இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயீருந்தால், அவன் என்னுடைய வசனத்தை கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருபார்: நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்.
என்னில் அன்பாயிருந்தால் என்பது இயேசு கிறிஸ்துவில் அன்பாயிருப்பதை குறிக்கும். அவருடைய வசனத்தை கைக்கொள்லுபவர்களே அவரில் அன்பாய் இருப்பதாக சொல்லுகிறார். அப்படி அன்பினால் இயேசு கிறிஸ்து சொல்லும் வார்த்தைகளை கைக்கொண்டால் மாத்திரமே பிதாவும் அந்த நபர் மேல் அன்பாக இருப்பார். நாங்கள் (பிதாவாகிய தேவன் மற்றும் இயேசு கிறிஸ்து என்கிற இருவர்) அந்த நபரிடத்தில் வாசம் செய்வார்களாம். வாசம் செய்வது என்றால், அவர்களே அப்படியே வந்து வாசம் செய்யும் அளவிற்கு நாம் பரிசுத்தவான்கள் இல்லை, ஆகவே அவர்களின் சிந்தை மர்றும் வல்லமையாகிய (பிதாவின் ஆவி மற்றும் கிறிஸ்துவின் ஆவி) வந்து வாசம் செய்யும்.