தற்காலத்தில் மிகப்பிரபலமாகிவரும் ஊழியங்களில் TV ஊழியங்களுக்குத்தான் முதலிடம் என்றால் மிகையாகாது. அனேகமாக எல்லா 'பிரபல' ஊழியர்களுமே இந்த ஊடகத்தை விட்டுவைக்கவில்லை.
இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால் 'தேவ செய்தி' கொடுத்துமுடித்ததும் கடைசியில் இவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள்தாம். அதிலும் பெயர் சொல்லி அழைப்பது, வியாதியஸ்தர்களுக்கான ஜெபம், மாணவர்கள் பரீட்சைக்கு ஜெபம், அன்னியபாஷை ஜெபம் என்று ஏகப்பட்ட வெரைட்டி ஜெபங்களை காணலாம். அதுவும் சில வேளைகளில் இவர்கள் 'SPECIAL EFFECT' கொடுப்பதற்கு "வியாதிப்பட்ட இடத்தில் உஙகள் கைகளை வைத்துக்கொள்ளுங்கள்" என்று instruction வேறு. மூல வியாதியுடைய சகோதரர்கள் இதைக்கேட்டு மிகவும் சங்கோஜப்படுகிறார்கள்.
அது போகட்டும், இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் உண்மையிலேயே பதில் தருகிறாரா? என்பதே நமது கேள்வி. தருகிறார் என்று வாதாடும் சகோதரர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். கீழ்கண்ட வரிசையில் எந்த சந்தர்ப்பத்தில் தேவன் பதில் தருவார்?
1. ஊழியர் ஜெபம் செய்யும்காட்சி படப்பிடிப்பின்போது. 2. ஊழியர் ஜெபம் செய்யும் காட்சி ஒளிபரப்பபடும்போது. 3. மறுஒளிபரப்பின் போதும் 4. எப்போதெல்லாம் குறுந்தகடு போடப்படுகிறதோ அப்போதெல்லாம். 5. மேற்கண்ட எல்லா சமயங்களிலும்...
என்ன யோசிக்கிறீர்களா?
இனியாகிலும் இதுபோன்ற 'வஞ்சிக்கிற ஆவி'களால் மோசம்போகாதபடிக்கு நாமும் எச்சரிக்கையாக இருப்போம் மறறவர்களயும் எச்சரிப்போம்!