சபை சரித்திரத்தில் ஆதிசபையானது பிற்காலத்தில் விக்கிரக ஆராதனை மார்க்கத்தில் கலந்து மூலத்தன்மையை இழந்து உருத்தெரியாத நிலைக்கு மாறி பின்னர் ஒரு கலப்புமதமாகவே உருவெடுத்தது. அன்றியும் இவ்வாறு சம்பவிக்கும் முன்பே முதலாம் நூற்றாண்டிலேயே யோவானுக்கு "பத்மு" தீவில் அவையாவும் அடையாளங்களாக வெளிப்படுத்தப்பட்டன. ஆயினும் அதை இந்நாள்வரைக்கும் அநேக சபைகள் ஆராய்ந்து அறிந்தார்களில்லை!! சபை சரித்திரத்தில் நடந்த இம்மகா வஞ்சகங்களை தெளிவாக அறியாமல் நாம் மீண்டும் மூல உபதேசங்களைப் பெற முயற்சிப்பது மகா அசாத்தியம்.