்திருந்து தான் பார்க்க‌ சொல்லியிருக்கிறார் அவ‌ர். சுவிசேஷ‌ம் வேண்டாம் என்று சொல்ல‌ வில்லை ஆனால் அந்த‌ சுவிசேஷ‌ம் உண்மையான‌தாக‌ இருக்க‌ட்டுமே, ஏனென்றாள் இன்று அநேக‌ர் "வேறு சுவிசேஷ‌த்தையும்" வேறு கிறிஸ்துவையும் தானே போதிக்கிறார்க‌ள்.


ராஜ் எழுதிய‌து:
"எந்த கட்டளைபடியும் நடக்கவேண்டாம் எனென்றால் அது இஸ்ரவேலருக்கு கொடுக்கபட்டதாம், "

இஸ்ராய‌ல‌ருக்கு கொடுக்க‌ ப‌ட்ட‌ க‌ட்ட‌ளைக‌ள் தான் வேண்டாம் என்று சொல்லுகிறோமே த‌விர‌, கிறிஸ்துவின் போத‌னைக‌ள் வேண்டாம் என்று சொல்ல‌வில்லை. ஏனென்றால், "ந‌ம‌க்கு எதிரிடையாக‌வும் க‌ட்ட‌ளைக‌ளால் ந‌ம‌க்கு விரோத‌மாக‌வும் இருந்த‌ கையெழுத்தை குலைத்து, அதை ந‌டுவிலிர‌த‌ப‌டிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணிய‌டித்" தார் என்கிற‌து வேத‌ம் கொலே 2:14. ஏன் க‌ட்ட‌ளைக‌ள் ந‌ம‌க்கு விரோத‌மான‌து என்றால், அதினால் ஜீவ‌ன் இல்லை. க‌ட்ட‌ளைக‌ளால் ம‌ர‌ண‌ம் இருந்த‌து, ஆனால் இயேசு கிறிஸ்துவின் ப‌லியினால் ஜீவ‌ன் இருக்கிற‌து. ஆக‌வே தான் இஸ்ராயேல‌ருக்கு கொடுக்க‌ ப‌ட்ட‌ க‌ட்ட‌ளைக‌ளும், ப‌லிக‌ளும் ந‌ம‌க்கு உரிய‌து அல்ல‌ என்று சொல்லுகிறோம். இப்ப‌டி ஒரு ப‌ரிசேய‌னாக‌ இருந்து வ‌ந்த‌ ப‌வுலை ப‌ற்றி நான் சொல்ல‌ வேண்டிய‌து இல்லை, புதிய‌ ஏற்பாட்டிலே அதிக‌மாக‌ ந‌ம‌க்கு எழுதி கொடுத்த‌வ‌ர் அவ‌ர் தான். நாங்கள் சொல்லுவது உங்களுக்கு தவறாக தெரிந்தால் அவ‌ர் சொல்லுவ‌தை கேளுங்க‌ள்.

ராஜ் எழுதுகிறார்:
"ஜெபம் வேண்டாம் ஏனெனில் நாம் என்ன ஜெபிபோம் என்று எல்லாமே தேவனுக்கு தெரியும்"

இப்ப‌டியும் சொல்ல‌வில்லை. மாறாக‌ நீங்க‌ள் ஜெபிப்ப‌து தேவ‌ சித்த‌த்தின் ப‌டி இருக்க‌ட்டும் என்று யாக்கோபு எழுதிய‌தை தான் சொல்லுகிறோம். பிள்ளைக்கு என்ன‌ வேண்டுமெண்று த‌ந்தைக்கு தெரியும், ஆனாலும் அதின் வாயிலாக‌ அவ‌ர் கேட்க‌ பிரிய‌ ப‌டுகிறார். ப‌ழ‌ய‌ ஏற்ப‌ட்டில் தேவ‌னாக் (இஸ்ராயேல‌ருக்கு) இருந்த‌வ‌ர் புதிய‌ ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவினால் ந‌ம‌க்கு (ச‌பைக்கு) பிதாவாக‌ இருக்கிறார்.

 "நான் சுனாமியை அனுப்புவேன்" என்று தேவ‌ன் சொன்னாராம், அது வ‌ர‌க்கூடாது என்று ஒருவ‌ர் ஜெபிக்க‌ சொல்லி, அநேக‌ர் ஜெபித்தார்க‌ளாம், அதாவ‌து தேவ‌ன் சித்த‌ம் நிறைபெற‌க்கூடாது என்று ஜெபிக்க‌ ஒரு பெரும் கூட்ட‌ம் இருக்கிற‌து. தேவ‌னுக்கு க‌ட்ட‌ளை இடும் கூட்ட‌ம் (இப்பொழுதே செய்யும், இற‌ங்கி வாரும், இப்பொழுது சுக‌மாக்கும்), இவ‌ர்க‌ள் இடும் ச‌த்த‌ங்க‌ளை தான் அறுவ‌றுப்பான‌ ஜெப‌ங்க‌ள் என்று ஒதுக்கிறோமே த‌விர‌, ஜெபிக்க‌வே கூடாது என்று சொல்ல‌வில்லை. ஜெபியுங்க‌ள், ஆனால் தேவ‌னின் சித்த‌ம் நிறைவேறும் ப‌டி. அவ‌ர் ந‌ம‌க்கு ஆகார‌ம் கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார், ஆக‌வே இயேசு கிறிஸ்து சொல்லிய‌து போல், அன்ற‌ன்டுள்ள‌ ஆகார‌த்திற்காக‌ ஜெபியுங்க‌ள், 4,5 த‌லைமுறை ம‌ட்டும் உட்கார்ந்து சாப்பிட‌னும் என்று ஜெபம் செய்யாதீர்க‌ள் என்று தான் சொல்லுகிறோம். இதில் த‌வ‌று இல்லை என்று தான் என்னுகிறேன்.

ராஜ் எழுதிய‌து:
"ஆனால் எல்லோரும் மீட்கப்படுவார்கலாம். "

"எல்லோரையும் மீட்கும் பொருளாக‌த் த‌ம்மை ஒப்புகொடுத்த‌" இயேசு கிறிஸ்து செய்த‌ இந்த‌ ஈட‌ற்ற‌ ப‌லியின் தையிரிய‌த்தில் தான் இதை சொல்லுகிறோம். (1 தீமோ. 2:6). நான் ப‌ர‌லோக‌ம் போய் ஆபிர‌காமை பார்த்து வ‌ந்தேன், தாவீதுட‌ன் ந‌ட‌ன‌ம் ஆடி வந்தேன், த‌ன‌க்கு க‌ட்ட‌ ப‌டும் மாட‌ மாளிகையை பார்த்து வ‌ந்தேன் என்று த‌ம்ப‌ட்ட‌ம் அடிப்ப‌வ‌ர்க‌ளை ஊழிய‌க்கார‌ர்க‌ள் என்று சொல்லி அவ‌ர்க‌ளுக்கு த‌ச‌ம‌பாக‌ங்க‌ளும் காணிக்கைக‌ளையும் கொடுத்து அவ‌ர்க‌ளின் பொய்யை இன்னும் அதிக‌மாக‌ உறுதி ப‌டுத்துகிற‌ ம‌க்க‌ளை விட‌, நாங்க‌ள் இப்ப‌டி எல்லோரும் மீட்க‌ப்ப‌டுவார்க‌ள்(லாம்) என்கிற‌ வேத‌ ப‌டியான‌ நியாய‌மான‌ ஆசையை நினைத்து, தேவ‌ன் எங்க‌ளுகு இப்ப‌டி ஒரு ம‌ன‌தை கொடுத்த‌தை நினைத்து தேவ‌னை ஸ்தோத‌ரிக்கிறோம். கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்று சொல்லி கொண்டு, அடிப்ப‌டை அன்பு இல்லாம‌ல், நான் ஏற்று கொண்டேன் பிழைத்தேன், என்றும் நீ ஏற்காவிட்ட‌ல் அவியாத‌ அக்கினி தான் என்று (வேத‌த்தில் இல்லாத‌) சொல்லி திரியும் த‌ற்பெறுமையும், அன்ப‌ற்ற‌ ஊழிய‌க்கார‌ர்க‌ளை(!?) விட‌ நாங்க‌ள் மேல் என்றே என்னுகிறோம். இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு அன்புள்ள‌ தேவ‌ன் எங்க‌ளுக்கு உண்டு, அவ‌ர் எல்லோரையும் மீட்க்க‌ வ‌ல்ல‌வ‌ர் என்று என்னி பெருமை கொள்கிறோம்.

ராஜ் எழுதுகிறார்:
"அதோடு எந்த ஒரு சரியான முகாந்திரமும் இல்லாமல் பல மொழிகளை ஆராய்ந்து உண்மையை அறிந்துகொண்டதாகவும் அந்த ஒரே காரணத்துக்காக  தேவன் அவர்கள்  சிருமந்தையாக ஆளுகை செய்ய தெரிந்துகோண்டதாகும் கருத்து கொண்டுள்ளனர்."

ச‌கோத‌ர‌ர் அவ‌ர்க‌ள் எங்க‌ள் மேல் என்ன‌ கோப‌த்தில் இருக்கிறார் என்று தெரிய‌வில்லை. இப்ப‌டி சொல்லாத‌ ஒன்றை எங்க‌ள் கோட்பாடாக‌ எப்ப‌டி வ‌ர்னிக்க‌ முடிகிற‌து. வேத‌த்தை ஆராய்கிறோம் என்ப‌து உண்மை, ஆனால் அப்ப‌டி ஆராய்வ‌த‌னால் தான் தேவ‌ன் எங்க‌ளை 'சிறு ம‌ந்தையாக‌" ஆளுகை செய்ய‌ தெரிந்துகொண்ட‌தாக‌ நாங்க‌ள் ஒரு போதும் சொல்லாத‌, எங்க‌ள் மேல் விழுந்த‌ குற்ற‌ சாட்டாகும். பவுல் சொன்ன‌து மாதிரி, "ச‌த்திய‌ம் சொல்லுவ‌தால் ச‌த்துருவானோம்" மிக‌வும் ச‌ரியே.

இன்று உழியம் என்கிற‌ பெய‌ரில் ந‌ட‌க்கும் ஆட‌ம்ப‌ர‌ங்க‌ளும், வெளிவேஷ‌ங்க‌ளும், மாயாஜாள‌ங்க‌ளும், ப‌ண‌வெறியும், சுய‌ பெருமை பாராட்டுவ‌துமமாக‌ இருக்க‌, இதை தான் ஊழிய‌ம் என்று ந‌ம்புகிற‌ கூட்ட‌த்திற்கு ம‌த்தியில் நாங்க‌ள் சொல்லுவ‌து இப்ப‌டி தான் இருக்கும்.

ராஜ் எழுதுகிறார்:
"பல மொழிகளை ஆராயமுடியாத போதிய அறிவற்ற  என்போன்றவர்கள் எல்லாம் அந்த மந்தையில் சேரவே முடியாது அவுட்.    "

