ஒவ்வொரு சபையும் தங்களுக்கென்று சில சொந்த உபதேசங்களை மட்டும் தலையாகக் கொண்டு ஆனால் வேதம் காட்டும் தேவத்திட்டத்தின் பிற அம்சங்களை மறுத்து வருகின்றன. எப்படியெனில் சபைகளில் பிரசித்தப்பெற்ற பிரசன்ங்கிகள், தலைவர்கள் கூறும் அரைகுறையான சொந்த அபிப்பிராயங்களே பிற்காலத்தில் சபைகளின் நித்திய உபதேசங்களாகவும், சத்திய வசனங்களின் அர்த்தங்களாகவும், இந்நாள் வரைக்கும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் மக்கள் இன்றுவரை அநேக வேத வாக்கியங்களின் மெய்யான அர்த்தங்களையே உணர முடியாமல் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றனர். இன்றைக்கும் அநேக சபைகள் அப்படிப்பட்ட தனிமனிதர்களின் சுயவிளக்கங்களையே சார்ந்து நிற்பதால் வேதம் சபைமக்கள் மத்தியில் இன்றும் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமாகவே காணப்படுகிறது.
உம். நான் பரலோகம் / நரகம் போய் பரலோகம்/ நரகம் இப்படி தான் இருக்கிறது என்று சபையில் ப்ரசங்கிப்பது. அல்லது தேவன் பிரசங்கியிடம் நேரடியாக வந்து பேசியதாக சொல்லி வேதத்திற்கு புறம்பான போதனைகளை தருவது. இன்னும் பல.