அந்தி கிறிஸ்து யார்? எப்போது வருவான்? சிலர் சதாம் என்றார்கள், சிலர் ஒபாமா என்கிறார்கள், 666 முத்திரை என்பது இன்டர்னெட்டில் www என்பதுதான் என்றார்கள், அதுவும் இப்போது http:// என்று வருகிறது. மூன்றரை வருடம் உபத்திரவமாம் பின்பு மஹா உபத்திரவமாம் அதன்பின் கிறிஸ்துவின் 1000 வருட அரசு. (இத்தனை உபத்திரவங்களையும் தாண்டி 1000 வருட ஆட்சிக்கு யார் எஞ்சப்போகிறார்கள்). யாராவது விளக்குங்களேன்?
இரண்டையுமே சேர்த்து பார்த்தோம் என்றால், "கிறிஸ்துவை போல் இருந்துக்கொண்டு, கிறுஸ்துவிற்கு எதிரானவன்" என்பது தான் இதற்கு சரியான பதிலாகும்.
அந்தி கிறிஸ்து ஏதோ இனி வர போகும் ஒரு நபர்(!) என்று இன்று கிறிஸ்தவ மண்டலத்தில் சொல்லிக்கொண்டிருந்தாலும், "அக்கிரமத்தின் இரகசியம் (அந்திகிறிஸ்துவிற்கு இடபட்ட மற்றுமோர் பெயர்) இப்பொழுதே கிரியைசெய்கிறது" (2 தெச 2:7) என்று பவுல் எழுதியதை ஏனோ இந்த கிறிஸ்தவ மண்டலம் பார்ப்பதில்லை. அதாவது கிறிஸ்துவின் உபதேசங்களுக்கு எதிராக (தப்பிதங்கள்) ஒரு கூட்டம், கிறிஸ்தவர்கள் என்கிற பெயரிலேயே செய்துக்கொண்டிருந்ததை தான் அப்போஸ்தலர் அப்படி எழுதுகிறார்.
எப்படி கிறிஸ்து என்றால் தலையாகிய இயேசு கிறிஸ்துவும், சரீரமாகிய சபையும் இருக்கிறதே, அப்படியே அந்தி கிறிஸ்து என்றால் அது ஒரு அமைப்பு (system). அந்தி கிறிஸ்து என்பது ஒரு தனி நபர் இல்லை, அது அப்போஸ்தலர் காலத்திலிருந்து தொடர்ந்து இயங்கி வரும், தப்பிதங்களை போதித்து வரும் ஒரு அமைப்பு (system). தன்னையே சபை என்று சொல்லிக்கொண்டும், இயேசு கிறிஸ்துவிற்கு பதிலாக இந்த பூமியில் தாங்கள் தான் போதனைகளை தர முடியும் அல்லது இயேசு கிறிஸ்துவிடம் இருந்து பெற்று தர முடியும் என்று இயங்கி கொண்டிருக்கும் ஒரு தலைமை அமைப்பு தான் அந்தி கிறிஸ்து.
இந்த அந்திகிறிஸ்து என்கிற அமைப்பு பலம் பெற்று பல ஆண்டுகள் ஆலுகை செய்து தற்போது அதன் பலத்தை சற்றே இழந்து நிற்கிறது, ஆனால் பிரிந்து சென்ற அனைத்து சபைகளும் இந்த அமைப்புக்கு மீண்டும் ஆதரவு தரும் காலம் நெருங்கி வருகிறதை நாம் அனைவரும் இன்று உணர்ந்து பார்க்க முடிகிறது. சபைகள் ஒன்று கூடுவதை நாம் பார்க்க முடிகிறது. அது தான் ஆட்டுகுட்டி (பிற சபைகள்) மிருகத்தின் (அந்திகிறிஸ்து) சத்தத்தில் (உபதேசங்கள்) பேசுவாதாகும் (வெளிப்படுத்தின விசேஷம்). இங்கு எழுதியது புரியும் என்றே நான் நினைக்கிறேன். புரியாமல் இருந்தால் கேள்விகள் எழுப்புங்கள், தெளிவு படுத்துகிறேன்.