என்ன‌மோ நாங்க‌ள் சிறு ம‌ந்தைகூட்ட‌த்தாரை போல் எங்க‌ளை சொல்லியிருககீங்க‌ளே! இயேசு கிறிஸ்துவின் பாத‌ சுவ‌டுக‌ளை ப‌ற்றி கோண்டு ந‌ட‌க்கும் கூட்ட‌மாக‌ நாங்க‌ள் பிர‌யாசிக்கிறோம். ம‌ற்ற‌ப‌டி அவ‌ர் எங்க‌ளுக்கு என்று என்ன‌ வைத்திருக்கிறார் என்று தெரியாது. நாங்க‌ள் ஒன்றும் ப‌ர‌லோக‌த்தையும், ந‌ர‌க‌த்தையும் பார்த்து வ‌ந்த‌ அள‌விற்கு பெரிரிரிரிரிய‌ ஊழிய‌க்கார‌ர்க‌ள் அல்ல‌. அவ‌ர்க‌ளுக்கு தான் ப‌ர‌லோக‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு வீடு வாச‌ல், த‌ங்க‌ம் மாளிகைக‌ள் உண்டு என்று பார்த்து வ‌ருப‌வ‌ர்க‌ள். நாங்க‌ள் வேத‌த்திற்கு புற‌ம்பான‌ இப்ப‌டி ஒரு த‌ரிச‌ன‌த்தை பார்த்த‌தும் இல்லை, அதை வாஞ்சிப்ப‌தும் இல்லை. நான் மீண்டும் சொல்லுகிறேன், ச‌த்திய‌த்தை ஆராய்வ‌தால் ஒருவ‌ன் ப‌ர‌லோக‌த்தில் போக‌ முடியாது, அத‌ன் பிர‌கார‌ம் ந‌ட‌ப்ப‌வ‌னுக்கே அப்படி ஆகும். நாங்க‌ள் அப்ப‌டி ந‌ட‌க்கிறோமா இல்லையா என்ப‌தை நியாய‌ந்தீர்க்க‌ ஒருவ‌ர் இருக்கிறார். அவ‌ர் வ‌ரும் போது எல்லாம் வெளிச்ச‌த்தை போல் இருக்கும். ம‌றைவான‌து எல்லாம் தெரிய‌வ‌ரும். ஆனால் அப்ப‌வும், ஒரு கூட்ட‌ம் நாங்க‌ள் த‌ரிச‌ன‌த்தில் இதை பார்த்தோமே, அதை பார்த்தோமே என்று சொல்லுப‌வ‌ர்க‌ள் இருப்பார்க‌ள்.

"உம்முடைய‌ நாம‌த்தில் அதை செய்தோம், இதை செய்தோம் அப்ப‌டி செய்தோம், இப்ப‌டி செய்தோம் என்று த‌ம்ப‌ட்ட‌ம் த‌ட்டுவார்க‌ள்" ஆனால் உங்க‌ளை தெரியாது "அக்கிர‌ம‌ செய்கைக்கார‌ர்க‌ளே" என்று நாங்க‌ள் இல்லை, இயேசு கிறிஸ்து தான் சொல்லுவார். ஆக‌ இப்ப‌டி ப‌ட்ட‌ அக்கிர‌ம‌ செய்கையிலும் நாங்க‌ள் ஈடுப‌டுவ‌தில்லை, ஏனென்றால் தேவ‌னால் கூடாத‌து ஒன்றும் இல்லை என்ப‌தை மாத்திர‌ம் நாங்க‌ள் அறிவோம். அவ‌ர் செய்வ‌தை எங்க‌ளால் செய்ய‌ முடியாது, அவ‌ர் செய்வ‌தை அவ‌ர் தான் செய்வார் என்ப‌தையும் அறிவோம்.

மேலும் ஒரே புத்தகத்தை வைத்துக்கொண்டு அதை ஆராய முடியாது. ஆராய வேண்டும் என்றால், கம்பேர் செய்ய புத்தகங்கள் வேண்டும். நீங்கள் மூல பாஷையை மாத்திரம் படித்துக்கொண்டிருந்தால் வேற் ஒன்றும் தேவை இல்லை, ஆனால் பரிசுத்த வேதாகமத்தை மாத்திரம் வைத்து கொண்டு வேதத்தை ஆராய முடியாது, ஏனென்றால் அதில் பல வசனங்கள் சேர்த்துக்கொள்ள பட்டிருக்கிறது.



-- Edited by bereans on Saturday 10th of October 2009 11:55:58 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மிகவும் நிதானமாக எல்லாவற்றையும் தெளிவாக பதித்திருக்கும் சகோ. அன்பு அவர்களுக்கு பாராட்டுக்கள். வசனத்தை மாத்திரம் சார்ந்து எல்லாவற்றையும் விளக்க எடுத்திருக்கும் பிரயாசம் அருமை. இதை மாத்திரம் வேதம் வாசிக்கும் ஒவ்வொருவரும் கையாண்டிருந்தால் இத்தனை சபைப் பிரிவுகள் வந்திருக்காது.






நோவா காலத்தில் நடந்தவற்றை குறிப்பிட்டுள்ளீர்கள். அது நிச்சயம் யாருக்கும் தோல்வியோ வெற்றியோ இல்லை. தேவசித்தம் நிறைவேறியது. காப்பாற்றப்பட்ட அந்த 8 பேரும்தான் சிலகாலம் சென்று மரித்துவிட்டார்களே? ஆக மரணம் எல்லாருக்குமே நிச்சயம் எனும்பட்சம் வாழும் நாட்கள் அவ்வளவு முக்கியமில்லை என்று கருதுகிறேன். 'ராட்சசர்களை' அழித்து கீழ்ப்படியாமல் போன 'ஆவிகளுக்கு' பிரசங்கம் செய்வதும் அந்த நிகழ்வின் ஒரு நோக்கம் என்று அறிகிறோம்.
வரப்போகும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கும் முன்பிருந்த ஏதேனுக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசம் 'சாத்தான்' கட்டப்பட்டிருக்கப்போவதுதான். அதே போல தேவன் ஆதாமும் அவன் சந்ததியும் 'தீமை' மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய 'பாடங்கள்' அதிகம் இருந்ததால் சாத்தான்  அவர்களை influence (மோசம் போக்க‌) செய்ய அனுமதித்திருந்தார். ஆனால் வரப்போகும் 'கிறிஸ்துவின்' இராஜ்ஜியத்தில் அதற்கு நேர் மாறாக 'கிறிஸ்துவின் சபை' மூலமாக உயிர்த்தெழும் ஒவ்வொருவரும் நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்படியாக எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஏனென்றால் ஒருவனும் 'கெட்டு'ப்போவது தேவ சித்தமல்ல. எப்படி சத்துருவினால் முழு மனுக்குலமும் மரணத்தை சுதந்தரித்ததோ அதே போல் கிறிஸ்துவினால் (தலை+சரீரம்) முழு மனுக்குலமும் நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்.





'பூச்சக்கரத்துக் குடிகள் நீதியை கற்றுக்கொள்வார்கள்' ' பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்', மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்' என்ற தீர்க்கதரிசன வசனங்கள் நேரடி அர்த்தம் கொள்பவை. "மனத்திரும்ப அவசியமில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனத்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்" 9லூக்15:7, 10. இதில் மனந்திரும்ப அவசியமுள்ள ஒரே பாவி 'மனுக்குலம்' மட்டுமே. தேவனுடைய ஏனைய படைப்புகள் மனந்திரும்ப அவசியமேயில்லை. தமிழில் இந்த வசனம் மிகச்சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'ஒரு' பாவியில்லை 'ஒரே' பாவி (The Only Sinner) இந்த பாவி மனிதன் மட்டுமே!


-- Edited by soulsolution on Saturday 10th of October 2009 12:01:25 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//நோவா காலத்தில் நடந்தவற்றை குறிப்பிட்டுள்ளீர்கள். அது நிச்சயம் யாருக்கும் தோல்வியோ வெற்றியோ இல்லை. தேவசித்தம் நிறைவேறியது. காப்பாற்றப்பட்ட அந்த 8 பேரும்தான் சிலகாலம் சென்று மரித்துவிட்டார்களே? ஆக மரணம் எல்லாருக்குமே நிச்சயம் எனும்பட்சம் வாழும் நாட்கள் அவ்வளவு முக்கியமில்லை என்று கருதுகிறேன்.//

ஆம், பூமியில் வாழும் நாட்கள் முக்கியமில்லைதான். நானும் அதை முக்கியப்படுத்தவில்லை. ஆனால் நோவா குடும்பத்தாரைத் தவிர மற்ற அனைவரும் ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டதற்குக் காரணம் சாத்தானின் வஞ்சனைதானே? அதைத்தான் நான் கூறியிருந்தேன். அவ்வாறே நோவா குடும்பத்தார் ஜலப்பிரளயத்துக்கு தப்பியதன் காரணம் தேவனின் உண்மைதானே? அதைத்தான் நான் கூறியிருந்தேன்.

