kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடைசி காலம் என்பது எது?


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
கடைசி காலம் என்பது எது?


சகோதரரே சுமார் 1950௦ ஆண்டுகளுக்கும் முன்னால் எழுதப்பட்ட    I யோவான் 2:18 வசனம் இவ்வாறு  சொல்கிறேது:
 
"பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

இன்று 1950௦ ஆண்டுகள் கழித்தும் இந்து கடைசி காலம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமே, 

உண்மையில் கடைசி காலம் என்பது எது? புதிய ஏற்பாட்டின கால  தொடக்கத்திலிருந்தே இது கடைசிகாலம் என்று குறிப்பிட சரியான காரணம் என்ன?
 
 


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்புள்ள சகோதரரே,

      கடைசி காலம் என்பதை நாம் மனிதர்கள் கணக்கிடும் வருடங்களால் அல்ல, கடைசி காலம் என்றால், தேவன் இந்த மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் கடைசி காலம் (Last age)  என்கிறார் அப்போஸ்தலர், அதாவது யூதர்களின் காலம், மனசாட்சியின் காலம் போன்று இந்த சுவேஷத்தின் காலம் (கடைசி காலம்) என்பதாகும். மேலும் நம் பார்வையில் தான் இது 2000 வருடங்கள், இயேசு கிறிஸ்துவின் பார்வையில் இது 2 நாட்களே. இன்றைய கிறிஸ்தவ சபைகள் என்னுவது போல் என்னமோ அந்தி கிறிஸ்து இனி தான் வரப்போகிறான் என்று பிரசங்கிக்கிறார்கள், ஆனால் அப்போஸ்தலர் எழுதுவது போல், அவனின் வருகை அப்பவே தொடங்கி விட்டது.

    மேலும் மத். 24ம் அதிகாரத்தின் வார்த்தைகள் நாம் கடைசி நிமிடங்களில் இருக்கிறோம் என்பதை தெளிவு படுத்துகிறது. நிறுத்தி நிதானமாக இந்த அதிகாரத்தை வாசித்தோமென்றால், நாம் தெளிவு பெற்று, பிறரையும் தெளிவு படுத்த முயற்சிக்கலாம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard