யாருமே சரியான வழியை கண்டுகொள்ளக்கூடாது என்ற சாத்தானின் திட்டத்தாலும் அவனின் முழு முயர்சியாலும் இவாறு சபை பிரிவுகள் ஏற்ப்படுகிறது.
யானையை பார்த்த குருடன் போல, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையை பிடித்து தொங்கிக்கொண்டு நாங்கள் சொல்வதுதான் உண்மை நாங்கள் தான் உண்மை சபை என்று மார்தட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
பைபிள் என்பது எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சத்யம் அத்தோடு இன்றும் ஜீவனோடு இருந்து காரியங்களை நடப்பிக்கும் இறைவனிடம் கடினமான ஜெபத்தின் மூலம் மற்றாடி கேட்டு உண்மை எதுவென்று அறியாதவரை ஒருநாளும் உண்மையை யாரும் அறியவே முடியாது என்றே நான் கருதுகிறேன்.
-- Edited by RAAJ on Monday 17th of August 2009 02:34:28 PM
இது பொதுவாக ஊழியக்காரர்கள் சொல்லும் ஒரு பொய், இதை அந்த ஊழியரை பின் பற்றும் விசுவாசிகள்(!!) கண்மூடித்தனமாக நம்புவார்கள். இப்படி தான் பொய்யை விசுவசிப்பதினால் தேவனே கொடிய வஞ்சகத்தை அவர்கள் மத்தில்யில் அனுப்புபவரா இருக்கிறார் என்கிறது வேதம். பாருங்கள் தேவனே இப்படி செய்கிறார் என்கிறது வேதம். 2 தெச 2:11,12. நீங்கள் கடுமையாக ஜெபித்தால் தான் உங்களுக்கு வேதம் விளங்கும் என்பதற்கு வேத ஆதாரம் என்ன? சத்தியத்தின் ஆவி உங்களிடத்தில் வரும் போது உங்களை சகல சத்தியங்களுக்கும் நடத்துவார் என்பது தான் வேதம் சொல்லுவது. இப்படி தான் வேத ஆதாரங்களை விட்டுவிட்டு நாமாக சொல்லக்கூடாது. அப்படி என்றால் இன்று வேதத்தை வித விதமாக விளக்கும் ஊழியர்கள் எந்த ஆவியில் அதை விளக்குகிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளலாம். ஆம் என்றால் ஆம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் சொல்ல பழக வேண்டும், இதை விட்டு விட்டு வசனத்தை காட்டிலும் சொந்த தரிசனங்கள் அனுபவங்களை விளக்குவதால் தான் இந்த குழப்பங்கள். கிறிஸ்தவர்களே, இப்படி 2000 சபைகளாக பிரிந்து கிடந்து நாங்கள் தான் பரலோகம் போவோம் என்று தம்பட்டம் அடிப்பது எந்த விதத்தில் நியாயம். நம்மை எந்த சபையும் பரலோகம் கூட்டி செல்லாது, சத்தியத்தை விசுவசிப்பதினால் மாத்திரமே அது சாத்தியம். முதல்ல இது போன்ற போதனைகளை விட்டு விளகவேண்டும் என்றால் சத்தியத்தை விசுவசியுங்கள். "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" யோவான் 8:32.
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் 'உங்களை' விடுதலையாக்கும். இதில் உங்களை என்பது அவரால் 'தெரிந்துகொள்ளப்பட்ட' சிறுமந்தையாகிய சபையக்குறிகும். வேதம் எல்லோருக்கும் பொதுவானது அல்ல. எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பது தேவனுடைய திட்டமும் அல்ல. அனேகர் புரிந்துகொள்ளவேண்டும் என்றிருந்தால் அது எளிமையாக, சாதாரண ஜனங்கள்கூட புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும். வேதத்தின் அனைத்து கேள்விகளுக்கும் எனக்கு விடை தெரியும் என்று சொல்லிக்கொள்ள ஒருவர்கூட இல்லையே? "...அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படி சொல்லப்படுகிறது". மாற்கு 4:12