யார் கிறிஸ்துவின் சிந்தை உடையவர்கள்? யார் கிறிஸ்துவின் ஆவியை பெற்றவர்கள்? இயேசு கிறிஸ்து யாரை அப்பா பிதாவே என்று கூப்பிட்டாரோ அதே யேகோவா தேவனை யாரெல்லாம் அப்பா பிதாவே என்று கூப்பிடுகிறார்களோ அவர்களே புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்றவர்களவர்கள். இதற்கு மாறாக இயேசு கிறிஸ்துவை அப்பா என்றோ பிதா என்றோ கூப்பிடதல் எப்படி அவரின் (இயேசு கிறிஸ்துவின்) சிந்தை உடையவர்களாக இருக்க முடியும்!!
பிதா எனப்படும் தேவனும் இயேசு கிறிஸ்த்து என்னும் குமாரனும் ஒருவரே என்று தவறாக போதித்தால் எப்படி தேவனை இயேசு அழைத்ததுபோல் அப்பா பிதாவே என்று அழைக்க முடியும்?
இப்படி பட்ட ஒரு தப்பிதமான போதனையில் தான் கிறிஸ்துவம் அஸ்திவாரம் போட்டு, வளர்ந்திருக்கிறது. இது தான் கிறிஸ்துவமா என்பதிலே சந்தேகம். இயேசு கிறிஸ்துவை மூலைகல்லாக கொண்டு அப்போஸ்தலர்களின் போதனைகள் என்னும் அஸ்திவாரத்தின் மேல் தான் நாம் இசைவாக கட்டப்பட்ட மாளிகையாக கட்டப்பட வேண்டுமே தவிர, மனிதர்களின் தப்பிதங்களான போதனைகள் மேல் அல்ல. கிறிஸ்துவின் ஆவி இல்லதவர்களை எப்படி கிறிஸ்தவர்கள் என்று சொல்ல முடியும்.
பிதாவாகிய தேவனின் மகிமையை வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார் என்பது அவரின் வார்த்தையே, ஆனாலும் அவரின் சித்ததின்படி மரித்து, உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த ஆட்டுக்குட்டியான, அவரின் ஒரே பேறான குமாரனான கிறிஸ்து இயேசுவிற்கு எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை தந்து தமது வலது பாரிசத்தில் வீற்றிருக்க செய்திருக்கிறார் என்கிறது வேதம். சிங்காசனத்தில் வீற்றிருப்பவரும், வலது பக்கத்தில் இருப்பவரும் ஒருவரே என்கிறது இன்றைய கிறிஸ்துவ சாம்ராஜ்யம். வேதத்தை ஆறாய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.
-- Edited by bereans on Friday 10th of July 2009 02:40:34 PM