இந்த யுகத்தின் பல விஞானிகள் ஒரு உயர்வான, புத்திசாலியான படைப்பாளி இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். நியூ யோர்க் அறிவியல் அகாடமியின் முன்னால் தலைவர் திரு ஏ. கிரெச்சி மாரிசன் சொல்லியது, "கனித சூத்திரங்கள் படி நாம் இந்த பிரபஞ்சத்தின் படைப்பை குறித்து ஆராய்ந்து பார்த்தோமென்றால், இதை படைத்தவர் ஒரு மிக பெரிய ப்றியியல் அறிவாழியால் உணடக்கப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை". நம் ஐந்து புலன்கலால் மாத்திரமே நாம் தேவன் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள முடிவதில்லை.
நாம் அவரை பார்க்கவோ, உணரவோ, முகர்க்கவோ, ருசிக்கவோ, தொடவோ முடியாது. தேவன் நம் கண்களுக்கு காணப்படாதவராக இருக்கிறவர், ஆனால் காண கூடிய இயற்கையின் மூலமாக அவர் இருப்பதை நாம் பகுத்தறிய முடியும். (ரோம 1:20). நமக்கு உண்டான விவேக அறிவின் மூலமாக (reasoning ability) அரிய முடியும். நாம் இயற்கையில் காணும் மாபெரும் அதிசயங்களை பார்த்தும், ஒரு ஆறிவாழியான படைப்பாளி இல்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது (சங். 53:1). மனிதன் ஒரு பொருளை செய்தாள் அவன் அதின் படைப்பாளியாக சொல்லப்படுகிறான். மனிதனின் படைப்பு திறன் மிகவும் குறுகியது ஏனென்றால், அவன் இருக்கும் ஒரு பொருளை வைத்தே இன்னொன்றை படைக்கிறான் அல்லது உருவாக்குகிறான். ஒரு வீட்டை அவன் படைப்பதில்லை, மாறாக் கட்டுகிறான், ஏனென்றால் அதின் பயன் படும் அனைத்து பொருட்களும்மெ ஏற்கனவே இருக்கும் பொருட்களாகவே இருக்கிறது.
ஒரு கட்டிடம் கட்டுவது என்றால், அதற்கென்று வரைப்படம், திட்டம், அளவுகள், தேவையான பொருட்கள் என்று அனைத்தையும் பார்க்க வேண்டும். முதலில் ஒரு அஸ்திவாரம் துள்ளியமாக இட வேண்டும். அதின் மேல் கட்டிடம் எழும்ப வேண்டும். பின்பு கூறை. திட்டத்தின் படி பல அறைகள் இருக்க வேண்டும். ஒரு வீடு என்பது சும்மா நினைத்தவுடன் நிற்க முடியாது. எந்த ஒரு வீடோ, அல்லது ஒரு கட்டிடமோ கட்ட ஒரு புத்திசாலியான பொறியாளர் வேண்டும். அப்படியே, மனிதனின் குடியிறுப்புக்கென்று உருவாக்கப்பட்ட பூமிக்கும் ஒரு ஒரு புத்திசாலியான பொறியாளர் இருப்பது தெரிகிறது (யோபு 38:4-8). இந்த பூமியின் படைப்பை பார்த்தால் வியப்பாக இல்லையா! (யோபு 38:25-28). எத்துனை விதமான மரங்கள், கனிகள், மலர்கள், வியப்பாக இல்லையா!
மனிதன் ஒரு செயற்கையான மலரை உருவாக்க முடியும், ஆனால் அதற்கு ஜீவனை தர முடியாது. நாம் ஒரு புள்ளின் கூர்மையையை ரசிக்க முடியும், காட்டில் உள்ள மரங்களை பார்த்து வியக்க முடியும், ஆனால் அவைகளை அவ்வனமாக நேர்த்தியாக உருவாக்க முடியாது, அவை எப்படி வந்தது என்று கற்பனையை தவிர. ஒரு விதையை விதைத்து அதிலிருந்து முலைத்து வரும் செடியை, பின்பு அது மரமாக மாறுவதை ஆச்சரியமாக பார்க்க முடியுமே தவிர, அது எப்படி நடக்கிறது என்பதை சொல்ல முடியாது. சிலர் இது வெறும் இயற்கையே என்று சொல்லிவிடுவார்கள், ஆனால் ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். (சங். 107:43).
மனிதன் வானங்களை பார்க்கும் போது, அதில் உள்ள விந்தைகளை ஆராயும் போது அந்த அறிவாளியான படைப்பாளியை நினைக்காமல் இருக்க முடியாது (சங். 19:1,2). வான சாஸ்திரியின் டெலெஸ்கோப் நட்சத்திரங்களையும், விரிந்திருக்கும் வான்மண்டலத்தின் அதிசயங்களையும் பார்க்க செய்கிறது. இவை எல்லாம் ஒரு காண முடியாத கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்பதை புரிந்துக்கொண்டு, இவை எல்லாம் ஒரு புத்திசாலியான படைப்பாளியின் அறிவின்றி நடக்காது என்பதை தெரிய முடிகிறது. நம் அறிவுப்பூர்வமான சிந்தனை இப்படி ஒரு முடிவிற்கு வந்தது என்றால், நாம் அந்த படைப்பாளியை இன்னும் அதிகமாக அறிய வாஞ்சிப்போம் (யோவான் 17:3), அவரின் வழிகளை கற்றுக்கொண்டு அவரை பின் பற்ற பிரயாசிப்போம்.(நீதி. 1:7)
நம்முடைய உடலில் ஒவ்வொரு வினாடியும் சுமார் 2600000000000000000000000000 (26 சைபர்கள்) நிகழ்வுகள் நடக்கின்றனவாம். இது மொத்த அண்ட சராசரத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்டிலும் அதிகம். இவை 'தற்செயலாக' நடக்கின்றன என்று முட்டாள்கூட நம்பமாட்டான்.