பைபிளை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துகொள்ள தேவப்பிளைகள் இன்னும் போதிய முயற்சிகளை மேற்கொள்ளாத அவல நிலைகள்.
மொத்தத்தில் தேவ மக்கள் பைபிளை ஒரு கதைப்புத்தகம் போலவே எளிதில் படித்து புரிந்து கொண்டுவிடலாம் என்று நினைக்கின்றனர்.
மேலும் நேரடியாக சொல்லப்பட்டுல்ள விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் பைபிள் என்பது படிப்படியாக வளர்ந்து நிறைவேறிவரும் தேவ திட்டத்தை விளக்கும் ஒரு புத்தகம். ஆம், பைபிளை புரிந்து கொள்வதற்கு ஒரு கடினமான புத்தகமாகவே எழுதப்பட்டுள்ளது. வேதத்தில் முழு பலனோடு அன்புகூறாமல், அர்ப்பணிக்காமல் சத்திய ஆவிக்குக் கீழ்ப்படியாமல், சிரத்தை எடுக்காமல், அதைப்புரிந்து கொள்வது கடினம்தான்.
ஏனெனில், சத்தியத்தில் அன்பு கூறாதவர்களுக்கு சத்தியம் என்றைக்கும் புரிந்துக் கொள்ளமுடியாத புதிராகிவிடுகின்றது.
சகோதரரே, தேவன் தன்னுடைய உண்மையான பிள்ளைகளுக்கு பலமும் அன்பும், "தெளிந்த புத்தியுள்ள ஆவி"யைக் கொடுத்திருக்கிறார். இந்த ஆவியில்லாதவர்கள் வேதத்தை புரிந்துகொள்ள எந்த பிரையாசமும் எடுக்க மாட்டார்கள். வெறுமனே ஏதோ ஒரு சபைக்குப் போய்வந்து, வெறுமனே ஏதோவொரு குறிப்பிட்ட மொழியாக்த்தை மாத்திரம் படித்துக்கொண்டிருப்பவர்கள் தேவனுடைய மாபெரும் திட்டத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். இந்தக் குழப்பத்தின் பிள்ளைகளை நீங்கள்தான் "தேவ பிள்ளைகள்" என்றழைக்கிறீர்கள்! மனிதனாகப் பிறந்த எவனும் தேவபிள்ளைதான் என்பது என் கருத்து!
"தேவபிள்ளைகள்" என்றால் எல்லா மனிதர்களும் தான் என்று நான் திருத்தி கொள்கிறேன். இது பொதுவாக கிறிஸ்தவ பானியில் எழுதிவிட்டதால் தான் இப்படி. மற்றபடி நீங்கள் எழுதியது சரியே.
/// வெறுமனே ஏதோவொரு குறிப்பிட்ட மொழியாக்த்தை மாத்திரம் படித்துக்கொண்டிருப்பவர்கள் தேவனுடைய மாபெரும் திட்டத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். ////
மத்தேயு 11:25 அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
லூக்கா 10:21 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
மேற்கண்ட வசனங்கள் கூறுவதுபோல் தேவ ஞானமானது ஞானிகளுக்கு ஆயிரம் மொழிகளை ஆராய்ந்து படிப்பவர்களுக்கும் வெளிப்படுத்தப்படாது. ஒரு பாலகனை போல எனக்கு எதுவும் தெரியாது "என் தகப்பனாகிய இறைவனே எனக்கு உண்மை என்னவென்று தெரியப்படுத்தும் என்ற ஏக்கத்தோடு தேடுபவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்"
தேவன் இவ்வுலக ஞானத்தை பயித்தியமாக்கியுள்ளார் என்பது தங்கள் அறிந்ததே அப்படியிருக்கையில் உலக ஞானமாகிய அனேக மொழிகளை அறிந்து ஒருவன் வேதத்தின் உண்மையை அறியவேண்டும் என்று தேவன் எப்படி எதிர்பார்ப்பார்? அல்லது ஒரு படிப்பறிவில்லாதவன் தேவனை தேடி அவரிடமிருந்து உண்மையை அறிய முடியாதா?
எல்லா மொழி வேதாகமத்த்யும் ரெபர் பண்ணி உண்மையை அறியவேண்டும் என்றால் உலக அறிஞர்கள்தான் உண்மையை அறிய முடியும் அப்படியிருக்க மேற்கண்ட வசனத்தை அவர் கூற வேண்டிய தேவையில்லை!
தேவன் 'வெளிப்படுத்தினால்' அதை வசனத்தின் மூலம் மட்டுமே வெளிப்படுத்துவார், இப்படி ஆளாளுக்கு தரிசனம், நேரில் பேசுதல், நரகத்துக்கு கூட்டிக்கொண்டுபோய் காண்பித்தல், பரலோகம் சென்றுவருதல், ஆவியில் உணர்த்துதல் என்று வேதத்துக்கு புறம்பான காரியங்களை நாம் அங்கீகரிப்பதால்தான் இன்றைய கிறிஸ்தவ மண்டலத்தில் சொல்லொண்ணா குழப்பங்கள். நான் 'பார்த்த' தரிசனம்தான் சரி, ஆண்டவர் என்னோடு பேசினார் என்று கூறும் இவர்கள் ஏன் இவர்களிடம் பேசும் ஆண்டவர் எல்லாரிடமும் நேரடியாக பேசி நரகத்தைக் காண்பித்துவிட்டால் உலகமே திருந்தி இவர்கள் போலவே எல்லோரும் 'பரிசுத்தவான்கள்' ஆகிவிடலாமே!
"வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்" என்று வேதம் சொல்கிறது. வேதம் என்பது மூலபாஷையில் எழுதப்பட்டது மட்டுமே மற்றதெல்லாம் மனித மொழிபெயர்ப்பு முயற்சி. ஒரு புத்தகத்தை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும்போது 100% அதை அப்படியே எடுத்த்க்கொள்வது மதியீனம். நமது தமிழ் 'பரிசுத்த வேதாகமத்தில்' ஏகப்பட்ட பிழைகள் உண்டு. சமயம் வரும்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். முதல் பக்கத்திலேயே 'இது எபிரெயு, கிரேக்கு என்னும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது' என்று ஒரு மாபெரும் பொய்யை அச்சிட்டுள்ளனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 1யோவான்5:7ல் அடைப்புக்குறிக்குள் உள்ள வசனம் அனேக வேறு மொழிபெயர்ப்புகளில் இல்லை. மாற்கு 16:9முதல்20 வரையிலான வசனங்கள் மிகப்பழமையான கைப்பிரதிகளில் இல்லை என்பது மிகவும் பிரசித்தமானது, எதை நம்ப?
ஆக, வேதத்தை ஆராயும் ஒரு சிறு மந்தையைத்தான் 'ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் (போப்பாண்டவர்களுக்கும், பிஷப்புகளுக்கும், பரலோகம், நரகம் சென்றுவருபவர்களுக்கும், அற்புத அடையாளம் செய்பவர்களுக்கும்)மறைத்து' பாலகர்களுக்கு என்கிறார் என்பது என் எண்ணம்.
///தேவன் 'வெளிப்படுத்தினால்' அதை வசனத்தின் மூலம் மட்டுமே வெளிப்படுத்துவார், இப்படி ஆளாளுக்கு தரிசனம், நேரில் பேசுதல், நரகத்துக்கு கூட்டிக்கொண்டுபோய் காண்பித்தல், பரலோகம் சென்றுவருதல், ஆவியில் உணர்த்துதல் என்று வேதத்துக்கு புறம்பான காரியங்களை நாம் அங்கீகரிப்பதால்தான் இன்றைய கிறிஸ்தவ மண்டலத்தில் சொல்லொண்ணா குழப்பங்கள். நான் 'பார்த்த' தரிசனம்தான் சரி, ஆண்டவர் என்னோடு பேசினார் என்று கூறும் இவர்கள் ஏன் இவர்களிடம் பேசும் ஆண்டவர் எல்லாரிடமும் நேரடியாக பேசி நரகத்தைக் காண்பித்துவிட்டால் உலகமே திருந்தி இவர்கள் போலவே எல்லோரும் 'பரிசுத்தவான்கள்' ஆகிவிடலாமே!////
////"வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்" என்று வேதம் சொல்கிறது. வேதம் என்பது மூலபாஷையில் எழுதப்பட்டது மட்டுமே மற்றதெல்லாம் மனித மொழிபெயர்ப்பு முயற்சி. ஒரு புத்தகத்தை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும்போது 100% அதை அப்படியே எடுத்த்க்கொள்வது மதியீனம். நமது தமிழ் 'பரிசுத்த வேதாகமத்தில்' ஏகப்பட்ட பிழைகள் உண்டு. சமயம் வரும்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். முதல் பக்கத்திலேயே 'இது எபிரெயு, கிரேக்கு என்னும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது' என்று ஒரு மாபெரும் பொய்யை அச்சிட்டுள்ளனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 1யோவான்5:7ல் அடைப்புக்குறிக்குள் உள்ள வசனம் அனேக வேறு மொழிபெயர்ப்புகளில் இல்லை. மாற்கு 16:9முதல்20 வரையிலான வசனங்கள் மிகப்பழமையான கைப்பிரதிகளில் இல்லை என்பது மிகவும் பிரசித்தமானது, எதை நம்ப?////
சகோதரரே
நீங்கள் சொல்லும் எந்த காரியம் வேதத்தில் இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
அப்போஸ்தலர் 16:9 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று
யாத்திராகமம் 33:11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்;
I சாமுவேல் 2:6கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில்இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
தரிசனம் காண்பிக்கவும் நேரில் பேசவும் பாதளத்துக்குள் மனிதனை இறங்கவும் ஏறவும் பண்ணவும் தேவனால் நிச்சயம் முடியும் அதற்க்கு எல்லாம் வசன ஆதாரங்கள் நிறைய இருக்கிறது. நீங்கள் கருதுவதுபோல் அன்று செய்தார் இன்று செய்யமாட்டார் என்று எண்ணுவதுதான் தேவனை குறைத்து மதிப்பிடுவதும் அதாரமற்றதும் வேதத்துக்கு புறம்பாக உள்ளது என்று நான் கருதுகிறேன்.
"எல்லோருக்கும் ஏன் அவர் தரிசனம் காண்பிப்பதில்லை" என்ற கூற்றுக்கு, என் இருதயத்துக்கு என்றவன் என்று கர்த்தர் சாட்சி கொடுத்த தாவீதின் பாவத்தை நேரடியாக அவரே அவனுக்கு சொல்லாமல் நாத்தானை அனுப்பி உணர்த்திய கர்த்தரைதான் கேட்கவேண்டும்
இப்படி நாம் கையில் இருக்கும் வேதத்தில் அது தவறு இது தவறு என்று ஆராய்ந்துகொண்டே போனால் கடைசியில் கர்த்தர் சொன்னதை எரேமியா, எசேக்கியேல் சரியாக எழுதினாரா அல்லது எதையாவது மாற்றி பொருள்கொண்டு எழுதிவிடாரா என்று மொத்த வேதாகமத்தையும் சதேகிக்க நேரிடும் ஏனெனில் அவர்களும் மனிதர்கள்தானே!. தேவன் எழுதிக்கொடுத்தது பத்து கட்டளைகள் மட்டும்தான் மீதம் எல்லாமே மனிதனால் எழுதப்பட்டதுதான் அவர்கள் மட்டும் சரியாக பொருள்கொண்டு எழுதிவிடார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்.
மீண்டும் சொல்கிறேன் தேவன் ஒரு வசனத்தை குறித்து வெளிப்படுத்தாவிட்டால் அதன் உண்மை பொருளை நீங்கள் எந்த மொழியை ஆராய்ந்தாலும் அறிய முடியாது!
-- Edited by RAAJ on Thursday 1st of October 2009 04:05:25 AM
சகோதரர் ராஜ் நான் சொன்னவற்றை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
தேவன் 'இப்போது' யாரிடமும் எந்த வகையிலும் பேசுவதோ, ஒன்றை காண்பிப்பதோ இல்லை என்றுதான் எழுதியுள்ளேனெ தவிர முன்பு யாரிடமும் அவ்வாறு செய்ததில்லை என்று எழுதவில்லை. வேதாகமம், முக்கியமாக புதிய ஏற்பாடு எழுதி முடிக்கும் வரை குறிப்பிட்ட நபர்களுக்கு அவ்வாறு பல காரியங்களை செய்துள்ளார் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லவே இல்லை! கடைசியாக யோவானுக்கு காண்பித்த கடைசி தரிசனம்தான் 'வெளிப்படுத்தின விஷேசம்'. அதன் பின் அவர் யாருக்கும் எதையுமே 'வெளிப்படுத்தவில்லை' என்பதுதான் என் வாதம்.
வேதாகமத்தை வைத்துக்கொண்டு ஒரு பெரிய கூட்டம் நான் அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன், தேவன் இதைச்சொன்னார், அதைச்சொன்னார் என்று புருடா விட்டு தங்களை மற்றவர்களைக் காட்டிலும் மேன்மை பாராட்டுவார்கள் என்பது தெரிந்துதான் "கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார், அறைக்குள் இருக்கிறார் என்றெல்லாம் சொன்னால் நம்பாதீர்கள்" என்றும், இந்தப் புத்தகத்தில் எதையும் கூட்டவோ, குறைக்கவோ செய்வார்கள் என்று தெரிந்துதான் அதையும் 'ஆராய்ந்து' பார்க்கச் சொல்லியுள்ளார்.
புதிய ஏற்பாடு எழுதப்படாத காலத்தில் தேவன் அற்புத அடையாளங்கள் செய்து ஆதி சபையை திடப்படுத்தினார்தான். இப்போது அவர் யாருக்கும் 'தரிசனம்' தந்தும் 'பரலோகம், நரகம்' tour அழைத்துப்போயும் எதையும் சாதிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படிச் செய்வார் என்பத்ற்கு எந்த வேத ஆதாரமுமில்லை. இவர்கள் செய்யும் காரியங்கள் தேவசித்தம் என்றால் புதிய ஏற்பாட்டிற்குப்பின் ஒரு 'நவீன ஏற்பாடு' எழுதப்பட்டு "ராஜுக்கு வெளிப்படுத்தின விஷேசம்", "அலன்பாலுக்கு வெளிப்படுத்தின விஷேசம்", "தினகரன் குடும்பத்தாருக்கு வெளிப்படுத்தின விஷேசம்", "பென்னிஹின்னுக்கு வெளிப்படுத்தின விஷேசம்", என்று எழுதி அதையும் வேதத்தில் சேர்க்கலாமே! இல்லாவிட்டால் வருங்கால சந்ததிக்கு இவர்களுக்கு "வெளிப்படுத்தின விஷேசங்கள்" கிடைக்காமல் வீணாய்ப்போகுமே?
இதைத்தான் கடைசிகாலத்தில் 'கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ளக்கிறிஸ்துகளும் தோன்றி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அற்புத அடையாளங்களைச் செய்வார்கள் எச்சரிக்கை' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
"காணாமல் விசுவாசிக்கிறவன் பாக்கியவான்" என்பதற்கு அர்த்தமே இந்த தரிசனங்களைக் காணாமல் விசுவாசிப்பதுதான். தரிசனம் பார்த்துதான் விசுவாசிப்பேன் என்றால் விசுவாசமே தேவையில்லையே? மேலும் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் தரிசனம் காண்கிறார்கள், அவைகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் வேதத்துக்கு முற்றிலும் பொருந்தாததாக அல்லவா இருக்கிறது? அப்படி ஒருவன் இரட்சிக்கப்பட இந்த தரிசனங்கள் உபயோகமாக இருக்கும்பட்சம் அவர் எல்லோருக்கும் நரகம், பரலோகம் போன்றவற்றுக்கு குறைந்தது ஒரு முறையாவது கூட்டிச்சென்று வந்துவிட்டால் எல்லோரும் விசுவாசிகளாகிவிடலாமே?
மேலும் சகோதரருக்கு வேறு மொழிகளிலுள்ள வேதாகமங்களின்மேல் ஏன் இவ்வளவு நம்பிக்கையின்மையோ? எல்லா வேதாகமங்களிலும் எல்லாம் ஒரேவிதமாகக் கூறப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம் வேதத்தை ஆராயவேண்டியதில்லைதான், ஆனால் ஒருவேதாகமம் கூட இன்னொரு மொழிபெயர்ப்போடு முழுவதும் ஒத்துப்போவதில்லையே. இது "நான் பிடித்த முயலுக்கு மூணு கால்" என்பதுபோலல்லவா இருக்கிறது? தயவுசெய்து மற்ற மொழிபெயர்ப்பு வேதாகமங்களை குறை கூறாதீர்கள் நண்பரே. அட அதுபோகட்டும் வசனங்களில் பிரச்சனை வரும்போது இன்னொரு மொழிபெயர்ப்பை கலந்தாலோசிப்பது எப்படி தவறாகும்?
ஞானம் என்றாலே தேவனுக்கு பயப்படும் பயம் தானே அன்றி, B Th, M. Th, B Div, M Div போன்ற பட்டங்களை வாங்குவதில் இல்லை. தேவனுக்கு பயம் இல்லாததினால் தான் இப்படி சொந்த சரக்கை அவிழ்த்து விடும் அவலநிலை இந்த கிறிஸ்தவ மண்டலத்தில் ஏற்பட்டுள்ளது.
சரி பவுலுக்கு தரிசனம் காண்பித்தார் என்றால் நான் என்ன பவுலை போல் ஒரு அப்போஸ்தலனாக அவர் வாழ்ந்த வாழ்க்கையா வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்பதை கூடவா கிறிஸ்தவர்கள் யோசிப்பதில்லை? பவுலையும், யோவனையும், மோசையும் தரிசனம் காண்பதற்கு அழைக்கும் கிறிஸ்தவர்கள், அவர்களை போல வாழ்வதிலும் கடைபிடித்தாலே நல்ல ஒரு சாட்சியாக இருக்குமே.
இப்பகுதியில் ஏற்கனவே பல கருத்துக்கள் கூறப்பட்டு விவாதத்தில் உள்ளது. எனது பங்கிற்கு நானும் எனது கருத்தை வைக்கிறேன்.
யோவான் 5:1-15 வசனங்களில் ஒரு சம்பவம் கூறப்பட்டுள்ளதை நாம் படித்திருப்போம். அதில் பெதஸ்தா குளத்தை அவ்வப்போது ஒரு தேவதூதன் வந்து கலக்குவான் என்றும், அவன் கலக்கினபின் முதன்முதலாகக் குளத்தினுள் செல்கிற வியாதியஸ்தன், எப்பேற்பட்ட வியாதியுடையவனாக இருந்தாலும் அவன் குணமடைவான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு வியாதியஸ்தன் குளத்தினுள் முதலாவது இறங்க இயலாதிருந்ததால் 38 வருஷமாக வியாதியுடையவனாக இருந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை முதன்முதலாக என் இளம்பிராயத்தில் படிக்கும்போதே தேவதூதனின் செயல் எனக்குத் தவறாகப்பட்டதால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக வெகுகாலம் இருந்தேன்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு வேதாகம மொழிபெயர்ப்புகளையும் படித்து ஒப்பிட்டுப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தபின்னர்தான் என் கேள்விக்குப் பதில் கிடைத்தது. அதாவது, யோவான் 5:3-ம் வசனத்தின் பின்பகுதியும் 4-ம் வசனமும் நம்பத்தகுந்த மூலப்பிரதியில் இல்லை எனும் தகவல் எனக்குக் கிடைத்தது. அந்த வசன பகுதிகள்தான் எனது கேள்விக்குக் காரணமாயிருந்தது.
இவ்விஷயத்தில், என் மனதில் கேள்வி எழும்பக் காரணம் பரிசுத்த ஆவியானவர் என நான் நம்புகிறேன். அதே வேளையில் என் கேள்விக்கு விடை கிடைப்பதற்கு வழி செய்தது, பல்வேறு மொழிபெயர்ப்புகளே. அந்த மொழிபெயர்ப்புகளைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கையில் அதைப் பயன்படுத்தியதால்தான் என் கேள்விக்கு விடைகாண முடிந்தது.
எனவே வேதவசனங்களைப் புரிந்துகொள்ள, பரிசுத்த ஆவியானவரின் துணையும் வேண்டும், நமக்குக் கிடைத்துள்ள வாயப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்வமும் வேண்டும் என்பது எனது கருத்து.
பார்வை இழந்தவர்கள் பார்வையுள்ளவர்களின் துணையோடு வேதாகமத்தை அறிய முயலவேண்டும், படிப்பறிவில்லாதவர்கள் படிப்பறிவுள்ளவர்களின் துணையோடு வேதாகமத்தை அறிய முயலவேண்டும், ஆங்கில அறிவில்லாதவர்கள் ஆங்கில அறிவு உள்ளவர்களின் துணையோடு வேதாகமத்தை அறிய முயலவேண்டும், மூலப்பிரதி வேதாகமத்தை காண இயலாதவர்கள் அதைக் காண வாய்ப்புள்ளவர்களின் துணையோடு வேதாகமத்தை அறிய முயலவேண்டும்.
(முயற்சி) உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும் (முயற்சி) இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்.
-- Edited by anbu57 on Wednesday 14th of October 2009 02:47:26 AM
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
என்று கர்த்தரின் அருமையான வாக்குத்தத்த வார்த்தைகள் சொல்லும்போது எவனிடமாவது பொய் கேள் எல்லா மொழிகளையும் ஆராய்ந்துபார் என்று போதிப்பது ஆச்சர்யம்தான்.
ஏசாயா 2:22 நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
சங்கீதம் 116:11 எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
ரோமர் 3:4, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
என்ற வசனங்களின் மூலம் மனிதர்கள் எல்லோருமே பொய்யர்கள் அவர்களுக்கு உண்மை என்னவென்றே தெரியாது, வசனங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வியாக்கீனம் பண்ணை தங்கள் அரிவால் மோசம்போகிறார்கள். ஞானத்தில் சிறந்தவனும் பூரண அழகுள்ளவனுமானவந்தான் சாத்தானாகிபோனால், அதே ஞானத்தால் வேதத்தை ஆராய்ந்து ஒரு பலனும் கிடைக்கப்போவது இல்லை.
ஒரு வசனத்தின் உண்மை தன்மை தெரியவேண்டுமா விடாமல் தேவனை பிடியுங்கள் உறங்காமல் ஜபம் பண்ணுங்கள் தேவன் உங்களுக்கு உண்மையை தெரிவிப்பார் இதுதான் எனது அறிவுறுத்துதல்.
சரி ஏன் தேவனிடம் விசாரிப்பவர்கள் விதவிதமாக அருத்தங்களை தெரிவிக்கிறார்கள் என்று கேட்போமானால் அது தேவனின் விருப்பம் உலகில் எல்லோருக்கும் ஒரே சம்பளம் கிடைப்பதில்லையே! அவனவன் தகுதிக்கு ஏற்ப தேவன் சில உண்மைகளை தெரிவிக்கிறார் என்றே நான் சொல்லுவேன். ஞானத்தை நம்பும் சிலரை உன் ஞானத்தை வைத்தே ஆராய்ந்து கண்டுபிடி என்று விட்டுவிடுகிறார். அனால் யாரிடம் கேட்டும் எந்த மொழியை ஆராய்ந்தும் கண்டுபிடிக்கும் உண்மையைவிட தேவன் தெரிவிப்பது நிச்சயமாக அச்சர்யாமானதும் எட்டாததும் பெரிய காரியமாய் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
மனிதனை நம்பாதே என்று வேதம் சொல்லும்போது மனிதனை நான் ஏன் நம்பவேண்டும்?
"ஏசாயா 2:22 நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
சங்கீதம் 116:11 எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
ரோமர் 3:4, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக."
ஆகவே தான் தங்களையே தேவன் என்று உயர்த்தும் மனிதர்களான சுய புகழ்ச்சியை தேடி, தங்களை தேவன் அழைத்த ஊழியக்காரர்கள் என்று சொல்லுபவர்களிடம் போகாமல்,
மனித முயற்சியில் வெளிவந்த வேதாகமத்தை அப்படியே எடுத்துக்கொள்ளாமல், மூல பாஷையில் அதை சரி பார்த்து தான் ஏற்றுக்கொள்கிறோமே தவிர, இவர் சொன்னர், என்றும் அவர் சொன்னார் என்றும் எவர் சொன்னார் என்றும் போவதில்லை.
"ஒரு வசனத்தின் உண்மை தன்மை தெரியவேண்டுமா விடாமல் தேவனை பிடியுங்கள் உறங்காமல் ஜபம் பண்ணுங்கள் தேவன் உங்களுக்கு உண்மையை தெரிவிப்பார் இதுதான் எனது அறிவுறுத்துதல்."
இதை தானே இன்றைய பிரபலமான ஊழியர்கள் செய்து வருகிரார்கள், ஆனாலும் ஏன் மாறுபாடான சபைகள். ஏன் இவர்களால் ஒரு வசனத்திற்கு ஒரே அர்த்தத்தை கொடுக்க முடியவில்லை. தானியேல் கூட தான் ஜெபித்து கேட்டான் (தானி 12:4), ஆனால் அவனுக்கு சொல்லப்படவில்லையே. ஏன்? தேவனின் இருதயத்திற்கு ஏற்ற மனிதனான தாவீது தான் எத்துனை வருடங்கள் வாழ்வான் என்று கேட்டதற்கு தேவன் பதில் தரவில்லையே, ஏன்?
"சரி ஏன் தேவனிடம் விசாரிப்பவர்கள் விதவிதமாக அருத்தங்களை தெரிவிக்கிறார்கள் என்று கேட்போமானால் அது தேவனின் விருப்பம் உலகில் எல்லோருக்கும் ஒரே சம்பளம் கிடைப்பதில்லையே! "
இந்த கருத்து உங்களுக்கு மெய்யாகவே நியாயமாக தெரிகிறதா? ஒரு வசனத்திற்கு ஒரே அர்த்தம் தான் வர முடியுமே தவிர, அவன்வன் தகுதிக்கு தக்க விதவிதமான அர்த்தங்கள் வர முடியாது.
"மனிதனை நம்பாதே என்று வேதம் சொல்லும்போது மனிதனை நான் ஏன் நம்பவேண்டும்?"
ஆனால், அவனுக்கு கிடைக்கும் தரிசனங்களும், கணவுகளும் தேவன் தான் தந்தார் என்று மாத்திரம் நம்பவேண்டுமா? என்ன நியாயம் சகோதரரே. வார்த்தைகளை நம்ப வேண்டியதில்லை, ஆனால் சம்பந்தமே இல்லாத அவனின் தரிசனங்களை நம்ப வேண்டுமா?
ரோமர் 3:4, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
என்ற வசனங்களின் மூலம் மனிதர்கள் எல்லோருமே பொய்யர்கள்......
அவர்கள் காணும் தரிசனங்கள் பொய்......,
அனுபவங்கள் பொய்......
என்பதால்தான் 'உமது வசனமே சத்தியம்(உண்மை) என்ற காரணத்திற்காகத்தான் அவரது 'வசனத்தின்படி' காரியங்கள் இன்னவிதமாக இருக்கிறதா? என்று வேதததை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.(அப்17:11)
'சத்தியத்தையும் அறிவீர்க்ள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்', பொய்யனும் பொய்க்குப் பிதாவானவனால் வஞ்சிக்கப்பட்டு 'தரிசனம்' பார்க்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்! 'ஆவிக்குரிய மரணம்', ஆத்தும மரணம், சரீரமரணம் போன்ற வேதத்தில் இல்லாத வார்த்தைகளைக் கூறி இவர்கள் வியாக்கியானம் செய்வார்கள். வேதத்தில் ஒரே மரணம்தான் உண்டு அதனால்தான் 'உயிர்த்தெழுதல்' என்ற 'இரட்சிப்பு' வேதத்தின் மகா உன்னதமான நற்செய்தியாகிறது.
anbu57 wrote: //பார்வை இழந்தவர்கள் பார்வையுள்ளவர்களின் துணையோடு வேதாகமத்தை அறிய முயலவேண்டும், படிப்பறிவில்லாதவர்கள் படிப்பறிவுள்ளவர்களின் துணையோடு வேதாகமத்தை அறிய முயலவேண்டும், ஆங்கில அறிவில்லாதவர்கள் ஆங்கில அறிவு உள்ளவர்களின் துணையோடு வேதாகமத்தை அறிய முயலவேண்டும், மூலப்பிரதி வேதாகமத்தை காண இயலாதவர்கள் அதைக் காண வாய்ப்புள்ளவர்களின் துணையோடு வேதாகமத்தை அறிய முயலவேண்டும்.//
RAAJ wrote: //எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
என்று கர்த்தரின் அருமையான வாக்குத்தத்த வார்த்தைகள் சொல்லும்போது எவனிடமாவது போய் கேள், எல்லா மொழிகளையும் ஆராய்ந்துபார் என்று போதிப்பது ஆச்சர்யம்தான்.
ஏசாயா 2:22 நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
சங்கீதம் 116:11 எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
ரோமர் 3:4, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
மனிதனை நம்பாதே என்று வேதம் சொல்லும்போது மனிதனை நான் ஏன் நம்பவேண்டும்?//
குருடனுக்கு வழிகாட்டியாகவும் சப்பாணிக்குக் காலுமாக இருந்தேன் என யோபு 29:15-ல் யோபு கூறுகிறாரே? யோபுவை குருடர்கள் நம்பாவிடில், அவர் குருடனுக்கு வழிகாட்டியாக எப்படி இருந்திருக்க முடியும்? நம்மில் பலருங்கூட எத்தனையோ குருடர்களுக்கு வழிகாட்டத்தான் செய்கிறோம், அப்போது குருடர்கள் நம்மை நம்பத்தானே வேண்டியதுள்ளது?
எனவே நம்பவேண்டிய சூழ்நிலைகளில் மனிதனை நம்பத்தான் வேண்டும். ஒரு விஷயத்திலும் மனிதனை நம்பமாட்டேன் எனக் கூறினால், மனிதனால் மொழிபெயர்க்கப்பட்ட எந்தவொரு வேதாகமத்தையும் நம்பக்கூடாது.
ஒரு வேதவசனத்தைப் படிக்கையில், அது எந்த காரியத்திற்காக எந்த சூழ்நிலைக்காக கூறப்பட்டது என்பதை நிதானித்து முடிவெடுக்க வேண்டும். மாறாக, வசனத்தை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டால், நாசியில் சுவாசமுள்ள மனிதனை விட்டுவிடுங்கள் எனக் கூறிய தேவன், தமது தீர்க்கதரிசிகளிடம் தமது வார்த்தைகளைச் சொல்லி ஜனங்களிடம் அனுப்பியதில் என்ன logic இருக்கிறது எனும் கேள்விதான் எழும்பும்.
மனிதனை நம்பக்கூடாதெனில், ஏசாயா எனும் மனிதன் கூறிய ஏசாயா 2:22-ஐ, தாவீது எனும் மனிதன் கூறிய சங்கீதம் 116:11-ஐ, பவுல் எனும் மனிதன் கூறிய ரோமர் 3:4-ஐ எப்படி நம்பமுடியும்?
எரேமியா 33:3-ஐக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் தேவன் என்ன கூறுகிறார்? நீ அறியக்கூடியதும் உனக்கு எட்டக்கூடியதுமான காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்றா கூறுகிறார்? நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்றுதானே கூறுகிறார்? எனவே நம்மால், தேவன் நமக்குத் தந்த அறிவால், தேவன் நமக்குத் தந்த வாய்ப்புகளால் எதையெல்லாம் அறிய முடியுமோ எதையெல்லாம் எட்டக்கூடுமோ அவற்றை நாம் அறிய முயலவேண்டும், எட்டிப்பிடிக்க முயலவேண்டும். அதன் பின்னும் நம்மால் அறியக்கூடாததும் எட்டக்கூடாததும் இருந்தால், அப்போது தேவனை நோக்கிக் கூப்பிடவேண்டும்; அப்போது நாம் அறியாததை நமக்கு எட்டாததை தேவன் அறிவிப்பார்.