பிறர் துன்பபடுவதை பார்த்து அதனை தன்னுடைய துன்பம்போல பாவித்து கலங்குபவரையும். வேதனையில் வாடும் மக்களை பார்த்து "அய்யோ பாவம்" என்று பரிதபிபவரையும், பிறர் அழும்போது தாங்கமுடியாமல் தாங்களும் சேர்ந்து அழும் பலரையும் நம்முடைய வாழ்க்கையில் பார்த்திருக்கலாம்.
ஏன் நீங்கள் கூட அப்படி ஒரு இரக்கமனம் படைத்தவராக இருக்கலாம்!
மிக்க மகிழ்ச்சி! அது ஒரு நல்லமனதின் பிரதிபலிப்பே!
ஆனால்
பிறர் சந்தோசமாக இருக்கும் போது அதை தனது சந்தோஷமாக நினைத்து, அலுவலகத்தில் வேலைபார்க்கும் பிறருக்கு ப்ரமோஷன் கிடைக்கும்போது அதை தனக்கு கிடைத்த பிரமோசன் போல் நினைத்து மகிழ்ந்து, பக்கத்து வீட்டுக்காரன் கார் அல்லது வண்டி வாங்கி மகிழும்போது அதை தன்னுடைய மகிழ்ச்சியாக் எடுத்து மகிழ்வது எத்தனைபேர்?
ஆம் இங்குதான் நம்முடைய உள் மனத்தின் சுயரூபத்தை பார்க்க முடியும்!
நாங்கள் வாடகைக்கு இருந்த ஒரு வீட்டின் ஓனர் மிக்க நல்லவர் யாரொருவர் கஷ்டம் என்று போய் உதவி கேட்டாலும் தவறாமல் உதவுபவர். அனால் அவர் வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒருவர் ஒரு பிரிட்ஜ் அல்லது வாஷிங் மெசின் வாங்கிவிட்டால் அவரால் தாங்கவே முடியாது. பிறகு அந்த ஆளுடன் கொஞ்சநாள் சரியாக பேசக்கூட மாட்டார்.
உலகம் அமைதியாக இருப்பதற்கும், எங்கோ உள்ள ஒரு நாட்டில் அமைதி கிடைப்பதற்கும் இந்தியாவில் சமாதனம் நிலவுவதற்கும் எளிதில் நம்மால் பிரார்த்தனை செய்ய முடியும்!
ஆனால்
பக்கத்து வீட்டுகாரன் சந்தோஷமாக இருப்பதற்கும், உடன் வேலை பார்க்கும் சகதொழிலாளி சமாதானமாய் இருப்பதற்கும் முழு மனதோடு பிரார்த்தனை செய்வதே மிக கடினமான செயல். அதுதான் உண்மையான அன்புள்ளத்தின் அடையாளம்.
ஆதியில் ஆதாமும் ஏவாளும் ஆண்டவர் படைத்த அழகான தோட்டத்தில் துன்பம் எதுவும் அறியாமல் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்ததை பார்த்து பொறுக்க முடியாத சாத்தான் திட்டமிட்டு அவர்கள் மகிழ்ச்சியை கெடுத்தான். இன்றும் அதே சாத்தானின் ஆவி மினதனிடம் இருந்துகொண்டு பிறரின் சந்தோசத்தை பார்த்து பொறாமை அடைவதும் அதை எப்படியாவது கெடுக்கமுயல்வதும் போன்ற வேலைகளை செய்துவருகிறது.
பிசாசின் தூண்டுதல்களுக்கு கட்டுப்படாமல் பிறரின் முன்னேற்றத்தில் உண்மையாக மகிழும் ஒரு உண்மை மனிதனாக இருக்க முயல்வோம்!
பிறர் முன்னேற்றத்தில் மகிழ்வடைகிற நாம். ராஜ்ஜியத்தில் அனைவரும் 'முன்னேறி' ஆதாமைப் போன்ற பூரண நிலைக்கு மாறி சாத்தானே இல்லாத சூழலில் தேவ அன்பைப் பிரதிபலிப்பார்கள் என்ற சத்தியத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்ளாமல் நித்திய வாதைக் கோட்பாட்டை ஆதரிக்கிறோமே! ஏன் சகோதரா?
வேதம் போதிக்கும், பூமியில் ஸ்தாபிக்கப்பட இருக்கும் 'பரலோக ராஜ்ஜியம்'. பூமியில் கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சி, அதில் எல்லாருக்கும் உயிர்த்தெழுதல் என்ற மாபெரும் நற்செய்தி உனக்கு மறைக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.