மதிப்புகுரிய தேவ மனிதன் என்று சாது சுந்தர் செல்வராஜ் அவர்களால் அடிக்கடி சொல்லப்படும் ஒரு ஊழியக்காரர் சகோ வின்சென்ட் செல்வகுமார். இந்த சகோதரரின் வெளிப்படுத்தின விசேஷத்தை பற்றியான ஒரு டீ.வி நிகழ்ச்சி ஏஞ்சல் டீ.வியில் கான நேரிட்டது. நான் மிகவும் ஆடி போனேன். காரணம் என்னவென்றால், வெளிப்படுத்தின விசேஷம் என்கிற இந்த வெளிப்பாட்டின் புத்தகம் "ஊழியக்காரர்கள்" மாத்திரமே புரிந்துக்கொள்ளும் ஒரு புத்தகமாம், ஆகவே இந்த புத்தகம் புரிய வேண்டும் என்றால் நாம் அனைவருமே ஊழியர்களாக இருக்க வேண்டுமாம்! என்ன ஒரு வெளிப்பாடு. இதற்கு ஆதாராமாக அவர் சொல்லும் வசனம், வெளி 1:1ல் தேவன் தன் ஊழியகாரருக்கு வெளிப்படுத்தினதாகும். இன்னும் சற்றே மேலும் வாசித்திருந்தால் அந்த ஊழியக்காரர் யோவான் என்று அவர் தெரிந்திருக்கலாம்.
பிரியமான கிறிஸ்தவர்களே, தேவன் வேதத்தில் உள்ள தன் வார்த்தைகளை வெறும் ஊழியர்களுக்கு மாத்திரமே வெளிப்படுத்துகிறார் என்று நினைத்துவிடாதீர்கள். ஊழியர்கள் தங்களின் பெருமை வெளிப்படுவதற்காகவே இப்படி எல்லாம் சொல்லுவார்கள். சபை தொடங்கி இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருஷ அரசாட்சியும் அதற்கு பிறகு உள்ள காரியங்களை விவரிக்கும் புத்தகமே இந்த புத்தகம். இது "Symbolic language"ல் எழுதப்பட்ட ஒரு புத்தகம். ஆகவே தான் காதுள்ளவன் கேட்க்ககடவன் என்று இதில் வாசிக்க நேரிடிகிறது. மற்றபடி இதை புரிய வேண்டும் என்றால் நாம் எல்லோரும் ஊழியக்காரர்களாக இருக்க வேண்டும் என்று இல்லை.
இன்னும் சரியாக சொல்லப்போனால் இயேசுகிறிஸ்துவின் 'புதிய ஏற்பாட்டின்' சபையில் ஒருவகையில் எல்லாருமே ஊழியர்கள்தான். அதனால்தான் ஊழியன், விசுவாசி என்ற பாகுபாடு புதிய ஏற்பாட்டில் காணமுடியாது. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டி, புது சிருஷ்டியே காரியம் என்று அப்.பவுல் தெளிவாக கூறியிருக்கிறார். இந்த 'ஊழியக்காரர்', விசுவாசி என்று பிரித்துப்பார்ப்பது 'தற்கால' உழைக்கவிரும்பாத, அடுத்தவர் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தில் சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் so called ஊழியர்கள்தாம்!