" எங்கள் போராயுதங்கள் மாமிசத்திற்கேற்றவைகளாயிராமல் அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளதாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும் தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்கு கீழ்படியச் சிறைப்படுத்துகிறோம். ( 2 கொரிந்தியர், 10:4,5)
நாம் தேவனிடம் அங்கீரகாரம் பெறுவதற்கு முதலாவதாக அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்படிவது மட்டுமே என்று நினைவில் கொள்ளவேண்டும்.
இதற்கு அடுத்து அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது சகோதரரிடம் உள்ளான அன்போடு எந்த நேரத்திலும் உதவி செய்து, பாடனுபவிக்கக் கூடுமானால் தங்கள் ஜீவனையும் கொடுத்து அவர் வழிகளில் நடக்க ஒப்புக் கொடுப்பதும், அவருடைய சத்திய வார்த்தைகளை உள்ளன்போடு ஏற்றுக்கொண்டவர்கள் உண்மைத்தேவனை வெளிப்படுத்திப் பல தப்பறையான போதகங்களை இவர்கள் நீக்கும்படி செய்யும் வசனமே பேராயுதம். (எபேசியர், 6: 10-18)