நோவா மட்டுமின்றி யோபு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது, எரேமியா, ஏனோக்கு, எலியா, எலிசா போன்ற பலரும் தேவன் சொன்ன உண்மையை ஏற்றுக்கொண்டு தேவ தாசர்களாய் வாழ்ந்தவர்கள்தானே? அவர்களெல்லாம் தேவனின் வெற்றிக்குச் சாட்சிகள் தானே? அதைத்தான் நான் கூறியிருந்தேன்.

soulsolution wrote:
//எப்படி சத்துருவினால் முழு மனுக்குலமும் மரணத்தை சுதந்தரித்ததோ அதே போல் கிறிஸ்துவினால் (தலை+சரீரம்) முழு மனுக்குலமும் நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்.//

இக்கூற்றுதான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. 1000 வருட அரசாட்சிக்குப் பின் மனுஷகுமாரன் மகிமை பொறுந்தினவராய் வந்து, ஜனங்களை இரு பிரிவாகப் பிரித்து, நியாயத்தீர்ப்பு கொடுத்து, ஒரு பிரிவினரை நித்தியஜீவனுக்கு அனுப்பி, அடுத்த பிரிவினரை நித்திய அழிவுக்கு அனுப்பப்போவதாக இயேசு கூறுகிறாரே (மத்தேயு 25:41), இதைப் படித்த பின்னும் முழு மனுக்குலமும் நித்திய ஜீவனை சுதந்தரிக்கும் என நீங்கள் கூறுவது ஆச்சரியத்தைத் தருகிறது.

soulsolution wrote:
//மிகவும் நிதானமாக எல்லாவற்றையும் தெளிவாக பதித்திருக்கும் சகோ. அன்பு அவர்களுக்கு பாராட்டுக்கள்.//

பாரட்டுகளுக்கு நன்றி சகோதரரே!

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஏனென்றால் எல்லா மனிஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவால் நிரப்பப்படவும் அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார் என்ற வசனத்தின்படி இந்த அவரது சித்தம் பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் உயிர்த்தெழுந்த பின்பும் கட்டாயம் பாவம் செய்தே தீர்வார்கள், நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்று முழுநிச்சயமாய் நீங்கள் நம்பும்போது நான் ஒரு வெள்ளாடும் இருக்கக் கூடாது என்று எண்ணுவதில் தவறிலலை என்றெண்ணுகிறேன், அவ்வளவே!

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

RAAJ WROTE: //ஆனால் இங்கு இவர்களின் கோட்பாடு சுவிசேஷம் வேண்டாம் எனென்றால் இது அறுவடை காலமாம், எந்த கட்டளைபடியும் நடக்கவேண்டாம் எனென்றால் அது இஸ்ரவேலருக்கு கொடுக்கபட்டதாம், ஜெபம் வேண்டாம் ஏனெனில் நாம் என்ன ஜெபிபோம் என்று எல்லாமே தேவனுக்கு தெரியும் ஆனால் எல்லோரும் மீட்கப்படுவார்கலாம். வேதம் தெளிவாக சொல்லும் நித்தியவாதை அக்கினிசூளை அவியாத அக்கினி எரிநகரம் தாழ்ந்த பாதாளம் அங்கு வேதனை என்று ஒன்றும் கிடையாது. எனென்றால் மனிதன் மரித்தால் அத்தோடு எல்லாம் முடிந்துவிடும் போன்ற பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். அதோடு எந்த ஒரு சரியான முகாந்திரமும் இல்லாமல் பல மொழிகளை ஆராய்ந்து உண்மையை அறிந்துகொண்டதாகவும் அந்த ஒரே காரணத்துக்காக தேவன் அவர்கள் சிருமந்தையாக ஆளுகை செய்ய தெரிந்துகோண்டதாகும் கருத்து கொண்டுள்ளனர். பல மொழிகளை ஆராயமுடியாத போதிய அறிவற்ற என்போன்றவர்கள் எல்லாம் அந்த மந்தையில் சேரவே முடியாது அவுட். தேவன் இதுபோன்றோறு திட்டம் வைத்திருந்தால் நான் எங்கே இருக்கவேண்டும் என்றும் அவர் திட்டம் வைத்திருப்பார் அதை ஒருநாளும் என்னால் மாற்றவே முடியாது அப்படியே நடந்துவிட்டு போகட்டும். உலகமும் நித்திய ஜீவனை அடையட்டுமே.//




ராஜ் அவர்களே நாங்கள் சுவிஷேசம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்ன என்று முதலில் தெரிந்து கொண்டு பின்பு அறிவிக்கலாமே. இயேசுவை ஏற்றுக்கொண்டால் பரலோகம் இல்லையேல் நரகம் என்று ஏன் பயமுறுத்தலின் 'சுவிஷேசம்' சொல்கிறீர்கள்? அப்படியே நீங்கள் சுவிஷேம் அறிவிப்பதான் ஒரு ஆத்துமா 'நரகத்துக்கு' தப்புவிக்கப்படுமானால் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் போய் கடைசி மூச்சு இருக்கும்வரை அறிவியுங்களேன்.



எந்த கட்டளைப்படியும் நடக்க வேண்டாம் என்று ஒருபோதும் சொல்லவில்லை. நியாயபிரமாணம் யூதனுக்கு, பழைய ஏற்பாட்டில் அந்தந்த காலகட்டத்தில் அவர்களுக்கு சொல்லப்பட்ட கட்டளைகளை நாம் கைக்கொள்ள அவசியமில்லை என்றுதான் தெளிவு படுத்தியுள்ளோம். அப்படி உங்களுக்கு அவைகளை கைக்கொள்ள விரும்பினால் அதில் சொல்லப்பட்ட எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ள வேண்டும் அதில் நீங்கள் selective ஆக இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு நீங்கள் முதலில் 'விருத்தசேதனம்' செய்து கொள்ளவேண்டும். மேலும் உபாகமம் 14:26ன்படி "அங்கே உன் இஷ்டப்படி ஆடு மாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும்(ஊழியக்காரர்) புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக". இந்தக் கட்டளையைக் கைக்கொள்ளவும். உங்கள் பாஸ்டரை அழைக்க மறக்கவேண்டாம். தெய்வ குற்றமாகிவிடும்!



ஜெபிக்க வேண்டாமென்றும் சொல்லவில்லை. ஜெபம் என்ற பெயரில் தேவனுக்கு இதைச் செய்யும் அதைச்செய்யும் என்று கட்டளை, யோசனைகள் சொல்லவேண்டாமென்கிறோம். "உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக" என்பதே best ஜெபம் என்று நான் எண்ணுகிறேன். உங்களுக்கு ஜெபிக்க விருப்பமிருந்தால் இடைவிடாமல் ஜெபியுங்களேன்.





உங்கள் வேதம் தெளிவாக சொல்லும் நித்தியவாதை அக்கினிசூளை அவியாத அக்கினி எரிநகரம் தாழ்ந்த பாதாளம் என்ற பதங்கள் மூலமொழியில் வேறு அர்த்தங்கள் தருகிறதே. மூலமொழியில் கல்லறை என்று அர்த்தம் கொள்ளும் ஒரே வார்த்தை தமிழில் பாதாளம், குழி, நரகம் என்றும், குப்பைக்கூளம் என்று அர்த்தம் கொள்ளும் இடம் 'எரி நரகம்' என்றும் அழைக்கப்படுகிறது. 'பாவத்தின் சம்பளம் மரணம்' நித்திய வாதை இல்லை.



மனிதன் மரித்தால் அத்தோடு எல்லாம் முடிந்துவிடும் என்று பிரசங்கி3:18 முதல் மற்றும் 9:5,10 போன்ற வசனங்களில் உங்கள் வேதத்திலும் தெளிவாக உள்ளது.



நாங்கள்தான் 'சிறுமந்தை' என்று மார்தட்டிக்கொள்ளவில்லை. அந்தத் தகுதி உலகத்தோற்றத்துக்கு முன்பாக முன்குறிக்கப்பட்டவர்களுக்குறியது. நாங்கள் இந்த போலி சபையான மகாவேசி 'மகாபாபிலோன்'லிருந்து வெளி18:4ன் படி வெளியேறியவர்கள். அவளது அக்கிரமத்திற்கு துணை போகாமல் எதிர்ப்பவர்கள். கிறிஸ்து உலகை இரட்சிக்கவே வந்தார் எனவே அவர் உலகை இரட்சிப்பார். நானும் நீங்களும் செயல்பட்டாலும் படாவிட்டாலும் இது நடக்கும். தேவன் நம்முடைய 'தயவை' நாடி தன்னுடைய திட்டங்களை அமைப்பதில்லை என்றெண்ணுகிறேன்.



நீங்கள் பல மொழியில் ஆராயவேண்டாம் தற்போது தமிழிலேயே பல வேதாகமங்கள் கிடைக்கின்றன. ரோமன் கத்தோலிக்க தமிழ் பதிப்பில் அனேக வசனங்கள் தெளிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு 'ஜீவாத்துமாவானான்' என்ற பதம் 'உயிரடைந்தான்' என்று எளிதாக புரியுமளவு உள்ளது. தொடர்ந்து பதியுங்கள்...


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//மேலும் உயிர்த்தெழுந்த பின்பும் கட்டாயம் பாவம் செய்தே தீர்வார்கள், நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்று முழுநிச்சயமாய் நீங்கள் நம்பும்போது நான் ஒரு வெள்ளாடும் இருக்கக் கூடாது என்று எண்ணுவதில் தவறிலலை என்றெண்ணுகிறேன், அவ்வளவே!//

உயிர்த்தெழுந்த பின்போ அல்லது முன்போ எப்பொழுதாயினும் பாவம் செய்தே தீருவார்கள் என்பது எனது நம்பிக்கையல்ல சகோதரரே, தீர்க்கதரிசன அறிவிப்பு.

ஏசாயா 26:10 துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதே போகிறான்.

மத்தேயு 25:33-ல் வெள்ளாடுகளை இடது பக்கத்தில் நிறுத்துவார் என இயேசு கூறியுள்ளதால் குறைந்தபட்சம் 2 வெள்ளாடுகளாவது இருக்கவேண்டுமல்லவா?

மத்தேயு 7:22,23-ல் இயேசு கூறியுள்ளபடி அநேக ஊழியர்களை அக்கிரமச்செயகைக்காரரே என்று சொல்லி தம்மைவிட்டு அவர் அகன்றுபோகச் சொல்வார் என்பது உண்மைதானே?

இப்படி வசனங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆதாம் பாவம் செய்வான் என்பது தேவனுக்கு முன்பே தெரிந்திருந்ததால், அவன் பாவம் செய்வதற்கு தேவன் காத்துக் கொண்டிருந்தார் என்ற கருத்தில் சிலர் கூறுகையில் (அந்த சிலரில் நீங்களும் உண்டா?), அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களின் அடிப்படையில் நான் கருத்துக்களைச் சொல்லக் கூடாதா?

என்றாலும் ஒரு வெள்ளாடும் இருக்கக்கூடாது என நீங்கள் எண்ணுவதில் நிச்சயமாகத் தவறில்லைதான்.
என்னைப்பொறுத்தவரை, மனந்திரும்பி தேவகட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவன் எவனும் நிச்சயமாக வெள்ளாடுகள் கூட்டத்தில் சேரமாட்டான் என்பதும், அநேக அக்கிரமக்கார ஊழியர்கள் கூட்டத்தில் சேரமாட்டான் என்பதும் நிச்சயம் என்பதால், ஜனங்கள் மனந்திரும்பி தேவகட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படி போதித்து வருகிறேன்.

நான் வெளியிட்டு வருகிற பூரண சற்குணராகுங்கள் எனும் மாதப் பத்திரிகையைப் படிக்க விரும்பினால் பின்வரும் URL-க்குச் செல்லுங்கள்.

http://www.christian-perfection.com/

-- Edited by anbu57 on Saturday 10th of October 2009 10:59:44 PM



-- Edited by anbu57 on Friday 24th of June 2011 09:15:20 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard