kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனிதனின் மரணம்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
மனிதனின் மரணம்


மனிதனின் மரணம் பற்றிய அடிப்படை "அறிவில்லாததால் ஜனங்கள் பொய் உபதேசத்திற்கு சங்காரமாகிறார்கள்" எந்த சபையிலும் மரணத்தைப் பற்றிய தெளிவான உபதேசமே கிடையாது. உலகத்திலுள்ள எல்லா துர் உபதேசங்களுக்கும் மூல காரணம் இந்த மரணம் பற்றிய தெளிவின்மைதான்.





வேத வசனத்துக்கு மாறாக போதிக்கப்படும் இந்தக் கட்டுக்கதைகளுக்கு எச்சரிக்கையாக இருப்போம்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சாத்தான் மனிதனுக்கு சொன்ன முதல் பொய் (அவன் பொய்யனும்,பொய்யுக்கு பிதாவுமாக இருக்கிறான்), "நீங்கள் சாகவே சாவதில்லை".

ஆனால் தேவன் மனிதனிடம் சொன்னது "நீங்கள் சாகவே சாவீர்கள்" இதில் தேவன், நீங்கள் ஆவிக்குறிய மரணம், ஆத்துமா மரணம், சரீர மரணம் என்று எந்த ஒரு பாகுபாடின்றி, "நீங்கள் சாகவே சாவீர்கள்" என்றார். ஆனால் சாத்தன் கற்பித்தது தான் இன்று மனிதகுலம் எங்கும் (கிறிஸ்தவ மண்டலம் உட்பட) பரவியிருக்கிறது.

சாத்தான் சொன்னதை ஏற்றுக்கொண்டு தேவன் சொன்னதற்கு அர்த்தம் கண்டு பிடிக்கிறார்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள். என்ன செய்வது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//ஆனால் சாத்தான் கற்பித்தது தான் இன்று மனிதகுலம் எங்கும் (கிறிஸ்தவ மண்டலம் உட்பட) பரவியிருக்கிறது. //

சாத்தான் கற்பித்தது இன்றைய கிறிஸ்தவ மண்டலத்தில் எவ்வாறு பரவியுள்ளது என்ப்தை சற்று விபரமாகச் சொன்னால் நலமாயிருக்கும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சாத்தான் சொன்னது, "நீங்கள் சாகவே சாவதில்லை" என்பது தானே! இதை தானே இன்று கிறிஸ்தவர்களும் நம்பியிருக்கிறார்கள்.

ஏனென்றால், "நீங்கள்" என்றவுடன் அது "ஆத்துமா", ஆத்துமா தான் சாகாதே என்ற கள்ள உபதேசம் அடி மனதில் உட்கார்ந்துவிட்டது (உபயம் வேதம் அல்ல; 2000 வருடங்களாக சபை நடத்துகிறோம் என்கிற பெயரில் வந்த தலைவர்களால் தான்). உங்கள் சரீரம் தான் மரிக்கிறது, ஆனால் உங்கள் ஆத்துமா, முழு நினைவுகளோடு பரலோகம் (ஆபிரகாமின் மடி) அல்லது பாதாளம் (அக்கினி எரியும் இடம்) சென்று விடுகிறது. அப்படி என்றால் மரித்தது என்ன? சரீரம் மட்டுமே வேர் ஒன்றும் இல்லையே. ஏனென்றால் உங்கள் நினைவுகள் அப்படியே இருக்கிறதே (உபயம் ஐசுவரியவான் லாசரு உவமை). இப்ப சொல்லுங்க சாத்தான் சொன்னதும் சபைகளின் நம்பிக்கையும் பொருத்தமாக இருக்கிறதா இல்லையா?

சபைகளுக்கு மரணம் என்றால் என்ன என்பதற்கு வேதத்திற்கு அப்பார்ப்பட்ட ஒரு கோட்பாடு இருக்கிறது, அதை தான் சாத்தான் சொல்லி தந்தது, "நீங்கள் சாகவே சாவதில்லை" என்று.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

ஆம் சகோதரரே! இன்றைய பெரும்பாலான சபைகளும் விசுவாசிகளும் மனிதர்களில் ஒரு பிரிவினர் நரகத்தில் நித்திய நித்தியமாக வாதிக்கப்படப்போவதாயும், மற்றொரு பிரிவினர் பரலோகத்தில் நித்திய நித்தியமாக ஜீவிக்கப்போவதாயும்தான் போதித்தும் நம்பியும் வருகின்றனர்.

இதை, குறிப்பாக ஒரு பிரிவினர் நரகத்தில் நித்திய நித்தியமாக வாதிக்கப்படப்போவதை நான் ஏற்கவில்லை.

ஆனால் தாங்கள் என்ன கூறப்போகிறீர்கள்?
எல்லா மனிதரும் தேவராஜ்யத்தில் நித்தியமாக வாழ்வார்கள் என்றா? அல்லது சிலர் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள், மற்றவர்கள் தேவராஜ்யத்தில் நித்தியமாக வாழ்வார்கள் என்றா?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

ஆம் சகோதரரே! இன்றைய பெரும்பாலான சபைகளும் விசுவாசிகளும் மனிதர்களில் ஒரு பிரிவினர் நரகத்தில் நித்திய நித்தியமாக வாதிக்கப்படப்போவதாயும், மற்றொரு பிரிவினர் பரலோகத்தில் நித்திய நித்தியமாக ஜீவிக்கப்போவதாயும்தான் போதித்தும் நம்பியும் வருகின்றனர்.

இதை, குறிப்பாக ஒரு பிரிவினர் நரகத்தில் நித்திய நித்தியமாக வாதிக்கப்படப்போவதை நான் ஏற்கவில்லை.

ஆனால் தாங்கள் என்ன கூறப்போகிறீர்கள்?
எல்லா மனிதரும் தேவராஜ்யத்தில் நித்தியமாக வாழ்வார்கள் என்றா? அல்லது சிலர் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள், மற்றவர்கள் தேவராஜ்யத்தில் நித்தியமாக வாழ்வார்கள் என்றா?



ஒரு பிரிவினர் இல்லை சகோதரரே, 'இயேசுகிறிஸ்துவை' ஏற்றுக்கொள்ளாத ஒரு பெரும்பிரிவினர் நரகத்தில் ஏற்கனவே வேதனைப்படுவதாயும், இப்போது ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் அதே கதிதான் என்றுதானே 'சபைபாகுபாடுகள்' இன்றி போதிக்கப்படுகிறது? இதை சற்று ஹாஸ்யமாக விளக்கத்தான் "கி.பி.300000000000ல் ஆதாம்" என்ற பதிப்பில் விளக்கியுள்ளேன். முழுவதும் படித்துப் பாருங்களேன்!




தேவன் மனிதனை பூமிக்குரிய சரீரமாகத்தான் படைத்தார். மனிதன் பூமியில் நித்திய நித்தியமாக வாழ்வதுதான் அவரது நோக்கம். இதை நாம் ஆதியாகமத்திலேயே தெளிவாக அறிந்து கொள்ள முடியும். மனிதனை பரலோகத்திற்கு கூட்டிச்செல்வது தேவதிட்டமல்ல. ஆனால் புதிய ஏற்பாட்டு 'சபை' என்ற சிறுமந்தை மாத்திரம் விதிவிலக்காகும். இது இயேசுகிறிஸ்துவுக்குப் பின் தோன்றியதாகும். பழைய ஏற்பாட்டு 'பரிசுத்தவான்கள்' கூட இந்த சபையில் பங்கு பெற இயலாது. ஆகையால்தான் 'சபை'யில் சிறியவன் யோவான் ஸ்நானகனிலும் பெரியவன் ஆகிறான்.





ஆக முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு, இது இயேசுகிறிஸ்துவின் 1000 வருட் பூமிக்குரிய அரசாட்சியில் படிப்படியாக நடக்கும். உயிர்த்தெழுபவர்கள் நீதியைக் கற்றுக்கொள்வதுதான் 'நியாயத்தீர்ப்பு' (ஏசா26:9). சாத்தான் கட்டப்பட்ட நிலையில், பூமி ஒரு பரதீசாக மாற்றப்பட்ட நிலையில் ஒரு மனிதன் ராஜ்ஜியத்திற்கு நிரந்தரமாக தகுதிபெற ஒரு ஒப்பற்ற 'வாய்ப்பு' உருவாகிறது. அதில் தகுதி அடைபவர்கள் இரண்டாம் மரணத்திற்கு நீங்கலாகி பூமியிலேயே நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள். இந்த வரப்போகும் 'பரலோக ராஜ்ஜியத்தை'க் குறித்துதான் வேதம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது. இதுவே வேதம் வலியுறுத்தும் "இராஜ்ஜியத்தின் சுவிசேஷம்".

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//உயிர்த்தெழுபவர்கள் நீதியைக் கற்றுக்கொள்வதுதான் 'நியாயத்தீர்ப்பு' (ஏசா26:9). சாத்தான் கட்டப்பட்ட நிலையில், பூமி ஒரு பரதீசாக மாற்றப்பட்ட நிலையில் ஒரு மனிதன் ராஜ்ஜியத்திற்கு நிரந்தரமாக தகுதிபெற ஒரு ஒப்பற்ற 'வாய்ப்பு' உருவாகிறது. அதில் தகுதி அடைபவர்கள் இரண்டாம் மரணத்திற்கு நீங்கலாகி பூமியிலேயே நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள்.//


தகுதி அடைபவர்கள் இரண்டாம் மரணத்திற்கு நீங்கலாவார்கள்.
அவ்வாறெனில், தகுதி அடையாதவர்கள் இரண்டாம் மரணத்திற்கு நீங்கலாக மாட்டார்களா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"ஆதாமுக்குள் எல்லாரும் மரிப்பது போல் கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" 1 கொரி 15:22 என்கிற இந்த வசனம் தங்களின் வாதமாகிய நேரடியாக இரண்டாம் மரணத்திற்கு பலர் இருக்கிறார்கள் என்பதற்கு முறனாக இருக்கிறதே?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard