மனிதன் அல்லது ஆத்துமா எப்படி 'உருவாகிறது'? என்ற கேள்விக்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்க ப்திலாக, வசனத்துக்கு உட்பட்டு இருக்கக்கூடிய பதிலாக இருக்கும்? ஏனென்றால் ஒரு தாயின் கருவில் மனிதன் குழந்தையாக உருவாகிறான். பின்னர் பிறந்து, வளர்ந்து அறிவு பெற்று தன்னைப்பற்றியும், தன்னுடைய தனித்தன்மைபற்றியும் உணர்ந்துகொள்கிறான். அதாவது பிறந்த பின்னை கொஞ்சம் கொஞ்சமாக அவனது மூளையில் பதியும் information தான் அவனுக்கு அடையாளமாக இருக்கிறது. மூளையில் பிரச்சனை இருக்கும்பட்சம் அவன் தன்னை உணராதவனாகவே இருக்கிறான்.
ஆக மனிதனாக இருப்பதற்கு இந்த மாமிச சரீரம்தான் ஆதாரம், அந்த சரீரத்தில்தான் அவன் existence ல் இருக்கமுடியும். மரித்தபின் மூளைஉட்பட சரீரம் முழுவதுமே செயலிழந்துவிடுகிறது. தேவன் 'மனிதனைத்தான்' படைத்தாரேயன்றி அவனை ஒரு ஆவி அல்லது உருவமற்ற நிலையில் படைத்து அவனை மாமிச சரீரத்தில் 'புகுத்த'வில்லை. நாம் சரீரமாகத்தான் இருக்கிறோம், சரீரத்துக்குள் இல்லை MAN IS A SOUL NOT MAN HAS A SOUL.
அதனால்தான் 'மரணம்' என்பது அத்தகைய கொடூரமானதாக இருக்கிறது. இவ்வளவு ஆசாபாசங்கள், உறவுகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களோடு வாழ்ந்துவிட்டு திடீரென்று 'இல்லாமலேயே போவதைப்போன்ற கொடுமை வேரென்னவாக இருக்க முடியும்? ஆதலால்தான் ஆதாமுக்குள் 'எல்லோரும்' மரிக்கும் நிலையை மாற்றி 'கிறிஸ்துவுக்குள் எல்லோரையும்' உயிர்ப்பிக்கும் தேவனது மாபெரும் திட்ட்ம் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது.
பூமியிலேயே நித்திய ஜீவனை சுதந்தரிக்கும் வண்ணம் 'பிரேதக்குழியிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு' உயிரோடு எழுவார்கள் என்ற இந்த மாபெரும் 'நற்செய்தி' மறைக்கப்பட்டு, கிறிஸ்தவம் ஏதோ கொஞ்சம்பேர் மட்டும் பரலோகம் போவார்களாம் மற்றெல்லாரும் உயிர்த்தெழுந்து 'நரகம்' என்று சொல்லப்படும் இடத்தில் fire proof devilகள் மத்தியில் அக்கினியில் கோடான கோடிவருடங்கள் முடிவில்லா வாதைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற சாத்தானின் துர்செய்தியை தாங்களும் ஏற்றுகுழம்பிக்கொண்டு மற்றவர்களையும் குழப்பிவருகிறார்கள். இது மிகப்பெரிய தேவ தூஷணமாகும். ஏனென்றால் இயேசுகிறிஸ்து 'உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கவந்த தேவாட்டுக்குட்டி'. எல்லோருடைய பாவமும் சுமந்து தீர்க்கப்பட்டதால்தான் மனிதன் உயிர்த்தெழுதலுக்கே தகுதியாகிறான். ஒரு மனிதனுடைய கணக்கில் பாவம் இருப்பின் அவன் உயிர்த்தெழவே முடியாது ஏனெறால் 'பாவத்தின் சம்பளம் மரணம்'.
மனிதன் யார்? அவன் எவ்வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளான், மரணத்தின்போது அவனுக்கு என்ன நேர்கின்றது? என்ற மிக அடிப்படையான கேள்விகளுக்கே விடைதெரியாமல் திணரும் வேசிமார்க்கத்தாருக்கு, திரித்துவ ஞானம் எங்கிருந்து வந்ததோ? மரணம்; ஆத்துமா; மனிதன் போன்றவைகளில் தெளிவில்லாத 'பரிசுத்தாவி'யால் நிரப்பப்படும் வேசிக்கூட்டத்துக்கு பிதா, குமாரன் பற்றி தெரிந்திருக்க ஞாயமில்லை. ரஸ்ஸல் கால்தூசுக்குக்கூட இந்த நாய்கள் சமமாகாது. அவரைப்பற்றி அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, யெகோவா சாட்சிகளைப்பற்றி அரைகுறையாகத்தெரிந்துகொண்டு பிதற்றிக்கொண்டிருக்கும் இந்த ஈனப்பிறவிகளுக்கு வேத சத்தியம் எங்கே விளங்கப்போகிறது.
கோவையில் குஜராத்தி சமாஜில் ஞாயிறு தோறும் வேத விளக்கங்கள் அறிவிக்கப்படுகிறது. போய் என்னதான் சொல்கிறார்கள் என்றுதான் பார்க்க துப்பில்லை. சத்தியத்தின்மேல் வாஞ்சையிருந்ததால் நாங்கள் கற்றுக்கொள்ள கிருபை கிடைத்தது. வேசிமார்க்கத்திலிருந்து வெளியேறினோம். நாங்களும் அந்நிய பாஷை பேசி பெந்தெகோஸ்தே முறை "ஊழியம்" செய்தவர்கள்தான் என்பதை அறிக!
எங்களுக்கு ஆள் சேர்க்க அவசியமில்லை. சத்திய வாஞ்சை உள்ள கழுகுகளுக்கான ஆகாரமே இந்த தளம். அந்தக் கழுகுகளுக்குத் தெரியும் இத்தளத்தின் அருமை. இதுபோன்ற கரிச்சான் குஞ்சுகள் அவ்வப்போது வந்து விளங்காமல் ஓடிப்போவது எங்களுக்கு புதிதல்ல்ல.
அருமையான பதிவு சகோதரரே!!!!! இப்படியான வேசி மார்க்கத்தில் உள்ளவர்கள் தெளிவடையும் காலம் இது. சத்தியவிரும்பிகள் உலகில் எங்கு இருந்தாலும் தேவன் ஒன்று சேர்ப்பார். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாது இருப்பவர்கள் தொடர்பாக எமக்கு கவலை இல்லை. இவர்கள்; சத்தியத்தை நன்கு அறிந்து இருந்தும் அதை ஏற்க மனதில்லாதவர்களே இப்படியான போலியான பாசாங்குகள் செய்கிறார்கள். இப்படியான போலி கிறிஸ்தவர்களை ;- எத்தின பேரை நாம் எமது ஊழியத்தில் பார்த்து இருப்போம். இவர்களுக்கு வேகு விரைவில் சிட்சைகள் மூலம் தேவன் சரியான பதில் கொடுப்பார். இவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி சொல்லி யேகோவா தேவனிடம் ஜெபிப்போம். தேவன் இவர்களின் இருதயத்தை ஒரு நாள் திறப்பார்: நன்றி
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )