பொதுவாக நீதியும் நேர்மையும் தேவனின் சிங்காசனத்தின் ஆதாரங்களாக திகழ்கிறது. அவர் நீதியின் மேல் பிரியப்படுகின்ற தேவன் என்பது முற்றிலும் உண்மையான கருத்து!
ஆகினும்
இவ்வுலகில் எது நேர்மை? எது நீதி? என்பதில் எல்லோருக்குமே ஒரு குழப்பம் உள்ளது. ஒரு செயல் ஒருவருக்கு நீதியாக தோன்றலாம் ஆனால அதே செயல் இன்னொருவருக்கு அநீதியாக தோன்றலாம் ஆகினும் எல்லோருக்கும் பொதுவான நியாய அநியாயங்கள் என்ன என்பதை இறைவனிடமிருந்து அறிந்தால் மட்டுமே நாம் இறைவனுக்கேற்ற நீதிமானாக நடக்க முடியும் என்பது எனது கருத்து.
"உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல" மற்றும் "சன்மார்க்கரையும் துன்மார்க்கரையும் சங்காரம் பண்ணுவேன்" என்று இறைவன் எச்சரித்துள்ளார். வெறும் சன்மார்க்கத்தால் பயனேதும் இல்லை! நாம் நல்லதையே செய்தாலும் நாம் இறைவனுக்கு பிடித்தவைகளை செய்கிறோமா என்பதை முதலில் அறிய வேண்டும்.
அழுக்கு சட்டை போட்ட சுத்தமில்லாத பிச்சைக்காரன் ஒருவன் கல்யாண வீட்டினுள் வந்து வாசலில் நிற்றுகொண்டு வருவோரையெல்லாம் கரம்பிடித்து அன்போடு வரவேற்றாலும் எல்லோருக்கும் அது முக சுளிப்பையே ஏற்ப்படுத்தும். அவன் செய்வது நல்ல செயல்தான் ஆனால் அதை எப்படி செய்யவேண்டும், எப்பொழுது செய்யவேண்டும் போன்ற வரைமுறை உள்ளதல்லவா?
அதுபோல் எதை எப்பொழுது எங்கு செய்யவேண்டும் என்பதை அறிய முதலில் ஜெபம் அவசியம். "ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? என்ற ஜெபத்துடன் கூடிய தொடர் கேள்வியே இறைவனின் சித்தம் அறிய உதவும். அதன்பின் அவர் தீர்மானிக்கும் செயலை செய்பவனே இறைவன் முன் உயர்ந்தவன். மற்றபடி நாம் நேர்மை நீதி என்று நினைப்பதெல்லாம் இறை நீதியாகாது என்பது எனது கருத்து.