பூமியில் சம்பவிக்கும் துயரங்கள், பாடுகளின் நிமித்தம் அநேக மக்கள் தேவன் தந்திருக்கும் அழகான வாக்குத்தத்தங்களை பார்க்க இயலாமல் இருக்கிறது. அவர்கள் கேட்பது ஒன்றே, "தேவன் அன்பாக இருக்கிறார் என்றால் ஏன் அவரின் பிள்ளைகளுக்கு இத்துனை துக்கம், துயரங்கள்?". இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் மூன்று முடிவுகள் கிடைக்கும்; தேவன் அக்கறை உள்ளவராக இல்லை; தேவன் என்பவர் இல்லவே இல்லை; அல்லது தேவனின் திட்டங்களை புரியாமல் நாம் தவறான சந்தேகங்கள் எழுப்புகிறோம். அப். யோவான் எழுதியப்படியே, "தேவன் அன்பாகவே இருக்கிறார்" 1யோவான் 4:8
தேவன் தீமையை அனுமதித்தாலும் அவரே அதை செய்வதில்லை. 2 கொரி 4:4ல் சாத்தானை "இப்பிரபஞ்சத்தின் தேவன்" என்று பவுல் எழுதுகிறார். இந்த சாத்தானின் பாதிப்பு தான் மனிதனை இந்த வீழ்சிக்கு எடுத்து சென்றது. தேவன் இதை அனுமதித்தார். மனிதர்கள் பாவத்தையும் அதின் விளைவுகளையும் புரிந்துக்கொண்டு, அவர்களின் சுய சிந்தையினால் தேவனை நேசிக்கவும் அவ்ரின் நீதியை புரிந்துக்கொள்ளும் படி இப்படி அனுமதித்தார்.
தேவன் மனிதனை பூரணமானவனாகவே படைத்து அவன் வாழுவை தெரிந்துக்கொள்ள வாய்ப்பு கொடுத்தார்; நீ என் கட்டளைகளை கடைப்பிடித்தால் என்றென்றும் வாழவாய்; கீழ்படியாமல் போனால் சாவாய், என்றார். ஆதாம் இந்த கீழ்படிதலின் பரீட்சையில் தோற்று போய், முழு மனித குடும்பத்திற்கு பாவத்தின் விளைவை அனுபவிக்கும் படி செய்தான். "பாவம் செய்யும் ஆத்துமா சாகும்" எசே. 18:4 "கவனிக்கவேண்டியது, பாவம் செய்வதால் நீ என்றைக்கும் எரிந்துக்கொண்டிருப்பாய் என்று சொல்லவில்லை".
தேவன் அன்புள்ளவராக இருக்கிறபடியால், அவர் என்றைக்குமே சாத்தான் இந்த பூமியை ஆளும் படி விட்டு விட மாட்டார். தேவனின் இரக்கத்தில், ஆதாமின் பாவத்தினால் மரித்துக்கொண்டிருக்கும் இந்த மனித குடும்பத்திற்கு ஒரு விலை கிரயம் ஏற்பாடு செய்தார். "ஆதாமிற்குள் எல்லோரும் மரிப்பது போல், கிறிஸ்துவிற்குள் அனைவரும் உயிர்த்தெழுவார்கள்" 1கொரி. 15:22. "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்" ரோம் 6:23.
ஆனால் எப்போழுது? மனிதர்கள் இந்த பொல்லாத பூமியின் நிமித்தம் சோர்ந்து போயிருக்கிறான். இயேசு கிறிஸ்து, "எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்து ஏற்ற காலங்களில் இதை விளங்கசெய்து வருகிறார்." 1 தீமோ. 2:6. அந்த ஏற்ற காலம் இப்பொழுதாக இருப்பதை நிறைவேறிக்கொண்டிருக்கும் வாக்குதத்தங்களினால் நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது.
ஆம், தேவன் அன்பானவராக இருக்கிறார். சாத்தான் நம்மை வேறு விதமாக யோசிக்க வைக்கலாம், ஆனால் தேவனின் ஏற்ற காலம் வரும் போது, அவரின் நண்மையை புரிந்துக்கொள்வோம், "அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வர்" எரே. 31:34. அதற்கு பிறகு வாக்கு பண்னப்பட்ட அந்த 'விடியற்காலத்து அக்களிப்பு' உண்டாகும், "அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின" வெளி. 21:4