kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்நிய பாஷைகள் / Tongues!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
அந்நிய பாஷைகள் / Tongues!!


வரங்களின் வருசையில் கடைசியில் வேதத்தில் எழுதியிருந்தாலும், எல்லாவற்றுக்கும் முதன்மையாக இன்றைய சபைகளில் இந்த "அந்நிய பாஷை" என்கிறதை வைத்திருக்கிறார்களே! வரம் என்றாலே ஆங்கிலத்திள் Gift என்று இருக்கிறது. கிஃபட் என்றாலே, பரிசாக, நாம் கேட்காமல் நமக்கு தரப்படுவது, அதை என்ன வாராவாரம் போய் கேட்டு பெற்றுக்கொள்வது என்று புரியவில்லை. அந்நிய பாஷையில் பேசினால் சாத்தானுக்கு புரியாமல் தேவனிடத்தில் பேசலாம் என்கிற ஒரு போதனை எப்படி தான் இந்த கிறிஸ்தவ மண்டலத்தில் பிரவேசித்தத்தோ தெரியவில்லை!! பாவம், தேவன் என்னமோ சாத்தனுக்கு பயந்து அவரின் பக்தர்கள் அவரிடம் இப்படி சாத்தானுக்கு புரியாமல் பேசினால் தான் அவராலே பதில் தர முடியும் என்கிற நிலையிலா அவர் இருக்கிறார்? அந்நிய பாஷை என்கிற பெயரில் இன்று சபைகளில் நடத்தப்படும் தப்பிதங்களை குறித்து பேசலாம் வாருங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஓஓஓஓ ரீமானா ஷாந்தருபாலா, ஷாயாந்துரிபாலா ரிஸ்தர கலராஷதீக்கா, பாபாபாபாப்பா. ஜீஈஈஈஈஈஈஈஈஸஸ்,,,, ரகாமந்திரப்ஹூரதரா.....




இதைத்திரும்ப திரும்ப சொல்லி பழகினால் போதுமே. அந்நிய பாஷை ரெடி! பேசி அசத்துங்கள் உங்கள் சபையாரையும் பாஸ்டர்களையும்.....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//அந்நிய பாஷை என்கிற பெயரில் இன்று சபைகளில் நடத்தப்படும் தப்பிதங்களை குறித்து பேசலாம் வாருங்கள்!!//

மாற்கு 16:17,18 வசனங்களில், விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன எனக் குறிப்பிட்டு 5 அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன.

எனவே இன்றைய சபைகளை நடத்துகிற பாஸ்டருக்கானாலும், சபைக்கு வருகிற விசுவாசிக்கானாலும், அந்த 5 அடையாளங்களில் ஒன்றாவது கட்டாயம் நடந்தாக வேண்டியதுள்ளது.

அந்த 5-ல் ஒன்றான சர்ப்பங்களை எடுப்பதற்கு பாஸ்டரும் முன்வரமாட்டார், விசுவாசியும் முன் வரமாட்டார்; எனவே அதை விட்டுவிட்டார்கள். அவ்வாறே சாவுக்கேதுவானதைக் குடிக்கிற risk-ஐயும் பாஸ்டரும் எடுக்கமாட்டார், விசுவாசியும் எடுக்கமாட்டார்; எனவே அதையும் விட்டுவிட்டார்கள். பிசாசுகளைத் துரத்துவது, வியாதியைக் குணமாக்குவது ஆகிய 2-ம் பாஸ்டர்களுக்கு ஒரு கைவந்த கலையாக இருந்தாலும், விசுவாசிகளுக்கு அவை சற்று கடினம்தான்.

ஆக, தன் சபைக்கு வருகிற ஒரு விசுவாசி, மெய்யாகவே விசுவாசிதான் என்பதை அடையாளத்தோடு நிரூபிப்பதற்கு மிக எளிதான அடையாளம் அந்நிய பாஷை ஒன்றுதான்.
எனவேதான் இன்றைய பாஸ்டர்கள் தங்கள் சபை விசுவாசிகளை எப்படியாவது அந்நிய பாஷை பேச வைப்பதற்கு தீவிரமாக முயல்கின்றனர்.

ஆனால் உண்மையில், மாற்கு 16:17,18 வசனங்கள் அடங்கிய வேதபகுதியான மாற்கு 16:9-20 வசனங்கள் நம்பத்தகுந்த மூலப்பிரதிகளில் இல்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

-- Edited by anbu57 on Friday 9th of October 2009 12:08:07 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோ அன்பு அவர்களே. மாற். 16:9-20 பிற்பாடு ஏதோ ஒரு விசுவாசியால், ஏதோ மாற்கு குறைவாக எழுதி விட்டார் என்று அன்று அப்போஸ்தலர்கள் மூலமாக நடந்தவற்றை எழுதியிருக்கிறார். 

வரம்  (Gift) என்று இருந்தால் அதை என்ன‌ கேட்டா பெற‌ முடியும். அது கொடுப்ப‌வ‌ரின் இஷ்ட்ட‌ம் தானே அன்றி, கேட்டு பெறுகிற‌ ச‌மாச்சார‌ம் இல்லை. கேட்டால் அது கிஃப்ட் கிடையாது.

Rapidex English Speaking Course மாதிரி ந‌ம் ஊழிய‌ர்க‌ள் இன்று Repeatex Tongues Speaking Course வைத்து குறுகிய‌ கால வ‌குப்புக‌ள் ந‌ட‌த்தி, த‌ந்திர‌மான‌ பேச்சுக‌ளை வ‌ர‌ வைக்கிறார்க‌ள். என்ன‌ செய்ய‌, வெறும் விசுவாசிக‌ள் மாத்திர‌ம் தான் என்று த‌ங்க‌ளை என்னி கொண்டு பெரும்பாளுமான‌ ச‌பைக்கு செல்வோர், பாஸ்ட‌ர் அல்ல‌து அந்த‌ ச‌பைக்கு வ‌ரும் ஊழிய‌ர்க‌ளால் (!) க‌வ‌ர‌ப்ப‌ட்டு, இப்ப‌டி வினோத‌ங்க‌ளை செய்ய‌ ஆர‌ம்பிக்கிறார்க‌ள். பாஷை என்றாலே அர்த்த‌ம் நிறைந்த‌ பேச்சு என்று ப‌டித்த‌வ‌னும் ச‌ரி, ப‌டிக்காத‌வ‌னும் ச‌ரி, தெரிந்து வைத்து இருப்பார்கள். இந்த பேசிக் அறிவு கூட நம்மவர்களுக்கு இல்லாமல் போய் விட்டதே என்ன செய்ய‌!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard