kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள் ஏன் கண்முன்னே வருவதில்லை ?


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
கடவுள் ஏன் கண்முன்னே வருவதில்லை ?


சில பேர் கடவுள் எங்கே - எப்படி என்று கேட்டு சந்தேகிக்கவும் சில பேர் கடவுள்
ஒருவர்தானென்று சொல்லவும், சில பேர் கடவுள் பலவுள என்று பேசவும், மற்றும் சில பேர் 'நானே கடவுள்' என்று வேதாந்தம் பேசவும், வேறு சிலர் கடவுள் இல்லை என்று கூறவும், இவ்விதமாக மக்களுக்குள் சதா மனக் குழப்பத்தை விளைவித்துக்
கொண்டிருக்கும் ஒரு நல்ல கடவுளும் இருக்க முடியுமா?

மேற்கண்ட  வார்த்தைகள் பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் பெரியார் அவர்களால் பேசப்பட்டவை.
 
அவர் கேட்பதில் ஒரு நியாயம் இருப்பதால் அதே கேள்வியை நானும் திரும்பி கேட்கிறேன்!
 
சர்வ வல்லவர்,  சர்வ வியாபி,  சர்வஞானி   சகலத்தையும் படைத்தவர், 
சாவே இல்லாதவர்   எல்லோருக்கும் தந்தையென்று  இறைவனை  புகழ்கிறோம்  
என்றென்றும்  உயர்த்தி  போற்றுகிறோம் என்றாவது ஒருநாள் இறைவன்
எதேட்சையாக  நேரில்வந்து   எல்லோருக்கும் தரிசனம் கொடுத்து,
எது உண்மையென்று எடுத்துரைத்து "நான்தான் கடவுள் நம்பு என்னை"  என்று   
உரைத்து விட்டால் எண்ணில்லா பிரச்சனைகள் எளிதில்  தீர்ந்துவிடும்  
எது  உண்மையென்று  எல்லோருக்கும் புரிந்துவிடும்!   
 
மனதெளிவு கிடைக்கும் மதப்பேய் ஒழியும்!
குண்டுவெடிப்பு குறையும் குரோதங்கள் மாறும்  
பகமை வெறி மாறும் பாவங்கள் குறையும்
நல்லிணக்கம் மலரும் நன்மைகள் பிறக்கும்
இலகுவான வழி இங்கு இருந்தும்   
இறைவன்  ஏன்  எங்கோபோய் இருந்துகொண்டு
எவருக்கும் தெரியாமல் தன்னை மறைத்துக்கொண்டு  
என்னை தேடு  தெரிவேன் என்று உரைப்பது ஏன்?
 
மனிதனை படைத்தவருக்கு
மனிதனாக வரத்தெரியாதா?  
வானங்களை படைத்தவருக்கு
வான் வரை உயர்ந்துநிற்று  
நான்தான் பெரியவனென்று 
நாடெங்கிலும்  காட்டதெரியாதா?
 
நீர் படைத்த மனிதனிடம்   பாசமாய்
நேர் வந்து நின்று  பேசாமல் யாரோ
இடைத்தரகர்கள் மூலமாய் மட்டுமே   
இன்றுவரை நீர் பேசுவதேன்?  
 
  
பாவி நீ  என்றும்  இறைவனை பார்க்கமுடியாது  என்றுரைத்தாலும்,
பாவியையும் பாரினில்  படைத்தவர்  பாசம் மிகு பரமன்  நீர்தானன்றோ!
தந்தை நீர் மகன் நான் என்றால், மகவுக்கு  தெரியாமல் தன்னை  
மறைத்துக்கொண்டிருக்கும்  ஓர் மகத்தான தந்தையும் உண்டோ!  


ஏன் இறைவன் நேரடியாகவந்து எல்லோருக்கும்
தன்னை வெளிப்படுத்தவில்லை? ஆயிரம் குழப்பங்கள் இருக்கும்
ஆன்மீகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவில்லை?
சரியான பதிலிருந்தால் கூறவும்.





 
 


-- Edited by RAAJ on Friday 25th of September 2009 01:17:27 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்புள்ள சகோதரரே!

    ஒரு கிறிஸ்தவனாக இதற்குண்டான பதில், தேவனோடைய எல்லா தன்மைகளையும் எழுதியிருக்கிறீர்கள், ஆனால் முக்கியமான ஒன்று, இன்று பெரும்பாளுமான ஊழியர்கள் பொய் பிரசஙம் செய்வது இதை வைத்து தான். அதாவது, அவர் "மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்" 1 தீமோ 6:16.

காற்றை நாம் பார்க்க முடிவதில்லை, ஆனால் உணர முடிகிறது. தேவன் ஆவியாக இருக்கிறார். அவரை பார்க்க முடியாது ஆனால் உணர முடியும். நாம் மாத்திரம் இல்லை, இந்த இயற்கையே அதற்கு சாட்சியாக இருக்கிறது. பெரியார் என்ன காற்றை கண்டு தான் காற்றென்று ஒன்று இருப்பதை நம்பினாரா. அவர் கேட்ட கேளிவியை இன்று அவரின் அனுதாபிகள் தப்பாக தான் புரிந்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர் கேட்டது என்னவென்றால், "பூமியில் இவ்வுளவு அக்கிரமங்கள் நடப்பதை பார்த்து கொண்டு ஒரு கடவுள் இருப்பார் என்று என்னை நம்ப சொல்லுகிறீர்களா?" என்று தானே. பகுத்தறிவு, கடவுள் இல்லை, விக்கிரகங்கள் இல்லை என்பதை சொல்லி தரும் இவர்கள், ஏன் பெரியார் சிலைக்கு மாலை போடுகிறார்கள் என்று பதில் சொல்ல முடியுமா. சரி போகட்டும், இது நமக்கு தேவை இல்லாத விஷயம் தான்.

ஒரு கட்டிடம் கட்டி முடித்த பின்பே அதை கட்டியவரை நம்மால் பாரட்ட முடியுமே தவிர, அந்த கட்டிடம் பாதியில் இருக்கும் போது, பல விதமான வியாக்கியான‌ங்க‌ள் தான் கேட்க‌ முடியும். அப்ப‌டியே ந‌ம் தேவ‌ன் (க‌ட‌வுள்) என்ப‌வ‌ர் ஒரு மிக‌ சிற‌ந்த‌ ப‌டைப்பாளி. த‌ற்போது இருக்கும் சூழ‌லை வைத்து வியாக்கியான‌ம் செய்வ‌தில் நியாய‌ம் இல்லையே. அவ‌ரின் திட்ட‌ம் முழுவ‌தும் நிறைவேறும் போதே அவ‌ரின் திட்ட‌த்தை முழுமையாக‌ புரிந்துக்கொள்ள‌ முடியும். அந்த‌ கால‌த்திற்காக‌ தானே இன்று அனைவ‌ரும் (எல்லா ம‌னித‌ர்க‌ளும், ஏன் இய‌ற்கையும்) ஏங்குகிறார்க‌ள். ப‌ண‌ம் வைத்த‌வ‌னும் சந்தோஷமாக இல்லை , இல்லாத‌வ‌னும் திருப்தியாக‌ இல்லை.

"மனிதனை படைத்தவருக்கு
மனிதனாக வரத்தெரியாதா? 
வானங்களை படைத்தவருக்கு
வான் வரை உயர்ந்துநிற்று 
நான்தான் பெரியவனென்று
நாடெங்கிலும்  காட்டதெரியாதா?"

ம‌னித‌ன் எத்த‌னையோ விஷ‌ய‌ங்க‌ளை ப‌டைத்திருக்கிரான், அந்த‌ விஷ‌ய‌மாக‌ மாறினால் தான் அதை புரிந்துக்கொள்ள‌ முடியும் என்ப‌து இல்லை. அதாவ‌து அவ‌ன் ப‌டைத்த‌ ஒரு மின்விள‌க்காக‌ மாறினால் தான் அவ‌னால் அந்த‌ மின்விள‌க்கின் செய‌ல்பாடுக‌ளை ச‌ரி செய்ய‌ முடியும் என்ப‌து இல்லையே. அப்ப‌டியே தேவ‌ன் ம‌னித‌னாக‌ வ‌ந்தால் தான் ம‌னித‌னை ச‌ரி செய்ய‌ முடியும் என்ப‌து இல்லை. "அவ‌ர் வான‌ங்க‌ளை விரித்த‌வ‌ர்" என்று அன்று ஏசாயா தீர்க்க‌த‌ரிசி எழுதிய‌தை தான் இன்று "expansion of Universe" என்று ந‌ம் விஞானிக‌ள் நோப‌ல் ப‌ரிசுக‌ள் வாங்கி செல்கிறார்க‌ள். அவ‌ரின் செய‌ல்பாடுக‌ளை அவ‌ர் ம‌னித‌னை வைத்தே சொல்ல‌ வைக்கிறார், அதை விந்தையாக‌ பார்க்கிறோமே த‌விர‌, அந்த‌ ப‌டைப்பாளியை ம‌ற‌ந்து போகிறோமே. என்ன‌ நியாய‌ம்?

"நீர் படைத்த மனிதனிடம்   பாசமாய்
நேர் வந்து நின்று  பேசாமல் யாரோ
இடைத்தரகர்கள் மூலமாய் மட்டுமே  
இன்றுவரை நீர் பேசுவதேன்?"

நாம் அந்த‌ க‌ட‌வுளின் சாய‌லில் இருப்ப‌தினால் தான் பாச‌ம் என்கிற‌ ஒன்று ந‌ம்மில் இருப்ப‌தை ம‌றுக்க‌ முடியாது. உல‌க‌த்தில் எங்கு ஒரு துய‌ர‌ம் நேர்ந்தாலும் அத‌ற்கு க‌ண்ணீர் விடுகிறோமே, எப்ப‌டி? தேவ‌ சாய‌லில் இருப்ப‌தால் தானே? "இடைத்த‌ர‌க‌ர்க‌ள்" Business தெரியாத‌வ‌ர்களாக‌ இருப்ப‌தால் தான் அவ‌ர்க‌ளால் தேவ‌னை சொல்ல‌ முடிய‌வில்லை. அவ‌ர்க‌ள் சுய‌ந‌ல‌வாதிக‌ளாக‌ இருந்து தாங்க‌ள் த‌ங்க‌ள் குடும்ப‌ம் என்று இருந்து விட்ட‌தால் அந்த‌ தேவ‌னை எடுத்து சொல்ல‌ முடிய‌வில்லை. ஆனால் ஆறுத‌ல் த‌ரும் தேவ‌ வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு ம‌னிதர்க‌ளின் மூல‌மாக‌ வ‌ந்து இருக்கிற‌து. உம். வெளி. 21:4.

ஏதோ என்னால் முடிந்த‌து. இதை வாசிப்ப‌வ‌ர்க‌ள் இன்னும் அநேக‌ர் இருப்பார்க‌ள், ந‌ல்ல‌ ப‌தில் வ‌ரும் என்று ந‌ம்புகிறேன்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

///காற்றை நாம் பார்க்க முடிவதில்லை, ஆனால் உணர முடிகிறது. தேவன் ஆவியாக இருக்கிறார். அவரை பார்க்க முடியாது ஆனால் உணர முடியும். ///
 
சகோதரர்  அவர்களே  காற்றை பார்க்க முடியாது மின்சாரத்தை பார்க்க முடியாது போன்ற பல்வேறு உதாரணங்கள் அனைவரும் அறிந்தவையே இது ஏற்ப்புடயதாக தோன்றவில்லை ஏனெனில் 
மனிதனை  மாமிசமும்  சதையுமாக படைத்த ஒரு சர்வவல்லவருக்கு  அவன் போன்றொரு உருவத்தில் வந்து  "நான்தான் கடவுள் என்னை நம்பு" என்று சொல்லுவது ஒரு பெரிய காரியமே அல்ல என்று நான் கருதுகிறேன்.

////ஒரு கட்டிடம் கட்டி முடித்த பின்பே அதை கட்டியவரை நம்மால் பாரட்ட முடியுமே தவிர, அந்த கட்டிடம் பாதியில் இருக்கும் போது, பல விதமான வியாக்கியான‌ங்க‌ள் தான் கேட்க‌ முடியும். அப்ப‌டியே ந‌ம் தேவ‌ன் (க‌ட‌வுள்) என்ப‌வ‌ர் ஒரு மிக‌ சிற‌ந்த‌ ப‌டைப்பாளி. த‌ற்போது இருக்கும் சூழ‌லை வைத்து வியாக்கியான‌ம் செய்வ‌தில் நியாய‌ம் இல்லையே. அவ‌ரின் திட்ட‌ம் முழுவ‌தும் நிறைவேறும் போதே அவ‌ரின் திட்ட‌த்தை முழுமையாக‌ புரிந்துக்கொள்ள‌ முடியும்.//// 


கட்டடம் கட்டுப்வரை அவ்விடத்துக்கு போனால் நிச்சயம் பார்க்க முடியும் அல்லது கட்டடம் கட்டப்படும் இடத்தில் போய் விசாரித்தால் அவர் இருக்கும் இடத்தை சுலபமாக அறிந்து அவரை போய் பார்த்திடலாம்.  நீங்கள் சொல்வதுபோல் பல ஆயிரக்கனக்கான வருஷங்கள் மறைந்திருந்துகோண்டு கட்டடம் கண்டும் ஒருவரா இறைவன்?
 
பொய்யும் புரட்டும் மலிந்து கிடக்கும் இக்காலங்களில் அவரவர் ஒரு கடவுளை பிடித்துக்கொண்டு இதுதான் உயர்ந்தது எங்கள் வழிதான் சிறந்தது என்று அடித்துக்கொண்டு சாகின்றனர். ஒருவர் சொல்வதையும் உண்மை என்று நம்ப முடிவதில்லை இதில் புதியதாக இறைவனை தெயடிவரும் ஒருவருக்கு உண்மை எதுவென்று தெரியாமல் மூளை குழப்பம்தான் ஏற்ப்படும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இறைவன் தன்னை தேடி வருபவர்களுக்க்கவது தன்னை வெளிக்காட்டி அவனை அரவணைக்கலாமே என்பதுதான்  எனது
ஆதங்கம்! 
 


 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அதை தான் சகோதரரே சொல்லுகிறேன். கட்டிட வேலை முடியும் வரை நாம் காத்திருப்போமே. பலர் அந்த படைப்பாளியை பார்க்கவேண்டும் என்கிற உணர்வில் இருந்ததால் தான் இன்று இத்துனை வேத புரட்டர்கள் வந்துவிட்டார்கள். இயேசு கிறிஸ்து ஆவியாக இருக்கிறார், தேவன் ஆவியாக இருக்கிறார் அவர்களை மாமிச‌ கண்கள் பார்க்க முடியாது, ஆனால் இந்த புரட்டர்களோ, அன்றாடும் இந்த ஆவிக்குறியவர்களை பார்க்கிறார்களாம்! என்ன செய்வது, கடைசி காலத்தில் இது எல்லாம் நேரிட்டு தான் ஆக வேண்டும் என்பதை வேதம் தெளிவாக சொல்லியிருக்கிறது.

பவுல் தனக்கு 14 வருடங்கள் முன்பு காட்ட பட்ட ஒரு காட்சியை எத்துனை எளிமையாக தாழ்சியுடன் 14 வருடங்கள் சென்ற பின்பு சொல்லுகிறார்கள். ஆனால் இன்றைய கள்ள தீர்க்கதரிசிகள், பிரசங்கிமார்கள், அன்றாடும் தாங்கள் பார்பதாக நம்பும் காட்சிகளை பொய்யுடன் ஜோடித்து சொல்லி வருவதில் சற்றும் பயம் கொள்வதில்லை.

ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்,

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே ப‌ர‌லோக‌ராஜ்ய‌த்தில் பிர‌வேசிப்பானேய‌ல்லாம‌ல், என்னை நோக்கி க‌ர்த்தாவே! க‌ர்த்தாவே! என்று சொல்லுகிற‌வ‌ன் அதில் பிர‌வேசிப்ப‌தில்லை. அந்நாளில் அநேக‌ர் என்னை நோக்கி க‌ர்த்தாவே! க‌ர்த்தாவே! உம‌து நாம‌த்தினாலே தீர்க்க‌த‌ரிச்ன‌ம் உரைத்தோம் அல்ல‌வா? உம‌து நாம‌த்தினாலே பிசாசுக‌ளை துர‌த்தினோம் அல்ல‌வா? உம‌து நாம‌த்தினாலே அநேக‌ அற்புத‌ங்க‌ளை செய்தோம் அல்ல‌வா? என்பார்க‌ள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்க‌ளை அறிய‌வில்லை; அக்கிர‌ம‌ச் செய்கைக்கார‌ரே, என்னைவிட்டு அக‌ன்றுபோங்க‌ள் என்று அவ‌ர்க‌ளுக்கு சொல்லுவேன்." ம‌த். 7:21-23.

க‌வ‌னிக்க‌வேண்டிய‌வைக‌ள்:  
        
     இன்று க‌ர்த்தாவே க‌ர்த்தாவே என்று வீதிக்கு வீதி, மைதான‌த்திற்கு மைதான‌ம், ஊருக்கு ஊர், நாடுக்கு நாடு சென்று சொல்லிவ‌ருப‌வ‌ர்க‌ளை. இவ‌ர்க‌ள் மெய்யாலுமே தேவ‌னை ம‌கிமைப்ப‌டுத்துகிறார்க‌ளா?

       இவ‌ர்க‌ள் அற்புத‌ங்க‌ள் என்றும், தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள் என்றும், பிசாசுக‌ளை துர்த்துப‌வ‌ர்க‌ள் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், கிறிஸ்து இவ‌ர்க‌ளை ஒரு போது அறிய‌வில்லையாம்.

     அக்கிர‌ம‌ (கிர‌ம‌ம் இல்ல‌ம‌ல் செய‌ல்ப‌டுப‌வ‌ர்க‌ள், undisciplined, எந்த‌ கால‌த்தில் என்ன‌ செய்ய‌ வேண்டும் என்ப‌தை தெரியாம‌ல் செய‌ல்ப்ப‌டுப‌வ‌ர்க‌ள்) செய்கைகார‌ர்க‌ளே என்று பெய‌ர் எடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள்.

    நாம் இதில் இருக்க‌ வேண்டுமா? இப்ப‌டி ப‌ட்ட "அநேக" க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிசிக‌ளின் வார்த்தைக‌ளை தான் உண்மை என்று பின் ப‌ற்ற‌ வேண்டுமா. அவ‌ர்க‌ள் அதிர‌ச‌ன‌மான‌ தேவ‌னை த‌ரிசித்தார்க‌ள் என்று த‌ங்க‌ளை மேன்மை ப‌டுத்துவ‌தை விசுவ‌சிக்க‌ வேண்டுமா.

ப‌ர‌லோக‌ த‌ரிச‌ன‌ங்க‌ளை பார்ப்ப‌தாக‌ சொல்லி வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு:

" எழுதியிருக்கிற‌ப‌டி தேவ‌ன் த‌ம்மில் அன்புகூறுகிற‌வ‌ர்க‌ளுக்கு ஆய‌த்த‌ம் ப‌ண்ணின‌வைக‌ளைக் க‌ண் காண‌வுமில்லை, காது கேட்க‌வுமில்லை, அவைக‌ள் ம‌னுஷ‌னுடைய‌ இறுத‌ய‌த்தில் தோன்ற‌வுமில்லை" 1 கொரி. 2:9

மேலும்,

"அவ‌ரை நீங்க‌ள் காணாம‌லிருந்தும் அவ‌ரிட‌த்தில் அன்புகூறுகிறீர்க‌ள்; இப்பொழுது அவ‌ரைத் த‌ரிசியாம‌ளிருந்தும் அவ‌ரிட‌த்தில் விசுவாச‌ம் வைத்து சொல்லிமுடியாத‌தும் ம‌கிமையால் நிற‌ந்ததுமாயிருக்கிற‌ ச‌ந்தோஷ‌முள்ள‌வ‌ர்க‌ளாய்க் க‌ளிகூர்ந்து, உங்க‌ள் விசுவாச‌த்தின் ப‌ல‌னாகிய‌ ஆத்தும‌ர‌ட்சிப்பைஒ அடைகிறீர்க‌ள்" 1 பேது 1:8,9



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கடவுள் ஏன் கண்முன்னே வருவதில்லை என்று கேள்வி கேட்பது ஒரு பொதுவான காரியம்தான், ஏன் எல்லாருக்குமே ஆழ்மனதில் அந்த ஆதங்கம் இருக்கும். ஆனால் சத்திய வசனத்தை அறிந்த ஒருவரும் அப்படி கேட்கமாட்டார்கள். எனென்றால் "சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவால் நிறைந்திருக்கும்", என்ற தீர்க்க தரிசன வசனம் இன்னும் நிறைவேறவில்லை. "முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சுவாசமுள்ள யாவும் அவரைத்துதிக்கும், மாமிசமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" போன்ற வசனங்கள் அவருடைய வரப்போகும் பூமிக்குரிய ராஜ்ஜியத்தில் நிறைவேறும். அதுவரை பொறுமையாக இருப்போமே!

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote:
ஏன் இறைவன் நேரடியாகவந்து எல்லோருக்கும்
தன்னை வெளிப்படுத்தவில்லை? ஆயிரம் குழப்பங்கள் இருக்கும்
ஆன்மீகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவில்லை?
சரியான பதிலிருந்தால் கூறவும்.


சகோதரரே, குழப்பங்களுக்குக் காரணம் சாத்தானே என்பதை முதலாவது நாம் அறியவேண்டும்.

இறைவன் நேரடியாக வந்து எல்லோருக்கும் வெளிப்படுத்தவில்லை என வருத்தப்படுகிறீர்கள். ஆனால் மனிதர்களின் கண்கள் காண இறைவன் தம்மை வெளிப்படுத்தாவிடினும், இருதயம் உணரும்படியாக அநேகருக்கு அவர் தம்மை வெளிப்படுத்தியுள்ளாரே?

ஆதாமிலிருந்து எடுத்துக் கொள்வோம். ஆதாமுக்கும் தேவனுக்கும் இடையில் சாத்தான் இடைபடும்வரை, ஆதாம் தேவனோடு நல்லுறவுடன்தானே இருந்தார்? ஆதாம் தேவனை நேரில் பார்த்தாரா? இல்லையே? ஆனால் தோட்டத்தில் தேவன் உலாவுவதை அவர் உணர்ந்தாரே? தேவனோடு பேசினாரே? இவ்வளவாய் தேவனை அறிந்த ஆதாம், தேவவார்த்தையை முழுதாக நம்பினாரா?

நம்பினார்தான். ஆனால் எதுவரைக்கும்? தேவன் சொன்னது பொய் என சாத்தான் சொல்லும்வரைதானே?

பழத்தைச் சாப்பிட்டால் சாவதில்லை என சாத்தான் கூறியதை நம்பி பழத்தைச் சாப்பிட்ட ஏவாள், சாகாமல் உயிரோடிருந்ததைப் பார்த்ததும் தேவனின் வார்த்தை மீதுள்ள நம்பிக்கையை ஆதாம் இழந்திருப்பார். எனவேதான் அவரும் பழத்தைச் சாப்பிட்டுருப்பார். ஆக, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் சாத்தான் வந்ததும், மனிதன் தேவநம்பிக்கையில் குறைவுபட்டான்.

ஆதாமுக்குப் பிறகும், எத்தனையோ மனிதரிடம் தேவன் பேசியுள்ளார். நல்விசுவாசிகளான நோவா, ஆபிரகாம், யோபு, தாவீது போன்றோரிடம் மட்டுமின்றி, காயீன், பார்வோன் போன்றோரிடங்கூட அவர் பேசியுள்ளார். தேவன் தன்னோடு பேசியதால் தாவீது பாவஞ்செய்யாதிருந்தாரா? தேவனைக் கண்ணாரக் கண்டிருந்தாலும் தாவீது பாவஞ்செய்யவே செய்திருப்பார். ஒருவன் என்னதான் தேவனோடு நெருங்கியிருந்தாலும், அவனை தேவனைவிட்டு விலகச்செய்வதில் சாத்தான் மிகுந்த திறமைசாலி.

எனவேதான் எத்தனையோ தேவதாசர்கள் தேவனோடு நெருங்கிய உறவு வைத்திருந்தாலும், அவர்களை தேவனிடமிருந்து சாத்தான் பிரித்துவிட்டான். மோசே காலத்தில் இஸ்ரவேலரோடு தேவன் எவ்வளவாய் பேசினார், அவர்கள் மத்தியில் எத்தனை கிரியை செய்தார்? ஆனால் இஸ்ரவேலர் கன்றுக்குட்டியைச் செய்யவில்லையா? பார்வோனே மெய்யான தேவனை அறியக்கூடிய வகையில் தேவன் செயல்பட்டிருந்தும், சோதனை வந்தபோது, இஸ்ரவேலர் தேவனை மறக்கத்தானே செய்தனர்? காரணம் யார்?

எத்தனையோ அற்புதம் செய்த மோசேகூட தேவனுக்கெதிராக செயல்பட்டாரே?

இதையெல்லாம் விட்டுவிடுவோம், தேவகுமாரனான இயேசு மனிதனாக வந்து, எத்தனையோ அற்புதங்களைச் செய்து, தம்மைத் தேவகுமாரன் என்று சொன்னாரே, அதை எல்லாரும் நம்பினார்களா? தேவனும் இயேசுவைப்போல் மனிதனாக வந்தால், அவருக்கும் இயேசுவுக்கு நேர்ந்த கதிதானே கிடைக்கும்?

எனவே தேவன் மனிதனாக வந்து தம்மை வெளிப்படுத்தினால்கூட யாரும் அதை நம்பவும்போவதில்லை, குழப்பங்கள் தீரவும்போவதில்லை. மெய்யான தேவன் ஒருபுறம் மனிதனாக வந்து நான்தான் தேவன் எனச் சொன்னால், மற்றொருபுறம், ஏகப்பட்ட மனிதர்கள் நான்தான் தேவன் எனச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அப்போதும் குழப்பம்தான் மிஞ்சும்.

எனவே நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதோர் நம்பாதிருக்கட்டும் என்பதே தேவனின் எண்ணம்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரர் அவர்களே!
 
ஆதாமோடு  தேவன் நேரடியாக பேசினார் அதையும் மீறி அவன் பாவம் செய்தான் அதனால் தண்டனை பெற்றான். அது நியாயம்!

ஆனால் இன்று இறைவன் இல்லை என்று வாதிடுபவர்களுககும்  மற்றும் வேற்று மதத்தை உண்மை என்று  நம்புபவர்களுக்கும,   இறைவன் ஏன் தன்னை  ஒரு முறை நேரடியாக வெளிப்படுத்தி  நான்தான் இறைவன் என்னை நம்பு இல்லையேல் நீஅழிவைசந்திப்பாய்  என்று எச்சரிப்பதில்லை  
என்பதுதான் எனது  கேள்வி. 
 
எச்சரிக்கப்பட்ட  அவன் மீண்டும் வழி தவறினால் அவன் இரத்தபழி அவன் தலையின் மேல் இருக்கும். எசேக்கியேல் 
புத்தகத்தில்  நம்மை போய் எச்சரி என்று சொல்லும் தேவன் ஏன் தானே ஒவ்வொருவருக்கும் அவரது வழ்நாளுள் ஒரே ஒரு முறையாது நேரில் சென்று எச்சரிப்புசெய்யலாமே என்பதுதான் எனது கேள்வி.  பின்னர் அவர்கள் சாக்கு போக்கு சொல்ல இடமிருக்கதே! 
 
இயேசுகிறிஸ்த்து மனிதனாக வந்தார் அற்ப்புதங்கள் செய்தார். அதே அற்ப்புதங்களை அதற்க்கு முன்னும் பல தீர்க்கதரிசிகள் செய்திருக்கின்றனர். மேலும் அவர்   நமது பாவத்துக்காக மரித்திருப்பது விசுவாசியாகிய  நமக்கு தெரியும் ஆனால் மற்றவருக்கு அந்த சிலுவை மரணம் ஒரு தோல்வி போலல்லவா தெரிந்தது. சாதாரண மனிதன்  மரிப்பது போலல்லவா குற்றம் சுமத்தப்பட்டு  மரித்தார். எனவே அதை மறுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதல்லவா?
 
கள்ளஊழியர்களும் கள்ளதீர்க்கதரிசிகளும் நான்தான் கடவுள் என்றும் துணித்து சொல்பவர்களும் பெருத்துவிட்ட  
இக்காலத்தில் யார் சொல்வத்யும் உண்மை என்று நம்புவது மிக கடினம்!.ஓநாயும் ஆட்டு தோலை போர்த்திகொண்டுதான் வரும்,இந்நிலையில் தேவன் நேரடியாக வந்து ஒரு எச்சரிப்பை கொடுப்பது அநேகர் மனம்திரும்ப வாய்ப்பாக அமையலாம் அல்லவா?
 
இங்கு தேவனை குறைசொல்ல நான் வரவில்லை  அவர் மிகுந்த நீதியுள்ளவர் இரக்கமுள்ளவர் என்ற அடிப்படையிலேயே நோக்குகிறேன்.   
 
நான் எதற்காக இந்த கேள்வியை கேட்கிறேன் என்றால் எனது இந்து  நண்பன் ஒருவன் மிகவும் நல்லவன் 
அவன் என்னிடம்  ஒரே ஒரு முறை இயேசுவோ அல்லது யாரோ என்னிடம் வந்து நேரில் அல்லது கனவிலாவது நான்தான் உண்மை கடவுள் என்னை நம்பு என்று சொல்லிவிட்டால் நான் உடனடியாக மாறிவிடுகிறேன் என்று கூறுகிறான் நானும் அவனுக்காக பலமுறை ஜெபிக்கிறேன் ஒன்றும் நடக்கவில்லை        
எனவேதான் இந்த கேள்வி!
 
நீங்கள் சொல்லும் பதிலை  புறமத்தினரிடம் சொல்லமுடியாதல்லவா?   


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Anbu wrote//எனவே தேவன் மனிதனாக வந்து தம்மை வெளிப்படுத்தினால்கூட யாரும் அதை நம்பவும்போவதில்லை, குழப்பங்கள் தீரவும்போவதில்லை. மெய்யான தேவன் ஒருபுறம் மனிதனாக வந்து நான்தான் தேவன் எனச் சொன்னால், மற்றொருபுறம், ஏகப்பட்ட மனிதர்கள் நான்தான் தேவன் எனச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அப்போதும் குழப்பம்தான் மிஞ்சும்.

எனவே நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதோர் நம்பாதிருக்கட்டும் என்பதே தேவனின் எண்ணம்.//





சகோதரர் அன்பு அவர்கள் சொல்வதைத்தான் வேதமும் மிகத்தெளிவாகச் சொல்கிறது. 'காதுள்ள்வன் கேட்கக் கடவன்' என்பதற்கு அர்த்தமே நம்பினால் நம்பு நம்பாவிட்டால் போ என்றுதான் அர்த்தம். நம்புபவர்களுக்கு பலன் அதிகம். இடுக்கமான வாசல் வழியாக பிரவேசிப்பவர்கள் சிலர் மாத்திரமே. காணாமல் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள்.

தேவன் இப்படி ஒவ்வருவருக்கும் 'தரிசனம்' தந்தால் நமக்கென்ன வேலை!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard