"Today shalt thou be with me in Paradise".Luke23:43
மிகவும் பிரசித்தமான இந்த வசனம் அனேகமாக எல்லா பெரிய வெள்ளிக்கிழமைகளிலும் தியானிக்கப்படுகிறது. நாமும் சற்று விவாதிக்கலாமே?
இயேசு கிறிஸ்து "மரித்து" மூன்றாம் நாள்தான் உயிர்த்தெழுந்தார் என்றும் தேவன் அவரை மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள்தான் "உயிரோடு" எழுப்பினார் என்றும் நாம் நன்கறிவோம். இப்படியிருக்க இந்த "நல்ல கள்ளனை" மாத்திரம் அன்றைக்கே எப்படி பரதீசுக்கு கூட்டிச்சென்றார்?
பரதீசு என்றால் என்ன? அது எங்கிருக்கிறது?
யாராவது விளக்கலாமே? உங்களை "நடத்தும்" உங்கள் பாஸ்டர் மார்களிடமாவது கேட்டு பதிக்கலாமே?
பெரிய வெள்ளி அன்று பிரசங்கிக்கப்படும் இந்த வசனம் மொழிப்பெயர்ப்பாளர்களின் இயேசு கிறிஸ்துவை பற்றிய அறிவையே வெளிப்படுத்துகிறது. மரித்து மூன்று நாள் அளவு கல்லறையில், பின்பு 40 நாட்கள் வெவ்வேறு விதமாக தம் அப்போஸ்தலர்களுக்கு, சீடர்களுக்கும் திடப்படுத்தும் படியாக இந்த பூமியிலேயே தங்கியிருந்த இயேசு கிறிஸ்து ஏன் தான் அப்படி சொன்னார் என்று ஒரு பிரசங்கியாவது யோசிக்கிறாரா?
ஒரு கமா (,) வினால் ஒரு தவறான கோட்பாடு அல்லது பிரசங்கமே உருவாக காரணமான கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பாளர்கள் மற்றும் இதை மொழிப்பெயர்த்த "பரிசுத்த வேதாகமம்" காரர்கள் தான் பொறுப்பாகிறார்கள்.
பரதீசு என்றால் தோட்டம் (Garden). பூமியை உருவாக்கி அப்படி பட்ட ஒரு பர்தீசில் தான் தேவன் ஆதாமை வைத்தார். முதலாவது பரதீசு என்பது பாரசீக வார்த்தை என்பதையே நம் ஊழியர்கள் அறிவார்களோ என்று தெரியவில்லை! இப்படி பட்ட ஒரு பரதீசாக தான் இந்த பூமி "முந்தய சீருக்கு" திரும்பும் என்று தேவன் வாக்களித்திருக்கிறார். அதுவே, நம் கிறிஸ்துவின் அரசாட்சியும், அதை தொடர்ந்து நித்தியத்திற்கும் இந்த பூமியில் வாழப்போகும் ஒரு இடமாக இருக்க போகிறது.
நம்மவர்கள் 2 கொரி. 12ம் அதிகாரத்தில் வரும் மூன்றாம் வாணம், பரதீசு என்று குழம்பி போய், விசுவாசிகளையும் (!!) குழப்பிவிட்டு வருடாவருடம் ஒரு பிரசங்கம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பரதீசு என்றால் தோட்டம் (Garden). பூமியை உருவாக்கி அப்படி பட்ட ஒரு பர்தீசில் தான் தேவன் ஆதாமை வைத்தார். முதலாவது பரதீசு என்பது பாரசீக வார்த்தை என்பதையே நம் ஊழியர்கள் அறிவார்களோ என்று தெரியவில்லை! இப்படி பட்ட ஒரு பரதீசாக தான் இந்த பூமி "முந்தய சீருக்கு" திரும்பும் என்று தேவன் வாக்களித்திருக்கிறார். அதுவே, நம் கிறிஸ்துவின் அரசாட்சியும், அதை தொடர்ந்து நித்தியத்திற்கும் இந்த பூமியில் வாழப்போகும் ஒரு இடமாக இருக்க போகிறது.
சரியாக சொல்லியுள்ளீர்கள். அந்த தோட்டம் இன்றும் பூமியில்தான் இருக்கவேண்டும். ஏனெனில் கர்த்தர் அந்த தோட்டத்தை அழிக்கவில்லை மாறாக
ஆதியாகமம் 3:24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
என்றுதான் வேதம் சொல்கிறது.
அந்த தோட்டத்தை இன்றுவரை மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன்?
ஆனால் ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் .
என்று வசனம் சொல்கிறது.
அந்த பரதீசு எங்கே இருக்கிறது? அது மனித கண்களுக்கு தெரியாது!. என்று அதாம் துரத்தப்பட்டானோ அன்றோடு அந்த பரதீசை பார்க்கும் ஆவிக்குரிய கண்ணும் குருடாகி போனது.
அங்குதான் இயேசு மரித்த உடன் சென்றார். அந்த திருடனையும் அங்குதான் அழைத்து சென்றிருப்பார் என்று நான் கருதுகிறேன்.
ஏனெனில் இயேசு தனது காலத்தில் பேசிய வசனங்களில் "மெய்யாகவே மெய்யாகவே" சொல்கிறேன் என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர நீங்கள் சொல்வதுபோல் "இன்று நான் சொல்கிறேன்" என்று வார்த்தை எங்குமே உபயோகிக்கவில்லை.
அந்த வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிள மொழியில் இப்படி தான் இருக்கும்,
AND HE-SAID TO-HIM AMEN TO YOU I-AM SAYING TODAY WITH ME YOU SHALL BE IN THE PARK (PARADISE)
அதை இப்படியாக கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பு மாற்றியது,
Lk 23:43 And Jesus said unto him, Verily I say unto thee, To day shalt thou be with me in paradise.
இந்த கமா (,) மனித ஞானத்தில் புகுத்தி இந்த வசனத்தை கொலை செய்து விட்டார்கள் இவர்கள். இதையே நம் பரிசுத்த வேதாகமம் அப்படியே மொழிபெயர்த்து பெரிய வெள்ளியன்று அல்லது லெந்து காலத்தில் பிரசங்கம் செய்ய வசதியாக ஒரு தலைப்பை உருவாக்கியது. இந்த கமாவை சேர்த்ததினால் தான் இத்துனை பிரச்சனைகளும் வந்தது என்பது நினைவு இருக்கட்டும்.
"மெய்யாகவே மெய்யாகவே" என்ரு இரு முறை அந்த வசனத்தில் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
-- Edited by bereans on Friday 6th of November 2009 05:26:28 PM
Raaj wrote அங்குதான் இயேசு மரித்த உடன் சென்றார். அந்த திருடனையும் அங்குதான் அழைத்து சென்றிருப்பார் என்று நான் கருதுகிறேன். 'கட்டுக்கதைகளுக்கு செவிசாய்க்கும் காலம்' இதுவேயாதலால் நீங்கள் 'கருதுவதில்' ஒன்றும் ஆச்சரியமில்லை.
இயேசுவே மரித்து மூன்றாம் நாள்தான் தேவன் அவரை மரித்தோரிடத்த்லிருந்து எழுப்பினார் என்றுதான் வேதம் சொல்கிறது. கள்ளன் இன்றுவரை எழவில்லை, ஆனால் கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பூமி முழுவதும் 'பரதீசாக' மாறிய பின்புதான் உயிர்த்தெழுதல் ஆரம்பமாகும். அதுவரை எல்லாம்
'பிரேதக்குழி'யில்தான் இருக்கவேண்டும்.
ஏற்கனவே அவன் பரதீசில் இருக்கும்பட்சம் அவன் ஏன் உயிர்த்தெழ வேண்டும். எதற்கு நியாயத்தீர்ப்பு?