தற்காலத்தில் மிகப்பிரபலமாகிவரும் ஊழியங்களில் TV ஊழியங்களுக்குத்தான் முதலிடம் என்றால் மிகையாகாது. அனேகமாக எல்லா 'பிரபல' ஊழியர்களுமே இந்த ஊடகத்தை விட்டுவைக்கவில்லை.
இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால் 'தேவ செய்தி' கொடுத்துமுடித்ததும் கடைசியில் இவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள்தாம். அதிலும் பெயர் சொல்லி அழைப்பது, வியாதியஸ்தர்களுக்கான ஜெபம், மாணவர்கள் பரீட்சைக்கு ஜெபம், அன்னியபாஷை ஜெபம் என்று ஏகப்பட்ட வெரைட்டி ஜெபங்களை காணலாம். அதுவும் சில வேளைகளில் இவர்கள் 'SPECIAL EFFECT' கொடுப்பதற்கு "வியாதிப்பட்ட இடத்தில் உஙகள் கைகளை வைத்துக்கொள்ளுங்கள்" என்று instruction வேறு.
மூல வியாதியுடைய சகோதரர்கள் இதைக்கேட்டு மிகவும் சங்கோஜப்படுகிறார்கள்.
அது போகட்டும், இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் உண்மையிலேயே பதில் தருகிறாரா? என்பதே நமது கேள்வி. தருகிறார் என்று வாதாடும் சகோதரர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். கீழ்கண்ட வரிசையில் எந்த சந்தர்ப்பத்தில் தேவன் பதில் தருவார்?
2. ஊழியர் ஜெபம் செய்யும் காட்சி ஒளிபரப்பபடும்போது. 3. மறுஒளிபரப்பின் போதும் 4. எப்போதெல்லாம் குறுந்தகடு போடப்படுகிறதோ அப்போதெல்லாம். 5. மேற்கண்ட எல்லா சமயங்களிலும்...
என்ன யோசிக்கிறீர்களா?
இனியாகிலும் இதுபோன்ற 'வஞ்சிக்கிற ஆவி'களால் மோசம்போகாதபடிக்கு நாமும் எச்சரிக்கையாக இருப்போம் மறறவர்களயும் எச்சரிப்போம்!
-- Edited by soulsolution on Monday 21st of December 2009 07:57:43 PM
கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தராமல் உளறிவைத்திருக்கிறீர்.
நீர் மோசேயும் கிடையாது, பவுலின் கால்தூசிக்கும் பெறமாட்டீர் என்று உமக்கேதெரியும். ஆகவே தேவனாலும், கர்த்தராலும் நேரடியாகத் தெரிந்து கொள்ளப்பட்ட அவர்களூடன் உம்மை இணைத்து காமெடி செய்துவிடாதேயும். தேவன் ஒருபோதும் கடன் வாங்கியோ பிச்சையெடுத்தோ பில்டிங் கட்டச்சொல்லவில்லை. ஐயா இந்தத்தளத்தில் உமக்கு ஒன்றும் கிடைக்காது. நீர் ஒருசில ஊழியர்களை குறை கூறுகிறீர் (இல்லை என்று மறுக்க முடியுமா?) நாங்கள் ஒட்டுமொத்த ஊழியர்களுமே வஞ்சிக்கப்படும் அனேகர் என்கிறோம். அவ்வளவே.
இங்கு செலவளிக்கும் நேரத்தில் போய் நாலு ஹவுஸ் விஸிட் செய்தால் வருமானமாவது ஏறும்.
-- Edited by soulsolution on Monday 21st of December 2009 08:02:19 PM