ஒவ்வொரு தேவப்பிள்ளையும் குறைந்தபட்சம் முழுமையாக ஒரிரு முறையாவது பைபிளை படித்தறிய வேண்டியது மிக அவசியம். ஆனால் இன்னும் ஒரு தடவை கூட பைபிளை முழுமையாக படிக்காத அவலநிலை மட்டுமல்ல ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன என்பதைக்கூடத் தெளிவாக சொல்லமுடியாத சபைமக்களின் அவநிலை அதைவிட மிகவும் வேதனைக்குரியதாகும். ஏனெனில் பைபிளை நாம் முழுபலத்தோடும் முழு இருதயத்தோடும் அன்புகூர்ந்து வாசித்து அறிவது எத்தனை அவசியம்! ஆனால் இன்றைக்கு வேதமே இல்லத கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அதுமட்டுமல்ல கிழிந்துபோன வேதத்தையே இன்னும் உபயோகப்படுத்துவோர் உள்ளனர்! வேதத்தை ஒரு மந்திர புத்தகம் போல திறந்து ஒருசில வார்த்தைகளை மட்டும் சமயத்திற்கேற்ப வாசிப்போரும் எத்தனயோ பேர் உல்லனர். நாள்தோறும் தங்கவாக்கிய காலண்டர்களில் மட்டும் பைபிளை வாசிப்போரும் எத்தனையோ பேர் உள்ளனர்.
வேதத்தை பொதுவாக ஒரிருமுறையாவது படித்து அறிந்து கொள்வது என்பது ஒரு இளநிலைப் படிப்பு மட்டும் தான். இது பாலுண்ணுகிற குழந்தை நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம். ஏனெனில் பாலை உண்ட பின்பே பலமான ஆகாரத்தை உண்ணமுடியும்.